Jump to content

வீட்டிலிருந்தே வேலை


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

 

வீட்டிலிருந்தே வேலை (கட்டுரை)

January 8, 2021

பாரதிராஜா

ண்பதுகளில் படித்த இளைஞர்கள் என்றாலே வேலையில்லாமல் தாடி வைத்துக்கொண்டு அலையும் கூட்டம் என்கிற ஒரு நிலை இருந்தது. அதுவே தாராளமயமாக்கத்துக்குப் பிந்தைய புதிய ஆயிராண்டில் வேகமாக மாறி, இந்தப் படிப்பு – அந்தப் படிப்பு என்றில்லாமல் எல்லாப் படிப்பு படித்த இளைஞர்களும் கணிப்பொறித் துறைக்குள் வந்து குவியத் தொடங்கினர். நாமெல்லாம் படித்து முடித்த பின் வளர்ப்பதற்கு தாடி ஒழுங்காக வளருமோ வளராதோ என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்த தலைமுறை திடீரென்று முற்றிலும் புதிய உலகம் ஒன்றுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு விதவிதமான புதிய அனுபவங்களால் திக்குமுக்காட வைக்கப்பட்டது.

அப்படியான அனுபவங்களில் ஒன்று, முதலில் பெரும் பெரும் மேசைக்கணினிகளை வைத்துக்கொண்டு டொக் டொக்கென்று தட்டிக்கொண்டிருந்தவர்களுக்கு, மடிக்கணினிகள் வந்த பின்பு கூடுதலான சுதந்திரம் கிடைத்தது. முதலில் மேலாளர்கள், பின்னர் மூத்த பணியாளர்கள் என்று தொடங்கியது, சில நிறுவனங்களில் எல்லோருக்குமான வசதியாக அளிக்கப்பட்டது. மடிக்கணினிகளோடு சேர்த்து எந்த நேரமும் வேலை செய்வதற்குத் தயாராக இருக்க வேண்டிய எதிர்பார்ப்பும் வந்திறங்கியது. கூடுதல் பொறுப்போடு சேர்த்துக் கூடுதல் சுதந்திரமும் வந்து சேர்ந்தது.

http://www.yaavarum.com/wp-content/uploads/2021/01/001-1602249677607.png

“இரவெல்லாம் விழித்து வேலை பார்த்தவனுக்குக் காலையில் சிறிது தாமதமாக வருவதற்கு உரிமையில்லையா!” என்ற கேள்விக்கான பதிலாக எந்த நேரமும் வந்து எந்த நேரமும் சென்றுகொள்ளலாம் என்ற சுதந்திரம் வந்து சேர்ந்தது. அப்படியே எந்த நேரமும் அழைத்துத் தொல்லை செய்வோம் என்கிற தலைவலியும் வந்தது. கொடுத்து வாங்கும் இந்தப் பணியிடப் பண்பாட்டுக்கு முழுதும் பழகிவிட்டவர்களாகத்தான் ஒரு தலைமுறையே உருவானது. மதியம் வந்து இரவில் திரும்பினாலும் பரவாயில்லை, அவ்வப்போது அலுவலகமே வராவிட்டாலும் பரவாயில்லை போன்ற வசதிகள் வழங்கப்பட்டன. இரவெல்லாம் விழித்து வேலை பார்க்கத் தயாராக இருக்கும் பணியாளர் படையின் மூலம் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இருக்கும் வாடிக்கையாளர்களோடு கூடுதல் நேரம் உரையாட முடிகிறது, அவர்களுக்கு வேண்டிய தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க முடிகிறது என்பவை போன்ற வசதிகள் நிறுவனங்களுக்கும் நன்மை பயத்தன.

இதுவே சொந்த வேலைகள் இருக்கும் போது, வீட்டிலிருந்தே வேலை பார்க்கிறேன் என்று சொல்லி உட்கார்ந்துகொள்ளும் உரிமையைக் கொடுத்தது. அப்படியே மெதுவாக எப்போதுமே வீட்டிலிருந்து வேலை செய்துகொள்ளும்படியான உரிமையுடைய ஒரு பிரிவினரை உருவாக்கியது. பிரசவ விடுப்பில் சென்ற பெண்கள், விபத்தில் அடிபட்டு நகர முடியாமல் வீட்டில் மாட்டிக்கொண்டவர்கள், நோய்வாய்ப்பட்ட குடும்பத்தினருக்கு உதவும் பொருட்டு வீட்டில் இருக்க வேண்டியவர்கள் போன்றவர்கள், கொடுக்கப்படும் இந்த உரிமைக்குப் பதிலாகக் கூடுதல் உழைப்பைக் கொடுக்கவோ, குறைந்த ஊதியத்துக்குப் பணிபுரியவோ தயாராக இருப்பின், அவர்களே திறமை மிக்கவர்களாகவும் இருப்பின், அதுவும் நிறுவனத்துக்கு ஆதாயந்தானே! இப்படித்தான் இந்த வீட்டிலிருந்தே பணிபுரியும் பண்பாடு நம் மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கொண்டது.

கிட்டத்தட்டப் பத்தாண்டுகளுக்கு முன்பே இப்படியான ஒரு சூழ்நிலையில் தொடர்ந்து ஓராண்டு காலம் வரை வீட்டிலிருந்தே பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. அதில் கிடைத்த அனுபவங்களையும் பாடங்களையும் எழுத வேண்டும் என்கிற திட்டம் அப்போதிருந்தே தள்ளிப்போடப்பட்டுக்கொண்டே வந்து, இப்போது கொரோனா கொடுத்திருக்கும் அனுபவங்களின் மூலம் சாத்தியப்பட்டிருக்கிறது.

சில நிறுவனங்கள், சில குழுக்கள், சில பணியாளர்கள் என்று ஆங்காங்கே சில பகுதிகளில் மட்டும் இருந்த பண்பாடு கொரோனாவின் புண்ணியத்தில் எல்லோருக்குமானதாக மாறியிருக்கிறது. இதற்கு முன்பு, “எனக்கென்னவோ இதில் எல்லாம் நம்பிக்கை இல்லைங்க. நம் கண் முன்னால் இருந்துகொண்டே டேக்கா கொடுப்பவர்கள், வீட்டில் உட்கார்ந்துகொண்டெல்லாம் வேலை பார்ப்பார்கள் என்ற கதையை நான் நம்பத் தயாரில்லை” என்று சொன்னவர்களும் சேர்த்து எல்லோருமே வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டிய – வேலை வாங்க வேண்டிய கட்டாயம் நம் மீது திணிக்கப்பட்டது. இப்படித்தான் வேலை செய்தாக வேண்டும் என்று ஆன பின்பு எதிர்பார்த்ததைவிடவும் கூடுதலாகவே அந்த முறைமை வெற்றியடைந்துவிட்டது போலத் தெரிகிறது.

