வரலாம் அபாயம் வாய்ப்புக்கு முன்
-
Tell a friend
-
Similar Content
-
Posts
-
By Nathamuni · பதியப்பட்டது
ஜெனீவா வருடாந்த திருவிழா உங்க, ஜெனீவால வருசா, வருசம் ஒரு கொடி ஏத்தி, திருவிழா நடக்கிறதெல்லே... உந்த முறை, இந்தியன் மேளம் அடிக்க மாட்டினம் எண்டு, காசோடை, டெல்லிக்கு ஆள் போயிருக்கு. இவங்களை தப்ப விட்டால், ஒரு வருசத்திக்கிடையில, சீனாவோட சன்னதம் கொண்டாடுவாங்கள் எண்டு டெல்லி வாலாக்கள் நினைத்தாலும், போனவர், கொடுக்கிற இடத்திலை, கொடுக்க வேண்டியதை கொடுத்தால் நடக்க வேண்டியது, நடக்கும் என்று, சிரிச்சுக் கொண்டு அலுவல் பார்க்கிறாராம். நம்மடை பொறுக்கி, சுப்புரமணிய சுவாமி தான், முதலிலை ஆவெண்டவர் போலை கிடக்குது. ராஜபக்சேக்களை நம்பலாம். ஆக்கள் தங்கப்பவுன் எண்டு கொண்டு நிக்குதாம் மனிசன். ஜெனீவாவிலை, எல்லா உதவிகளையும் செய்யோணும். மகிந்தா எண்ட மச்சான் எண்டு நிக்கிறாராம். அவையள், நாட்டின் அபிவிருத்தி அலுவல் பார்க்க தான், சீனாவை சுத்துகினம், இந்தியாவை சுத்த இல்லை எண்டுதாம் மனிசன். பாகிஸ்தான் மேளம், அடிக்கும் எண்டு சொல்லிப்போட்டு போய் இறங்கின கையோட, அவர் ஆட்சிக்கே சிக்கலாம். டொனால்டு காலத்திலை எட்டத்திலை வச்சிருந்த, நாட்டினை, பைடேன் காலத்திலை, கிட்ட கொண்டு போகவேணுமெண்டால், சீனா காரன் நிண்டாடுற, இலங்கைப்பக்கம், நிக்கிறது சரிவராது எண்டு ஒரு கதையாம் அங்கை. ஆப்பிரிக்க நாடுகள் எல்லாம், தங்களோடை எண்டு, சிங்களம் நினைக்க, மாலாவி நாட்டினை மடக்கி தங்கட பக்கம் இழுத்து போட்டினம், பிரிட்டிஷ்க்காரர் எண்டு, கொழும்பிலை கொஞ்சம் கொதியாம். இண்டைக்கு, பிரிட்டிஷ் எம்பசிக்கு முன்னாலை, தமிழ், சிங்களம், முஸ்லீம், பொது மக்கள் எண்டு ஒரு 10 -15 பேர், புலிகள் கடத்தின, தங்கட பிள்ளையளை தேடி தாருங்கோ எண்டு போராடி இருக்கினம். எங்க, விமல் அய்யாவை உதுகிலை காணவில்லை எண்டு, கமெண்ட் போட்டு நக்கல் அடிச்சிருக்கினம். அடுத்த இரண்டாவது ஜனாதிபதி தேர்தலில் போட்டி போடலாம் எண்டு, இனவாதம் கக்குறார், ஆனந்த வீரசேகர.... இந்தியா அப்பப்ப 13 பத்தி, கதைக்கும், அதை சீரியஸா எடுக்காமல், மாகாணசபை தேர்தலும் வேணாம், மாகாண சபைகளும் வேணாம். எல்லாத்தையும் கடாசி விடவேணும் எண்டு அந்தாள் சொல்ல, அடோய்.... அடோய்....ஜெனீவா நிலைமை புரியாம கத்தாத என்று மகிந்தா மூலக் கொதிக்காரர் மாதிரி கத்திப் போட்டாராம். உவருக்கு போட்டியா, சரத் ஆரம்பத்திலை கதைக்க வெளிக்கிட்டவர். ஆனால், அடுத்த ஜனாதிபதி தேர்தலில், தனக்கு, அது, தமிழ் பேசும் மக்களின் வாக்குகளுக்கு ஆப்படிக்கும் எண்டு, மனோ கணேசன் சொன்னதை கேட்டு, சஜித் அவரை ஆப் பண்ணிப் போட்டாராம். ஆக, உந்த திருவிழாவுக்கு, புது மேளக்காரர், வருகினமோ, அல்லது இந்தியன் மேளம் போடுற, சுப்பிரமணிய சுவாமி சொல்லுற மாதிரி வந்து, தலைகீலா நின்னு அடிக்கிற அடியிலை, மேளம் தெறிச்சு உடையுமோ, தெரியேல்ல. ஏதாவது தகவல் வந்தா சொல்லி அனுப்புங்கோ. ஆனாலும், கொரோனா போயிடும் எண்டு நினைக்கிறன். அடுத்த வருசம் நேரில போய், திருவிழாவை பார்க்கலாம். -
இல்லையக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள் மேலதிக தரவு: சந்தோஷம் / சினேகம் முதல் நீக்கின் குற்றம் நடு நீக்கின் வறுமை கடை நீக்கின் உடலில் ஒரு உறுப்பு கடையிழந்து நிற்கின்றது, ஆண்களைவிட பெண்கள் இந்த பகுதியில் ஆதீத கவனம் செலுத்துவார்கள் சிறுவயதில் இருந்தே😁
-
மூவரிலும் குற்றமே, பெற்றோர் கவனமாக அறிவுரை சொல்லி வளர்க்க வேண்டும், நாட்டு நடப்புகளை பிள்ளைகளுக்கு தெரியப்படுத்த வேண்டும், மகள் - தன் விருப்பங்களை பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும், அளவுக்கு மீறிய ஆசை ஆபத்தானது, அந்தரங்களை படமெடுத்து அனுப்புமளவுக்கு அறிவில்லையா, ஆண் - ஒருவரின் பலவீனத்தை பயன்படுத்தி இப்படிப்பட்ட செயலை செய்பவருக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.