Jump to content

முள்ளிவாய்க்காலுக்கு மட்டும் தூபி வேண்டாம்; பொதுத்தூபி அமைப்போம்: ஈ.பி.டி.பி!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களிற்கு மட்டுமல்லாமல், இதுவரை உயிரிழந்த அனைவருக்குமான நினைவுத்தூபியையே யாழ் மாநகரசபை அமைக்க வேண்டுமென ஈ.பி.டி.பி வலியுறுத்தியுள்ளது.

யாழ் மாநகரசபை அமர்வில் இன்று, முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முடிவினை முன்னாள் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவிக்கையில்,

இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து உரிமைக்காக போராடிய அனைவரையும் நினைவுகூரும் வகையில் ஒரு பொதுவான நினைவு தூபி அமைக்கப்பட வேண்டும். இதுவே எமது கட்சியின் நிலைப்பாடு.

அந்தவகையில் யாழ் பல்கலைக்களக மாணவன் விஜிதரன் படுகொலை மற்றும் அவருக்கு நீீதி கேட்டு போராடிய விமலேந்திரன் உள்ளிட்ட மாணவர்களும் இதில் உள்வாங்கப்பட வேண்டும் என்றும் எனவும் தமது கட்சியின் கருத்தினை பதிவு செய்துள்ளார்.

தொடர்ந்து சபையின் ஏனைய உறுப்பினர்கள் தமது கருத்துக்களை தெரிவித்ததை அடுத்து முதல்வர் சபை அமர்பை ஐந்து நிமிடங்களுக்கு ஒத்திவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐந்து நிமிடத்தின் பின்னர் ஏனைய விடையங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக சபை அமர்பு ஆரம்பிக்கப்பட்டு தற்போதும் நடைபெற்று வருகின்றது.

https://www.pagetamil.com/167774/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈ. பி . டிபியினால் கொல்லப்பட்டவர்களுக்கும் தூபி அமைக்க தயாரா? இந்த நினைவுத்தூபிகள் உங்களது, உங்கள் எஜமானரது மனச்சாட்சியை உறுத்துகிறதா? சாதாரண மக்களை கொன்றுவிட்டு பயங்கரவாதிகளை கொன்றோம் என்று வீராப்பு பேசுவதற்கு இந்த நினவுத் தூபிகள் அச்சுறுத்தலாக உள்ளதோ? உண்மைகள் வெளிப்படும் காலம் நெருங்கிக்கொண்டு வருகிறது. 

Link to comment
Share on other sites

11 minutes ago, satan said:

இப்படி ஒவ்வொரு இயக்கமும் 1975 க்கு பிறகு கொலை செய்த எல்லோருக்கும் தனி தனி தூபி என்றால் வடக்கு கிழக்கு முழுவதும் தூபிகள் தான் இருக்கும். அதை விட யுத்த‍த்தில் இறந்த தமிழ் மக்கள் அனைவருக்கும் ஒரே தூபி நல்லது என்றே நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, satan said:

முள்ளிவாய்க்கால் தூபிகள்/நினைவுச்சிலைகள் என்பதுதான் அவர்களுக்கு பிரச்சனை. அதை ஏன் பொதுவாக பார்க்க மாட்டார்கள் என்பதிலிருந்தே உங்களுக்கு ஆயிரம் அர்த்தங்கள் விளங்கியிருக்க வேண்டும்.

எல்லாம் புலி வக்கிரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இருந்த போது இவங்களுக்கு தலைவர் சிம்ம சொப்பனுன்னு சொல்லித் திரிஞ்சாங்க..

புலிகள் இல்லாத போது.. தமிழ் மக்களே சிம்ம சொப்பனுன்னு சொல்லிக்கிட்டு திரியுதுங்க..

