Jump to content

பொதுமக்களின் நிலங்களை அபகரிப்பதற்கு மீண்டும் முயற்சி செய்தால் சிவில் நிர்வாகம் முடக்கப்படும் – மண்டைதீவு போராட்டத்தில் சிவாஜிலிங்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொதுமக்களின் நிலங்களை அபகரிப்பதற்கு மீண்டும் முயற்சி செய்தால் சிவில் நிர்வாகம் முடக்கப்படும் – மண்டைதீவு போராட்டத்தில் சிவாஜிலிங்கம்

பொதுமக்களின் நிலங்களை அபகரிப்பதற்கான முயற்சிகள் மீண்டும் இடம்பெற்றால் வடக்கு கிழக்கில் சிவில் நிர்வாகம் முடங்கும் நிலையேற்படும் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று மண்டைதீவில் பொதுமக்களின் காணிகளை இராணுவத்தினர் சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டவேளை அதனைக் கண்டித்து பொதுமக்களும் தமிழ் அரசியல்வாதிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

sivajilingam22-300x162.jpg
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் பொதுமக்களின் நிலங்களை அபகரிப்பதற்கான முயற்சிகள் மீண்டும் இடம்பெற்றால் வடக்கு,கிழக்கில் சிவில் நிர்வாகம் முடங்கும் நிலையேற்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

போன தடவையும் பொலிஸார் பஸ்ஸுடன் தான் வந்தனர். நீங்கள் மீண்டும் திருப்பி வர முயற்சி செய்தால் நாங்கள் பகிரங்கமாகச் சொல்கின்றோம் , பிரதேச செயலகம்,  மாவட்ட செயலகம் உட்பட அனைத்தும் முடங்கும். சிவில் நிர்வாகம் முடக்கப்படும் என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடக்கு,கிழக்கு முழுவதும் சிவில் நிர்வாகம் முடங்கும் நிலையேற்படும் என தெரிவித்துள்ள அவர் முழுமையாக விலக்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுங்கள் என வேலணை பிரதேச செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்த பைலை என்னால் முடியாது என திருப்பி அனுப்புங்கள் எனவும் சிவாஜிலிங்கம் வேலணை பிரதேச செயலாளருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Thinakkural.lk

 
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதம் என்கிற பெயரில் எம்மை இந்தநிலைக்கு கொண்டுவந்துவிட்டு தூங்கும் சர்வதேசத்தின் காதில் ஓங்கி சொல்லுங்கள். தமிழின  விடுதலைப்  போராட்டம் இங்கையில் தோன்றிய காரணம் சிங்கள, பவுத்த பயங்கரவாதமே என்று.  

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மண்டை தீவு எங்கடை செல்வன் குத்தியன்ரை கோட்டை எல்லோ....?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மண்டைதீவில் பொதுமக்களின் காணியை சிறிலங்கா கடற்படைக்கு பலவந்தமாக சுவீகரிக்கும் முயற்சியை எதிர்த்து நடந்த மக்கள் போராட்டத்தில் 
செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர்...

