Jump to content

இணைத்தலைமை குழுவில் இணையப்பேவதில்லை – சிறீலங்கா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இணைத்தலைமை குழுவில் இணையப்பேவதில்லை – சிறீலங்கா

 
download-2.jpeg
 17 Views

எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறீலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை முன்வைப்பதற்கு பிரித்தானியா, மொன்ரோநீக்குரோ, வடமசடோனியா, கனடா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் திட்டமிட்டுள்ள நிலையில், அதில் இணைந்து கொள்ளப் போவதில்லை என சிறீலங்கா தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் தாம் அதனை நிராகரித்து விட்டதாகவும் சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.

நாம் எதிர்க்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக நாம் இணைந்து கொள்வது அரசியலில் சவாலானது என சிறீலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

 

https://www.ilakku.org/?p=39691

அரசுக்கு இம்முறை ஜெனிவா பெரும் சவாலாகவே இருக்கும் – ரோஹித போகொல்லாகம

 
rohitha.png
 6 Views

ஜெனிவா பெரும் சவாலாக இருக்கப்போகிறது என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-

“விடுதலைப் புலிகளுடனான தங்கள் தொடர்புகள் காரணமாக களங்கப்பட்ட பலர் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதற்காக உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் ஆதரவை பெற முயல்கின்றனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையி அமர்விற்கு முன்னதாக ஒருங்கிணைந்த முயற்சிகள் இடம்பெறுகின்றன.

நான்கு தமிழ்க் கட்சிக் கூட்டணி சிவில் சமூகத்தவர்களின் ஆதரவுடன் இலங்கை தொடர்பான சர்வதேச பொறுப்புக் கூறும் பொறிமுறைக்கு வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளது. இதனை உரிய முறையில் எதிர்கொள்ள வேண்டும். பயங்கரவாத மரபு சார்ந்த இராணுவ வழிமுறைகள் மூலம் ஈழத்தை பெறுவதற்கான தங்களின் முயற்சியில் தோல்வியடைந்தவர்கள், நாட்டை இன அடிப்படையில் பிரிப்பதில் இன்னமும் நம்பிக்கொண்டுள்ளவர்கள் சர்வதேச தலையீட்டை கோருகின்றனர்.

சர்வதேச தலையீடுகள் குறித்து தீவிரமாக உள்ளவர்கள் பொறுப்புக் கூறும் விடயத்தை பயன்படுத்தி அரசியல்செய்யவேண்டாம். இலங்கை 2009 இல் யுத்தத்தை வெற்றிகரமாக முடிவிற்கு கொண்டு வந்துள்ளது. வேலுப்பிள்ளை பிரபாகரனை தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ளும் படி தமிழ்தேசிய கூட்டமைப்பை விடுதலைப் புலிகள் கட்டாயப்படுத்தியமையை அந்த கட்சி மறந்துவிட்டது.

நந்திக்கடலில் விடுதலைப்புலிகளின் தலைவரின் தலையில் இராணுவம் துப்பாக்கி ரவையை செலுத்தும்வரை புலிகள் தாங்கள் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்பதை பயன்படுத்தினார்கள். புதிய தீர்மானம் கொண்டுவரப்படுவது நிச்சயம் என்பதால் இலங்கை மேலும் தாமதிக்காமல் நிலைமை குறித்து ஆராய்வது முக்கியமானது. இங்கிலாந்தின் நேஸ்பி பிரபு தெரிவித்துள்ள விடயங்களையும் விக்கிலீக்ஸில் வெளியாகியுள்ள விடயங்களையும் இலங்கை தனக்கு சார்பாக வாதிடுவதற்காக பயன்படுத்தவேண்டும்.

வன்னி போர்முனையில் யுத்தத்தை நடத்துவதற்கு பிரிட்டனும் பிரான்ஸ_ம் இணைந்து மேற்கொண்ட முயற்சிகள் அவர்கள் இந்த விடயத்தில் கொண்டுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தின. 2013 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக அரசியலுக்கு வந்த விக்னேஸ்வரன் அந்த கட்சியி லிருந்துவிலகியுள்ளபோதிலும் அவர் ஜெனிவா குறித்த பொது நிகழ்ச்சிநிரலின் அடிப் படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனும் இணைந்து செயற்படுகின்றார்.

ஜெனிவா பெரும் சவாலாகக் காணப்படப்போகின்றது. இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறலை விட மேற்குலக நாடுகளின் உண்மையான நலன்களும் நோக்கங்களும் பரந்துபட்டவை” என்றார்.

 

https://www.ilakku.org/?p=39700

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.