Jump to content

`சசிகலாவை அதிமுகவில் இணைக்க 100% வாய்ப்பில்லை!’ -அமித் ஷா, மோடி உடனான சந்திப்புக்குப்பின் முதல்வர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

`சசிகலாவை அதிமுகவில் இணைக்க 100% வாய்ப்பில்லை!’ -அமித் ஷா, மோடி உடனான சந்திப்புக்குப்பின் முதல்வர்

எடப்பாடி பழனிசாமி

`முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை சசிகலா கட்சியிலே இல்லை. சசிகலாவுடன் இருந்தவர்கள் பலர் அ.தி.மு.க வில் இணைந்து விட்டனர்’ - முதல்வர் பழனிசாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார் சென்றுள்ளார். டெல்லியில் அ.தி.மு.க எம்.பிக்கள் முதல்வரை வரவேற்றனர். இந்நிலையில் நேற்று இரவு 7.30 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி
 
எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில் இன்று காலை முதல்வர், பிரதமர் மோடியை அவரின் இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி, ``புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவுக்கும் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தேன். கோரிக்கை ஏற்று தமிழகம் வருவதாக தெரிவித்திருக்கிறார். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை மீட்கக்கோரி பிரதமரிடம் கோரிக்கை விடுத்தேன். தமிழக அரசின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்” என்றார்.

தொடர்ந்து அமித் ஷா உடனான சந்திப்பு குறித்து பேசியவர், ``உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் அரசியல் பேசவில்லை” என்றார்.

சசிகலா
 
சசிகலா

தற்போது தமிழக அரசியலில் சசிகலாவில் விடுதலை குறித்து தான் அதிகம் பேசப்படுகிறது. டெல்லி சென்ற முதல்வர் சசிகலா குறித்து பேசினார். ``முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை சசிகலா கட்சியிலே இல்லை. சசிகலாவுடன் இருந்தவர்கள் பலர் அ.தி.மு.க வில் இணைந்து விட்டனர். சசிகலா வருகையால் அ.தி.மு.கவில் எந்த மாற்றமும் ஏற்படாது. சசிகலாவை அ.தி.மு.க-வில் இணைக்க 100 சதவீதம் வாய்ப்பில்லை” என்றார்.

 

https://www.vikatan.com/government-and-politics/politics/cm-palanisamy-says-sasikala-will-not-be-accepted-in-admk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தம்மா தான்.... இவரை முதல்வராக்கியவர்.

அவருக்கே அல்வாவா.... 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் முன்பு சசிகலா காலில் விழுந்து கும்பிட்டவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விளங்க நினைப்பவன் said:

இவர் முன்பு சசிகலா காலில் விழுந்து கும்பிட்டவர்.

மேசைக்கு கீழால்... தவண்டு போய் கும்பிட்டவர். 🤣

இப்போது... வேலையில் நிற்பதால், படம் இணைக்க முடியவில்லை. வீட்டிற்கு போனவுடன் இணைக்கின்றேன்.

------------------------------------------------------

கூவத்தூர் ரிலீஸ்... ஸ்டாலின் சட்டைக் கிழிப்பு...பன்னீர் பவ்யம்... நான்காம்  ஆண்டில் எடப்பாடி ஆட்சி! | Edappadi Palaniswami completes 3 years as the CM  of Tamil Nadu  

நித்யா on Twitter: ""சசிகலா என்னை முதல்வராக்கவில்லை கட்சியில் நான்  படிப்படியாக வளர்ந்து முதல்வரானேன்…" #எடப்பாடி முதல் படிகட்டில் தடுக்கி ...

எடப்பாடி சசிகலா காலில் விழும் காட்சி... (முதல்வரவதற்கு முன்) - YouTube

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

மேசைக்கு கீழால்... தவண்டு போய் கும்பிட்டவர். 🤣

உங்கள் வீடியோ இணைப்பில் பார்த்தேனே சிரிப்பு தாங்க முடியவில்லை 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, உடையார் said:

எடப்பாடி பழனிசாமி

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.