Jump to content

குருமூர்த்தியின் பேச்சைப் புரிந்துகொள்வது எப்படி?


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

சிறப்புக் கட்டுரை: குருமூர்த்தியின் பேச்சைப் புரிந்துகொள்வது எப்படி?

spacer.png

ராஜன் குறை

கடந்த வாரம் துக்ளக் ஆண்டு விழாவில் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேசிய சில கருத்துகள் சர்ச்சைக்குள்ளாகியிருக்கின்றன. நீதிபதிகள் யார் காலையோ பிடித்து பதவிகளைப் பெறுகிறார்கள் என்று பேசியது ஒரு சர்ச்சை. வீடு பற்றி எரியும்போது சாக்கடை நீரையும் பயன்படுத்தி தீயை அணைக்கலாம் என்று ஒரு உவமையைச் சொல்லி, சிறையிலிருந்து விடுதலையாகும் சசிகலாவையும் அ.இ.அ.தி.மு.க-வில் இணைத்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருப்பது சசிகலா மற்றும் அ.இ.அ.தி.மு.க-வை சாக்கடை நீரென்று குறிப்பிட்டதாகக் கருதி இன்னொரு சர்ச்சை. இந்தச் சர்ச்சைகளைக் குறித்து அதிகம் பேசும்போது அவர் பேச்சினை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் போக வாய்ப்பு இருக்கிறது.

குருமூர்த்தி ஆர்.எஸ்.எஸ்-காரர். பார்ப்பனீய சிந்தனை கொண்டவர். பாஜக ஆதரவாளர். அதனால் தி.மு.க-வை எதிர்க்கிறார் என்பது அனைவரும் அறிந்ததுதான். மேலும் அவர் தி.மு.க-வுடன், அ.இ.அ.தி.மு.க-வை ஒப்பிட்டு அ.இ.அ.தி.மு.க, தி.மு.க-வை விட நல்ல கட்சி என்று பாராட்டுவதும் புதியதல்ல. அ.இ.அ.தி.மு.க அரசையே வழிநடத்துவது பாஜக-தான். ஓ.பி.எஸ்ஸை தர்மயுத்தம் செய்யச்சொல்லி தான் தூண்டிவிட்டதாக குருமூர்த்தியே கூறியதும் நாம் அறிந்ததுதான். தேர்தல் என்று வந்துவிட்டால் ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதால் சசிகலா அணி வாக்குகள் சிதறக் கூடாது என்ற அக்கறையில் இப்போது அதே சசிகலாவைக் கட்சியில் இணைக்கலாம் என்று சொல்வதும் ஒரு அரசியல் கணக்குதான். இப்படி மேலோட்டமாக நாம் இந்த கூற்றுக்களை எடுத்துக்கொள்ளும்போது அவற்றின் அடிப்படையாக விளங்கும் கருத்தியல் மோதலைக் காணாமல் விட்டுவிடக் கூடாது. அதைப் புரிந்துகொள்ள தி.மு.க குறித்து அவர் கூறும் குற்றச்சாட்டுகள், அதை எதிர்ப்பதற்கு அவர் கூறும் காரணங்களை ஆராய்வது அவசியம். அப்படியென்ன தி.மு.க-வுடன் அவருக்கு பிரச்சினை? வீடு பற்றி எரிகிறது என்று உவமை சொல்லும் அளவு இப்போது என்ன நடந்துவிட்டது? பத்தாண்டுகளாக தி.மு.க ஆட்சியிலேயே இல்லையே? மத்தியில் ஏழாண்டுகளாக பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி, மாநிலத்தில் பத்தாண்டுகளாக அ.இ.அ.தி.மு.க ஆட்சி. ஒரு எதிர்க்கட்சியாகப் போட்டியிடும் தி.மு.க-வைத் தோற்கடிப்பதை எரியும் வீட்டில் நெருப்பை அணைப்பதாக உருவகம் செய்யுமளவு ஏன் பதற்றமடைய வேண்டும்? அதை விளக்குவதற்காக அவர் தி.மு.க மீது சொல்லும் சில குற்றச்சாட்டுகளைப் பரிசீலிப்போம்.

தி.மு.க பிரிவினை அரசியல் செய்கிறதா? 

தி.மு.க மறைமுகமாகவும், நேர்முகமாகவும் பிரிவினையை ஆதரிக்கும் கட்சி என்கிறார் குருமூர்த்தி. தி.மு.க திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு 58 ஆண்டுகள் ஆகிறது. அப்படி திராவிட நாடு கோரிக்கையை எழுப்பிய காலத்திலேயே உண்மையான அதிகாரப் பகிர்வுகளுடன் கூட்டாட்சி ஏற்பட்டால் அதில் பங்கேற்போம் எனப் பலமுறை கூறியுள்ளார் அறிஞர் அண்ணா. அமெரிக்க அரசியல்வாதி வெண்டல் வில்க்கி என்பவர் கூறிய உலகக் கூட்டாட்சி குடியரசிலும் பங்கேற்க தயார் என்றே கூறியுள்ளார். எத்தகைய சுயாட்சி உரிமைகளுடன் கூடிய கூட்டாட்சி என்பதுதான் தி.மு.க எழுப்பிய முக்கிய கேள்வியே தவிர, பிரிவினை அல்ல. திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்ட பிறகு தி.மு.க தேசிய அரசியலில் அனைத்து கட்சிகளுடனும் நல்லுறவை பேணி வந்துள்ளது. நடுவண் அரசின் எல்லா துறைகளிலும், அங்கங்களிலும் தமிழர்கள் கணிசமாக பங்காற்றுகிறார்கள். செயற்கைக்கோள்களைச் செலுத்துவது, விண்வெளி ஆராய்ச்சி என்றால் அப்துல் கலாம் முதல் இஸ்ரோ சிவன் வரை பலர் பங்காற்றியுள்ளார்கள். ராணுவத்தில் எத்தனையோ பேர் பங்காற்றுகிறார்கள், உயிரிழக்கிறார்கள். மத்திய அரசிலேயே வாஜ்பேயி பிரதமராக இருந்த அரசு உட்பட பதினைந்து ஆண்டுகள் தி.மு.க அங்கம் வகித்துள்ளது. இந்தியாவின் நலன்களை மட்டுமல்ல, மூன்றாம் உலக நாடுகளின் நலன்களையும் W.T.O என்ற உலக வர்த்தக அமைப்பில் தன் திறன்மிக்க வாதங்களால் பாதுகாத்தார் தி.மு.க தலைவர் முரசொலி மாறன். இருபதாண்டுகள் தூங்கியெழுந்த ரிப் வான் விங்கிள் என்ற பாத்திரம் போல ஐம்பதாண்டுகளாகத் தூங்குகிறாரா குருமூர்த்தி? கடந்த ஐம்பதாண்டுக் கால இந்திய வரலாற்றில் தி.மு.க-வின் பங்களிப்பு என்பது கணிசமானதல்லவா? இன்றைக்கும் பாஜக-வுக்கு எதிராக இந்தியா முழுவதிலும் எதிர்க்கட்சிகளை, மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைப்பதில் ஈடுபட்டுள்ளதே தி.மு.க? அதனால்தானே உத்தவ் தாக்கரே பதவியேற்புக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலினே நேரில் செல்கிறார்... கலைஞர் சிலை திறப்புக்கு அகில இந்திய தலைவர்களை அழைக்கிறார்... எங்கிருந்து வருகிறது இந்தப் பிரிவினை அரசியல் குற்றச்சாட்டு?

