Jump to content

தமிழ் தேசியமே எமது மூச்சு! யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியமே எமது மூச்சு! யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

மீண்டும் ஒருமுறை சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம் மற்றும் தமிழ் தேசியம் இவையே எமது மூச்சு என உரத்து ஒலிப்போம் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் மக்கள் பேரெழுச்சியாக திரண்ட பொங்கு தமிழ்ப் பிரகடனத்தின் 20 ஆம் ஆண்டு நிறைவு நாள் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இதன்போது மாணவர் ஒன்றியத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொங்கு தமிழ் நினைவுத் தூபியில், கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் பாக்கியநாதன் உஜாந்தன் தலைமையில் இந்த நினைவு நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி மற்றும் மலரஞ்சலி என்பன இடம்பெற்றது.

இதன்போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தயாரிக்கப்பட்ட பொங்கு தமிழ் நினைவு நாள் அறிக்கையும் வாசித்துக் காட்டப்பட்டது.

இந்த நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய நினைவு நாளில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு,

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

https://www.ibctamil.com/srilanka/80/158140

  • Thanks 1
Link to post
Share on other sites

பொங்கு தமிழ் பிரகடனத்தின் 20ஆம் ஆண்டு நிறைவு: யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் அறிக்கை!

   by : Litharsan

http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/Pongu-Thamizh-3.jpg

சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம் மற்றும் தமிழ் தேசியம் ஆகியவையே எமது மூச்சு எனவும் இதற்காக உரத்து ஒலிப்போம் என்றும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தில் மக்கள் பேர் எழுச்சியாகத் திரண்ட பொங்கு தமிழ் பிரகடனத்தின் 20ஆம் ஆண்டு நிறைவு நாள் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொங்கு தமிழ் நினைவுத் தூபியில், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் பாக்கியநாதன் உஜாந்தன் தலைமையில் இந்த நிறைவு நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில், இரண்டு நிமிடங்கள் மௌன மரியாதை செலுத்தப்பட்டதுடன் மற்றும் மலர் தூவி பொங்கு தமிழ் பிரகடன 20ஆம் ஆண்டு நிறைவுநாள் நினைவுகூரப்பட்டது. இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தயாரிக்கப்பட்ட பொங்கு தமிழ் நினைவு நாள் அறிக்கை வாசித்துக் காட்டப்பட்டது.

குறித்த அறிக்கையில், “முள்ளிவாய்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டு தமிழ் மக்கள் தங்களது நினைவு உரிமையும் மறுக்கப்பட்ட ஒரு காலப் பின்னணியில் நாங்கள் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 20ஆவது ஆண்டு நிறைவை நினைவு கூறுகின்றோம்.

2001ஆம் ஆண்டு ஜனவரி 17இல் தமிழ் மக்கள் தங்களது இன உரிமைகளை வலியுறுத்தி உலகெங்கும் அவற்றைப் பறைசாற்ற மிகுந்த எழுச்சியோடு இராணுவ அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஒன்று கூடினார்கள்.

அவ்வாறாக அவர்கள் ஒன்றுகூடி வந்தபொழுது மேற்கொண்ட பிரகடனத்தை நாம் இங்கு கல்வெட்டாக வடித்து வருடா வருடம் நினைவு கூறுகின்றோம். தமிழ் மக்களது அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் என்கின்ற விடையங்களை இந்தப் பிரகடனம் உள்ளடக்கி நிற்கின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த இந்த பொங்கு தமிழ் உலகின் பல நாடுகளிலும் அங்கங்கு வாழும் தமிழ் மக்களால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு உலகம் முழுவதற்கும் தமிழ் மக்களது அடிப்படை அபிலாசைகளை எடுத்துரைத்து வருகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தின் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை இந்த பொங்கு தமிழ் நிகழ்வும், இங்கு நிறுவப்பட்டிருக்கும் பொங்கு தமிழ் பிரகடன கல்வெட்டும் பறைசாற்றி நிற்கின்றது.

காலாதி காலமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் எடுத்துவந்த தமிழ்த் தேசிய நிலைப்பாடு, அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள இக்காலகட்டத்தில் நமது பொங்கு தமிழ் பிரகடன நினைவுகூரல் முக்கியத்துவம் பெறுகின்றது.

ஆகவே, மீண்டும் ஒருமுறை இந்த வருடமும் சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் இவையே எமது மூச்சு என உரத்து ஒலிப்போம்” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Pongu-Thamizh.jpg

Pongu-Thamizh-1.jpg

http://athavannews.com/பொங்கு-தமிழ்-பிரகடனத்தின/

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அறிக்கை தாயகத்தில் இருந்து. டொட். 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

அறிக்கை தாயகத்தில் இருந்து. டொட். 

