Jump to content

மாஸ்டர் - சினிமா விமர்சனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
 
8 மணி நேரங்களுக்கு முன்னர்
மாஸ்டர் - சினிமா விமர்சனம்

பட மூலாதாரம்,TWITTER

மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்குகிறார் என்றவுடன் எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் இருந்தது.

லோகேஷ் கனகராஜ் பாணியில் அழுத்தமான திரைக்கதையுடன் கூடிய படமாக இருக்குமா அல்லது விஜய் பாணியில் அதிரடி ஆக்ஷன் படமாக இருக்குமா என்ற கேள்வியும் இருந்தது.

படத்தின் கதை இதுதான்: சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டு துன்புறுத்தப்படும் சிறுவன், வளர்ந்த பிறகு பவானி (விஜய் சேதுபதி) என்ற பெயரில் பெரிய கொலைகாரனாகிவிடுகிறான்.

தன் தீய செயல்களுக்கு சீர்திருத்தப் பள்ளியில் இருக்கும் சிறுவர்களையே பயன்படுத்திக்கொள்கிறான். அங்கு வரும் புதிய ஆசிரியரான ஜான் துரைராஜ் (விஜய்), பவானியை வீழ்த்தி எப்படி சிறுவர்களைக் காக்கிறார் என்பதுதான் படம்.

படத்தின் துவக்கம் பவானியின் டெரரான அறிமுகத்தோடு அதிரடியாகவே துவங்குகிறது. கதாநாயகனின் அறிமுகமும் கலகலப்பாகவே இருக்கிறது. ஆனால், படம் துவங்கி ஒரு மணி நேரம் ஆன பிறகும், திரைக்கதை மையக் கதையை நோக்கிச் செல்லாமல் இழுத்துக்கொண்டே செல்வது அலுப்பூட்ட ஆரம்பிக்கிறது. பிறகு சுதாரித்துக்கொண்டு மையக் கதைக்குள் நுழைகிறது படம். 'ஆகா' என்று நிமிர்ந்து உட்கார்ந்தால் இடைவேளை.

இடைவேளைக்குப் பின் மெல்ல மெல்ல சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது திரைக்கதை. ஆனால், எந்த இடத்தில் க்ளைமேக்ஸ் வர வேண்டுமோ அதையும் தாண்டி படம் நீண்டு கொண்டே செல்வதுதான் சிக்கல். குறிப்பாக க்ளைமேக்ஸிற்கு முந்தைய சுமார் 20 நிமிடக் காட்சிகள் அவ்வளவு விறுவிறுப்பாக இல்லை. ஒரு கட்டத்தில் இதற்கு எப்போதுதான் முடிவு என எதிர்பார்க்கும்படி ஆகிவிடுகிறது.

கதாநாயகனுடன் மோதல் துவங்கிய பிறகு, வில்லன் கதாநாயகனுக்கு நெருக்கமானவர்களை கொலை செய்வது, ஆத்திரமடையும் கதாநாயகன் வில்லனை வெறியோடு தேடிப்பிடித்து அடித்து நொறுக்குவதெல்லாம் பல படங்களில் பார்த்த காட்சிகள்தான்.

மாஸ்டர் - சினிமா விமர்சனம்

பட மூலாதாரம்,TWITTER

இந்தப் படம் சிக்கலான திரைக்கதையைக் கொண்ட ஒரு திரைப்படமல்ல. மாறாக, நல்லவன் VS கெட்டவன் என்ற வழக்கமான மோதலைக் கொண்ட ஒரு திரைப்படம். அதிலும், பவானியின் பாத்திரம் ரொம்பவும் பழகிப்போன வில்லன் பாத்திரம்தான் என்றாலும், அதில் விஜய் சேதுபதி நடித்திருப்பதால் சற்று தனித்துத் தெரிகிறது.

கல்லூரி பேராசிரியராகவும் சீர்திருத்தப்பள்ளியின் ஆசிரியராகவும் வரும் விஜய், பத்து வயது குறைந்தவரைப் போல இருக்கிறார். மிகச் சிறப்பாக நடனமாடுகிறார். எதிரிகளைத் துவம்சம் செய்கிறார். அவருடைய ஃப்ளாஷ் பேக் என்ன என்று கேட்கும்போது, ஒவ்வொருவரிடமும் ஒரு பழைய சினிமா படத்தின் கதையைச் சொல்லும்போது ரொம்பவுமே ரசிக்க வைக்கிறார். ஆனால், பாதிப் படத்திற்கு மேல் கதாநாயகன் குடித்துக்கொண்டே இருப்பது அவ்வளவு சிறப்பாக இல்லை.

படத்தின் கதாநாயகியைப் போல வரும் மாளவிகா மோகனனுக்கு சொல்லும்படி ஏதும் வேலையில்லை. ஆண்ட்ரியா, நாசர் போன்ற முக்கியமான கலைஞர்கள் சில காட்சிகளில் மட்டும் தலைகாட்டிவிட்டு மறைந்துவிடுகிறார்கள்.

அனிருத்தின் பின்னணி இசை அட்டகாசம். திரைக்கதையோடு சேர்ந்துவரும் சில பாடல்களும் சிறப்பாக இருக்கின்றன.

பெரிதாக யாராலும் கவனிக்கப்படாத சிறுவர் சீர்திருத்தப் பள்ளியை மையமாக வைத்து, ஒரு கதையைச் சொல்லியிருப்பது நல்ல விஷயம்தான். ஆனால், தளர்வான திரைக்கதையின் காரணமாக, சற்று ஏமாற்றமளிக்கிறது படம்.

