Jump to content

இறால் வளர்ப்பு தொழில்..! இறால் மீன் பயன்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

🦐இறால் வளர்ப்பு தொழில்..! இறால் மீன் பயன்கள்..!🦐

நண்பர்களுக்கு வணக்கம்..! இன்று எமது பதிவில் அனைவருக்கும் பிடித்த இறால் வளர்ப்பு தொழிலை பற்றி இன்று தெரிந்துக்கொள்ளுவோம்…!

இறால் மீன்(prawn) பொதுவாக நன்நீரிலும், உவர்நீரிலும் காணப்படும் ஒரு நீர்வாழ் உயிரினம் ஆகும். இதை இறால் மீன்(prawn farming business plan) என்றும் சொல்லுவார்கள். இறாலை மாந்தர்களால் விரும்பி உண்ணக்கூடிய இறைச்சியாக திகழ்கிறது. இறால் கூட்டமாக வாழும் தன்மை கொண்டது. இறாலானது நீரின் பின் புறமாக, மட்டுமே நீந்தக்கூடிய உயிரினம் ஆகும்.

பெரிய மீன்கள் மற்றும் திமிங்கிலங்களுக்கு இறால்கள் நல்ல உணவாக அமைகிறது. கடல் வாழ் உயிரினங்களின் இறந்த உடல்கள் கடல் நீரில் கழிவுப்பொருட்களாக மாறுகின்றன. இவற்றில் கழிவுப்பொருட்களை கடலில் உள்ள இறால் மீன்கள் உண்டு வாழ்கின்றன. அதனால் இறாலை “கடலின் தூய்மையாளர்” என்றும் அழைக்கின்றனர். இறாலானது ஆழ்கடல் பகுதியில் தான் முட்டையிடுகின்றன.

முட்டையில் இருந்து வெளிவரும் குஞ்சுகள் கடல் அலைகளால் அடித்து வரப்படுகின்றன. இந்த குஞ்சுகள் சதுப்பு நிலக்காடுகளிலும், கடலோர கரையிலும் ஒதுங்குகின்றன. சதுப்பு நிலக்காடுகள், கரையோரங்களில் மீன்பிடி தொழில்(prawn farming business plan) நடப்பதால் இறால் மீன்கள் இளம் பருவத்திலேயே அழிந்து விடுகின்றன. இதனால் இவை குறைவதால் ஆழ்கடல் பகுதியில் வளர்ச்சியடைந்த இறால் மீன்களும் குறைகின்றன.

மற்ற கடல் உணவுப் பொருட்களைப்போல் இறாலிலும் அதிகமாக கால்சியம்(calcium), அயோடின்(iodine) மற்றும் புரதச் சத்துக்கள் உள்ளன. இறால்களில் அதிகப்படியான கொழுப்பு காணப்படுகிறது. இந்த கொழுப்பானது நல்ல கொலஸ்டிரால் எனப்படும் கொழுப்பு வகையைச் சேர்ந்ததால், இதை நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.

ஆசிய நாடுகளில் இறால் உற்பத்தியில் முன்னணியில் இருப்பவை சீனா மற்றும் தாய்லாந்து ஆகும். இறால் வளர்ப்பினை நெல் விவசாயத்துக்கு இணையாகவே பேசுவார்கள். இதிலும் விதை, அறுவடை என்ற வார்த்தைகள் அடிக்கடி பயன்படுத்தப்படும்.

கடற்கரையோரம் உப்பு நீரில் இறால் வளர்ப்பு என்பது பரவலாக பல இடங்களில் நடைப்பெற்றுவருகிறது. ஆனால் நன்னீர் இறால் வளர்ப்பு குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே உள்ளது. நல்ல தண்ணீர் உள்ள வயல்வெளிகளுக்கு நடுவே கூட இந்த நன்னீர் இறால் வளர்ப்பு நடைபெறுவதுதான் குறிப்பிட்டத்தக்க விஷயம்.

