-
Tell a friend
-
Topics
-
0
By உடையார்
தொடங்கப்பட்டது
-
Posts
-
யார் இந்த சங்கி, பிஜேபி சர்வாதிகார அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்குகின்றது
-
By உடையார் · பதியப்பட்டது
சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பிலும் ஆரம்பம் 22 Views இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பிலும் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் இன்று காலை முதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.சிவயோகநாதன் தலைமையில் ஆரம்பமான இந்த போராட்டத்தில் சர்வமத தலைவர்கள்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள்,மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன்,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போது ஆலய முன்றிலில் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பமானதுடன் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்திற்கு பலக்கலைக்கழக மாணவர்கள்,சிவில்சமூக செயற்பாட்டாளர்கள் ஆதரவினை வழங்கிவருகின்றனர். மதத்தலைவர்களின் ஆசியுரையுடன் ஆரம்பமான இந்த போராட்டத்திற்கு அனைவரையும் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. வடகிழக்கில் தமிழ் மக்களுக்கு நடைபெற்ற அநீதிகளுக்கு உள்ளக ரீதியாக எந்தவித நீதியும் கிடைக்கப்போவதில்லையெனவும் சர்வதேச நீதிமன்றில் இலங்கை நிறுத்தப்பட்டு தமக்கான நீதியைப்பெற்றுக்கொடுக்க சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் என இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. இன்று தமிழ் மக்கள் வடகிழக்கில் அடக்குமுறைகளுக்கு உள்ளாகிவருவதாகவும் ஐநா மனித உரிமை பேரவையின் கூட்டம் நிறைவுபெற்றதன் பின்னர் இந்த நாட்டில் மேலும் நெருக்கடிகளை எதிர்நோக்கும் நிலையுள்ளதாகவும் அதன் காரணமாக ஐநா மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்ந்து முடிவினை எடுக்கவேண்டும் எனவும் இங்கு வலியுறுத்தப்பட்டது. https://www.ilakku.org/?p=43642 -
கள்ளுக் கொட்டில் கள்ளடிக்கும் கு.சாமியின்- மனதை கொள்ளை கொண்ட சிங்கள சிறுக்கி.
-
By உடையார் · பதியப்பட்டது
மட்டக்களப்பில் காணி அபகரிப்பு – மக்கள் போராட்டம் 16 Views மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்புகளை கண்டித்து ஏறாவூர் புன்னக்குடா பிரதேசத்தில் இன்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மாவடடத்தின் பல பகுதிகளில் பொதுமக்களின் காணிகளை சட்டவிரோதமானமுறையில் அபகரிக்கும் காணி மாபியாக்களின் செயற்பாடுகளைக்கண்டித்து மட்டக்களப்பில் கவணஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மக்கடக்களப்பு மாவட்டத்தின் வாகரை, கிரான், ஏறாவூர்பற்று-செங்கலடி, ஆகிய பிரிவுகளில் உள்ள அரசகாணிகளுடன் இணைந்து பொது மக்களின் மற்றும் வெளிநாடுகளில் உள்ள காணிகளை ஒரு குழுவினர் விற்பனை செய்துருவருவதாகவும் அதற்கு அதிகாரிகள் துணை போவதையும் கண்டித்தும் குறித்த ஆரர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக இப்பகுதியில் உள்ள காணிகளை அரச அதிகாரிகளுக்கு பணத்தினைக்கொடுத்து ஒரு குழுவினர் நீண்டகாலமாக இவ்வாறான காணி அபகரிப்பினை முன்னெடுத்துவருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர். இப்பகுதியில் தமிழ் மக்களின் காணிகள் நீண்டகாலமாக அபகரிக்கப்பட்டு இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுவருவதாகவும் இது தொடர்பில் ஜனாதிபதி முறையான விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர். தமக்கு வழங்கப்பட்ட காணிகள் இவ்வாறு சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். https://www.ilakku.org/?p=43668
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.