அதே வேளையில், முதலில் சில மாதங்கள் எல்லோருமே வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதில் உற்பத்தி கூடியுள்ளது என்று கூப்பாடு போட்டவர்களில் ஒரு பகுதியினர் மெதுவாகக் குரல் ஓய்ந்து, “அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாது” என்று பின்வாங்குகிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. எதையுமே அப்படியே நம்பிவிடவும் முடியாது. இப்போது ஆதாயம் அளிப்பதாக இருந்தாலும் தொலைநோக்கில் திருப்பி அடிக்கும் என்ற அச்சம் வந்தால் கூட, இப்போதே அது சரியாக எடுபடவில்லை என்று கூச்சமில்லாமல் இறக்கிவிடுவதுதான் பெருநிறுவனங்களின் தொழில் தர்மம்!

உண்மையாகவே காலை எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை உழைக்கிறவர்கள் இருக்கிறார்கள். பயணத்தில் வீணாக்கிய சில மணி நேரங்களையும் சேர்த்து இப்போது அவர்களுக்குக் கூடுதல் நேரம் கிடைக்கிறது. அதையும் தன் நிறுவனத்துக்கே அர்ப்பணிக்கிறார்கள். அவர்கள் இப்போது உழைக்கிற மாதிரியே எப்போதும் உழைப்பார்களா என்ற நியாயமான சந்தேகம் இந்த நிறுவனங்களுக்கு இருக்கிறது. இப்போது எங்கும் போக முடியாமல் வீட்டுக்குள் மாட்டிக்கொண்டு முடங்கிக் கிடப்பதால் இப்படி உழைக்கிறார்கள். நாளை எல்லாம் சரியாகிவிட்ட பின் வண்டியைப் பூட்டிக்கொண்டு ஊர் சுற்றக் கிளம்பிவிடுவார்களே! அவசரப்பட்டு இந்த வெற்றியைக் கொண்டாடிவிட்டால் நாம்தானே நாளை அனுபவிக்க வேண்டும் என்றெண்ணி இப்போதே தெளிவாக அடக்கி வாசிக்கக் கூடும்.

பெருநிறுவனங்கள் என்பவை தனிமனிதர்களைப் போல ஒற்றை மூளையில் இயங்குபவை அல்ல; எந்தச் சிறு நகர்விலும் இருக்கும் எல்லாவிதமான ஏற்றத்தாழ்வுகளையும் துல்லியமாகக் கணக்குப் போட்டு அதற்கேற்றபடி உலகையே நகர்த்தும் ஆற்றலும் அதற்குத் தோதான அமைப்புகளையும் கொண்டவை.

அடுத்தது, “எல்லோருமே இப்படி உழைப்பவர்களா?” என்கிற கேள்வியும் இருக்கிறது. வீட்டுக்குள்ளேயே கிடக்க வேண்டிய இந்த வேளையில் கூட, சரியான நேரத்துக்கு வந்து நிற்க முடியாத – வேலையில் கவனம் செலுத்தத் திணறும் – கிடைத்திருக்கும் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்திவிடும் கூட்டம் ஒன்றும் இருக்கிறது. அவர்களையும் சேர்த்துத்தான் இந்த முறைமை எடுபடுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டியதிருக்கிறது.

இன்று தொழில்நுட்பம் இதற்கெல்லாம் ஈடுகொடுத்து வளர்ந்திருப்பதால் இது சாத்தியப்பட்டிருக்கிறது. இதுவே இருபது – முப்பது ஆண்டுகளுக்கு முன்பு முடிந்திருக்குமா? நிச்சயமாக இல்லை. இந்தியா முழுக்கவும் இணையம் புகுந்துவிட்டது. குறிப்பாகத் தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலங்களில் ஒவ்வொரு கிராமத்துக்கும் இணையம் வந்துவிட்டது. கடைசியாக மின்சாரத்தைப் பார்த்த கடைக்கோடிப் பாட்டாளிகளின் பிள்ளைகளும் கூட இப்போது ஓட்டு வீட்டில் அமர்ந்துகொண்டு பன்னாட்டு நிறுவனங்களின் அழைப்புகளில் கலந்துகொள்கிறார்கள். அதை நமக்குச் சாத்தியப்படுத்தியது தொழில்நுட்பம் மட்டுமல்ல, அந்தத் தொழில்நுட்பத்தை மக்கள்மயப்படுத்தியதும் அதற்கொரு முக்கியக் காரணம். அதில் தமிழகம் முன்னணியில் இருப்பது நமக்கெல்லாம் பெருமையே!

இதன் முடிவில் எந்தத் தொழில் எல்லாம் வீட்டிலிருந்தே செய்ய முடியாதவை என்கிற தெளிவும் கிடைத்துவிடும். “இவ்விடம் வீட்டிலிருந்தே வேலை செய்தல் என்னும் பேச்சுக்கே இடமில்லை” என்று அட்டை மாட்டிவிடுவார்கள். எந்தத் தொழிலுக்கெல்லாம் வீட்டைவிட்டே வெளியேற வேண்டியதில்லை என்கிற தெளிவும் கிடைத்துவிடும். கணிப்பொறித் துறையினர் மட்டுமல்ல, மருத்துவர், ஆசிரியர், கணக்காளர் போன்ற பணிகளே வீட்டிலிருந்தே செய்யத்தக்க பணிகளாக உருவெடுப்ப. வீட்டில் இருந்து செய்யத்தக்க வேலையா என்பதன் அடிப்படையில் தனிமனிதர்கள் தமக்கான சரியான துறையைத் தேர்ந்தெடுக்கும் போக்கு வளரும். மனித வாடை பிடிக்காதவர்கள் வீட்டிலிருந்தே செய்யும் வேலைகளை நோக்கி நகர்வார்கள். அதனால் பல புதிய உளவியல் பிரச்சனைகளும் நோய்களும் உருவாகலாம். காடுகளுக்குள் அலைந்துகொண்டிருந்த விலங்கொன்று சமூக விலங்காகி அதுவும் சுருங்கி ‘வீட்டு’ விலங்காகிப் போதல் எவ்வளவு பெரிய பரிணாம மாற்றம்! அதற்கான விலை சாதாரணப்பட்டதாகவா இருக்கும்! அப்படியானவர்களைக் குறி வைத்து தியானம், யோகா, உடற்பயிற்சி, நோகாமல் நுங்கு தின்கிற மாதிரியான குறிப்பிட்ட விதமான கேளிக்கைகள் என்று விற்கும் குருமார்கள் கூடுவார்கள்.