அடிப்படையில்.. இவர்கள் புலிகளுக்கு மட்டும் எதிரிகள் அல்ல. ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும் எதிரிகளாவர். எப்படி சிங்கள.. ஹிந்திய எஜமானர்களை கூல் பண்ணி தங்களின் கூலியை வசூலித்துக் கொள்வது மட்டுமே இவர்களின் ஆயுத அரசியல் கொள்கை ஆகும்.

இவர்கள் எப்பவுமே மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்கள் அல்ல... என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்கள். ஆனால் மக்கள் தான் மந்தைகளாக இவர்களுக்கும் வாக்குப் போட்டுக்கிட்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, tulpen said:

இப்படி ஒவ்வொரு இயக்கமும் 1975 க்கு பிறகு கொலை செய்த எல்லோருக்கும் தனி தனி தூபி என்றால் வடக்கு கிழக்கு முழுவதும் தூபிகள் தான் இருக்கும். அதை விட யுத்த‍த்தில் இறந்த தமிழ் மக்கள் அனைவருக்கும் ஒரே தூபி நல்லது என்றே நினைக்கிறேன். 

இப்போது இடிக்கப்பட்டிருப்பது முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கானதும், பல்கலைக்கழக மாணவர்களுக்கானதுமான நினைவித்தூபி. ஆகவே, அதை இருந்த இடத்தில், இருந்த வடிவில் மீள அமைப்பதே நியாயம். பிறகு வேண்டுமென்றால் கொல்லப்பட்ட அனைவருக்காகவும் ஒரு பொதுவான இடத்தில் ஒரு நினைவுத்தூபியினைக் கட்டலாம்.

முள்ளிவாய்க்காலில் நடந்தது மற்றைய இடங்களில் நடந்ததைப் போல ஒன்றல்ல. அது ஒரு திட்டமிட்ட இனவழிப்பு , ஆகவே வேறுபடுத்திக் காட்டப்படவேண்டியது அவசியம். அப்படி அவசியம் இல்லை, கொல்லப்பட்ட அனைத்து இலங்கையர்களுக்காகவும் தூபி கட்டுங்கள் என்று கேட்பது திட்டமிட்ட இனவழிப்பினை மறைக்கும் நடவடிக்கையே. 

இதை டக்கிளஸ் கேட்டது ஆச்சரியமில்லை, இங்கே சிலர் வழிமொழிவதுதான் விசித்திரமாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

8 hours ago, ரஞ்சித் said:

முள்ளிவாய்க்காலில் நடந்தது மற்றைய இடங்களில் நடந்ததைப் போல ஒன்றல்ல. அது ஒரு திட்டமிட்ட இனவழிப்பு ,

முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்ட இனம் ஈழத்தமிழர்.
வடக்கு-கிழக்கில் பெரும்பான்மையான இனம் இலங்கைத்தமிழர்.

மலையகத்தில் வாழ்பவர்கள் இந்தியத் தமிழர் என்ற இனம்.
சுமந்திரன், கஜேந்திரக்குமார் பொன்னம்பலம், விக்னேஸ்வரன் ஆகியோர் கொழும்புத்தமிழர் என்ற இனம். இந்த மற்ற இனத்தவர் அழிக்கப்பட்ட இனத்துக்காக குரல் கொடுக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, tulpen said:

இப்படி ஒவ்வொரு இயக்கமும் 1975 க்கு பிறகு கொலை செய்த எல்லோருக்கும் தனி தனி தூபி என்றால் வடக்கு கிழக்கு முழுவதும் தூபிகள் தான் இருக்கும். அதை விட யுத்த‍த்தில் இறந்த தமிழ் மக்கள் அனைவருக்கும் ஒரே தூபி நல்லது என்றே நினைக்கிறேன். 

அதை நான் சொல்லவில்லை, சிங்களத்தின் அடிமைகள் தமது திட்டம் நீத்துப்போனதால் சொல்கிறார்கள். பொதுவான தூபி அமைப்பதன்மூலம் முள்ளிவாய்க்கால் அவலத்தை மறைத்து விடலாம் என்கிற கனவில். 

