Jump to content

வீட்டிலிருந்தே வேலை


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

 

வீட்டிலிருந்தே வேலை (கட்டுரை)

January 8, 2021

பாரதிராஜா

ண்பதுகளில் படித்த இளைஞர்கள் என்றாலே வேலையில்லாமல் தாடி வைத்துக்கொண்டு அலையும் கூட்டம் என்கிற ஒரு நிலை இருந்தது. அதுவே தாராளமயமாக்கத்துக்குப் பிந்தைய புதிய ஆயிராண்டில் வேகமாக மாறி, இந்தப் படிப்பு – அந்தப் படிப்பு என்றில்லாமல் எல்லாப் படிப்பு படித்த இளைஞர்களும் கணிப்பொறித் துறைக்குள் வந்து குவியத் தொடங்கினர். நாமெல்லாம் படித்து முடித்த பின் வளர்ப்பதற்கு தாடி ஒழுங்காக வளருமோ வளராதோ என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்த தலைமுறை திடீரென்று முற்றிலும் புதிய உலகம் ஒன்றுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு விதவிதமான புதிய அனுபவங்களால் திக்குமுக்காட வைக்கப்பட்டது.

அப்படியான அனுபவங்களில் ஒன்று, முதலில் பெரும் பெரும் மேசைக்கணினிகளை வைத்துக்கொண்டு டொக் டொக்கென்று தட்டிக்கொண்டிருந்தவர்களுக்கு, மடிக்கணினிகள் வந்த பின்பு கூடுதலான சுதந்திரம் கிடைத்தது. முதலில் மேலாளர்கள், பின்னர் மூத்த பணியாளர்கள் என்று தொடங்கியது, சில நிறுவனங்களில் எல்லோருக்குமான வசதியாக அளிக்கப்பட்டது. மடிக்கணினிகளோடு சேர்த்து எந்த நேரமும் வேலை செய்வதற்குத் தயாராக இருக்க வேண்டிய எதிர்பார்ப்பும் வந்திறங்கியது. கூடுதல் பொறுப்போடு சேர்த்துக் கூடுதல் சுதந்திரமும் வந்து சேர்ந்தது.

http://www.yaavarum.com/wp-content/uploads/2021/01/001-1602249677607.png

“இரவெல்லாம் விழித்து வேலை பார்த்தவனுக்குக் காலையில் சிறிது தாமதமாக வருவதற்கு உரிமையில்லையா!” என்ற கேள்விக்கான பதிலாக எந்த நேரமும் வந்து எந்த நேரமும் சென்றுகொள்ளலாம் என்ற சுதந்திரம் வந்து சேர்ந்தது. அப்படியே எந்த நேரமும் அழைத்துத் தொல்லை செய்வோம் என்கிற தலைவலியும் வந்தது. கொடுத்து வாங்கும் இந்தப் பணியிடப் பண்பாட்டுக்கு முழுதும் பழகிவிட்டவர்களாகத்தான் ஒரு தலைமுறையே உருவானது. மதியம் வந்து இரவில் திரும்பினாலும் பரவாயில்லை, அவ்வப்போது அலுவலகமே வராவிட்டாலும் பரவாயில்லை போன்ற வசதிகள் வழங்கப்பட்டன. இரவெல்லாம் விழித்து வேலை பார்க்கத் தயாராக இருக்கும் பணியாளர் படையின் மூலம் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இருக்கும் வாடிக்கையாளர்களோடு கூடுதல் நேரம் உரையாட முடிகிறது, அவர்களுக்கு வேண்டிய தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க முடிகிறது என்பவை போன்ற வசதிகள் நிறுவனங்களுக்கும் நன்மை பயத்தன.

இதுவே சொந்த வேலைகள் இருக்கும் போது, வீட்டிலிருந்தே வேலை பார்க்கிறேன் என்று சொல்லி உட்கார்ந்துகொள்ளும் உரிமையைக் கொடுத்தது. அப்படியே மெதுவாக எப்போதுமே வீட்டிலிருந்து வேலை செய்துகொள்ளும்படியான உரிமையுடைய ஒரு பிரிவினரை உருவாக்கியது. பிரசவ விடுப்பில் சென்ற பெண்கள், விபத்தில் அடிபட்டு நகர முடியாமல் வீட்டில் மாட்டிக்கொண்டவர்கள், நோய்வாய்ப்பட்ட குடும்பத்தினருக்கு உதவும் பொருட்டு வீட்டில் இருக்க வேண்டியவர்கள் போன்றவர்கள், கொடுக்கப்படும் இந்த உரிமைக்குப் பதிலாகக் கூடுதல் உழைப்பைக் கொடுக்கவோ, குறைந்த ஊதியத்துக்குப் பணிபுரியவோ தயாராக இருப்பின், அவர்களே திறமை மிக்கவர்களாகவும் இருப்பின், அதுவும் நிறுவனத்துக்கு ஆதாயந்தானே! இப்படித்தான் இந்த வீட்டிலிருந்தே பணிபுரியும் பண்பாடு நம் மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கொண்டது.

கிட்டத்தட்டப் பத்தாண்டுகளுக்கு முன்பே இப்படியான ஒரு சூழ்நிலையில் தொடர்ந்து ஓராண்டு காலம் வரை வீட்டிலிருந்தே பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. அதில் கிடைத்த அனுபவங்களையும் பாடங்களையும் எழுத வேண்டும் என்கிற திட்டம் அப்போதிருந்தே தள்ளிப்போடப்பட்டுக்கொண்டே வந்து, இப்போது கொரோனா கொடுத்திருக்கும் அனுபவங்களின் மூலம் சாத்தியப்பட்டிருக்கிறது.

சில நிறுவனங்கள், சில குழுக்கள், சில பணியாளர்கள் என்று ஆங்காங்கே சில பகுதிகளில் மட்டும் இருந்த பண்பாடு கொரோனாவின் புண்ணியத்தில் எல்லோருக்குமானதாக மாறியிருக்கிறது. இதற்கு முன்பு, “எனக்கென்னவோ இதில் எல்லாம் நம்பிக்கை இல்லைங்க. நம் கண் முன்னால் இருந்துகொண்டே டேக்கா கொடுப்பவர்கள், வீட்டில் உட்கார்ந்துகொண்டெல்லாம் வேலை பார்ப்பார்கள் என்ற கதையை நான் நம்பத் தயாரில்லை” என்று சொன்னவர்களும் சேர்த்து எல்லோருமே வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டிய – வேலை வாங்க வேண்டிய கட்டாயம் நம் மீது திணிக்கப்பட்டது. இப்படித்தான் வேலை செய்தாக வேண்டும் என்று ஆன பின்பு எதிர்பார்த்ததைவிடவும் கூடுதலாகவே அந்த முறைமை வெற்றியடைந்துவிட்டது போலத் தெரிகிறது.