“நம்மளாலல்லாம் நாலு நாளைக்கு மேல் வீட்டுக்குள் இருக்க முடியாதப்பா!” என்கிறவர்கள் இப்போது வீட்டுக்குள் இருந்து செய்ய முடிகிற வேலைகளில் இருந்தாலும் அவற்றைவிட்டுத் தப்பி ஓட என்னென்ன வேலைகள் செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்யத் தொடங்கிவிடுவார்கள். அவர்கள் பலரின் குடும்பங்களில் மற்ற வீடுகளைப் போலல்லாமல் எப்போதும் வீடு தங்காமல் திரியும் துணையின் மூஞ்சியைப் பார்க்கச் சகியாமல் வரும் ஆத்திரத்தால் பூகம்பங்கள் வெடிக்கும். இன்னொரு பக்கம், எந்நேரமும் தன்னோடே வீட்டுக்குள்ளேயே கிடக்கும் துணையின் மூஞ்சியைப் பார்க்கச் சகியாமல் வரும் கோபத்தாலும் பல குடும்பங்கள் உடைவ. அதுவும் எந்நேரமும் வேலையே கிறுக்காகக் கிடக்கிற துணைகளால் வரும் பிரச்சனைகள் மேலும் உக்கிரமாக இருக்கும். எட்டு மணி நேரத்தைப் பத்து மணி நேரத்துக்குள்ளாவது முடித்துக்கொள்ளத் தெரியாவிட்டால் சிக்கல்தான்.

வாரத்தில் ஒரு நாள் வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள், வாரத்தில் ஒரு நாள் பணியிடம் செல்பவர்கள், இரண்டு நாட்கள் வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள், இரண்டு நாட்கள் பணியிடம் செல்பவர்கள் என்று வெவ்வேறு விதமான ‘இனக் குழுக்கள்’ உருவாகிவிடுவார்கள்.

பணியாளர்கள் ஓரிடத்தில் கூடிப் பணிபுரிவதைவிட அவரவர் வீட்டிலேயே கிடந்து பணிபுரிவதன் மூலம் நிறுவனங்களுக்கு இன்னொரு பெரிய வசதியும் கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களிடம் புலம்புவதை எல்லாம் வீட்டில் இருப்பவர்களிடமே புலம்பிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கக் கிளம்பிவிடுவார்கள். ஒரு வேலையை வெறுத்து இன்னொரு வேலை தேட வேண்டும் என்கிற உந்துதலோ சங்கம் வைத்து உரிமையைக் கோர வேண்டும் போன்ற எண்ணங்களோ எழவே எழா. அதே வேளையில், பணியிடத்துக்கு வந்தால் மற்றவர்கள் முன்னால் செய்ய முடியாத வேலைகள் பலவற்றை வீட்டில் இருந்தால் கூச்சமில்லாமல் செய்ய முடியும். அதில், வேலை தேடுதல், நேர்காணல்களில் கலந்துகொள்ளல், தனிப்பட்ட திறமையை வளர்த்துக்கொள்வதற்கான பயிற்சிகளில் ஈடுபடுதல் ஆகியவை அடக்கம்.

வீட்டிலிருந்தே வேலை செய்தல் வேலை செய்ய வேண்டுமென்றால், அதற்குச் சில அடிப்படைத் தேவைகள் இருக்கின்றன. தனியாக அமர்ந்து வேலை செய்ய – இணைய வழிச் சந்திப்புகளில் கலந்துகொள்ள ஏதுவான தனி அறையோ அமைதியான இடமோ இருக்க வேண்டும். தனி அறை இருந்தாலும் வெளியிலிருந்து சத்தம் புகாத வகையில் அவ்வறை அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படியான வீடுகளைக் கட்டுவதும் ஏற்கனவே இருக்கும் வீடுகளில் மாற்றங்கள் செய்வதும் கட்டுமானத்துறையில் சில புதுமைகளைப் புகுத்தும். நல்ல இணைய இணைப்பு இருக்க வேண்டும். வீட்டிலிருப்பவர்கள், எந்த நேரமும் “கறிவேப்பிலை வாங்கி வா”, “கொத்தமல்லி வாங்கி வா” என்று நொச்சுப் பண்ணிக்கொண்டே இருக்கக் கூடாது.

வீட்டிலிருந்தே வேலை என்பதன் விளைவாக வீட்டிலிருந்தே வேலை தேடுதல் என்பதும் கூடிவிடும் என்பதால், அதனால் உருவாகப் போகும் பிரச்சனைகளில் ஒன்றாகச் சொல்லப்படுவது அதனால் கூடப் போகும் மோசடிகளின் எண்ணிக்கை. “வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் வாங்க” பேர்வழிகளுக்கு இது ஒரு பெரும் வாய்ப்பு. இவர்கள் எளிதில் ஏமாறக்கூடிய பாவப்பட்ட ஒரு கூட்டத்தை வைத்து நன்றாகக் காசு பார்த்துவிடுவார்கள். கட்டடம் வேண்டியதில்லை, முகவரி வேண்டியதில்லை, ஒரேயோர் இணைய இணைப்பும் தேன் வழிய ஆங்கிலத்தில் பேசும் ஆற்றலும் இருந்தால் போதும். ஒரு பெரும் எண்ணிக்கையை ஏமாற்றிவிடலாம்.

இது போன்ற சில்லறைப் பிரச்சனைகள் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், இந்தக் கொரோனாக் கொள்ளை நோயின் புண்ணியத்தில் நிகழ்ந்திருக்கும் வீட்டிலிருந்தே வேலை செய்தல் சார்ந்த மாற்றங்களால் மனித குலமே ஒரு பெரும் மாற்றத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே அருகில் இருக்கும் மனிதர்களுடனான நெருக்கம் மனிதர்களுக்கு வேகமாகக் குறைந்து வந்துகொண்டிருந்தது. ஒரே வீட்டில் இருக்கும் கணவனும் மனைவியும் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வதைவிட உலகின் வேறு ஏதோ ஒரு மூலையில் இருக்கும் முகமே தெரியாத அல்லது உண்மை முகமே தெரியாத எவர் எவருடனோ மணிக்கணக்காக நேரம் செலவிடுவதை அனுபவித்துச் செய்கிற போக்கு கூடிக்கொண்டே வந்துகொண்டிருந்தது. இத்தனை இலட்ச ஆண்டு காலப் பரிணாம வளர்ச்சியில் உருவாகி வந்திருக்கும் மனிதனுக்குள் இருக்கும் ஏதோவொரு தேவைதானே இதற்குக் காரணமாக இருக்க வேண்டும்! ஆனால் அப்படிப்பட்டவர்களே கூட வேலை என்று வந்துவிட்டால் நேரில் இருந்தால்தான் எளிதாக இருக்கிறது என்று எண்ணுபவர்களாகத்தான் இருக்கிறார்கள்; புதிதாக ஏதொவொன்றைப் பற்றிப் படிப்பதற்கோ பயிற்சி பெற்றுக்கொள்வதற்கோ நேரில் இருந்து கலந்துகொள்ளாவிட்டால் தன்னால் கவனிக்கவே முடியாது என்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

