Jump to content

45,500 ஆண்டுகள் பழமையான ஓவியம் கண்டுபிடிப்பு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Maruthankerny said:

வாதங்களில் எனக்கு இப்போது இஷடம் பெரிதாக இல்லை 
நான் கடந்த காலங்களை இப்படி வீண் செய்து இருக்கிறேன் என்பதை 
நினைத்து இப்போ வெட்கப்படுகிறேன்.

உங்களின் கருத்தை எதிர்ப்பதோ மறுப்பதோ எனது எண்ணம் இல்லை 
எனது கருத்தை பகிர்வதே நோக்கம்.
நான் இந்த ஓவியம் பற்றியும் மனிதர்களின் கடந்த கால ஆய்வுகள் பற்றியும் மட்டுமே 
சிந்திக்கிறேன் இந்த காலப்பகுதியில் இப்படி ஓவியம் வரைய கூடிய அறிவு அளவில் மனிதர்கள் 
வாழ்ந்தார்கள் என்று இதற்கு முன்பு யாரும் எங்கும் கூறவில்லை. 

வேறு திரியில் என்ன பேசுகிறார்கள் 
யார் ஆமையில் பயணம் செய்கிறார்கள் என்பதுக்குள் நாம் மையம் கொள்ள தேவை இல்லை என்று எண்ணுகிறேன். நான் கூறிய கொலம்பஸ் உதாரணம் அமரிக்க வரலாறு பற்றியது. மனித குழுமம் 
கொலம்பஸில் தொங்கும்போது அதற்கு முந்திய அமரிக்க வாழ் மனிதர்களின் வரலாறு என்பது இருளாகவே 
இருக்கும் யார் அந்த இருளுக்குள்ளும் பயணிக்கிறார்கள் என்பதே உண்மைக்கு வலி சமைக்கும் 

நான் மகாபாரதத்தை நம்பவில்லை அதுக்கு போதுமான அளவு அறிவு எனக்கு இல்லாததும்  காரணமாக இருக்கலாம்  ஆனால் அது எழுதப்பட்ட காலம் அதுக்கு முந்திய காலம் எனும்போது வேத காலத்துக்கு முந்திய 
காலமாக அது பத்து ஆயிரம் ஆண்டு தாண்டுகிறது. அந்த புள்ளியில் இப்போது இவர்கள் முன்வைக்கும் முசுப்பேத்திய நாகரீகத்தை தொடக்கமாக கொள்வது என்பது கேள்வி குறியானதே. 

நான் வாசித்த அளவில் மனித நாகரீகம் பத்து ஆயிரம் வருடம் முன்னதாகவே இருக்கிறது 
அதை யாருக்கும் திணிக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் 
அதில் எனக்கு அக்கறை இல்லை

எனக்கும் இப்போ ஆர்வமில்லை. அதனால்தான் அந்த திரிக்கு ஒரு சிரிப்பு குறியை பதிலாக போட்டு கடந்தேன்.

நீங்கள் திணிப்பதாக நான் சொல்லவில்லை ஆனால் 10,000 வருடத்துக்கு முன் மனிதர் உழவு, நகர கட்டமைப்பை கட்டியதாக பலர் எழுதி உள்ளார்கள் ஆனால் அவை எல்லாம் 1+1=11 என்பதை போன்ற கதைகளே.

மூலிகை பெற்றோல் ஒரு சின்ன உதாரணம். ராமர் பிள்ளை சொன்ன போது யாரும் அதை நம்பவில்லை. ஏனென்றால் அவர் காட்டிய செய்முறையில் அத்தனை ஓட்டைகள், மூலிகையில் பெற்றோலியம் ஜெல்லை கலந்து பித்தலாட்டம்.

ஆனால சில பத்து வருடங்களின் பின் எதனோல், பையோ பியுயல் ஏற்று கொள்ள பட்டது.