அதே வேளையில், முதலில் சில மாதங்கள் எல்லோருமே வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதில் உற்பத்தி கூடியுள்ளது என்று கூப்பாடு போட்டவர்களில் ஒரு பகுதியினர் மெதுவாகக் குரல் ஓய்ந்து, “அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாது” என்று பின்வாங்குகிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. எதையுமே அப்படியே நம்பிவிடவும் முடியாது. இப்போது ஆதாயம் அளிப்பதாக இருந்தாலும் தொலைநோக்கில் திருப்பி அடிக்கும் என்ற அச்சம் வந்தால் கூட, இப்போதே அது சரியாக எடுபடவில்லை என்று கூச்சமில்லாமல் இறக்கிவிடுவதுதான் பெருநிறுவனங்களின் தொழில் தர்மம்!

உண்மையாகவே காலை எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை உழைக்கிறவர்கள் இருக்கிறார்கள். பயணத்தில் வீணாக்கிய சில மணி நேரங்களையும் சேர்த்து இப்போது அவர்களுக்குக் கூடுதல் நேரம் கிடைக்கிறது. அதையும் தன் நிறுவனத்துக்கே அர்ப்பணிக்கிறார்கள். அவர்கள் இப்போது உழைக்கிற மாதிரியே எப்போதும் உழைப்பார்களா என்ற நியாயமான சந்தேகம் இந்த நிறுவனங்களுக்கு இருக்கிறது. இப்போது எங்கும் போக முடியாமல் வீட்டுக்குள் மாட்டிக்கொண்டு முடங்கிக் கிடப்பதால் இப்படி உழைக்கிறார்கள். நாளை எல்லாம் சரியாகிவிட்ட பின் வண்டியைப் பூட்டிக்கொண்டு ஊர் சுற்றக் கிளம்பிவிடுவார்களே! அவசரப்பட்டு இந்த வெற்றியைக் கொண்டாடிவிட்டால் நாம்தானே நாளை அனுபவிக்க வேண்டும் என்றெண்ணி இப்போதே தெளிவாக அடக்கி வாசிக்கக் கூடும்.

பெருநிறுவனங்கள் என்பவை தனிமனிதர்களைப் போல ஒற்றை மூளையில் இயங்குபவை அல்ல; எந்தச் சிறு நகர்விலும் இருக்கும் எல்லாவிதமான ஏற்றத்தாழ்வுகளையும் துல்லியமாகக் கணக்குப் போட்டு அதற்கேற்றபடி உலகையே நகர்த்தும் ஆற்றலும் அதற்குத் தோதான அமைப்புகளையும் கொண்டவை.

அடுத்தது, “எல்லோருமே இப்படி உழைப்பவர்களா?” என்கிற கேள்வியும் இருக்கிறது. வீட்டுக்குள்ளேயே கிடக்க வேண்டிய இந்த வேளையில் கூட, சரியான நேரத்துக்கு வந்து நிற்க முடியாத – வேலையில் கவனம் செலுத்தத் திணறும் – கிடைத்திருக்கும் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்திவிடும் கூட்டம் ஒன்றும் இருக்கிறது. அவர்களையும் சேர்த்துத்தான் இந்த முறைமை எடுபடுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டியதிருக்கிறது.

இன்று தொழில்நுட்பம் இதற்கெல்லாம் ஈடுகொடுத்து வளர்ந்திருப்பதால் இது சாத்தியப்பட்டிருக்கிறது. இதுவே இருபது – முப்பது ஆண்டுகளுக்கு முன்பு முடிந்திருக்குமா? நிச்சயமாக இல்லை. இந்தியா முழுக்கவும் இணையம் புகுந்துவிட்டது. குறிப்பாகத் தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலங்களில் ஒவ்வொரு கிராமத்துக்கும் இணையம் வந்துவிட்டது. கடைசியாக மின்சாரத்தைப் பார்த்த கடைக்கோடிப் பாட்டாளிகளின் பிள்ளைகளும் கூட இப்போது ஓட்டு வீட்டில் அமர்ந்துகொண்டு பன்னாட்டு நிறுவனங்களின் அழைப்புகளில் கலந்துகொள்கிறார்கள். அதை நமக்குச் சாத்தியப்படுத்தியது தொழில்நுட்பம் மட்டுமல்ல, அந்தத் தொழில்நுட்பத்தை மக்கள்மயப்படுத்தியதும் அதற்கொரு முக்கியக் காரணம். அதில் தமிழகம் முன்னணியில் இருப்பது நமக்கெல்லாம் பெருமையே!

இதன் முடிவில் எந்தத் தொழில் எல்லாம் வீட்டிலிருந்தே செய்ய முடியாதவை என்கிற தெளிவும் கிடைத்துவிடும். “இவ்விடம் வீட்டிலிருந்தே வேலை செய்தல் என்னும் பேச்சுக்கே இடமில்லை” என்று அட்டை மாட்டிவிடுவார்கள். எந்தத் தொழிலுக்கெல்லாம் வீட்டைவிட்டே வெளியேற வேண்டியதில்லை என்கிற தெளிவும் கிடைத்துவிடும். கணிப்பொறித் துறையினர் மட்டுமல்ல, மருத்துவர், ஆசிரியர், கணக்காளர் போன்ற பணிகளே வீட்டிலிருந்தே செய்யத்தக்க பணிகளாக உருவெடுப்ப. வீட்டில் இருந்து செய்யத்தக்க வேலையா என்பதன் அடிப்படையில் தனிமனிதர்கள் தமக்கான சரியான துறையைத் தேர்ந்தெடுக்கும் போக்கு வளரும். மனித வாடை பிடிக்காதவர்கள் வீட்டிலிருந்தே செய்யும் வேலைகளை நோக்கி நகர்வார்கள். அதனால் பல புதிய உளவியல் பிரச்சனைகளும் நோய்களும் உருவாகலாம். காடுகளுக்குள் அலைந்துகொண்டிருந்த விலங்கொன்று சமூக விலங்காகி அதுவும் சுருங்கி ‘வீட்டு’ விலங்காகிப் போதல் எவ்வளவு பெரிய பரிணாம மாற்றம்! அதற்கான விலை சாதாரணப்பட்டதாகவா இருக்கும்! அப்படியானவர்களைக் குறி வைத்து தியானம், யோகா, உடற்பயிற்சி, நோகாமல் நுங்கு தின்கிற மாதிரியான குறிப்பிட்ட விதமான கேளிக்கைகள் என்று விற்கும் குருமார்கள் கூடுவார்கள்.

