Jump to content

பதவியேற்பு நாளிலேயே ட்ரம்பின் முதல் 10 நாள் திட்டத்தை தலைகீழாக மாற்றப்போகும் பைடன்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

பதவியேற்பு நாளிலேயே ட்ரம்பின் முதல் 10 நாள் திட்டத்தை தலைகீழாக மாற்றப்போகும் பைடன்

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்றதும் முதன் நாளிலேயே ஜோ பைடன் பல நிறைவேற்று உத்தரவுகளை பிறப்பிக்க திட்டமிட்டுள்ளார்.

அதில் அவரது முன்னோடி (டெனால்ட் ட்ரம்ப்) பிறப்பித்த பல முஸ்லிம் நாடுகளின் சர்ச்சைக்குரிய பயணத் தடையை இரத்து செய்வது என்பது பிரதான விடயமாகும்.

spacer.png

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது முதல் 10 நாட்களில் அமல்படுத்திய கொள்கைகளை மாற்றியமைப்பதை புதிய அமெரிக்க நிர்வாகம் தொடங்கும் என்று ஜோ பைடனின் உள்வரும் வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி ரான் க்ளெய்ன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவற்றில் புதிய கொரோனா வைரஸ் தடுப்பு முயற்சிகள், பாரிஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தத்தில் மீண்டும் இணைதல் மற்றும் மில்லியன் கணக்கானவர்களுக்கு குடியுரிமை பெற அனுமதிக்கும் குடியேற்ற சட்டம் ஆகியவை அடங்கும்.

2017 ஆம் ஆண்டில் பதவியேற்ற சிறிது நேரத்திலேயே, ட்ரம்ப் ஒரு நிர்வாக உத்தரவை பிறப்பித்தார், ஏழு முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளைச் சேர்ந்த பயணிகள் தேசிய பாதுகாப்பு கவலைகளை சுட்டிக்காட்டி அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்தார்.

எவ்வாறாயினும் அந்த உத்தரவு சட்டரீதியான சவால்களுக்கு மத்தியில் பல முறை மறுவேலை செய்யப்பட்டது மற்றும் அதன் ஒரு பதிப்பை உச்ச நீதிமன்றம் 2018 இல் உறுதி செய்தது.

அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் எதிர்வரும் 20 ஆம் திகதி பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
https://www.virakesari.lk/article/98662

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்தாளையும் குடும்பத்தையும் தூக்கி உள்ளுக்கு போடுவாங்கள் எண்டு செய்தி உலாவுது..

Donald Trump — Experte: "Er ist ein Politverbrecher wie Putin oder Erdogan"

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்; அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவியேற்பு

பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்; அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவியேற்பு

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவி ஏற்கிறார். அவருடன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார்.
பதிவு: ஜனவரி 20,  2021 05:23 AM
வாஷிங்டன்,

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக தேர்வானார்.

அமெரிக்க சட்டப்படி நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் நபர் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ந்தேதி பதவி ஏற்பது வழக்கம்.

அந்த வகையில் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று (புதன்கிழமை) பதவி ஏற்கிறார். அவருடன் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார்.

பொதுவாகவே பதவியேற்பு நாளில் விரிவான பாதுகாப்பு திட்டங்கள் இருக்கும். அதுவும் கடந்த 6-ந்தேதி அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நடைபெற்ற வன்முறைக்கு பிறகு பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்னும் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

ஜோ பைடன் பதவியேற்பு விழாவின்போது டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபடலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளதால் தலைநகர் வாஷிங்டனில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக வாஷிங்டன் முழுவதும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

பதவியேற்பு விழாவின் பாதுகாப்பு திட்டங்களுக்கான ஏற்பாடுகளை ரகசிய சேவை கையில் எடுத்துள்ளது. இதையொட்டி வாஷிங்டன் முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

பொதுவாக இந்த பதவியேற்பு விழாவின்போது வாஷிங்டனுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தருவர். 2009-ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஒபாமா முதல்முறையாக பதவியேற்கும்போது 20 லட்சம் பேர் வருகை தந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்தமுறை கொரோனா தொற்று காரணமாக கொண்டாட்டங்கள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அமெரிக்க மக்கள் பதவியேற்பு விழாவை காண தலைநகருக்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என ஜோ பைடனின் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் கடந்த 6-ந்தேதி நடைபெற்ற சம்பவத்திற்கு பிறகு வாஷிங்டன் அதிகாரிகளும் இதே கோரிக்கையை விடுத்தனர்.

