Jump to content

2,000 ஆண்டுகளுக்கு முந்தையவை: பிரிட்டனில் இரும்புக் கால எலும்புக் கூடுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தில் லிங்கன்ஷயரில் நடந்த அகழ்வாய்வில் இரண்டு இரும்புக் கால எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த எலும்புக் கூடுகள், நேவன்பை என்னும் இடத்துக்கருகில் தனித் தனி அகழ்வாய்வுப் பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்டன. ஒரு தண்ணீர் குழாய்த் திட்டத்துக்கான முன் தயாரிப்புப் பணிகளின் போது இந்த எலும்புக் கூடுகள் கிடைத்தன.

இதனோடு சிறு கட்டடங்கள் மற்றும் பானைகளின் உடைந்த பாகங்களும் கிடைத்திருக்கின்றன.

இந்த கண்டுபிடிப்புகள் இந்த பகுதியின் கடந்த காலத்தைக் குறித்து, அகழ்வாய்வாளர்கள் இன்னும் நிறைய தெரிந்து கொள்ள உதவும் என ஆங்லியன் வாட்டர் நிறுவனத்தின் தொல்பொருட்கள் மதிப்பீட்டாளரான ஜோ எவரிட் கூறினார்.

இரும்புக் காலம் என்பது கிறிஸ்து பிறப்பதற்கு முன் 800 (கி.மு) முதல் ரோம் நகரத்தின் படையெடுப்பு நடந்த கி.பி 43 வரையிலான காலத்தை உள்ளடக்கியதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

"நேவன்பை பகுதியில் இரும்புக் கால சமூகங்கள் வாழ்ந்தனர் என்பதை அறிவோம். அதோடு நன்கு வரையறுக்கப்பட்ட ரோமானியர்களின் வரலாறும் இங்கு இருக்கிறது. இது போன்ற கண்டுபிடிப்புகள், நம் முந்தைய வரலாற்றைக் குறித்து நிறைய விஷயங்களைக் கூறும். இரும்புக் காலச் சமூகத்தினர் ஒவ்வொரு நாளையும் எப்படி வாழ்ந்தார்கள் என்பதைக் கூறும்" என்றார் எவரிட்.

ரோமப் பேரரசு வரலாற்று காலம்: இங்கிலாந்தில் கிடைத்த இரும்புக் கால எலும்புக் கூடுகள்

பட மூலாதாரம்,ANGLIAN WATER

இந்த எச்சங்களில் நாட்டிங்ஹாம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களின் நிபுணர்கள் தங்களின் பகுப்பாய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஏங்லின் வாட்டர் நிறுவனத்தின் தண்ணீர் குழாய்த் திட்டத்தின் முதல் பகுதி லிங்கன் & க்ராந்தம் நகரங்களுக்கு இடையில் வரும் வசந்த காலத்தில் தொடங்க இருக்கிறது.

இதற்கு முன்பு இந்தப் பகுதிகளைத் தோண்டிய போது, பல ரோமப் பேரரசு காலத்தின் நாணயங்கள் கிடைத்தன.

அந்தக் காலகட்டங்களிலேயே, இந்த பகுதிகளில் மெக்டொனால்ட்ஸ் போன்ற துரித உணவகங்கள் இருந்தது என்கிற கருத்துக்கு வலுசேர்க்கும் விதத்தில் இந்த நாணயங்கள் இருக்கின்றன என அப்போது நிபுணர்கள் கூறினார்கள்.

இந்த பகுதிகளில் ரோமப் பேரரசின் சில கட்டட எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.ரோமப் பேரரசு வரலாற்று காலம்: இங்கிலாந்தில் கிடைத்த இரும்புக் கால எலும்புக் கூடுகள் - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரும்புக் காலம்....

 

2,000 வருசத்துக்கு முன்னம் இரும்புக்காலம்  என்பது தவறானது... நாம் வாழும் இந்தக்காலமும் இரும்புக்காலம் தான்...

மனிதன் பாவித்த ஆயுதங்களை வைத்தே காலத்தை வகுத்தார்கள், ஆரம்பத்தில் கல்...  ஆயுதமாக பயன்பட்டது, அது கற்காலம்.

எரிமலை குழம்பில் வெளிவந்த லாவாவில்  இருந்த மஞ்சள் நிற உலோகத்தை நெருப்பில் உருக்கி.... பித்தளை, ஆயுதங்களை, ஆபரணங்களை, தங்க ஆபரணங்களை செய்த போது... பித்தளைக்காலம்  உருவாக்கியது.

பித்தளை காலத்தின் பின்னே வந்தது இரும்புக்காலம் . இரும்பிலாலான ஆயுதங்கள் வந்தது.

இன்றும், கத்தி, கோடாலி, மண்வெட்டி, துவக்கு, பாலம் , ரயில் பாதை.... உண்மையில் இரும்புக்காலத்தின் அதி உச்சம் இது...  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.