“நம்மளாலல்லாம் நாலு நாளைக்கு மேல் வீட்டுக்குள் இருக்க முடியாதப்பா!” என்கிறவர்கள் இப்போது வீட்டுக்குள் இருந்து செய்ய முடிகிற வேலைகளில் இருந்தாலும் அவற்றைவிட்டுத் தப்பி ஓட என்னென்ன வேலைகள் செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்யத் தொடங்கிவிடுவார்கள். அவர்கள் பலரின் குடும்பங்களில் மற்ற வீடுகளைப் போலல்லாமல் எப்போதும் வீடு தங்காமல் திரியும் துணையின் மூஞ்சியைப் பார்க்கச் சகியாமல் வரும் ஆத்திரத்தால் பூகம்பங்கள் வெடிக்கும். இன்னொரு பக்கம், எந்நேரமும் தன்னோடே வீட்டுக்குள்ளேயே கிடக்கும் துணையின் மூஞ்சியைப் பார்க்கச் சகியாமல் வரும் கோபத்தாலும் பல குடும்பங்கள் உடைவ. அதுவும் எந்நேரமும் வேலையே கிறுக்காகக் கிடக்கிற துணைகளால் வரும் பிரச்சனைகள் மேலும் உக்கிரமாக இருக்கும். எட்டு மணி நேரத்தைப் பத்து மணி நேரத்துக்குள்ளாவது முடித்துக்கொள்ளத் தெரியாவிட்டால் சிக்கல்தான்.

வாரத்தில் ஒரு நாள் வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள், வாரத்தில் ஒரு நாள் பணியிடம் செல்பவர்கள், இரண்டு நாட்கள் வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள், இரண்டு நாட்கள் பணியிடம் செல்பவர்கள் என்று வெவ்வேறு விதமான ‘இனக் குழுக்கள்’ உருவாகிவிடுவார்கள்.

பணியாளர்கள் ஓரிடத்தில் கூடிப் பணிபுரிவதைவிட அவரவர் வீட்டிலேயே கிடந்து பணிபுரிவதன் மூலம் நிறுவனங்களுக்கு இன்னொரு பெரிய வசதியும் கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களிடம் புலம்புவதை எல்லாம் வீட்டில் இருப்பவர்களிடமே புலம்பிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கக் கிளம்பிவிடுவார்கள். ஒரு வேலையை வெறுத்து இன்னொரு வேலை தேட வேண்டும் என்கிற உந்துதலோ சங்கம் வைத்து உரிமையைக் கோர வேண்டும் போன்ற எண்ணங்களோ எழவே எழா. அதே வேளையில், பணியிடத்துக்கு வந்தால் மற்றவர்கள் முன்னால் செய்ய முடியாத வேலைகள் பலவற்றை வீட்டில் இருந்தால் கூச்சமில்லாமல் செய்ய முடியும். அதில், வேலை தேடுதல், நேர்காணல்களில் கலந்துகொள்ளல், தனிப்பட்ட திறமையை வளர்த்துக்கொள்வதற்கான பயிற்சிகளில் ஈடுபடுதல் ஆகியவை அடக்கம்.

வீட்டிலிருந்தே வேலை செய்தல் வேலை செய்ய வேண்டுமென்றால், அதற்குச் சில அடிப்படைத் தேவைகள் இருக்கின்றன. தனியாக அமர்ந்து வேலை செய்ய – இணைய வழிச் சந்திப்புகளில் கலந்துகொள்ள ஏதுவான தனி அறையோ அமைதியான இடமோ இருக்க வேண்டும். தனி அறை இருந்தாலும் வெளியிலிருந்து சத்தம் புகாத வகையில் அவ்வறை அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படியான வீடுகளைக் கட்டுவதும் ஏற்கனவே இருக்கும் வீடுகளில் மாற்றங்கள் செய்வதும் கட்டுமானத்துறையில் சில புதுமைகளைப் புகுத்தும். நல்ல இணைய இணைப்பு இருக்க வேண்டும். வீட்டிலிருப்பவர்கள், எந்த நேரமும் “கறிவேப்பிலை வாங்கி வா”, “கொத்தமல்லி வாங்கி வா” என்று நொச்சுப் பண்ணிக்கொண்டே இருக்கக் கூடாது.

வீட்டிலிருந்தே வேலை என்பதன் விளைவாக வீட்டிலிருந்தே வேலை தேடுதல் என்பதும் கூடிவிடும் என்பதால், அதனால் உருவாகப் போகும் பிரச்சனைகளில் ஒன்றாகச் சொல்லப்படுவது அதனால் கூடப் போகும் மோசடிகளின் எண்ணிக்கை. “வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் வாங்க” பேர்வழிகளுக்கு இது ஒரு பெரும் வாய்ப்பு. இவர்கள் எளிதில் ஏமாறக்கூடிய பாவப்பட்ட ஒரு கூட்டத்தை வைத்து நன்றாகக் காசு பார்த்துவிடுவார்கள். கட்டடம் வேண்டியதில்லை, முகவரி வேண்டியதில்லை, ஒரேயோர் இணைய இணைப்பும் தேன் வழிய ஆங்கிலத்தில் பேசும் ஆற்றலும் இருந்தால் போதும். ஒரு பெரும் எண்ணிக்கையை ஏமாற்றிவிடலாம்.

இது போன்ற சில்லறைப் பிரச்சனைகள் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், இந்தக் கொரோனாக் கொள்ளை நோயின் புண்ணியத்தில் நிகழ்ந்திருக்கும் வீட்டிலிருந்தே வேலை செய்தல் சார்ந்த மாற்றங்களால் மனித குலமே ஒரு பெரும் மாற்றத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே அருகில் இருக்கும் மனிதர்களுடனான நெருக்கம் மனிதர்களுக்கு வேகமாகக் குறைந்து வந்துகொண்டிருந்தது. ஒரே வீட்டில் இருக்கும் கணவனும் மனைவியும் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வதைவிட உலகின் வேறு ஏதோ ஒரு மூலையில் இருக்கும் முகமே தெரியாத அல்லது உண்மை முகமே தெரியாத எவர் எவருடனோ மணிக்கணக்காக நேரம் செலவிடுவதை அனுபவித்துச் செய்கிற போக்கு கூடிக்கொண்டே வந்துகொண்டிருந்தது. இத்தனை இலட்ச ஆண்டு காலப் பரிணாம வளர்ச்சியில் உருவாகி வந்திருக்கும் மனிதனுக்குள் இருக்கும் ஏதோவொரு தேவைதானே இதற்குக் காரணமாக இருக்க வேண்டும்! ஆனால் அப்படிப்பட்டவர்களே கூட வேலை என்று வந்துவிட்டால் நேரில் இருந்தால்தான் எளிதாக இருக்கிறது என்று எண்ணுபவர்களாகத்தான் இருக்கிறார்கள்; புதிதாக ஏதொவொன்றைப் பற்றிப் படிப்பதற்கோ பயிற்சி பெற்றுக்கொள்வதற்கோ நேரில் இருந்து கலந்துகொள்ளாவிட்டால் தன்னால் கவனிக்கவே முடியாது என்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

