Jump to content

காலரா தொடங்கி கொரோனா வரை... லைஃப்பாய் சோப்பின் 125 ஆண்டு கால வரலாறு


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

காலரா தொடங்கி கொரோனா வரை... லைஃப்பாய் சோப்பின் 125 ஆண்டு கால வரலாறு!

Lifebuoy

இன்றைக்கு உலகெங்கும் 60 நாடுகளில் லைஃப்பாய் சோப் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பிராண்டின் வரலாற்றை கொஞ்சம் பார்ப்போமா?

கோவிட்-19 தொற்று நோய்க்காலத்தில் நம்மில் பலரும் லைஃப்பாய் சோப்பு போட்டு குளித்திருப்போம். ஆனால், இந்த லைஃப்பாய் சோப் நூறு ஆண்டுகளுக்கு மேலான வரலாறு கொண்டது தெரியுமா?

நூற்றாண்டைக் கடந்த சோப்

1894-ம் ஆண்டு வில்லியம், ஜேம்ஸ் லீவர்ஸ் சகோதர்களால் காலரா நோயைத் தடுக்கும் நோக்கில் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சோப்தான் லைஃப்பாய் ஆகும். இந்தியாவுக்கு லைஃப்பாய் சோப் அறிமுகமாகி சுமார் 125 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால், ஆரம்பத்திலிருந்து இன்றுவரை இதனுடைய சந்தை நிலைப்படுத்தலான (Market Positioning) – கிருமிகளை அகற்றி ஆரோக்கியமாக வைத்திருக்கும் சோப்பு என்பது மட்டும் மாறவில்லை!

தொற்றக்கூடிய சாதாரண சளி, காய்ச்சலிலிருந்து வயிற்றுப்போக்கு/காலரா வரை நோய்கள் பெரும்பாலும் `தொடுதலின் (hand contact)’ மூலம்தான் பரவுகிறது. இந்தப் பரவலைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் வேண்டும் என்கிற நோக்கில் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்ட சோப்தான் இந்த லைஃப்பாய் ஆகும்.

சோப்புக்கான நிலைப்படுத்தலில் மாற்றம் இல்லையென்றாலும் அதனுடைய உபயோகத்தைப் பல சூழ்நிலைகளிலும், தளங்களிலும் விளக்கும் வகையில் இதனுடைய விளம்பரங்கள் அமைந்திருக்கின்றன. `லைஃப்பாய் இருக்குமிடமே ஆரோக்கியம் இருக்குமிடம்’ என்கிற விளம்பர வாசகமும் இசையும் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நம் அனைவரின் காதுகளிலும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன.

லைஃப்பாய் Vs டெட்டால் மோதல்

ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை லைஃப்பாய் சோப் ஒரு பிராண்டாக மட்டுமல்லாமல் `கார்பாலிக்’ வகை அல்லது `சிவப்பு’ நிறத்திலான சோப் என்கிற வகைமையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் அதிகமாக விற்பனையாகும் சோப்பாகவும் இருந்து வந்தது. அதன்பின், டாடா ஆயில் மில் (டாம்கோ) நிறுவனமானது `OK’ என்கிற பெயரில் ஒரு சோப்பை இந்தப் பிரிவில் அறிமுகப்படுத்தியது. ஆனால், நாளடைவில் லைஃப்பாய் சோப் தயாரிப்பாளரான ஹிந்துஸ்தான் யுனிலீவர் `டாம்கோ’ நிறுவனத்தையே கையகப்படுத்திக் கொண்டது. இந்த சோப்களுக்குப் போட்டியாக `ஓஸ்வால் அக்ரோ’ நிறுவனம் ஒரு புதிய சோப்பை அறிமுகப்படுத்தியது. ஆனால், அந்த சோப்பால் அதிக நாள் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

Lifebuoy
 
Lifebuoy

1980, 90-களில் லைஃப்பாய் சோப்பின் வளர்ச்சிக்குத் தடையாக வேறெந்த கார்பாலிக் சோப்பின் அறிமுகம் இல்லை என்றாலும், சந்தையில் விற்கப்படும் சோப்புகள் அனைத்தும் பிரீமியம், பாப்புலர், கார்பாலிக் சோப்புகள் என மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டன. அதன்படி, கார்பாலிக் சோப்பாக இல்லாவிட்டாலும் பாப்புலர் வகையைச் சேர்ந்த சோப்புகளின் விலை லைஃப்பாய் விலையை ஒட்டி இருந்ததுடன், அதனுடைய அழகும் கவர்ச்சியும் பெரிய அளவில் இல்லாமல் இருந்ததால், லைஃப்பாய் சோப் `கீழ்மை’யாகக் (Down market) கருதப்பட்டது.

