Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

யார் இந்த வைகுந்தவாசன்.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் இருந்து அவரை நாடுகடத்தியநாள் இன்று
1982,நவம்பர்,05-38,வருட்ம்

அவர்தொடர்பான பதிவு இது

1978 இல் அவை ஐ நா சபையில் தாம் தமிழ் ஈழத்திலிருந்து வந்திருப்பதாகச் சொல்லி தமிழ் ஈழம் என்ற நாட்டை ஐ நா வில் பிரகடனம் செய்தார்.

அளவெட்டியைப் பிறப்பிடமாக் கொண்ட கிர்ஷ்ணா வைகுந்தவாசன் சட்டத்தரணியாகி  சம்பியாவுக்கு நீதவான் பதவி பெற்றுப் பின்னர் லண்டன் சென்று லண்டனில்  தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவில் இலங்கைக் கிளையின் முக்கியத்தராகப் பணியாற்றினார்.

ஐ நாவில் தனியொருவராக இவர் செய்த சாதனை இன்று பேரவையாக நிற்கும்  தமிழர்  அமைப்புகளுக்கெல்லாம்  ஒரு படிப்பினையும் சவாலுமாகும் எனலாம்.

இலங்கையின் வெளிநாட்டு அமைச்சராக அன்று விளங்கிய  ஏ சி எஸ் ஹமீத் அவர்கள் ஐ.நாவில் பேசுவதற்குத் தனது இருக்கையை விட்டு எழும்புவதற்கு முன்னரேயே கிருஷ்ணா வைகுந்தவாசன் எழுந்து சென்று மிகவும் கம்பீரமான தொனியில் உலக சபையில் இப்படிச் சொன்னார்:-
“     எனது பெயர் கிருஷ்ணா சிறி லங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே இருக்கும் 25 இலட்சம் மக்களைக் கொண்ட பலம் பொருந்திய தமிழீழத்திலிருந்து வந்திருக்கின்றேன். தமிழீழம் போன்ற அடக்கி ஒடுக்கப்பட்டுள்ள சிறிய தேசங்கள் உலகின் ஆக உயர்ந்த மன்றமான இந்தச் சபையில் தமது முறையீடுகளை வைக்க முடியாதென்றால் நாங்கள் எங்கேதான் போவது? தயவுசெய்து ஒரே ஒரு நிமிடம் என்னைப் பேசுவதற்கு அனுமதியுங்கள். சிறிலங்கா அரசாங்கம் தனது இனக்கொலைக் கொள்கையைத் தொடருகின்றது"

இவ்வளவும் பேசி முடித்ததும் ஒலிவாங்கி நிறுத்தப்பட்டது. அவரைப் பாதுகாப்பு அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றி விட்டார்கள். இதைத் தொடர்ந்து அவரைச் சூழப் பெரும் எண்ணிக்கையிலான தொலைக்காட்சி ஊடகவியலாளர்களும் பத்திரிகையாளர்களும் சூழ்ந்து கொண்டார்கள். அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் இதழின் நிருபர் முதலில் அவரிடம் கேள்விக் கணை தொடுத்தார். "நீங்கள் உங்கள் பேச்சில் தமிழீழம் பற்றிக் குறிப்பிட்டீர்களே - இந்த நாடு உலக வரை படத்தில் எங்கே இருக்கிறது?" எனக் கேட்டார். அதற்கு வைகுந்தவாசன் பின்வருமாறு பதில் கொடுத்தார்.

“     நான் குறிப்பிடும் தமிழீழம் இந்தியப் பெருங்கடலில் தென்னிந்தியாவுக்குத் தெற்கேயும் இலங்கைக்கு வடக்கேயும் பாக்கு நீரிணையை அண்மித்ததாகவும் வங்காள விரிகுடாக் கடலை ஒரு பக்க எல்லையாகவும் கொண்டிருக்கிறது. அங்கு 25 லட்சம் தமிழ் பேசும் மக்கள் வாழ்கிறார்கள். அவர்களை இலங்கை அரசாங்கம் இனப் படுகொலைக்குள்ளாக்குகிறது.

