Jump to content

ஸ்ரீ லங்கன்’ எனும் அடையாளம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீ லங்கன்’ எனும் அடையாளம்

-என்.கே. அஷோக்பரன்

இங்கிலாந்தின் மாலபோன் கிரிக்கட் கழகத்தின் (எம்.சி.சி) வருடாந்த சொற்பொழிவை, 2011இல் ஆற்றிய இலங்கையின் புகழ்பூத்த கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார, அவருடைய உரையின் இறுதியில், “நான் தமிழன், நான் சிங்களவன், நான் முஸ்லிம், நான் பறங்கியன், நான் பௌத்தன், நான் இந்து, கிறிஸ்தவத்தையும் இஸ்லாமையும் வழிப்பற்றுபவன்; இன்றும், என்றும் நான் பெருமைமிகு இலங்கையன்” என்று தெரிவித்திருந்தமை, இந்தத் தீவில் வாழ்பவர்களை மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் இந்தத் தீவைப் பூர்வீகமாகக் கொண்டவர்களைப் புளங்காங்கிதம் அடையச் செய்திருந்தது. 

சுதந்திரம் கிடைக்கப்பெற்ற காலம் முதல், இனப்பிரச்சினையில் உழன்று கொண்டிருக்கும் இலங்கையில், மீளிணக்கப்பாட்டின் ஊடாக, இனமுறுகலைத் தீர்த்துவிடும் அவாக்கொண்ட பலரதும் மகுடவாசகமாக, இலங்கையர்கள் பலரும் நேசிக்கும் ‘சங்கா’வின் இந்தக் கூற்று உருவெடுத்தது என்றால் அது மிகையல்ல. நல்லதோர் உரையை, உணர்ச்சிபூர்வமாக முடித்துவைப்பதற்கு ஏற்ற நல்லெண்ணம் தாங்கிய பகட்டாரவாரம் என்றளவில் இது, மிகச்சிறந்ததாகவே கருதப்பட வேண்டும்.

இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பற்றிப் பேசவிளையும் பலரும், குறிப்பாகத் தம்மை நடுநிலைவாதிகளாக, நல்லிணக்கம், மீளிணக்கப்பாடு ஆகியவற்றின் மீட்பர்களாக முன்னிறுத்தும் பலரும், நாம் இனம், மதம், மொழி ஆகிய அடையாளங்களைக் கடந்து ‘ஸ்ரீ லங்கன்’ என்ற அடையாளத்தைச் சுவீகரிக்க வேண்டும் என்ற பகட்டாரவாரப் பேச்சை முன்வைப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. 

ஆனால், உணர்ச்சிவசப்பட்ட பகட்டாரவாரம் என்பதைத்தாண்டி, இந்த நிலைப்பாடுகள் யதார்த்தத்தை உணராதவையாகவும் மீறியவையாகவும் அமைகின்றன என்பதுதான் கசப்பான, ஏற்றுக்கொள்ளக் கடினமான உண்மை. 
யதார்த்தத்தில் ஒருநபர் சிங்களவராகவும் தமிழராகவும் முஸ்லிமாகவும், பறங்கியராகவும் இருக்க முடியாது. ஏனென்றால், இவை வெறும் ‘லேபிள்’கள் அல்ல! ‘ஸ்டிக்கர்’, ‘லேபிள்’களைப் போல, நாம் விரும்பியதை எல்லாம் எடுத்து ஒட்டிக்கொள்ள முடியாது. இவை, மனிதக் கூட்டத்தின் சமூக அடையாளங்கள். மனிதக்கூட்டங்களால், பலநூற்றாண்டுகளாகக் கட்டியெழுப்பிய, காலத்தால் பரிணாமம் அடைந்த அடையாளங்கள். ஒவ்வோர் அடையாளத்துக்குப் பின்னாலும் மொழி, பண்பாடு, வரலாறு, நம்பிக்கை, விழுமியங்கள், நிலம், பிரதேசம் எனப் பல்வேறுபட்ட அம்சங்கள் இருக்கின்றன. 

