Jump to content

அமெரிக்கா அண்மையில் வெளியிட்டிருக்கும் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் புலிகளின் பெயரும் தொடர்ந்து இடம்பெறுகிறது.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 17/1/2021 at 23:58, குமாரசாமி said:

2009க்கு பின்னர் யார் யாரெல்லாம் புலம்பெயர் நாடுகளில் ஈழத்தமிழர் சம்பந்தமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கின்றார்கள்?

நல்லகேள்வி, 2008 ஆம் ஆண்டு வரை எந்தொரு தனி நபரும்..விழிப்புணரவு நிகழ்ச்சிகள்..நடத்தியதில்லை..தமிழ்ஈழவிடுதலைப்புலிகளின் எற்பட்டிலேயே நடந்தது..1=தொலைபேசிமுலம் அறிவிப்பார்கள்.

2=எங்கள் தபால்பெட்டியில் நோட்டிஸ் போடுவார்கள.

3=மேலே சென்ன இரண்டையும் செய்வார்கள்.

விழிப்புணர்வு நிகழ்வுகள் மேலிடத்து உத்தரவுப்படியே செய்வதாய் இங்கே கூறுவார்கள். மேலிடமென்பது..கிளிநொச்சி  [இலங்கை]மற்றும்..ஓபர்கவுசன்.[ஜேர்மானி].ஆகும்.

2009க்குப்பின் மேலிடமில்லை..எனவே  விழிப்பணர்ச்சியில்லை..நான் அல்லது என்னைப்போன்ற தனிநபர்கள் விழிப்பணர்ச்சி நிகழ்வு நடத்தினால்  ஐந்து...பத்து...பேர்கூட வரமட்டார்கள்..

Link to comment
Share on other sites

  • Replies 80
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முடிந்தது என்று வெடி கொளுத்தி, ஆரவாரித்த கதை ஒன்றை தொடர்ந்து  அதில்  தாங்கள் கதாநாயகர்களாக கற்பனையிலாவது வலம் வரவேண்டும்  என்கின்ற  பலரது  ஆசையே: புலிகள் உயிர்ப்பு,  தடை  நாடகம். அவர்களுக்கே தெரியாது ஏன் தடை போடுகிறோம் என்று. வழமையானசெயல் ஒன்று  என்று நினைத்திருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Kandiah57 said:

நல்லகேள்வி, 2008 ஆம் ஆண்டு வரை எந்தொரு தனி நபரும்..விழிப்புணரவு நிகழ்ச்சிகள்..நடத்தியதில்லை..தமிழ்ஈழவிடுதலைப்புலிகளின் எற்பட்டிலேயே நடந்தது..1=தொலைபேசிமுலம் அறிவிப்பார்கள்.

2=எங்கள் தபால்பெட்டியில் நோட்டிஸ் போடுவார்கள.

3=மேலே சென்ன இரண்டையும் செய்வார்கள்.

விழிப்புணர்வு நிகழ்வுகள் மேலிடத்து உத்தரவுப்படியே செய்வதாய் இங்கே கூறுவார்கள். மேலிடமென்பது..கிளிநொச்சி  [இலங்கை]மற்றும்..ஓபர்கவுசன்.[ஜேர்மானி].ஆகும்.

2009க்குப்பின் மேலிடமில்லை..எனவே  விழிப்பணர்ச்சியில்லை..நான் அல்லது என்னைப்போன்ற தனிநபர்கள் விழிப்பணர்ச்சி நிகழ்வு நடத்தினால்  ஐந்து...பத்து...பேர்கூட வரமட்டார்கள்..

ஒருங்கிணைப்பு சரியாக இருந்தால் மீண்டும் கூடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, குமாரசாமி said:

ஒருங்கிணைப்பு சரியாக இருந்தால் மீண்டும் கூடுவார்கள்.

மிக்கநன்றி ,நல்லது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

மிக்கநன்றி ,நல்லது

பதில் திருப்தியாக இல்லை. ஏதோ மனதுக்குள் வைத்திருக்கின்றீர்கள்?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

பதில் திருப்தியாக இல்லை. ஏதோ மனதுக்குள் வைத்திருக்கின்றீர்கள்?????

