Jump to content

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உருவான உண்மை வரலாறும் இன்று நடப்பதும்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உருவான உண்மை வரலாறும் இன்று நடப்பதும்

Maniam Shanmugam : ·

யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் போலித் தமிழ் தேசியவாதிகளும்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உருவான வரலாறு தெரியாத பலர் இன்று அதைப்பற்றி எல்லாம் தெரிந்தவர்கள் போல கதைப்பதைப் பார்க்க சிரிப்புத்தான் வருகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழரசுக் கட்சியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 1974 ஓகஸ்ட் 01 ஆம் திகதி அப்போதைய பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்க அவர்களால் வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.

அதற்கு முதல் தமிழரசுக் கட்சி அமைக்க இருந்த கற்பனைத் தனித்தமிழ் நாட்டின் தலைநகரான திரிகோணமலையில் தமிழ் பல்கலைக் கழகம் ஒன்றை அமைப்பதற்கென தமிழரசுக் கட்சி தமிழ் பொது மக்களிடம் பெருந்தொகை பணத்தைத் திரட்டியதுடன் திரிகோணமலையில் பல ஏக்கர் காணியையும் கொள்வனவு செய்தது. ஆனால் இன்று வரையும் அந்தப் பணத்துக்கும் காணிக்கும் என்ன நடந்தது என யாருக்கும் தெரியாது. (தமிழரசுக் கட்சித் தலைவராகவும், பல வருடங்களாக திரிகோணமலைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் இரா.சம்பந்தன்தான் இதற்கு விளக்கம் சொல்ல வேண்டும்)

தமிழரசு – தமிழ் காங்கிரஸ் கட்சிகள் தமிழ் பிரதேசத்தில் ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்குவதில் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், அந்த இரு கட்சிகளும் 1965 இல் ஐக்கிய தேசியக் கட்சி அமைத்த அரசாங்கத்தில் சேர்ந்த பொழுதே அதைச் செய்திருக்க முடியும். ஆனால் என்ன செய்தார்கள்? தமிழரசு கட்சி தமிழ் பல்கலைக்கழகம்தான் அமைக்க வேண்டும் என்றும், தமிழ் காங்கிரஸ் கட்சி அமைவது இந்துப் பல்கலைக்கழகமாக இருக்க வேண்டும் என்றும் சண்டை போட்டதில், ஐ.தே.க. அரசாங்கம் அதைச் சாக்காக வைத்து தமிழ் பகுதிகளில் பல்கலைக்கழகம் அமைவதை சாதுரியமாகத் தட்டிக் கழித்துவிட்டது.

இந்த நிலைமையில்தான் 1970 இல் சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையில் அமைந்த அரசாங்கத்தில் இணைந்த இடதுசாரிக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சியினதும், லங்கா சமசமாஜக் கட்சியினதும் வற்புறுத்தலாலும், அரசில் இணைந்திருந்த அமைச்சர் செல்லையா குமாரசூரியர், யாழ் மாநகர முதல்வர் அல்பிரட் துரையப்பா போன்றோரினதும் மற்றும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினதும் முயற்சிகளினாலும் அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக வளாகம் ஒன்றை அமைக்க முன்வந்தது.

தம்மால் முடியாமல் போனதை மற்றவர்களின் முயற்சியால் அமைப்பதா என்ற காழ்ப்புணர்வு காரணமாக தமிழரசுக் கட்சி யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைவதை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வந்தது.

பல்கலைக்கழகம் அமைப்பதற்காக திருநெல்வேலியில் இருந்த பரமேஸ்வரா கல்லூரியினதும், மருதனாமடத்தில் அமைந்திருந்த இராமநாதன் மகளிர் கல்லூரியினதும் கட்டிடங்களை அரசாங்கம் சுவீகரித்தபோது, ‘ஐயோ சேர்.பொன்.இராமநாதன் தம்பதியினர் கட்டிய பாடசாலைகளை சிறீமாவோ அரசாங்கம் கபளீகரம் செய்கிறது’ எனத் தமிழரசுக் கட்சியினர் கூச்சல் போட்டனர். ஆனால் இராமநாதனின் அன்றைய வாரிசாகக் கருதப்பட்ட முன்னாள் செனட்டர் எஸ்.ஆர்.கனகநாயகம் (பிரபல சட்டத்தரணி) அவர்கள் இந்தக் கட்டிடங்களில் பல்கலைக்கழகம் அமைவதை முழுமனதுடன் ஆதரித்ததுடன், பின்னர் முற்போக்கு சக்திகளால் அமைக்கப்பட்ட ‘யாழ் பல்கலைக்கழக வளாக விஸ்தரிப்பு இயக்கம்’ என்னும் அமைப்புக்கு தலைவராகவும் பணியாற்றினார்.

பின்னர் தமிழரசுக்கட்சியினர், யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைந்தால் தமிழர்களின் கலாச்சாரம் சீரழிந்துவிடும் என தமிழ் மக்களின் பழமைவாத சிந்தனைகளைக் கிளறி உசுப்பேத்தப் பார்த்தார்கள். அது எடுபடவில்லை. வட பகுதி கல்விமான்கள் மட்டுமின்றி, தமிழ் பொதுமக்களும் பல்கலைக்கழகம் அமைவதை முழுமனதுடன் வரவேற்றனர் என்பதை அதன் திறப்பு விழாவின் போதும், அதைத் தொடர்ந்து யாழ்.விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போதும் திரண்ட சனசமுத்திரம் எடுத்துக் காட்டியது.

தமிழரசுக் கட்சியினர் அகிம்சையே தமது வழி என்றும், தமது கட்சித் தலைவர் செல்வநாயகத்தை ‘ஈழத்துக் காந்தி’ என்றும் பேசி வந்தாலும், வன்முறைக்கும் தயங்காதவர்கள் என்பதை, யாழ் பல்கலைக்கழக வளாகத்தின் முதலாவது தலைவராக பேராசிரியர் க.கைலாசபதி நியமிக்கப்பட்டு, திறப்பு விழா ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக அவர் யாழ்ப்பாணம் வந்து வண்ணார்பண்ணையில் உள்ள மைத்துனர் பொன்னம்பலம் (பின்னாளில் யாழ் அரசாங்க அதிபராக இருந்தவர்) தங்கியிருந்தபோது, அந்த வீட்டின் மீது ஒரு இரவு வேளையில் வீசிய கைக்குண்டு வீச்சுச் சம்பவம் எடுத்துக் காட்டியது.

இந்தச் சம்பவத்தைப் பற்றிய செய்தியை அடுத்த நாள் காலை யாழ்ப்பாணத்தில் வெளியாகும் ‘ஈழநாடு’ பத்திரிகையில் பார்த்துவிட்டு நானும் இன்னுமொரு தோழரும் கைலாசபதி அவர்களைப் பார்க்கச் சென்றபொழுது அவர் சிரித்துக்கொண்டே, “நானும் யாழ்ப்பாணத்து பனங்காட்டு நரிதான் என்பது இந்த மடையன்களுக்குத் தெரியாது போலும்” என அவர் சொன்னது இன்றும் எனது நினைவில் பசுமையாக உள்ளது.