அதுபோலவே, ஒருநபர் பௌத்தராகவும் இந்துவாகவும் இஸ்லாமியராகவும் கிறிஸ்தவராகவும் இருக்க முடியாது. ஒவ்வொரு முஸ்லிமும் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்ற ‘அல்லாஹ் ஒருவனே வணக்கத்துக்கு உரியவன்’ என்ற பொருளையுடைய கலிமா தவ்ஹீதினை முதலாவதாகச் சாட்சி சொல்கிறான். இதன் மூலம், அல்லாஹ்வைத் தவிர வணங்கப்பட்டு வரும் அனைத்தும் நிராகரிக்கப்படுகிறது. இது இஸ்லாத்தின் அடிப்படை. 

ஆகவே, ஒருவன் இஸ்லாமியனாகவும் பௌத்தனாகவும் இந்துவாகவும் கிறிஸ்தவனாகவும் இருக்க முடியாது. அநேக மதங்களில் இந்தத் தனித்தன்மையுண்டு. மதங்கள் போதிக்கும் தர்மத்தில் பல ஒற்றுமைகளுண்டு. ஆயினும், அவற்றின் சடங்குகள், சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள் பேதமுடையவை. அவை, பலவேளைகளில் மற்றையவற்றை விலக்கி வைப்பனவாகவும் அமைகின்றன. 

ஆகவே, நான் பௌத்தன், நான் இந்து, நான் இஸ்லாமியன், நான் கிறிஸ்தவன், நான் சிங்களவன், நான் தமிழன், நான் முஸ்லிம், நான் பறங்கியன் என்று சொல்வது, சிலவேளைகளில் பலருக்கும் மயிர்க்கூச்செறியச் செய்யும்; உணர்ச்சிப் பொங்கலை உருவாக்கலாமேயன்றி, அதில் யதார்த்தத்தின் பிரதிபலிப்பு என்பது கொஞ்சமும் கிடையாது.

அதுபோலவே, நாம் இனம், மதம் அடையாளங்களைக் கடந்து, ‘ஸ்ரீ லங்கன்’ என்ற அடையாளத்தைச் சுவீகரிக்க வேண்டும் என்ற வெற்றுப் பேச்சும் யதார்த்தத்திலிருந்து விலகியது. ஒருவன் தான் நம்பும் கடவுள், தனது நம்பிக்கைகள், தான் பின்பற்றும் மார்க்க நெறி, தான் பேசும் மொழி, தனது வரலாறு, தனது பண்பாடு, தனது நிலம், தனது மக்கள் எனும் பிடிப்பு என்பவற்றை, யாரோ ஒருவர் அல்லது ஒரு சிலர் இவற்றைத் தாண்டிச் சிந்தியுங்கள் என்று சொல்வதால், இதை விடுத்து, இன்னோர் அடையாளத்தை ஸ்தாபியுங்கள் என்று சொல்வதால் மட்டும் நடந்துவிடக் கூடியதொன்றல்ல.

இங்கு நோக்கம், நல்லெண்ணத்தோடு நல்லிணக்கத்தை உருவாக்க முயற்சிப்பவர்களைக் குறைகூறுவதல்ல. ஆனால், நல்லெண்ணம் மட்டும், நல்ல விளைபயனைத் தந்துவிடாது என்ற யதார்த்த உண்மையை எடுத்துக் காட்ட வேண்டியது அவசியமாகிறது.

 ‘ஸ்ரீ லங்கன்’ என்ற அடையாளத்தை, இங்கு முன்னிறுத்துகிறவர்களின் உண்மை நோக்கமானது, ‘இன-மத’ தேசியத்தைக் கைவிட்டு, இந்தத் தீவில் ‘சிவில்’ தேசியத்தைக் கட்டியெழுப்புவதாகும் என்பது புரிந்துகொள்ளக் கூடியது.  ஆனால், ‘சிவில்’ தேசக் கட்டுமானம் என்பது, “நாம் இன-மதத்தைக் கடந்து, ஸ்ரீ லங்கனாகச் சிந்திப்போம்” என்று, மீண்டும் மீண்டும் பல்வேறு வார்த்தைகளில் கூறுவதன் மூலம் சாதிக்கக்கூடியதொன்றல்ல. 

‘சிவில்’ தேசியம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கு மிகப்பெரிய அரசியல் விருப்பமும் பலமும் தேவை. இனவெறியை அரசியலின் முதலாகவும், தேர்தல் வெற்றிக்கான அடிப்படையாகவும் எண்ணும் தலைமைகள் இருக்கும் வரை, ‘சிவில்’ தேசியத்தைக் கட்டியெழுப்புவதற்கான அரசியல் விருப்பமும் பலமும் எப்படி ஏற்படும் என்பது இங்கு பிரதானமான கேள்வி. 