கந்தையா...அண்ணை, எதையோ... சொல்ல வாறார்  போலை கிடக்கு.
அந்த வார்த்தைகள்... ஏன்,   துல்லியமாக.. வர மாட்டுதாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/1/2021 at 16:23, விளங்க நினைப்பவன் said:

அவர் அப்படி தான். முன்பு ஒரு முறை நான் நான் நிலாந்தன் கட்டுரையை விமர்சித்ததற்கு நிலாந்தன் அறிவானவர் அவர் கட்டுரையை விளங்கி கொள்வதற்கு அறிவு வேண்டும் என்றவர் 🤣

எங்கேயையாயாயாயா எழுதினேன்... 🤣🤣🤣

ஒருக்கா காட்டுங்கோஓஓஓஓஒ மறந்து போட்டன்... 😂😂

4 hours ago, Kandiah57 said:

நல்லகேள்வி, 2008 ஆம் ஆண்டு வரை எந்தொரு தனி நபரும்..விழிப்புணரவு நிகழ்ச்சிகள்..நடத்தியதில்லை..தமிழ்ஈழவிடுதலைப்புலிகளின் எற்பட்டிலேயே நடந்தது..1=தொலைபேசிமுலம் அறிவிப்பார்கள்.

2=எங்கள் தபால்பெட்டியில் நோட்டிஸ் போடுவார்கள.

3=மேலே சென்ன இரண்டையும் செய்வார்கள்.

விழிப்புணர்வு நிகழ்வுகள் மேலிடத்து உத்தரவுப்படியே செய்வதாய் இங்கே கூறுவார்கள். மேலிடமென்பது..கிளிநொச்சி  [இலங்கை]மற்றும்..ஓபர்கவுசன்.[ஜேர்மானி].ஆகும்.

2009க்குப்பின் மேலிடமில்லை..எனவே  விழிப்பணர்ச்சியில்லை..நான் அல்லது என்னைப்போன்ற தனிநபர்கள் விழிப்பணர்ச்சி நிகழ்வு நடத்தினால்  ஐந்து...பத்து...பேர்கூட வரமட்டார்கள்..

யாழ் களமிருக்கே.. 👍

On 17/1/2021 at 16:08, Kandiah57 said:

நான் இளைஞனாக இருந்தபோது எல்லாம் தெரியும் என நினைத்தேன் .கொஞ்சம்  வயதானபோது கொஞ்சம் தான் தெரியும் என உணர்த்தேன்.  முதிர்ச்சி அடைத்தபோது தான் தெரிந்தது எனக்கு எதுவும் தெரியாது என்று இப்படிச்சென்னவர்    .சாக்ரடீஸ் எனற அறிஞர். அத்த சாக்ரடீஸ்  வாரிசு இங்கேயிருப்பதைக்கண்டேன்.  நன்றி😄😎

அந்த வயதானவரை என்னுடன் ஒப்பிடாதீர்கள் பிளீஸ். இன்னும் கொஞ்சக் காலம் இளமையோடிக்க விரும்புகிறேன்... 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

பதில் திருப்தியாக இல்லை. ஏதோ மனதுக்குள் வைத்திருக்கின்றீர்கள்?????

ஆம் உண்மை, முன்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்தவர்களால், விழிப்பணர்வு நிகழ்வுகளை ஒழுங்கு செய்யமுடியும்..ஆனால் அவர்கள் செய்யமாட்டார்கள்..எனெனில் ..மக்கள் ..அவர்களை..கேள்வி. கேட்ப்பார்கள் முதலிட்டுக்கு என்ன நடத்தது?..கடைசியாகச்சேர்த்த 2000.  த்தைத்திருப்பி தா என்பார்கள்..😁😎

19 hours ago, தமிழ் சிறி said:

கந்தையா...அண்ணை, எதையோ... சொல்ல வாறார்  போலை கிடக்கு.
அந்த வார்த்தைகள்... ஏன்,   துல்லியமாக.. வர மாட்டுதாம். 