இவர்கள் எல்லோருமே வெகுவிரைவில் இந்தப் புதிய முறை வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுவிடுவார்கள். உணவுக்காக நாடோடியாக வாழ்ந்த மனிதன் விவசாயம் கண்டுபிடித்ததும் ஓரிடத்தில் நிலைகொண்டுவிட்டதும், ஆனாலும் உள்ளுக்குள் இருந்து அரித்துக்கொண்டிருக்கும் ஊர் சுற்றும் ஆசையைச் சுற்றுலா என்ற பெயரில் அவ்வப்போது செய்துகொள்வது போல, காலமெல்லாம் நாளெல்லாம் உடலுழைப்பே செய்து பழகியிருந்த போதும், புதுப்புதுக் கண்டுபிடிப்புகளின் மூலம் உடலுழைப்பு குறைந்துவிட்ட பின்பு அதனால் உருவான கேடுகளைக் களைவதற்காக ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் செய்துகொள்ளும் வகையில் உடற்பயிற்சி கண்டுபிடித்ததைப் போல, தொழில் தொடர்பான எல்லா வேலைகளையும் வீட்டிலிருந்தே செய்துகொண்டு, அதனால் ஏற்படப் போகும் மனிதர்களுடனான இடைவெளியையும் அதனால் ஏற்படப் போகும் உளவியல் பிரச்சனைகளையும் சரிசெய்துகொள்வதற்கு, அதற்கென்றே ஒரு குறிப்பிட்ட நேரத்தையும் மனிதர்களையும் ஒதுக்கி அதை வேலைக்கு வெளியில் வைத்துக்கொள்வார்கள்.

இந்த வேகமான மாற்றத்தை எளிதாக்கும் வேலையை மாய மெய்மை (Virtual Reality) என்கிற வேகமாகச் சந்தைக்கு வந்துகொண்டிருக்கும் தொழில்நுட்பம் சாத்தியப்படுத்திவிடும். அதன் பின்பு நடக்கப் போவதுதான் மனித குலத்துக்குப் பெரும் பாய்ச்சலாக இருக்கப் போகிறது. உடலால் ஒரே இடத்தில் இருந்துகொண்டு, அமெரிக்காவில் நடக்கிற அலுவலக மாநாட்டிலும் கலந்துகொள்ளலாம்; அது முடிந்த அடுத்த நிமிடமே மதுரையில் நடைபெறும் ஒன்னுவிட்ட சித்தப்பா மகனின் திருமணத்திலும் கலந்துகொள்ளலாம்; அது முடிந்த மறு நிமிடமே ஆஸ்திரேலியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை நேரில் காண்பது போலவே மாடத்தில் நின்று காணலாம். கையில் ரிமோட் வைத்துக்கொண்டு சேனல் மாற்றுவது போல, ஒன்று சலிப்பாக இருந்தால் இன்னொன்றைப் போய்ப் பார்த்துவிட்டு வரலாம். இது அரசியல், பொருளியல், அறிவியல், வணிக, மருத்துவ ரீதியாக நினைத்துப் பார்க்க முடியாத பல மாற்றங்களை நிகழ்த்தப் போகிறது. அது ஒரு புறமென்றால், “வாழ விரும்பும் இடம் ஒன்றாக இருக்கிறது, இருக்க விரும்பும் இடம் ஒன்றாக இருக்கிறது, இருக்க வேண்டிய இடம் ஒன்றாக இருக்கிறது!” என்று உழலும் எளிய மனிதர்களுக்கும் இது பெரும் மாற்றமாக இருக்கும்.

“பிழைப்புக்காக ஊரைவிட்டு வந்து இருபது ஆண்டுகள் ஆகின்றன. நாமெல்லாம் இவ்வளவு மாறிவிட்டோம். நம் ஊரும் நம்மைப் போலவே மாறியிருக்குமே! அது எப்படி மாறிவிட்டது என்று போய்ப் பார்க்கக்கூட முடியவில்லையே! தைப் பொங்கலுக்கும் பங்குனிப் பொங்கலுக்கும் ஊரில் இருந்து கொண்டாடுவது போல வருமா!” என்று நினைவில் ஊர் உள்ள மிருகமாகவே வாழும் கிராமத்து – சிறுநகரத்து மனிதர்களுக்கெல்லாம் இது ஒரு வாழ்வைப் புரட்டிப் போடும் மாற்றமாக இருக்கும். பெரும்பாலான வேலைகளை – அதுவும் வளமான வாழ்க்கையைக் கொடுக்கும் வேலைகளை – தன் சொந்த ஊரில் இருந்துகொண்டே செய்துகொள்ள முடியும் என்கிற மாற்றம் சாதாரணப்பட்ட மாற்றமா! ஊரில் இருக்கும் தன் உறவினர்களோடே வாழ்ந்துகொண்டே உலகின் தலைசிறந்த பள்ளிகளில் கூட தன் பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியும் என்கிற மாற்றம் எப்பேர்ப்பட்ட மாற்றம்! உருப்பட வேண்டுமென்றால் பெருநகரங்களுக்குப் போயாக வேண்டுமென்கிற விதி தளர்த்தப்படப் போகிறது. “கெட்டும் பட்டணம் போ!” என்கிற பழமொழியெல்லாம் வழக்கொழியப் போகிறது.

உலகம் முழுமைக்குமே நகர – கிராம இடைவெளி என்பது பெரிய பிரச்சனையாகி வருகிறது. குறிப்பாக ஏற்கனவே சாதிய மனநோயில் சிக்கிக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் சீரழிந்து கிடக்கும் நம் போன்ற சமூகத்துக்கு இது ஒரு கூடுதல் தலைவலி. இந்த வீட்டிலிருந்தே வேலை என்கிற புதிய பண்பாடு அதற்கொரு பெரும் நிவாரணமாக இருக்கும். நகரங்களின் நெரிசல் குறைவது மட்டுமல்ல, நகர அமைப்பே கேள்விக்குள்ளாகலாம். பெரும்பாலானவர்கள் அவரவர் ஊருக்குத் திரும்ப நேர்ந்தால், வளர்ச்சியும் வசதிகளும் பரவலாக்கப்பட்டு, முதலில் அவை எல்லா ஊர்களுக்குமானவையாகி அப்படியே பின்னர் எல்லோருக்குமானவையாகலாம்.

