Jump to content

வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளை கிளிநொச்சி அரச அதிபர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டனர்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளை கிளிநொச்சி அரச அதிபர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டனர்

January 13, 2021

IMG_20210113_123835_1-1024x576.jpg

வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட குழுவினர் இன்று பார்வையிட்டனர். இன்று முற்பகல் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முரசுமோட்டை  ஐயன் கோவிலடி பகுதி மற்றும் கண்டாவளை கிராம அலுவலர் பிரிவுகளில் ஏற்பட்ட வெள்ள நிலை தொடர்பான கள ஆய்வினை மேற்கொண்டனர்.

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த பகுதிகளில் வெள்ள அனர்த்தம் ஏற்படும் என முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ள பகுதிகளை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், கண்டாவளை பிரதேச செயலாளார் ரி.பிருந்தாகரன் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாள் எஸ்.கோகுலராஜா, இரணைமடு நீர்பாசன பொறியியலாளர் ச.செந்தில்குமரன், கிராம அலுவலர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

பாதிக்கப்பட்ட மக்களிற்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இதன்போது அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார் #வெள்ளஅனர்த்தம் #கிளிநொச்சி #அரசாங்கஅதிபர் #இரணைமடு

IMG_20210113_123741-1024x576.jpgIMG_20210113_123835_1-1024x576.jpgIMG_20210113_125013-1024x576.jpgIMG_20210113_125035-1024x576.jpg

 


https://globaltamilnews.net/2021/155651/

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அறுவடை காலத்தில் வெள்ளத்தால் பல ஏக்கர் நெல் வயல்கள் அழிவு

கிளிநொச்சி மாவட்டத்தில்  கன மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பல ஏக்கர் வயல்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

spacer.png

கிளிநொச்சி மாவட்டத்தில் 2020 கால போகம் சுமார் 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதில் சுமார் 20 வீதமான  வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன என கமக்கார அமைப்புகளின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

spacer.png

அறுடைக்குத் தயாராக இருந்த பருவத்தில் ஏற்பபட்ட வெள்ளம் காரணமாக இந்த அழிவுகள் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும்  எவ்வளவு ஏக்கர்  அழிவடைந்துள்ளது என்பதனை  வெள்ளம் வடிந்தோடிய பின்னரே மதிப்பீடு செய்யமுடியும் எனவும் கமக்கார அமைப்புகளின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

spacer.png

முரசுமோட்டை, பெரியகுளம், அக்கராயன், புதுமுறிப்பு, உருத்திரபுரம், கண்டாவளை உள்ளிட்ட பல பிரதேசங்களில் இவ்வாறு வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

spacer.png

இதுதொடர்பாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனை தொடர்பு கொண்டு வினவிய போது  வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வயல் நிலங்களை அதிகாரிகள் சென்று பார்வையிட்ட பின்னர் வழக்கம் போல காப்புறுதி சபையினால்  அவர்களின் நடைமுறைகளுக்கு அமைவாக இழப்பீடுகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள்  இடம்பெறும்  எனத் தெரிவித்தார்.

spacer.png

spacer.png

spacer.png

https://www.virakesari.lk/article/98477

 