தமிழ்ஈழவிடுதலைப்புலிகள் தடை என்று சொல்லப்படுகின்றபோதும்..அது உண்மையில்..செயலில்..தமிழ் மக்களின். விடுதலக்கான தடையேயாகும்..சுவிஸ்சில்..நிதி சேகரிந்து தமிழ்ஈழ்விடுதலைப்பலிகளுக்கு அனுப்பியது தொடர்பாக வழக்கு நடந்து வருகிறது..கீழ் நீதிமன்றத்தில்..தமிழ்ஈழவிடுதலைப்புலிகள் பயங்கரவாதயமைப்புயில்லை .மாறக..தமிழ்மக்களின்.  விடுதலைக்காக போராடியமைப்பாகும் .என்றும்,நிதிசேகரிப்பில் முறைகேடு நடக்கவில்லையென்றும். தீர்ப்பு வழங்கியது..சுவிஸ்யரசு எதிர்த்து மேல்முறையிடு செய்தது .மேல்நீதிமன்றிலும் இதே தீர்ப்பு வழங்கப்பட்டது..இப்போ சுவிஸ்யரசு மீண்டும் எதிர்க்கவுள்ளது..இந்தத்தீர்ப்பை  இப்படியேவிட்டால்..,தமிழ்மக்களின் விடுதலைப்போரை அங்கிகரிக்கும்படி சுவிஸ்தமிழர்கள் கோரலாம்..சுவிஸ்யரசும் எற்க்கவேண்டி ஏற்ப்படும்..விடுதலைப்புலிகள் தடை மற்றநாடுகளில் .எடுக்கவேண்டியும் வரலாம்..எதற்க்கும் இந்த வழக்கு வெற்றிபெற குமாரசாமியண்ணை ஒர் அர்ச்சனை செய்வார் என நம்புவோம்...😜துல்பனுக்கு இதுபற்றி கூடுதல் விபரம்  தெரிந்திருக்கலாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kapithan said:

எங்கேயையாயாயாயா எழுதினேன்... 🤣🤣🤣

ஒருக்கா காட்டுங்கோஓஓஓஓஒ மறந்து போட்டன்... 😂😂

யாழ் களமிருக்கே.. 👍

அந்த வயதானவரை என்னுடன் ஒப்பிடாதீர்கள் பிளீஸ். இன்னும் கொஞ்சக் காலம் இளமையோடிக்க விரும்புகிறேன்... 🙏

நிச்சயமாக,நீங்களும்,உங்கள் கருத்துகளும் ,ஆரோக்கியத்துடனும்,இளமையுடனும் இருப்பதை நாங்களும் விரும்புகிறோம்..😁👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Kandiah57 said:

ஆம் உண்மை, முன்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்தவர்களால், விழிப்பணர்வு நிகழ்வுகளை ஒழுங்கு செய்யமுடியும்..ஆனால் அவர்கள் செய்யமாட்டார்கள்..எனெனில் ..மக்கள் ..அவர்களை..கேள்வி. கேட்ப்பார்கள் முதலிட்டுக்கு என்ன நடத்தது?..கடைசியாகச்சேர்த்த 2000.  த்தைத்திருப்பி தா என்பார்கள்..😁😎

புலம்பெயர் தேசங்களில் காசு சேர்த்தவர்கள் மட்டும்தான் இருக்கின்றார்களா? 
ஏனைய பலர் இருக்கின்றார்களே? அதாவது புலிகளுக்கு எதிரான ஈழம் விரும்பிகள்? இப்போது அவர்கள் எங்கே போனார்கள்? புலிக்கொடி இல்லாமல் ஏதாவது செய்யலாமே?
ஒரு குடையின் கீழ் என்றவர்கள் இன்று எங்கே போனார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

புலம்பெயர் தேசங்களில் காசு சேர்த்தவர்கள் மட்டும்தான் இருக்கின்றார்களா? 
ஏனைய பலர் இருக்கின்றார்களே? அதாவது புலிகளுக்கு எதிரான ஈழம் விரும்பிகள்? இப்போது அவர்கள் எங்கே போனார்கள்? புலிக்கொடி இல்லாமல் ஏதாவது செய்யலாமே?
ஒரு குடையின் கீழ் என்றவர்கள் இன்று எங்கே போனார்கள்?