`ஆரோக்கியம்’ என்கிற கருத்தாக்கத்தை வைத்து லைஃப்பாய் சோப்புகள் விளம்பரம் செய்யப்பட்டாலும், இதற்கும் மற்ற சோப்புகளின் `புத்துணர்ச்சியூட்டும் குளியல்’ என்கிற நிலைப்படுத்தலுக்கும் வித்தியாசம் அதிகமில்லை என மக்கள் எண்ண ஆரம்பித்தனர். அத்துடன் லிரில், சிந்தால், டெட்டால் ஆகிய மூன்று சோப்புகளும் வெவ்வேறு நிலைப்படுத்தலுடன் சந்தையில் வலம்வர ஆரம்பித்தன. `Antiseptic’ என்கிற டேக் லைனுடன் டெட்டாலுக்கான நெருக்கம் அதிகமிருந்தாலும் அதை `சோப்’போடு பொருத்திப் பார்ப்பது சிரமமாக இருந்தது.

 

யுக்தியை மாற்றிய லைஃப்பாய்

பெரும்பாலான வீடுகளில் டெட்டால் இருந்தாலும் அது பெரும்பாலும் உடம்பில் அடிபடும்போது, முகச்சவரம் செய்யும்போது ஏற்படும் சிறு வெட்டுக் காயங்கள் போன்றவற்றுக்கே உபயோகப்படுத்தப்பட்டு வந்தது. இதனுடைய உபயோகத்தைப் பரவலாக்கும் நோக்கத்தில் அப்போது இதை சந்தைப்படுத்தி வந்த `ரெக்கிட் & கோல்மேன் ஆஃப் இண்டியா' நிறுவனமானது இதைப் பொது உபயோகத்துக்கும் பயன்படுத்தலாம் என்கிற வகையில் அதை விளம்பரம் செய்ய ஆரம்பித்தது. கிருமிக்கு எதிரான பாதுகாப்பு என `லைஃப்பாய்' பெருமையாகப் பேசப்பட்டு வர, டெட்டால் சோப்புக்கும் அதே விஷயங்களைச் சொல்கிற மாதிரி விளம்பரங்கள் வெளியாக ஆரம்பித்தன.

இதைத் தொடர்ந்து லைஃப்பாய் சோப்பும் தன் விளம்பரத்தைக் கொஞ்சம் மாற்றி அமைத்தது. `கார்பாலிக் சோப்’ என்பதிலிருந்து `அதிக நுரை’ தரக்கூடிய மென்மையான சோப் என விளம்பரப்படுத்திக் கொண்டாலும் `ஆரோக்கியம்’ என்கிற அம்சத்துக்கு அழுத்தம் தருவதை இம்மியளவும் குறைத்துக்கொள்ளவில்லை.

lifebuoy
 
lifebuoy

லைஃப்பாயில் பல வகை...

இன்றைக்கு உலகெங்கும் 60 நாடுகளில் லைஃப்பாய் சோப் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 2002-ம் ஆண்டிலிருந்து லைஃப்பாய் பல வகையான சோப்புகளை அறிமுகப்படுத்த ஆரம்பித்தது. அவற்றில் சில:

லைஃப்பாய் ப்ளஸ்,

லைஃப்பாய் ஆக்டிவ் ரெட்,

லைஃப்பாய் ஆக்டிவ் ஆரஞ்ச்,

லைஃப்பாய் இன்டர்நேஷனல்,

லைஃப்பாய் டோட்டல்,

லைஃப்பாய் ஸ்கின்கார்ட்,

லைஃப்பாய் ஃப்ரஷ்,

லைஃப்பாய் ஸ்ட்ராங்,

லைஃப்பாய் நேச்சுரல்ஸ் போன்றவையாகும்.