🦐இறால் வளர்ப்பு முறை மற்றும் குளம் தயார் செய்தல் / prawn farming business plan:

நீர்வாழ் இறால்கள் பலவகை இருப்பினும் குறிகிய காலத்தில் கூடுதலாக வளர்ச்சி, கண்ணைக்கவரும் தோற்றம் ஆகிய நீலக்கால் மற்றும் மோட்டு இறாலை தனியாகவோ அல்லது கெண்டை மீன்களுடன் சேர்த்தோ வளர்க்கலாம். நீர்நிலைகளுக்கு அருகில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 1 மீட்டர் ஆழத்திற்கு மணல், வண்டல் மண், களிமண் கலவை 1.5:1 :1.5 என்ற விகிதத்தில் ஒவ்வொரு குளமும் 1000 முதல் 5000 சதுரமீட்டர் பரப்பளவில் அமைத்தல் வேண்டும்.

நிலத்தை நன்றாக காயவைத்து உழவேண்டும். பின் 500 கிலோ நீர்த்த சுண்ணாம்பு இடவேண்டும். கார அமிலத்தன்மை 7.5 முதல் 8.5 அளவு வரை உயர்த்த வேண்டும். மாட்டுச்சாணம், கோழிக்கழிவு ஆகியவற்றை குளத்தில் இட்டு குளத்தின் நீர்மட்டத்தை 30 செ.மீ அளவில் அமைக்க வேண்டும்.

100 கிலோ யூரியா(urea), 250 கிலோ சூப்பர் பாஸ்பேட்(super phosphate), அடியுரமாக முதலில் போட வேண்டும். 15 நாட்கள் கழித்து நீரின் நிறம் மாறியபின் நீர்மட்டத்தை 1 மீட்டர் அளவுக்கு உயர்த்தி அதை அறுவடை காலம் வரை பராமரிக்க வேண்டும்.

🦐இறால் மீன் இருப்பு வைத்தல் / இறால் வளர்ப்பு / prawn farming in tamil:

தனியார் மற்றும் அரசு இறால் மீன்(prawn farming) பொறுப்பகங்களிலிருந்து நன்னீர் இறாலை பெற்று எக்டருக்கு 50,000 வரை இருப்பு செய்யலாம். இருப்பு செய்வதற்கு முன் நாற்றங்கால் சூழ்நிலையில் வைத்து 2 வாரங்களுக்கு உணவு கொடுத்த பின்னர் விட்டால் பிழைப்பு விகிதம் அதிகமாகும்.

🦐இறால் இருப்பு செய்தபின் பராமரிப்பு / இறால் வளர்ப்பது எப்படி:

இருப்பு செய்தபின் குள நீரை பாதுகாப்பது மிகவும் அவசியம். நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன்(oxygen), கார அமிலத்தன்மை(Alkaline acidity) மற்றும் உயிரினங்களின் உற்பத்தியை கண்காணிக்க வேண்டும்.

வெப்பம் 26-32 டிகிரி செல்சியஸ், ஆக்சிஜன்(oxygen) 5 மி.கி/லிட்டர் இருந்தால் இறால் மீன்(prawn in tamil) நன்றாக வளரும். நீரில் பிராணவாயு(oxygen) அளவை சரியாக பராமரிக்க காற்றூட்டும் இயந்திரத்தை பயன்படுத்தலாம்.

🦐இறால் மீன் தீவனம் / இறால் வளர்ப்பு தொழில் / prawn farming:

ஈரமாகவோ, காய்ந்த நிலையிலோ உணவை தாராளமாய் கொடுக்கலாம். இறால் உணவு செய்வதற்கு மீன், நிலக்கடலை, அரிசி குருணை, கோதுமை புண்ணாக்கு, மரவள்ளி கிழங்கு மாவு ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. தனியார் வர்த்தக நிறுவனங்கள் இறால் தீவனத்தை முறுக்கு, வற்றல் வடிவம் போல் செய்து விற்பனைக்கு விற்று வருகின்றனர். அதை கூட நாம் வாங்கி பயன்படுத்தி கொள்ளலாம்.

🦐இறால் மீன் அறுவடை மற்றும் இறால் மீன் விற்பனை / இறால் வளர்ப்பு தொழில்:

5 மாதங்களில் இறால் சராசரி 50 கிராம் அளவிற்கு நன்றாக வளர்ந்துவிடும். நீலகால் இறால் அதிகபட்சம் 250 கிராம் வளர்ச்சி அடையும். இறால்களை பிடிப்பதற்கு தண்ணீரை வடித்த பின்னர் இழுவலை அல்லது வீச்சு வலையால் பயன்படுத்தலாம். நீரை முழுமையாக வெளியேற்றிய பிறகு கை தடவல் மூலமாகவும் இறாலை பிடிக்கலாம்.

FB

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.