நடக்கிற காரியமா... 😂😂

Link to comment
Share on other sites

8 hours ago, குமாரசாமி said:

புலம்பெயர் தேசங்களில் காசு சேர்த்தவர்கள் மட்டும்தான் இருக்கின்றார்களா? 
ஏனைய பலர் இருக்கின்றார்களே? அதாவது புலிகளுக்கு எதிரான ஈழம் விரும்பிகள்? இப்போது அவர்கள் எங்கே போனார்கள்? புலிக்கொடி இல்லாமல் ஏதாவது செய்யலாமே?
ஒரு குடையின் கீழ் என்றவர்கள் இன்று எங்கே போனார்கள்?

புலிகளுக்கு எதிரான ஈழம் விரும்பிகள் எங்கும் போகவில்லை இங்குதான் இருக்கிறார்கள். அவர்கள் கோவில்களை வைத்துப் பராமரித்து, அதற்குள் யாழ்ப்பாணத்தான், காரைதீவான், புங்குடுதீவான் என்று புடுங்குப்பட்டு, புங்குப்பாட்டை நீதிமன்றங்கள்வரையில் கொண்டுசென்று, இங்குள்ள சட்டத்தரனிகள் மேலும் செல்வம் சேர்த்து வாழ்வதற்குப் பெரும் தொண்டு புரிந்து வருகிறார்கள்.

புலம்பெயர் தேசங்களில் காசு சேர்த்தவர்களும், பள்ளிக்கூடங்களையும் கூடவே பள்ளிக்கூடத்தால் கோவில்களையும் பராமரித்து, தங்கள் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துவராத கோவில் நிர்வாகிகளையும், பூசாரிகளையும் அடிக்கடி மாத்திக் கல்வியையும், பக்தியையும் உங்கள் பிள்ளைகள் பெறவேண்டுமாயின் எங்களை ஆதரியுங்கள் என்று புலிக்கொடியையும் காட்டிப் பெற்றோரைக் குழப்பி இன்றும் மீன்பிடித்து வருகிறார்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

புலம்பெயர் தேசங்களில் காசு சேர்த்தவர்கள் மட்டும்தான் இருக்கின்றார்களா? 
ஏனைய பலர் இருக்கின்றார்களே? அதாவது புலிகளுக்கு எதிரான ஈழம் விரும்பிகள்? இப்போது அவர்கள் எங்கே போனார்கள்? புலிக்கொடி இல்லாமல் ஏதாவது செய்யலாமே?
ஒரு குடையின் கீழ் என்றவர்கள் இன்று எங்கே போனார்கள்?

ஒன்றை நீங்கள் நன்றாக புரிந்து கொள்ளவேண்டும்..நான்இங்கு  யாழ்களத்தில் அடிபடவும் ..தமிழர்களை பிளவுபடுத்தவும் வரவில்லை..இதுபோன்றநடவடிக்கைகள்.   தமிழ்ஈழம் மலர்வதைப்பாதிக்கும்..இலங்கையில் போர் முடியும்வரை ,இலங்கையிலும்,  வெளிநாடுகளிலும் புலிகள் தவிர மற்றவர்கள் போராடுவது தடுக்கப்பட்டிருந்தது..இலங்கையிலுள்ளவர்கள் , புலிகளால் ,தமிழ்தேசியகூட்டமைப்புடன் இணைக்கப்பட்டுவிட்டார்கள்....வெளிநாடுகளில் எந்தவொருயமைப்பும் பெரிதாக வளர்ச்சியடையவில்லை..மக்கள் ஆதரவில்லை.