இங்கு “நாம் ஸ்ரீ லங்கன்” என்று பொதுவௌியில் பாடமெடுக்கும் அரசியல்வாதிகளே, தேர்தல் காலத்தில் “தமிழர் வாக்கு தமிழர்களுக்கே” என்ற பிரசாரத்தையும் முன்னெடுக்கும் முரண்நகை காணப்படும் நிலையில், ‘சிவில்’  தேசியத்தைக் கட்டியெழுப்புவதற்கான உண்மையான விருப்பமும் தேவையும் அரசியல் பரப்பில் இருக்கிறதா என்று நாம் யோசிக்க வேண்டும்.

மறுபுறத்தில், புதிய ‘சிவில்’ தேசிய அடையாளத்தைச் சுவீகரிப்பதற்காக, தமது பலநூற்றாண்டுகால அடையாளங்களை விட்டுக்கொடுக்க, இந்தத் தீவின் மக்கள் தயாராக இருக்கிறார்களா என்ற கேள்வியும் மிக அடிப்படையானது. சிறுபான்மையினர் ‘ஸ்ரீ லங்கன்’ என்ற அடையாளத்தைச் சுவீகரிப்பதற்கான தேவை என்பது ஒருபுறமிருக்க, இந்தத் தீவில் பௌத்தத்தைக் காப்பது சிங்களவர்களின் கடமை என்று ஆழமாக நம்பும் சிங்கள-பௌத்தர்கள், தமது ‘சிங்கள-பௌத்த’ அடையாளத்தைத் தாண்டி, ‘ஸ்ரீ லங்கன்’ என்பதைச் சுவீகரிப்பதற்கான அவசியப்பாடு இருக்கிறதா? அவ்வாறானதோர் அவசியப்பாடு இல்லாத நிலையில், இந்தப் பகட்டாரவாரத்தின் விளைவுதான் என்னவாக இருக்கப் போகிறது?  

இது நல்லெண்ணப் பேச்சு. விளைவு பற்றியெல்லாம் ஆராய்வது அவசியமில்லை என்று ‘சிவில்’ தேசியத்தை, வெறும்  ‘நற்குண நவிற்சி விளம்பல்’ (virtue signalling) அரசியலாக மட்டுமே வரையறுப்பதானால், மேற்சொன்ன கேள்விகளும் இந்த ஆய்வுகளும் அவசியமில்லாதவை. ஆனால், ‘சிவில்’ தேசியம் என்பது உண்மையில், அடையப்பெறப்பட வேண்டும் என்று விரும்புகிறவர்கள், மேற்சொன்ன கேள்விகள் உள்ளிட்ட பல்வேறு யதார்த்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டியதாக இருக்கும்.

இந்த இடத்தில், மாற்று உபாயங்கள் பற்றியும் சிந்திக்கலாம். இனம், மதம், மொழி ஆகியவை சார்ந்த தேசிய அடையாளங்கள், இந்தத் தீவின் மக்கள் கூட்டங்களிடையே ஆழவேர்விட்டுள்ளது. இவ்வாறு, இனம், இன-மதத் தேசங்களாக பிரிந்துள்ள மக்கள் கூட்டங்கள், இந்தத் தீவு யாருக்குரியது என்ற கேள்வியில் முரண்பட்டு நிற்கின்றன. 

இனம், மதம் போன்ற அடையாளங்களை, அடையாளப் பிரக்ஞையைத் தகர்த்து, சிவில் தேசத்தைக் கட்டமைப்பது என்பது, யதார்த்தத்தில் நடைமுறைச் சாத்தியம் குறைந்தது. ஆகவே, இனம், மதம் ஆகிய அடையாளங்களைத் தாண்டிய ‘ஸ்ரீ லங்கன்’ என்கிற சிவில் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக, இவை அனைத்தையும் உள்ளடக்கிய ‘பன்மைத்தேச’ அரசாக (Plurinational state) இந்தத் தீவைக் கட்டியெழுப்புதல் ஒப்பீட்டளவில் சாத்தியமான ஒன்றாகவே தென்படுகிறது. 

