Jump to content

விவசாயிகளின் டிராக்டர் பேரணி அனுமதிக்கு டெல்லி காவல்துறை தான் முடிவு செய்யவேண்டும் - உச்ச நீதிமன்றம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
விவசாயிகளின் டிராக்டர் பேரணி அனுமதிக்கு டெல்லி காவல்துறை தான் முடிவு செய்யவேண்டும் - உச்ச நீதிமன்றம்

விவசாயிகளின் டிராக்டர் பேரணி அனுமதிக்கு டெல்லி காவல்துறை தான் முடிவு செய்யவேண்டும் - உச்ச நீதிமன்றம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், டெல்லி எல்லையில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாகவும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிலுவையில் உள்ளன.


கடந்த 12-ந் தேதி அந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், வேளாண் சட்டங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க 4 நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்தது.

இந்த நிபுணர்களில் ஒருவரான பாரதீய கிசான் சங்க தேசிய தலைவர் பூபிந்தர்சிங் மான், குழுவில் இருந்து திடீரென விலகிக்கொண்டார்.

குடியரசு தினத்தன்று (26-ந் தேதி) டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக விவசாய அமைப்புகள் ஏற்கனவே அறிவித்துள்ளன. குடியரசு தின கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் டிராக்டர் பேரணியோ அல்லது வேறுவகையான போராட்டங்களோ நடத்த இடைக்கால தடை விதிக்கக்கோரி டெல்லி போலீஸ் மூலமாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பாரதீய கிசான் சங்கம் லோக்சக்தி என்ற விவசாய அமைப்பு, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. நிபுணர் குழுவில் மீதியுள்ள 3 பேரையும் நீக்கிவிட்டு வேறு நபர்களை நியமிக்குமாறு கோரியுள்ளது.

இந்தநிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள இந்த மனுக்கள், இன்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு இவற்றை விசாரித்தது.

அதில், விவசாயிகள் பேரணி என்பது சட்டம் ஒழுங்கு சார்ந்தது. டெல்லிக்குள் யாரை அனுமதிக்க வேண்டும், எத்தனை பேரை அனுமதிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் முதல் அதிகாரம் டெல்லி போலீசுக்கு தான் உள்ளது. இதில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறி பேரணி தொடர்பான மனு மீதான விசாரணையை வரும் 20ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இதனால் தலைநகர் டெல்லியில் மேலும் பரபரப்பு கூடியுள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/18144041/Supreme-Court-starts-hearing-in-the-case-of-farmers.vpf

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
டிராக்டர் பேரணி தொடர்பான 2-ம் நாள் பேச்சுவார்த்தையிலும் இழுபறி: டெல்லி நகருக்குள் நடத்துவதில் விவசாயிகள் உறுதி

டிராக்டர் பேரணி தொடர்பான 2-ம் நாள் பேச்சுவார்த்தையிலும் இழுபறி: டெல்லி நகருக்குள் நடத்துவதில் விவசாயிகள் உறுதி
 
வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய அமைப்புகள் குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளன. அதற்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது.
 
 
ஆனால், சுப்ரீம் கோர்ட்டு தலையிட மறுத்து விட்டது.
 
டிராக்டர் பேரணி தொடர்பாக விவசாய அமைப்புகளுடன் டெல்லி, உத்தரபிரதேசம், அரியானா ஆகிய மாநில போலீஸ் அதிகாரிகள் டெல்லி விஞ்ஞான் பவனில் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
நெரிசல் மிகுந்த வெளிவட்டச்சாலைக்கு பதிலாக குண்ட்லி-மானேசர்-பல்வால் விரைவுச்சாலை வழியாக நடத்துமாறு போலீசார் யோசனை தெரிவித்தனர். ஆனால், விவசாய அமைப்புகள் அதை நிராகரித்து விட்டன.
 
இந்தநிலையில், டெல்லி சிங்கு எல்லை அருகே உள்ள ஒரு சொகுசு விடுதியில் நேற்று 2-ம்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. விரைவுச்சாலையில் டிராக்டர் பேரணி நடத்துமாறு போலீசார் மீண்டும் கேட்டுக்கொண்டனர்.
 
ஆனால், விவசாய அமைப்புகள் ஏற்கவில்லை. இதனால் இழுபறி நிலவி வருகிறது.
 
இதுகுறித்து பேச்சுவார்த்தையில் பங்கேற்ற சுவராஜ் அபியான் தலைவர் யோகேந்திர யாதவ் கூறியதாவது:-
 
போலீசார் டெல்லிக்கு வெளியே டிராக்டர் பேரணி நடத்துமாறு வலியுறுத்தினர். ஆனால் அது சாத்தியமல்ல. நாங்கள் டெல்லி நகருக்குள் அமைதியாக பேரணி நடத்த விரும்புகிறோம் என்று அவர் கூறினார்.
 