கைகளைச் சுத்தமாக வைத்துக்கொண்டால் வயிற்றுப்போக்கு / காலரா ஏற்படுவதற்கான தொற்றை 47% வரை குறைக்கலாம் என்பது `லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜின் அண்ட் ட்ராபிக்கல் மெடிஸின்’ என்கிற அமைப்பின் மூலம் தெரியவர, லைஃப்பாய் தனது `ஸ்வஸ்த்ய சேத்னா’ என்கிற மிகப் பெரிய விழிப்புணர்வு முன்னெடுப்பை 2002-ம் ஆண்டு மேற்கொண்டது. இந்தத் திட்டம் வெற்றி அடைந்ததைக் கெளரவிக்கும் வகையில் 2006-ம் ஆண்டு இந்தியத் தபால் துறை ஒரு சிறப்பு தபால் கவர் வெளியிட்டு சிறப்பித்தது. 2002-ம் ஆண்டிலிருந்து 2009-ம் ஆண்டு வரை இந்த விழிப்புணர்வுத் திட்டம் இந்தியாவில் சுமார் 51,000 கிராமங்களில் வசிக்கும் 12 கோடிக்கும் மேலான மக்களைச் சென்றடைந்திருக்கிறது.

Lifebuoy
 
Lifebuoy

உலக கை கழுவும் நாள்

2010-ம் ஆண்டு லைஃப்பாய், வரிசை விஸ்தரிப்பு உத்தியின் கீழ் `லைப்பாய் ஹாண்ட் சானிடைஸ’ரையும் அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 15-ம் தேதியை லைஃப்பாய் சுமார் 100 நாடுகளில் `உலக கை கழுவும் நாளாக’ அனுசரித்து வருகிறது.

ஒவ்வொருவரும் முறையாக கை கழுவி சுகாதாரத்தைப் பேணுவதற்கு வருடத்துக்கு 20 சோப்புகள் தேவைப்படும். ஆனால், தற்சமயம் உலகளவில் 1.5 பில்லியன் மக்கள் சுமார் எட்டு பிராண்ட் சோப்புகளைத்தான் உபயோகித்து வருகிறார்கள் என இந்த நிறுவனத்தின் அறிக்கையொன்று கூறுகிறது. அத்துடன் இந்த நிறுவனத்தின் `கை கழுவும் திட்டங்கள்' மூலம் 2002-ம் ஆண்டிலிருந்து இன்று வரை சுமார் 1.07 பில்லியன் மக்களை களப்பணி மற்றும் ஊடகங்கள் மூலமாக சென்றடைந்திருப்பதாகவும் தெரிவிக்கிறது.

காலத்திற்கேற்றாற் போல புதுப்புது சோப்புகளை புது வடிவங்களில் லைஃப்பாய் அதனுடைய பெயரின் கீழ் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்திய நுகர்வோர்களின் மிகவும் நம்பிக்கைக்குரிய பிராண்டுகளில் ஒன்றாக லைஃப்பாய் தொடர்ந்து இருப்பது அதன் பெருமைக்கு முக்கியமான சான்றாகும்.

 

https://www.vikatan.com/business/news/a-brief-story-on-lifebuoy-soap-and-its-125-years-history

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Lifebuoy Seife, 10x85g, Rot: Amazon.de: Drogerie & Körperpflege

ஊரிலை லைவ்போய் சவுக்காரம்  எண்டால் சொறி சிரங்குகாரர் தான் ஞாபகத்துக்கு வருவினம்.😂

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நான் இவ்வளவு நாளும் இந்த சோப்பை இந்தியாவில் தான் செய்கிறார்கள் என்று நினைத்தேன் 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரதி said:

நான் இவ்வளவு நாளும் இந்த சோப்பை இந்தியாவில் தான் செய்கிறார்கள் என்று நினைத்தேன் 

 

லண்டனில இருக்கியள் இது தெரியாமல்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

லண்டனில இருக்கியள் இது தெரியாமல்

இங்கு இந்த சோப்பை கடைகளில் கண்டதேயில்லை 

 

 • Confused 1
Link to post
Share on other sites

சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றியமைச்சுக் கொள்ளும் வியாபாரம் நிலைக்கிறது..