இந்த நிலையின் கீழ், ஒவ்வொருவரும் தான் விரும்பும் அடையாளத்தைச் சுவீகரித்துக்கொள்ளக் கூடிய நெகிழ்ச்சித்தன்மை சாத்தியமாகிறது. இலங்கைத் தீவுக்குள் வாழும் ஒவ்வொரு தேசமும், தான் சுவீகரித்துள்ள அடையாளத்தையும் அடையாளங்களையும் கொண்டிருக்கக் கூடிய நெகிழ்ச்சித்தன்மை, பன்மைத் தேச அரசுக் கட்டமைப்பின் கீழ் காணப்படும். 

இங்கு இனம், மதம் போன்ற தேசிய அடையாளங்கள் துறக்கப்பட வேண்டிய அவசியப்பாடு ஏற்படாது. பன்மைத் தேசிய அரசு, எல்லா அடையாளங்களையும் அரவணைத்து ஏற்றுக்கொள்வதாக அமையும். இது போன்றதொரு நிலை, இலங்கைத் தீவுக்குப் பொருத்தமானதாக அமையும். 

ஆனால், மாற்றங்கள் எதுவாக இருந்தாலும், அதைச் செய்வதற்குரிய அரசியல் விருப்பமும் பலமும் இல்லாவிட்டால், அவை சாத்தியப்படாது. தீர்வு காணவேண்டும் என்ற எண்ணம்தான் இங்கு முதற்படி. என்ன வகையான தீர்வு என்ற தெரிவுப் பிரச்சினை, அடுத்த கட்டம்தான். 

ஆனால், இனவெறித் தீக்கு எண்ணையூற்றி அரசியல் செய்யும் இன-மைய அரசியல், அதிலிருந்து விலகி இனப்பிரச்சினைக்கு தீர்வு காண விரும்பும் வரை, ‘ஸ்ரீ லங்கன்’ என்பது  ‘நற்குண நவிற்சி விளம்பல்’ அரசியலாகவோ, தாராளவாதிகளின் கைதட்டும் பாராட்டும் பெறும் பகட்டாரவாரப் பேச்சாகவும் மட்டும்தான் இருக்கும். அதைத்தாண்டி அதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஸ்ரீ-லங்கன்-எனும்-அடையாளம்/91-263890

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 18/1/2021 at 07:14, உடையார் said:

 ஆகவே, நான் பௌத்தன், நான் இந்து, நான் இஸ்லாமியன், நான் கிறிஸ்தவன், நான் சிங்களவன், நான் தமிழன், நான் முஸ்லிம், நான் பறங்கியன் என்று சொல்வது, சிலவேளைகளில் பலருக்கும் மயிர்க்கூச்செறியச் செய்யும்; உணர்ச்சிப் பொங்கலை உருவாக்கலாமேயன்றி, அதில் யதார்த்தத்தின் பிரதிபலிப்பு என்பது கொஞ்சமும் கிடையாது.

