Jump to content

நெல்லை தாமிரபரணி கரையோர தாழ்வானப் பகுதிகளில் வெள்ளம்: மீட்புப் பணிகள் துரிதம்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

நெல்லை தாமிரபரணி கரையோர தாழ்வானப் பகுதிகளில் வெள்ளம்: மீட்புப் பணிகள் துரிதம்

floods-in-low-lying-areas-of-tamirabarani  
 

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங் கரையோரத்தில் உள்ள தாழ்வானப் பகுதிகளில் நேற்றிரவு வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மழை நீடித்துவரும் நிலையில் தாமிரபரணியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்குக் காணப்பட்டது.

தாமிரபரணி ஆற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளநீர் பாய்வதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய நீர்வள ஆணையம் எச்சரித்திருந்தது. இந்நிலையில் நேற்றிரவு (செவ்வாய் இரவு) தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு அதிகமான அளவு ஏற்பட்டது.

வண்ணாரப்பேட்டை, குறுக்குத்துரை உள்ளிட்ட தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மீட்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கால்நடைகளை பாதுகாக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

16105135502027.jpg

16105135622027.jpg

மீட்புப் பணியில் தேசியப் பேரிடர் மீட்புக் குழுவின் இரண்டு பிரிவுகள் ஈடுபட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 25 வீரர்கள் உள்ளனர். இவர்களுடன் தீயணைப்புப் படையினரும் கைகோத்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ள அபாயப் பகுதிகளில் நெல்லை மாவட்ட ஆட்சியர் நேற்றிரவு தாழ்வான பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர், தாமிரபரணி கரையோரத்தை ஒட்டி 87 தாழ்வானப் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஆலடியூர் என்ற இடத்தில் நிவாரண முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அந்த முகாமில் 8 குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மின்சாரம் துண்டிப்பு:

வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை ஜங்ன்ஷன், மீனாட்சிபுரம், வண்ணாரப்பேட்டை சாலை தெரு எட்டுத்தொகை தெரு, டவுன் கருப்பந்துறை ,சி.என்.வில்லேஜ், நாரணம்மாள்புரம் .ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (13-01-2021) காலை 8 மணி நிலவரப்படி:

பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143 அடி நீர் இருப்பு : 142.5 அடி நீர் வரத்து : 15977.06 கனஅடி வெளியேற்றம் : 14731.45 கன அடி

சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156 அடி நீர் இருப்பு : 148.55 நீர்வரத்து : Nil வெளியேற்றம் : Nil

மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118 நீர் இருப்பு : 117.18 அடி நீர் வரத்து : 12574 கனஅடி வெளியேற்றம் : 12117கன அடி

வடக்கு பச்சையாறு: உச்சநீர்மட்டம்: 49 அடி நீர் இருப்பு: 40 அடி நீர் வரத்து: 1039.91 வெளியேற்றம்: NIL

நம்பியாறு: உச்சநீர்மட்டம்: 22.96 அடி நீர் இருப்பு: 11.32 அடி நீர்வரத்து: 19.90 கன அடி வெளியேற்றம்: NIL

கொடுமுடியாறு: உச்சநீர்மட்டம்: 52.50 அடி நீர் இருப்பு: 36. 25 அடி நீர்வரத்து: 156 கன அடி வெளியேற்றம்: 60 கன அடி

மழை அளவு:

பாபநாசம்: 185 மி.மீ
சேர்வலாறு: 110 மி.மீ
மணிமுத்தாறு: 165 மி.மீ
நம்பியாறு: 45 மி.மீ
கொடுமுடியாறு: 30 மி.மீ
அம்பாசமுத்திரம்: 97 மி.மீ
சேரன்மகாதேவி: 65.40 மி.மீ
நாங்குநேரி: 32 மி.மீ
ராதாபுரம்: 28 மி.மீ
பாளையங்கோட்டை: 26 மி.மீ
நெல்லை :23 மி.மீ

குற்றாலத்தில் குளிக்கத் தடை:

நெல்லையைப் போல் தென்காசி மாவட்டத்திலும் இடைவிடாமல் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/621925-floods-in-low-lying-areas-of-tamirabarani-5.html