இவர்கள் எல்லோருமே வெகுவிரைவில் இந்தப் புதிய முறை வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுவிடுவார்கள். உணவுக்காக நாடோடியாக வாழ்ந்த மனிதன் விவசாயம் கண்டுபிடித்ததும் ஓரிடத்தில் நிலைகொண்டுவிட்டதும், ஆனாலும் உள்ளுக்குள் இருந்து அரித்துக்கொண்டிருக்கும் ஊர் சுற்றும் ஆசையைச் சுற்றுலா என்ற பெயரில் அவ்வப்போது செய்துகொள்வது போல, காலமெல்லாம் நாளெல்லாம் உடலுழைப்பே செய்து பழகியிருந்த போதும், புதுப்புதுக் கண்டுபிடிப்புகளின் மூலம் உடலுழைப்பு குறைந்துவிட்ட பின்பு அதனால் உருவான கேடுகளைக் களைவதற்காக ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் செய்துகொள்ளும் வகையில் உடற்பயிற்சி கண்டுபிடித்ததைப் போல, தொழில் தொடர்பான எல்லா வேலைகளையும் வீட்டிலிருந்தே செய்துகொண்டு, அதனால் ஏற்படப் போகும் மனிதர்களுடனான இடைவெளியையும் அதனால் ஏற்படப் போகும் உளவியல் பிரச்சனைகளையும் சரிசெய்துகொள்வதற்கு, அதற்கென்றே ஒரு குறிப்பிட்ட நேரத்தையும் மனிதர்களையும் ஒதுக்கி அதை வேலைக்கு வெளியில் வைத்துக்கொள்வார்கள்.

இந்த வேகமான மாற்றத்தை எளிதாக்கும் வேலையை மாய மெய்மை (Virtual Reality) என்கிற வேகமாகச் சந்தைக்கு வந்துகொண்டிருக்கும் தொழில்நுட்பம் சாத்தியப்படுத்திவிடும். அதன் பின்பு நடக்கப் போவதுதான் மனித குலத்துக்குப் பெரும் பாய்ச்சலாக இருக்கப் போகிறது. உடலால் ஒரே இடத்தில் இருந்துகொண்டு, அமெரிக்காவில் நடக்கிற அலுவலக மாநாட்டிலும் கலந்துகொள்ளலாம்; அது முடிந்த அடுத்த நிமிடமே மதுரையில் நடைபெறும் ஒன்னுவிட்ட சித்தப்பா மகனின் திருமணத்திலும் கலந்துகொள்ளலாம்; அது முடிந்த மறு நிமிடமே ஆஸ்திரேலியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை நேரில் காண்பது போலவே மாடத்தில் நின்று காணலாம். கையில் ரிமோட் வைத்துக்கொண்டு சேனல் மாற்றுவது போல, ஒன்று சலிப்பாக இருந்தால் இன்னொன்றைப் போய்ப் பார்த்துவிட்டு வரலாம். இது அரசியல், பொருளியல், அறிவியல், வணிக, மருத்துவ ரீதியாக நினைத்துப் பார்க்க முடியாத பல மாற்றங்களை நிகழ்த்தப் போகிறது. அது ஒரு புறமென்றால், “வாழ விரும்பும் இடம் ஒன்றாக இருக்கிறது, இருக்க விரும்பும் இடம் ஒன்றாக இருக்கிறது, இருக்க வேண்டிய இடம் ஒன்றாக இருக்கிறது!” என்று உழலும் எளிய மனிதர்களுக்கும் இது பெரும் மாற்றமாக இருக்கும்.

“பிழைப்புக்காக ஊரைவிட்டு வந்து இருபது ஆண்டுகள் ஆகின்றன. நாமெல்லாம் இவ்வளவு மாறிவிட்டோம். நம் ஊரும் நம்மைப் போலவே மாறியிருக்குமே! அது எப்படி மாறிவிட்டது என்று போய்ப் பார்க்கக்கூட முடியவில்லையே! தைப் பொங்கலுக்கும் பங்குனிப் பொங்கலுக்கும் ஊரில் இருந்து கொண்டாடுவது போல வருமா!” என்று நினைவில் ஊர் உள்ள மிருகமாகவே வாழும் கிராமத்து – சிறுநகரத்து மனிதர்களுக்கெல்லாம் இது ஒரு வாழ்வைப் புரட்டிப் போடும் மாற்றமாக இருக்கும். பெரும்பாலான வேலைகளை – அதுவும் வளமான வாழ்க்கையைக் கொடுக்கும் வேலைகளை – தன் சொந்த ஊரில் இருந்துகொண்டே செய்துகொள்ள முடியும் என்கிற மாற்றம் சாதாரணப்பட்ட மாற்றமா! ஊரில் இருக்கும் தன் உறவினர்களோடே வாழ்ந்துகொண்டே உலகின் தலைசிறந்த பள்ளிகளில் கூட தன் பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியும் என்கிற மாற்றம் எப்பேர்ப்பட்ட மாற்றம்! உருப்பட வேண்டுமென்றால் பெருநகரங்களுக்குப் போயாக வேண்டுமென்கிற விதி தளர்த்தப்படப் போகிறது. “கெட்டும் பட்டணம் போ!” என்கிற பழமொழியெல்லாம் வழக்கொழியப் போகிறது.

உலகம் முழுமைக்குமே நகர – கிராம இடைவெளி என்பது பெரிய பிரச்சனையாகி வருகிறது. குறிப்பாக ஏற்கனவே சாதிய மனநோயில் சிக்கிக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் சீரழிந்து கிடக்கும் நம் போன்ற சமூகத்துக்கு இது ஒரு கூடுதல் தலைவலி. இந்த வீட்டிலிருந்தே வேலை என்கிற புதிய பண்பாடு அதற்கொரு பெரும் நிவாரணமாக இருக்கும். நகரங்களின் நெரிசல் குறைவது மட்டுமல்ல, நகர அமைப்பே கேள்விக்குள்ளாகலாம். பெரும்பாலானவர்கள் அவரவர் ஊருக்குத் திரும்ப நேர்ந்தால், வளர்ச்சியும் வசதிகளும் பரவலாக்கப்பட்டு, முதலில் அவை எல்லா ஊர்களுக்குமானவையாகி அப்படியே பின்னர் எல்லோருக்குமானவையாகலாம்.

“கதை செம்மையாக இருக்கிறதே! இதெல்லாம் நடக்குமா?” என்கிறீர்களா? அது நம் எல்லோருடைய தலைவிதியையும் நிர்ணயிக்கும் பெருநிறுவனங்களின் கைகளில் இருக்கிறது. பின்னர் சிறிது நம் கைகளிலும் இருக்கிறது. அவர்கள் நம் ஆசையை நிறைவேற்ற வேண்டுமென்றால், நாம் அவர்களின் ஆசையை நிறைவேற்ற வேண்டும். வீட்டிலிருந்தே வேலை செய்வதன் மூலம் அவர்களுக்கு ஆதாயம் மட்டுமே இருக்கிற மாதிரிப் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? தொழுவத்திலேயே கிடந்தாலும் மாடாக உழைக்க வேண்டும். ‘மாடு தொழுவத்திலேயே கிடப்பதை விரும்புகிறது, எனவே அதற்காகப் புல்லைச் சிறிது குறைத்துப் போட்டாலும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு கூடுதலாக உழைக்கும்’ என்று அவர்கள் நம்பும் வகையில் நடந்துகொள்ள வேண்டும்.