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • கஞ்சா போதை பொருள் கடத்துவது கேரளாவில் இருந்து, இது சிங்கள காட்டுமிராண்டிகளின் உதவியுடன் தான் நடக்கின்றது இது அறிவுரை,  அதுவும் பொன்னான அறிவுரை 😂😂 , 
  • 11-வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வி: விவசாயிகள் தான் இனிமேல் முடி வெடுக்க வேண்டும் - மத்திய அரசு   புதுடெல்லி   வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.   இந்தப் போராட்டத்தில் இதுவரை 140க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். 10 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியும் வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே  எந்த முடிவும் எட்டப்படவில்லை.     10-வது சுற்று பேச்சுவார்த்தையில் வேளாண் சட்டங்களை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும், சுமுக தீர்வு காண ஒரு கூட்டுக்குழுவை அமைப்பதாகவும் ஒரு திட்டத்தை மத்திய அரசு முன்வைத்தது.   18 மாதங்களுக்கு வேளாண் சட்டங்களை அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்க மத்திய அரசு ஒப்புக் கொண்ட போதும் அவற்றை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.   நேற்று நடந்த  11-வது சுற்றுபேச்சுவார்த்தையிலும் மத்திய அரசு முன்வைத்த 18 மாதங்கள் வேளாண் சட்டங்களை நிறுத்திவைக்கிறோம் என்ற  திட்டத்தையும் விவசாயிகள் புறக்கணித்தனர். வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். இதனால் 11 வது சுற்று பேச்சுவார்த்தையும்  தோல்வியில் முடிந்தது.   இதையடுத்து, வீடியோ வெளியிட்டு மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகள் தான் இனிமேல்முடி வெடுக்க வேண்டும் என  தெரிவித்து உள்ளார்.   இதுகுறித்து  மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் அதில் அவர் கூறியிருப்பதாவது:   கனத்த இயத்தோடு நான் சொல்வது என்னவென்றால், இந்த கூட்டத்துக்கு தேவையான மையப்புள்ளி, கண்ணோட்டம் இடம்பெறாமல் பேச்சு நடந்தது. 20 நிமிடங்கள் மட்டுமே இன்றைய கூட்டம் நடந்தது. அதனால் தான் பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை.   விவசாயிகள் கையில்தான் இனிமேல், அனைத்தும் இருக்கிறது. இந்த விவகாரத்தின் தன்மை புரிந்து தான், விவசாயிகளின் நலனுக்காக வேளாண் சட்டங்களை 18 மாதங்கள் நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இந்த சட்டங்களை நாங்கள் நிறுத்திவைக்கிறோம் என்பதால், இந்த சட்டங்கள் குறையுள்ளது எனத் தவறாகக் கருதக்கூடாது.   விவசாயிகள் சமூகத்தின் நலனை போராடும் விவசாயிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஜனநாயகத்தில் மனம் ஒத்துப்போதல் மற்றும் வேற்றுமைகள் இயல்பானது. ஆனால், பேச்சுவார்த்தை மூலம் ஏதாவது ஒர் தீர்வு எட்டப்பட வேண்டும்.   ஆனால், துரதிருஷ்டம் என்னவென்றால், இதுவரை 11 சுற்றுப்பேச்சு நடந்தும் எந்தவிதமான தீர்வும் எட்டப்படவில்லை. போராட்டத்தை இதுவரை அமைதியாக நடத்திய விவசாயிகள் சங்கங்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவிக்கிறோம்.   பொதுவாக பேச்சுவார்த்தை நடக்கும்போது புதிதாக எந்தப் போராட்டத்தையும் அறிவிக்கமாட்டார்கள். ஆனால், விவசாயிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் அதேநேரத்தில் புதிய போராட்டத்தையும் அறிவிக்கிறார்கள், அதை வெற்றிகரமாக நடத்துகிறார்கள். ஆனால், இதுபற்றி நாங்கள் ஒருபோதும் பேசியதில்லை.   வேளாண் சட்டங்களை நிறுத்திவைக்கிறோம் எனச் சிறந்த திட்டத்தை மத்திய அரசு முன்மொழிந்தது. உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என வலியுறுத்துகிறேன். நீங்கள் ஏதேனும் முடிவெடுத்தால், அல்லது முடிவுக்கு வந்தால், நீங்களே முன்வந்து பேச்சுவார்த்தைக்கு வாருங்கள். உங்களை வரவேற்கத் மத்திய அரசு தயாராக இருக்கிறது இவ்வாறு தோமர் தெரிவித்துள்ளார்.   https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/23080157/Ball-In-Your-Court-Now-Centre-After-Farmers-Say-No.vpf
  • வெத மாத்தையாவுக்கு தன்னிலையே ஐமிச்சம்.😄
  • சிங்கள பிணத்திண்ணி கழுகுகளை விட இவர்கள் மேலானவர்கள், நீங்கள் பணம் கொடுத்தீர்களா அல்லது கண்டனீர்களா, ஆதாரம்? மனமுவந்து செய்த பல உதவிகள் உங்களை போன்ற வர்களுக்கு கசக்கதான் செய்யும், உதவி செய்தவர்களை இப்படி கேலிசெய்யும் மனம் உங்களை தவிர வேறு எவருக்கும் வராது. சிங்கள காட்டு மிராண்டிகள் பணத்திற்காக தன் இனத்திற்கு துரோகம் செய்தான் எம்மினத்தில் உள்ள சில கை கூலிகள் போன்று.  இவர்களை உள்ளே வரவிடமால் சிங்கள காட்டுமிராண்டி கடற்படையால் முடியாதா? உள்ளோ வந்தால் கொல்லதான் வேண்டுமா? சிங்கள காட்டுமிராண்டிகளுக்கு யாரென்றில்லை தமிழனென்றால் காணும் கொல்வதற்கு. தமிழீழத்தில் சிங்கள நாய்கள் மண்ணை கொள்ளையிடுகின்றான், அதில் உங்கள் குரலை காணவில்லை இங்கு வந்து சிங்களத்துக்கு வக்காலத்து வேறு. உங்கள் நிலையை யோசித்து பாருங்கள் இவர்களை உள்ளே வரவிடாமால் சிங்கள காட்டுமிராண்டி கடற்படையால் முடியாதா? உள்ளோ வந்தால் கொல்லதான் வேண்டுமா? எப்படி எமது வீரர்கள் கையாண்டார்கள் அன்று? சிங்கள காட்டுமிராண்டிகள் மாடு போல் உங்களையும் வெட்டுவேன் என மிரட்டுகின்றான், அதில் உங்கள் ஒரு பதிவு கூட இல்லை, ஏன், எஜமான் விசுவாசம்?
  • நடராஜன் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் சேர்க்கபடாததற்கு காரணம் இதுதான் – விவரம் இதோ  இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று முடிந்தது. இந்த நீண்ட தொடரில் ஒரு நாள் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியும், டி20 தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணியும் கடைசியாக நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இந்திய அணி பெற்ற இந்த வெற்றிக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி கலந்துகொள்ளும் அடுத்த தொடர் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அதன்படி இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக மோதவுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி பிப்ரவரி 5ஆம் தேதி முதல் நான்கு டெஸ்ட் போட்டி, 5 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.  - இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளுக்கான இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில் ஹார்திக் பாண்டியா மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோர் இந்திய அணிக்காக அழைக்கப்பட்டுள்ளனர் .அது தவிர இஷாந்த் ஷர்மா மீண்டும் அணியில் இணைந்துள்ளார். இந்நிலையில் இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் நடராஜன் சேர்க்கபடாமல் போனதற்கு ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்த நடராஜன் இந்த தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதனால் நிச்சயம் இங்கிலாந்து தொடருக்கான அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்த்திருந்தனர். -  - இந்நிலையில் இங்கிலாந்து தொடருக்கான அணியில் அவர் இடம்பிடிக்காததற்கு காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் போது நடராஜனுக்கு பெண் குழந்தை பிறந்தது. அதன்காரணமாக அவரது குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கவே அவருக்கு அணியில் இருந்து இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. https://crictamil.in/the-reason-behind-nattu-rejection-vs-eng/?fbclid=IwAR3xKQ_dmjeeFEEqUH7hJF6H0eSF6HpnXFePEHAkJURdi1fjAvYrMLGl1jI
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.