கடந்த காலங்களில் இந்த நிகழ்ச்சியை காண சுமார் 2 லட்சம் டிக்கெட்டுகள் வரை வழங்கப்படும். ஆனால் தற்போது கொரோனா தொற்று காரணமாக அது 1,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அமைதியாக நடைபெறும் பதவியேற்பு விழாவின் பாரம்பரிய வழக்கமான ராணுவ தளபதி படைகளை பார்வையிடுதல் நிகழ்ச்சி இந்த முறையும் நடைபெறும்.

ஆனால் வழக்கமாக நடைபெறும் ராணுவ அணிவகுப்பு, `இணைய அணிவகுப்பாக’ அமெரிக்கா முழுவதும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள் இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டையும் போல இந்த ஆண்டும் நட்சத்திர விருந்தினர் நிகழ்ச்சி நடைபெறும். ஜோ பைடனின் ஆதரவாளரான அமெரிக்க பாடகி லேடி காகா தேசிய கீதம் பாடுவார். நடிகை ஜெனிபர் லோபசின் பாடல் நிகழ்ச்சியும் உண்டு.

பைடனின் பதவியேற்புக்கு பிறகு அமெரிக்க நடிகர் டாம் ஹான்க் 90 நிமிட நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குகிறார்.

அமெரிக்காவின் கிழக்கு மாகாணங்களுக்கான நேரப்படி காலை 11.30 மணியளவில் (இந்திய நேரப்படி இரவு 10 மணி) பதவி ஏற்பு விழா தொடங்கும்.

நண்பகல் 12 மணியளவில் ஜோ பைடனும் கமலா ஹாரிசும் பதவி ஏற்றுக் கொள்வார்கள். ஜனாதிபதி ஜோ பைடனுக்கு அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவி பிரமாணம் செய்து வைப்பார். அதேபோல் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசுக்கு சுப்ரீம் கோர்ட்டு பெண் நீதிபதி சோனியா சோட்டோமேயர் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

அதன்பின்னர் ஜோ பைடன் வெள்ளைமாளிகையில் குடி புகுவார். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அதுதான் அவரது வீடு.

ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிசின் பதவி ஏற்பு விழா, அமெரிக்காவின் முன்னணி செய்தி சேனல்கள் அனைத்திலும் நேரலையில் ஒளிபரப்பப்படும்.

இது தவிர ஜே பைடன் குழுவின் பேஸ்புக், டுவிட்டர் மற்றும் ‌யூடியூப் உள்ளிட்ட தளங்களிலும் பதவியேற்பு விழா நேரலை செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/20052341/Intensity-of-security-arrangements-Joe-Biden-takes.vpf

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

விண்வெளி ஆராய்ச்சியில் கொடிகட்டி பறக்கும் அமெரிக்காவில் கூட பழைய பைபிள் மேலே கை வைத்து சத்தியம் செய்துதான் பதவி ஏற்கின்றார்களாம்.
என்னவொரு மூடர் கூட்டம் என நான் சொல்லவில்லை. சொல்கிறார்கள்.😁

புதிய ஜனாதிபதிக்கு என் வாழ்த்துக்கள்.
 
Auf diese knapp 13 Zentimeter dicke Familienbibel leistete Joe Biden jeden Amtseid, seit er 1973 Senator wurde!

Eingespieltes Team! Jill Biden hielt ihrem Joe schon 2009 die Bibel, als er zum Vizepräsidenten vereidigt wurde

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒரே பைபிள் இல்  (அத்தனை அமெரிக்க தலைவர்களும்  பொய் சத்தியம் செய்து செய்து)  அது பழுதாகி விட்டது    😀

 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

கஜேந்திரகுமார்.... நல்லூர் கோயிலுக்கு போய் கும்பிட்டு, பதவி ஏற்றால் மட்டும்....
குடி முழுகின மாதிரி....  ஒப்பாரி வைப்பார்கள். :grin:

கோட்டு சூட்டு.... போட்ட வெள்ளைக்காரன் செய்தால் மட்டும்,
ஆவெண்டு....  பார்த்துக் கொண்டு இருப்பார்கள். 🤣 😜

 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

விண்வெளி ஆராய்ச்சியில் கொடிகட்டி பறக்கும் அமெரிக்காவில் கூட பழைய பைபிள் மேலே கை வைத்து சத்தியம் செய்துதான் பதவி ஏற்கின்றார்களாம்.
என்னவொரு மூடர் கூட்டம் என நான் சொல்லவில்லை. சொல்கிறார்கள்.😁

புதிய ஜனாதிபதிக்கு என் வாழ்த்துக்கள்.

எங்கே நம் அவியல் கூட்டம் / sorry அறிவியல் கூட்டம்😂

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நிலாமதி said:

ஒரே பைபிள் இல்  (அத்தனை அமெரிக்க தலைவர்களும்  பொய் சத்தியம் செய்து செய்து)  அது பழுதாகி விட்டது    😀

இது பைடனின் குடும்ப பைபிள்

https://www.nytimes.com/2021/01/20/us/politics/bible-inauguration-biden.html

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நிலாமதி said:

ஒரே பைபிள் இல்  (அத்தனை அமெரிக்க தலைவர்களும்  பொய் சத்தியம் செய்து செய்து)  அது பழுதாகி விட்டது    😀

பைடன் 76 வயதில் 46 ஆவது ஆளாக சத்தியம் செய்திருக்கிறார்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, உடையார் said:

எங்கே நம் அவியல் கூட்டம் / sorry அறிவியல் கூட்டம்😂

சைவம் என்றால்  மோப்பம் பிடித்தே வந்து விடுவார்கள்.😜

10 minutes ago, யாயினி said:

பைடன் 76 வயதில் 46 ஆவது ஆளாக சத்தியம் செய்திருக்கிறார்.

பைடனுக்கு 78 வயது.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

விண்வெளி ஆராய்ச்சியில் கொடிகட்டி பறக்கும் அமெரிக்காவில் கூட பழைய பைபிள் மேலே கை வைத்து சத்தியம் செய்துதான் பதவி ஏற்கின்றார்களாம்.
என்னவொரு மூடர் கூட்டம் என நான் சொல்லவில்லை. சொல்கிறார்கள்.😁

புதிய ஜனாதிபதிக்கு என் வாழ்த்துக்கள்.
 
Auf diese knapp 13 Zentimeter dicke Familienbibel leistete Joe Biden jeden Amtseid, seit er 1973 Senator wurde!

Eingespieltes Team! Jill Biden hielt ihrem Joe schon 2009 die Bibel, als er zum Vizepräsidenten vereidigt wurde

சும்மா ஜாலியா பழைய சம்பிரதாயத்துக்கு அதை செய்தாலும்,  இது  முட்டாள்த்தனமே தான். அதில் மாற்றுக்கருத்து  இல்லை.

ஆனால், உண்மையிலேயே சீரியசாக இதை நம்பினால் அடிமுட்டாள்களே.. ஆனால் அப்படி நம்பும் அடி முட்டாள்களாக  அவர்கள் இல்லை என்பது தான் உண்மை. சூரியனுக்கு பல் இல்லை அதனால் சூரியன் சாப்பிட  மெது வடை செய்து படைத்தேன் என்று கூறும் அடிமுட்டாள்ககளை  நிதியமைச்சராக அங்கு இல்லை. 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, tulpen said:

இனி வரும் காலங்களில் பார்ப்பனர்களை இங்கே கொண்டு வந்து அமர்த்தாமல் கருத்தாடினால் நன்றாக இருக்கும்.

நாங்கள் சைவம். குல தெய்வத்தை வணங்குபவர்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

எங்கே நம் அவியல் கூட்டம் / sorry அறிவியல் கூட்டம்😂

வந்தா கூட்டமா வருவினம். சிங்கள் ஆ வரமாட்டினம் 

4 minutes ago, குமாரசாமி said:

இனி வரும் காலங்களில் பார்ப்பனர்களை இங்கே கொண்டு வந்து அமர்த்தாமல் கருத்தாடினால் நன்றாக இருக்கும்.