“கதை செம்மையாக இருக்கிறதே! இதெல்லாம் நடக்குமா?” என்கிறீர்களா? அது நம் எல்லோருடைய தலைவிதியையும் நிர்ணயிக்கும் பெருநிறுவனங்களின் கைகளில் இருக்கிறது. பின்னர் சிறிது நம் கைகளிலும் இருக்கிறது. அவர்கள் நம் ஆசையை நிறைவேற்ற வேண்டுமென்றால், நாம் அவர்களின் ஆசையை நிறைவேற்ற வேண்டும். வீட்டிலிருந்தே வேலை செய்வதன் மூலம் அவர்களுக்கு ஆதாயம் மட்டுமே இருக்கிற மாதிரிப் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? தொழுவத்திலேயே கிடந்தாலும் மாடாக உழைக்க வேண்டும். ‘மாடு தொழுவத்திலேயே கிடப்பதை விரும்புகிறது, எனவே அதற்காகப் புல்லைச் சிறிது குறைத்துப் போட்டாலும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு கூடுதலாக உழைக்கும்’ என்று அவர்கள் நம்பும் வகையில் நடந்துகொள்ள வேண்டும்.

***

பாரதிராஜா

 

http://www.yaavarum.com/வீட்டிலிருந்தே-வேலை/

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • தேசிய, திராவிடக் கட்சிகளுக்கு நாம் தமிழர் கட்சியே வழிகாட்டி: சீமான் பேட்டி த.சத்தியசீலன் கோவையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் | படம்: ஜெ.மனோகரன். 234 தொகுதிகளில் போட்டியிடும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் சென்னை மாநாட்டில் அறிமுகம் செய்யப்படுவார்கள் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சி சார்பில், சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த மேற்கு மண்டல ஆலோசனைக் கூட்டம், கோவை - அவிநாசி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நாம் தமிழர்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகித்து, கோவை மேற்கு மண்டலத்தில் போட்டியிடத் தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ''2021 சட்டப் பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. தேர்தலில் தலா 117 ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டியிடுகின்றனர். வரும் மார்ச் 20-ம் தேதி சென்னையில் நடைபெறும் நாம் தமிழர் கட்சி மாநாட்டில் 234 வேட்பாளர்களும், அவர்கள் போட்டியிடும் தொகுதிகளும் அறிவிக்கப்படும். நான் எந்தத் தொகுதியில் போட்டியிடுகிறேன் என்பதை அப்போது அறிவிப்பேன். தேசியக் கட்சிகளுக்கும், திராவிடக் கட்சிகளுக்கும் எங்கள் நாம் தமிழர் கட்சியே வழிகாட்டியாக விளங்குகிறது. ஒரு கட்சியில் சுற்றுச்சூழல் பாசறை என்பதைத் தொடங்கி, அதன்மூலம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். இதன் தொடர்ச்சியாகவே திமுகவில் சுற்றுச்சூழல் பாசறை அமைக்கப்பட்டது. இயற்கை வேளாண்மை, ஆடு, மாடு வளர்ப்பு அரசுத் தொழிலாக்கப்படும் என்று நான் பேசியபோது கேலி செய்த கட்சிகள், தற்போது இதையே பேசி வருகின்றன. தமிழ்க் கடவுள் முருகன் என்ற முழக்கத்துடன், வேலைக் கையில் எடுத்தோம். அதைப் பாஜகவும், திமுகவும் தற்போது கையில் எடுத்துள்ளது. அவர்கள் வாக்குக்காகச் செய்கிறார்கள். நாங்கள் அதை உணர்வாகச் செய்கிறோம். அவ்வளவுதான் வேறுபாடு. திமுக ஆட்சி அமைந்தால், மக்களின் பிரச்சினைகளுக்கு 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறி வருகிறார். இதற்கு முன் 22 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது, ஏன் இதைச் செய்யவில்லை? என்ற கேள்வி எழுகிறது. இந்த வாக்குறுதியை நம்பி மக்கள் ஏமாறக்கூடாது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை நாடு முழுவதும் வீழ்ந்து கிடக்கிறது. தென் மாநிலங்களில் தங்களுடைய இருப்பைத் தக்க வைக்க முயற்சி செய்கிறது. பாஜகவைப் பொறுத்தவரை வட மாநிலத்தவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், முதல் ஆளாகக் களத்தில் இறங்கியிருக்கும். அதே நேரத்தில் தமிழகத்திற்கு ஒரு பிரச்சினை என்றால் செவி சாய்க்காது. 4 மீனவர்களை இலங்கைக் கடற்படை கொன்றதைக் கண்டும், காணாமல் இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள்தான் இதைத் தடுக்க வேண்டும். நாம் தமிழர் கட்சி ஆட்சியில் இருந்தால், ஒரு தமிழக மீனவனைக்கூட, இலங்கைக் கடற்படையால் தொட முடியாது. எங்களுக்கென்று தனிக் கருத்தியல் உள்ளது. அதை முன்வைத்து, எங்கள் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் மக்களிடம் வாக்கு கேட்போம்''. இவ்வாறு சீமான் கூறினார். அதன் பின்னர் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது? நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் களத்தில் எவ்வாறு பணியாற்ற வேண்டும்? வாக்காளர்களை எவ்வாறு அணுகி வாக்குச் சேகரிப்பது? என்பன உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கட்சியினர் ஆலோசனை மேற்கொண்டனர்.   https://www.hindutamil.in/news/tamilnadu/626364-naam-tamilar-party-is-the-guide-for-national-and-dravidian-parties-seeman-interview-1.html  