மற்றொரு விவசாய சங்க தலைவரும் இதே கருத்தை தெரிவித்தார்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணியை சீர்குலைக்க சதி ; விவசாய சங்க தலைவர்களை சுட்டுக் கொல்ல திட்டம் , ஒருவர் கைது

விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணியை சீர்குலைக்க சதி ; விவசாய சங்க தலைவர்களை சுட்டுக் கொல்ல திட்டம் , ஒருவர் கைது

 

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் இதுவரை 140க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். 10 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியும் வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே உறுதியான எந்த முடிவும் எட்டப்படவில்லை.

நேற்றுமுன்தினம் 10-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. அதில், வேளாண் சட்டங்களை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும், சுமுக தீர்வு காண ஒரு கூட்டுக்குழுவை அமைப்பதாகவும் ஒரு திட்டத்தை மத்திய அரசு முன்வைத்தது.

18 மாதங்களுக்கு வேளாண் சட்டங்களை அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்க மத்திய அரசு ஒப்புக் கொண்ட போதும் அவற்றை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்  வேளாண் சட்டங்கள் தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசுக்கும், விவசாயிகள் சங்கத்தினருக்கும் இடையே நேற்று நடந்த 11-வது சுற்றுப் பேச்சுவார்த்தையிம் தோல்வியில் முடிந்தது. 

டெல்லி-அரியானா எல்லையில்  சிங்கூர் என்னுமிடத்தில் விவசாயிகள் மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி இன்று 59 வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

அங்கு  இளைஞர் ஒருவரைப் பிடித்து விவசாயிகள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த இளைஞனிடம் நடத்திய விசாரணையில் விவசாய தலைவர்களைக் கொல்ல திட்டமிட்டதாக ஒப்புக் கொண்டார். விவசாயிகளின் போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தன்முடன் இதுபோல் பத்து பேர் விவசாயிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி கலவரத்தைத் தூண்ட முயற்சிப்பதாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

24 ஆம் தேதி, நான்கு பேரை மேடையில் சுட்டுக் கொல்லும் திட்டம் உள்ளது. எங்களுக்கு பிரதீப் சிங் பயிற்சி அளித்தார் .அவர் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி அவர் எங்களைச் சந்திக்க வரும்போதெல்லாம்  முகமூடி அணிந்து இருப்பார் என அந்த  நபர் குற்றம் சாட்டி  உள்ளார்.

 

https://www.dailythanthi.com/News/India/2021/01/23145758/The-person-who-revealed-an-alleged-plot-to-shoot-four.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை மறுநாள் பிரமாண்ட பேரணி... 2 லட்சம் டிராக்டர்கள் டெல்லிக்குள் நுழைகின்றன

நாளை மறுநாள் பிரமாண்ட பேரணி... 2 லட்சம் டிராக்டர்கள் டெல்லிக்குள் நுழைகின்றன

 

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண்மை சட்டங்களை வாபஸ்பெற வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் 2 மாத காலமாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு விவசாய பிரதிநிதிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இறுதியாக நேற்று முன்தினம் 11-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிலும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

3 வேளாண்மை சட்டங்களையும் 1½ஆண்டு நிறுத்தி வைக்க மத்திய அரசு முன்வந்தது. அதையும் விவசாயிகள் ஏற்க மறுத்துவிட்டனர். 3 சட்டங்களையும் வாபஸ் பெற்றே தீர வேண்டும் என்று விவசாயிகள் பிடிவாதமாக உள்ளனர்.

விவசாயிகள் போராட்டத்தை மேலும் தீவிரமாக்கும் வகையில் வருகிற 26ந்தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் பிராமாண்ட டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக விவசாயிகள் ஏற்கனவே அறிவித்து இருந்தனர்.

டெல்லியில் குடியரசு தினத்தன்று மத்திய அரசு சார்பில் செங்கோட்டையில் விழா நடைபெறும். அதைத் தொடர்ந்து டெல்லி ராஜபாதையில் பிராமாண்ட அணிவகுப்பு நடைபெறும். இதற்கு போட்டியாக விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்த முடிவு செய்திருந்தனர்.

இதனால் குடியரசு தின விழாவுக்கு இடையூறு ஏற்படும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என மத்திய அரசு தரப்பில் கூறப் பட்டது.

இதனால் டிராக்டர் பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு இதில் தலையிட மறுத்துவிட்டது. டெல்லி போலீசாரே இது சம்பந்தமாக முடிவு செய்து கொள்ளலாம் என்று கோர்ட்டு கூறிவிட்டது.

எனவே இது சம்பந்தமாக டெல்லி போலீசார் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். டெல்லிக்கு வெளியே பேரணியை நடத்திக்கொள்ளுங்கள் டெல்லி நகருக்குள் அனுமதிக்க முடியாது என்று போலீசார் கூறினார்கள்.

