Jump to content

மண்டை தீவில் பதற்ற நிலை - பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மண்டை தீவில் பதற்ற நிலை - பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.!

Screenshot-2021-01-18-11-10-42-392-com-a

விருந்தினர் விடுதி ஒன்று அமைப்பதற்காக மக்களின் காணி சுவீகரிப்பதற்காக நில அளவைத் திணைக்களத்தினர் பொலிஸாரை வரவழைத்துள்ளமையால் மண்டை தீவில் பதற்ற நிலை ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

முன்னதாக ஒன்று திரண்ட மக்கள் வெளியிட்ட எதிர்ப்பு நிலையை அடுத்து அங்கு சென்றிருந்த நில அளவைத் திணைக்களத்தினர் அங்கிருந்து திரும்பிச் சென்றிருந்தனர்.

சிறிது நேரத்தில் யாழ்ப்பாணத்தின் பொலிஸ் உயர் அதிகாரிகளும் பொலிஸாரும் மண்டை தீவுக்கு பாதுகாப்புக்கு வந்திருந்த நிலையில் சிறிது நேரத்தில் முன்னர் திரும்பிச் சென்றிருந்த நில அளவைத் திணைக்களத்தினர் அங்கு பிரசன்னமாகியுள்ளனர்.

இதனை அடுத்து அந்தப் பகுதி மக்களும் அரசியல் பிரமுகர்களும் வீதியில் அமர்ந்து எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

மண்டை தீவில் குடிநீருக்கு நெருக்கடி நிலை காணப்பட்டு வரும் சூழலில், நில அளவை செய்வதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள நிலம் விவசாயச் செய்கைக்கு ஏற்ற நல்ல நிலம் என்றும் நல்ல குடிநீர் உள்ள பகுதி என்றும் தெரிவித்து மக்கள் தமது நிலத்தை அபகரிக்க வேண்டாம் என கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

இதேவேளை, பொலிஸார் அங்கு பிரச்சனமாகியுள்ள நிலையில் கட்டாயமாக மக்கள் வெளியேற்றப்பட்டு நிலம் அளவீடு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அந்தப் பகுதி பதற்றமான சூழல் நிலவுவதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவிக்கின்றார்.

http://aruvi.com/article/tam/2021/01/18/21678/

Link to comment
Share on other sites

கடற்படையினருக்கு ஒரு அங்குலம் நிலத்தை கூட வழங்குவதற்கு ஒட்டுமொத்த தமிழ்மக்களும் தயாரில்லை- கஜேந்திரன்

கடற்படையினருக்கு ஒரு அங்குலம் நிலத்தை கூட வழங்குவதற்கு ஒட்டுமொத்த தமிழ்மக்களும் தயாரில்லை என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்தார்.
இன்று மண்டதீவில் பொதுமக்களின் காணிகளை இராணுவத்தினர் சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டவேளை அதனை கண்டித்து பொதுமக்களும் தமிழ்அரசியல்வாதிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் இதனை தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவித்ததாவது

mandatheevu-pro-300x225.jpg
29 குடும்பங்களை சேர்ந்த மக்களும் தங்களின் சொந்த நிலங்களை இழக்க தயாரில்லை.
மீண்டும் மீண்டும் மக்களை குழப்பும் விதத்தில் காணி திணைக்களம் நடந்துகொள்கின்றது
பிரதேச செயலாளர் இந்த பிரதேசத்தின் நிர்வாகத்திற்கு பொறுப்பானவர் என்ற அடிப்படையில் அவர்களிற்கு இதனை தெரிவிக்கவேண்டும்.
மீண்டும் மீண்டும் நிலங்களை அளப்பதற்கு அனுப்புகின்றனர் ஆற்றில் ஒடும் நீர் நித்திரையா முழிப்பா என பார்ப்பதற்கு கொள்ளி வைத்து பார்ப்பது போல காணித்திணைக்களம் செயற்படுகின்றது,

mandatheevu-protest-300x225.jpg
இது மக்களை குழப்புகின்ற முயற்சி மக்களிற்கு இதில் விருப்பமில்லை என காணித்திணைக்களத்திற்கும் அரசாங்க அதிபருக்கும் பிரதேச செயலாளர் தெரிவிக்கவேண்டும்
மக்களை அபிவிருத்தி செய்து முன்னேற்றுவதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகளை அரசாஙகம் எடுக்கவில்லை,காணிகளை பறிப்பதற்கு மாத்திரம் தான் அலுவல்கள் இடம்பெறுகின்றன