 

Lifebuoy Alcohol Based Hand Sanitizer: Buy Lifebuoy Alcohol Based Hand Sanitizer Online at Best Price in India | Nykaa

Lifebuoy Hand Sanitiser Gel 50ml | Wilko

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 14/1/2021 at 19:02, குமாரசாமி said:

Lifebuoy Seife, 10x85g, Rot: Amazon.de: Drogerie & Körperpflege

ஊரிலை லைவ்போய் சவுக்காரம்  எண்டால் சொறி சிரங்குகாரர் தான் ஞாபகத்துக்கு வருவினம்.😂

 

On 14/1/2021 at 21:21, ரதி said:

நான் இவ்வளவு நாளும் இந்த சோப்பை இந்தியாவில் தான் செய்கிறார்கள் என்று நினைத்தேன் 

ஜேர்மனியில்... குறிப்பிட்ட சில கடைகளில் கண்டு உள்ளேன். :)

புங்கையூரான்....  முன்பு, 
யாழ். இந்துக் கல்லூரி விடுதியில்...
நடந்த,
 "சிவப்பு சவுக்கார பகிடியை" ... அழகாக பதிந்திருந்தார்.  🤣

அந்தத் தலைப்பில்,  நெடுக்சும்.. கனக்க  எழுதிய நினைவு.
அந்தத்  தலைப்பை, தேடி கண்டு பிடித்து தருபவர்களுக்கு,
ஒரு, + புள்ளி வழங்கப் படும். :grin:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

யாராவது இவரை கண்டீர்களா ?

மடத்துவாசல் பிள்ளையாரடி": சோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை

நம்ம Jaffna - யாழில் மீண்டும் "மில்க்வைற்”சோப்!... | Facebook

பனங்கொட்டை, பனை வளர்ப்புக்கு முன்னுரிமை குடுத்த நிறுவனம்.

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இதுவரை காலமும் உலக கை கழுவும் நாளுக்கு யாரும் முக்கியத்துவம் கொடுத்தாகதெரியவில்லை.கொரோனாவோடு சரி கை கழுவும் நாளும் வந்துட்டு.😄

வேற.....

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பெருமாள் said:

யாராவது இவரை கண்டீர்களா ?

மடத்துவாசல் பிள்ளையாரடி": சோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை

நம்ம Jaffna - யாழில் மீண்டும் "மில்க்வைற்”சோப்!... | Facebook

சைவப் பெருந்தகை... திருவாளர்   கனக சபாபதி அவர்கள் நடத்திய நிறுவனம்.
பரபரப்பான... காங்கேசன் துறை வீதியில், 
"மில்க் வைற்"  தொழிற்சாலை  இருந்தது.  

1970´களில்,  ரயில் வண்டியில்....
யாழ்ப்பாணத்திலிருந்து....  கொழும்பு  போகும் வரை,
எல்லா புகையிரத நிலையங்களிலும்... 
இவரது... சவர்க்கார  விளம்பர பலகை இருக்கும்.

அதனைப் பார்த்துக் கொண்டு... 
கொழும்பு வரை, பயணிக்கும் போது....
நம்ம ஊர்...  "மில்க் வைற்"  சவுக்காரமும், 
என்னுடன்,  துணையாக வருகின்றது என்ற ஒரு தெம்பு இருக்கும்.

அதனை... என்றும், மறக்க மாட்டேன். பெருமாள்.  :)

 • Sad 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தமிழ் சிறி said:

சைவப் பெருந்தகை... திருவாளர்   கனக சபாபதி அவர்கள் நடத்திய நிறுவனம்.
பரபரப்பான... காங்கேசன் துறை வீதியில், 
"மில்க் வைற்"  தொழிற்சாலை  இருந்தது.  

1970´களில்,  ரயில் வண்டியில்....
யாழ்ப்பாணத்திலிருந்து....  கொழும்பு  போகும் வரை,
எல்லா புகையிரத நிலையங்களிலும்... 
இவரது... சவர்க்கார  விளம்பர பலகை இருக்கும்.

அதனைப் பார்த்துக் கொண்டு... 
கொழும்பு வரை, பயணிக்கும் போது....
நம்ம ஊர்...  "மில்க் வைற்"  சவுக்காரமும், 
என்னுடன்,  துணையாக வருகின்றது என்ற ஒரு தெம்பு இருக்கும்.