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • பந்து போடும் பொடியலின் பந்தாட்டங்கள்......!  😂
  • பூ முடிப்பதும் போட்டு வைப்பதும் யாருக்காக....... ஆடு மேய்க்கும் அழகி அஞ்சலிதேவி அண்ணன்மார்களின் நெஞ்சினில் ஆவியாய் உலவியவள் .....!   😂
  • அம்மாவும் அப்பாவின் காதலிதானே, ஏன் அவர் கூட்டிக்கொண்டு போறதுக்கென்ன......!   😁
  • தேசிய, திராவிடக் கட்சிகளுக்கு நாம் தமிழர் கட்சியே வழிகாட்டி: சீமான் பேட்டி த.சத்தியசீலன் கோவையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் | படம்: ஜெ.மனோகரன். 234 தொகுதிகளில் போட்டியிடும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் சென்னை மாநாட்டில் அறிமுகம் செய்யப்படுவார்கள் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சி சார்பில், சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த மேற்கு மண்டல ஆலோசனைக் கூட்டம், கோவை - அவிநாசி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நாம் தமிழர்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகித்து, கோவை மேற்கு மண்டலத்தில் போட்டியிடத் தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ''2021 சட்டப் பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. தேர்தலில் தலா 117 ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டியிடுகின்றனர். வரும் மார்ச் 20-ம் தேதி சென்னையில் நடைபெறும் நாம் தமிழர் கட்சி மாநாட்டில் 234 வேட்பாளர்களும், அவர்கள் போட்டியிடும் தொகுதிகளும் அறிவிக்கப்படும். நான் எந்தத் தொகுதியில் போட்டியிடுகிறேன் என்பதை அப்போது அறிவிப்பேன். தேசியக் கட்சிகளுக்கும், திராவிடக் கட்சிகளுக்கும் எங்கள் நாம் தமிழர் கட்சியே வழிகாட்டியாக விளங்குகிறது. ஒரு கட்சியில் சுற்றுச்சூழல் பாசறை என்பதைத் தொடங்கி, அதன்மூலம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். இதன் தொடர்ச்சியாகவே திமுகவில் சுற்றுச்சூழல் பாசறை அமைக்கப்பட்டது. இயற்கை வேளாண்மை, ஆடு, மாடு வளர்ப்பு அரசுத் தொழிலாக்கப்படும் என்று நான் பேசியபோது கேலி செய்த கட்சிகள், தற்போது இதையே பேசி வருகின்றன. தமிழ்க் கடவுள் முருகன் என்ற முழக்கத்துடன், வேலைக் கையில் எடுத்தோம். அதைப் பாஜகவும், திமுகவும் தற்போது கையில் எடுத்துள்ளது. அவர்கள் வாக்குக்காகச் செய்கிறார்கள். நாங்கள் அதை உணர்வாகச் செய்கிறோம். அவ்வளவுதான் வேறுபாடு. திமுக ஆட்சி அமைந்தால், மக்களின் பிரச்சினைகளுக்கு 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறி வருகிறார். இதற்கு முன் 22 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது, ஏன் இதைச் செய்யவில்லை? என்ற கேள்வி எழுகிறது. இந்த வாக்குறுதியை நம்பி மக்கள் ஏமாறக்கூடாது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை நாடு முழுவதும் வீழ்ந்து கிடக்கிறது. தென் மாநிலங்களில் தங்களுடைய இருப்பைத் தக்க வைக்க முயற்சி செய்கிறது. பாஜகவைப் பொறுத்தவரை வட மாநிலத்தவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், முதல் ஆளாகக் களத்தில் இறங்கியிருக்கும். அதே நேரத்தில் தமிழகத்திற்கு ஒரு பிரச்சினை என்றால் செவி சாய்க்காது. 4 மீனவர்களை இலங்கைக் கடற்படை கொன்றதைக் கண்டும், காணாமல் இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள்தான் இதைத் தடுக்க வேண்டும். நாம் தமிழர் கட்சி ஆட்சியில் இருந்தால், ஒரு தமிழக மீனவனைக்கூட, இலங்கைக் கடற்படையால் தொட முடியாது. எங்களுக்கென்று தனிக் கருத்தியல் உள்ளது. அதை முன்வைத்து, எங்கள் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் மக்களிடம் வாக்கு கேட்போம்''. இவ்வாறு சீமான் கூறினார். அதன் பின்னர் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது? நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் களத்தில் எவ்வாறு பணியாற்ற வேண்டும்? வாக்காளர்களை எவ்வாறு அணுகி வாக்குச் சேகரிப்பது? என்பன உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கட்சியினர் ஆலோசனை மேற்கொண்டனர்.   https://www.hindutamil.in/news/tamilnadu/626364-naam-tamilar-party-is-the-guide-for-national-and-dravidian-parties-seeman-interview-1.html  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.