கொன்செப்ட் ஒன்றுதான். ஆனால் நிறுவும் முறையில்தான் எல்லாம் தங்கியுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொன்ன அவுஸ்ரேலியாவுக்கு மக்காசார் முஸ்லீம் வருகை பற்றிய கட்டுரை.

https://www.bbc.co.uk/news/magazine-27260027 

Link to comment
Share on other sites

17 hours ago, goshan_che said:

கிறீஸ்தவருக்கு முதலே முஸ்லிம்கள் அவுஸ்ரேலியா வந்து விட்டார்கள் என்றும் மக்கசார் முஸ்லிம்களுடன் அபொர்ஜினிகள் திருமண பந்தம் வைத்தார்கள் எனவும் அண்மையில் வாசித்தேன்.

அவர்களது இந்தத் தாக்கம் அபோறிஜினல் இசையிலும் உள்ளதாக ஒரு யூரியூப் ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டதைப் பார்த்த ஞாபகம். அது மக்காசர் முஸ்லிம்களது தாக்கமா அல்லது அரேபிய முஸ்லிம்கள் நேரடியாக அரேபியாவிலிருந்து அவுஸ்திரேலியாவின் வடபகுதியின் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் குடியேறியதன் (?) தாக்கமா என்று நான் ஆராயவில்லை. 

ஐரோப்பியர் தென்கிழக்காசிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்தமுன்னர் அரபுதேசத்தவர்கள் அங்கே பலம்பெற்றிருந்தனர். இது 15ஆம் நூற்றாண்டு அல்லது அதற்கு முன்னராக இருக்கக்கூடும். அநேகமாக இந்தோனேசியாவின் ஒருபகுதி முஸ்லிம்களான மக்காசர் இவர்களது வழித்தோன்றலாக இருக்கவேண்டும். 

இந்த மக்காசர் எப்போது அவுஸ்திரேலியாவிற்கு முதலில் வந்தனர் என்பது பற்றிய தெளிவான தகவல் நான் அறிந்தவரை இல்லை. வெள்ளையர்கள் வரத் தொடங்கியபோது தான் இந்த ஆண்டுக் கணக்கெல்லாம் வரலாற்றுப் புத்தகங்களில் எழுதப்பட்டன. அதற்கு முன்னர் வந்த மக்காசரின் வழித்தோன்றல்கள் நாகரீக வளர்ச்சியில் பின்தங்கியிருந்த அபோறிஜினல்கள் வாழ்க்கைமுறையைப் பின்பற்றியதால் அவர்கள் அந்த ஆண்டுக் கணக்கை நினைவில் வைத்திருந்து தம் வழித்தோன்றல்களுக்குச் சொல்லியிருப்பரோ என்பதும் சந்தேகமே. இது பற்றிய குறிப்புக்கள் இந்தோனேசியாவில் மக்காசர் வாழ்ந்த பகுதியில் இருந்தோரிடம் இருக்கலாம். அந்த முஸ்லிம்கள் ஆண்டுக்கணக்கை பதிவு செய்திருக்கக் கூடும். 

என் மனதில் எழுகின்ற இன்னொரு கேள்வி 'மக்காசருக்கும் முன்னர் அரேபியாவிலிருந்து முஸ்லிம்கள் நேரடியாக ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ளனரா' என்பதே. இப்படிப் பல வினாக்கள். அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரை 14ஆம், 15ஆம் நூற்றாண்டுகள் கூட வரலாற்றுக்கு முற்பட்ட புராதன காலம் தான். எனவே இந்த ஆராய்ச்சி மிகச் சிக்கலானது. 

இவை பற்றிய மேலதிக தகவல்கள் யாருக்காவது தெரிந்தால் இங்கேயோ இன்னொரு திரியிலோ பகிர்ந்து கொள்ளும்படி வேண்டுகிறேன். (ரொம்ப முக்கியம் தான்! ஹி ஹி...)

17 hours ago, goshan_che said:

உங்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்கும். உங்கள் ஊரில் GAN என்று ஒரு ரெயில் ஓடுகிறது அடிலேட்-அலிஸ் ஸ்பிரிங்ஸ்-டார்வின்னை இணைப்பது. அதன் பெயரும் Afghan என்பதன் சுருக்கம்தானாம்.

அடிலெய்ட்டில் வசித்த காலத்தில் தூரத்தில் அந்த ரயிலைப் பார்த்திருக்கிறேன், நிறையத் தடவை விளம்பரங்களிலும் பார்த்துண்டு. The Ghan Express. வித்தியாசமான பெயராக இருக்கிறதே என்று யோசித்ததுண்டு. 