தி.மு.க இந்து மதத்துக்கு எதிரானதா? 

திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை இந்து மதம் என்று கூறப்படக்கூடிய வழிபாட்டு முறைகள், சடங்குகளுக்கு ஏதாவது தடையோ, தீங்குகளோ இழைத்துள்ளதா? எந்த கோயிலாவது பராமரிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டதாக புகார் உள்ளதா? ஜெயலலிதாதான் இந்து மத நம்பிக்கைகளில், வழிபாட்டில் தலையிட்டார். கிராம கோயில்களில் ஆடு, கோழிகளை பலி கொடுக்கக் கூடாது என்று சட்டம் கொண்டுவந்தார். அதன்மூலம் பெரும்பான்மையான பக்தர்களின் மனங்களைப் புண்படுத்தி, அவர்கள் பெருந்துயர் கொள்வதற்கு காரணமானார். பின்னர் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு அவரே இந்த தடைச் சட்டத்தை விலக்கிக் கொண்டார். திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அதுபோல மத வழிபாட்டு விஷயங்களில் தலையிட்டதில்லை.

திராவிட முன்னேற்றக் கழகம் இந்து மதத்தில் புகுந்துவிட்ட பல சமூக விரோத சிந்தனைகளை மட்டுமே விமர்சித்து வந்தது. பார்ப்பனர்கள் பிறரை விட உயர்பிறப்பினர் போன்ற மூட நம்பிக்கைகளைக் கேள்விக்கு உட்படுத்தியது. பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் பார்ப்பனீய ஆரிய சிந்தனையை எதிர்த்து “இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ?” என்று கேட்ட சித்தர் வழியில் நின்று ஆன்மிக வாழ்வை மேம்படுத்தியது. நாகரிக உலகில் பலரும் படிப்பதற்கும் கேட்பதற்கும் சங்கடப் படக்கூடிய புராணக் கதைகளைக் கேள்விக்கு உட்படுத்தியது. அதன் மூலம் முதிர்ச்சியடைந்த, பண்பட்ட மதமாக இந்து மதம் விளங்க வழிகோலியது. திருமூலரின் மிக நுட்பமான இறையியல் சிந்தனையை, “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்ற கோட்பாட்டை தங்களது இறைநம்பிக்கை தொடர்பான கோட்பாடாக அறிவித்ததன் மூலம் ஆழமான ஆன்மிகப் பார்வைக்கு வித்திட்டது. மனித குலத்தின் சாரம், அதன் ஆன்மா என்பது ஒன்றாகத்தான் இருக்க முடியும் என்பதும் அது தன்னிலும் செயல்படும் ஆற்றலாக ஒற்றை ஆற்றலையே உருவகிக்க முடியும் என்று கூறியதன் மூலம் மத நல்லிணக்கத்துக்கும், குறுகிய வேறுபாடுகளைக் கடந்த ஆன்மிகப் பார்வைக்கும் வழி வகுத்தது. தி.மு.க தலைவர்கள் பலர் தனிப்பட்ட முறையில் நாத்திகர்களாக இருந்தாலும் அவர்கள் நாத்திகத்தை அரசியல் கொள்கையாகப் பேசியது இல்லை. செக்யூலரிசம் என்ற மதச்சார்பின்மையைத்தான் அரசியலில் கடைப்பிடித்தார்கள். அதேபோல சிறுபான்மை மதங்களை சார்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்படக் கூடாது என்பதால் அவர்கள் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாப்பதில் அக்கறை செலுத்தினார்கள். எந்த ஒரு பண்பட்ட மனிதரும் சிறுபான்மையினர் நலன்கள் பெரும்பான்மையினரின் நலன்களுக்கு எதிரானது என்று நினைக்க மாட்டார்.

 

தி.மு.க பார்ப்பனர்களுக்கு எதிரானதா?

பார்ப்பனர்கள் பிறரைவிட உயர் பிறப்பாளர்கள் என்று கூறும் பார்ப்பனீய சிந்தனைகளையையும், கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் அவர்களே மேலாதிக்கம் செலுத்திய நிலையையும் விமர்சித்து சமூகத்தை மக்களாட்சிக்கும், அதிகாரப் பகிர்வுக்கும் இட்டுச்சென்றதைத் தவிர பார்ப்பனர்களுக்கு எந்த ஒரு சிறு தீங்காவது தி.மு.க-வால் ஏற்பட்டதாகச் சொல்லமுடியுமா? பார்ப்பனர்கள் பிறரது பழக்க, வழக்கங்களை இழித்துரைத்த அளவுக்குப் பார்ப்பனர்களை பிறர் இழித்துப் பேசியதாக சொல்ல முடியுமா? பிற சமூகங்களுக்கும் அனைத்து துறைகளிலும் போதிய இடம் கிடைக்க வழி செய்ததை, பார்ப்பனர்களுக்கு உரிமை மறுக்கப்பட்டதாகக் கூற முடியுமா? ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு புனிதத் தலங்களில், ஆலயங்களில் சடங்குகளை செய்விக்கும் பார்ப்பனர்களின் தொழிலுக்கு எந்த இடையூறாவது ஏற்பட்டுள்ளதா? தி.மு.க ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியில் பார்ப்பன சமூகத்திற்கு உரிய பங்கு கிடைக்கவில்லை என்று கூற முடியுமா? இட ஒதுக்கீட்டையே தங்களுக்கு எதிரானதாகப் பார்க்கும் சமூக விரோத பார்ப்பனீய நோக்கினை கைவிட்டுவிட்டால் அந்த சமூகத்திற்கு எந்தவொரு பாதிப்பும் தமிழகத்தில் ஏற்பட்டதாகக் கூற முடியுமா? சோ ராமசாமியும், குருமூர்த்தியும் எந்தவொரு தடையும் சிக்கலும் இல்லாமல் தி.மு.க-வைத் தொடர்ந்து விமர்சித்து இயங்குவது சாத்தியமாகத்தானே இருக்கிறது? ஏன் பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த ஜெயலலிதா முதல்வராகவே பதவி வகித்தாரே?

தி.மு.க பார்ப்பனர்கள் கட்சியில் உறுப்பினராக சேர்வதை தடை செய்யவில்லை. பிரபல வக்கீல் ராமன் என்பவர் கட்சியில் இணைந்து பணியாற்றியுள்ளார். அண்ணா உள்ளிட்ட தலைவர்களுக்கு நெருக்கமானவராக இருந்துள்ளார். ராஜாஜி திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி கண்டார்; தி.மு.க-வுடன் இணைந்து இந்தியை மட்டும் ஆட்சிமொழியாக்குவதை எதிர்த்து அறுபதுகளில் போராடினார். கலைஞர் தன் வாழ்நாளின் இறுதிப்பகுதியில் மதத்தில் புரட்சி செய்த மகான் என்று ராமானுஜரின் வாழ்க்கையைத் தொடராக தானே கதை வசனம் எழுதி கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார். மக்களாட்சிக்கும், அதிகாரப் பகிர்வுக்கும் ஆதரவாக இருப்பது வேறு; பார்ப்பனர்களுக்கு எதிராக இருப்பது வேறு. தி.மு.க சாமான்யர்களுக்கும் அதிகாரப் பகிர்வினை சாத்தியமாக்கிய கட்சி.