  • இந்தியாவின் தடுப்பூசிகளை ஜனாதிபதி பெற்றுக்கொண்டார்..! இந்தியா அனுப்பி வைத்துள்ள கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ  சற்று முன் பெற்றுக்கொண்டார். இந்தியா வழங்கும் 5 இலட்சம் கொவிட்-19 தடுப்பூசிகளை ஏற்றிய சிறப்பு விமானம் இன்று வியாழக்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் உத்தியோகபூர்வமாக அவற்றை கையளித்தார்.   https://www.virakesari.lk/article/99316  
  • மிகச்சரியான மாற்றம் – விக்டர் ஐவன் தற்போது நாட்டை ஆளும் அரசும், அதன் சமூக அரசியல் முறையும், அதன் பொருளாதாரமும் முழுமையாக முடங்கி விழுந்துள்ளது. அதுவும் வங்குரோத்து நிலை மற்றும் அராஜகத்தின் இருண்ட நிழல்கள் நாட்டை விழுங்கிக் கொண்டிருக்கின்றன. துரதிஷ்டவசமான கொவிட்-19 இன் பாதிப்பும் இந்த சந்தர்ப்பத்தில்தான் நாட்டை காவு கொண்டுள்ளது. இந்த நிலை நாட்டின் பொது மக்களது அன்றாட வாழ்க்கை ஓட்டத்துக்கு பலத்த பாதிப்பை ஏற்படுத்தியிருப்பினும் அதை பொருத்துக் கொள்ளும் நிலையில்தான் நாட்டு மக்கள் உள்ளனர். எனினும் அந்த நிலை நாளுக்கு நாள் மிக மோசமான நிலைக்கு மாற்றமடைந்து செல்வதை தவிர்க்க முடியாதுள்ளது. அதன் விகிதாசரத்துக்கேற்ப சமூகம் சிந்தனைத் திறனுடன் செயல்படும் ஆற்றலையும் இழந்துவிடும் நிலையேற்படும். நாட்டில் காணப்படும் இந்த படுமோசமான நிலைக்கு கோட்டாபய ராஜபக்ஷ அரசு எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? இந்த அரசு எவ்வித நடைமுறை சாத்தியமான இலக்கும் இன்றியே செயல்படுகிறது. தற்போது இந்த அரசு பாதுகாப்பு படையினதும் அதி உயர் பௌதிக சக்திகளினதும் தயவை நாடிக்கொண்டு, மிகவும் பலவீனமான நிலையில்தான் உள்ளது. நாட்டிலிருந்த சில தனவந்தர்கள் கோட்டாபாய ராஜபக்ஷவை ஆட்சியில் அமர்த்த கடுமையாக உழைத்தனர். அவ்வாறு பணத்தை வாரி வீசியவர்கள் நாட்டின் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு வீசவில்லை. மாறாக அவர்கள் தமது இழந்த பணத்தை பல மடங்காக மீளப்பெற்றுக்கொள்ளும் வகையில் அரச அங்கீகாரத்துடன் நாட்டை கொள்ளையடித்துக்கொண்டிருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. தலைவரின் தலையிடி ஆட்சி மாற்றத்தின் பின் இலகுவாக ஆட்சியை நடத்திச்செல்லக்கூடிய ஒரு நாடாக இலங்கை காணப்படவில்லை மிகச்சிறந்ததோர் ஆட்சியாளருக்கும் கூட கட்டுப்படுத்த இயலாத படு பாதாளத்தில் விழுந்திருந்த நாடாகவே இலங்கை அவ்வேளையில் காணப்பட்டது. எனினும் அக்காலகட்டத்தில் கோட்டாபய அவரது கடுமையான பிரச்சாரப்பணிகள் காரணமாக மக்கள் மத்தியில் செயற்கையாகவே ஊதிப் பெருப்பிக்கப்பட்ட ஒரு தலைவராக அவர் காணப்பட்டார். முறையாக ஆராய்ந்து முடிவெடுக்கத்தெரியாத இலங்கை மக்கள் கோட்டாபயவின் பேச்சில் மயங்கி இமையமலை அளவுக்கு அவர் மீது நம்பிக்கை வைத்து தமது பெறுமதிமிக்க வாக்குகளை அவருக்கு அள்ளிக் கொடுத்தனர். (இலவசக் கல்வி மூலம் இலங்கை மக்களில் 100% ஆனோர் எழுதவும், வாசிக்கவும், கையொப்பமிடவுமே தெரிந்துள்ளனர் ஆனால் ஒரு விடயத்தை சரியாக அறிந்து ஆராய்ந்து முடிவெடுக்கக் கூடிய ஆற்றல் படைத்தவர்கள் 5%  ஆவது நாட்டில் இல்லை – மொழிபெயர்ப்பாளர்). அதன்படி மக்களில் பெரும்பாண்மையினர் கோட்டாபயவிற்கு தமது வாக்குகளை அளித்து அவரை முறுங்கை மரத்தின் உச்சிக்கே ஏற்றி விட்டனர். அவ்வாறு அவரது புகழ் எந்த அளவுக்கு ஊதிப்பெருப்பிக்கப்பட்டாலும் அவர் ஜனாதிபதியாகி வெற்றியடைந்தார். அதன் பின் அவரது புகழ் காற்று இறக்கப்பட்ட பலூன் ஒன்றைப் போல் கீழே தள்ளப்பட்டது. கோட்டாபய பாதுகாப்புப் படையின் அதிகாரியாக செயல்பட்ட காலத்தில் அவர் தமது முழுத்திறமையையும் வெளிக்காட்டிய ஒரு திறமையான பாதுகாப்புப் படை அதிகாரியாக இருந்திருக்கலாம். உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது பல்வேறு விடயங்கள் விவாதத்திற்குட்பட்டிருந்த போதிலும் பாதுகாப்புச் செயலாளர் என்ற வகையில் யுத்தத்தின் இணைப்பாளராக மிக முக்கியமான நடவடிக்கைகளில் அவர் மிகத்திறமையாக ஈடுபட்டார். எனினும் நாட்டின் தற்கால அரசியல் நிலை பற்றி எவ்வித ஆய்விலும் ஈடுபடாமலும் எந்த அனுபவமும் இல்லாமல் தான் அவர் ஆட்சித் தலைமைத்துவத்திற்கு வந்தார். 19 ஆவது அரசியல் அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் பற்றிய அறிவு அவருக்கு இருக்கவில்லை. நாடு எந்த அளவிளான ஒரு பிரச்சினைக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றது என்பது பற்றிய ஆழமான அறிவும் அவருக்கு இருக்கவில்லை. ஆட்சி அதிகாரத்திற்கு வந்த நாள் முதல் ஆட்சியாளர்களை சோதனைக்குட்படுத்துவதற்காக நடைமுறையில் காணப்பட்ட அமைப்பு முறையை ‘கழுத்தை நெருக்கிக் கொன்றுவிடும்’ ஒரு முறையைத்தான் அவர் பின்பற்றி வருகிறார.; அரசியல் வித்தகர் ஐவர் ஜெனின்ஸ் இவ்வாறு கூறியுள்ளார். “கட்டுப்படுத்த முடியாத அதிகாரத்தைக்கொண்டு தமது அதிகாரத்தைப் பயன்படுத்துபவர்கள் நிச்சயமாக மோசடிக்குள்ளாக்கப்படுவார்கள்”. இராணுவ மயப்படுத்தல் தாம் முகம் கொடுத்துக்கொண்டிருக்கும் பாரதூரமான பிரச்சினைகளைப் பற்றி அறியாதவராகவே ஜனாதிபதி இருக்கிறார். சிவில் நிர்வாகம் ஒன்றை விட இராணுவ நிர்வாகமொன்றினால் அப்பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்று அவர் நினைக்கின்றார். நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான குழப்ப