நாங்கள் சைவம். குல தெய்வத்தை வணங்குபவர்கள்.

பிரிட்டனில் இருந்து மத சுதந்திரம் வேண்டி, கிளம்பி போன, முக்கியமாக, ரோமன் கத்தோலிக்க மத பிரிவினர் தான் அமேரிக்காவில் அதிகம். இவர்கள் பெரும்பாலும், பழமைவாதிகளாகவும், அதீத இறை நம்பிக்கையும் கொண்டவர்களாயும் உள்ளனர்.

Link to post
Share on other sites
Quote

சும்மா ஜாலியா பழைய சம்பிரதாயத்துக்கு அதை செய்தாலும்

நீதிமன்றங்கள் அனைத்திலும்  பைபிள் தான். அதுவும் சம்பிரதாயமா??

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

இனி வரும் காலங்களில் பார்ப்பனர்களை இங்கே கொண்டு வந்து அமர்த்தாமல் கருத்தாடினால் நன்றாக இருக்கும்.

நாங்கள் சைவம். குல தெய்வத்தை வணங்குபவர்கள்.

அந்த சைவத்தில் முழுக்க  முழுக்க பாரப்பன மூடத்தனமே நடைமுறையில் உள்ளது என்பது தங்களுக்கும் தெரியும். சைவம் என்பது முன்பு எப்படி இருந்ததோ தெரியாது. ஆனால் இன்று முழுக்க முழுக்க பார்ப்பன மூடத்தங்களை 100 வீதம் ஏற்றுக்கொண்ட மதமே. நடை முறையில் நடக்கும்  விடயங்களை வைத்து தான் கருத்தாட முடியுமே தவிர உங்கள் கற்பனை சைவத்தை  பற்றியல்ல. 

1 minute ago, nunavilan said:

நீதிமன்றங்கள் அனைத்திலும்  பைபிள் தான். அதுவும் சம்பிரதாயமா??

ஆம் சம்பிரதாயம் தான். அதில் சந்தேகமில்லை. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

வந்தா கூட்டமா வருவினம். சிங்கள் ஆ வரமாட்டினம் 

பிரிட்டனில் இருந்து மத சுதந்திரம் வேண்டி, கிளம்பி போன, முக்கியமாக, ரோமன் கத்தோலிக்க மத பிரிவினர் தான் அமேரிக்காவில் அதிகம். இவர்கள் பெரும்பாலும், பழமைவாதிகளாகவும், அதீத இறை நம்பிக்கையும் கொண்டவர்களாயும் உள்ளனர்.

நேற்று கூட அமெரிக்காவின் அடிமட்ட இறை நம்பிக்கை உள்ள மக்கள் பற்றி ஒரு ரிவி விவரண நிகழ்ச்சி பார்த்தேன்.நம்ப முடியவில்லை. கிராமம் கிராமமாக இறை நம்பிக்கை மிகுந்து வாழ்கின்றார்கள். எந்த குறையும் இல்லை. மருத்துவங்களும் கோலோச்சவில்லை.

4 minutes ago, tulpen said:

அந்த சைவத்தில் முழுக்க  முழுக்க பாரப்பன மூடத்தனமே நடைமுறையில் உள்ளது என்பது தங்களுக்கும் தெரியும். சைவம் என்பது முன்பு எப்படி இருந்ததோ தெரியாது.

இல்லை. நான் ஒரு சைவ சமயத்தவன். எனக்கு என் குலதெய்வம் உண்டு. அதனை நானே தொட்டு பூசை செய்து வழிபட்டவன். அங்கே பார்ப்பனியம் இல்லை. தேவாரம் மட்டுமே. மந்திரம் தந்திரங்கள் கிடையாது.

Link to post
Share on other sites
2 minutes ago, tulpen said:

ஆம் சம்பிரதாயம் தான். அதில் சந்தேகமில்லை. 

சம்பிரதாயமாக கடவுளை வணங்கலாம், கடவுள் நம்பிக்கை வைக்கலாம்??

எப்படி நம்பிக்கை இல்லாமல் சம்பிரதாயமாக  முக்கிய இடங்களில் சத்தியம் எடுக்க முடியும்?
பல்வேறு மதங்களை சார்ந்தவர்களும் பைபிளில் சத்தியம் செய்யும் படி கேட்கிறார்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nunavilan said:

சம்பிரதாயமாக கடவுளை வணங்கலாம், கடவுள் நம்பிக்கை வைக்கலாம்??