1978 இற்குப் பின்னர் அதாவது ஐ  நா வில் அத்து மீறிப் பிரவேசித்து பாதுகாப்பு அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டு ஒரு சர்ச்சைக்குரியவரான பின்னர் 1980 இல்  திருமதி இந்திரா காந்தியை புது டெல்லி சென்று சந்தித்திருக்கிறார் திரு வைகுந்தவாசன்.

1979 இல் ஜே ஆர்  ஒரு வருடத்தில் பயங்கரவாதத்தை ஒழிப்பதாகக் கூறி தமது மருகனை வடக்கிற்கு அனுப்பியபின்னர்    இடம்பெற்ற இளைஞர்கள் படு கொலை i களையடுத்து  அன்னை இந்திரா காந்தியிடம் ஈழத் தமிழரின் துன்பங்கள்  பற்றி குறிப்பாக இளைஞர்கள் படும் இன்னல்கள் பற்றி ஒரு அறிக்கையை 1979 இல் அனுப்பியிருந்தார்

அதற்கு இந்திரா காந்தி அவர்கள் மொராஜி தேசாயின்  ஆட்சியிலிருந்த ஜனதா கட்சி இலங்கை அரசுடன் கொண்டுள்ள உறவுகள் பற்றிக் கவலை தெரிவித்ததுடன் அதனால் இலங்கையில் தமிழ் மக்கள் படும் துயரங்கள் பற்றி ஜனதா அரசு அக்கறை கொள்ளும் எனத் தாம் சந்தேகப்படுவதையும் தேர்தலில் கவனமாக இருப்பதால் எவ்வகையிலும் மக்கள் கவனத்தில் கொண்டு செல்லக் கூடிய சாத்தியங்கள் பற்றி தாம் பார்ப்பதாகவும்    வைகுந்தவாச னுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

அமரர்  வைகுந்தவாசன் அவர்கள் 1980 
நாடுகடந்த தமிழீழ அரசை நிறுவும் முயற்சிக்கு ஆதரவு தேடும் பொருட்டு இந்தியா சென்றிருந்த போது 1982 நவம்பர் 5 இந்திய அரசினால் நாடு கடத்தப்பட்டு இங்கிலாந்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்   .

மின்னஞ்சலில் வந்நது.

 • Like 3
Link to post
Share on other sites

இவர் ஐநாவில் பேசிய வீடியோ பார்த்த நியாபகம். அல்லது போட்டோவோ தெரியாது. தேடினால் கிடைக்கவில்லை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

2 hours ago, goshan_che said:

இவர் ஐநாவில் பேசிய வீடியோ பார்த்த நியாபகம். அல்லது போட்டோவோ தெரியாது. தேடினால் கிடைக்கவில்லை.

 

https://www.docdroid.net/lCxC0su/4246-pdf

இந்த இதழ் தங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன் தோழர்..👌

 • Like 2
 • Thanks 2
Link to post
Share on other sites
4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

 

 

https://www.docdroid.net/lCxC0su/4246-pdf

இந்த இதழ் தங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன் தோழர்..👌

நன்றி தோழர்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

 

 

https://www.docdroid.net/lCxC0su/4246-pdf

இந்த இதழ் தங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன் தோழர்..👌

பகிர்வுக்கு நன்றி தோழர்.....!  👌

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

அவரை  கடைசி காலங்களில் சந்தித்து இருக்கிறேன் .

இலண்டன் ரூட்டிங் பகுதியில் அடிக்கடி தனது ஐ.நா. சபை உரை பற்றிய சாகஸங்கள் அடங்கிய பிரசுரங்களை தமிழர்களுக்கு விநியோகிப்பார். 

அந்த ஸ்ரண்ட்டைத் தவிர போராட்டம் உச்சம்பெற்ற காலத்தில் கூட்டங்களில் பேசியதை நான் காணவும் இல்லை. கேள்விப்படவும் இல்லை. அறிந்தால் பகிருங்கள்.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.