***

பாரதிராஜா

 

http://www.yaavarum.com/வீட்டிலிருந்தே-வேலை/

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • துஷ்பிரயோகத்தின் சாட்சி – 09 -நவாலியூர் தாமா by vithaiMarch 5, 20210108 நான் சிறுவயதில் ஏற்பட்ட பாலியல் துஷ்பிரயோகத்துக்கு சிகிச்சை பெற சென்ற போது தான் 18 வயதுக்குள் நடைபெற்ற எல்லா துஷ்பிரயோகங்களும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் என அறிந்தேன். 16 வயதில் நான், எனது வயதுக்கு மீறிய உயரம் கொண்டவளாயிருந்தேன். வயது வந்த நபர் போல் குடும்ப பொறுப்புகள் பலவற்றைச் சுமந்தேன். 1995 ஆம் ஆண்டு யாழ் இடம்பெயர்வில் தம்பியையும் வீட்டுச் சாமான்களையும் பொறுப்புடன் சுமந்து சென்றேன். என்னையும் விட நான்கு வயது கூடிய பெரியம்மா மகளை விட உயரமாகவும் அவருக்கு சமனாகவும் வாழ்ந்தேன். என் 16 வயதில் நடந்த பாலியல் துஷ்பிரயோகமும் சிறுவர் துஷ்பிரயோகம் என்பதை 39 வயதில் அறிந்து கொண்டேன். பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் என்னைக் கட்டிப் பிடித்தபோது நான் அமைதியாக இருந்தேன். நான் தடுத்து நிறுத்தவில்லை. ஆகவே இது துஷ்பிரயோகமா? என்று எனது சிகிச்சை நிபுணரிடம் கேட்டபோது, அவர் “பலர் வன்முறை நடக்கும் போது உறைந்து போகின்றனர். இது சாதாரண விடயம். மௌனம் சம்மதத்துக்கு அடையாளம் இல்லை. அனுமதியின்றி யார் எதை செய்தாலும் குற்றம் தான். பல தடவைகள் பயத்தின் காரணமாக குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்தை அனுமதிக்கிறது. ஆகவே குழந்தை மீது யார் கை வைத்தாலும் அது தண்டனைக்குரிய குற்றம். அதை எக்காரணம் கொண்டும் நியாயப்படுத்த முடியாது” என்று பதிலளித்தார். என்னைப் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய நபர் என்னை விட 7 வயது கூடிய உறவு முறையானவர். நான் மிகவும் அமைதியானவர். ஒரு முறை எதேச்சையாக அவரது காதலியின் படத்தை கண்டுவிட்டேன். அவர் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றதும் நானும் யாரிடமும் சொல்லவில்லை. அதன் பிறகு அவர் ஒருநாள் மாலைநேரம் நடக்கக் கூப்பிட்டார். எனக்கு மறுப்பு சொல்ல அக்காலத்தில் தெரியாது. அத்துடன் உறவினர்களுடன் நட்பாக பழகியதால் துணிந்து சென்றேன். திடீரென்று அவர் கைகள் என் உடலில். வலைக்குள் சிக்கிய மான் போல் என்ன செய்வதென்று தெரியாது அமைதியாகிவிட்டேன். இன்று Thai massage சிகிச்சையை முறையாக பெற்றிருப்பதால், அன்றைய அனுபவத்தை ஒரு நல்ல மசாஜ் இலவசமாக கிடைத்தது என்று விபரிக்க முடிகிறது. ஆனால் அன்று அதை ஒரு மசாஜ் என்று பெருமையாக எண்ண முடியவில்லை. மாறாக அருவருப்பும், ஆத்திரமும், பயமும் என்னை ஆக்கிரமித்தது. என் உடல் மீது எனக்கு வெறுப்பாக இருந்தது. உறைந்து போன என்னை மனம் திறந்து பேச வைத்தது பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானவர்களுக்கான சிகிச்சை. இன்றும் அன்று உடுத்த உடையும், அவர் கைகள் பட்ட இடமும் ஞாபகத்தில் உண்டு. Body keeps the score. என்ற புத்தகத்தைப் படித்தபோது எமது உடல் அதில் ஏற்பட்ட பாதிப்புக்களை எவ்வாறு காலாகாலமாக சேமித்து வைத்துள்ளது என்பதை புரிந்து கொண்டேன். எவ்வாறு அந்தப் பாதிப்புக்கள் ஒரு நோயாக உருவாகிறது என்பதை அறிந்து கொண்டேன். எனது உணர்ச்சிகள் யாவும் எனது உடம்பில் மறைந்து காணப்படுகிறது. சிகிச்சையின் போது அவற்றை இனங்கண்டு ஆரோக்கியமான முறையில் பராமரித்து குணப்படுத்த முடிந்தது. நினைவுகளை ஒருநாளும் அழிக்க முடியாது. ஆனால் அந்த நினைவுகளுடன் ஒன்றித்து வாழப்பழகும் போது நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். அவர் செய்தது பிழை என்று அன்று எனக்கு தெரிந்தாலும் அது பிழை என கூற தைரியம் இருக்கவில்லை. அத்துடன் பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகள் என குற்றம் சுமத்தும் சமுதாயத்தில் ஓர் ஆணை குற்றம் சுமத்த என்னால் முடியவில்லை. பெண் மீது குற்றம் கண்டுபிடிக்கும் என் சமுதாயத்தின் முன் ஒரு குற்றவாளியாக நிற்கப் பயந்தேன். தப்பைத் தண்டிக்காது ஒர் ஆண் தப்பு செய்வதற்கு காரணம் ஒரு பெண் என பழி சுமத்தும் இச் சமுதாயத்துக்குப் பயந்து வாழ்ந்தேன். பதின்வயதில் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டேன். எனது மனச்சோர்வுக்கு ஈழப் போரும் ஒரு காரணமாக அமைகிறது. என்னை ஆண் தொட்டுவிடுவானா என்ற மனப் பயம் என்றும் எனக்கு இருந்தது. உறவினர்களை ஒதுக்கிவிட்டு வாழ்க்கையை ஆரம்பித்தேன். என்னை அவர்கள் குற்றவாளியாக பார்க்கக்கூடாது என்ற காரணத்துக்காக மௌனத்தைப் பேணினேன். ஒரு காலத்தில் என் வாழ்வை சீர் குலைத்தோர் அழிந்து போகவேணும் என மனமாரப் பிரார்த்தித்தேன். அவர்கள் குழந்தைகள் என்னை மாதிரி கஷ்டப்படணும் எனவும் விரும்பினேன். ஆனால் இன்று பௌத்த தியானங்களில் ஈடுபடும் நான் எதிரியை நேசிக்கப் பழகிக் கொண்டுள்ளேன். அத்துடன் வரலாற்றில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி, வன்முறையையும், துஷ்பிரயோகங்களையும் தொடர்கதையாக வளர்த்துள்ளனர். ஆகவே எனக்கு நிகழ்ந்த துஷ்பிரயோகத்தைக் குணப்படுத்தி, நல்லதை நினைத்து, இளம் சந்ததியினரை விழிப்புணர்வூட்டி பாலியல் துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாக்கிறேன். அநியாயம் செய்தவர்களின் அடையாளத்தைப் பாதுகாப்பது எனது கடமை இல்லை என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். குடும்பத்தினரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானேன் என்று கூறும்போது குடும்ப மானம் கப்பல் ஏறிப் பறப்பதற்கு பொறுப்பு நான் இல்லை. தப்பு செய்யும்போது தப்பு செய்த நபரால் தான் குடும்பமானம் கப்பல் ஏறிப்பறந்து விட்டது. நிஜத்தை வெளிப்படுத்தும்போது எந்த ஒரு பாதிப்பும் யாருக்கும் இல்லை என்பதில் உறுதியாக உள்ளேன். குடும்பமானத்துக்காக அமைதியாக இருந்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் இன்று பாலியல் துஷ்பிரயோக உண்மையை பகிரங்கமாகப் பேசக்கூடிய ஒரு சமுதாயம் உருவாகிவிட்டது. அதைமதித்து ஏற்றுக் கொள்ளும் சமுதாயமும் உருவாகிறது. மிகுந்த துணிவுடனும் உரிமையுடனும் எனது வாழ்க்கை வரலாற்றையும் அதில் எனக்கு நிகழ்ந்த துஷ்பிரயோகங்களையும் கூறுவதில் பெருமிதம் அடைகிறேன்.   https://vithaikulumam.com/2021/03/05/20210304/  
