-
Tell a friend
-
Topics
-
6
By பிழம்பு
தொடங்கப்பட்டது
-
Posts
-
By பிழம்பு · பதியப்பட்டது
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை மிக முக்கியமானதெனச் சுட்டிக்காட்டியிருக்கும் பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இலங்கையில் நல்லிணக்கத்தையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துவதை அடிப்படையாகக்கொண்டு செயற்படத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் சமர்ப்பிக்கவிருக்கும் 16 பக்கங்கள் கொண்ட முழுமையான அறிக்கை நேற்று ஐக்கிய நாடுகள் சபையினால் பகிரங்கப்படுத்தப்பட்டது. அதன்படி ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரித்தானியாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஜுலியன் பிரெய்த்வெய்ட் இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில், ‘இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் வெளியிடப்பட்டிருக்கும் மிக முக்கியமான புதிய அறிக்கை தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியிருக்கிறோம். எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரின் போது இலங்கையில் மனித உரிமைகளையும் பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துவதை முன்னிறுத்தி நாம் ஆதரவு வழங்குவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, இது குறித்து கனேடிய வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னே அவரது டுவிட்டர் பக்கத்தில், ‘இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதி செய்வதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை அமைந்துள்ளது. இலங்கையில் அமைதி, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் என்பவற்றை உறுதி செய்வதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதற்கு கனடா தயாராக இருக்கின்றது’ என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் பொறுப்புக் கூறலுக்காக செயற்படவுள்ள கனடா, பிரித்தானியா – உதயன் | UTHAYAN (newuthayan.com) -
By பிழம்பு · பதியப்பட்டது
மானிப்பாய் பொலிஸ் பிரிவில் இளம் பெண் ஒருவர் அடங்கலாக கலாசார சீரழிவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வரை 8ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், 20 வயது இளம் பெண்ணை சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தி மருத்துவ பரிசோதனை அறிக்கையைப் பெற்று மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா, பொலிஸாருக்கு உத்தரவிட்டார். முச்சக்கர வண்டியில் நடமாடும் கலாசார சீரழிவில் ஈடுபட்டு வந்த பெண்கள் இருவர் உட்பட நால்வர் மானிப்பாய் பொலிஸாரால் நேற்று (27) கைது செய்யப்பட்டனர். 45 வயதுடைய சுதுமலை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கோப்பாயைச் சேர்ந்த 20 வயதுடைய பெண்ணை வைத்து இந்த கலாசார சீரழிவை பணத்துக்காக முன்னெடுத்துள்ளார். அவர்களுக்கு உடந்தையாக தெல்லிப்பழையைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவரும் நெல்லியடியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரும் செயற்பட்டுள்ளனர். அந்த நான்கு பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கலாசார சீரழிவு இடம்பெறுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இரகசிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஊடாக கும்பலுடன் தொடர்பை ஏற்படுத்திய மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அந்தக் கும்பலைச் சேர்ந்த நால்வரையும் கைது செய்திருந்தார். சந்தேக நபர்கள் நால்வரும் மல்லாகம் நீதிவான் முன்னிலையில் இன்று முற்படுத்தப்பட்டனர். அதன்போதே நால்வரையும் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார். இதேவேளை, கைது செய்யப்பட்ட சுதுமலையைச் சேர்ந்த பெண் 15 வயது சிறுமியை பணத்துக்காக கலாசார சீரழிவில் ஈடுபடுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் 3 மாதங்கள் விளக்கமறியலில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டவர் என்று பொலிஸார் தெரிவித்தனர். நடமாடும் விபச்சாரம் – நால்வருக்கு மறியல்! – உதயன் | UTHAYAN (newuthayan.com) -
