Jump to content

கழுத்தை அறுப்பேன்’ என்று பொருள்பட சைகை காண்பித்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவுக்கு பதவி உயர்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கழுத்தை அறுப்பேன்’ என்று பொருள்பட சைகை காண்பித்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவுக்கு பதவி உயர்வு

லண்டனில் சிறிலங்கா தூதரகத்திற்கு முன்பாக 04.02.2018 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழ் மக்களைப் பார்த்து ‘கழுத்தை அறுப்பேன்’ என்று பொருள்பட சைகை காண்பித்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவுக்கு சற்றுமுன்னர் மற்றொரு பதவி உயர்வு வழங்கப்பட்டதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லண்டனிலும் இராஜதந்திர வட்டாரங்களிலும் மிகுந்த சர்ச்சைக்குள்ளான பிரியங்க பெர்ணாட்டோவை இலங்கைக்கு வரவழைத்த சிறிலங்கா இராணுவத் தலைமை அவரை, சிறிலங்கா இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக (General Officer Commanding, 58 Division) மேஜர் ஜெனரல் தர பதவிநிலைக்கு உயர்த்தியிருந்தது.

 

பிரித்தானிய நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டு, தண்டனை வழங்கப்பட்ட அவருக்கு தற்பொழுது மற்றுமொரு பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கின்றது.

சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தின் பணிப்பாளர் பதவி நிலையான ‘Director General General Staff (DGGS)’ பதவி வழங்கப்பட்டுள்ளது.
IMG_19012021_075901_700_x_400_pixel.jpg?

IMG_19012021_075918_700_x_400_pixel.jpg?

 

https://www.meenagam.com/கழுத்தை-அறுப்பேன்-என்று/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே சுனில் ரத்நாயக்கவிற்கு எப்ப பதவி ஏற்றம் என்று வேளைக்கே  சொல்லிடுங்கடா எங்கடை இனவழிப்பு புகழ் சுமத்திரன் அதையாவது ஐநாவில் வரும் மார்ச்சில் கதைக்கிறாறோ என்று பார்ப்பம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடத்தல், கப்பம், கொலைகாரன் ஜனாதிபதியாய் உள்ள நாட்டில் இது ஒன்றும் விநோதமில்லை. நீதிமன்றமும் அப்படிப்பட்டவர்களையே விடுதலை செய்கிறது. பாராளுமன்றமும் அவர்களாலேயே நிறைந்துள்ளது, சட்டமும் அவர்களை காப்பாற்றவே இயற்றப்படுகிறது. நீதி, நிஞாயமாய் வாழ்பவர்களையே  சிறையில் அடைக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

On 19/1/2021 at 08:46, கிருபன் said:

தமிழ் மக்களைப் பார்த்து ‘கழுத்தை அறுப்பேன்’ என்று பொருள்பட சைகை காண்பித்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவுக்கு சற்றுமுன்னர் மற்றொரு பதவி உயர்வு வழங்கப்பட்டதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கழுத்தை அறுப்பேன்’ என்று பொருள்பட சைகை காண்பித்ததற்கே உயர் பதவி என்றால், கழுத்தையே அறுத்திருந்தால்........🤔🤔🤔🤔🤔🤔🤔

Quellbild anzeigen

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலின் பின் சரணடைந்த போராளிகளின் கழுத்தை அறுத்த, கற்பழித்த ராணுவத்தினரே இன்று பல உயர் பதவிகளில் இலங்கையில் மிளிர்கின்றனர். இது இலங்கையின் அரசியற் கலாச்சாரம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.