Jump to content

உடனடியாக வடக்கு- கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துங்கள்: நாட்டில் தமிழர்கள் இணைந்துவாழ முடியாது..! - சிறிதரன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உடனடியாக வடக்கு- கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துங்கள்: நாட்டில் தமிழர்கள் இணைந்துவாழ முடியாது..!

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
பிரபாகரனை கொன்று இழுத்து வந்தேன் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ  கூறியுள்ளமையே இந்த நாட்டில் திட்டமிட்ட  இனப்படுகொலை  இடம்பெற்றுள்ளது என்பதற்கு இருக்கும் மிக முக்கிய வாக்குமூலமாகும். இதனை பிரதான சாட்சியாக வைத்து சர்வதேச  மனித உரிமை அமைப்புகள் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் சபையில் தெரிவித்தார்.

spacer.png

 தமிழர்கள் இனியும் இந்த நாட்டின் சிங்களவர்களுடன் இணைந்து வாழ முடியுமா என்பதை அறிந்துகொள்ள வடக்கு -கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றினை நடத்த சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும் எனவும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிடம் பகிரங்கமாக வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  

மேலும், முல்லைத்தீவு குருந்தூர் மலையில் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசத்தில் அவர்களுடைய  அடிப்படை உரிமை கொண்ட மண்ணில், அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவின் தலைமையில் இராணுவம் சூழ, இராணுவக் கொடிகள் நாட்டப்பட்டு புத்த பகவானின் சிலையும் வைக்கப்பட்டதுடன், அகழ்வாராச்சி என்ற பெயரில் தமிழர்களின் நிலங்களை சூறையாடும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவை தமிழர்கள் வாழ்ந்த இடமாகும். இன்று இந்த இடங்கள் அழிந்து போயுள்ளன, இப்பகுதி மக்களும் இடம்பெயர்ந்துள்ளனர். குறிப்பாக கல்யாணிபுரம், படலைக்கல்லு என்ற இரண்டு ஆதிக் கிராமங்களில் தமிழர்கள் வாழ்ந்தனர். அதற்கான ஆதாரங்களும் உள்ளன. இந்த இடங்களில் அகழ்வாராச்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட கூடாது என நீதிமன்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் நீதிமன்ற கட்டளையை மீறி அமைச்சர் ஆரவாரரங்களுடன் சென்று சட்டத்தை மீறுவது மூலம் இந்த நாட்டின் நீதிமன்ற சுயாதீனம் உள்ளதா என்ற கேள்வியை எழுப்புகின்றது என்றார். 

இந்த நாட்டில் சிங்கள மக்களுக்கு ஒரு நீதி, சிங்கள தலைவர்களுக்கு ஒரு நீதி, தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் அவர்களின் நிலங்களை பறிப்பதற்கும், தமிழர்களுக்கும் இன்னொரு வகையான நீதியா? முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜை கொன்றவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மிருசிவில் படுகொலையில் ஈடுபட்டவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆனால் தமிழ் அரசியல் கைதிகள் இன்னும் விடுதலை செய்யப்படாது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எமது விடயத்தில் நீதிமன்றங்கள் எங்கே போனது, எமது விடயத்தில் நீதிமன்றங்கள் என்ன சொல்கின்றன. இந்த நாட்டில் தனியே பெளத்த சிங்கள மக்களுக்கு மட்டுமே நீதி வழங்கும் மன்றங்கள் இயங்குகின்றன.

ஜனாதிபதி அண்மையில் கிழக்கில் ஒரு இடத்தில் குறிப்பிட்டார். பிரபாகரனை சுட்டு இழுத்து வந்ததாக அவரே ஒரு பெரும் சாட்சியமாக குறிப்பிட்டுளார். இந்நிலையில் உலக நாடுகளில் உள்ள மனித உரிமை அமைப்புகளிடம் ஒன்றை கேட்கிறேன், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, தானே யுத்தத்தை வென்றேன், நானே பிரபாகரனை கொன்று இழுத்து வந்தேன் என கூறி சாட்சியாக உள்ள நிலையில், இந்த நாட்டின் மீது நடவடிக்கை எடுக்க வேறு என்ன சாட்சியங்கள் வேண்டியுள்ளதென கேட்கின்றேன். இந்த நாட்டில் இனியும் தமிழர்கள் சிங்களவர்கள் இணைந்து வாழ முடியாது என்பதற்கு அவரே சாட்சியாக உள்ளார். ஜனாதிபதிக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேசினால் அவரை கொலை செய்வேன் என்கிறார். 