தி.மு.க எதிர்ப்பின் மர்மம்

இப்படி இல்லாத காரணங்களை குருமூர்த்தி புனைந்துரைப்பது எதனால் என்பதை நாம் பரிசீலிக்க வேண்டும். தி.மு.க ஊழல் கட்சி, அதனால் ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்குச் சென்று விடுதலையாகும் சசிகலாவுடன் சேர்ந்து அதை எதிர்க்கிறேன் என்றால் குழந்தை கூட சிரித்துவிடும். பாரதீய ஜனதா கட்சிக்குத் தமிழகத்தில் வளர வேண்டும் என்றால் அதற்கு தி.மு.க, அ.இ.அ.தி.மு.க இரண்டையும்தான் எதிர்க்க வேண்டும். எதனால் தி.மு.க-வை மட்டும் வீட்டை எரிக்கும் நெருப்பாகக் கருதி பதற்றமாக எதிர்க்க வேண்டும்? அப்படியென்ன பிரச்சினை குருமூர்த்திக்கு அந்த கட்சியுடன்?

இதற்கான உண்மையான விடை திராவிடம் என்ற சொல்லில்தான் இருக்கிறது. அண்ணாவின் “ஆரிய மாயை” நூலில் இருக்கிறது. இந்திய தேசியத்தை ஒற்றை கலாச்சார மூலம் கொண்டதாக உறுதிப்படுத்துவதே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் லட்சியம். அது கங்கை சமவெளியில் உருவான வேதங்களை அடிப்படையாகக் கொண்ட ஆரிய மரபு. அப்படி நிறுவுவதில் ஒரு பிரச்சினை என்னவென்றால் ஆரியர் வருகைக்கு முன்னரே இந்திய நிலத்தில் ஒரு பண்பாடு இருந்தது என்ற கருத்தாக்கம்தான். அந்தக் கருத்தாக்கத்துக்கு வலுவான துணையாக இருப்பது சமஸ்கிருத மொழிக்கும், ஆரிய பண்பாட்டுக்கும் மாற்றாகக் கருதப்படும் தமிழ் மொழியும், திராவிட பண்பாடும்தான். மொழிகளும், பண்பாடுகளும். மனித இனங்களும் ஒன்றோடொன்று கலக்காமல் இருப்பதில்லை என்றாலும், ஒட்டு மொத்த இந்திய பண்பாடும், அதன் மூலமும் ஆரிய வேதகால பண்பாடுதான் என்று சொல்லமுடியாதபடி செய்வது திராவிடம் என்ற சொல்தான். அதற்கேற்றாற்போல தமிழகத்தில் வழங்கிய ஜைனம், பெளத்தம், சைவம், வைணவம் எல்லாமே தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளவையாக விளங்குகின்றன. தமிழகம் தொடர்ந்து தனித்துவ மிக்க சிந்தனை போக்குகளை உருவாக்கி வந்துள்ளது. அது ஒற்றை இந்திய அடையாளத்தைக் கட்டமைக்க பெரியதொரு தடையாக உள்ளது.

குருமூர்த்தியின் எதிர்ப்பை, “நெருப்பை அணைக்கும்” பதற்றத்தை நாம் ஒற்றை இந்திய அடையாளத்தைக் கட்டமைக்க முயலும் பாசிசத்துக்கும், கலாச்சார பன்மையின் ஊற்றாக விளங்கும் திராவிடக் கருத்தியலுக்கும் இடையிலான போராட்டமாகவே பார்க்க வேண்டும். ஒரு எதிர்க்கட்சியை நெருப்பெனப் பார்த்து ஆளும் கட்சிக்காரர் பதறுவதற்கு அந்த எதிர்க்கட்சியின் கருத்தியல் வலிமைதானே காரணமாக இருக்க முடியும்.

கட்டுரையாளர் குறிப்பு

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி

 

 

https://minnambalam.com/politics/2021/01/18/17/Understanding-Gurumoorthy-Speech

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சிறப்புக் கட்டுரை: குருமூர்த்தியின் பேச்சைப் புரிந்துகொள்வது எப்படி?
புரிந்துகொள்ளாமல் இருப்பதன் அவசியம் பற்றி புரிந்துகொள்வதன் மூலம் 🤫