ஆனால் இந்த வரலாற்றை நீங்கள் சொல்லித்தான் அறிகிறேன். 

Link to comment
Share on other sites

16 hours ago, goshan_che said:

நான் சொன்ன அவுஸ்ரேலியாவுக்கு மக்காசார் முஸ்லீம் வருகை பற்றிய கட்டுரை.

https://www.bbc.co.uk/news/magazine-27260027 

தகவலுக்கு நன்றி கோஷன். 

'1787' என்ற தலைப்பில் இங்கு வெளியான புத்தகத்தில் மக்காசர் உட்பட ஏனைய வெளிநாட்டவரின் ஆரம்பகால வருகையையும், அதற்கு முற்பட்ட காலத்தில்   இருந்த உலக வல்லரசுகள் பற்றியும் பல சுவாரசியமான தகவல்கள் உண்டு. கிடைத்தால் நேரமிருந்தால் படித்துப் பாருங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, மல்லிகை வாசம் said:

அவர்களது இந்தத் தாக்கம் அபோறிஜினல் இசையிலும் உள்ளதாக ஒரு யூரியூப் ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டதைப் பார்த்த ஞாபகம். அது மக்காசர் முஸ்லிம்களது தாக்கமா அல்லது அரேபிய முஸ்லிம்கள் நேரடியாக அரேபியாவிலிருந்து அவுஸ்திரேலியாவின் வடபகுதியின் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் குடியேறியதன் (?) தாக்கமா என்று நான் ஆராயவில்லை. 

ஐரோப்பியர் தென்கிழக்காசிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்தமுன்னர் அரபுதேசத்தவர்கள் அங்கே பலம்பெற்றிருந்தனர். இது 15ஆம் நூற்றாண்டு அல்லது அதற்கு முன்னராக இருக்கக்கூடும். அநேகமாக இந்தோனேசியாவின் ஒருபகுதி முஸ்லிம்களான மக்காசர் இவர்களது வழித்தோன்றலாக இருக்கவேண்டும். 

இந்த மக்காசர் எப்போது அவுஸ்திரேலியாவிற்கு முதலில் வந்தனர் என்பது பற்றிய தெளிவான தகவல் நான் அறிந்தவரை இல்லை. வெள்ளையர்கள் வரத் தொடங்கியபோது தான் இந்த ஆண்டுக் கணக்கெல்லாம் வரலாற்றுப் புத்தகங்களில் எழுதப்பட்டன. அதற்கு முன்னர் வந்த மக்காசரின் வழித்தோன்றல்கள் நாகரீக வளர்ச்சியில் பின்தங்கியிருந்த அபோறிஜினல்கள் வாழ்க்கைமுறையைப் பின்பற்றியதால் அவர்கள் அந்த ஆண்டுக் கணக்கை நினைவில் வைத்திருந்து தம் வழித்தோன்றல்களுக்குச் சொல்லியிருப்பரோ என்பதும் சந்தேகமே. இது பற்றிய குறிப்புக்கள் இந்தோனேசியாவில் மக்காசர் வாழ்ந்த பகுதியில் இருந்தோரிடம் இருக்கலாம். அந்த முஸ்லிம்கள் ஆண்டுக்கணக்கை பதிவு செய்திருக்கக் கூடும். 

என் மனதில் எழுகின்ற இன்னொரு கேள்வி 'மக்காசருக்கும் முன்னர் அரேபியாவிலிருந்து முஸ்லிம்கள் நேரடியாக ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ளனரா' என்பதே. இப்படிப் பல வினாக்கள். அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரை 14ஆம், 15ஆம் நூற்றாண்டுகள் கூட வரலாற்றுக்கு முற்பட்ட புராதன காலம் தான். எனவே இந்த ஆராய்ச்சி மிகச் சிக்கலானது. 

இவை பற்றிய மேலதிக தகவல்கள் யாருக்காவது தெரிந்தால் இங்கேயோ இன்னொரு திரியிலோ பகிர்ந்து கொள்ளும்படி வேண்டுகிறேன். (ரொம்ப முக்கியம் தான்! ஹி ஹி...)