Link to comment
Share on other sites

3 hours ago, satan said:

அதை நான் சொல்லவில்லை, சிங்களத்தின் அடிமைகள் தமது திட்டம் நீத்துப்போனதால் சொல்கிறார்கள். பொதுவான தூபி அமைப்பதன்மூலம் முள்ளிவாய்க்கால் அவலத்தை மறைத்து விடலாம் என்கிற கனவில். 

ஈழத்தமிழரின் எதிரி “சிங்களம்” அல்ல. அதை புரிந்து கொண்டு உண்மையான எதிரியை ஈழத்தமிழர் அடையாளம் காணும்வரை ஈழத்தமிழர் அழிவதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கற்பகதரு said:

முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்ட இனம் ஈழத்தமிழர்.
வடக்கு-கிழக்கில் பெரும்பான்மையான இனம் இலங்கைத்தமிழர்.

மலையகத்தில் வாழ்பவர்கள் இந்தியத் தமிழர் என்ற இனம்.
சுமந்திரன், கஜேந்திரக்குமார் பொன்னம்பலம், விக்னேஸ்வரன் ஆகியோர் கொழும்புத்தமிழர் என்ற இனம். இந்த மற்ற இனத்தவர் அழிக்கப்பட்ட இனத்துக்காக குரல் கொடுக்கிறார்கள். 

கண்டிச் சிங்கள இனம், கரையோரச் சிங்கள இனம், மத்திய மலைநாட்டுச் சிங்கள இனம் என்பன ஒன்றாகச் சேர்ந்து சிங்களம் என்கின்ற இனத்துக்காக ஒன்றாக  குரல் கொடுக்கின்ற போது,

படித்த என்று தங்களைத் தாங்களே கூறிக் கொள்கின்ற, சமூகத்தில் தாங்களே பெரியவா என்று தங்களைத் தாங்களே கூறிக் கொள்கின்ற, பதவிக்காகவும் காசுக்காகவும் எசமானரை மகிழ்விக்கவும் சொந்த இனத்தை இழிவுபடுத்த வெறுப்பைக் கக்க ஆயத்தமாக ஒரு இனம் எப்போதும் உள்ளதுதான் விசித்திரம்.. ☹️

1 hour ago, கற்பகதரு said:

ஈழத்தமிழரின் எதிரி “சிங்களம்” அல்ல. அதை புரிந்து கொண்டு உண்மையான எதிரியை ஈழத்தமிழர் அடையாளம் காணும்வரை ஈழத்தமிழர் அழிவதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.

யார் அந்த எதிரி என்று வெளிப்படையாகக் கூறலாமே.. 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

26 minutes ago, Kapithan said:

கண்டிச் சிங்கள இனம், கரையோரச் சிங்கள இனம், மத்திய மலைநாட்டுச் சிங்கள இனம் என்பன ஒன்றாகச் சேர்ந்து சிங்களம் என்கின்ற இனத்துக்காக ஒன்றாக  குரல் கொடுக்கின்ற போது,

படித்த என்று தங்களைத் தாங்களே கூறிக் கொள்கின்ற, சமூகத்தில் தாங்களே பெரியவா என்று தங்களைத் தாங்களே கூறிக் கொள்கின்ற, பதவிக்காகவும் காசுக்காகவும் எசமானரை மகிழ்விக்கவும் சொந்த இனத்தை இழிவுபடுத்த வெறுப்பைக் கக்க ஆயத்தமாக ஒரு இனம் எப்போதும் உள்ளதுதான் விசித்திரம்.. ☹️

யார் அந்த எதிரி என்று வெளிப்படையாகக் கூறலாமே.. 🤥

நாங்க 

அன்றும்  இன்றும்  என்றும்  மதில்  மேல  தான்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, tulpen said:

இப்படி ஒவ்வொரு இயக்கமும் 1975 க்கு பிறகு கொலை செய்த எல்லோருக்கும் தனி தனி தூபி என்றால் வடக்கு கிழக்கு முழுவதும் தூபிகள் தான் இருக்கும்.