இவ்வாறான ஜனாதிபதியின் கீழ் இந்த நாட்டில் நீதி கிடைக்குமா? சிங்களவர்களுக்கே இந்த நிலை என்றால் தமிழர்கள் இந்த நாட்டில் வாழ முடியுமா? எனவே இந்த நாட்டில் இனியும் நாம் வாழ முடியுமா என்பதை அறிந்துகொள்ள வடக்கு கிழக்கில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பிற்கு தயாராக வேண்டும். உலக நாடுகளின் ஆதரவுடன் இது இடம்பெற வேண்டும். இந்த நாடு இப்போதும் அபாயகரமான சூழலுக்கு நகர்ந்து செல்கின்றது. முஸ்லிம்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் அடிப்படை ஜனாஸா உரிமையை கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் நில ஆக்கிரமிப்பு, வன்முறைகள் என மோசமாக இடம்பெற்று வருகின்றது என்றார். 

https://www.virakesari.lk/article/98813

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான அணுகுமுறை

அவர்  சிங்களத்துக்கு மட்டும்  ஐனாதிபதியாக  இருந்துவிட்டு போகட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசத்தில் அவர்களுடைய  அடிப்படை உரிமை கொண்ட மண்ணில், அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவின் தலைமையில் இராணுவம் சூழ, இராணுவக் கொடிகள் நாட்டப்பட்டு புத்த பகவானின் சிலையும் வைக்கப்பட்டதுடன், அகழ்வாராச்சி என்ற பெயரில் தமிழர்களின் நிலங்களை சூறையாடும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

ஆகா, அணுகுமுறை வெற்றியா? எப்ப ஊருக்கு போறியள்?

அட நம்ம உண்ம விளம்பி, அஞ்சா நெஞ்சர்  அண்ணன் பனை மரம்...

கோட்டாபய என்றவுடன் அண்ணனுக்கு சுருக்கென்று ஏறுது போல.. 😂

Link to comment
Share on other sites

****

2 hours ago, Kapithan said:

அட நம்ம உண்ம விளம்பி, அஞ்சா நெஞ்சர்  அண்ணன் பனை மரம்...

கோட்டாபய என்றவுடன் அண்ணனுக்கு சுருக்கென்று ஏறுது போல.. 😂

மேன்மை பொருந்திய ஜனாதிபதி கோத்தபாய அவர்களை எவராலும் எதுவும் செய்யமுடியாது. நேரத்தையும் காலத்தையும் வீணடிக்காமல், மக்கள் வாழ உதவப்பாருங்கள்.🇨🇳

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கற்பகதரு said:

****

மேன்மை பொருந்திய ஜனாதிபதி கோத்தபாய அவர்களை எவராலும் எதுவும் செய்யமுடியாது. நேரத்தையும் காலத்தையும் வீணடிக்காமல், மக்கள் வாழ உதவப்பாருங்கள்.🇨🇳

இது நேர்மை. 

பாராட்டுக்கள். 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கற்பகதரு said:

மேன்மை பொருந்திய ஜனாதிபதி கோத்தபாய அவர்களை எவராலும் எதுவும் செய்யமுடியாது.

முற்றிலும் உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் வடக்கோடு இணைய கிழக்கு மக்கள் சம்மதிக்கோணுமே 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ரதி said:

முதலில் வடக்கோடு இணைய கிழக்கு மக்கள் சம்மதிக்கோணுமே 🤔

No photo description available.

அவர்கள் இணைவதோ  இல்லையோ அவர்கள் முடிவு பெரும் நம்பிக்கையாக இருந்த முரளியும் பிள்ளையானும் என்ன செய்கினம் ?

8 hours ago, கற்பகதரு said:

****

மேன்மை பொருந்திய ஜனாதிபதி கோத்தபாய அவர்களை எவராலும் எதுவும் செய்யமுடியாது. நேரத்தையும் காலத்தையும் வீணடிக்காமல், மக்கள் வாழ உதவப்பாருங்கள்.🇨🇳

எல்லாம் மார்ச் மட்டும்தான் என்று உங்க கூத்தாவுக்கு  சொல்லுங்க கொரனோ  கையாண்ட கேவலத்தைத்தான் நாங்க நேரிலே பார்த்தோம் என்று கூடவே அதையும் சொல்லிவிடுங்க பாஸ் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

No photo description available.

அவர்கள் இணைவதோ  இல்லையோ அவர்கள் முடிவு பெரும் நம்பிக்கையாக இருந்த முரளியும் பிள்ளையானும் என்ன செய்கினம் ?

நான் எப்பவாவது வடக்கு அரசியலை பற்றி கதைக்கும் போது சம் ,சும்,கஜா..... என்ன செய்யினம் என்று கேட்டு இருக்கிறேனா 😠

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

நான் எப்பவாவது வடக்கு அரசியலை பற்றி கதைக்கும் போது சம் ,சும்,கஜா..... என்ன செய்யினம் என்று கேட்டு இருக்கிறேனா 😠

இல்லை 

நீங்கள்  ஏன் தமிழர்கள் என்றால் எல்லோருக்குத்தான் தமிழ்தான் .

கிழக்கு தமிழ் மக்கள் ஓம் படுவார்களோ என்று ஏன் பிரதேசவாதம் இங்கு ?

நாங்கள் அப்படியா பார்க்கிறம் உங்களுக்கு கொரனோ வுக்குள் பொழுது போகலை என்றால் கிழக்கு தமிழர்களை அரசியல் பலிக்கடா  ஆக்காதீர்கள் . 