By பிழம்பு · பதியப்பட்டது
வளர்ப்பு மகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஆடவருக்கு மலேசிய நீதிமன்றம் 1,050 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. மேலும் 24 பிரம்படிகளும் அளிக்கப்படவேண்டும் என நீதிபதி தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். 12 வயதான தனது வளர்ப்பு மகளை கடந்த 2 ஆண்டுகளில் 105 முறை அவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி குணசுந்தரி நேற்று தமது தீர்ப்பை அளித்தார். முன்னதாக குற்றம்சாட்டப்பட்ட ஆடவர் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டார். நேற்றைய வழக்கு விசாணை சுமார் ஐந்து மணி நேரம் நீடித்தது. இந்த இறுதிநாள் விசாரணையில் குற்றவாளி மீதான குற்றச்சாட்டுகளைத் தனித்தனியே வாசிக்குமாறு நீதிபதி தெரிவித்தார். இத்தகைய குற்றம் மிகக் கடுமையானது மட்டுமல்ல, ஒரு குழந்தையின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடிய அருவருப்பான செயல் என்றார் நீதிபதி குணசுந்தரி. "இத்தகைய வன்முறைச் செயலில் நீங்கள் ஈடுபட்டிருக்கக்கூடாது. குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இது குறைவான தண்டனைதான். சிறையில் இருக்கும்போது நீங்கள் மனம் திருந்துவீர்கள் என நம்புகிறேன்," என்று நீதிபதி குணசுந்தரி தமது தீர்ப்பில் குறிப்பிட்டார். எந்த வேலையும் பார்க்காத குற்றம்சாட்டப்பட்ட அந்த ஆடவர் தமது 12 வயது வளர்ப்பு மகளைக் கடந்த 2018, ஜனவரி 5ஆம் தேதி தொடங்கி 2020 பிப்ரவரி 24ஆம் தேதி வரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி உள்ளார். இத்தகைய குற்றத்துக்கு மலேசிய சட்டத்தில் குறைந்தபட்சம் பத்தாண்டுகள் முதல் அதிகபட்சம் 30 ஆண்டுகள் மிகாத சிறைத்தண்டனையும் பிரம்படிகளும் வழங்க வழி உள்ளது. இந்நிலையில் வழக்கு விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்ட ஆடவருக்கு கடுங்காவல் தண்டனையும் மிக அதிகபட்ச பிரம்படிகளும் வழங்கவேண்டும் என அரசுத்தரப்பில் வலியுறுத்தப்பட்டது. பொதுநலனைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் தண்டனை வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. "வளர்ப்புத்தந்தை என்ற முறையில் குற்றம் சாட்டப்பட்டவர், பாதிக்கப்பட்ட சிறுமியைப் பொறுப்புடன் பாதுகாத்திருக்க வேண்டும். மாறாக, அச்சிறுமியின் சுயமதிப்பை இவரே அழித்துள்ளார். இத்தகைய செயல்பாடு பாதிக்கப்பட்ட சிறுமியின் வாழ்நாள் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும்," என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதாடினார். இத்தகைய முறையற்ற உடலுறவு மற்றும் பலாத்காரங்கள் திகிலூட்டுபவை என்றும் கண்டிக்கத்தக்கவை என்றும், மதங்களுக்கு அப்பாற்பட்டு இத்தகைய செயல்பாடு சமுதாயத்தின் அனைத்து மட்டத்திலும் தீவிரமான செயலாகவே பார்க்கப்படுகிறது என்றும் அரசுத் தரப்பில் மேலும் குறிப்பிடப்பட்டது. இத்தகைய செயல்பாடுகள் சட்டத்துக்கு மட்டும் அல்லாமல் மதபோதனைகளுக்கும் எதிரானவை என்றார் அரசுத் தரப்பு வழக்கறிஞர். குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவர் சார்பில் யாரும் முன்னிலையாகாத (ஆஜராகாத) நிலையில் நேற்று வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக உடனடியாக மேல்முறையீடும் செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கடந்த 2015ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர். இதையடுத்து சிறுமியின் தாய் தற்போது குற்றம் இழைத்துள்ள ஆடவரைக் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். குற்றச்செயல் நிகழ்ந்த சமயங்களில் எல்லாம் பாதிக்கப்பட்ட சிறுமியும் அந்த வளர்ப்புத் தந்தையும் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர். தனது பலாத்கார செயல் குறித்து வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என அந்தச் சிறுமியை மிரட்டியும் அடித்தும் உள்ளார் அந்த வளர்ப்புத் தந்தை. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியையும் அவளது தங்கையையும் அத்தை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார் சிறுமியின் தாய். அப்போது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையை அந்தச் சிறுமி தெரியப்படுத்தியதை அடுத்து இந்தக் கொடுஞ்செயல் வெளியே தெரியவந்தது. இந்நிலையில், வழக்கு விசாரணை முடிவில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 1,050 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 24 பிரம்படிகளும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது. "சிறையில் மனம் திருந்துங்கள். நீங்கள் புரிந்திருப்பது அருவருப்பான செயல்," என்று நீதிபதி குற்றவாளியைப் பார்த்து அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டார். மலேசியாவில் வளர்ப்பு மகளை பாலியல் வல்லுறவு செய்த ஆண்: 1,050 ஆண்டு சிறை, 24 பிரம்படிகள் - BBC News தமிழ் -
என்ன... தெரியாத மாதிரி கேட்கிறியள்..... நம்மாளு... அவர்... தான்.... லிஸ்டில முதல் ஆள்.... அவருக்கே தெரியும்...
-
By பிழம்பு · பதியப்பட்டது
(ஆர்.யசி) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு கொடுப்பதற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்திவரும் துறைமுக தொழிற்சங்கங்கள், கிழக்கு முனையத்தை முழுமையாக துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டுவரும் போராட்டத்தை நாளை வெள்ளிக்கிழமை கொழும்பு துறைமுகத்திற்குள் இருந்தே தொடக்க தீர்மானித்துள்ளனர். அரசாங்கத்துடன் இனி பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில்லை என்பதையும் தெளிவாக அறிவித்துள்ளனர். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளின் முதலீட்டுடன் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ச்சியாக துறைமுக தொழிற்சங்கங்கள் போராடி வருகிறனர். இந்நிலையில் துறைமுக விவகாரத்தை கையாள ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உபகுழுவின் இறுதித் தீர்மானத்தை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளதுடன், தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை முழுமையாக நிராகரிப்பதாகவும், இனிமேல் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கப்போவதில்லை எனவும் தெரிவித்துவிட்டனர். இதனை அடுத்து நேற்று முன்தினமும், நேற்றும் துறைமுக தொழிற்சங்கங்கள் தமக்குள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்த நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும், துறைமுக அதிகார சபையின் ஒருசில அதிகாரிகள், துறைமுகத்தின் வணிக செயற்பாடுகளில் ஈடுபடும் தேசிய நிறுவனங்கள் ஆகியவற்றை கண்டித்து போராட்டத்தில் குறித்த தீர்மானித்துள்ளனர். அதற்கமைய நாளை வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு 23 தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து துறைமுகத்திற்குள் பாரிய எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவதுடன், எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவும் தீர்மானித்துள்ளனர். இன்றைய தினம் காலையில் அஸ்கிரிய, மல்வத்து மாநாயக தேரர்களை சந்தித்தும் தமது கோரிக்கைகளை முன்வைத்து அனுமதியினை பெற்றுக்கொள்ளவுள்ளனர். இனியும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில் பயனில்லை எனவும், 49 வீத உரிமம் இந்தியாவிற்கு செல்வது ஒட்டுமொத்த துறைமுகத்தையும் இந்தியாவிற்கு தரைவாக்கும் செயற்பாடு என்பதால் அரசாங்கத்தை வன்மையாக கண்டித்தே தமது போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு துறைமுகத்திற்குள் போராட்டம் | Virakesari.lk
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.