தமிழரசுக் கட்சியினரின் இந்த வகையான மிரட்டல்கள் பயனற்றுப்போய் திட்டமிட்டபடி பல்கலைக்கழகம் திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் பின்னர் பல்கலைக்கழகத் திறப்புவிழாவையும், அதற்காக வருகை தரும் பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்க பங்குபற்றும் நிகழ்ச்சிகளையும் பகிஸ்கரிக்குமாறும், சிறீமாவோ யாழ்ப்பாணத்தில் தங்கி நிற்கும் இரண்டு நாட்களும் பொது மக்கள் பூரண ஹர்த்தால் அனுட்டித்து வெளியே வராமல் வீடுகளில் முடங்கிக் கிடக்க வேண்டும் என்றும் தமிழரசுக் கட்சி பொதுமக்களை வேண்டிக்கொண்டது. ஆனால் தமிழரசுக் கட்சி கேட்டுக்கொண்டதற்கு மாறாக, பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பல்கலைக்கழகத் திறப்பு விழா நிகழ்ச்சியிலும், சிறீமாவோ பங்கு பற்றிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டதுடன், அவர் சென்ற வீதிகளின் இருமருங்கிலும் திரண்டு நின்று கையசைத்து தமது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

தமிழரசுக் கட்சியினர் பல்கலைக்கழகம் திறப்பதைத் தடுப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு தோல்விக்கு மேலே தோல்வி கண்டபோதும், ‘சற்றும் சளைக்காத விக்கிரமாதித்தன்’ போல தமது எதிர்ப்பு நடவடிககைகளைத் தொடர்ந்த வண்ணம் இருந்தனர். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்துக்கான புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படும் வரை அந்தப் பீடத்தை இயக்குவதற்கு வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் சில கட்டிடங்களை சுவீகரித்தபோது, அதற்கெதிராகவும் தமிழரசுக் கட்சி கூச்சல் போட்டதுடன், சில கிறிஸ்தவ மதகுருக்களையும் அழைத்துக் கொண்டுபோய் அரசாங்கத்தில் இருந்த செல்வாக்குமிக்க அமைச்சரான பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவிடம் முறைப்பாடு செய்தனர். அதுவும் வெற்றியளிக்கவில்லை.

யாழ் பல்கலைக்கழகம் அமையவுள்ள சுற்றாடலில் வசிக்கும் மக்கள் மாணவர்களுக்கு, குறிப்பாக சிங்கள மாணவர்களுக்கு தமது வீடுகளில் அறைகள் வாடகைக்குக் கொடுக்கக்கூடாது என தமிழரசுக் கட்சியினர் செய்த பிரச்சாரமும் மக்களிடம் எடுபடவில்லை.

அதுமட்டுமின்றி, ஒரு சமயம் புதிதாக வந்த மாணவர்கள் மீது வெளியார் ஒருவர் மேற்கொண்ட பகிடிவதையால் பல்கலைக்கழகத்துக்கு முன்னால் மோட்டார் சைக்கில் திருத்தும் கடையொன்றில் தினவரி குழுமி நின்று வம்பளக்கும் உள்ளுர் வாலிபர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்ட பொழுது, அதைப் பயன்படுத்திய தமிழரசுக் கட்சியினர், பல்கலைக்கழகத்தை இயங்கவிடாமல் செய்ததுடன், பல்கலைக்கழகத்தை சில வாரங்கள் மூடவும் வைத்தனர். அதன் காரணமாக பல்கலைக்கழக நிர்வாகம் பொலிஸ் பாதுகாப்புடன் 6 பஸ்களில் வெளியூர் மாணவர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

அந்த நேரத்தில் அந்தப் பகுதியில் வசித்த தமிழரசுக் கட்சியின் முன்னாள் மாநகர முதல்வர் சி.நாகராசா தலைமையில் தமிழரசுக் கட்சியினர் திரண்டு பல்கலைக்கழக (பரமேஸ்வரா) சந்தியிலுள்ள ஆலயத்துக்கு முன்னால் தெருவோரம் ஒரு கொட்டகை அமைத்து, அதற்குள் மணல் போட்டு, வாள்கள், கம்பிகள், பொல்லுகள் சகிதம் இரவு பகலாக மாணவர்கள் மீது வன்முறை பிரயோகிப்பதற்கு தயாராக இருந்தனர். அந்த நேரத்தில் அருகிலிருந்த வீதியால் சைக்கிளில் வந்த கல்வியன்காட்டைச் சேர்ந்த மாணவன் ஒருவரை கத்தியால் குத்தியதில் அவரது மண்ணீரல் பாதிப்புக்குள்ளானது.

தமிழரசுக் கட்சியினர் செய்த அட்டகாசங்கள் ஒருபுறமிருக்க, பின்னர் அவர்களால் உருவாக்கப்பட்ட புலிகள் யாழ் பல்கலைக்கழகம் மீது நடத்திய காட்டுமிராண்டித்தனம் கொஞ்சநஞ்சமல்ல.

புலிகளின் யாழ் மாவட்டத் தளபதியாக இருந்த கிட்டு, விஜிதரன் என்ற மாணவனைக் கடத்திச் சென்று சித்திரவதை செய்து கொலை செய்த சம்பவத்தை மறந்துவிட முடியாது. அதுமட்டுமல்ல, பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று கொண்டிருந்த செல்வி, மனோகரன், படிப்பை முடித்திருந்த தில்லை போன்றோரை ஒரே நாளில் கடத்திச் சென்று தமது வதை முகாம்களில் பல மாதங்கள் வைத்து சித்திரவதை செய்து கொலை செய்தனர். விமலேஸ்வரன் என்ற மாணவனை நடுவீதியில் வைத்துச் சுட்டுக் கொன்றனர். அதுபோல மருத்துவ பீட பேராசிரியை ராஜினி திரணகமவை வீதியில் வைத்து பட்டப்பகலில் சுட்டுப் படுகொலை செய்தனர்.

இது தவிர, நாவாந்துறையைச் சேர்ந்த பீலிக்ஸ், இணுவிலைச் சேர்ந்த சண்முகநாதன் ஆகிய இரு பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்களை ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்துக்குச் சார்பானவர்கள் என்று சொல்லி கடத்திச் சென்று கொலை செய்தனர்.

1995 ஒக்ரோபரில் யாழ்ப்பாணம் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பொழுது, புலிகள் வன்னிக்குத் தப்பியோடிவிட, பல்கலைக்கழகத்தில் இருந்த அவர்களது சில ஆதரவாளர்கள் பல்கலைக்கழகத்தை மூடி வன்னிக்குக் கொண்டு சென்று இயக்குவதற்கு முயற்சி செய்தனர். (இறுதி யுத்தத்தின்போது வன்னியிலிருந்து தப்பியோடி தற்பொழுது தமிழ்நாட்டில் பதுங்கியிருக்கும் ஒருவர் இதில் முக்கியமானவர்) ஆனால் பெரும்பான்மையான பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களின் எதிர்ப்பால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.

இந்திய அமைதிப்படை வந்திருந்த காலத்தில் பல்கலைக்கழகம் மூடப்பட்டு, அதன் பிரதான கட்டிடத்திலும், பெண்கள் விடுதியிலும் அமைதிப்படையின் சென்னைப் படைப்பிரிவு நிலை கொண்டிருந்தது. அவர்களிடமிருந்து அதை விடுவித்து பல்கலைக்கழகத்தை இயங்க வைப்பதற்கான முயற்சிகள் எதனையும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைமையோ அல்லது அவர்களின் தீவிர ஆதரவாளரான அப்போதைய உப-வேந்தர் சு.வித்தியானந்தனோ செய்யவில்லை. ‘முறிந்த பனை’ நூலின் ஆசிரியர்களில் இருவர்களான ராஜினி திரணகமவும், கே.சிறீதரனுமே இந்திய அமைதிப்படையுடன் கதைத்து, அவர்களை அங்கிருந்து வெளியேறுவதற்கு வழிவகை செய்தார்கள்.