நிலையைத் தீர்ப்பதற்கு அது ஒரு தீர்வாகாது. மேலும் அது பாதுகாப்புப் படையினருக்கு நன்மையாகவோ, கௌரவமாகவோ அமையாது. நாட்டில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியவர்களே பாதுகாப்புப் படையினர் மாறாக அவர்கள் நாட்டை நிர்வகிக்கும் பணியில் ஈடுபடக்கூடாது. பாதுகாப்புப் படைக்காக ஆட்களை சேர்க்கும்போது, அவர்களுக்கு நாட்டின் பாதுகாப்புக்குத் தேவையான அடிப்படையான விடயங்கள் மற்றும் அதற்கான தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி வழங்கப்படுகின்றதேயன்றி அந்நாட்டின் நிர்வாகம் பற்றி அடிப்படையான விடயங்களையோ அதற்கான தொழில்நுட்பம் பற்றிய பயிற்சியோ அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. உலகில் பல நாடுகளில் இராணுவ ஆட்சிகள் ஏற்கனவே இருந்தன. ஆனால் தற்போது ஆபிரிக்காவில் சூடான் நாட்டில் மட்டுமே இராணுவ ஆட்சி காணப்படுகிறது. அதுவும் பொது மக்களின் போராட்டத்தின் விளைவாக சிவில் நிர்வாகமொன்றுக்கு மாறுவதற்கான ஒப்பந்தமொன்றை செய்து கொண்ட பின்பு தான் அந்நிலை ஏற்பட்டது. இறுதியாக ஆசியாவில் இராணுவ ஆட்சி நடைமுறையிலிருந்த நாடு தாய்லாந்தே எனினும் 2019 ஜூலை  16ம் திகதி அந்த இராணுவ ஆட்சியும் முற்றுப் பெற்றது. இராணுவ ஆட்சியை நிறுவுவதற்கு உலகில் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் முழுமையாகத் தோல்வி கண்டுள்ளது. காலத்துக்கொவ்வாத அந்தக் கொள்கையை ஜனாதிபதி கோட்டாபயவும் பரீட்சித்துக் கொண்டிருக்கிறார் போலும். இதன் மூலம் நாட்டின் பாதுகாப்புப் படைக்கு மட்டுமன்றி நாட்டை நிர்வகிப்பவர்களுக்கும் பாரிய அளவிலான பாதிப்பு ஏற்படும். பாதுகாப்புப் படையினர் இந்த பொறியில் அகப்படாது தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். நாட்டின் அரசியலமைப்பு நாட்டின் பாதுகாப்புப் படையினருக்கும் ஏற்புடையதாகும். எதிர்கட்சிகளின் காலத்துக்கொவ்வாத முன்னெடுப்புக்கள்  தற்கால இலங்கை முகங்கொடுக்கும் பாரிய பிரச்சினைகளுக்கு ஆளும்கட்சி மட்டுமன்றி எதிர்கட்சிகளும் ஐம்பது வீதம் பொறுப்புக் கூற கடமைப்பட்டுள்ளது. நாடு முகம் கொடுக்கும் பாரிய பிரச்சினைகளுக்கு ராஜபக்ஷாக்கள் மட்டும் பொறுப்புக்கூற முடியாது. நாட்டு நிர்வாகத்துக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டுள்ள பாரளுமன்ற பிரதிநிதிகள் அனைவருமே நாட்டின் இன்றைய பரிதாப நிலைக்கு பதில் கூற வேண்டும். நாட்டின் இன, மத, குலம் என்ற வகையில் காணப்படும் பிரிவுகள் காரணமாகவே நாட்டில் மோதல்களும் இரத்தம் சிந்தலும் ஏற்பட்டது. நாடு இந்த அளவில் சிதைந்து போவதற்கு அது ஒரு முக்கிய காரணியாகும். பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளும் நாட்டில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்துவதற்கும் அதற்கு பாலூட்டி வளர்ப்பதற்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தமது முழுமையான பங்களிப்பை வழங்கியுள்ளன. இந்த நாடு இந்த அளவில் குட்டிச்சுவராவதற்கான மற்றுமொரு காரணி நாட்டில் பரந்த அளவில் காணப்படும் தில்லுமுல்லுகளும் மோசடிகளும் ஆகும். நாட்டில் ஒவ்வொரு தடவையும் ஆட்சியாளர்களாகத் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளும் நாட்டின் ஜனாதிபதியுடன் கைகோர்த்துக்கொண்டு நாட்டின் சொத்துக்களை சூரையாடுவது இந்த நாடு மோசடிகளால் துர்நாற்றமடிப்பதற்கான பிரதான காரணியென்று துணிச்சலாகக் கூற முடியும். ஆனால் தற்போது எதிர்கட்சிகளின் தான்தோன்றித்தனமான நிலை எவ்வாறாக உள்ளது? அதற்குள் நாளுக்கு நாள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் பிரிவிணை எனும் நோய்க்கு முதலில் சிகிச்சையளிக்க வேண்டும். ஆனால் எதிர்கட்சிகள் அதுபற்றி அலட்டிக் கொள்ளாது எவ்வாறாயினும் “தலைமைப்பதவியை” தான் அடைந்து விட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்து கையிறிழுப்பில் ஈடுபட்டு வருவதை நாம் கானக்கூடியதாக இருக்கிறது. எதிர்க்கட்சியினது இது போன்ற ‘தாளத்துக்கு’ பொது மக்கள் ‘நடனமாடாது’ கவனமாக இருத்தல் அவசியமாகும். நாம் என்ன செய்யலாம்? இந்த துரதிஷ்டவசமான நிலையிலிருந்து நாட்டைத் தூக்கியெடுப்பதற்கு நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து கைக்கோர்த்துக்கொண்டு முன்வர வேண்டும். இவ்வாறான ஒற்றுமை ஒவ்வொரு நாட்டிலும் கட்டாயம் இருக்கவேண்டும். பல்வேறு மட்டத்திலான கலந்துரையாடல்களை நடத்துவதன் மூலமே அவ்வாறான நிலையை நாட்டில் தோற்றுவிக்க முடியும். ஆனால் கவலைக்குரிய விடயம் என்னவெனில் நாட்டிலுல்ல அரசியல் கட்சிகள் தமது குறுகிய வட்டத்திலுள்ள சிந்தனைக்கேற்பவே மேற்படி கலந்துரையாடல்கள் நடாத்தப்பட வேண்டுமென்று நினைப்பதாகும். எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள படு மோசமான குழப்பநிலை பற்றி மிக விரிவாகவும் சரியாகவும் புரிந்து கொண்டுள்ள தனி மனிதர்களும் அமைப்புக்களும் இந்த நாட்டில் இருக்கின்றார்கள் என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களில் ஒரு சிலராவது இணைந்து ஒரு அமைப்பாக மாறி ஒரே குரலில் மிக ஆணித்தரமாக பேச முன்வருவார்களாயின் தற்போதைய