  • தமிழ்ச் சமூகத்துக்கு ஒரு அபாய எச்சரிக்கை March 5, 2021 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் —  இலங்கையில் தமிழ்ச்சமூகத்தின் எதிர்காலமும் ஈடேற்றமும் எப்படியிருக்கும்? என்ற கேள்வி, சமூகத்தைக் குறித்து ஆழமாகச் சிந்திப்போரின் கவலையோடுள்ளது. ஏனென்றால், அரசியல், கல்வி, பொருளாதாரம், பண்பாடு என அனைத்துத் தளங்களிலும் பலவீனமானதொரு நிலையிலேயே தமிழ்ச்சமூகம் இன்றிருக்கிறது.   இதை எவரும் மறுக்கவே முடியாது. இதிலிருந்து இப்போதைக்கு மீளக்கூடிய நிலை தென்படவேயில்லை. இதையும் நீங்கள் மறுக்கவியலாது. இந்த நிலை நீடிக்குமாக இருந்தால் தமிழ்ச்சமூகத்தின் எதிர்காலம் நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு நெருக்கடிக்குள்ளாகிப் பின்னடைந்து விடும். இதையெல்லாம் எளிதில் யாரும் கடந்து செல்ல முடியாது. அப்படி விளையாட்டுத்தனமாகக் கடந்து செல்ல முற்பட்டால் அதற்கான தண்டனையை – நெருக்கடியையும் பின்னடைவையும் – தமிழ்ச்சமூகம் சந்தித்தே ஆக வேண்டும்.  முதலில் தமிழ்ச்சமூகம் இன்று எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகளை பட்டியலிட்டுக் கொள்வோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை, நிலம் மற்றும் தனியார் காணி அபகரிப்புப் பிரச்சினை, படைகளின் நிலை கொள்ளல், கடல் ஆக்கிரமிப்பும் கடலோரத்தில் தொழில் ஆக்கிரமிப்பும், அரசியற் கைதிகள் விவகாரம், ஜனநாயக ரீதியான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு விடுக்கப்படும் அச்சறுத்தலும் ஏற்படுத்தப்படும் நெருக்கடியும், மரபுரிமைகள் மீறப்படுதல், தொல்லடையாள மையங்களை இனங்காணுதல் என்ற பேரில் முன்னெடுக்கப்படும் அடையாள அழிப்பு முயற்சிகள், வரலாற்று மறுதலிப்புகள், தொழில்வாய்ப்பின்மை, தொழிற்துறைகளை மேம்படுத்துவதற்கான ஆதவற்ற நிலை, பிரதேசங்களின் அபிவிருத்தியில் சுயாதீனமற்ற தன்மையும் இடையீடுகளும், பிரதேச அபிவிருத்திக் குறைபாடுகளும் தவறுகளும் அரச நிர்வாகத்தில் அதிகரித்துக் காணப்படும் அரசியல் தலையீடுகளும் மத்தியின் அழுத்தமும், மாகாணசபையை சரியாக இயங்க விடாமல் செய்தல், அதற்கான அதிகாரப் போதாமைகள், இயற்கை வளச் சுரண்டலைக் கட்டுப்படுத்தாமை, அதை மேலும் ஊக்குவிக்கும் தவறான போக்கு, இளையோருக்கு எதன் பொருட்டும் வழிகாட்ட முடியாத நிலைமை, இனமேலாதிக்கப் பிரச்சினைகள், சமூக முரண்பாடுகள், சமூக நீதியைப் பேணமுடியாமை, ஜனநாயகப் போதாமை, போராளிகளின் போருக்குப் பிந்திய நிலைமை, பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் தொடரும் அவலத்துக்கான நிரந்தரத் தீர்வு, போரில் உளச் சிதைவடைந்தோரின் பாதுகாப்பும் மீள் வாழ்க்கையும், போராளிப் பெண்கள் பருவ வயதைக் கடந்தும் வாழ்வில் நிலைகொள்ள முடியாத நிலைமை, போரினால் உடல் உறுப்புகளை இழந்தோர் (மாற்றுவலுவுடையோரின் சிக்கல்கள்…) போர்க் குற்றம் தொடர்பான விவகாரம், மீள நிகழாமைக்கான உத்தரவாதம், அரசியல் அதிகாரம் என ஒரு நீண்ட பிரச்சினைகளின் பட்டியல் உண்டு. இவற்றை விட இன்னும் பல பிரச்சினைகள் உள்ளன.  இதில் பலவற்றுக்கு அரசு தீர்வைக் காண வேண்டும். சிலவற்றுக்கு அரசும் அரசுடன் இணைந்துமே தீர்வைக் காண முடியும். சிலவற்றுக்குத் தமிழ்ச்சமூகம் தனக்குள் தீர்வைக் காணலாம். ஆனால், இவை எதற்கும் எந்த நிலையிலும் தீர்வு காணப்படவில்லை. தீர்வைக் காணக் கூடிய முயற்சிகளும் விசுவாசமாக முன்னெடுக்கப்படவில்லை. அதற்கான ஏதுநிலைகளும் (நம்பிக்கையும்) திட்டங்களும் இல்லை. புலம்பெயர் கட்டமைப்புகள் மற்றும் மக்கள் மூலமாக நிறைவேற்றப்பட்டிருக்கக் கூடிய விசயங்களும் உரிய திட்டமிடலும் செயல்முறையும் இல்லாமல் வீணாயின. மாகாணசபையின் மூலமாக தீர்க்கப்பட்டிருக்கக் கூடிய விசயங்கள் கூட உரியமுறையில் கவனிக்கப்படவில்லை.   இதைக்குறித்தெல்லாம் பல்வேறு உரையாடல்கள், கவனப்படுத்தல்கள், சிறிய அளவிலான முயற்சிகள் நடந்தாலும் முழுக்காயத்தையும் ஆற்றக் கூடிய எந்த விதமான (உருப்படியான) நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதே உண்மை.  என்பதால்தான் நம்முடைய காலடியிலேயே அத்தனை பிரச்சினைகளும் அப்படியே எரியும் நெருப்பாகவும் கனலும் தணலாகவும் உள்ளன. வரவரப் புதிய புதிய பிரச்சினைகளும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. அரசும் ஆட்சியாளர்களும் அவர்கள் மையப்பிரச்சினையைச் சுற்றி புதிய அயற் பிரச்சினைகளை – உப பிரச்சினைகளை உற்பத்தி செய்து அவற்றின் மூலம் நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டிருப்பது ஒரு உபாயமாகும். அந்த உபாயத்தில் அவர்கள் வெற்றியடைந்தே உள்ளனர்.  ஆனால், நாம்?  யுத்தத்திற்குப் பிறகு தமிழ்ச் சமூகம் எத்தகைய முன்னேற்றங்களைக் கண்டுள்ளது? அரசியலில்?