இப்படியே தமிழ் தேசியவாதத் தலைமைகள் யாழ் பல்கலைக்கழகத்துக்கு எதிராக மேற்கொண்ட கைங்கரியங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். முதலில் பல்கலைகழகம் வருவதை எதிர்த்தவர்கள், பின்னர் அதைத் தமது தேவைகளுக்குப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். அதாவது, இது ஒரு வகையில் ‘கறையான் புற்றெடுக்க பாம்பு குடிகொண்ட கதைதான்’. இதை தொடர்ந்து அனுமதிப்பது தமிழ் மக்கள் தங்களது தலையில் தாங்களே மண் அள்ளிப் போடுவதற்கு ஒப்பானது.

இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்காக நீலிக்கண்ணீர் வடிப்பவர்களும், உண்மையில் வரலாறு தெரியாது அறிக்கை விடுபவர்களும் இந்த உண்மைகளைக் கொஞ்சமாவது கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதற்கே இப்பதிவு.

(1960 களில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசு பாடசாலைகளைத் தேசியமயமாக்கியபோதும் தமிழரசுக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சயுடனும், கிறிஸ்தவ மத பீடங்களுடனும் இணைந்து அதை எதிர்த்த ‘கீர்த்திமிக்க’ வரலாறும் அதற்கு உண்டு. யார் கண்டது, சி.டபிள்யு.டபிள்யு.கன்னங்கார இலவசக் கல்வியை அறிமுகம் செய்தபோது தமிழரசுக் கட்சி இருந்திருந்தால் அதையும் அவர்கள் எதிர்திருக்கக்கூடும். அவ்வளவு தூரம் அவர்களுக்கு கல்வி மீது ;பற்றுதல்’. இல்லாவிட்டால் மாணவர்கள் கல்வி கற்பதற்காக அரும்பாடுபட்டு உருவாக்கிய யாழ் பல்கலைக்கழகத்தை தமது சொந்த தேவைகளுக்காக அரசியல் சதுரங்க மேடையாக்குவார்களா?)

http://namathu.blogspot.com/2021/01/blog-post_70.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சிங்கள எஜமானவிசுவாச.. புலி வாந்தி ஒட்டுக்குழு பார்வையில் அமைந்த வரலாறு.

உண்மையில்.. பரமேஸ்வராக் கல்லூரியில் இருந்து வரலாறு தொடங்குது. எவனோ சொந்த நிலத்தைக் கொடுத்த அமைத்த கல்விக் கழகத்தை சொறீமா வந்து திறந்ததும்...  ஏதோ சொறீலங்கா தான் தமிழருக்காக திறந்த கதை.

விஜிதரன்.. செல்வி.. திணரகம.. தில்லை.. இந்த நாலு பேரை வைச்சு ஒரு வரலாறு எழுதினம்.. சிலர் காலம் காலமாக. ஆனால்.. எண்ணிலடங்காத யாழ் பல்கலைக்கழக மாணவர்களும்.. மக்களும் செய்த தியாகம்.. வரலாறாகத் தெரியவில்லை.

விஜிதரன் ஈபிஆர் எல் எவ் இல் இருந்து கொண்டு.. செய்த பாசிச செயற்பாடுகள் எல்லாம்.. சொந்த சகோதர தமிழ் மாணவர்களைக் காட்டிக்கொடுப்பதாகவே இருந்தது. விஜிதரன் என்ற தனி ஒருவரின் சொந்த நடத்தை இனத்துரோகமானதால்.. தண்டிக்கப்பட்டிருக்கலாம். அதேபோல் செல்வி... !

ஆனால் அப்பாவி யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் தமிழ் மக்களும் இன அழிப்பு நோக்கில் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டமை..  ஒரு சில தனிநபர் செயற்பாடுகள் சார்ந்த இழப்புக்களின் மீது சமப்படுத்திச் செல்ல முடியாதவை.

Link to comment
Share on other sites

இக்கட்டுரை பல உண்மைகளை கூறியுள்ளது. யாழ்ப்பாண நகரை அழகான நவீன நகரமாக கட்டியெழுப்பியவர் அன்று மேயராக இருந்த திரு. அல்பிரட் துரையப்பா. அன்று அவர் யாழ் ஆஸ்பத்திரி வீதியை இரண்டு வழி பாதையாக பிரிப்பதற்காக வீதி நடுவில் தார்பீப்பாக்களை வைத்த போது " பீப்பா மேயர்" என்று தமிழரசு கட்சியினர்  கிண்டல் பண்ணியதாக எனது தந்தையார் மூலம் அறிந்தேன்.

அல்பிரட் துரையப்பா உயிருடன் இருந்தால் யாழ்ப்பாண தொகுதியில் வெல்வது கடினம் என்பதாலேயே அவர் மீது பல  அவதூறுகள் பரப்ப்பட்டு இளைஞர்களை தூண்டிவிட்டு அவர் கொலை செய்விக்கப்பட்டார். அவரது கொலை ஒரு எம்.பி பதவிக்காக நடந்த கொலை.

அவருக்கு பின்னர்  இன்றுவரை யாழ்பாணத்திற்கு சிறந்த மேயர் கிடைக்கவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்காக நீலிக்கண்ணீர் வடிப்பவர்களும்

கட்டுரைக்கு நன்றி.. 

ஆனால் இதில் இப்பொழுது எதற்கு? யார் நீலீக்கண்ணீர் வடிக்கிறார்கள்.? 

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்தபின்புதானே பொதுவான ஒரு தூபி கட்டவேண்டும், யாழ்ப்பாண பல்கலைகழக வரலாறு என நிறைய சொல்கிறார்கள்.அதுவரை எல்லோரும் தங்கள்தங்கள் வேலையை பார்த்துக்கொண்டு தானே இருந்தார்கள்!!

அவர்களை எந்த வகைக்குள் சேர்ப்பது.. போலித்தேசியவாதிகளுக்குள் அவர்களும் இல்லையா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

அருமையான கேள்வி,

ஆம், இதுவரை இவர்கள் எங்கிருந்தார்கள்? மாணவர்கள எழுச்சி இவர்களின் கண்களை உருத்துவதேன்? இதுவரையில் அரைபோதையிலிருந்துவிட்டு இப்போது வெகுண்டெழுந்து வந்து தேசியத்தை இகழ்வதும், புலிகளின் கொலைகள் என்று அழுவதும் ஏன்?

ராஜிணியைக் கொன்றது ஈ பி ஆர் எல் எப் குழுவினர்தான் என்று நன்கு தெரிந்தும் இன்றுவரை புலிகள் மேல் பழிபோடும் கைங்கரியம் ஏன்? 

முடிந்தால் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி பற்றிப் பேசுங்கள். முடியவில்லையா, மூடிக்கொண்டு இருங்கள். மாட்டைக் கொண்டுவந்து மரத்தில் கட்டிவிட்டு மரத்தைப் பற்றிப் பேசுவதென்பது இதைத்தான். 

இவர்களைப்பொறுத்தவரையில் உண்மையான பிரச்சினை நினைவுத்தூபி இடிக்கப்பட்டதல்ல, மாறாக பல்கலைக்கழகத்திற்குள் தமிழ்த்தேசியம் இருப்பதென்பதுதான். சிங்களப் பேரினவாதிகளுக்கு சாமரம் வீசுவதை போகிறபோக்கில் செய்துவிட்டுப் போவதும் இவர்களின் சாமர்த்தியம்.

இடதுசாரிப் பரதேசிகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

கட்டுரைக்கு நன்றி.. 

ஆனால் இதில் இப்பொழுது எதற்கு? யார் நீலீக்கண்ணீர் வடிக்கிறார்கள்.? 