மிக சிறந்த வரிகள். இணைப்புக்கு மிகவும்  நன்றி உடையார். 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆண்களும் புடவை கட்டலாமா... ஃபோட்டோஷூட் மூலம் செய்துகாட்டிய ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி! சு.சூர்யா கோமதிசெந்தில் குமார்.கோக.சுபகுணம் சமூகத்தில் என்ன மாற்றம் நிகழ்ந்தாலும், பெண்களைக் கொச்சைப்படுத்தும் வழக்கம் மட்டும் இன்னும் மாறவில்லை. அதன் வெளிப்பாடுதான் ஒருவரைத் திட்டும்போது பெண்ணுறுப்பைக் குறிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்துவது, ஆண்களை அவமதிப்பதாக நினைத்துக்கொண்டு, `பொம்பள மாதிரி சேலையைக் கட்டிக்கோ' போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது. பெண்களும், பெண்கள் பயன்படுத்தும் பொருள்களும் குறைந்த மதிப்பு கொண்டவை என்ற எண்ணத்தின் வெளிப்பாடே இந்தச் சீண்டல்களுக்கு காரணம். புடவை என்ன அவ்வளவு மதிப்பு குறைந்த ஆடையா? பெண்கள் பயன்படுத்துவதால் ஓர் ஆடையை எப்படிக் குறைத்து மதிப்பிட முடியும் என்பதே முதல் கேள்வியாக என் மனதில் விழுந்தது. அதற்கான பதிலைத்தான் இந்தப் போட்டோஷூட் மூலம் தந்திருக்கிறார் ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி.   ஆண்களும் புடவை கட்டலாமா... ஃபோட்டோஷூட் மூலம் செய்துகாட்டிய ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி! - Men too wore saree in the past says stylist Archana Aarthi - Vikatan
    • இம்ரான் குரேஷி பிபிசிக்காக கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியின் வருகை, தென்னிந்தியாவில் அதிகமாகவே இருந்தது. சமீபத்தில் கேரளாவில் மீனவர்களோடு படகில் கடலுக்குச் சென்றவர் அரபிக் கடலில் குதித்து அனாயாசமாக நீச்சலடித்தார். தமிழகத்தில் மாணவி ஒருவர் விடுத்த சவாலை ஏற்றுக் கொண்டு `புஷ் அப்ஸ்` எடுத்தார். மற்றொரு இளைஞரிடம் அகிடோ எனும் தற்காப்புக் கலையைக் காட்டினார் ராகுல் காந்தி. ராகுல் காந்தி மீனவர்களோடும், மாணவர்களோடும் உரையாடியதை, தென்னக நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள், வடக்கத்திய ஊடகங்களைப் போல அல்லாமல் நியாயமாகவே செய்திகளை வெளியிட்டன. கடந்த வாரம் கூட தென் இந்தியாவில் சமூக ஊடங்களில் ராகுல் காந்தி குறித்து அதிகமாக பேசினார்கள். 50 வயதான ராகுல் காந்தி, தென்னகத்தில் குறிப்பாக சட்டசபைத் தேர்தல் நடக்கவிருக்கும் தமிழகம் மற்றும் கேரளாவில் முழு கவனத்தை ஈர்ப்பது போலத் தெரிகிறது. தென்னக மக்களோடு இருப்பது அவருக்கு ஆறுதல் அளிப்பது போலத் தெரிகிறது. தென் இந்தியாவில் இருக்கும் ஊடகத்தை கவனிப்பவர்கள், பத்திரிகை மற்றும் சமூக வலைதளங்களில் நிலவிய சூழல் குறித்து உண்மையிலேயே ஆச்சர்யப்படவில்லை. ராகுல் தீவிர அரசியலில் இருந்து தப்பிப்பதற்கும், தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்குமான இடமாக தென்னகம் இருக்கிறது என சிலர் நம்புகிறார்கள். பட மூலாதாரம்,INC "ஊடகங்கள் அவருக்கு ஒரு நீண்ட வாய்ப்பைக் கொடுக்க விரும்புகிறது. சில நேரங்களில் ராகுலே அதைக் கோருகிறார். அதற்காக அவர் விமர்சனத்துக்கும் உள்ளாகி இருக்கிறார், இருப்பினும் அவருக்கு சரியான அளவில் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. பிராந்திய அளவிலான ஊடகங்களால் ராகுல் விமர்சிக்கப்படுகிறார், ஆனால் அந்த விமர்சனங்கள் எல்லை மீறுவதில்லை," என இந்தியாவின் முதல் பிராந்திய தொலைக்காட்சி சேனலின் நிறுவனரான சசி குமார் பிபிசி இந்தி