மற்றவர்களை,நாங்கள் நினைத்தநேரம் போராடு எனக்கூறமுடியாது ..என்னெனில் எவரும் அவர்களுக்கு பங்களிப்பு செய்ததுகிடையாது..ஆனல். புலிகளுக்கு பெரும்பாலன தமிழ்மக்கள் பங்களிப்பு செய்திருக்கிறர்கள்..புலிகள்பற்றிகேள்வி கேட்க்கவும் கருத்துகூறவும் அந்தமக்களுக்குயுரிமையுண்டு..தற்போது தமிழ்ஈழத்தில். புலிகள் இயங்கவில்லை. இங்கு காசுசேர்த்தவர்களாலும் ,முன்பு செய்த போராட்டம்போல்..இப்போ செய்யமுடியாது..ஆனால் அவர்களால் செய்யமுடியும் அவர்கள்தான் செய்யவும் வேண்டும்..நான் இங்கு வந்திருத்தகாலத்தில் இங்கே புளட்க்கு நல்லதரவு இருந்தது..அவர்கள இலங்கையில் செயல்பபடததால் ஆதரவையிழந்துவிட்டார்கள்..புலிகள் செயல்பட்டதால்.ஆதரவு  பெருகியது..இதிலிருந்து தெரிவதுயாதுவெனில்...தமிழ்ஈழத்தில் எவர்போராடினாலும். அவர்களுக்கு வெளிநாட்டிலுள்ள தமிழர் ஆதரவுவழங்குவார்கள்..யாரகயிருந்தலும் போராடுவதற்க்கு எண்ணவும்,சிந்திக்கவும்,விரும்பவும்,முயற்ச்சிக்கவும்..வேண்டும்  மக்கள் ஆதரவும் வேண்டும் .இப்போ மக்கள் ஆதரவு பெறுவது மிகக்கடினம் என்னெனில்..நம்பிக்கையில்லை...நிதிமோசடிசெய்தல்...தங்களுக்குள்ளடிபடுதல். பழையனுபவம்...இப்படி பலகாரணமுண்டு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

 .இப்போ மக்கள் ஆதரவு பெறுவது மிகக்கடினம் என்னெனில்..நம்பிக்கையில்லை...நிதிமோசடிசெய்தல்...தங்களுக்குள்ளடிபடுதல். பழையனுபவம்...இப்படி பலகாரணமுண்டு..

இவ்வாறு சொல்லி மக்கள் தப்பிக்கும் வேலையே தற்போது நடக்கிறது. 

மக்கள் நினைத்தால் மட்டுமே எதுவும் சாத்தியம். புலிகளைக்கூட அவர்களே வழி நடாத்தினார்கள். அவர்களில் இருந்தே புலிகள் வந்தார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

இவ்வாறு சொல்லி மக்கள் தப்பிக்கும் வேலையே தற்போது நடக்கிறது. 

மக்கள் நினைத்தால் மட்டுமே எதுவும் சாத்தியம். புலிகளைக்கூட அவர்களே வழி நடாத்தினார்கள். அவர்களில் இருந்தே புலிகள் வந்தார்கள்