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்தபின்புதானே பொதுவான ஒரு தூபி கட்டவேண்டும், யாழ்ப்பாண பல்கலைகழக வரலாறு என நிறைய சொல்கிறார்கள்.அதுவரை எல்லோரும் தங்கள்தங்கள் வேலையை பார்த்துக்கொண்டு தானே இருந்தார்கள்!!

அவர்களை எந்த வகைக்குள் சேர்ப்பது.. போலித்தேசியவாதிகளுக்குள் அவர்களும் இல்லையா? 

யாழ் பல்கலைகழகம் வருவதை எதிர்த்த தமிழ் தேசியவாதிகளின் வரலாற்றையும் தெரிந்துகொள்வது நல்லதுதானே. இவ்வளவு எதிர்ப்பு பல்கலைக்கழகம் அமைப்பதற்கு எதிராக இருந்தது இக்கட்டுரையைப் படிக்கும்வரை தெரியாது!

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைப்பதையும் தமது அரசியல் தேவைகளுக்காகத்தான் கட்சிகள் பாவிக்கின்றன. பலகலைக்கழக மாணவ சமூகம் அரசியல் கட்சிசாராது எமது இனத்தின் பேரழிவின் சாட்சியாக நினைவுத்தூபியைக் கட்டவேண்டும்.

4 minutes ago, ரஞ்சித் said:

இடதுசாரிப் பரதேசிகள். 

இந்தப் பரதேசிகளின் வற்புறுத்தலால்தான் யாழ் பல்கலைக்கழகம் வந்தது!

Quote

இந்த நிலைமையில்தான் 1970 இல் சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையில் அமைந்த அரசாங்கத்தில் இணைந்த இடதுசாரிக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சியினதும், லங்கா சமசமாஜக் கட்சியினதும் வற்புறுத்தலாலும், அரசில் இணைந்திருந்த அமைச்சர் செல்லையா குமாரசூரியர், யாழ் மாநகர முதல்வர் அல்பிரட் துரையப்பா போன்றோரினதும் மற்றும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினதும் முயற்சிகளினாலும் அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக வளாகம் ஒன்றை அமைக்க முன்வந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடதுசாரிப் பரதேசிகள் தமது எஜமானர்களிடம் இரைஞ்சிப் பெற்றுக்கொண்ட பல்கலைக் கழகத்தில் தமிழ்த் தேசியம் புகுந்ததை ஏற்கமுடியாமலிருக்கிறார்களா? அதுசரி கடந்த 50 வருடங்களாக இந்த இடதுசாரிப் பரதேசிகள் எங்கிருந்தார்கள்? மக்கள் அழிக்கப்பட்டபோது இவர்களின் ஒரு குரல் கூடக் கேட்கவில்லையே? இப்போதுமட்டும் தமிழ்த்தேசியம் புகுந்துவிட்டதென்று அலறுவது ஏன்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரஞ்சித் said:

இடதுசாரிகள் எப்போதும் இருக்கிறார்கள். அவர்களின் மக்களுக்காகக் குரல்கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.  நீங்கள்தான் அறியாமல் இருக்கின்றீர்கள்.

Link to comment
Share on other sites

57 minutes ago, ரஞ்சித் said:

இடதுசாரிப் பரதேசிகள் தமது எஜமானர்களிடம் இரைஞ்சிப் பெற்றுக்கொண்ட பல்கலைக் கழகத்தில் தமிழ்த் தேசியம் புகுந்ததை ஏற்கமுடியாமலிருக்கிறார்களா? அதுசரி கடந்த 50 வருடங்களாக இந்த இடதுசாரிப் பரதேசிகள் எங்கிருந்தார்கள்? மக்கள் அழிக்கப்பட்டபோது இவர்களின் ஒரு குரல் கூடக் கேட்கவில்லையே? இப்போதுமட்டும் தமிழ்த்தேசியம் புகுந்துவிட்டதென்று அலறுவது ஏன்? 

ரஞ்சித், மக்கள் அழிக்கப்பட்ட போது நீங்கள் குரல் கொடுத்தது எனக்கு கேட்கவில்லை என்பதற்காக நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்று நான் கூற முடியாதல்லவா? 

வரலாற்று விடயங்களை உள்ளதை உள்ளபடி அறிவதில்  எந்த தவறும் இல்லை. ராஜனி கொலை ஈபிஆர்எவ் செய்தது என்றால் புலிகளின் ஆரம்ப காலத்தில் புலிகளுக்கு முக்கிய உதவிகளை செய்த, ( காயப்பட்ட புலிகளை தனது  சகோதரி வீட்டில் வைத்தியம் பார்தது பராமரித்த) ராஜனிக்கு ஒரு நினைவு வணக்கம் புலிகள் செய்யாது ஏன்?  அவரது கொலை செய்திகளை இருட்டிப்பு செய்ததேன்? 

Link to comment
Share on other sites

2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

கட்டுரைக்கு நன்றி.. 

ஆனால் இதில் இப்பொழுது எதற்கு? யார் நீலீக்கண்ணீர் வடிக்கிறார்கள்.? 

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்தபின்புதானே பொதுவான ஒரு தூபி கட்டவேண்டும், யாழ்ப்பாண பல்கலைகழக வரலாறு என நிறைய சொல்கிறார்கள்.அதுவரை எல்லோரும் தங்கள்தங்கள் வேலையை பார்த்துக்கொண்டு தானே இருந்தார்கள்!!

அவர்களை எந்த வகைக்குள் சேர்ப்பது.. போலித்தேசியவாதிகளுக்குள் அவர்களும் இல்லையா? 

பிரபா, நீங்கள் கூறியபடி இந்த கட்டுரையாளர்களுக்குக்களும் ஒரு அரசியல் உள் நோக்கம் உள்ளது தான். எனினும் இந்த போலிகளின் முரண்பாட்டு விவாதங்களில் பழைய வரலாறு வெளிக்கொணரப் படுவது நல்ல விடயம் என்று நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைப்பதையும் தமது அரசியல் தேவைகளுக்காகத்தான் கட்சிகள் பாவிக்கின்றன. பலகலைக்கழக மாணவ சமூகம் அரசியல் கட்சிசாராது எமது இனத்தின் பேரழிவின் சாட்சியாக நினைவுத்தூபியைக் கட்டவேண்டும்.

உண்மை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

யாழ் பல்கலைகழகம் வருவதை எதிர்த்த தமிழ் தேசியவாதிகளின் வரலாற்றையும் தெரிந்துகொள்வது நல்லதுதானே. இவ்வளவு எதிர்ப்பு பல்கலைக்கழகம் அமைப்பதற்கு எதிராக இருந்தது இக்கட்டுரையைப் படிக்கும்வரை தெரியாது!

2 hours ago, tulpen said:

பிரபா, நீங்கள் கூறியபடி இந்த கட்டுரையாளர்களுக்குக்களும் ஒரு அரசியல் உள் நோக்கம் உள்ளது தான். எனினும் இந்த போலிகளின் முரண்பாட்டு விவாதங்களில் பழைய வரலாறு வெளிக்கொணரப் படுவது நல்ல விடயம் என்று நினைக்கிறேன். 

உண்மைதான்.. வரலாற்று விடயங்கள் வெளிவருவது நல்லதொரு விடயம்தான் மறுக்கவில்லை..

ஆனால் இந்தப்போலிகள் இதனை இந்த சமயத்தில் எழுதி எதை சாதிக்கப்போகிறார்கள்..? ஏற்கனவே ஒற்றுமையின்றி இருக்கும் இனத்தை மேலும் பிளவுபடவைத்து தங்களது வாழ்க்கையை மட்டும் வளப்படுத்திக்கொண்டு போகப்போகிறார்கள்.. அவ்வளவுதான்..