இதே முரளிதரன் கிழக்கு மக்களுக்காக குறைந்த பட்சம் நாலு நல்ல விடயம் கிழக்கு மக்களுக்கு செய்து இருந்தால் உங்களை விட யாழில் அவருக்கு விசுவாசியாக இருந்து இருப்பேன் ஆனால்  நடந்தது என்ன ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

மன்னிக்க வேண்டும் பெருமாள் , உங்களுக்கு பதில் எழுதுவதற்கு பதில் 108 தோப்புக் கரணம் போடலாம் ...உணர்ச்சி வசப்படுத்தலால் ஒரு பிரயோசனமும் ,ஒருத்தருக்கு இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, பெருமாள் said:

எல்லாம் மார்ச் மட்டும்தான் என்று உங்க கூத்தாவுக்கு  சொல்லுங்க கொரனோ  கையாண்ட கேவலத்தைத்தான் நாங்க நேரிலே பார்த்தோம் என்று கூடவே அதையும் சொல்லிவிடுங்க பாஸ் .

அழிவு என்பது ஆரவாரத்தோடும், கூடவே "நான், என்னால் முடியும்" என்கிற ஆணவத்தத்தோடும் வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மக்களுக்கு யாழ்ப்பாணியோடு இணைவதைக் காட்டிலும் சிங்களவனோடு வாழலாம் என்கிற மனநிலை இப்போது சரியானதாகத்தான் இருக்கும். கிழக்கு மக்கள் இந்த மனோநிலையில் இருக்கவேண்டும் என்பதே சிங்களவனின் விருப்பமும். 

ஆனால், காலப்போக்கில் இவ்வாறு தனிமைப்படுத்தப்படும் கிழக்குத் தமிழர்களை இலகுவாக ஆட்கொண்டு, அப்பகுதியை தனது முற்றான சிங்கள மயப்படுத்தலுக்குள் கொண்டுவரமுடியும் என்பது அவனுக்குத் தெரியும். அதனாலேயே யாழ்ப்பாணிகளுக்கு எதிரான கிழக்கு மக்களின் தலைவர்களாக பிள்ளையானையும், கருணாவையும், வியாழேந்திரனையும் அவன் அடையாளப்படுத்துகிறான். இவர்கள் ஒருபோதுமே தனது ஆக்கிரமிப்பிற்குக் குறுக்கே நிற்கப்போவதில்லயென்பது அவனுக்குத் தெரியும். இதை இன்று வரிந்து கட்டிக்கொண்டு இவர்களை ஆதரித்து வரும் பலரும் மறுக்கப்போவதில்லை. அபிவிருத்தியென்றும், வேலைவாய்ப்பென்றும் சொல்லப்படும் காரணங்களை விட யாழ்ப்பாணிக்கு எதிராக தம்மால் செய்ய முடிந்த ஒரு செயலாக, அவனின் முகத்தில் ஓங்கி அறைவதற்குக் கிடைத்த ஒரு சந்தர்ப்பமாக  அவர்கள் பார்க்கிறார்கள்.

பிரித்தாளும் தந்திரம் என்று நன்குதெரிந்தும் கூட, யாழ்ப்பாணிகளுக்கெதிராகச் செயற்படவேண்டும் என்கிற கிழக்கு மாகாண மக்களின் விருப்பம் கிழக்கு மக்களுக்கோ, யாழ்ப்பாணிகளுக்கோ எதுவித நண்மையினையும் கொண்டுவரப்போவதில்லை.

யாழ்ப்பாணி தொடர்ந்தும் உரிமை பற்றியும், தாயகம் பற்றியும், இனவழிப்பின் நீதிகேட்டும் பேசிக்கொண்டிருப்பான், அவை அவனுக்குக் கிடைத்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன. ஆனால், கிழக்கு மக்களுக்கு இவை தேவையற்றவை, தம்மோடு சம்பந்தப்படாதவை, ஆகவே இவை பற்றி அவர்கள் இனிமேல் பேசப்போவதுமில்லை, செயற்படப்போவதுமில்லை. 

ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள். எனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை, ஆனால் எதிரிக்குச் சகுனம் பிழைத்தால் சரி. அதுபோலத்தான் கிழக்கு மக்களின் மனோநிலையும், எமது பிரதேசம் பறிபோனாலும் பரவாயில்லை, ஆனால் யாழ்ப்பாணியின் இணைந்த வடக்குக் கிழக்கு தாயக் கோட்பாடு சிதைக்கப்பட்டால் சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரஞ்சித் said:

இதுவொரு துவேசமான கருத்து ...வன்மையான கண்டனங்கள் 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ரஞ்சித் said:

ரகு,

நீங்கள் எழுதியதை வன்மையாக கண்டிக்கிறேன் - இது முழுக்க முழுக்க ஆதாரமற்றதும் உங்கள் மனதில் எழுந்த கருத்துமே அன்றி உண்மை அல்ல.

1. அதென்ன யாழ்பாணத்தவரின் இணைந்த வடக்கு-கிழக்கு கொள்கை? அடிக்கடி இங்கே 40000 பேர் என்று நெக்குருகி எழுதுவீர்களே? அதில் 20000 பேர் எங்கே இருந்து வந்தார்கள்? இணைந்த வடக்கு-கிழக்கு என்பது நம் எல்லோரினதும் அபிலாசை.