புலிகளை தமிழ் மக்கள் வழிநடத்தினார்களா? 🤣

அந்த தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் தான் முள்ளிவாய்க்காலில் தம்மை தடுத்து வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமேசன் பிரைமில் "அந்த அறிக்கை" ஆங்கிலப்படத்தை தயவு செய்து பாருங்கள், மேற்கு நாட்டினர் தாம் செய்யும் தவறுகளை எவ்வாறேனும் நியாயப்படுத்த முனைவர், சிங்கள அரச பயங்கரவாதத்திற்கு சளைத்தவர்கள் அல்ல மேற்கு நாட்டினர், அண்மையில் அவுஸ்திரேலியப்படையினர் ஆப்கானிஸ்தானில் மேற்கொண்ட படுகொலைகள் வெளிவந்தவுடன் அதனை உலகம் எவ்வாறு கையாண்டது? (அந்த விவரம் வெளியே வராமல் இருப்பதற்காக அதனை வெளியிட முனைந்த சட்டத்தரணியின் மீதும் செய்தி நிறுவனத்தின் மீதும் சட்டத்துறையும் சட்ட அமலாக்கப்பிரிவான காவல்துறையின் ஜனநாயக விரோத செயற்பாடுகளையும் உலகு எவ்வாறு அணுகியது) இந்த உலகு நியாயத்திற்கு மதிப்பளிப்பதில்லை மாறாக பணத்திற்கும் அதிகாரத்திற்கும் மதிப்பளிக்கும், ஏழைகளுக்கு நீதி கிடைக்காது, அதிகாரம் செலுத்தும் நிலைக்கு நாம் உயர்ந்தால் மாத்திரமே மாற்றம் ஏற்படும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, விசுகு said:

இவ்வாறு சொல்லி மக்கள் தப்பிக்கும் வேலையே தற்போது நடக்கிறது. 

மக்கள் நினைத்தால் மட்டுமே எதுவும் சாத்தியம். புலிகளைக்கூட அவர்களே வழி நடாத்தினார்கள். அவர்களில் இருந்தே புலிகள் வந்தார்கள்

 விசுகர்! எனது கருத்து அஃதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் மேயக்கட்டிவிட்ட மாடு போல அங்கயே சுத்தி கொண்டிருப்பம், அது தானே தடை போடுபவர்களின் விருப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, விசுகு said:

இவ்வாறு சொல்லி மக்கள் தப்பிக்கும் வேலையே தற்போது நடக்கிறது. 

மக்கள் நினைத்தால் மட்டுமே எதுவும் சாத்தியம். புலிகளைக்கூட அவர்களே வழி நடாத்தினார்கள். அவர்களில் இருந்தே புலிகள் வந்தார்கள்

அப்ப 2009ஆம் ஆண்டிலிருந்து 2021வரை ஏன்போராடவில்லை? மக்கள் நினைக்கவில்லையா?மக்களைச்சந்திக்கச்சென்றவருடன் சிலசமயம் நானும் போயிருக்கிறேன் .பணம் தருவதைத்தவிர்ப்பதற்க்காக, மக்கள் என்னென்ன கேட்ப்பார்கள் ..என்பது எனக்கு நன்கு தெரியும்..என்னுடைய..சொந்தக்கருத்து  புலிகளுக்கு மக்கள் போதிய பங்களிப்பும்..ஆதரவும் வழங்கியுள்ளார்கள். எனவே தமிழ்ஈழத்திலும் சரி வெளிநாட்டிலும் சரி தொடர்ந்தும் தமிழ்ஈழவிடுதலைப்புலிகளே. போராடவேண்டும். புதியவர்கள் போராடவேண்டும் என்ற கருத்து சிறுபிள்ளைத்தனமானது.😁🙏

43 minutes ago, vasee said:

அமேசன் பிரைமில் "அந்த அறிக்கை" ஆங்கிலப்படத்தை தயவு செய்து பாருங்கள், மேற்கு நாட்டினர் தாம் செய்யும் தவறுகளை எவ்வாறேனும் நியாயப்படுத்த முனைவர், சிங்கள அரச பயங்கரவாதத்திற்கு சளைத்தவர்கள் அல்ல மேற்கு நாட்டினர், அண்மையில் அவுஸ்திரேலியப்படையினர் ஆப்கானிஸ்தானில் மேற்கொண்ட படுகொலைகள் வெளிவந்தவுடன் அதனை உலகம் எவ்வாறு கையாண்டது? (அந்த விவரம் வெளியே வராமல் இருப்பதற்காக அதனை வெளியிட முனைந்த சட்டத்தரணியின் மீதும் செய்தி நிறுவனத்தின் மீதும் சட்டத்துறையும் சட்ட அமலாக்கப்பிரிவான காவல்துறையின் ஜனநாயக விரோத செயற்பாடுகளையும் உலகு எவ்வாறு அணுகியது) இந்த உலகு நியாயத்திற்கு மதிப்பளிப்பதில்லை மாறாக பணத்திற்கும் அதிகாரத்திற்கும் மதிப்பளிக்கும், ஏழைகளுக்கு நீதி கிடைக்காது, அதிகாரம் செலுத்தும் நிலைக்கு நாம் உயர்ந்தால் மாத்திரமே மாற்றம் ஏற்படும்