4 hours ago, கிருபன் said:

இடதுசாரிகள் எப்போதும் இருக்கிறார்கள். அவர்களின் மக்களுக்காகக் குரல்கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்

ஆனால் இடதுசாரிகளின் குரல் மக்களை அதிகளவில் சென்றடையவில்லை என்றும் அதற்கு மக்களின் மனதில் இன ஒடுக்குமுறை சம்பவங்கள் ஆழமாக பதிந்தமையாலும், இந்த இடதுசாரிகளில் பெரும்பலானவர்கள் மேல்தட்டு வர்க்கத்திலிருந்தவர்கள் என்பதால், இடதுசாரிக்கொள்கைகளை பின்பற்றினாலும் அவர்கள் தங்களது வர்க்கவேறுபாடுகளிலிருந்து கீழே இறங்கிவர முடியாதமையாலும், மக்களை அதிகம் சென்றடையவில்லை என கட்டுரை ஒன்றில் வாசித்த ஞாபகம்.. 

Link to comment
Share on other sites

இந்தப் பதிவின் மூலத்திற்கு வந்த ஒரு கருத்துப்பற்றி இங்கு தெரியப்படுத்தவில்லை, பகிடிவதையைப் புலிகள் விரும்பவில்லை என்ற விடயமும் உள்ளது. ஆனால் அவர்களில் உள்ள குறைகளையே பெரிதாக விமர்ச்சிக்க பதிவு முற்படுகிறது.  சிறீதரன், Hoole இருவருடனும் நான் வேலை செய்துள்ளேன். இருவரும், மற்றும் ராஜினி எல்லோரும் புலிக்கு எதிராக மட்டுமே குரல் கொடுக்க அனுப்பப்பட்டவர்கள்.
நான் வல்வெட்டிதுறையில் IPKF செய்த அநியாயங்களை சொன்ன போது, அவர்கள் எதுவுமே செய்ய வில்லை.

கருத்து:-

Shanthy Rahulotchanan சொன்னது…

இறந்த இலட்சக் கணக்கான கணக்கான மக்களைப் பற்றிக் கதைக்காத இந்த கூட்டம் யார்? நினைவுதூபி உடைத்தது சரி என்கிறார்களா?

சிறீதரன், Hoole இருவருடனும் நான் வேலை செய்துள்ளேன். இருவரும், மற்றும் ராஜினி எல்லோரும் புலிக்கு எதிராக மட்டுமே குரல் கொடுக்க அனுப்பப்பட்டவர்கள்.

நான் வல்வெட்டிதுறையில் IPKF செய்த அநியாயங்களை சொன்ன போது, அவர்கள் எதுவுமே செய்ய வில்லை.

நானும் விஜிதரனுடன் ராக்கிங் commiteeஇல் இருந்தேன். நானும் இன்னுமொரு மாணவியுமாக சம்பந்தப்பட்ட புதுமுக மாணவியைச் சந்தித்தோம். நடந்தது சிறிய விடயம். தலையிட்டது புலி, அதைவிட விடயங்களை பெரிதாக்கினது விஜிதரன், இன்னுமொரு இயக்கம்.

நாங்கள் சுமுகமாக தீர்க்க முற்பட்ட போது, விஜீதரன் அதை பெரிதாக ஆக்க முற்பட்டார். இதை நான் கண் கூடாகக் கண்டேன். அதுமட்டுமல்ல அவருடன் English medium Economics lecturesஉம் சிறியதொரு வகுப்பாக படித்துள்ளேன். அவரது நோக்கம் எனக்கு நன்றாகத் தெரியும்.

நான் விஜிதரன் கொல்லப்பட்டது சரி எனச் சொல்லவில்லை. உயிரைக் கொல்ல எவருக்கும் உரிமை இல்லை.

இப்போது எமக்கு தேவை உரிமை, நீதி!. எந்த புளிச்சகஞ்சியும் அல்ல.

15 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 12:44
Link to comment
Share on other sites

Quote

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உருவான உண்மை வரலாறும் இன்று நடப்பதும்

வ்ரலாறு ஒருபோதும் நேர்கோட்டில் பயணிப்பதில்லை. ஒவ்வருவரும் தமது இருப்புக்கு ஏற்ற மாதிரி அதை சொல்லுகின்றார்கள், மஹாவம்சம் மாதிரி. கடும் தேசியவாதிகளும் சரி, போலி  இடதுசாரிகளும் சரி, ஆகிக்கிரமிப்பாளருக்கு முண்டு குடுப்பவர்களும் சரி அதனை தமது இருப்புக்கு பயன்படுத்துவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

உண்மைதான்.. வரலாற்று விடயங்கள் வெளிவருவது நல்லதொரு விடயம்தான் மறுக்கவில்லை..

ஆனால் இந்தப்போலிகள் இதனை இந்த சமயத்தில் எழுதி எதை சாதிக்கப்போகிறார்கள்..? ஏற்கனவே ஒற்றுமையின்றி இருக்கும் இனத்தை மேலும் பிளவுபடவைத்து தங்களது வாழ்க்கையை மட்டும் வளப்படுத்திக்கொண்டு போகப்போகிறார்கள்.. அவ்வளவுதான்..

ஆனால் இடதுசாரிகளின் குரல் மக்களை அதிகளவில் சென்றடையவில்லை என்றும் அதற்கு மக்களின் மனதில் இன ஒடுக்குமுறை சம்பவங்கள் ஆழமாக பதிந்தமையாலும், இந்த இடதுசாரிகளில் பெரும்பலானவர்கள் மேல்தட்டு வர்க்கத்திலிருந்தவர்கள் என்பதால், இடதுசாரிக்கொள்கைகளை பின்பற்றினாலும் அவர்கள் தங்களது வர்க்கவேறுபாடுகளிலிருந்து கீழே இறங்கிவர முடியாதமையாலும், மக்களை அதிகம் சென்றடையவில்லை என கட்டுரை ஒன்றில் வாசித்த ஞாபகம்.. 

பிரபா, நீங்கள் வாசித்த கட்டுரையை எழுதியவர்கள் குறிப்பிடாத விடயங்கள் சில இருக்கின்றன:

புலிகளால் அழிக்கப் பட்ட இயக்கங்களில் இடதுசாரிவாதம் இருந்தது. புலிகளிடம் தேசியவாதம் மட்டுமே இருந்தது. அந்த இயக்கங்களை ஸ்தீரி லோலன்களாக மட்டுமே சுட்டிக் காட்டும் வரலாறு மட்டுமே புலிகளின் சார்பானவர்களால் இன்று எழுதப் படுகின்றன.

நான் நினைக்கிறேன் 1984/85 வரை யாழில் மேதின ஊர்வலம் நடத்தி வந்த இடது சாரிகளை "சிவப்புக் கொடியை இனி மடிச்சு வைச்சு விட்டு, புலிக் கொடியைத் தூக்கிப் பிடியுங்கோ!" என்று புலிகள் சொன்னதோடு வடக்கில் இடது சாரிகள் மௌனமாகி விட்டனர். 