காணித்திணைக்களத்திடம் இந்த நோக்கத்தை கைவிடுமாறு பிரதேச செயலாளர் தெரிவிக்கவேண்டும்,வாழ்க்கையில் கடற்படையினருக்கு காணி கொடுப்பதற்கு ஒருபோதும் மக்கள் இணங்கமாட்டார்கள் இந்த மக்களும் தங்கள் காணிகளை விட்டுக்கொடுப்பதற்கு தயாரில்லை என அவர் தெரிவித்தார்.

Thinakkural.lk

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுமக்களின் காணிகள் சுவீகரிப்புக்கு எதிராக யாழ். மண்டைதீவு பகுதியில் பாரிய போராட்டம்

Published by Loga Dharshini on 2021-01-18 15:55:38

 

யாழ்ப்பாணம் - மண்டைதீவு பகுதியில் பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிராக பாரிய போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. 

போராட்டத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டதால், அங்கு பெரும் பதற்றமும் ஏற்பட்டிருந்ததாக தெரியவருகிறது.

மண்டைதீவு ஜே107 கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட 29 பேரின் 18 ஏக்கர் பரப்பு காணி சுவீகரிப்பதற்காக நில அளவைத் திணைக்களத்தினரால் காணி அளவீடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
spacer.png

இதனையடுத்து, காணி அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து  காணி உரிமையாளர்களும் பொது மக்களும் அரசியல்வாதிகளும் அங்கு திரண்டிருந்தனர். இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போது நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் காணிகளை அளவீடு செய்வதற்கு வருகை தந்திருந்தனர்.
spacer.png

இதன் போது காணிகளை அளவீடு செய்ய கடும் எதிர்ப்பு வெளிப்படுத்திய நிலையில் காணிகளை அளவீடு செய்யாமலே நில அளவைத் திணைக்களத்தினர் திரும்பிச் சென்றிருந்தனர்.
இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் செல்ல தயாரான நிலையில் பொலிஸ் பாதுகாப்புடன் நில அளவை திணைக்கள அதிகாரிகள் மீண்டும் அங்கு வந்து காணிகளை அளவீடு செய்ய போவதாக அறிவித்துள்ளனர்.

ஆயினும் காணிகளை அளவீடு செய்ய அனுமதிக்க முடியாதென்று எதிர்ப்பு தெரிவித்து பொது மக்களும் அரசியல் பிரமுகர்களும் காணிகளின் உரிமையாளர்களும் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அப்பகுதியில்  பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதன் பின்னர் அங்கு வருகை தந்த வேலனை பிரதேச செயலாளர் சோதிநாதன், காணி அளவிடுவதை நிறுத்துவதாகவும் காணி அமைச்சுடன் இது குறித்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரையில் காணி அளவீடு மேற்கொள்ளபடாதென்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து, நில அளவை திணைக்களதினரும் பொலிஸாரும் திரும்பி சென்றனர். இதன் பின் அங்கு நின்றிருந்த மக்களும் அரசியல் வாதிகளும் சென்றிருந்தமை குறிப்பிடதக்கது. இந்தப் போராட்டத்தில் காணி உரிமையாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உறுப்பினர்கள் பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆகிய 4 தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளும் ஒன்றாக இணைந்து எதிர்ப்பு போராட்ட நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.spacer.png

பொதுமக்களின் காணிகள் சுவீகரிப்புக்கு எதிராக யாழ். மண்டைதீவு பகுதியில் பாரிய போராட்டம் | Virakesari.lk

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.