நல்ல சிந்தனை, நாங்கள்,எப்படிஅதிகாரம் செலுத்தும் நிலைக்குஉயரமுடியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Kandiah57 said:

..என்னுடைய..சொந்தக்கருத்து  புலிகளுக்கு மக்கள் போதிய பங்களிப்பும்..ஆதரவும் வழங்கியுள்ளார்கள். எனவே தமிழ்ஈழத்திலும் சரி வெளிநாட்டிலும் சரி தொடர்ந்தும் தமிழ்ஈழவிடுதலைப்புலிகளே. போராடவேண்டும். புதியவர்கள் போராடவேண்டும் என்ற கருத்து சிறுபிள்ளைத்தனமானது.😁🙏

அப்படியென்றால் நீங்கள் அதிகம் பேசணும் எழுதணும் யாழிலும்.

1 hour ago, Justin said:

புலிகளை தமிழ் மக்கள் வழிநடத்தினார்களா? 🤣

அந்த தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் தான் முள்ளிவாய்க்காலில் தம்மை தடுத்து வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்களா?

கொஞ்ச பக்கங்களை கிழித்து விட்டு வரும் உங்களுக்கு வரலாற்றை எழுதி விளக்கப் படுத்த எனக்கு வயதும் ஆயுளும் ஒத்துழைக்காது. நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Kandiah57 said:

நல்ல சிந்தனை, நாங்கள்,எப்படிஅதிகாரம் செலுத்தும் நிலைக்குஉயரமுடியும்?

முன்னர் சிறுபான்மை வெள்ளையினத்தவர் பெரும்பான்மை கறுப்பினத்தவர்களை தென்னாபிரிக்காவில் அடக்கியாண்டார்கள், அதே போல ஒட்டு மொத்த உலக சனத்தொகையில் சிறுபான்மையினத்தவர்களான வெள்ளையினத்தவர்கள் உலகை கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளார்கள். ருபேர்ட் மேர்டொக் யூத இனத்தவர், செல்வந்தர், மேற்குலகில் தனது தொலைக்காட்சி, பத்திரிகைகள், வானொலிகள் என தனது தகவல் தொடர்பு சாதனங்களினூடாக வலது சாரி கட்சிகளுக்காக செயற்படுகிறார், வலது சாரிக்கட்சி முதலாளித்துவம் மற்றும் அடிப்படைவாதத்தினூடாக தமதிருப்பை உறுதிப்படுத்துகிறது, விடுதலைப்புலிகள் அமைப்பு பொதுவுடமைக்கொள்கையான இடது சாரி அமைப்பு, இந்தியாவில் இந்திராகாந்தி ஆட்சியில் இருந்த காலப்பகுதியில் அமெரிக்க இந்திய உறவு கடுமையாக பாதிப்பிற்குள்ளாகியிருந்தது ஆனால் இப்போது மோடி ஒரு வலது சாரி, இந்த உலகையாளும் சிறுபான்மை வெள்ளையினத்தவர்களுக்கு உலகெங்கும் இவ்வாறான வலது சாரி முகவர்கள் தேவை (அடியாட் கள்) உலகையாள.
எவ்வாறு ரூபேர்ட் மேர்டொக் மேற்குலகில் அரசை தீர்மானிக்கின்றார், பணம், அதிகாரம்,நாமும் பொருளாதார மற்றும் கல்வி மூலம் அதிகாரங்களை பெறுவதுடன் காலத்திற்கேற்ப கொள்கை வகுப்புக்களையும் செய்யவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அப்படியென்றால் நீங்கள் அதிகம் பேசணும் எழுதணும் யாழிலும்.