எனவே, "இடது சாரிப் பரதேசிகள்" என்ன செய்தார்கள் என்று கேட்போர், குறைந்த பட்சம் முதலில் நூலகம் சென்று தேடிப் பார்த்து விட்டு அந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கட்டுரை...பல விடயங்களை அறியக் கூடியதாய் இருந்தது ...இணைப்பிற்கு நன்றி கிருபன் 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அரசியல் என்பது என்ன, அதிலிருப்பவர்கள் யார், அக்கட்சிகள் என்பது என்ன என்பதுபற்றிய முதலாவது கேள்விப்படுதல்கள் வந்தது தமிழர் விடுதலைக் கூட்டணியும், மக்களுக்காகப் போராடியவர்கள் என்று நினைவிலிருப்பது புலிகளும்தான். ஏனையவர்களும் இருந்தார்கள், ஆனால் என்னை அவர்கள் பாதிக்கவில்லை. ஆனால், இவர்களின் பெயர்களுக்குள் நான் இதுவரைகூட கண்டுபிடிக்க முடியாமல் திணறுவது இடதுசாரிகளைத்தான். இவர்கள் 70 களில் இருந்து தமிழ் மக்களுடன் இருக்கவுமில்லை, அவர்களின் அவலங்களுக்காகக் குரல் கொடுக்கவுமில்லை. 84 வரை மேதின ஊர்வலம் நடத்தினோம், சிவப்பை இறக்கு, புலியை ஏற்று என்று சொன்னவுடன் எமது அரசியலை மூட்டை கட்டி வைத்துவிட்டு கொழும்பிற்கு ரயில் ஏறினோம் என்பதுடன் அவர்களின் அரசியலும் முடிந்துவிட்டது. சிங்கள இனவாதத்தின் பிதாமகரான எஸ் டபிள்யூ ஆர் டி பண்டாரநாயக்காவினதும் அவரது அன்பு மனைவி சிறிமாவினதும் கொள்கைதான் உண்மையான இடதுசாரி என்று அவர்களின் பின்னால் சென்ற தமிழ் இடதுசாரிகளால் தமிழரை ஆக்கிரமித்து அழிப்பதே தாம் ஆதரிக்கு சிங்கள இடதுசாரித்தனம் என்பதற்குள் மறைந்திருக்கும் பெளத்த பேரினவாதம் தான் என்பதை அடையாளம் காண முடியாமற் போனது ஆச்சரியமில்லை. ஆக, புலிகள் தமது கொடியினைப் பிடியுங்கள் என்று சொன்னார்களாம், ஆகவே இவை எதுவும் வேண்டாம் என்று 50 வருடங்கள் அஞ்ஞாதவாசம் பூண்டார்களாம். இப்போது சிறிமா கட்டின பல்கலையில் தமிழ்த்தேசியவாதம் நுழைந்ததுபற்றி இந்த "தமிழ் பேசும் - சிறிமா அடிவருடி இடதுசாரிப் பரதேசிகள்" அழுகிறார்கள். இடதுசாரிகள் மக்களுடன் இருந்தால்த்தானே மக்களின் அவலங்களைப் புரிந்துகொள்வதற்கு? லெனினும், மார்க்ஸும், மாவோவும் எழுதியவை, கூறியவை என்பவற்றை மேற்கோள் காட்டுவதுடன் இவர்களது சமூகம் மீதான அக்கறை நின்றுவிடுகிறது. தாம் பேசுவது என்னவென்று அவர்களுக்கும் புரிவதில்லை, கேட்பவர்களுக்கும் புரிந்ததில்லை. மாயாஜால வார்த்தைகளைப் பிரயோகித்து, பொருள்படாதா வாக்கியங்களைக் கோர்த்து, உணர்வில்லாமல் பேசுவதுடன் இவர்களின் சமூகம் மீதான அக்கறையும் முடிந்துவிடுகிறது.

இந்தப் பரதேசிகள் பற்றி எழுதும்போது ஏனோ கம்பன்கழக தலைவரும் மனதில் வந்துபோகிறார். தமிழர்கள் கொல்லப்படும்போது ராமரைப்பற்றி கனவுகண்டு இன்பம் அனுபவித்து, 2009 இன்பின்னர் அரசியல் பேசக் கிளம்பியவர். ஆனால், அவர் இடதுசாரியல்ல என்பதும் அவர் தீவிர வலதுசாரியென்பதும் வேறு விடயம்.

ஆனால் எனக்குத் தெரிந்த உண்மையான இடதுசாரிகள் இருக்கிறார்கள். 1971 இல் சிங்கள உழைக்கும் வர்க்கத்திற்காகவும்,  பின்னர் 1987 இலும் தமிழர்களுக்கு உரிமைகள் எதுவுமே கிடைத்துவிடக் கூடாதென்றும், தமிழர்களுக்காக இலங்கை வந்திருக்கும் இந்திய ராணுவம் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என்று கோரி குறைந்தது 60,000 சிங்கள இளைஞர்கள் கொல்லப்படக் காரணமான இடதுசாரிகள். 
இவர்களின் ஒரு பிரிவு வடக்குக் கிழக்கை பிரித்தது முதல், 2002 பேச்சுவார்த்தைகளை முன்னின்று எதிர்த்து, பின்னர் மகிந்த அரசுடன் இணைந்த மக்கள் விடுதலை முன்னணியின் விமல் வீரவன்சவும், லங்கா சம சமாஜக் கட்சியின் வாசுதேவ நாணயக்காரவும் இடதுசாரிகள் என்கிற பெயரில் இன்றுவரை செய்துவருவது சுத்த சிங்கள பெளத்த பேரினவாதம் என்பதும் எனக்குத் தெரியும்.

இதைவிடவும் இடதுசாரிகள் என்றால் எனக்கு நினைவிற்கு வருவது இந்தியக் கம்மியூனிசக் கட்சியும், அதன் தமிழகத்து வால்களும். மத்தியில் காங்கிரஸ் கொலையாளிகளுக்கு முற்றான ஆதரவினை இன்றுவரை வழங்கி, எமது போராட்டத்தினை பயங்கரவாதம் என்று சித்தரித்து, ஒவ்வொரு ஆட்சியிலும் ஏதோவொரு கட்சியில் ஒட்டுண்ணிகள் போல்த் தொங்கிக்கொண்டிருப்பவர்கள்.

இவர்களைக் கடந்த இடதுசாரிகள் என்றால் சீனாவும் ரஷ்ஷியாவும். எமக்கெதிரான போருக்கு ராணுவ பண உதவியினைச் செய்த புண்ணியவான்கள்.

இப்படியிருக்கிறது இந்த இடதுசாரிப் பரதேசிகளின் இலட்சணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஆனால் இடதுசாரிகளின் குரல் மக்களை அதிகளவில் சென்றடையவில்லை என்றும் அதற்கு மக்களின் மனதில் இன ஒடுக்குமுறை சம்பவங்கள் ஆழமாக பதிந்தமையாலும், இந்த இடதுசாரிகளில் பெரும்பலானவர்கள் மேல்தட்டு வர்க்கத்திலிருந்தவர்கள் என்பதால், இடதுசாரிக்கொள்கைகளை பின்பற்றினாலும் அவர்கள் தங்களது வர்க்கவேறுபாடுகளிலிருந்து கீழே இறங்கிவர முடியாதமையாலும், மக்களை அதிகம் சென்றடையவில்லை என கட்டுரை ஒன்றில் வாசித்த ஞாபகம்.. 

இதுதான் உண்மை.

புதிதாக நடுநிலைமை வேஷம் பூண்டிருக்கும் சிலருக்கு, இந்த விமர்சனங்கள் எல்லாமே புலிச்சார்பாகத்தான் தெரியும் என்பது வியப்பில்லை. 

இலங்கையில் தமிழாக இருந்தாலென்ன சிங்களமாக இருந்தாலென்ன இடதுசாரிகள் என்று தம்மை அழைப்பவர்கள் எல்லாமே மேற்தட்டு வர்க்கத்தினர். பதவிகளுக்காகவும், பணத்திற்காகவும் சோரம் போனவர்கள். வர்க்க வேறுபாட்டினை தொடர்ந்தும் கடைப்பிடிக்கும் ஆனால் வர்க்க வேறுபாட்டிற்கெதிராக  மேடையில் பேசும் வேடதாரிகள்.