சேவையிடம் தெரிவித்தார். மற்ற காரணங்களும் இருக்கின்றன பிராந்திய ஊடகங்கள் இப்படி நடந்து கொள்வதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. "உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களைக் காட்டிலும் தென் இந்தியாவில் அரசியல் குறைந்த அளவுக்கு நச்சுத்தன்மை கொண்டதாக இருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் இந்துத்வா என்கிற விஷயம் மிகவும் பரவலாக இருக்கிறது. தென்னகத்தில் மிகக் கடுமையான சொற்போர் இல்லை," என பிபிசி இந்தியிடம் தெரிவித்தார் தி இந்து பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் என்.ராம். "அதற்கு காரணம் தென் இந்தியாவில் காங்கிரஸ் வலுவாக இருப்பதால் அல்ல, கர்நாடகம் தவிர மற்ற மாநிலங்களில் பாஜக வலுவாக இல்லாதது தான் காரணம்," என்கிறார் சசி குமார். "தன்னால் கடலில் குதித்து நீந்த முடியும், தன்னால் புஷ் அப்ஸ் எடுக்க முடியும் என்பது எல்லாம் அவரை வெளிப்படுத்தும் விதத்தில் இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோதியை விட நல்ல உடல் வலிமை கொண்ட ஒருவராக வந்து கொண்டிருக்கிறார் ராகுல். இது ஓர் அருமையான முரண். அரசியலில் தன்னை அதிக உடல் வலிமை கொண்டவராக காட்டிக் கொள்ளும் உத்தி ராஜிவ் காந்தியால் அறிமுகப்படுத்தப்படவில்லை, மாறாக நரேந்திர மோடி அதை அறிமுகப்படுத்தினார். 56 இன்ச் மார்புடையவர் என்கிற கோட்பாட்டை எதிர்க்கும் ஒரு வழி இது" எனக் கூறுகிறார் சசி குமார். "தன் தந்தை தமிழகத்தில் கொல்லப்பட்டார் என்கிற போதும், ராகுல் தமிழகத்தில் மகிழ்ச்சியாக இருப்பது போலத் தெரிகிறது. அதை அவர்கள் கடந்து வந்துவிட்டார்கள் என்பதும், அந்த நிகழ்வு ஒரு நிரந்தர வடுவை ஏற்படுத்தவில்லை என்பதும் மிகவும் குறிப்பிடத்தக்கது. தன் பாட்டி இந்திரா காந்தி மற்றும் தன் தந்தை ராஜிவ் காந்தியை விடவும் ராகுல் காந்தி தமிழகத்தில் சகஜமாக இருக்கிறார்" என என்.ராம் கூறுகிறார். அரசியல் ரீதியாகவும் ராகுல் காந்தி தென்னகத்துக்கு வர வேண்டியது அடிக்கடி அவசியமாகிறது "காரணம் கேரளாவின் வயநாடு தான் ராகுலை அமேதி தொகுதியின் தோல்வியில் இருந்து காப்பாற்றியது. தென்னகத்தில் நேரு - காந்தி குடும்பத்துக்கு எப்போதும் இருந்த ஆதரவை அவர் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார். தற்போது காங்கிரஸ் கட்சி தன் செல்வாக்கை இழப்பது போலத் தோன்றுகிறது, ஆனால் நேருவின் கட்சி இதைக் கடந்து வந்துவிடும் என்பது போலத் தான் தெரிகிறது" என்கிறார் விமர்சகரான பிஆர்பி. பாஸ்கர். பட மூலாதாரம்,INC அலட்டிக் கொள்ளாத ’கூல் கை’ பிம்பம் "ராகுல் காந்தி தமிழகத்தில் சிறப்பாகவே நடத்தப்படுகிறார். சொல்லப் போனால் அவரை தமிழகத்தின் குழந்தை போல நடத்துகிறார்கள். ஒரு வில்லன் போல பார்க்கப்படும் அமித் ஷாவைப் போல ராகுல் காந்தி பார்க்கப்படவில்லை. ஒரு `கூல் கை` போலத் தான் பார்க்கப்பட்டார். இது தான் மக்களுக்கு ராகுல் காந்தி மீதிருக்கும் பிம்பம்" என்கிறார் நக்கீரன் பத்திரிகையைச் சேர்ந்த தாமோதரன் பிரகாஷ். தெலுங்கு மொழி பேசும் தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்திலும் இதே கருத்து தான் நிலவுகிறது. "வடக்கத்திய ஊடகங்களைப் போல ராகுல் காந்தி இலக்கு வைத்து தாக்கப்படவில்லை. பிராந்திய அளவில் எந்த தலைவர்களும் இல்லை மற்றும் அப்பிராந்தியத்தில் ஆளும் பிராந்தியக் கட்சிக்கு, காங்கிரஸ் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதை ஆங்கில ஊடகங்கள் அறிந்திருந்தார்கள்," என