Jump to content

போர்க்களத்தில் இருந்து மாநாட்டு அறைவரை – இலங்கையின் இராணுவ மயமாக்கல் –JDS கூட்டறிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்களத்தில் இருந்து மாநாட்டு அறைவரை – இலங்கையின் இராணுவ மயமாக்கல் –JDS கூட்டறிக்கை

 
1-119-696x387.jpg
 60 Views

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இராணுவ மயமாக்கல் குறித்து JDS அமைப்பு ஊடக கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன் ஊடக கூட்டறிக்கையில்,

ஜொகானஸ்பேர்க்: பெரும் எண்ணிக்கையான ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் இலங்கையில் சிவில் சேவையில் பதவிகளைப் பொறுப்பெடுத்து வருவதாக நாட்டுக்கு வெளியேயுள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளார்கள். சர்வதேச  உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்ட மற்றும் ஜனநாயகத்திற்கான இலங்கைப் பத்திரிகையாளர்கள் என்ற அமைப்பு ஆகியவற்றால் வெளியிடப்பட்ட ஒரு அட்டவணையானது முன்னாள் இராணுவ அதிகாரியான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களாலேயே அண்மையில் முக்கிய அரச பதவிகள் வழங்கப்பட்ட 39 இராணுவ அதிகாரிகளின் பெயர்களைப் பிரதானமாக குறிப்பிடப்படுகின்றது.

‘இது ஒரு படிப்படியான பொறுப்பெடுத்தலாகும் என  ITJP இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்தார். இதனைவிட ஜனாதிபதியின் கைகளை அதிகார மயமாக்கல், உறவினர் ஆதரவுக் கொள்கை, நண்பர்களுக்கு அதிகாரம் வாய்ந்த பதவிகளை வழங்குதல்  மற்றும் நீதி மன்ற வழக்குகள் எதிராக அப்போதும் இருக்கையில் அதிர்ச்சியளிக்கும் எண்ணிக்கையிலான ஆட்களை அரசாங்கப் பதவிகளுக்கு நியமித்தல் போன்றனவும் இடம்பெறுகின்றன. இது ஒரு திருட்டுத்தனமான சதிக்கு ஒப்பானதாகும். ஜனநாயகம் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றது.

விசுவசமான இராணுவ அதிகாரிகள் கோவிட்டுக்கான பதில் நடவடிக்கை , பொலிஸ், புலனாய்வு சேவைகள், சிறைகள், வெளிநாட்டுக் கொள்கை, விமான நிலையங்கள், துறைமுகங்கள், சுங்கம், அடிப்படைத் தேவைச் சேவைகள், விவசாயம், மீன்பிடி, நில அபிவிருத்தி, வனப்பாதுகாப்பு  மற்றும் இறுதியாக இலஞ்ச ஆணைக்குழு ஆகியவற்றில் அதிகாரத்தை செலுத்திவருவதை இந்த அட்டவணை காட்டுகின்றது.

‘இது முன்னொருபோதும் இல்லாத அரச இயந்திர இராணுவமயமாக்கல் ஆகும். ஓய்வு பெற்ற மற்றும் பதவியில் இருக்கும் இராணுவ அதிகாரிகள் நிர்வாகப் பதவிகள், கட்சிப் பதவிகள் மற்றும் முக்கிய அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுள்ளார்கள் – இது அரசின் சிவில் குணமாச்சத்தின்  முடிவினை தீர்க்கமாகக் குறிக்கும்’ என இலங்கைப் பத்திரிகையாளர்களுக்கான ஜனநாயகத்தினைச் சேர்ந்த பாசனா அபயவர்தன எச்சரித்துள்ளார்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நாட்டின் பொதுமக்களுக்கு எதிரான பயங்கரமான  குற்றங்களைப் புரிந்ததாக இராணுவத்தை குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அத்துடன்  அவர்களை அரசியல் மற்றும் நிர்வாக களங்களில் தமது அதிகாரத்தினை வலுப்படுத்த அனுமதித்தல் மீளமுடியாக ஒரு நிலைக்கு வழிவகுக்கும்.’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/?p=39816