வேலைக்கள்ளிக்குப் பிள்ளைச் சாட்டுப்போல புலிகள் போராடத் தொடங்கினார்களாம் அதனால் தாம் கடையை மூடிவிட்டார்களாம்!

ஆனால், இந்த இடதுசாரிக் குப்பையில் கிடந்த மாணிக்கம் போல ஒருவர் இருக்கிறார். ஆனால் அவர் தமிழரில்லை, அவரது பெயர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன. உழைக்கின்ற, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஓயாமல் குரல் கொடுக்கும் தூய இடதுசாரி !!! 

இது உங்களுக்கல்ல ..........................

"இடதுசாரிப் பரதேசிகள்" தமிழருக்கு என்ன செய்தார்கள் என்று பார்ப்பதற்கு நான் நூலகம் போனாலும் எந்த ஆதாரமும் கிடைக்கப்போவதில்லை, வேண்டுமானால் நூதணசாலைக்குச் சென்று பார்க்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொறுத்தவரை இக்கட்டுரையின் உண்மையான நோக்கம் தமிழினத்தின் துரோகிகளில் ஒருவரான முன்னாள் யாழ்ப்பாண மேயர் அல்பேர்ட் துரையப்பாவிற்கு வெள்ளையடிப்பதும், தமிழ் இடதுசாரிகள் சமாதிக்குள் இருந்தாலும் இன்னும் இறுதிமூச்சினை விடவில்லை என்று காட்டுவதும் தான். இதை விட இக்கட்டுரையில் சமகாலத்திற்குச் சம்பந்தமான விடயங்கள் இருப்பதாகத் தெரியவில்லை, புலிவாந்தியைத் தவிர. ஆனால் ஒன்று, எப்படா புலிவாந்தியொன்றுவரும், அள்ளிப் பருக என்று காத்திருப்பவர்களுக்கு இது ஒரு பஞ்சாமிர்தம் என்பதில் ஐய்யமில்லை !

Link to comment
Share on other sites

19 minutes ago, ரஞ்சித் said:

ரஞ்சித்,

1970 களில் இலங்கையில் உள்ள நகரங்களில் மிக தூய்மையான நவீன நகரமாக யாழ்ப்பாணத்தை  கட்டி எழுப்பியவர் திரு அல்பிரட் துரையப்பா தான். நகரை தனது வீடு போல் பராமரித்தவர். அவர் ஒரு சாதாரண அரசியல் வாதி தான். மறுக்கவில்லை. ஆனால் தமிழரசு க்கட்சி போன்று, தமிழர் பிரச்சனையை  வைத்து மக்களை ஆத்திரமூட்டி போலி தேசிய அரசியல் செய்துதமிழ் தேசிய பிரச்சனையை  வன்முறைக்குள் தள்ளி, தமிழர்களை அவலத்துக்குள் அவர் தள்ளவில்லை.

அரசாங்கத்துகுள் தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு தன்னால் இயன்ற நன்மைகளை செய்தார்  திரு துரையப்பா.  யாழ் நகர மத்தியில் அழகாக காட்சியளிக்கும் நவீன சந்தை (New Market) அவர் மேயராக இருந்த போதே கட்டப்பட்டது.  

அவர் மீது இல்லாத பொல்லாத  அவதூறுகளை அள்ளிக் கொட்டி அவரை கொலை செய்வித்த‍து தமிழரசுக்கட்சி. ஏற்கனவே தமிழர்களுக்கு  இருந்த‍தையும் அழித்து இலங்கையில் தமிழ் தேசியத்தை அவலத்தில் தள்ளியதே அளவுக்ககு அதிகமாக தேசியவாதம் பேசியவர்கள் தான்

 ஆனால் யாழ்பாண நகர், என்றும் திரு துரையப்பா அவர்களை  நன்றியுடன் நினைவில் வைத்திருக்கும். நகரில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் துரையப்பா விளையாட்டரங்கம் அதற்கு சாட்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

1982 இலிருந்து 1988 வரை நான் பத்திரிசியார் கல்லூரியில் கல்விகற்ற காலத்தில் பஸ்ஸில் பயணிப்பது வழக்கம். கச்சேரியடியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் பஸ் பிரதானவீதியினூடாகச் சென்று சுப்பிரமணியம் பூங்கா, பழைய நூலகம், பழைய பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் , ஆஸ்ப்பத்திரிவீதியென்று யாழ் நகர பஸ் நிலையத்தினை வந்தடையும். இவ்வாறு நான் பயணிக்கும் ஒவ்வொருநாளும் பழைய யாழ்நகரசபை கட்டிடத்தின் முன்னால் வீதி நூலகம் நோக்கித் திரும்பும் மூலையில்  இருக்கும் துரையப்பா விளையாட்டரங்கை மிகுந்த பயத்துடன் பார்ப்பதே வழக்கம். ஏனென்றால், அந்த விளையாட்டரங்கில் எப்போதுமே ராணுவமோ அல்லது பொலிஸோதான் நிலைகொண்டிருக்கும். நான் அக்காலத்தில் ஒருபோதுமே தமிழர்கள் அவ்வரங்கில் விளையாட்டில் ஈடுபட்டதைப் பார்த்ததில்லை. அந்த முடக்கில் திரும்பும் ஒவ்வொருகணமும் எப்போது எம்மை நோக்கிச் சுடுவார்கள், எப்போது கொல்லப்படுவோம் என்கிற பயத்துடனேயே அந்த ஆக்கிரமிப்பின் சின்னத்தைக் கடந்து சென்றோம்.

காலம் செல்லச் செல்ல, துரையப்பா அரங்கில் நிலைகொண்டிருந்த ராணுவம் தாக்குதல்களில் ஈடுபடத் தொடங்க நகரசபை, பூங்கா என்று அனைத்துமே தாக்குதலுக்கு முகம்கொடுத்து அழியத் தொடங்க நாம் நாலாம் குறுக்குத்தெரு, மூன்றாம் குறுக்குத்தெரு என்று எமது வழமையான பாதையினை மாற்றி ராணுவத்திற்கு அஞ்சி அஞ்சி பாடசாலை சென்றுவந்தோம்.  எனக்கும், அன்று என்னைப்போல பாடசாலை சென்று வந்த அனைவருக்கும் துரையப்பா விளையாட்டரங்கு ஒரு ஆக்கிரமிப்பின் சின்னம், யாழ்ப்பாணம் கோட்டைக்கு நிகராக.

ஆனால், என்ன ஆச்சரியம் பார்த்தீர்களா? எமக்கு ஆக்கிரமிப்பின் சின்னமாக இருந்த துரையப்பாவின் விளையாட்டரங்கு உங்களுக்கு யாழ்நகரின் பெருமையின் சின்னமாகத் தெரிகிறது. 

சரி, அதை விடுங்கள். நீங்கள் அடிக்கடி உபயோகிக்கும் "போலித் தேசியவாதிகள்" எனும் சொல்பற்றிய விளக்கத்திற்காக இதனைக் கேட்கிறேன்.

தமிழரசுக் கட்சியினர் போலித்தேசியவாதிகள், கூட்டணியினர் போலித்தேசியவாதிகள், கூட்டமைப்பினர் போலித்தேசியவாதிகள், விக்னேஸ்வரன், கஜன் ஆகியோர் போலித்தேசியவாதிகள், புலிகள் பயங்கரவாதிகள்...என்றால் அந்த "உண்மையான தேசியவாதிகள்" என்பது உங்களைப்பொறுத்தவரையில் யார்? அல்லது அப்படியொருவருமே இல்லையா? அல்லது, அது நீங்கள்தானா? உங்களுடன் வாதிடுவதற்காகக் கேட்கவில்லை, தெளிவிற்காகக் கேட்கிறேன். 

