Jump to content

மணிரத்னத்திற்கு எதிராக களமிறங்கும் சிரஞ்சீவி.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மணிரத்னத்திற்கு எதிராக களமிறங்கும் சிரஞ்சீவி.!

Screenshot-2021-01-16-11-47-51-344-org-m

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் மணிரத்தினத்திற்கு எதிராக தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி களமிறங்கியிருக்கிறார்.

கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவல் பெரும் பாலோர் படித்து ரசித்த நாவல். ஏற்கனவே இதனை மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கி வருகிறார்.

இதில் விக்ரம், ஐஸ்வர்யாராய், ஜெயம் ரவி நடித்த காட்சிகள் வட மாநிலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் கொரோனா ஊரடங்கிற்கு முன்பு படமாக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு தடைப்பட்டது. தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது.

இந்நிலையில் வெப் தொடராக பொன்னியின் செல்வன் உருவாகவிருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மெகா வெப் சீரிஸாக உருவாகும் இதில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடிக்கிறார்.

இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார். இதில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப விவரங்கள் வரும் ஏப்ரல் 14ம் தேதி வெளியாக உள்ளது.

https://vanakkamlondon.com/cinema/2021/01/98688/

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவல் பெரும் பாலோர் படித்து ரசித்த நாவல். ஏற்கனவே இதனை மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கி வருகிறார்.

 

1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வெப் தொடராக பொன்னியின் செல்வன் உருவாகவிருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மெகா வெப் சீரிஸாக உருவாகும் இதில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடிக்கிறார்.

திரைப்படம், வெப் சீரிஸ் என இரு வேறு தளங்களுக்காக பொன்னியின் செல்வன் உருவாவது ரசிகர்களுக்குப் பெருவிருந்தே என நினைக்கிறேன். அத்துடன் வெப் சீரிஸில் இக்கதையை மிக விரிவாகக் காட்சிப்படுத்தும் அனுகூலம் இருக்கலாம். 

திரைப்பட வடிவம் இரு பாகங்களாக வெளியாகுமென அறிந்தேன். 4 மணி நேரப்படமாம். இரு பாகங்களையும் சேர்த்தோ தெரியவில்லை.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, மல்லிகை வாசம் said:

 

திரைப்படம், வெப் சீரிஸ் என இரு வேறு தளங்களுக்காக பொன்னியின் செல்வன் உருவாவது ரசிகர்களுக்குப் பெருவிருந்தே என நினைக்கிறேன். அத்துடன் வெப் சீரிஸில் இக்கதையை மிக விரிவாகக் காட்சிப்படுத்தும் அனுகூலம் இருக்கலாம். 

திரைப்பட வடிவம் இரு பாகங்களாக வெளியாகுமென அறிந்தேன். 4 மணி நேரப்படமாம். இரு பாகங்களையும் சேர்த்தோ தெரியவில்லை.

ab81155976494b4c8beac99c3063fa4a.jpg

மணிரத்னதின் இருட்டுபடத்தை விட "வெப் சீரிஸ்" கொஞ்சம் வெளிச்சமாக இருக்கும் என்டு சொல்ல வாறியல்..👌 101 % உண்மை தோழர்..👍

☺️..😊

  • Haha 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ab81155976494b4c8beac99c3063fa4a.jpg

மணிரத்னதின் இருட்டுபடத்தை விட "வெப் சீரிஸ்" கொஞ்சம் வெளிச்சமாக இருக்கும் என்டு சொல்ல வாறியல்..👌 101 % உண்மை தோழர்..👍

☺️..😊

இல்லை தோழர். படம் வெளியாகி நான் அதைப் பார்க்காமல் அப்படிச் சொல்லக்கூடாது! 😀

இருந்தாலும் கடந்த 10, 15 வருடகாலத்தில் வெளியான மணிரத்னம் படங்களை வைத்துப் பார்க்கும்போது (ஒரு சில படங்களைத் தவிர) அதிக எதிர்பார்ப்பில்லாமல் இருப்பதே நல்லது என்று தோன்றுகிறது! நூலை இன்னும் முழுமையாக வாசித்து முடிக்கவில்லை. 

படம் வெளிவந்த பிறகு வாசித்தால் அந்த வாசிப்பு அனுபவம் கூட ஆறுதலாக இருக்குமோ என்னவோ! 😃

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.