ஹைதராபாத்தில் இருக்கும் ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத் துறைப் பேராசிரியராக இருக்கும் பத்மஜா ஷா கூறுகிறார். "தெலுங்கு ஊடகங்களில் எல்லா விஷயங்களும் பிரசூரிக்கப்படவில்லை அல்லது ஒளிபரப்பப்படவில்லை, ஆனால் இதுவரை வெளியான எல்லாமே ராகுலுக்கு நேர்மறையாகவே இருந்தன. குறிப்பாக இளைஞர்களுடனான உரையாடல்கள் நல்ல விதத்திலேயே பார்க்கப்பட்டது," என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஜின்கா நாகராஜு. "கன்னட பத்திரிகைகள் தேசிய ஊடகங்களிலிருந்து அதிகம் மாறுபடவில்லை. கன்னட ஊடகங்கள் ராகுலை வேடிக்கைக்கு உள்ளாக்கியது அல்லது விமர்சித்தது. அதிலும் குறிப்பாக 2014-க்குப் பிறகு," என்கிறார் உதயவானி என்கிற கன்னட நாளிதழின் முன்னாள் ஆசிரியர் பூர்ணிமா. பட மூலாதாரம்,INC கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தியே நின்றது, அக்கட்சிக்கு பெரிய உத்வேகத்தைக் கொடுத்தது. ஊடக வெளிச்சம் தொடர்ந்து ராகுல் காந்தி மீதே குவிந்திருந்தது. "இருப்பினும் சபரிமலை குறித்து அவர் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மோசமாகப் பேசுவதை அவர் தடுத்து நிறுத்தவில்லை. இங்கு தான் அவருடைய அரசியல் மிகவும் மேலோட்டமானதாகிவிட்டது," என்கிறார் என்.ராம். "சில பிரச்னைகளைக் குறித்து அரசிடம் கேள்வி எழுப்ப வேண்டிய ஊடகங்கள், ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்புகிறது. இப்படிப்பட்ட பாகுபாட்டை ராகுல் காந்தியிடம் ஊடகங்கள் காட்டுகின்றன," என பெயர் குறிப்பிட விரும்பாத காங்கிரஸ் தலைவர் ஒருவர் பிபிசி இந்தி சேவையிடம் கூறினார். ’எல்லாம் விளம்பரம் தான்’ "அவர் சச்சின் டெண்டுல்கர் போல இருக்கிறார். சச்சின் கூட்டத்தில் இருந்து தப்பித்து மைதானத்துக்கு நடுவில் விளையாட விரும்பினார், அதை அவர் ரசித்தார். அதே போல, தீவிர அரசியலில் இருந்து ராகுல் காந்திக்கு தப்பிக்கும் ஓரிடம் தான் தென் இந்தியா. ராகுல் காந்திக்கு ஆலோசனை வழங்குபவர்களுக்கு நீண்ட கால திட்டம் இருக்கிறது. புஷ் அப்ஸ் எடுப்பது எல்லாம் வெறும் விளம்பரத்துக்குத் தான்" என பிபிசி இந்தி சேவையிடம் கூறுகிறார் இந்திய ஜர்னலிஸம் ரிவ்யூவின் ஆசிரியர் மற்றும் அவுட்லுக் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் கிருஷ்ண பிரசாத். ``தேர்தலுக்கான அமெரிக்க வழிகள் பல இருக்கின்றன. ஆறு ஆண்டுகளுக்கு முன் பாஜக விளையாடிய ஆட்டத்தை தற்போது காங்கிரஸ் விளையாடுகிறது. ஊடகங்கள் ராகுலை `பப்பு` என கட்டமைத்திருக்கிறது. உண்மையில் அவர் தன் பலத்தை வெளிகாட்டியுள்ளார், தனது வேலையைச் செய்து வருகிறார். இவை அனைத்தும் கொஞ்ச காலத்துக்கு தான். இது போன்ற விஷயங்கள் வாக்குகளாக மாறுவதைப் பார்ப்பது தான் மிகவும் கடினம், என்றார் கிருஷ்ண பிரசாத். ``அவர் காலப்போக்கில் முதிர்ச்சியடைந்திருக்கிறார். அவர் தனது சொந்த பாணியைக் கொண்டிருப்பதாகவும் கூறுகிறார். மில்லினியல் தலைமுறை அதை வெறுப்பாகப் பார்க்காது எனலாம்," என்கிறார் சசி குமார். தென்னிந்தியாவில் அதிக கவனம் செலுத்தும் ராகுல் காந்தி: புதிய திட்டமா? கடினமான அரசியலில் இருந்து தப்பும் வழியா? - BBC News தமிழ்