பொருளாதாரத்தில்? பண்பாட்டில்? ஜனநாயக அடிப்படையில்? சமூக வளர்ச்சியில்? பிரதேசங்களின் அபிவிருத்தியில்? தன்னைச் சுற்றியுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணும் வகையில்….?  சில பிரச்சினைகளுக்காக அங்கங்கே அவ்வப்போது எதிர்ப்பு நடவடிக்கைகளும் போராட்டங்களும் நடந்திருக்கின்றன. இவற்றில் பலவும் மக்கள் அல்லது மாணவர்கள் நடத்தியது. இதில் பின்னர் தலைவர்களும் கட்சிகளும் பின்னிணைப்பாக இணைந்து கொண்டதே நடந்தது.  இதைத் தவிர, ஜெனீவாவில் மனித உரிமைப் பேரவையில் போர்க்குற்றம், பொறுப்புக் கூறல், நீதி பரிகாரம் போன்றவற்றுக்கான அழுத்த நடவடிக்கைகளுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  இவையெல்லாம் எந்த அளவுக்கு தமிழ்ச்சமூகத்தின் எதிர்பார்க்கைகளை நிறைவேற்றியுள்ளன? இவற்றின் மூலம் எந்தப் பிரச்சினை தீர்வுக்கு வந்துள்ளது? அல்லது தீரக் கூடிய நிலையில் உள்ளது என்பதை எவராவது அறுதியிட்டுக் கூற முடியுமா?  யுத்தத்திற்குப் பிறகு வடக்குக் கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட மீள் குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி ஆகிய இரண்டும் கூட அரசாங்கத்தின் (மகிந்த – மைத்திரி– ரணில் – கோத்தபாய ஆட்சிகளின்போது) தீர்மானம், நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டதே தவிர, தமிழ்ச்சமூகத்தின் விருப்பு, ஆலோசனை, தேவைப்பாடுகளின் தார்மீகத் தன்மைகளோடு முன்னெடுக்கப்படவில்லை. ஆகவேதான் இன்னும் யுத்த நிலைமையை ஒத்ததாக வடக்குக் கிழக்கின் சூழல் உள்ளது. மக்களுடைய மனதிலும் பாரம் குறையவில்லை. இவற்றை இப்படியே வைத்திருக்கவும் தொடரவும் தொடர்ந்து அனுமதிக்கவும் முடியுமா?  இதை ஏன் இங்கே கேட்க வேண்டியுள்ளது என்றால், தமிழ்ச்சமூகத்தின் இருப்பு தொடர்ந்தும் சிதைக்கப்பட்டு அபாய நிலைக்குள்ளாக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவே. யுத்தத்திற்குப் பின்னர் முன்னெடுக்கப்பட்டு வரும் அரச எதிர்ப்பு – அரச ஆதரவு அரசியல் இரண்டுமே போதாக்குறைகளையும் பலவீனத்தையுமே வெளிப்படுத்தியுள்ளன. சரியான வழி எது? சரியான தரப்பு எது என்பதை விஞ்ஞானபூர்வமாக (கட்சி, அமைப்பு விசுவாசங்களுக்கு அப்பால், மக்கள் நலன், சமூகத்தின் எதிர்காலம் என்ற அடிப்படையில்) பகுத்தாராயந்து பார்த்தால் இந்த உண்மைகள் எளிதிற் புரியும். ஆனால், இந்த அபாய நிலையைக் குறித்துப் புரிந்து கொண்டவர்கள் பலர் இருக்கின்ற போதும் அவர்கள் பகிரங்கமாக எதையும் சொல்லத் துணிவதில்லை. ஒன்று அவர்களுடைய கருத்துகள் நிராகரிக்கப்படுவதோடு அவர்கள் அவமதிக்கப்படுவார்கள். இரண்டாவது, யாரிடம் இதை எடுத்துச் சொல்வது என்ற கேள்வி.  இங்கே கவலையளிக்கும் விசயம் என்னவென்றால் இதெல்லாம் ஒடுக்கும் அரசுக்கும் மேலாதிக்க சிங்கள இனவாதத்திற்கும் வாய்ப்பளிப்பதேயாம். தமிழ்ச்சமூகம் தன்னைத் தயார்ப்படுத்திப் புதுமைப்படுத்திக் கொள்ளவில்லை என்றால், அது தொடர்ந்தும் பலவீனங்களுடன் இருக்குமாக இருந்தால் ஒடுக்குவோருக்கும் பலவீனப்படுத்த விழைவோருக்குமே வாய்ப்பாகும். முக்கியமாக தமிழர்கள் இலங்கைக்கு ஆபத்தானவர்கள், அவர்கள் எப்போதும் இந்தியாவுடன் அல்லது மேற்குலகத்துடன் சேர்ந்து கொண்டு இலங்கையைக் காட்டிக் கொடுப்பவர்கள் என்ற ஒரு தோற்றமயக்கத்தை சிங்கள மக்களிடம் அரசாங்கமும் ஆளும் தரப்புகளும் செய்து கொண்டிருக்கின்றன. இதன் மூலம் தமிழ் மக்களுடைய உரிமைக் கோரிக்கையையும் அதிலுள்ள நியாயத்தையும் ஏற்கக் கூடாது என்ற மனநிலையை அவர்களிடம் தொடர்ந்தும் வளர்த்து வருகின்றன. இதுவும் ஒரு சூழ்ச்சிப் பொறியே.  ஆகவேதான் இதையெல்லாம் முறியடிக்கும் விதமாக தமிழ்ச்சமூகம் முற்றிலும் புதிய சிந்தனைக்கும் செயல்முறைக்கும் செல்ல வேண்டும் என்கிறோம். அப்படியென்றால் தற்போதுள்ள அரசியல் சக்திகளும் அவற்றின் செயற்பாடுகளும் என்ற கேள்வியை நீங்கள் எழுப்பக் கூடும். கடந்த பதினொரு ஆண்டுகள் அதற்குச் சாட்சியம். இதற்கான பதில் அதில் உண்டு. இது சரியென்றால், இதை விட –தற்போதைய நிலையை விட அடுத்த பத்தாண்டுகள் மிகக் கடினமான –கீழ்நோக்கிய காலமாகவே அமையும். அதற்குப் பிறகான காலம் அதைவிடச் சரியும்.      https://arangamnews.com/?p=4071  
  • ஐ.நா. பிரேரணையை தோற்கடிக்கும் முயற்சியில் அரசாங்கம் மும்முரம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையை தோற்கடிப்பதற்கான தீவிர முயற்சிகளில் அரசாங்கம் இறங்கியுள்ளது.  இது தொடர்பாக பல்வேறு உறுப்பு நாடுகளுடனும் அரசாங்கம் தொடர்ச்சியாக இராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதுடன், ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பல்வேறு உறுப்பு நாடுகளுக்கும் இது தொடர்பாக கடிதங்களை அனுப்பியுள்ள நிலையில், அமைச்சர் தினேஷ் குணவர்தன தொடர்ச்சியாக கொழும்பில் உள்ள மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளின் தூதுவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன பிரேசில், ஜப்பான், தென்கொரியா, மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் தூதுவர்களை சந்தித்து மனித உரிமைப் பேரவையின்  இலங்கை மீதான பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படும் போது முழுமையான ஆதரவை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருக்கின்றார். முக்கியமாக கடந்த 24ஆம் திகதி இலங்கை தொடர்பான விவாதம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் நடைபெற்ற