Bild

  • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • குலமகள் தங்கம் தானே வேறென்ன செல்வம் வேண்டும் – மாரீசன்    3 Views சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இக்கவிதை பிரசுரமாகின்றது.           சட்டங்கள் கற்றுத்தேறிச் சாதிக்கும் திறமைவிஞ்ச சான்றோரி னருகமர்ந்து சபையினில் வீற்றிருந்து மட்டிலா வறிவினாற்றல் அனுபவ முதிர்ச்சியாலே மக்களின் வழக்குக் கேட்டு உண்மைகள் ஆய்ந்து தேர்ந்து வெட்டெனக் குற்றம் சுற்றம் நீக்கிநுண் மதியினாலே வெளிப்படை யாகநீதி வழங்கிடும் பெண்ணைக் கொள்ளப் பட்டொடு பக்கம் வந்து அமர்ந்திடும் காளையர்க்குத் தட்சணை வைத்துத் தட்டம் ஏந்தியும் நிற்பதாமோ?   தலைவனைக் கண்ணிற் காணும் தெய்வமாய்த் தொழுது கொண்டு தன்னலம் கருதிடாமல் இன்சொலா லீர்த்து நிற்பார் விலையிலா வன்பால் பண்பால் ஆண்மையு மணுக வைப்பார் வினைகளிற் கற்றுத் தேர்ந்த திறமைகள் விரியக் காட்டி மலையெனத் தாக்கவல்ல வறுமையிற் கலக்கம் கொள்ளார் மனத்தினி லுறுதிபூண்டு மலைத்திடா துழைக்கும் கொள்கை குலமகள் தங்கம் தானே வேறென்ன செல்வம் வேண்டும் குவலயம் சிறக்க வைப்பீர் சீதனம் விலக்கிக் கொள்வீர்   தந்தையும் தாயுமாவார் தலைவனின் துணையுமாவார் தார்மீக நெறியில் நின்று ஆன்மீகம் காத்து வாழ்வார் முந்தையோர் உரைத்த நீதி மூதுரை நெஞ்சில் தாங்கி முன்னுணர் நுண்மதியால் நுணுக்கமாய்க் கருத்துரைப்பார் சிந்தையிற் தெளிவுமோங்கும் செயலினிற் திறமை வீங்கும் செழுமையு மீர்க்குமுள்ளம் கருணையும் சுரக்கும் பண்பில் சொந்தங்கள் உறவுநாடிச் சோர்விலா துழைக்கும் பெண்ணை நிந்தமாய்க் கொள்ளுவோர்க்கு வேறென்ன செல்வம் வேண்டும்   https://www.ilakku.org/?p=44009
    • கூட்டமைப்புடன் எந்த விடயத்திலும் முன்னணி இணைந்து செயல்படாது – கஜேந்திரகுமார்    3 Views தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இனிவரும் காலங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த விடயத்திலும் இணைந்து செயல்படாது என்று அந்தக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அவரின் கட்சித் தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். அத்துடன், “நீண்ட காலமாக தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் சென்று வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பானது கடந்த தேர்தலின்போது சிறிய ஆட்டம் கண்டிருந்த நிலையிலும்கூட தற்போதைய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆதரித்து கையொப்பமிட்டு அரசுக்கு ஆதரவு வழங்கியுள்ளார். “இது தமிழ் மக்கள் மீது மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு முதுகில் குத்திய ஒரு செயற்பாடாகும். எனவே, இவ்வாறான தமிழ்த் தேசியக் கூட்ட மைப்போடு ஒற்றுமையை வலியுறுத்து வதற்காக அனைத்து கட்சிகளையும், இணைப்பதாக இனி எந்த சிவில் சமூகத்தினரோ, மதகுருமாரோ முன் வரவேண்டாம். எனவே, அவ்வாறான முயற்சிகளை கைவிட வேண்டும். அத்தோடு நாமும் பாராளுமன்றத்திலும், வேறு செயல்பாடுகளிலும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புடன் இன்றிலிருந்து சேர்ந்து பயணிக்க மாட்டோம்” என்றார்.   https://www.ilakku.org/?p=44002  
    • உங்கள் பதிவுக்கு கருத்தெழுத தவறி விட்டேன். மன்னிக்கவும். எங்கள் ஊருக்கே அழகு தருவது ஒல்லாந்தர் கட்டிய கடல்கோட்டை. சரித்திர சின்னங்களில் ஒன்றான இக் கடற்கோட்டை  பல ஆண்டுகள் இராணுவத்தளமாக மாறியது. இப்பொழுது உல்லாச விடுதியாக மாற்றியுள்ளனர். நன்றிகள் தமிழ்சிறி.
    • எத்தனை வசதிவாய்ப்புக்களுடன் வாழ்ந்தாலும் நாம் பிறந்து வளர்ந்த அந்த மண்வாசனை எம்மை விட்டு அகலாது. படித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் வாதவூரான். கவிதையை படித்து பச்சைப் புள்ளிகள் இட்ட மல்லிகை வாசம் கிருபன் மோகன் புலவர் அனைவருக்கும் நன்றிகள்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.