ஆனால் விவசாயிகள் டெல்லி நகருக்குள்தான் பேரணியை நடத்துவோம் என்று பிடிவாதமாக கூறினார்கள். முதலில் அரசு குடியரசு தின பேரணி நடைபெறும் ராஜபாதையிலேயே டிராக்டர் பேரணியை நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

பின்னர் அதை டெல்லி ரிங்ரோடு பகுதிக்கு மாற்றுவதாக விவசாயிகள் அறிவித்தனர். ஆனாலும் டெல்லி நகருக்குள் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என்று போலீசார் கூறிவந்தனர்.

விவசாயிகள் டெல்லி நகரை தவிர வேறு எங்கும் பேரணி நடத்த முடியாது என்று உறுதியாக கூறி விட்டனர்.

விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் நேற்று டெல்லி போலீசார் 5-வது கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இறுதியில் விவசாயிகள் டெல்லியில் பேரணி நடத்துவதற்கு அனுமதி கொடுத்தனர். எந்த வழியாக பேரணி செல்ல வேண்டும் என்பது தொடர்பாக இன்று போலீசார் ஆலோசனை நடத்துகிறார்கள். அதன்பிறகு பேரணி வழிகள் பற்றி தெரிவிக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

போலீஸ் அனுமதியை அடுத்து சிங்கு எல்லையில் விவசாயிகள் சங்கத்தினர் மீண்டும் கூடி ஆலோசனை நடத்தினார்கள். அப்போது எவ்வளவு தூரத்துக்கு பேரணி நடத்துவது, எந்த வழியாக பேரணி செல்வது என்று முடிவு செய்தனர்.

அதன்படி தற்போது விவசாயிகள் முகாமிட்டு இருக்கும் காசிப்பூர், சிங்கு, திக்ரி 3 எல்லைகள் வழியாக டெல்லிக்குள் நுழைவது. அதன்பிறகு 5 முனைகளில் இருந்தும் பேரணியை தொடங்குவது என்று முடிவு செய்தனர்.

சிங்கு, திக்ரி, காசிப்பூர், பல்வால், ஷாஜகான்பூர் ஆகிய 5 முனைகளில் இருந்தும் டிராக்டர்கள் டெல்லி நகருக்குள் செல்லும்.

மொத்தம் 100 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோடு ஷோ நடைபெறும் என்று விவசாயிகள் சங்க தலைவர் யோகேந்திர யாதவ் கூறினார்.

மேலும் விவசாயிகள் சங்க தலைவர்கள் கூறிய தாவது:-

இந்த பேரணியில் 2 லட்சம் டிராக்டர்கள் பங்கேற்கும். முதலில் இருந்ததைவிட இப்போது விவசாயிகள் எழுச்சியாக போராட்டத்தில் கலந்துகொண்டு வருகிறார்கள். குறிப்பாக இளைஞர்கள் மிக ஆர்வமாக உள்ளனர்.

இதனால் போராட்டத்துக்கு வருபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாங்கள் எதிர்பார்த்ததைவிட போராட்டத்துக்கு வரும் டிராக்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

டிராக்டர் பேரணி எவ்வளவு நேரம் நடக்கும் என்பதை சொல்ல முடியாது. 24 மணிநேரத்தில் இருந்து 72 மணிநேரம் வரை பேரணி நீடிக்க வாய்ப்பு உள்ளது.

பேரணியை ஒழுங்குபடுத்தவும், தேவையான உதவிகளை செய்யவும் 2,500 தன்னார்வலர்கள் பணியாற்ற உள்ளனர். பேரணியை வழிநடத்த கட்டுப்பாட்டு அறை ஒன்றும் அமைக்கப்படுகிறது.

டிராக்டர் பேரணி மிக அமைதியான முறையில் நடைபெறும். எந்த வன்முறைக்கும், தவறுகளுக்கும் இடம் இருக்காது. டிராக்டர்களில் விவசாயிகள் சங்க கொடி மற்றும் தேசிய கொடி கட்டப்பட்டு இருக்கும். வேறு கொடிகளுக்கு அனுமதி இல்லை.

பேரணியில் பங்கேற்போர் விவசாயிகள் வாழ்க, விவசாயிகள் இல்லை என்றால் உணவு இல்லை, 3 சட்டங்களை ரத்து செய், ஆகிய கோ‌ஷங்களை மட்டுமே எழுப்ப வேண்டும். போராட்டத்தில் பெண்களும் பெருமளவு பங்கேற்பார்கள்.