நீங்கள்  சொன்னது சரியே.
ஒரு பொதுவான நினைவு தூபி அமைக்கப்படுவது ஒரு நல்ல யோசனை. ஆனால் இங்கே எதிர்ப்புகள் இருக்கிறபடியால் முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்கு என்று ஒரு தனி தூபியும் யுத்தத்தில் கொல்லபட்டவர்களுக்கு என்று ஒரு தனி தூபியுமாக இரண்டு தூபிகள் அமைக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனக்கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுத்தூபி அமைக்க  சிங்கள அரசு அனுமதிக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

இனக்கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுத்தூபி அமைக்க  சிங்கள அரசு அனுமதிக்குமா?

இனக்கலவரங்கள் சாதி கலவரங்களில் உயிரிழப்பவர்களுக்கு நினைவுத்தூபி அமைக்கபடுவதில்லை.
இந்தியாவில் ஒவ்வொரு வருடமே இனகலவரங்கள் நடைபெறும்.

Link to comment
Share on other sites

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

இனக்கலவரங்கள் சாதி கலவரங்களில் உயிரிழப்பவர்களுக்கு நினைவுத்தூபி அமைக்கபடுவதில்லை.
இந்தியாவில் ஒவ்வொரு வருடமே இனகலவரங்கள் நடைபெறும்.

சாதிச்சண்டைகளும் வரலாற்று நிகழ்வுகள் தானே? ஏன் நினைவுத்தூபி அமைத்து வருடாவருடம் எங்கள் சாதிக்கு ஏற்பட்ட இழப்புகளை நினைவுகூர்ந்து இந்த இழப்புகளை பற்றி எமது அடுத்த சந்ததி அறிந்திருக்க வழிசெய்யக்கூடாது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

சாதிச்சண்டைகளும் வரலாற்று நிகழ்வுகள் தானே? ஏன் நினைவுத்தூபி அமைத்து வருடாவருடம் எங்கள் சாதிக்கு ஏற்பட்ட இழப்புகளை நினைவுகூர்ந்து இந்த இழப்புகளை பற்றி எமது அடுத்த சந்ததி அறிந்திருக்க வழிசெய்யக்கூடாது?

இப்ப முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்கு நினைவுத் தூபி அமைக்க வேண்டுமா இல்லையா..  அதைக் கூறுங்கள் முதலில். 

பின்னர் ஆணவக் கொலைகள் தொடர்பாக ஒரு முடிவுக்கு வருவோம்.. 🤥

4 hours ago, விளங்க நினைப்பவன் said:

இனக்கலவரங்கள் சாதி கலவரங்களில் உயிரிழப்பவர்களுக்கு நினைவுத்தூபி அமைக்கபடுவதில்லை.
இந்தியாவில் ஒவ்வொரு வருடமே இனகலவரங்கள் நடைபெறும்.

இன அழிப்பிற்கு வைக்கலாம் அல்லவா.. 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விசுகு said:

நாங்க 

அன்றும்  இன்றும்  என்றும்  மதில்  மேல  தான்....

சிங்களம் JVP கிளர்ச்சிக் காலத்தில் கொல்லப்பட்ட JVPயினருக்கு நினைவுத் தூபி அமைக்க அனுமதிக்கிறது. 

ஆனால் ஒரு இனப்படுகொலை நடைபெற்றதை நினைவு கூர்வதற்கு சொந்த இனத்திற்குள்ளேயே நக்கலும் நையாண்டியும் செய்யும் இவர்களெல்லாம் யார்.. 