Link to comment
Share on other sites

2 hours ago, ரஞ்சித் said:

வெள்ளிடை மலையாக தெரியும் விடயத்தை என்னிடம் கேள்வியாக கேட்டுள்ளீர்கள்.

இலங்கை தீவில் இருந்த தமிழ் தேசியத்தை தமது செயற்பாடுகளால் அழித்தொழித்த அனைவரையும் இதை விட வேறு என்ன வார்த்தையில் கூறுவது?

இருந்த தேசியத்தை தமது அறிவுபூர்வமான அரசியல் செயற்பாடுகளால் உறுதிபடுத்தி வளர்த்தெடுக்க  இருந்த எல்லா சந்தர்ப்பத்தையும் அத்தனை தலைமைகளும் உதறி தள்ளியது தமிழ் தேசியத்தை மேலும் அவலத்தில் மாட்டி இன்று அதன் இருப்பையே கேள்குகுறியாக மாற்றிய அனைவரும் போலி தேசிய வாதிகள் தான்.  தமிழ் தேசிய போராட்டத்தை பயங்கரவாத போராட்டமாக எதிரி பிரச்சாரம்  செய்ய  எதிரிக்கு செய்ய வேண்டிய எல்லா உதவிகளையும் விழுந்தடித்துக்கொண்டு  புலிகள் உட்பட எல்லா ஆயுத்ப்போராளிகளும்  முனைப்புடன்  செய்ததே வரலாறு. அதனால் பயன் பெற்றது தமிழ் தேசியத்தின் எதிரிகள் தான். அதானல் இவர்கள் எல்லோரும் போலிகளே.

பக்கம் பக்கமாக எழுதும் உங்களால் நான் திரியின் ஆரம்பத்தில்  கேட்ட ஒரு சிறிய ஒரு வரி கேள்விக்கு  one word answer  கூட தர முடியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரஞ்சித் said:

எனக்கு அரசியல் என்பது என்ன, அதிலிருப்பவர்கள் யார், அக்கட்சிகள் என்பது என்ன என்பதுபற்றிய முதலாவது கேள்விப்படுதல்கள் வந்தது தமிழர் விடுதலைக் கூட்டணியும், மக்களுக்காகப் போராடியவர்கள் என்று நினைவிலிருப்பது புலிகளும்தான். ஏனையவர்களும் இருந்தார்கள், ஆனால் என்னை அவர்கள் பாதிக்கவில்லை. ஆனால், இவர்களின் பெயர்களுக்குள் நான் இதுவரைகூட கண்டுபிடிக்க முடியாமல் திணறுவது இடதுசாரிகளைத்தான்

ரஞ்சித்,

இலங்கையில் இடதுசாரிகளின் அரசியல் பற்றிய வரலாற்றையும், அவர்களின் போராட்டங்கள் ஏற்படுத்திய சமூக மாற்றங்களையும் அறியாமல் உள்ளது உங்கள் இடதுசாரிகள் பற்றிய கருத்து. 

இலங்கை இடதுசாரிகளின் மோசமான வீழ்ச்சி 1970 களில் ஆரம்பித்த காலத்தில் இருந்துதான் நீங்கள் வரலாற்றைப் பார்க்கின்றீர்கள். இடதுசாரி இயக்கங்களின் வீழ்ச்சிக்குக் காரணம் அவர்கள் மக்களின் பிரச்சினைகளுக்கான வெகுஜனப் போராட்டங்களைக் கைவிட்டு பாராளுமன்றவாதத்தில் மூழ்கியதும், தேசியமுதலாளித்துவக் கட்சியாகிய சுதந்திரக்கட்சியுடன் நிபந்தனையற்ற முறையில் கூட்டுச்சேர்ந்து அதன் வாலாக இழுபட்டுச் சென்றதுமேயாகும்.

1970 களுக்கு முன்னால்  வடக்கில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சி தலைமைதாங்கி நடாத்திய தீண்டாமைக்கு எதிரான போராட்டம் காரணமாக, அக்கட்சி முற்போக்கு தமிழர்களினதும், தாழ்த்தப்பட்டவர்கள் என்று சாதியத்தைக் கட்டிக் காத்தவர்களால் சொல்லப்பட்ட மக்களின் முழுமையான ஆதரவைப் பெற்றிருந்தனர். தீண்டாமைக்கு எதிரான இடதுசாரிகளின் போராட்டம் நடந்திருக்காவிட்டால் தலைவர் பிரபாகரன் தனிநாட்டுக்குப் போராட ஒரு வெளி வந்திருக்காது.

மக்களின் மீது அக்கறையுள்ளவர்கள், சமூகத்தில் சமத்துவம் நிலைக்கவேண்டும் என்று உழைப்பவர்கள் எல்லோருக்குள்ளும் இடதுசாரிச் சிந்தனைதான் ஓடுகின்றது. ஆகவே உங்களுக்குள்ளும் ஒரு இடதுசாரி மறைந்திருக்கின்றான்☺️

5 hours ago, ரஞ்சித் said:

1971 இல் சிங்கள உழைக்கும் வர்க்கத்திற்காகவும்,  பின்னர் 1987 இலும் தமிழர்களுக்கு உரிமைகள் எதுவுமே கிடைத்துவிடக் கூடாதென்றும், தமிழர்களுக்காக இலங்கை வந்திருக்கும் இந்திய ராணுவம் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என்று கோரி குறைந்தது 60,000 சிங்கள இளைஞர்கள் கொல்லப்படக் காரணமான இடதுசாரிகள். 
இவர்களின் ஒரு பிரிவு வடக்குக் கிழக்கை பிரித்தது முதல், 2002 பேச்சுவார்த்தைகளை முன்னின்று எதிர்த்து, பின்னர் மகிந்த அரசுடன் இணைந்த மக்கள் விடுதலை முன்னணியின் விமல் வீரவன்சவும், லங்கா சம சமாஜக் கட்சியின் வாசுதேவ நாணயக்காரவும் இடதுசாரிகள் என்கிற பெயரில் இன்றுவரை செய்துவருவது சுத்த சிங்கள பெளத்த பேரினவாதம் என்பதும் எனக்குத் தெரியும்.

ஜேவிபி இடதுசாரிச் சித்தாந்தத்தில் ஆரம்பித்து பச்சை இனவாதிகளாக மாறி பெருமளவு சிங்கள இளைஞர்களின் அழிவுக்குக் காரணமானார்கள்.  இனவாதிகள் இடதுசாரிகள் இல்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/1/2021 at 19:40, tulpen said:

ரஞ்சித், மக்கள் அழிக்கப்பட்ட போது நீங்கள் குரல் கொடுத்தது எனக்கு கேட்கவில்லை என்பதற்காக நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்று நான் கூற முடியாதல்லவா? 

எனக்கு மட்டுமில்லை, ஈழத்தமிழரில் எவருக்கும் இவர்கள் கொடுத்த குரல் கேட்கவில்லை. 

Link to comment
Share on other sites

1 minute ago, ரஞ்சித் said:

எனக்கு மட்டுமில்லை, ஈழத்தமிழரில் எவருக்கும் இவர்கள் கொடுத்த குரல் கேட்கவில்லை. 

மன்னிக்கவும் ரஞ்சித் எனது கேள்வி இதுவல்ல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.