எப்படி நம்பிக்கை இல்லாமல் சம்பிரதாயமாக  முக்கிய இடங்களில் சத்தியம் எடுக்க முடியும்?
பல்வேறு மதங்களை சார்ந்தவர்களும் பைபிளில் சத்தியம் செய்யும் படி கேட்கிறார்கள்.

நம்பிக்கை இல்லாததால் தான் சட்டப்புத்தகங்களை வைத்து வாதாடுகிறார்கள். தப்பிக்கவும் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்துகிறார்கள் ஒரு நியாயத்தை நிறுவவும்  சட்ட நுணுக்கங்களையே பயன்படுத்துகிறார்கள். பைபிள் சும்மா சம்பிதாயம் தான்.

அமெரிக்க ஜனாதிபதிகள்  இந்த இத்துப் போன பைபிள் புத்தகத்தை நம்பி ஆட்சி நடத்துவில்லை. தங்கள் அறிவை நம்பி ஆட்சியில்  அமருகிறார்கள். 

Edited by tulpen
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, tulpen said:

அமெரிக்க ஜனாதிபதிகள்  இந்த இத்துப் போன பைபிள் புத்தகத்தை நம்பி ஆட்சி நடத்துவில்லை. தங்கள் அறிவை நம்பி ஆட்சியில்  அமருகிறார்கள். 

இத்துப்போனதை என்ன கோதாரிக்கு காட்சிக்கு கொண்டு வருகின்றார்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

நேற்று கூட அமெரிக்காவின் அடிமட்ட இறை நம்பிக்கை உள்ள மக்கள் பற்றி ஒரு ரிவி விவரண நிகழ்ச்சி பார்த்தேன்.நம்ப முடியவில்லை. கிராமம் கிராமமாக இறை நம்பிக்கை மிகுந்து வாழ்கின்றார்கள். எந்த குறையும் இல்லை. மருத்துவங்களும் கோலோச்சவில்லை.

இல்லை. நான் ஒரு சைவ சமயத்தவன். எனக்கு என் குலதெய்வம் உண்டு. அதனை நானே தொட்டு பூசை செய்து வழிபட்டவன். அங்கே பார்ப்பனியம் இல்லை. தேவாரம் மட்டுமே. மந்திரம் தந்திரங்கள் கிடையாது.

நான் உங்களை பற்றி இங்கு எதுவும் கூறவில்லை. நீங்கள் தனிப்பட்ட ரீதியில் உண்மையான,  மூடத்தனங்களை நம்பாத,  சைவரக இருக்கலாம். அது எனக்கு உண்மையில் மகிழ்ச்சியே. அதை நானும் வரவேற்கிறேன். 👍 நானும் உணமையான சைவனே. அதனால் தான் மூடத்தனங்களை நம்புவதில்லை. 

நடை முறையையே கூறுகிறேன். சைவக்கோவில் என்று எல்லோராலும் நம்பப்படும் நல்லூரில் உண்மையான சைவன், நீங்கள் சொன்னது போல் தொட்டு வணங்க முடியாது. அங்கு பிறப்பில் பார்ப்பனராய் பிறந்தால் தான் அதை செய்யலாம் 

7 minutes ago, குமாரசாமி said:

இத்துப்போனதை என்ன கோதாரிக்கு காட்சிக்கு கொண்டு வருகின்றார்கள்.

பழையது என்று சும்மா  காட்டுவதற்காக அந்த கோதாரியை காட்டி இருக்கலாம். 😂

Edited by tulpen
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, tulpen said:

சைவக்கோவில் என்று எல்லோராலும் நம்பப்படும் நல்லூரில் உண்மையான சைவன், நீங்கள் சொன்னது போல் தொட்டு வணங்க முடியாது. அங்கு பிறப்பில் பார்ப்பனராய் பிறந்தால் தான் அதை செய்யலாம் 

நான் தினசரி  கிழக்கு திசையை நோக்கி வழிபடுபவன். 