போது அதில் பல்வேறு நாடுகள் உரையாற்றியிருந்தன. அதில் சில நாகள் இலங்கைக்கு ஆதரவாக உரையாற்றின. எனினும் ஜப்பான் நாட்டின் ஜெனிவாவிற்கான தூதுவர் இலங்கை தொடர்பாக உரையாற்றும் போது,  பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் ஜப்பான் அந்த செயற்பாடுகளுக்கு உதவுவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக பிரேரணையை தோற்கடிக்கும் முயற்சிகளில் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. இலங்கை தொடர்பான பிரேரணையை பிரித்தானியா, ஜேர்மன், கனடா, மாலாவி, வட மெசடோனியா மற்றும் மொண்டிநீக்ரோ ஆகிய 6 நாடுகள் ஜெனிவா மனித உரிமை பேரவையில் தாக்கல் செய்திருக்கின்றன. அந்த பிரேரணையில் 15 செயற்பாட்டு பந்திகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. முக்கியமாக இலங்கையானது பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாட்டை நம்பகரமான முறையில் முழுமையான ஒரு பொறிமுறையின் கீழ் முன்னெடுக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் என்பனவற்றை தொடர்ச்சியாக சுயாதீனமான முறையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அதில் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. இந்தப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 22 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் நாடைபெற்வுள்ளதுடன் இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதற்கு ஆதரவு தெரிவிக்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை அரசாங்கம் கடிதமொன்றை அனுப்பியிருக்கின்றது. இந்தியாவும் இலங்கைக்கு முழுமையான ஆதரவு வழங்கும் என்று எதிர்பார்க்கின்றது. இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழஙக்குமாறு சீன வெளிவிவகார அமைச்சரிடம் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு சீனா இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்கும் என்று சர்வதேச மேடைகளில் இலங்கையை முழுமையாக சீனா ஆதரிக்கும் என்றும் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார். இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக இந்தப் பிரேரணையை தோற்கடிப்பதற்காக பல்வேறு இராஜதந்திர நகர்வுகளை பல மட்டங்களிலும் முன்னெடுத்து வருகின்றது.  ஜனாதிபதி கோத்தாபய  ராஜபக்ஷ இது தொடர்பான நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இவ்வாறான இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றார். அதேபோன்று வெளிவிவகார அமைச்சகம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. அது மட்டுமன்றி வெளிநாடுகளில் இருக்கும் இலங்கை தூதரங்கங்களின் தூதுவர்களும் இது தொடர்பான பிரசார நடவடிக்கைகளிலும் ஆதரவு திரட்டும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருக்கின்றனர்.   https://www.virakesari.lk/article/101605  
  • டோக்கியோ ஒலிம்பிக்; வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு பிற்போடப்பட்ட 2020 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள வெளிநாட்டு பார்வையாளர்களை அனுமதிப்பதற்கு ஜப்பான் மறுத்துள்ளது.  அதன்படி ஜப்பானுக்கு வெளியில் இருந்து வரும் பார்வையாளர்களை உள்வாங்காமல் இந்த கோடையில் ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜப்பானிய செய்தித்தாளான மைனிச்சி புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விடயத்தை நன்கு அறிந்தவர்களின் கூற்றுப்படி, இந்த திட்டம் குறித்த இறுதி முடிவு இம் மாதத்திற்குள் எடுக்கப்படவுள்ளதுடன்,  இப் பிரச்சினை குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உள்ளிட்ட பிற தொடர்புடைய அமைப்புகளுடன் ஜப்பானிய அரசாங்கம் கலந்துரையாடி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதையும் அதன் மாறுபட்ட விகாரங்களையும் சுற்றியுள்ள கவலைகள் காரணமாக, வெளிநாட்டு பார்வையாளர்களை ஒலிம்பிக் நிகழ்வுகளை பார்வையிட இவ்வாறு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் உள்நாட்டு பார்வையாளர்களை அனுமதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர். மேலும் எத்தனை பேர் விளையாட்டுகளை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. ஆண்டின் தொடக்கத்திலிருந்து, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் ஜப்பானிய மற்றும் டோக்கியோ அரசாங்கங்களும் 2020 ஆம் ஆண்டில் ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுகளை இந்த ஆண்டின் கோடையில் நடத்தும் நோக்கத்தை வலியுறுத்தியுள்ளன. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் முதலில் 2020 ஜூலை இல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன, ஆனால் அதே ஆண்டு மார்ச் மாதத்தில் தொற்றுநோய் உலக அளவில் பரவத் தொடங்கியமையினால் அது ஒத்திவைக்கப்பட்டது. புதிய திகதிகளின்படி 2021 ஜூலை 23 முதல் ஆகஸ்ட் வரை 08 ஆம் திகதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதேவேளை பாராலிம்பிக் விளையாட்டுகள் ஆகஸ்ட் 24 முதல் செப்டெம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறும்.   https://www.virakesari.lk/article/101615
  • அடி அந்த மாதிரி பட்டையைக் கிளப்பின அடி! அதைப் பார்த்துக் துள்ளிக் குதிக்கும் கறுப்பு அழகிகளை மைதானத்தில் காணவில்லை என்பதுதான் குறை😜
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.