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

 • Topics

 • Posts

  • பொது வேட்பாளருக்கான ஓட்டம் புருஜோத்தமன் தங்கமயில் அடுத்த ஜனாதிபதி தேர்தலை முன்னிறுத்தி, ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான பொது வேட்பாளரைத் தேடும் பயணத்தில் தென் இலங்கை, மிகத் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, முன்னாள் அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க ஆகியோரைப் பொது வேட்பாளராக முன்னிறுத்தும் செயற்றிட்டங்களை எதிரணிக்குள் இருக்கும் பல்வேறு தரப்புகளும் முன்னெடுத்து வருகின்றன. இவர்களுக்குப் போட்டியாக ராஜபக்‌ஷர்களை ஏற்கெனவே தோற்கடித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், தன்னை மீண்டும் பொது வேட்பாளராக முன்னிறுத்தும் வேலைத்திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார். ஆட்சியில் இருக்கும் தலைவருக்கு எதிராக, பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் ஓட்டத்தில், எப்போதுமே ஒருவர் அல்லது இருவரைச் சுற்றியே, எதிரணியும் சிவில் சமூக கட்டமைப்புகளும் ஒளிவட்டங்களை வரைய ஆரம்பிக்கும். ஐக்கிய தேசிய கட்சியின் இரு தசாப்தகால ஆட்சியைத் தோற்கடிப்பதற்காக, சந்திரிகா குமாரதுங்கவை எதிரணிகள் பொது வேட்பாளராக ஏற்றுக் கொண்டன. அவரை, சமாதானத்தின் தேவதையாகவே தென் இலங்கை முன்னிறுத்தியது. அதனை, வடக்கிலும் கிழக்கிலும் நம்ம வைக்கும் அளவுக்கான ஒருங்கிணைப்பு, எதிரணியிடம் அப்போது காணப்பட்டது. அதுதான், ஐ.தே.கவை சுமார் இரு தசாப்தகாலம், எதிரணியில் உட்கார வைக்கக் காரணமானது. 2002இல் ரணில், இரண்டு ஆண்டுகள் ஆட்சியைப் பிடித்தாலும், ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா, ஆட்சியை ஆட்டி வைத்தார். பாராளுமன்றத்தைக் கலைக்கவும் செய்தார். முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான நாள்களில், ராஜபக்‌ஷர்கள் யுத்த வெற்றிவாதத்தில் திளைத்துக் கொண்டு நடத்திய தேர்தல்களில், தன்னால் வெற்றி பற்றி சிந்திக்கவே முடியாது என்ற கட்டத்தில் ரணில், இன்னொரு யுத்த வெற்றி வீரரான சரத் பொன்சேகாவை எதிரணியின் பொது வேட்பாளராக மாற்றினார். ராஜபக்‌ஷர்களின் விருப்பத்தை நிறைவேற்றிய இராணுவத் தளபதியை, ராஜபக்‌ஷர்களுக்கு எதிராகப் பொது வேட்பாளராக தமிழ்த் தேசிய கட்சிகளை ரணில் ஏற்க வைத்தார். சிங்கக் கொடியை சம்பந்தன் ஏந்தி, பொன்சேகாவுக்காகப்  பிரசாரம் செய்யும் காட்சிகள் அரங்கேறின. தமிழ் மக்களும் அந்தத் தேர்தலில், பொன்சேகாவுக்கு ஓரணியில் திரண்டு வாக்களித்தார்கள். ஆனால், அப்போது பொது வேட்பாளர் யுக்தி வெற்றியளிக்கவில்லை. ரணில் தன் தோல்வியைத் தவிர்ப்பதற்காக பொன்சேகாவை பகடையாக்கினார். ஆனால், 2015 ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சிகள் ஓரணியில் நின்று, மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக அறிவித்தன. அதுவும் தேர்தல் அறிவிக்கப்படும் இறுதி நாள்கள் வரையில், எதிரணி தயார்படுத்தும் பொது வேட்பாளர் யார் என்பதை, ராஜபக்‌ஷர்களுக்கு தெரியாமல், எதிரணியில் உள்ளவர்கள் மிக மிக இரகசியமாகப் பேணியமை, ராஜபக்‌ஷர்களின் தோல்விக்கு காரணமானது. அது, மாத்திரமல்லாமல், மஹிந்த ஆட்சியில் மிக முக்கியமான நபராக,  அனைத்து ராஜபக்‌ஷர்களாலும் மதிக்கப்பட்ட மைத்திரியை, அவர்களுக்கு எதிராகவே பொது வேட்பாளராகத் தயார்படுத்தியமை, தென் இலங்கை மக்கள் மத்தியில் மாத்திரமல்ல, முழு இலங்கையிலும் ஆச்சரியத்துடன் பார்க்கப்பட்டது. அது, ராஜபக்‌ஷர்களை தோற்கடிப்பதற்கான அலையை தோற்றுவிக்கவும் காரணமானது. நல்லாட்சி உருவாகவும் 18ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்கவும் வித்திட்டது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, ஆட்சி அதிகாரம் பாராளுமன்றத்தோடும் பகிரப்பட்டது. அதன்மூலம் ஜனநாயக ஆட்சிக்கான தத்துவம் ஓரளவுக்கு பாதுகாக்கப்பட்டது. ஆனால், ஆட்சித் தலைவர்களாக இருந்த மைத்திரியும் ரணிலும் தங்களுக்குள் முரண்பட்டு, நல்லாட்சியை இடைநடுவில் போட்டுடைத்தபோது, ராஜபக்‌ஷர்களின் மீள்வருகை உறுதி செய்யப்பட்டது. 69 இலட்சம் மக்களின் ஆணையைப் பெற்று, மீண்டும் ராஜபக்‌ஷர்கள் ஆட்சிக்கு வந்த போது, குறைந்தது ஒரு தசாப்தகாலத்துக்கு எதிர்க்கட்சிகள் ஆட்சி பற்றிய கனவைக் காணும் வாய்ப்பு இல்லை என்ற நிலையே இருந்தது. ஆனால், அந்த நிலையை சில மாதங்களுக்குள்ளேயே ராஜபக்‌ஷர்கள் இல்லாமல் செய்தனர். இன்றைக்கு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இலங்கையை மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் கொண்டுவந்து நிறுத்திவிட்டார்கள். யார் யாரெல்லாம் ராஜபக்‌ஷர்களை நாட்டின் பாதுகாவலர்களாக முன்னிறுத்தினார்களோ, அவர்கள் எல்லாமும் நாட்டை விட்டு வெளியேறும் அவசரத்தில் இருக்கிறார்கள். ராஜபக்‌ஷர்களின் ஆட்சி, இப்படியே இன்னும் சில மாதங்களுக்கு நீடித்தால், நாடு முழுமையாகத் திவாலாகிவிடும் என்று தென் இலங்கை சக்திகள் நம்பத் தொடங்கிவிட்டன. இந்தக் கட்டத்தில் இருந்துதான், பொது வேட்பாளருக்கான ஓட்டம் சூடுபிடித்திருக்கின்றது. ராஜபக்‌ஷர்களைத் தோற்கடித்துவிட்டு, அடுத்த ஜனாதிபதி தேர்தலிலேயே அவர்களுக்கு ஆதரவளித்து, ஆட்சியில் பங்காளியாகிவிட்ட மைத்திரிக்கு, மீண்டும் பொது