அடிலெய்ட்டில் வசித்த காலத்தில் தூரத்தில் அந்த ரயிலைப் பார்த்திருக்கிறேன், நிறையத் தடவை விளம்பரங்களிலும் பார்த்துண்டு. The Ghan Express. வித்தியாசமான பெயராக இருக்கிறதே என்று யோசித்ததுண்டு. 

ஆனால் இந்த வரலாற்றை நீங்கள் சொல்லித்தான் அறிகிறேன். 

அரேபியர்கள் நேரடியாக அவுஸ் வந்திருக்க எல்லா சாத்தியப்பாடும் உள்ளது.

இந்தோனேசிய தீவுக்கூட்டம்/மலாயா முழுவதும் சிறி விஜய என்ற ஒரு கடற் பேரரசின் ஆளுகையின் கீழ் இருந்தாயும், இந்த பேரரசை இன்றைய மலேசியாவின் Kedai துறைமுகத்தில் ராஜேந்திர சோழனின் கப்பற்படை வென்றதாயும் வரலாறு சொல்கிறது. கெடாய்தான் தமிழில் கடாரம்.

விஜய சாம்ராஜ்யம் சுருங்க அங்கே சோழரின் மறைமுக ஆளுகை ஏற்பட்டு துறைமுக நகரங்களில் chamber of commerce போல் தமிழ் வர்த்தக சங்கங்களை உருவாக்கி வர்தகத்தை தமது கட்டுபாட்டில் வைத்திருந்தார்களாம். அப்போது மலாய் மொழியை எழுத தமிழ் பல்லவ எழுத்தே பாவிக்கப்பட்டதாம்.

பின்னர் சோழர்கள் பலம் குன்ற அரேபிய மாலுமிகள் அந்த இடத்தை பிடிக்கிறார்கள். மலாய் மொழியும் அரபி எழுத்தில் எழுத பட தொடங்குகிறது.

இந்த வகையில் அவுஸ்ர்ரெலிய கண்டத்தின் வட கரைக்கு மிக அண்மையாக வந்த அரேபியர்கள் அங்கே வந்திருக்க வாய்ப்புகள் அதிகம்தான்.

அதே போல் சோழர்களும் அதற்கு முன்பே கூட வந்திருக்கலாம்.

வடக்கு அவுஸில் இப்போதும் நமது ஆட்கள்  தங்க விரும்பாமை போல், சோழர்களும், அரேபியர்களும் அங்கே தரித்திருக்க விரும்பியிரார் என்பதும் ஊகிக்க கூடியதே.

Link to comment
Share on other sites

5 minutes ago, goshan_che said:

வடக்கு அவுஸில் இப்போதும் நமது ஆட்கள்  தங்க விரும்பாமை போல், சோழர்களும், அரேபியர்களும் அங்கே தரித்திருக்க விரும்பியிரார் என்பதும் ஊகிக்க கூடியதே.

உங்கள் ஊகங்களுடன் உடன்படுகிறேன் கோஷன்.

அவுஸில் முதல் முறையாகக் காலடிவைத்த முதல் ஐரோப்பியரான ஒல்லாந்தர் (தற்போதய நெதர்லாந்து) ஓரிரு தடவை இங்கு வந்துவிட்டு இங்கே குடியேற்றங்கள் அமைக்கும் எண்ணத்தைக் கைவிட்டதன் காரணமாகச் சொல்லப்பட்டவை: அவர்களின் வர்த்தக, ஆதிக்க நோக்கங்களைப் பூர்த்தி செய்ய அவுஸ் உகந்த இடமல்ல. பழங்குடிகள் பற்றிய பயமும், அவுஸ் எந்தளவு பரந்துவிரிந்த தேசம் என்பதை அவர்கள் அறிந்திராமையும் மேலதிக காரணங்களாக இருக்கலாம். பின்னர் வந்த பிரித்தானியரின் துணிச்சல் அவர்களுக்கு இருக்கவில்லை. (அவுஸின் பழைய பெயர் New Holland என்பது மேலதிக தகவல்!).

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.