இங்கு பலருக்கு ஏரியப்போகின்றது, தமிழ் தேசியமென்ற வார்த்தை யாழ் பல்கலையில் இருந்து வருவது, 

தீக் கோழி முட்டையிடும் வலி / எரிச்சல் இவர்களுக்கு இருக்கும்😊

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்கள் வீட்டுப் பெண்களுக்கு  மார்புகள்  வெட்டப்படவில்லை  உங்கள் பிள்ளைகள்  எவரும்  தொலைந்து போகவில்லை  உங்கள் பிள்ளைகளை  எவரும் வல்லுறவு  செய்யவில்லை  உங்கள்  சொத்து சுகங்கள்  எதையும்  நீங்கள்  இழக்கவில்லை  பசி பட்டினியால்  நீங்கள்  எவரும் இறக்கவில்லை  இழந்தது  எல்லாம்  நாங்கள் மட்டுமே  ஒரு பொல் பொட்டையோ  ஒரு ஹிட்லரையே  ஒரு ஸ்டாலினையோ  ஒரு முசோலினியையோ  அந்த மக்களை மறக்கச் சொல்லுங்கள் நாமும் மறந்து விடுகிறோம். பா.உதயன் ✍️
    • வாதவூரன் வல்வை சகாரா யாவர்க்கும் நன்றிகள்.ஐயோ நான் சனியன் என்பது சங்கடம் தரும் கொரோனாவை தான்.இனி எள்ளு எண்ணெய் எரித்து கொல்லாமல் விடமாட்டான்.தப்பா நினைக்காதேங்கோ கொரோனாக்களை தான் சொல்லுகிறேன்.😂
    • இலங்கையின் சுவையான மட்டன் மிதிவெடி......!  👍 இலங்கையின் சுவையான மீன் மிதிவெடி......!  👍
    • துரோகத்தின் நாட்காட்டி : நாள் 15, வைகாசி 2014 "இனிமேல் எந்த விதமான கிளர்ச்சிகள் நடந்தாலும் நீங்கள் கொல்லப்படுவீர்கள்" முன்னாள்ப் போராளிகளை எச்சரித்த ராணுவப் புல்நாய்வுத்துறையும் கருணா குழுவும் கடந்த 5 நாட்களாக கருணா குழுவும், ராணுவப் புலநாய்வுத்துறையினரும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பலவிடங்களிலும் முன்னாள்ப் போராளிகளைத் தேடி கைதுசெய்தல் மற்றும் விசாரித்தல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். முள்ளியாவ்ய்க்கால் இனக்கொலையின் நினைவுநாட்கள் இன்னும் ஒருசில தினங்களில் அனுஷ்ட்டிக்கப்படவிருக்கும் நிலையில் முன்னாள்ப் போராளிகளை தென் தமிழீழ மக்களையும் அச்சமூட்டும் நடவடிக்கைகளை ராணுவப் புலநாய்வுத்துறை கருணா குழுவின் உதவியோடு ஆரம்பித்திருக்கிறது. ராணுவமும், ராணுவப் புலநாய்வுத்துறையினரும், அவர்களால் வழிநடத்தப்படும் கருணா துணைக் கொலைப்படையினரும் இணைந்து நடத்திய இந்த தேடுதல் நடவடிக்கையில் படுவான்க்ரையிலும், அதனைச் சுற்றியிருக்கும் கிராமங்களிலும் வாழ்ந்துவரும் முன்னாளப் போராளிகள் அனைவரும் அருகிலுள்ள சிங்கள ஆக்கிரமிப்பு ராணுவத்தின் முகாம்களுக்கு வருமாறு பணிக்கப்பட்டிருந்தனர்.  முகாம்களுக்கு இழுத்துவரப்பட்ட முன்னாள்ப் போராளிகளை மிரட்டிய புலநாய்வுத்துறை "இனிமேல் ஏதாவது கிளர்ச்சி நடவடிக்கைகள் அல்லது ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டால் கொல்லப்படுவீர்கள்" என்று மிரட்டியதோடு ராணுவ முகாம்களில் துப்புரவாக்கும் பணிபோன்றவற்றிற்கு கட்டாயமாக வரவேண்டும் என்று விண்ணப்பப் படிவங்களைத் திணித்து பலவந்தமாக அவர்களின் ஒப்புதலையும் பெற்றுக்கொண்டதாகத் தெரியவருகிறது.  இந்த சுற்றிவளைப்புத் தேடுதல்களின்பொழுது ராணுவத்துடன் பவனிவந்த கருணா குழு, போராளிகளின் வீடுகளுக்குள் நுழைந்து ராணுவத்தில் சேருமாறும் அப்படியில்லையென்றால் உங்களைக் கவனிப்போம் என்று கூறியும் மிரட்டியதாக முன்னாள்ப் போராளிகள் தெரிவிக்கின்றனர். வாகரை மற்றும் படுவான்கரைப் பகுதிகளிலேயே இந்தக் கடுமையான அச்சமூட்டும் சுற்றிவளைப்புத் தேடுதல்களை கருணா குழுவினருடன் சேர்ந்து ராணுவப் புலநாய்வுத்துறை செய்துவருகிறது.
    • மண் .இல்லா பயிர் வளர்ப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.