வேட்பாளராகும் ஆசை வந்திருக்கின்றது. எதிர்க்கட்சிகளை விட, அரசாங்கத்தை அதிகமாக விமர்சித்து வருபவர் மைத்திரிதான். ஆனால், அவரது கட்சி இன்னமும் அரச பங்காளியாகவே இருக்கின்றது. கடந்த காலத்தைப் போன்று இம்முறையும் அரசாங்கத்தில் இருந்துவிட்டு, இறுதி நேரத்தில் தன்னைப் பொதுவேட்பாளராக முன்னிறுத்தும் எண்ணம் மைத்திரியிடம் இருக்கலாம். அவ்வாறான எண்ணம் அவரிடத்தில் இருப்பதை, ராஜபக்‌ஷர்கள் ஏற்கெனவே கண்டுகொண்டதால், அவரைத் தன்னுடைய முக்கிய அமைச்சர்களைக் கொண்டு, அதிகமாக விமர்சிக்க வைத்தனர். முன்னாள் ஜனாதிபதி, ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சியின் தலைவர் என்கிற வரைமுறைகள் தாண்டி, மைத்திரியை நோக்கி, பாராளுமன்றத்தில் அமைச்சர்கள்  கைகளை நீட்டினார்கள். ஒரு கட்டம் வரையில் பொறுமை காத்த மைத்திரி, தனக்காக யாரும் வாதாட இல்லாத நிலையில், தானே தனக்காகக் களமாடத் தொடங்கினார். அதன் அடுத்த கட்டமாகத் தன்னைப் பொது வேட்பாளராக முன்னிறுத்தும் பணிகளைத் தொடங்கினார். ஆட்சியில் பங்காளிகளாக இருந்தாலும், தங்களைத் தீண்டத்தகாதவர்கள் போல, ராஜபக்‌ஷர்கள் நடத்துகிறார்கள் என்கிற வெப்பியாராம், சுதந்திரக் கட்சி அமைச்சர்கள், முக்கியஸ்தர்களிடம் தொடர்ச்சியாக இருந்தது. அப்படியான நிலையில்தான், மீண்டும் மைத்திரியை பொது வேட்பாளராக்கும் திட்டத்துக்கு அவர்கள் வலுச் சேர்க்கத் தொடங்கினார்கள். ஆனால், மைத்திரி தன்னை பொது வேட்பாளராக முன்னிறுத்தும் செயற்பாடுகளை ஆரம்பித்த போதிலும், அவரை எதிர்க்கட்சிகள் எதுவும் சீண்டவே இல்லை. ஏற்கெனவே ஜனாதிபதியாகி, ஒரு கட்டத்தில் ராஜபக்‌ஷர்களிடம் ஆட்சியைக் கையளிக்க முனைந்தமை, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பிலான சிக்கல் என, மைத்திரி மீதான அதிருப்தி, ஐக்கிய மக்கள் சக்தியிடம் நீடிக்கின்றது. அத்தோடு, தொடர்ச்சியாக நேரடியாக ஆட்சி அதிகாரத்தில் இருக்க முடியாத ஒரு சிக்கலை, ஐக்கிய மக்கள் சக்தியினர் எதிர்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், தங்களது கட்சிக்கு வெளியில் இருந்து வேட்பாளர் ஒருவரை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் அவர்கள் இல்லை. இந்தக் கட்டத்தைப் ஏற்கெனவே புரிந்து கொண்ட சம்பிக்க ரணவக்க, தான் அங்கம் வகித்த ஜாதிக  ஹெல உறுமயவிலிருந்து விலகி, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்.  சஜித் பிரேமதாஸவுக்கு பௌத்த பீடங்களிடம் செல்வாக்கு இல்லை. அந்தப் புள்ளியில் தன்னைப் பௌத்தத்தின் காவலனாக அடையாளப்படுத்துவது இலகுவானது. தென் இலங்கையில் கடும்போக்கு சக்திகள் தன்னை ஆதரிக்கும் என்கிற விடயங்களை முன்னிறுத்தி, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராகலாம் என்பது  சம்பிக்க ரணவக்கவின் எதிர்பார்ப்பு. அதை முன்னிறுத்தியே, அவர் புதிய செயலணியாகச் செயற்படத் தொடங்கியிருக்கிறார். ஆனால், சஜித் பிரேமதாஸ தனக்குப் பதிலாக இன்னோருவரை வேட்பாளராக ஏற்கும் நிலையில் இல்லை. ராஜபக்‌ஷர்கள் மீதான மக்களின் அபிமானம், பெரும் வீழ்ச்சிப் புள்ளியில் இருக்கின்ற நிலையில், அதைப் பயன்படுத்தாதுவிட்டால், என்றைக்கும் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பது அவரது எண்ணம். அதை எப்படியாவது பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார். ஆனால், ஓர் எதிர்க்கட்சித் தலைவராக அவர் சரியாகச் செயற்படவில்லை என்கிற எண்ணம், கட்சியினரிடத்திலும் மக்களிடத்திலும் காணப்படுகின்றது. அது, இன்னொரு புறத்தில் சந்திரிகா குமாரதுங்கவை களத்தில் இறக்கியிருக்கின்றது. மைத்திரியைப் பொது வேட்பாளராக்கியதில் தன்னுடைய பங்கு இருந்ததைக் காட்டிலும், இம்முறை கிங்மேக்கராகத் தன்னை உயர்த்தும் கட்டத்தில் சந்திரிக்கா நிற்கிறார். அதற்காக, ஏற்கெனவே ராஜபக்‌ஷர்களால் பழிவாங்கப்பட்ட ஷிராணி பண்டாரநாயக்கவை பொது வேட்பாளராக முன்னிறுத்துகிறார். அது தவிர, தென் இலங்கையின் முற்போக்கு சக்திகள், வழக்கமாகவே அநுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தி வந்திருக்கிறார்கள். ஜனாதிபதி தேர்தலுக்கு 30 மாதங்கள் இருக்கின்ற நிலையில், ஆரம்பித்திருக்கின்ற பொது வேட்பாளருக்கான ஓட்டம், எவ்வாறு முடிவுக்கு வருமென்று தெரியவில்லை. ராஜபக்‌ஷர்கள் தற்போது வீழ்ச்சிப் பாதையில் இருந்தாலும், அவர்களைத் தோற்கடிப்பது அவ்வளவு இலகுவான ஒன்றல்ல; அதற்கு அதிகமாக உழைக்க வேண்டும். முதலில், ஆளுமையுள்ள ஒருவரை எதிரணிகள் ஓரணியில் நின்று தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையென்றால், ராஜபக்‌ஷர்கள் யுகம், இருண்ட யுகமாகத் தொடரும்.     https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பொது-வேட்பாளருக்கான-ஓட்டம்/91-290044