2. அப்புறம் யாழ்பாணத்தவர் பெரிய கொள்கை சிங்கம்கள் என்றும் எழுதினீர்கள். 2000-2020 நடந்த தேர்தல்களின் முடிவுகளை மட்டகளப்பிலும் யாழ்பாணத்திலும் ஒப்பிட்டு பாருங்கள்.

2020 தேர்தல் மட்டும் ஒரு தமிழ் தேசியத்துக்கு மாறான நபர் கூட மட்டகளப்பில் இருந்து பாராளுமன்றம் வரவில்லை. ஆயுதம் மெளனிக்கபட்டு 11 வருடங்கள், ஒரு எல்லையோர மாவட்டமாக, இரு வழி ஆக்கிரமிப்புக்கு முகம் கொடுத்தும் அந்த மக்கள் தமிழ் தேசியத்தை தூக்கி பிடித்தார்கள்.

 ஆனால் யாழில்? 93 இல் இருந்து டக்ளஸ், மகேஸ்வரன், விஜயகலா, அங்கயன். இப்போ சொல்லுங்கள் யார் தேசியத்தை கைவிட்ட வாக்காளர் ? (ஒரு தொகையினர் மட்டும்).

3. பியசேன யார் ? கூட்டமைப்பு கைகாட்டிய ஆள். வியாழேந்திரன்? அவரும். சந்திரகாந்தன் எப்படி முதலமைச்சர் ஆனார்? எந்த தமிழ் கட்சியும் போட்டி போடாதபோது, முஸ்லிம்களை வரவிடக்கூடாது என்ற இடைவெளியை நிரப்ப. இப்படி தேசிய தலைமகள் காட்டிய தும்புத்தடிக்கும் ஏன் என்றுன்கேட்காமல் 2020 வரை வாக்கு போட்டமக்களை, தொடர்ந்து தேசியத்தை எதிர்பவர்களை பாராளுமன்றம் அனுப்பும் நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள். இதற்கு பச்சை வேறு.

4.  வடக்கில் அங்கயனை தேடி போவதை போலவே கிழக்கிலும் போகிறார்கள். வேறு வழியில்லாமல் அவர்கள் போகிறார்கள். உங்கள் சகுன பிழைக்காக அல்ல. ஏதோ கிழக்கு மாகாணத்தில் போய் survey செய்தவர் போல் நீங்கள் எப்படி இதுதான் மக்களின் மனநிலை என சொல்ல முடியும்? 

5. “கிழக்கு மக்கள் ஒத்து கொள்ள வேண்டுமே?” என்ற ரதியின் கேள்வி நியாயமானதே. கிழக்கில் முஸ்லீமும், சிங்களவரும் சேர்ந்தால் - தமிழன் சிறுபான்மை, அத்தோடு 20-30% சதவீத தமிழரும் வேண்டாம் என போட்டால்?

அதை விடுங்கள் 100% தமிழர் வேண்டும் என்று போட்டாலும், சர்வஜன வாக்கெடுப்பை வெல்ல முடியாது. இதுதான் யதார்தம். இது இப்படி இருக்க, சிறிதரன் மடத்தனமா பேசுறார், நீங்கள் அவருக்கு ஜிங்குசா போடுகிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

இதுவொரு துவேசமான கருத்து ...வன்மையான கண்டனங்கள் 

துவேசங்களை விதைப்பவர்கள் நீங்கள் தான். அன்று தொடக்கம் யாழ்ப்பாணி யாழ்ப்பாணி என்று சொல்லி புறம் கட்டியவர்கள். நான் மட்டக்களப்பில் இருந்தவன் என்ற முறையில் சொல்கின்றேன்.

பூ போட்டு கும்பிட வேண்டிய மண் அது. உங்களை போன்ற சிறுமைத்தனமான கீழ்போக்கு அரசியலால் சின்னாபின்னமாக போய்க்கொண்டிருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

இது முழுக்க முழுக்க ஆதாரமற்றதும் உங்கள் மனதில் எழுந்த கருத்துமே அன்றி உண்மை அல்ல.

வணக்கம் கோஷான், கோபப்படுகிறீர்கள் போலத் தெரிகிறது,

நான் எழுதியவை எனது மனதில் இருந்து எழுந்தமானமாக வந்தவை அல்ல. மாறாக இதே களத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களால் வெளிப்படையாக வட மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக எழுதப்பட்ட வக்கிரங்களின் சாரம்சமே. நான் சொல்வது புரியவில்லையென்றால் இதே களத்தில் கடந்த பாராளுமன்றத் தேர்தல்களின் பொழுது பகிரப்பட்ட கருத்துக்களைப் பார்க்கும்போது சிலவேளை உங்களுக்குப் புரியலாம். அத்துடன், இன்று கிழக்கு மக்கள் தலையில் வைத்துக் கொண்டாடும் பிள்ளையானின் ஆலோசகர், ஊடக பொறுப்பாளர் ஆகியோர் கடந்த மாதங்களில் வெளியிட்ட ஆக்க்ரோஷமான அறிக்கைகளும் கருத்துக்களும் நான் எழுதியதைக் காட்டிலும் மிக மோசமாக வடக்குத் தமிழனை விழித்து எழுதப்பட்டவை. அப்போது ஏன் என்று கேட்கக் கூட உங்களுக்குத் தோன்றவில்லை. இன்று வரிந்து கட்டிக்கொண்டு வருகிறீர்கள் நியாயம் கேட்பதற்கு. 