எல்லாம் எலிக் காச்சல்தான்... 😂

ஏனென்றால் இனப்படுகொலையை நினைவு கூரும்போது இனப்படுகொலைக் கெதிராகப் போராடிய விடுதலைப் புலிகளுமல்லவா நினைவுகூரப்படுவர்.

அத்தனை காழ்ப்புணர்வு.. வேறென்ன.. 🤮

Link to comment
Share on other sites

On 13/1/2021 at 22:53, ரஞ்சித் said:

இப்போது இடிக்கப்பட்டிருப்பது முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கானதும், பல்கலைக்கழக மாணவர்களுக்கானதுமான நினைவித்தூபி. ஆகவே, அதை இருந்த இடத்தில், இருந்த வடிவில் மீள அமைப்பதே நியாயம். பிறகு வேண்டுமென்றால் கொல்லப்பட்ட அனைவருக்காகவும் ஒரு பொதுவான இடத்தில் ஒரு நினைவுத்தூபியினைக் கட்டலாம்.

முள்ளிவாய்க்காலில் நடந்தது மற்றைய இடங்களில் நடந்ததைப் போல ஒன்றல்ல. அது ஒரு திட்டமிட்ட இனவழிப்பு , ஆகவே வேறுபடுத்திக் காட்டப்படவேண்டியது அவசியம். அப்படி அவசியம் இல்லை, கொல்லப்பட்ட அனைத்து இலங்கையர்களுக்காகவும் தூபி கட்டுங்கள் என்று கேட்பது திட்டமிட்ட இனவழிப்பினை மறைக்கும் நடவடிக்கையே. 

இதை டக்கிளஸ் கேட்டது ஆச்சரியமில்லை, இங்கே சிலர் வழிமொழிவதுதான் விசித்திரமாக இருக்கிறது.

ரஞ்சித், நீங்கள. கூறியது போல் முள்ளிவாய்க்கால்  விசேடமானது தான் அதை நினைவு கூரும் நினைவு சின்னம் நிச்சயம் அவசியமானது. அதில் எவருக்கும்  மாற்று கருத்து இருக்கமுடியாது.

ஆனால்  அதே வேளை மாகாண சபையோ அல்லது மாநகரசபையோ யுத்ததத்தில் இறந்த அத்தனை  மக்களுக்குமான ஒரு நினைவு சின்னத்தை அமைத்து அதை பராமரிப்பதோடு அங்கு இதுவரை இறந்த அனைத்து பொது மக்களினதும் அனைத்து இயக்க போராளிகளினதும் பெயர் விபரங்கள் கொல்லப்பட்ட திகதி, எந்த சந்தர்பத்தில் இறந்தார்  போன்ற விபரங்களை டிகிட்டல் முறையில் பார்வையிடக்கூடிய விதத்தில் அமைப்பது சாலச்சிறந்தது. தற்போதைய நிலையில் உடனடி சாத்தியமற்றதென்றாலும் அதை படிப்படியாக நிறைவேற்ற கூடியவிதத்தில் விபரங்களை சேகரித்து அதன் முன்னேற்பாடுகளை செய்யலாம். ஆனால் செயவதை  அனைவரது ஒத்துழைப்புடன் நிதானமாக சட்டபூர்வ அங்கீகாரத்துடன் செய்வது நல்லது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/1/2021 at 00:02, கற்பகதரு said:

சாதிச்சண்டைகளும் வரலாற்று நிகழ்வுகள் தானே? ஏன் நினைவுத்தூபி அமைத்து வருடாவருடம் எங்கள் சாதிக்கு ஏற்பட்ட இழப்புகளை நினைவுகூர்ந்து இந்த இழப்புகளை பற்றி எமது அடுத்த சந்ததி அறிந்திருக்க வழிசெய்யக்கூடாது?

சாதி பெருமைகள் பேசி சாதி இழப்புகளை நினைவுகூரும் எதிர்கால திட்டங்கள் வைத்திருப்பார்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.