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ மயமாக மாறும் இலங்கை – யஸ்மின் சூக்காவின் அமைப்பு கடும் கண்டனம்

yasmi.jpg

இலங்கையில் முன்னொருபோதும் இல்லாத அரச இயந்திர இராணுவ மயமாக்கல் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஆடசியில் இடம்பெறுகின்றது. இதானால் இலங்கையில் ஜனநாயகம் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றது.என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம் மற்றும் ஜனநாயகத்துக்கான இலங்கைப் பத்திரிகையாளர்கள் அமைப்பு ஆகியன கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

பெரும் எண்ணிக்கையான ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் இலங்கையில் சிவில் சேவையில் பதவிகளைப் பொறுப்பெடுத்து வருகின்றனர்.

முன்னாள் இராணுவ அதிகாரியான ஜனாதிபதி கோட்டடாபய ராஜபக்சவாலேயே அண்மையில் 39 இராணுவ அதிகாரிகளுக்கு முக்கிய அரச பதவிகள் வழங்கப்பட்டன.

இதனைவிட ஜனாதிபதியின் கைகளை அதிகார மயமாக்கல், உறவினர் ஆதரவுக் கொள்கை, நண்பர்களுக்கு அதிகாரம் வாய்ந்த பதவிகளை வழங்குதல் மற்றும் நீதிமன்ற வழக்குகள் எதிராக அப்போதும் இருக்கையில் அதிர்ச்சியளிக்கும் எண்ணிக்கையிலான ஆட்களை அரச பதவிகளுக்கு நியமித்தல் போன்றனவும் இடம்பெறுகின்றன. இது ஒரு திருட்டுத்தனமான சதிக்கு ஒப்பானதாகும். இலங்கையில் ஜனநாயகம் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றது.

விசுவசமான இராணுவ அதிகாரிகள் கொரோனாவுக்கான நடவடிக்கை, காவற்துறை, புலனாய்வு சேவைகள், சிறைகள், வெளிநாட்டுக் கொள்கை, விமான நிலையங்கள், துறைமுகங்கள், சுங்கம், அடிப்படைத் தேவைச் சேவைகள், விவசாயம், மீன்பிடி, நில அபிவிருத்தி, வனப்பாதுகாப்பு மற்றும் இறுதியாக இலஞ்ச ஆணைக்குழு ஆகியவற்றில் அதிகாரத்தைச் செலுத்தி வருகின்றனர்.

இது முன்னொருபோதும் இல்லாத அரச இயந்திர இராணுவமயமாக்கல் ஆகும். ஓய்வுபெற்ற மற்றும் பதவியில் இருக்கும் இராணுவ அதிகாரிகள் நிர்வாகப் பதவிகள், கட்சிப் பதவிகள் மற்றும் முக்கிய அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுள்ளார்கள். இது அரசின் சிவில் குணமாச்சத்தின் முடிவைத் தீர்க்கமாகக் குறிக்கும்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நாட்டின் பொதுமக்களுக்கு எதிரான பயங்கரமான குற்றங்களைப் புரிந்ததாக இராணுவத்தினர் மீது சரமாரியான குற்றச்ச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் அவர்களை அரசியல் மற்றும் நிர்வாகக் களங்களில் தமது அதிகாரத்தை வலுப்படுத்த அனுமதித்தல் மீளமுடியாத ஒரு நிலைக்கு வழிவகுக்கும் என்றுள்ளது.

https://thamilkural.net/newskural/news/115467/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  1. எப்பவோ முடிந்த காரியம்
  2. நாம் அறியோம்
  3. ஒரு பொல்லாப்பும் இல்லை
  4. முழுதும் உண்மை

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.