15 minutes ago, goshan_che said:

1. அதென்ன யாழ்பாணத்தவரின் இணைந்த வடக்கு-கிழக்கு கொள்கை? அடிக்கடி இங்கே 40000 பேர் என்று நெக்குருகி எழுதுவீர்களே? அதில் 20000 பேர் எங்கே இருந்து வந்தார்கள்? இணைந்த வடக்கு-கிழக்கு என்பது நம் எல்லோரினதும் அபிலாசை.

இணைந்த வடக்குக் கிழக்கு யாழ்ப்பாணத்தாரின் கொள்கைதான். இதில் மாற்றுக்கருத்தில்லை. பிரபாகரன் காலத்தில் கிழக்குத் தமிழரும் போராட்டத்துடன் இணைந்துதான் இருந்தார்கள். மாவீரர்களில் 20,000 பேர் கிழக்குப் போராளிகள்தான் என்பதை முழுதாக ஏற்கிறேன். ஆனால், பிரபாகரனுக்கு முன்னும், அவருக்குப் பின்னும் நிலைமை அவ்வாறில்லை. 

கிழக்கு மக்களின் தலைவர்களில் ஒருவரான நல்லையா தந்தை செல்வநாயகத்திற்கு வடக்குக் கிழக்கு இணைப்புப் பற்றி சொல்லிய கருத்தினைப் படித்திருப்பீர்கள். "உங்களின் பிரச்சினைக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை, நாங்கள் எங்கள் வழியில் பயணிக்கிறோம், எங்களைச் சேர்க்கவேண்டாம்" என்று தந்தை செல்வாவிப் வேண்டுகோளினை உதாசீனம் செய்து திருப்பியனுப்பியவர். அதனால்த்தான் சொல்கிறேன், யாழ்ப்பாணியின் பிரச்சினைபற்றி அவர்களுக்கு கவலைப்படவேண்டிய அவசியம் இல்லையென்று. 

நீங்கள்தான் சொல்கிறீர்கள் வடக்குக் கிழக்கு தாயகம் என்பது தமிழர்கள் அனைவரினதும் அபிலாஷையென்று. நான் உங்களுக்கு ஒரு சவால் விடுகிறேன், இங்கே கேள்விகேட்ட ரதியாகட்டும், அல்லது பிள்ளையானுக்கும் கருணாவுக்கும் வரிந்துகட்டிக்கொண்டு வக்காலத்துவாங்கும் ஏனைய இருவராகட்டும், தமது அபிலாஷையும் இணைந்த வடக்குக் கிழக்குத் தாயகம்தான் என்றும், இன்று சிங்களம் நடத்துவது பிரித்தாளும் தந்திரம்தான் என்றும் வெளிப்படையாகச் சொல்லட்டும், எனது கருத்தினை இப்போதே விலத்திவிடுகிறேன்.

22 minutes ago, goshan_che said:

2. அப்புறம் யாழ்பாணத்தவர் பெரிய கொள்கை சிங்கம்கள் என்றும் எழுதினீர்கள். 2000-2020 நடந்த தேர்தல்களின் முடிவுகளை மட்டகளப்பிலும் யாழ்பாணத்திலும் ஒப்பிட்டு பாருங்கள்.

துரோகிகள் எல்லாப் பக்கத்திலும் இருக்கிறார்கள். சிங்களத்திற்குச் சோரம்போனவர்கள் இரு மாகாணங்களிலும் இருக்கிறார்கள். ஆனால், வித்தியாசம் என்னவென்றால், வடக்கில் இருப்பவர்கள் துணை ராணுவப்படையினர் அல்லது சிங்களத்தின் ஏஜெண்ட்டுக்கள். கிழக்கில் இன்றிருப்பவர்கள் எமது சகோதரர்கள், எம்முடன் தோளுக்குத் தோள் நின்று போரிட்டவர்கள். இன்று அவர்களே எமது போராட்டம் அழியக் காரணமாகி, பிரதேசவாதம் பேசி எம்மைப் பலவீனப்படுத்துவதால் வலிக்கிறது. அதுதான் இந்தக் கோபம்.

26 minutes ago, goshan_che said:

2020 தேர்தல் மட்டும் ஒரு தமிழ் தேசியத்துக்கு மாறான நபர் கூட மட்டகளப்பில் இருந்து பாராளுமன்றம் வரவில்லை. ஆயுதம் மெளனிக்கபட்டு 11 வருடங்கள், ஒரு எல்லையோர மாவட்டமாக, இரு வழி ஆக்கிரமிப்புக்கு முகம் கொடுத்தும் அந்த மக்கள் தமிழ் தேசியத்தை தூக்கி பிடித்தார்கள்.

மறுக்கவில்லை. அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். 

27 minutes ago, goshan_che said:

ஆனால் யாழில்? 93 இல் இருந்து டக்ளஸ், மகேஸ்வரன், விஜயகலா, அங்கயன். இப்போ சொல்லுங்கள் யார் தேசியத்தை கைவிட்ட வாக்காளர் ? (ஒரு தொகையினர் மட்டும்).