    • இரணைதீவு கெடுபிடிகளை சுமுகமாக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை இரணைதீவிற்கு மக்கள் சென்று வருவதில் காணப்படுகின்ற கெடுபிடிகளை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கையினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார்.     இன்று(05.02.2021) நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி. பி.எம்.எஸ். சார்ள்ஸ் ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், இரணைதீவிற்கு பொது மக்கள் சென்று வருவதற்கு கடற்படையினரினால் இடையூறுகள் ஏற்படுத்தப்படுத்தப்படுவதாக சுடடிக்காட்டப்பட்டது. இதுதொடர்பாக கடற்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய கடற்றொழில் அமைச்சர், இரணைதீவில் பொலிஸ் காவல் நிலையம் ஒன்றை அமைப்பது எனவும், அதன்பின்னர் தேவையற்ற கெடுபிடிகள் கடற்படையினரால் மேற்கொள்ளப்படாது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, கொறோனா காரணமாக இஸ்லாமிய சகோதரர்கள் உயிரிழப்பார்களாயின், அவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடம் இல்லையென ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துரைத்துள்ள நிலையில், இன்றைய ஒருங்கிணைப்புக் குழுவிலும் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது இரணைதீவு கெடுபிடிகளை சுமுகமாக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை | Virakesari.lk
    • கிண்ணியாவிலும் சடலங்களை அடக்கம் செய்வதற்கான நிலம் அடையாளம்  கொரோனாவினால் மரணமடைவோரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு கிண்ணியா மகரூப் கிராமம் (மாகாமாறு) என்ற பிரதேசத்தில் அமைந்திருக்கும் மையவாடியும் அடையாளம் காணப்பட்டுள்ளது.  இதில் திருகோணமலை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் இடத்தைப் பார்வையிடுவதற்காக இன்று (05) திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர். பிரேமாநந் உள்ளிட்ட அடங்கிய குழுவினர் விஜயம் செய்திருந்தார்கள். இதில்  கிண்ணியா பிரதேச சபைத் தவிசாளர் கே.எம். நிஹார், உறுப்பினர் நஸீர் உட்பட பலர் பங்கேற்றனர். கிண்ணியாவிலும் சடலங்களை அடக்கம் செய்வதற்கான நிலம் அடையாளம்  | Virakesari.lk
    • தொடருங்கள் நிழலி அவர்களே.! கற்பனைக்கு வாழ்த்துக்கள்..!! பாவம் ராசுக்குட்டி ஆர் பெத்த பிள்ளையோ..?? நாங்கள் களத்தில் கருத்தெழுதி உங்களிடம் மாட்டுப்படுவதுபோல் அவரும் கூகுள் ஆண்டவரைத் தரிசிக்கப்போய் மாட்டிக் கொண்டாரே.!! ஆனாலும் பிறவிக் குணம் யாரைவிட்டது..! மனைவி சொன்ன புளி, சின்ன வெங்காயம், உள்ளி வாங்குவதற்கும் கூகுள் ஆண்டவரைத் தரிசித்த பின்புதான் கொள்முதல் செய்தாராம். சின்ன வெங்காயம் சின்ன வெங்காயத்தை வாங்கும்போது தெளிவான, திரட்சியான, ஒரே அளவிலான சீரான நிறத்துடன் ஈரப்பதமில்லாதவற்றை வாங்க வேண்டும். மிருதுவான, ஈரப் பதமுள்ள, மேற்தோலில் கரும்புள்ளிகள் உடையவற்றையும், முளைவிட்டதையும் தவிர்க்க வேண்டும். புளி புளி இதயத்திற்கு நல்லது. ஏனெனில் இது கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். சிறிது எடை குறைக்க விரும்புவோருக்கு புளிச் சாறு ஏற்றது. லேசான டையூரிடிக் பண்புகளையும் கொண்டுள்ளது, உடலில் இருந்து நச்சுக் கழிவுகளை வெளியேற்ற உதவும். உடலை உள்ளே இருந்து சுத்தம் செய்ய உதவும். உள்ளி நோய் தடுப்பு மண்டலத்திற்கு உறு துணையாகிறது. புற்று நோயையும் மற்ற நோய் தொற்றுகளையும் எதிர்க்க உதவுகிறது. வெள்ளணுத்திறனின் செயல் பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது. ஊளைச் சதையைக் கரைக்கும். இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. நீரழிவைக் குணப்படுத்தவும் உதவுகிறது. மாதவிடாய்க் கோளாறுக்கும் மருந்தாகும்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.