  • நூறுகதை நூறு சினிமா: 58 – காதல் July 24, 2019 - ஆத்மார்த்தி · இலக்கியம் சினிமா தொடர்கள் சினிமா யதார்த்தம் என்பது எப்போதும் கேள்விக்குரியது நிஜநிகர் என்ற ஒன்று சினிமாவில் இல்லவே இல்லை. -க்ரிஸ்பின் க்ளோவர் சினிமா எதையும் பூடகமாய்ச் சொல்லும். நேரடியாகப் பேசுவதன் கடினத்தை அனாயாசமாகக் கையாளும். அது தனி மனிதர்களின்மீது எய்யப்படும் ஒற்றை அம்பைப்போலத் தோற்றமளித்தாலும்கூட நிசத்தில் அது கூட்டத்தின்மீது கட்டவிழ்க்கப் படுகிற கண்ணீர்ப்புகைக் குண்டினை ஒத்தது. சினிமா காலம் கடந்த பிற்பாடும் கேள்வியெழுப்பும். அது ஒரு நிழல் நீதி மன்றம். இயல்புக்கு அருகே சினிமா உருவாக்கம் வருகையில் நல்லதோர் யதார்த்தப் படம் உண்டாகிறது. எதிர்பார்ப்புக்கு மேலாக நிசத்தின் அருகே அமர்விக்கப்படுகையில் கண்ணுறும் ரசிகன் விதிர்விதிர்க்கிறான். மற்ற எந்தக் கலையின் விளைதல்களைவிடவும் சினிமா மூலமான பண்படுத்துதலுக்கான பலாபலன் அதிகம். மேலும் சினிமா மக்களுக்கு என்றென்றும் ப்ரியமான ஊடகம். அதனை விஞ்ச அடுத்தவோர் கலை இன்னும் உருவாகவில்லை என்பதே நிதர்சனம்.   சமூகம் விடாப்பிடிவாதத்தோடு பற்றிக் கொண்டிருக்கிற தவறான பிடிமானங்களினின்றும் மெல்லிய சேலையை முட்பரப்பினின்றும் சின்னதொரு கிழிசலும் ஏற்பட்டுவிடாமல் அகற்றுவதுபோலவே வெகுதூரம் அழைத்துச் செல்கிற வேலையைப் பண்பாடும் கலாச்சாரமும் நிரந்தர முழக்கங்களாக வைத்திருக்கின்றன. அப்படியான முழக்கங்களை மீண்டுமீண்டும் நிகழ்த்துவதற்கு உபயோகமாகும் தொடர்சாலையாகவே அடுத்தடுத்த சினிமாக்களின் வருகை தேவையாகிறது. மாபெரிய மாற்றத்துக்கு ஒற்றை சினிமா போதவே போதாது. சினிமா என்பது மறைமுகமாகவும் நேரடியாகவும் சரி மற்றும் தவறு ஆகிய இரண்டு தரப்புக்களை ஓங்கி ஒலிப்பதான பிரச்சாரத்தைவிடாமல் செய்தவண்ணம் இருந்தே ஆகவேண்டும் அல்லாமற்போனால் சமூகம் தன்மீது குறித்த காலங்களில் பெய்ய வேண்டிய குளிர்மழை அற்றுப்போய் வெம்மையின் உக்கிரத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுக்கவேண்டி வரும். சாதிகளுக்கு இடையில் நிரந்தரமாய்ப் பேணப்பட்டு வருகிற பகையும் ஒவ்வாமையும் நாடெங்கிலும் சாதி ஆணவத்திற்குப் பலியானவர்களின் கண்ணீர்வற்றாத கதைகளும் சமூகத்தின் எல்லா மௌனங்களையும் எப்போதும் ஆட்சேபித்த வண்ணம் பல கலைகளின் மூலமாகவும் வெளிப்பட்ட வண்ணமே இருக்கின்றன. கலை என்பது ஒரு போராட்ட முறை. கலை என்பது கலகம். எல்லாவற்றுக்கும் மாறாகக் கலை என்பது இன்றளவும் தீர்ந்திடாத வழக்குகளின் மேல் முறையீடு. கலை என்பது சமரசத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுத்திடாத கொள்கைவாதியின் வினா. ஒயின் ஷாப் அதிபரின் செல்ல மகள் ஐஸ்வர்யாவுக்கும் மெகானிக் முருகனுக்கும் இடையில் பதின்பருவத்தின் கடைவாசலில் அன்பு பூத்துக் காதலாகிறது. வழியற்ற வழியில் திருமணம் செய்து கொண்டு ஊரைவிட்டுச் சென்னை செல்கின்றனர். பெண்ணின் உறவினர்கள் நைச்சிய மௌனத்தோடு புதுமணத் தம்பதியினரை அன்போடு அரவணைப்பதுபோல பாசாங்கு காட்டித் தங்களூருக்கு அழைத்து வருகின்றனர். முழுவதும் தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தை நெருங்கியவுடன் அவளது தாலி பறிக்கப்படுகிறது. அவளைக் காதலித்துக் கல்யாணம் செய்தவன் அடித்து நொறுக்கப்பட்டு அவனுடலில் உயிர் மட்டும் எஞ்சுகிறது. தான் யாரென்பதையே மறந்த முருகன் நினைவுகளை இழந்து மனம் பிறழ்ந்து வாழ்வு சிதைந்து பைத்தியமாய்க் காணக்கிடைக்கிறான். தன் கணவன் குழந்தை சகிதம் அந்தச் சாலையில் எதிர்ப்படும் ஐஸ்வர்யா முருகனின் நிலை கண்டு அழுதுவெடிக்கிறாள். காதல் திரைப்படம் முற்றுப்பெறுகிறது. பாலாஜி சக்திவேலின் படைப்பு நேர்மையும் சமரசம் செய்துகொள்ளாத உருவாக்கத் திறனும் காதல் படத்தை உலகளவிலான ஒன்றாக நிகழ்த்தின. ஷங்கரின் எஸ். பிக்சர்ஸ் சார்பாக பாலாஜி சக்திவேல் எழுதி இயக்கிய காதல் படத்திற்கு ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்திருந்தார். நா முத்துக்குமாரின் எழுத்தில் உனக்கென இருப்பேன் சாகாவரப் பாடலாயிற்று. விஜய் மில்டன் ஒளிப்பதிவு உன்னதமான இருளாகவும் இயல்பான ஒளியாகவும் காணவாய்த்தது. தண்டபாணி க்ரூரமான வில்லனாகத் தோற்றமளித்தார். பரத், சந்தியா இருவருக்கும் இடையே உலர்மலராகக் காதல் காண்பவர் நம்பகங்களின் நிரம்பிற்று. சுகுமார் சரண்யா பசங்க சிவக்குமார் ஆகியோரும் குறித்த நடிப்பை நல்கிச் சிறந்தார்கள். சாதி ஆணவம் ஒவ்வொரு மனிதனிடமிருந்தும் விட்டு அகல வேண்டிய காட்டுமிராண்டித் தனம். அடுத்தடுத்த காலத்திற்குத் தன் மனமறைபொருளாக சாதியை மேலெழுதி வருவதும் சின்னஞ்சிறிய பிஞ்சுகளின் மனதிலும் சாதி நஞ்சைவிடாமல் புகட்டிவருவதும் ஒப்புக்கொள்ளவே முடியாத செயல்பாடுகள். என்றைக்கு மனிதன் முழுவதுமாய் சாதியினின்றும் அகலுகிறானோ அன்றைக்குத்தான் இருளற்ற புதிய ஒளியை அவனடைவதாகப் பொருள். சாதியின் வன்மத்தை காதல் திரைப்படம் உண்மைக்கு மிக நெருக்கமாக ஒளி பாய்ச்சிற்று.   https://uyirmmai.com/literature/நூறுகதை-நூறு-சினிமா-58-காதல/  
  • தனிமை – மாதா சார்லஸ் டார்வின் பரிணாமக் கோட்பாட்டின்படி, குரங்கிலிருந்து வந்த மனிதன் குரங்குகளைப்போல் கூட்டமாக வாழ விரும்புகிறான். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை யாரும்தனிமையில் வாழ்ந்ததாக குறிப்புகள் இல்லை. விதவைகள், மனைவியை இழந்தோர், நோயாளிகள்,ஆகியோர் தனிமையாக வாழவில்லை. எந்த மனிதரும் சமூகத்தில் அடுத்தவர் துணையின்றிவாழமுடியாது. பண்டமாற்றம் நிகழ்ந்தது. தேவைகளையும், நிறைவுகளையும் பகிர்ந்துகொண்டார்கள். ஆனால் நவீன வாழ்க்கை முறை எத்தனையோ மனிதர்களைத்தனியனாக்கியுள்ளது. வீடிருந்தும் வீடற்றவர்களாக உணர வைக்கிறது.  