கோஷான், நீங்கள் கூறுவதில் உண்மயில்லாமல் இல்லை. ஆனால், கூட்டமைப்பிற்கு "வைச்சுச் செய்வோம்" என்று வீராவேசமாகக் கங்கணம் கட்டியவர்களும் இக்களத்தில்தான் இருக்கிறார்கள். அவர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டு என்னிடம் வாருங்கள் (உடனேயே கூட்டமைப்பினர் தமிழ்த் தேசியவாதிகளா என்று கேட்கவேண்டாம், ஏனென்றால் அவர்களுக்குத் தேசிக்காய்கள் என்று செல்லப்பெயர் வைத்துத்தான் இங்கே அவர்கள் அழைக்கிறார்கள்). சிங்களத்தின் கொலைக்குழுவான டக்கிளசுக்கும் அங்கயன் எனும் ஏஜெண்டுக்கும் கிடைத்த வாக்குகளைக் காட்டிலும் கூட்டமைப்பிற்கும், கஜேந்திரன், விக்கி ஆகியோருக்கு அதிக வாக்குகள் கிடைத்திருக்கின்றனர். அவர்கள் தமக்குள் பிரிந்து நின்றதால், வாக்குகள் பிரிந்து ஆசனங்கள் குறைவது நிகழ்ந்திராது, ஆனால் அவர்கள் சிங்களவனின் பக்கம் நிற்கவில்லை. 

ஆனால், கிழக்கில் என்ன நடந்தது? ஒரு ஆசனம் கூட கூட்டமைப்பிற்குக் கிடைக்கவில்லை. தேசியப்பட்டியலில் ஒரு ஆசனம் கூட்டமைப்பின் தயவில் கிடைத்தது. எந்தக் கூட்டமைப்பிற்கு "வைச்சுச் செய்தோம், இனிவரும் தேர்தல்களிலும் இதைவிடச் செய்வோம்" என்று இக்களத்தில் கூறிச் சந்தோசப்பட்டார்களோ, அந்தக் கூட்டமைப்பின் தயவால் அது கிடைத்தது. காரணம் கேட்டால் அபிவிருத்தி வேலைவாய்ப்பென்று நீங்களும் அதே சப்பைக் கட்டுதலைச் செய்யவேண்டாம்.

42 minutes ago, goshan_che said:

பியசேன யார் ? கூட்டமைப்பு கைகாட்டிய ஆள். வியாழேந்திரன்? அவரும். சந்திரகாந்தன் எப்படி முதலமைச்சர் ஆனார்? எந்த தமிழ் கட்சியும் போட்டி போடாதபோது, முஸ்லிம்களை வரவிடக்கூடாது என்ற இடைவெளியை நிரப்ப. இப்படி தேசிய தலைமகள் காட்டிய தும்புத்தடிக்கும் ஏன் என்றுன்கேட்காமல் 2020 வரை வாக்கு போட்டமக்களை, தொடர்ந்து தேசியத்தை எதிர்பவர்களை பாராளுமன்றம் அனுப்பும் நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள். இதற்கு பச்சை வேறு.

பியசேனவோ, வியாழேந்திரனோ கூட்டமைப்பினால் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இன்று சிங்களப் பேரினவாதிகளை பிரதிநிதித்துவம் செய்பவர்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றும் தெரிந்தும்தான் அவர்களை கிழக்கு மாகாண மக்கள் தெரிவுசெய்தார்கள். ஆகவே, அதனையும் கூட்டமைப்பின் தலையில் போடவேண்டாம். அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதல்ல பிரச்சினை, இப்போது எங்கே நிற்கிறார்கள், என்னசெய்கிறார்கள் என்பதே பிரச்சினை.

பிள்ளையான் எப்படி முதலமைச்சர் ஆனால் என்பதுபற்றி அறியவேண்டுமென்றால் 2008 இல் பவ்ரெல் அமைப்பும், சுயாதீன தேர்தல் கண்காணிப்பகமும், மனிதவுரிமைகள் கண்காணிப்பகமும் அக்காலத்தில் வெளியிட்ட அறிக்கைகளைப் பாருங்கள். உங்களுக்கான விடை கிடைக்கும். 2008 இல் 80,000 கொல்லப்பட்ட மக்கள் எப்படி உயிர்பெற்று வந்து பிள்ளையானுக்கு வாக்குப் போட்டார்கள் என்பது தெரியும். இன்று சிறையிலிருந்துகொண்டு அவரால் வெல்லமுடிகிறதென்றால் அதிகாரத்தில் உள்ள அரசினாலும், மூளைச்சலவை செய்யப்பட்ட மக்களாலும் மட்டுமே அது சாத்தியம் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. 

50 minutes ago, goshan_che said:

வடக்கில் அங்கயனை தேடி போவதை போலவே கிழக்கிலும் போகிறார்கள். வேறு வழியில்லாமல் அவர்கள் போகிறார்கள். உங்கள் சகுன பிழைக்காக அல்ல. ஏதோ கிழக்கு மாகாணத்தில் போய் survey செய்தவர் போல் நீங்கள் எப்படி இதுதான் மக்களின் மனநிலை என சொல்ல முடியும்? 