அரசு மேற்கொண்டுள்ள மிகத் தவறான பயணத்தில் கணிசமாண அளவில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். இந்த நாடு தற்போது மேற்கொண்டுள்ள பயணத்தில் தொடர்ந்தும் பயணிக்குமானால் நாடு அதள பாதாளத்தில் விழுவதை எவராலும் தடுக்க முடியாது போய்விடும். நாட்டுக்கு அந்த நிலை ஏற்படின் அதை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவது இலகுவான விடயமல்ல. தென்னாபிரிக்காவின் வெள்ளை ஆட்சியினருக்கு இது போன்றதொரு நிலைதான் ஏற்பட்டது. கறுப்பு – வெள்ளை இனப்பிரச்சினையை தூக்கிப் பிடித்துக் கொண்டு அவர்கள் மிருகத்தனமாக ஆட்சி செய்தனர். அந்த நாட்டில் ‘நிற’ வேறுபாட்டுப் பிரச்சினை உச்ச கட்டத்திற்குச் சென்ற பின்னரே ஆட்சியாளர்கள் தமது குரூரமான போக்கைக் கைவிட்டனர். அதன் பெறுபேராக நாட்டு மக்களினது பங்களிப்புடன் புதிய அரசியலமைப்புப்பொன்றை அமைப்பதற்கான கதவு திறக்கப்பட்டது. தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கும் தேசத்தைப் புணர்நிர்மாணம் செய்வதற்குமான பணி அதன் பின்பே அங்கு ஆரம்பமானது. இந்த சந்தர்ப்பத்தில் இலங்கைக்கும் தேவைப் படுவதெல்லாம்; அவ்வாறான மாற்று நடவடிக்கைகளே. இலங்கையிலும் பொது மக்களது பங்களிப்புடனான அரசியலைப்புப்பொன்றை உருவாக்குவதற்கு பொது மக்களும் நாட்டிலுள்ள புத்தி ஜீவிகளும் முன் வரவேண்டும். அந்த அரசியலமைப்பு 21ம் நூற்றாண்டுகளுக்குப் பொருத்தமான ஒரு அரசியலமைப்பாக இருக்க வேண்டும். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் இந்த நாட்டுக்குப் பொருத்தமான அரசியலமைப்புப்பொன்றை உருவாக்குவதற்கு ரணிலோ எமது நாட்டின் தலைவர்களோ தெரிந்திருக்கவில்லை. அவர்கள் மட்டுமன்றி இலங்கையில் அரசியல் விஞ்ஞானம் பற்றி பாடம் கற்பிக்கும் எமது பேராசிரியர்களில் பலருக்கு அது பற்றி தெளிவான விளக்கமில்லை. நாம் புதிய அரசியலமைப்பொன்றின் மாதிரிப் படத்தை வரைந்தால் (எழுதினால்) மட்டும் அப்பணி முழுமையடைந்து விடாது. மாறாக நாட்டிலுள்ள அனைத்து வகையான பிரச்சினைகளைப் பற்றியும் அலசி ஆராயப்படல் வேண்டும். அது மட்டுமின்றி நாட்டின் மறு சீரமைப்பு விடயங்கள் பற்றியும் இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இது விடயத்தில் ஈடுபடும் குழுவினருக்கு மேற்படி இரண்டு விடயங்கள் பற்றி ஆய்வில் ஈடுபடுத்துவதற்கான உரிமையும் அதிகாரமும் வழங்கப்பட வேண்டும். அந்த மாதிரி அரசியலமைப்புக்கு சிவில் மற்றும் அரசியல் உரிமைப்பற்றிய சாசனமொன்றுக்கு முன்வைக்கப்படும் விளக்கத்தின் மூலம் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். மேலும் அது சர்வதேச சட்டத்திற்கேற்பவும் 21ம் நூற்றாண்டில் அரசியலமைப்பின் முன்மாதிரியாகவும் அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அந்த மாதிரியை தயாரிப்பதற்கான ஆய்வுப் பணியில் நாமும் ஈடுபட வேண்டும். இது போன்ற ஒரு நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலமே நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள ‘வங்குரோத்து’ நிலை உட்பட அரச நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சிகளிலிருந்தும் அவற்றை காப்பாற்றி கரை சேர்க்க முடியும். அது மட்டுமன்றி நவீன தேசமொன்றையும் எம்மால் கட்டியெழுப்ப முடியும். அது போன்றதொரு மறுசீரமைப்பை நாட்டில் உருவாக்கிய பின்பே நாம் தேர்தலொன்றிற்குச் செல்ல முடியும்.   https://thinakkural.lk/article/108000  
  • கொக்கட்டிச் சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) காலை உணர்வுபூர்வமாக நடைபெற்றது. பொலிஸார் தடைகள் ஏற்படுத்த முற்பட்டபோதும், நிகழ்வு அமைதியான முறையில் சுகாதார வழிமுறைகளை பிற்றிய நிலையில் மகிழடித்தீவு கொக்கட்டிச்சோலை நினைவுத்தூபியருகே நடைபெற்றது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பட்டிருப்பு கிளையின் தலைவருமான பா.அரியநேத்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,கோவிந்தன் கருணாகரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்ன இந்திரகுமார், தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி தலைவர் கி.சேயோன், வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் தி.தீபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போது நினைவுத்தூபியில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, உயிர் நீர்த்தவர்களின் ஆத்மா சாந்திவேண்டி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 1987 ஜனவரி 28ஆம் திகதி இடம்பெற்ற இறால் வளர்ப்பு பண்ணை படுகொலையும் 1992 ஜுன்12ஆம் திகதி இடம்பெற்ற மகிழடித்தீவு படுகொலையும் சேர்த்து  ஏறக்குறைய 239பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். தமிழர்களையும் நினைவு கூரும் வண்ணமே ‘கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவுத்தூபி 2000ஆம் ஆண்டு மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   https://www.thaarakam.com/news/19034a02-c53d-4d7e-80e0-540bf20d6c83
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.