18ம் நூற்றாண்டுக்குப் பிறகு தொழிற் புரட்சி வந்து அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டது. தனியார், பொதுத்துறை, தனிநபர், சமூகம் என பெரிய அளவில் ஏற்றம் கண்டன. சந்தைப்பொருளாதாரம் உருவாகி முதலாளித்துவத்தின் குழந்தையாக தனிமை பிறந்தது. கடந்த ஐம்பதுஆண்டுகளில் அதிகமான விவாகரத்துகளினாலும், பிறப்பு விகிதம் குறைவினாலும், கணவன்,மனைவி இருவரும் வெளியே வேலைக்குச் செல்வதாலும் தனியாக வாழும் நபர்களின் எண்ணிக்கைஉயர்ந்துகொண்டே வருகிறது. குடும்பம் சிதைவதாலும், சமுதாய நெருக்கடிகளாலும் சிலர்தனிமையில் வாழ்கிறார்கள். சக மனிதர்களிடமிருந்து விலகியோ, விலக்கி வைத்தோஇருப்பதிலிருந்துதான் தனிமை உருவாகிறது. செய்த பாவங்களுக்குத் தண்டனையாக கூட சிலர்தனிமையை நினைக்கிறார்கள். அவர்கள் நரகத்திலோ, சுடுகாட்டிலோ, பாலைவனத்திலோஇருப்பது போல் உணர்கிறார்கள். நகரங்களின் நெருக்கமும், இரைச்சலும் தனிமையை மேலும்வளர்க்கிறது.  தற்கால தனிமை என்பது மற்றவர்களிடமிருந்து தனிமைப்பட்டு இருப்பது மட்டுமல்ல, தனிமைமக்களின் மனதில் குடிகொண்டிருக்கிறது. குடும்பத்தார், நண்பர்கள், உறவினர்கள், காதலி,காதலன் உடனிருந்தாலும் கூட சிலர் தனிமையில் இருப்பதாகவே உணர்கிறார்கள். சமூகத்தைப்பற்றிய பயமும் தனிமையை உறுதி செய்கிறது. மனதளவில் உறுதியானவர்கள் கூட தனிமைப்பட்டுதளர்ந்துவிடுகிறார்கள். மேலும் தனிமையில் இருப்பவர்களுக்கு மனம் விரைவில்வெறுமையடைகிறது. தனிமை என்பது காரணம் தெரியாத உடல் நலக் குறைவா? நோயியலில் இருதயக் கோளாறு, நீரழிவு நோய், சிறுநீரகப் பிரச்சனை ஆகியவற்றை விட தற்காலத்தில் பொதுவாக அறியக்கூடியதுதனிமைதான். தொற்று நோயைப் போல பரவிவரும் தனிமை எவ்வாறு உருவாகிறது, அதைத்தீர்ப்பததற்கு வழி என்னவென்று பல முனைகளில் ஆய்வு செய்து வருகிறார்கள். தனிமை என்பது ஒருஉணர்வு. ஒரு நிகழ்ச்சியில் நூறுபேர் இருந்து, அவர்களில் நமக்கு ஒருவருமே தெரியாமல்இருந்தால் நாம் தனிமையை உணர்கிறோம்.    சுமார் 1500 பேர் உங்கள் முகநூலில் இணைந்திருக்கலாம். அதில் பாதிப்பேருக்கு மேல் “லைக்” போட்டு உங்களை தொடர விரும்பாதவர்கள். மீதியுள்ளோர் பள்ளி கல்லூரித் தோழர்கள்,குறிப்பிட்ட அரசியல், சாதி அமைப்பைச் சேர்ந்தவர்கள், திடீர் நண்பர்கள் ஆகியோர் இருக்கலாம். இவர்களிடம் நாட்டு நடப்புகள், சமூக நிகழ்வுகள், மேற்போக்கான குடும்ப விஷயங்கள், தன்னுடைய“சாதனைகள்” ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளலாம். இவர்களோடு இணையம் மூலம் உரையாடல்நடத்தலாம்;. ஆனால் இவர்களெல்லாம் நமக்கு அப்பால் இருப்பவர்கள். இது படிப்படியாக உயர்ந்துபின் போதையாக மாறிவிடுகிறது. இவற்றினால் தனிமையைப் போக்க முடியாது. தனியர்களுக்குசமூகப் பாதுகாப்புதான் முக்கியமே தவிர, இணைய தளம் அல்ல. ஒருவர் கூட்டு குடும்பத்தில் வாழ்கிறார். இருபது பேர் ஒரே வீட்டில் பழகுகிறார்கள். ஒன்றாகஉணவருந்துகிறார்கள். யாரிடமும் மனதளவில் உறவு இல்லை. மனம் விட்டு பேசமுடியாது. சமூகத்தோடு இணைந்து வாழமுடியவில்லை. இதுதான் தனிமை.     ஒருவர் தனியாக இருக்கலாம். ஆனால் அவருக்கு உலகம் முழுக்க நண்பர்கள் இருக்கிறார்கள். கோடிக்கணக்கானோர் நேசிக்கிறார்கள். அவர் தனிமை கிடையாது.   உதாரணமாக ஆல்பர்ட்ஐன்ஸ்டீன் தனியாக சோதனை செய்கிறார். பல அறிவியல் கண்டுபிடிப்புகளை வெளியிடுகிறார். ஆனல் உலகம் முழுக்க அவருக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். கோடிக்கணக்கானோர்நேசிக்கிறார்கள் அது தனிமை இல்லை. மனிதனின் ஒவ்வொரு பருவத்திலும் அதற்கான தனிமை உண்டு. ஒவ்வொரு தனிமையும் ஒரு வகை. தனிமை மானுடனின் இயல்பான நிலை எனப் புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு தனிமைஇல்லாமலிருப்பது சிறுவர்களாக இருக்கும் போது மட்டும்தான். இளமைக் காலத்தில் நாம் ஓர்ஆழ்ந்த தனிமையை உணர்கிறோம். நண்பர்கள் சூழ  இருந்தாலும் அந்த தனிமை கூடவேஇருக்கிறது. அதைப் போக்குவதற்கு வாசிப்பும், செயல்பாடும் சிறந்த வழியாக இருக்கும்.   நாம் ஏன்செயல்பட வேண்டும்? இரண்டு விஷயங்களை நாடுகிறோம். ஒன்று நம் இருப்பை வெளிப்படுத்தசெயல்படுகிறோம்; நம்மை பிறருக்குத் தெரிவதும், அவர்கள் நம்மை மதிப்பதும்இன்றியமையாததாக உள்ளது. நாம் சிலவற்றை சிறப்புற செய்துகொண்டிருக்கிறோம் என்று நாம்உணர வேண்டியிருக்கிறது. அங்கீகாரம், மனநிறைவு இரண்டும் தனிமையை அகற்றுபவை.      என்னால் எங்கும் தனிமையாக இருக்க முடியும். எனக்குத் தனிமைதான் பிடிக்கும் என்று சிலர்சொல்லக்கூடும். கைபேசியும், இணையதளமும் இல்லாவிடில் அத்தகைய தனிமை அவருக்குகுட்டிச் சாவாக இருக்கும். பக்கத்தில் மனிதர்கள் இல்லாமல், வம்புகளில்லாமல் வாழவேமுடியாதவர்களாக இருப்பார்கள். சமூக வலைத் தளங்களில் வம்புகளைத் தேடியலைந்துகொண்டிருப்பார்கள்.  முதுமையில் குடும்பம் எனும் பொறுப்பு இல்லாமலாகி, உறவுகள் சற்று சம்பிரதாயமானவையாக ஆகிவிடுகின்றன. ஏனென்றால் அடுத்த தலைமுறை வாழும் உலகம் நாம் புரிந்துகொள்ளமுடியாததாக, அயலானதாக உள்ளது. இலக்கு இல்லாமல், செயற்களம் இல்லாமல் இருப்பதன்சலிப்பு தனிமையை உருவாக்குகிறது. சிலர் அரசியல், சாதி, மதச் செயல்பாடுகள், குடும்பசிக்கல்கள் ஆகியவற்றில் ஈடுபட்டு தங்களை மூழ்கடித்துக் கொள்கிறார்கள். மனதிற்குப் பிடித்தஏதாவது ஒரு துறையில் சேவையில் ஈடுபடுவது தனிமையை இல்லாமலாக்கும். இத்தனிமையின்விளைவான சோர்வை அழித்து ஊக்கம் கொண்டவர்களாக ஆக்கும். இதில் மாற்றம் இல்லாதவர்கள்அன்றாடத்தில் சலிப்புறுகிறார்கள். குடி உட்பட சிக்கலில் சென்று சிக்கிக்கொள்கிறார்கள்.       