பேரணி முடிந்ததும் அனைத்து டிராக்டர்களும் எல்லை பகுதிக்கு திரும்பி விடும். டெல்லி நகருக்குள் யாரும் இருக்க மாட்டோம். பழைய முகாம்களுக்கே வந்து விடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

https://www.maalaimalar.com/news/topnews/2021/01/24141603/2288532/Tamil-News-Farmers-Protest-2-Lakh-farmers-likely-to.vpf

 

Link to comment
Share on other sites

 

டெல்லியில் குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணி; போலீசார் அனுமதி

 

 

:டெல்லியில் குடியரசு தினத்தில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்துவதற்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். புதுடெல்லி, டெல்லி எல்லையில், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் கடந்த நவம்பர் 26ந்தேதியில் இருந்து கடும் குளிரிலும் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். எனினும், வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே உறுதியான எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த சூழலில், இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 21ந்தேதி 10-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. அதில், வேளாண் சட்டங்களை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும், சுமுக தீர்வு காண ஒரு கூட்டுக்குழுவை அமைப்பதாகவும் ஒரு திட்டத்தை மத்திய அரசு முன்வைத்தது.

 
18 மாதங்களுக்கு வேளாண் சட்டங்களை அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்க மத்திய அரசு ஒப்பு கொண்ட போதும் அவற்றை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில் வேளாண் சட்டங்கள் தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசுக்கும், விவசாயிகள் சங்கத்தினருக்கும் இடையே நேற்று முன்தினம் நடந்த 11-வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
 
குடியரசு தினத்தன்று நாங்கள் டிராக்டர் பேரணியை நடத்துவோம் என விவசாயிகள் தொடர்ந்து கூறி வந்தனர்.  இதற்கு அனுமதி வழங்குவதற்கு டெல்லி போலீசாருக்கே அதிகாரம் உள்ளது என சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருந்தது.
 
இந்நிலையில், டெல்லியில் வருகிற 26ந்தேதி குடியரசு தினத்தில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்தன.  இதற்காக விவசாயிகள் மற்றும் டெல்லி போலீசார் இடையே ஒப்பந்தம் ஒன்று முடிவாகி உள்ளது என்றும் கூறப்பட்டது.
 
இந்நிலையில், டெல்லி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி எந்தெந்த வழியே நடத்தப்படும் என்பது பற்றி எழுத்து வடிவில் எதுவும் அளிக்கவில்லை.
 
வருகிற 26ந்தேதி நடத்தப்படும் டிராக்டர் பேரணி எந்தெந்த வழியாக செல்லும் என்பது பற்றி விவசாயிகள் எழுத்து வடிவில் எங்களுக்கு விவரம் அளித்த பின்னரே நாங்கள் அதனை ஆய்வு செய்து அதன்பின்னர் ஒரு முடிவுக்கு வருவோம் என கூறினர்.
 
இந்த சூழலில், பஞ்சாப் விவசாய சங்க கமிட்டியை சேர்ந்த சத்னம் சிங் பன்னு என்பவர் சிங்கு எல்லையில் செய்தியாளர்களிடம் இன்று அளித்த பேட்டியில், குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணியில் கலந்து கொள்ள திரளான விவசாயிகள் டெல்லிக்கு வருகின்றனர்.
 
டெல்லி போலீசார் அனுமதி கொடுக்கிறார்களா அல்லது இல்லையா? என்பதெல்லாம் விசயமில்லை.  நாங்கள் டெல்லியின் வெளிவட்ட சாலையில் பேரணியை நடத்த இருக்கிறோம் என்று கூறினார்.
 
இந்நிலையில், டெல்லி போலீசின் உளவு பிரிவு அமைப்பின் சிறப்பு அதிகாரி தேவேந்திர பதக் இன்று கூறும்பொழுது, குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்துவதற்கு ஒப்புதல் வழங்குவது என நாங்கள் இறுதி முடிவு எடுத்துள்ளோம்.
 
குடியரசு தின கொண்டாட்டங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் எந்தவித பாதிப்புகளும் ஏற்படாமல் இருக்க கவனத்தில் கொள்ளப்படும்.
 
டிராக்டர் பேரணியானது திக்ரி, சிங்கு மற்றும் காஜிப்பூர் எல்லைகளில் இருந்து டெல்லிக்குள் நுழையும்.  இதன்பின்னர் பேரணியை முடித்து கொண்டு பழைய பகுதிகளுக்கே அவை திரும்பும்.
 
சிங்குவில் புறப்படும் பேரணி கஞ்ச்வாலா, பாவனா, ஆச்சண்டி எல்லை, கே.எம்.பி. விரைவு சாலை வழியே செல்லும்.  பின்பு சிங்கு எல்லைக்கு திரும்பும் என அவர் கூறியுள்ளார்.
 
டிராக்டர் பேரணிக்கு இடையூறு ஏற்படும் வகையில் அச்சுறுத்தல் ஏற்படுத்த கூடிய சம்பவங்கள் நடைபெற சாத்தியம் உள்ளது என கவனத்தில் கொண்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு தேவையான கூடுதல் போலீசார் குவிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
dailythanthi.com
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.