நல்லூரை வைத்து கருத்து எழுதுபவராக நீங்கள் இருந்தால் மிகவும் வருத்தப்படுகின்றேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பைடன் , கமலா ...ஏன்டா இவர்களுக்கு வோட்டு போட்டோம் என்று அமெரிக்க மக்கள் வருந்தும் அளவிற்கு இவர்களது ஆட்சி இருக்க வேண்டும் 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

வாழ்த்துக்கள் பைடன் , கமலா ...ஏன்டா இவர்களுக்கு வோட்டு போட்டோம் என்று அமெரிக்க மக்கள் வருந்தும் அளவிற்கு இவர்களது ஆட்சி இருக்க வேண்டும் 

இதைத்தான் ஜேர்மன் Afd கட்சியும் சொல்லுது 😎

Die AfD im Bundestag: Pöbeleien, Störer, Drohungen - wie die AfD das Klima vergiftet

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

வாழ்த்துக்கள் பைடன் , கமலா ...ஏன்டா இவர்களுக்கு வோட்டு போட்டோம் என்று அமெரிக்க மக்கள் வருந்தும் அளவிற்கு இவர்களது ஆட்சி இருக்க வேண்டும் 

 ஐயோ ஏனுங்க இந்த கொலைவெறி! 😂😂

 • Haha 1
Link to post
Share on other sites
மெரிக்கா ஒரு மேம்பட்ட நாகரிகம் என்று யார் சொன்னது?

மெரிக்கா ஒரு மேம்பட்ட நாகரிகம் என்று யார் சொன்னது?

அமெரிக்காவில் 40 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்
அழுக்கு ஏழைகள்.
மேலும் 30 மில்லியன் மக்கள் குறைந்த ஏழைகள்.
200 மில்லியன் அமெரிக்கர்கள் படிக்காதவர்கள்.
சுமார் 130 மில்லியன் அமெரிக்கர்கள் மற்ற மாநிலங்களுக்கு
சென்றதில்லை. 12 மில்லியன் அமெரிக்கர்கள் மட்டுமே
பாஸ்போர்ட்களை வைத்திருக்கிறார்கள்,
9 மில்லியன் அமெரிக்கர்கள் மட்டுமே வேறு நாட்டிற்கு
வருகை தந்தனர். பல அமெரிக்கர்களுக்கு குடியுரிமை
என்றால் என்ன என்று தெரியாது. அமெரிக்கர்களுடன்
தொடர்பு கொள்ள உள்ளூர் ஸ்லாங் ஆங்கிலத்தை நீங்கள்
தெரிந்து கொள்ள வேண்டும்.

அமெரிக்காவில் நிரந்தர வேலை இல்லை, எல்லா
வேலைகளும் தற்காலிகமானவை. மூன்றாம் உலகத்தைப்
போலவே நீதிமன்ற அமைப்புகளும் ஊழல் நிறைந்தவை.
துப்பாக்கி கொலை சாதாரண தினசரி விவகாரம்.
மற்ற ஒவ்வொரு நாளும் சாலையில் இறந்த உடல்களைக் காணலாம்.