உலகில் உள்ள முதியவர்களில் பத்தில் ஒருவர் இந்தியாவில் உள்ளார். இதில் பாதிப் பேர்தனிமையில் வாழ்கிறார்கள். வறுமை, நோய், தனிமை ஆகியவை பெரும்பாலான முதியவர்களைப்பீடித்திருக்கிறது. இந்த மூன்றில் மனரீதியாக அதிக துயரமளிப்பது தனிமையே. பிள்ளைகள் விலகிவெளிநாடுகளுக்கு, வெளியிடங்களுக்கு வேலைக்கு சென்று விடுகிறார்கள். குடும்பத்தில் இருக்கும்போதே மரியாதைக் குறைவாக நடத்துதல், கவனிப்பு இன்மை, அலட்சியம் போன்றவைகள்உளவியல் ரீதியாக ஒரு மனிதனுக்கு தனிமை உணர்வை உருவாக்குகின்றன. எண்ணங்களைப்பகிர்ந்துகொள்ள முடியவில்லை. உறவினர்களையும், நண்பர்களையும் சந்திக்க முடியாமல்தொலைக்காட்சியிலும், கைபேசியிலும் தங்களைப் புதைத்துக் கொள்கிறார்கள். குடும்பத்திலும்,வெளியிலும் அவமானங்கள் வருகின்ற போது எதற்காக இந்த உசிரை வச்சிக்கிட்டு இருக்கனும். செத்துத் தொலைக்கலாம் என்ற முடிவுக்கு தள்ளப்படுகிறார்கள். சிலர் குடிபோதைக்கு அடிமையாகிதங்களை அழித்துக் கொள்கிறார்கள். சிலருக்கு மனநல பாதிப்பு ஏற்படுகிறது. இலக்கியத்தில் தனிமையைப் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது? 1667ல் ஆங்கிலக் கவிஞர் ஜான் மில்டன் தனது இழந்த சொர்க்கம் என்ற கவிதைத் தொகுப்பில் தனிமையைப் பற்றிவிவரித்திருக்கிறார். ஆங்கில இலக்கியத்தில் தனிமையைப் பற்றி முதன்முதலாக வந்த செய்தி இதுதான் என அறியப்படுகிறது. ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செகாவ் எழுதிய, உலகின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றான “பந்தயம்”என்ற கதையில் பணத்திற்காக ஆசைப்பட்டு ஒருவன் பதினான்கு ஆண்டுகள் தனிமைப்பட்டு, கதைமுடிவில் பணம் பெரிதல்ல, தனிமனித வாழ்க்கையும், சுதந்திரமுமே முக்கியம் என்பதைகதாபாத்திரத்தின் மூலம் செகாவ் வெளிப்படுத்தியிருப்பார். தனிமையில் இருந்த காலத்தில் அந்தமனிதன் உலக இலக்கியங்களையும், தத்துவ நூல்களையும் வாசித்தே தனிமையைவீழ்த்தியிருப்பான். தனிமையில் வாழ்ந்து வரும் பேக்கரி உரிமையாளரான ஒரு முதிர்கன்னி, தனது வாடிக்கையாளர் ஒருவருடன் ஒரு தலைக் காதல் ஏற்பட்டு, எதிர்பாரா முடிவாக அக்காதல் தோல்வியில் முடியும். பின்னர் அப்பெண் தனது வாழ்வாதாரமான பேக்கரித் தொழிலையும், அதன் தொடர்ச்சியானஊழியர்களையும், வாடிக்கையாளர்களையும் அடிப்படையாகக் கொண்டு தனிமையை வெல்லுவாள் என ஓ.ஹென்றி “சூனியக்காரியின் ரொட்டித்துண்டு” என்ற கதையில் விவரித்திருப்பார்.    தமிழில் ராஜம் கிருஷ்ணன் எழுதிய “தனிமை” என்ற சிறுகதையில், வயதான தாயாரை தனமையில்விட்டுவிட்டு, அவளுடைய இரண்டு பெண் மக்கள் வேலை தேடி வெளிநாடு சென்று விடுகிறார்கள். பக்கத்து வீட்டுப் பெண் வந்து விசாரித்து விட்டு, வளர்ப்பு மகளான நானே எனது பெற்றோரைவிட்டுப் பிரிவதில்லை. பெற்ற மகள்களான அவர்கள் ஏன் உங்களைத் தனிமையில் விட்டுச்சென்றார்கள் என்று கேட்பாள். தனிமை எவ்வாறு உருவாகிறது என்பதை கதாசிரியர் விரிவாகச்சொல்லியிருப்பார்.    தனிமை மன அழுத்தத்தை தணிக்கும் என்பது திசை திருப்பும் முயற்சியே. தனிமையின் சோகம்சரிசெய்யக்கூடியது தான். காலத்திற்கு காலம் தனிமை மாறுபடுகிறது. நவீன கால தனிமையைப்போக்குவதற்கு பல வழிகள் திறந்திருக்கின்றன. அதே வேளையில் பலரும் நினைப்பது போலகேளிக்கைகள், பொழுது போக்குகள் எவருக்கும் தனிமையைப் போக்குவதில்லை. நாம் வாழ்நாள்முழுக்க ஓய்வு, கேளிக்கைக்காக ஏங்கியிருந்திருப்போம். ஆகவே முதிய வயதில் முழு நேரமும்ஓய்வும், கேளிக்கையுமாக வாழ வேண்டுமென்று கற்கனை செய்திருப்போம். ஆனால் அதிகம்போனால் ஓராண்டு அவ்வாறு ஈடுபட முடியும். அதன் பின் சலிப்பே எஞ்சும். ஏனென்றால்கேளிக்கையில் நாம் பார்வையாளர்கள். எந்த வகையிலும் பங்கேற்பாளர்கள் அல்ல. வெறும்பார்வையாளர்களாக இருப்பதில் செயலின்மை உள்ளது. மானுட உடலும், உள்ளமும் செயலுக்காகவடிவமைக்கப்பட்டவை. செயலின்மையால் சோர்வும், சலிப்பும் அடைபவை. மற்ற ஈடுபாடுகளுடன்ஒப்பிடுகையில் வாசிப்பு மிக மேலானது. ஏனென்றால் அதில் நமது பங்கேற்பு இல்லாமல் முடியாது. வாசிப்பையொட்டி எழுதவும் ஆரம்பித்தால் அது செயற்களமே. ஆனால் அது அனைவராலும்செய்யக்கூடியது அல்ல.  இலக்கிய வாசிப்பு மன அழுத்தத்தை, வெறுமையைக் குறைத்து, கதையில் உலவும்பாத்திரங்களோடு உரையாட வைக்கிறது. கதையோடு இணைந்து புத்தகம் வாசிப்பவரும் புதியவாழ்க்கையை வாழ முடியும். நேருக்கு நேர் உரையாடலும், எழுதுதலும் மனிதரின் தனிமையைக்குறைக்கும். வாசிப்பதினால் உலகில் எப்போதும் தனிமையை பொழுது போக்கு அம்சமாகவே நாம்உணரலாம். வாசித்த இலக்கியக் கதாபாத்திரங்களின் அனுபவங்களை நம் அனுபவங்களாகஉணர்ந்து, அதன் நாயகர்களுடன் நம்மை அடையாளப்படுத்திக் கொண்டு, அது அளிக்கும்வெவ்வேறு உலகங்களில் நாம் மானசீகமாக வாழலாம்.                              https://bookday.in/thanimai-article-by-matha/    
  • வேப்பவெட்டுவான் வீதி மண்கொள்ளையர்களின் தலைவர்கள் பிள்ளையான், வியாழேந்திரன் பங்கு என்ன?  இதற்குத்தானா பிள்ளையானை தெரிவு செய்தோம்?   
  • நித்திரை கொள்ளேக்கயும் காலாட்டிக்கொண்டு இருக்கவேணும்.. இல்லாட்டி அடக்கம் பண்ணிப்போடுவாங்கள்.. 
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.