அதனை... என்றும், மறக்க மாட்டேன். பெருமாள்.  :)

பெயரை நல்ல ஞாபகம் வைச்சிருக்கிறியள்.
எப்பவும் திருநீற்று பூச்சோடைதான் திரிவார். பள்ளிக்கூடங்களுக்கு இலவசமாய் புத்தகங்கள் கொடுப்பவர்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

பெயரை நல்ல ஞாபகம் வைச்சிருக்கிறியள்.
எப்பவும் திருநீற்று பூச்சோடைதான் திரிவார். பள்ளிக்கூடங்களுக்கு இலவசமாய் புத்தகங்கள் கொடுப்பவர்.

குமாரசாமி அண்ணா.... 
நல்லது, செய்தவர்களின் பெயர்கள்....
காலம் கடந்தும், நிலைத்து நிற்கும். :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணா.... 
நல்லது, செய்தவர்களின் பெயர்கள்....
காலம் கடந்தும், நிலைத்து நிற்கும். :)

சோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை – மடத்துவாசல்

  மில்க்வைற்  மேலுறைகளை சேர்த்து அனுப்பினால் படிப்பு சம்பந்தமாய் பரிசுகள் தருவினம்.

இதெல்லாம் ராணி சந்தன சோப்பு போடுறவைக்கு எங்கை தெரியப்போகுது?? 🤣  🤪

Buy Rani Sri Lanka Sandalwood Queen of Beauty Soaps - Pack of 5 Online at Low Prices in India - Amazon.in

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

சோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை – மடத்துவாசல்

  மில்க்வைற்  மேலுறைகளை சேர்த்து அனுப்பினால் படிப்பு சம்பந்தமாய் பரிசுகள் தருவினம்.

ஆஹா.... அந்தக் கால  "மில்க் வைற்"   விளம்பரத்தை, பார்க்க சந்தோசமாக உள்ளது. :grin:

பாடசாலை.... மாணவ, மாணவியரின் வெள்ளை உடை...
"பளிச்" என, மின்ன...  மில்க் வைற்,   நீலப் பொடி  பாவியுங்கள். ✅ 

ப்ளீஸ்..... (கே. எஸ்.ராஜா.... பாணியில், வாசிக்கவும்) :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

யாராவது இவரை கண்டீர்களா ?

மடத்துவாசல் பிள்ளையாரடி": சோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை

நம்ம Jaffna - யாழில் மீண்டும் "மில்க்வைற்”சோப்!... | Facebook

தட்டாதெருவுக்கு அருகில்தான் மில்க்வைட் கொம்பனி இருந்தது. இங்கிருந்த பல மிசின்கள் உள்ளூரிலேயே தயாரிக்கப் பட்டன.... அவற்றை நேரில் பார்த்த பழகிய அனுபவம் மறக்க முடியாதது.....!  😇

திரு கனகசாபாபதி (மில்க்வைட் )

திருமதி தங்கம்மா அப்பாக்குட்டி (துர்க்கை அம்மன் கோயில், தெல்லிப்பளை )

நல்லை ஆதீனம் (நல்லூர்)

இவர்கள் தனித்தனியாகவும், இணைந்தும் பல அளப்பரிய சேவைகளை மக்களுக்கு செய்துள்ளனர். அவற்றை இந்நேரத்தில் நினைவு கூருகிறேன்.....! 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, suvy said:

தட்டாதெருவுக்கு அருகில்தான் மில்க்வைட் கொம்பனி இருந்தது. இங்கிருந்த பல மிசின்கள் உள்ளூரிலேயே தயாரிக்கப் பட்டன.... அவற்றை நேரில் பார்த்த பழகிய அனுபவம் மறக்க முடியாதது.....!  😇

திரு கனகசாபாபதி (மில்க்வைட் )

திருமதி தங்கம்மா அப்பாக்குட்டி (துர்க்கை அம்மன் கோயில், தெல்லிப்பளை )

நல்லை ஆதீனம் (நல்லூர்)

இவர்கள் தனித்தனியாகவும், இணைந்தும் பல அளப்பரிய சேவைகளை மக்களுக்கு செய்துள்ளனர். அவற்றை இந்நேரத்தில் நினைவு கூருகிறேன்.....! 

உண்மையில் இவர்கள் ஊர்களுக்கு நல்ல தொண்டு செய்தவர்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

திருமதி தங்கம்மா அப்பாக்குட்டி (துர்க்கை அம்மன் கோயில், தெல்லிப்பளை )

இங்கு முச்  என்றால் தும்முகிற பெண்ணியவாதிகள் பாடம் படிக்கணும் அவரிடம் .

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.