மாஸ்டர் - சினிமா விமர்சனம் - BBC News தமிழ்

Edited by பிழம்பு
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மாஸ்டர் முழுப் படத்தையும் ‘லீக்’ செய்த பைரசி வெப்சைட்கள்

Master Full Movie In Tamilrockers: அடிக்கடி தனது இணையதள முகவரியை மாற்றிக் கொண்டு, அதிகாரிகளுக்கும் டிமிக்கி கொடுக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.

Master Full Movie leaked to Download in Tamilrockers: நடிகர் விஜய்யின் மாஸ்டர் முழுப் படத்தையும் லீக் செய்து அதிர வைத்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ். தமிழ் ராக்கர்ஸ் இதுபோல புதுப் படங்களை ரிலீஸ் செய்வது புதிதல்ல என்றாலும், கொரோனா தொற்றுக்கு பிறகு வெள்ளித்திரையில் வெளியாகிய பெரிய படமான மாஸ்டரின் கலெக்‌ஷனை இது பாதிக்குமோ? என்கிற அச்சம் இருக்கிறது. வேறு சில பைரஸி இணையதளங்களிலும் மாஸ்டர் வெளியானது.

விஜய் படங்களை வேட்டையாடும் தமிழ் ராக்கர்ஸ்…

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் புதன்கிழமை (ஜன.13) ரிலீஸ் ஆனது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு வெள்ளித் திரையில் வெளியான பெரிய படம் இது. எனவே இதன் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

Master Full Movie In Tamilrockers: மாஸ்டர் ‘லீக்’ செய்த தமிழ் ராக்கர்ஸ்

https://tamil.indianexpress.com/entertainment/master-full-movie-leaked-to-download-in-tamilrockers-actor-vijay-242221/

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

படம் பார்ப்பது தற்கொலைக்கு சமன், இப்பதான் பாத்திட்டு வந்தேன் நண்பர்களுடன் 😭😭😭

Link to post
Share on other sites
9 minutes ago, உடையார் said:

படம் பார்ப்பது தற்கொலைக்கு சமன், இப்பதான் பாத்திட்டு வந்தேன் நண்பர்களுடன் 😭😭😭

கூட்டுத் தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளீர்கள் போல இருக்கு...😀! விஜயின் புதிய படங்களை நான் ரீவியில் கூட பார்ப்பதில்லை 
 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

படம் இன்னும் பார்க்கவில்லை. ஆனால், மேலே கதையைப் பார்த்தால் நான் பார்த்த Borderland என்ற பின்லாந்து கிரைம் திரில்லர் தொடரில் வந்த ஒரு கதை போல இருக்கிறது! 

இன்ஸ்பிரேசனா அல்லது முழுதாகச் சுட்டார்களா என்பதைப் பார்த்த பின் சொல்ல முடியும்!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

படம் பார்ப்பது தற்கொலைக்கு சமன், இப்பதான் பாத்திட்டு வந்தேன் நண்பர்களுடன் 😭😭😭

 உடையார் உங்கே தியேட்டர்களில் படம் ஓட அனுமதியுள்ளதா ? 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நிழலி said:

கூட்டுத் தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளீர்கள் போல இருக்கு...😀! விஜயின் புதிய படங்களை நான் ரீவியில் கூட பார்ப்பதில்லை 
 

பல காலத்தின் பின் பார்ப்பமென்று 5 குடும்பம் போனம், சேதுபதியின் நடிப்புதான் ஆறுதல் பரிசாக கிடைத்திச்சு😊

 

13 hours ago, குமாரசாமி said:

 உடையார் உங்கே தியேட்டர்களில் படம் ஓட அனுமதியுள்ளதா ? 

இங்கு ஒரு வருடத்திற்கு மேல் வழமையாக இயங்கி கொண்டிருக்கு, வெளி நாடுகள் போவதுதான் கட்டுப்பாடு

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 16/1/2021 at 01:39, Justin said:

படம் இன்னும் பார்க்கவில்லை. ஆனால், மேலே கதையைப் பார்த்தால் நான் பார்த்த Borderland என்ற பின்லாந்து கிரைம் திரில்லர் தொடரில் வந்த ஒரு கதை போல இருக்கிறது! 

இன்ஸ்பிரேசனா அல்லது முழுதாகச் சுட்டார்களா என்பதைப் பார்த்த பின் சொல்ல முடியும்!

நீங்கள் Bordertown series குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன்.. trafficking, drug crimes etc.. அந்த தொடரை முழுவதுமாக பார்க்கவில்லை.. தொடரில் வரும் சம்பவங்கள் உண்மையாக இருப்பதனால் இனம்புரியாத ஒரு பயம் எழுவதை தடுக்கமுடியவில்லை.. 

 

இந்தப்படத்திலும் பொதுவாக சிறுவர் வளர்க்கப்படும் நிலையும் சூழலும் அவர்களை முதலில் பிழை செய்ய தூண்டினாலும் அவர்களை சமூகம் நடத்தும் விதத்தில்தான் அவர்கள் மீண்டும் அந்த சூழலிற்கோ அல்லது முன்னேறவோ முடிகிறது என்பதை காட்டுகிறது. 

On 16/1/2021 at 01:16, நிழலி said:

கூட்டுத் தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளீர்கள் போல இருக்கு...😀! விஜயின் புதிய படங்களை நான் ரீவியில் கூட பார்ப்பதில்லை 
 

நானும் மெர்ஸலிற்கு பின் ஒரு படமும் பார்க்கவில்லை ஆனால் இதை பார்த்தபொழுது வழமையான commercial artistலிருந்து கொஞ்சம் மாறியிருக்கிறார்.. 

மற்றப்படி சமூகத்திற்கு தேவையான கருப்பொருள் ஆனால் இன்னமும் கொஞ்சம் ஆழமாகவும் விரிவாகவும் விஷயத்தை கூறியிருக்கலாம்

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.