எனது பிறந்த நாட்டில் இதுதான் உண்மையான நிலைமை.
ஆனால் ஆசிய மற்றும் பிற நாட்டு மக்கள் இங்கு வர
தீவிரமாக முயற்சி செய்கிறார்கள்.
எனக்கு இந்த உலகம் புரியவில்லை.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இல்லையக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள் மேலதிக தரவு:  சந்தோஷம் / சினேகம் முதல் நீக்கின் குற்றம் நடு நீக்கின் வறுமை கடை நீக்கின் உடலில் ஒரு உறுப்பு கடையிழந்து நிற்கின்றது, ஆண்களைவிட பெண்கள் இந்த பகுதியில் ஆதீத கவனம் செலுத்துவார்கள் சிறுவயதில் இருந்தே😁
  • தூய விண்ணரசித் தாயே அம்மா  
  • மூவரிலும் குற்றமே, பெற்றோர் கவனமாக அறிவுரை சொல்லி வளர்க்க வேண்டும், நாட்டு நடப்புகளை பிள்ளைகளுக்கு தெரியப்படுத்த வேண்டும், மகள் - தன் விருப்பங்களை பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும், அளவுக்கு மீறிய ஆசை ஆபத்தானது, அந்தரங்களை படமெடுத்து அனுப்புமளவுக்கு அறிவில்லையா, ஆண் - ஒருவரின் பலவீனத்தை பயன்படுத்தி இப்படிப்பட்ட செயலை செய்பவருக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்
  • 6 ஆவது நாளாகிய இன்றைய மெய்நிகர் நிகழ்வு வழமை போல் பிரித்தானிய நேரம் மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. தவத்திரு வேலன் சுவாமிகள் (சிவகுரு ஆதீனம் யாழ்ப்பாணம்) மற்றும் கிறிஸ்தவர் இஸ்லாமிய மதத்தலைவர்களின் ஆசியுரைகளுடன் ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வில் முன்னாள் நீதியரசரான பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான க.வி. விக்னேஸ்வரன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அரி பரந்தாமன் மற்றும் ஆர்த்தி, குருபரன் ஆகியோரின் சிறப்புரைகள் இடம் பெறவுள்ளன. உடல் சோர்வுற்ற நிலையிலும் திருமதி அம்பிகை செல்வகுமார் மக்களிற்கான தனது கோரிக்கை தொடர்பில் விசேட உரை நிழ்த்தவுள்ளார். மேற்படி மெய்நிகர் (zoom) நிகழ்வில் நீங்களும் இணைந்து அம்பிகையின் போராட்டத்திற்கு ஆதரவு சேர்க்க பின்வரும் இணைப்பில் இணைந்துகொள்ளலாம். https://us02web.zoom.us/j/86153063444?pwd=U1ZiY1lIVjRtZmNwZUFWNGNzV1k1UT09 ID: 861 5306 3444 Password: 041066   https://www.ilakku.org/?p=43738
  • மௌனம் காக்கும் பிரித்தானியா- உடல் தளர்வுற்ற நிலையிலும் தொடரும் அம்பிகையின் போராட்டம்    188 Views இனப் படுகொலை புரிந்த சிறீலங்கா அரசிற்கு மேலும் கால அவகாசம் வழங்க சர்வதேசம் முனைந்துள்ளமையை எதிர்த்து, சிறீலங்காவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தக்கோரி அம்பிகை செல்வகுமாரினால் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் இன்றுடன் 6ம் நாளை எட்டியுள்ளது. பிரித்தானியாவிடம் நான்கு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் மக்களின் பிரதிநிதியாக அவர் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். தனது கோரிக்கையை பிரித்தானிய அரசு நிறைவேற்றும் வரை உணவை உண்ண மறுத்துவரும் அம்பிகையின் உடல் நிலை மிகவும் சோர்வுற்று குரல் தளர்வடைந்துள்ள  நிலையிலும்  தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் அகிம்சை வழியில் உயிர் தியாகிகளான திலீபன், அன்னை பூபதி ஆகியோரை வணங்கி அவர் இன்றைய நாளினை தொடர்ந்துள்ளார். 1. இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை விசாரணை செய்வதற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் வேறு பொருத்தமான மற்றும் பயனுள்ள சர்வதேச பொறுப்புக்கூறல் வழிமுறைகளை பரிசீலிக்கவும் இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயங்களை எடுத்துக் கொள்ள ஐ.நா.பாதுகாப்புக் குழு மற்றும் ஐ.நா பொதுச் சபைக்கு பரிந்துரைத்தல். 