கொஞ்ச பக்கங்களை கிழித்து விட்டு வரும் உங்களுக்கு வரலாற்றை எழுதி விளக்கப் படுத்த எனக்கு வயதும் ஆயுளும் ஒத்துழைக்காது. நன்றி

கஷ்டப் படாதீர்கள் விசுகர்! உங்கள் போலியான வரலாற்றுப் பாடம் போராட்ட காலத்தில் தாயகத்தில் இருந்த என் போன்றோருக்கு அவசியமில்லை! 

 கணணி வழி, செவி வழி கேட்டு ஈழவரலாற்றைப் புரிந்து கொள்வோருக்கு மட்டுமே கற்பித்தால் வரவேற்பிருக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

கஷ்டப் படாதீர்கள் விசுகர்! உங்கள் போலியான வரலாற்றுப் பாடம் போராட்ட காலத்தில் தாயகத்தில் இருந்த என் போன்றோருக்கு அவசியமில்லை! 

 கணணி வழி, செவி வழி கேட்டு ஈழவரலாற்றைப் புரிந்து கொள்வோருக்கு மட்டுமே கற்பித்தால் வரவேற்பிருக்கும்!

உண்மை தான். போராட்டம் உங்கள் ஒரு சில கோட்சூட்டுடன் வெளிநாடு வந்தோரை மட்டுமே பாதித்தது. என் போன்று அனைத்தையும் இழந்து கட்டிய சறத்துடன் ஓடி வந்தவர்களை வரலாற்றில் வரவிடமாட்டீர்கள் என்பது தெரிந்தது தான். ஆனால் கட்டிய சறத்துடன் ஓடி வந்தவர்களை வரலாறு எழுதும்.  ஏனெனில் அவர்களை எழுதாமல் வரலாறு பூர்த்தி ஆகாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

வந்தவர் என்ன அந்தஸ்துடன் எப்படி வந்தார் என்ற பேச்சை நான் தொடுவதில்லை!

ஆனால் வந்த வழியை எடுக்காமல் நீங்கள் எந்த திரியிலும் கருத்தாடுவதேயில்லை! இந்தப் பிரச்சினை உங்களுடையது, எனவே எனக்கு கருத்தில்லை!

ஆனால், தவறான, மிகைப்படுத்திய "பக்தி" வரலாற்றை எழுதி, பரப்பி நூறு ஆண்டுகள் கழித்து இராமாயணம், நளவெண்பா போல தமிழர் போராட்டம் கற்பனைக் காவியமாக வாசித்து தூக்கி வீசப்படும் நிலை தான் உங்கள் போன்றோரால் உருவாகும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

வந்தவர் என்ன அந்தஸ்துடன் எப்படி வந்தார் என்ற பேச்சை நான் தொடுவதில்லை!

ஆனால் வந்த வழியை எடுக்காமல் நீங்கள் எந்த திரியிலும் கருத்தாடுவதேயில்லை! இந்தப் பிரச்சினை உங்களுடையது, எனவே எனக்கு கருத்தில்லை!

ஆனால், தவறான, மிகைப்படுத்திய "பக்தி" வரலாற்றை எழுதி, பரப்பி நூறு ஆண்டுகள் கழித்து இராமாயணம், நளவெண்பா போல தமிழர் போராட்டம் கற்பனைக் காவியமாக வாசித்து தூக்கி வீசப்படும் நிலை தான் உங்கள் போன்றோரால் உருவாகும்!

நான் போரால் பாதிக்கப்படவில்லை என்பதை எவ்வாறு முடிவு செய்கிறீர்கள்?? முன் பின் ஓடி வந்ததை வைத்து எவ்வாறு நக்கல் நையாண்டி செய்வீர்கள்?? 

அடிக்கடி இவ்வாறான வார்த்தைகளை பாவித்து இங்குள்ள உறவுகளை கோபப்படுத்துவதை பலரும் பல முறை குறிப்பிட்டுள்ளார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.