2. இலங்கையில் நிகழ்த்தப்பட்ட மிகக் கடுமையான சர்வதேச குற்றங்கள் மற்றும் சர்வதேச சட்ட மீறல்களின் சான்றுகளை சேகரிப்பதற்கும் குற்றவியல் வழக்குகளுக்கு கோப்புகளைத் தயாரிப்பதற்கும் ஏதுவாக மியான்மருக்காக அல்லது சிரியாவிற்காக நிறுவப்பட்டதைப் போன்ற ஒரு சர்வதேச, சுயாதீன புலனாய்வுப் பொறிமுறையை நிறுவுதல். ஒரு அர்த்தமுள்ள சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையானது இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட தமிழர்களிடமிருந்து சான்றுகளை சேகரிக்க வேண்டியதுடன், செப்டம்பர் 2015 ஆம் ஆண்டு ழுஐளுடு இன் அறிக்கையில் உள்ள தகவல்களையும் ஆதாரங்களையும் பயன்படுத்த வேண்டும். அத்துடன் இவற்றிற்கு வரையறுக்கப்பட்ட கால அவகாசம் இருக்க வேண்டும் 3. இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் மீறல்கள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கவும் மற்றும் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் கள இருப்பினை நாட்டில் வைத்திருப்பதற்கு ஏதுவாகவும் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தினால் விசேட பிரதிநிதியை நியமித்தல் 4. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ்மக்களின் பாரம்பரிய தாயகம் என்ற அடிப்படையிலும் தமிழர்களுக்கு உரிய சுயநிர்ணய உரிமைகளின் அடிப்படையில் இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் அபிலாஷைகளை தீர்மானிக்க ஐ.நா கண்காணிக்கும் வாக்கெடுப்பை பரிந்துரைத்தல். ஆகிய தனது நான்கு கோரிக்கைகளில் ஒன்றையாவது பிரித்தானிய அரசு நிறைவேற்ற வேண்டும் அதுவரை தனது போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளதுடன் உலகெங்கிலுமுள்ள அனைத்து தமிழ் மக்களையும் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறும் கோரிக்கைகளை நிறைவேற்ற தத்தம் நாட்டு பிரதிநிதிகழுக்கு அழுத்தங்களை கொடுக்குமாறும் அவர் கோரியுள்ளார். அதில் தனது நான்கு அம்சக்கோரிக்கைகள் உள்ளடக்கிய மின்னஞ்சலினை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் 47 உறுப்பு நாடுகளிற்கும் அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  நேற்றைய 5 ஆம் நாள் மெய்நிகர் நிகழ்வில் உரையாற்றும் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் நேற்றைய 5 ஆம் நாள் மெய்நிகர் (Zoom) நிகழ்வில்  அருட்தந்தை ம.சக்திவேல் (அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் தலைவர்) ஆகிய மதத்தலைவர்களின் ஆசீர்வாத உரைகளும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானின் சிறப்பு வாழ்த்துரையும் இடம்பெற்றதுடன் முன்னாள் வலயக்கல்விப்பணிப்பாளர் வசந்தகுமாரி சந்திரபாலன் மற்றும் முன்னாள் போராளியான சந்திரிக்கா ஆகியோரது உரைகளும் இடம்பெற்றிருந்தன. இதில் தமிழகத்திலிருந்து அம்பிகைக்கு புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்த சீமான் அம்பிகையின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட குறித்த போராட்டத்தை உலக அரங்கி இணைய ஊடகங்கள் மூலம் மிக விரைவாக பரப்புதல் செய்யுமாறு உலகெங்கும் பரந்துவாழும் தமிழர்களிடம் கோரிக்கையினையும் விடுத்திருந்தார். இந்நிலையில்  6 ஆவது நாளாகிய இன்றைய மெய்நிகர் நிகழ்வு வழமை போல் பிரித்தானிய நேரம் மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. தவத்திரு வேலன் சுவாமிகள் (சிவகுரு ஆதீனம் யாழ்ப்பாணம்) மற்றும் கிறிஸ்தவர் இஸ்லாமிய மதத்தலைவர்களின் ஆசியுரைகளுடன் ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வில் முன்னாள் நீதியரசரான பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான க.வி. விக்னேஸ்வரன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அரி பரந்தாமன் மற்றும் ஆர்த்தி, குருபரன் ஆகியோரின் சிறப்புரைகள் இடம் பெறவுள்ளன. அதேவேளை உடல் சோர்வுற்ற நிலையிலும் திருமதி அம்பிகை செல்வகுமார் மக்களிற்கான தனது கோரிக்கை தொடர்பில் விசேட உரை நிழ்த்தவுள்ளார். மேற்படி மெய்நிகர் (zoom) நிகழ்வில் நீங்களும் இணைந்து அம்பிகையின் போராட்டத்திற்கு ஆதரவு சேர்க்க பின்வரும் இணைப்பில் இணைந்துகொள்ளலாம். https://us02web.zoom.us/j/86153063444?pwd=U1ZiY1lIVjRtZmNwZUFWNGNzV1k1UT09 ID: 861 5306 3444 Password: 041066   https://www.ilakku.org/?p=43738  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.