சரி, அப்படியே இருக்கட்டும். ஆனால் நான் சர்வே செய்து எழுதவில்லை. இங்கே பிள்ளையானுக்கும் கருணாவுக்கும் சார்பாக எழுதும் மூவரது கருத்துக்களை அடிப்படையாக வைத்தே எழுதுகிறேன். இன்றுவரை கிழக்கில் மேய்ச்சல் நில ஆக்கிரமிப்பில் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளைச் சாடுகிறார்களே ஒழிய, சிங்களவர்களை துளிக்கேனும் காரணம் என்றோ அல்லது அவர்களின் ஆக்கிரமிப்புத் தவறென்றோ எழுத மனமில்லை. இது ஏன்? இந்த லட்சணத்தில் சிங்களவன் மாட்டுக்குக் கூட தீங்கு விளைவிக்காத உத்தமன் என்று நற்சான்றுப்பத்திரம் கூடக் கொடுக்கிறார்கள், ஏனென்றால் கடவுள் மகிந்த மாடுகளைக் கொல்லவேண்டாம் என்று சொன்னதாக "வெள்ளை" அடிக்கிறார்கள்.

55 minutes ago, goshan_che said:

“கிழக்கு மக்கள் ஒத்து கொள்ள வேண்டுமே?” என்ற ரதியின் கேள்வி நியாயமானதே. கிழக்கில் முஸ்லீமும், சிங்களவரும் சேர்ந்தால் - தமிழன் சிறுபான்மை, அத்தோடு 20-30% சதவீத தமிழரும் வேண்டாம் என போட்டால்?

ரதி கேட்டது கேள்வியல்ல, எகத்தாளம். அதாவது கிழக்குத் தமிழர்கள் ஒருபோதும் இணைந்த வடக்குக் கிழக்கிற்கு ஆதரவு தரமாட்டார்கள் என்கிற வெளிப்படுத்தல். சிங்களவனும் முஸ்லீமும் இதற்கு எதிராகத்தான் போடுவான் என்று நீங்கள் சொல்லியா எனக்குத் தெரியவேண்டும்? ஆனால், பிரச்சினை தமிழர் ஏன் போடமாட்டார்கள் என்பது. அதற்கான காரணத்தை என்னிடம் கேட்கவேண்டாம், நீங்கள் கூறுங்கள் ஏன் என்று? ஏனென்றால், எனது கேள்வியும் அதுதான். "20  -  30 வீதம் தமிழரும் வேண்டாம் எனப்போட்டால்" என்பது நடப்பதற்கான காரணம் அபிவிருத்தியும் வேலைவாய்ப்பும் என்று நீங்கள் உண்மையாக நம்புகிறீர்களா? நடப்பதோ வடக்குக் கிழக்கும் இணையவேண்டுமா எனும் சர்வஜன வாக்கெடுப்பு. இதில் அவர்கள் இணையக் கூடாது என்று வாக்களிப்பதற்கான காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள், யாழ்ப்பாணத்துடன் ஒன்றாக இருக்கக் கூடாதெனும் ஒற்றைக் காரணத்தைத் தவிர? வேறு காரணங்ஹ்கள் இருந்தால் கூறுங்கள், கேட்க ஆவல்.

1 hour ago, goshan_che said:

இது இப்படி இருக்க, சிறிதரன் மடத்தனமா பேசுறார், நீங்கள் அவருக்கு ஜிங்குசா போடுகிறீர்கள்.

சிறிதரன் கேட்டது அவரது அரசியல் பிழைப்பிற்காக என்பது எனக்குத் தெரியும். பல்கலைக்கழக போராட்டத்தில் ரோட்டில் படுத்துப் பிலிம் காட்டியதை நான் பார்த்தேன். ஆனால், அதுவல்ல பிரச்சினை. அவர் கூறுவதில் எந்தத் தவறும் இல்லை. வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல்த் தீர்வென்பதும், அதற்கான சர்வஜன வாக்கெடுப்பு என்பதும் புலிகள் போராடுமுன்னமே தமிழர்களால் முன்வைக்கப்பட்ட ஒரு கோரிக்கை. ஆகவே சிறிதரன் புதிதாக ஒன்றையும் சொல்லவுமில்லை, நான் அவருக்கு ஜிங்குசா போடவுமில்லை. வடக்குக் கிழக்கில், குறிப்பாக கிழக்கில் தமிழர்கள் சிறுபான்மையினராக்கப்படுவதே சிங்களத்தின் நோக்கம், இதன்மூலம் அவர்களின் இணைந்த தாயக் கோட்பாட்டினை சிதைத்துவிடலாம் என்பது அவனது திட்டம். இன்று மேய்ச்சல் நில விவகாரத்தில் பேசாமல் இருங்கள் என்பவர்களும், அவன் இருந்துவிட்டுப் போகட்டும் சும்மா தேசிக்காய்களின் பேச்சைக் கேட்காமல் உங்களின் வேலையினைப் பாருங்கள் என்பவர்களும், கிழக்கு வடக்குடன் இணைவதற்கு அவர்கள் சம்மதம் உங்களுக்கு கிடைக்கும் என்று இன்னுமா நம்புகிறீர்கள் என்று ஏளனம் செய்பவர்களும் செய்வது சிங்களவனின் திட்டத்திற்கு ஆதரவளிப்பதுதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ரஞ்சித் said:

வணக்கம் கோஷான், கோபப்படுகிறீர்கள் போலத் தெரிகிறது,

நான் எழுதியவை எனது மனதில் இருந்து எழுந்தமானமாக வந்தவை அல்ல. மாறாக இதே களத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களால் வெளிப்படையாக வட மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக எழுதப்பட்ட வக்கிரங்களின் சாரம்சமே. நான் சொல்வது புரியவில்லையென்றால் இதே களத்தில் கடந்த பாராளுமன்றத் தேர்தல்களின் பொழுது பகிரப்பட்ட கருத்துக்களைப் பார்க்கும்போது சிலவேளை உங்களுக்குப் புரியலாம். அத்துடன், இன்று கிழக்கு மக்கள் தலையில் வைத்துக் கொண்டாடும் பிள்ளையானின் ஆலோசகர், ஊடக பொறுப்பாளர் ஆகியோர் கடந்த மாதங்களில் வெளியிட்ட ஆக்க்ரோஷமான அறிக்கைகளும் கருத்துக்களும் நான் எழுதியதைக் காட்டிலும் மிக மோசமாக வடக்குத் தமிழனை விழித்து எழுதப்பட்டவை. அப்போது ஏன் என்று கேட்கக் கூட உங்களுக்குத் தோன்றவில்லை. இன்று வரிந்து கட்டிக்கொண்டு வருகிறீர்கள் நியாயம் கேட்பதற்கு. 

இணைந்த வடக்குக் கிழக்கு யாழ்ப்பாணத்தாரின் கொள்கைதான். இதில் மாற்றுக்கருத்தில்லை. பிரபாகரன் காலத்தில் கிழக்குத் தமிழரும் போராட்டத்துடன் இணைந்துதான் இருந்தார்கள். மாவீரர்களில் 20,000 பேர் கிழக்குப் போராளிகள்தான் என்பதை முழுதாக ஏற்கிறேன். ஆனால், பிரபாகரனுக்கு முன்னும், அவருக்குப் பின்னும் நிலைமை அவ்வாறில்லை. 

கிழக்கு மக்களின் தலைவர்களில் ஒருவரான நல்லையா தந்தை செல்வநாயகத்திற்கு வடக்குக் கிழக்கு இணைப்புப் பற்றி சொல்லிய கருத்தினைப் படித்திருப்பீர்கள். "உங்களின் பிரச்சினைக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை, நாங்கள் எங்கள் வழியில் பயணிக்கிறோம், எங்களைச் சேர்க்கவேண்டாம்" என்று தந்தை செல்வாவிப் வேண்டுகோளினை உதாசீனம் செய்து திருப்பியனுப்பியவர். அதனால்த்தான் சொல்கிறேன், யாழ்ப்பாணியின் பிரச்சினைபற்றி அவர்களுக்கு கவலைப்படவேண்டிய அவசியம் இல்லையென்று. 

நீங்கள்தான் சொல்கிறீர்கள் வடக்குக் கிழக்கு தாயகம் என்பது தமிழர்கள் அனைவரினதும் அபிலாஷையென்று. நான் உங்களுக்கு ஒரு சவால் விடுகிறேன், இங்கே கேள்விகேட்ட ரதியாகட்டும், அல்லது பிள்ளையானுக்கும் கருணாவுக்கும் வரிந்துகட்டிக்கொண்டு வக்காலத்துவாங்கும் ஏனைய இருவராகட்டும், தமது அபிலாஷையும் இணைந்த வடக்குக் கிழக்குத் தாயகம்தான் என்றும், இன்று சிங்களம் நடத்துவது பிரித்தாளும் தந்திரம்தான் என்றும் வெளிப்படையாகச் சொல்லட்டும், எனது கருத்தினை இப்போதே விலத்திவிடுகிறேன்.

துரோகிகள் எல்லாப் பக்கத்திலும் இருக்கிறார்கள். சிங்களத்திற்குச் சோரம்போனவர்கள் இரு மாகாணங்களிலும் இருக்கிறார்கள். ஆனால், வித்தியாசம் என்னவென்றால், வடக்கில் இருப்பவர்கள் துணை ராணுவப்படையினர் அல்லது சிங்களத்தின் ஏஜெண்ட்டுக்கள். கிழக்கில் இன்றிருப்பவர்கள் எமது சகோதரர்கள், எம்முடன் தோளுக்குத் தோள் நின்று போரிட்டவர்கள். இன்று அவர்களே எமது போராட்டம் அழியக் காரணமாகி, பிரதேசவாதம் பேசி எம்மைப் பலவீனப்படுத்துவதால் வலிக்கிறது. அதுதான் இந்தக் கோபம்.

மறுக்கவில்லை. அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். 

கோஷான், நீங்கள் கூறுவதில் உண்மயில்லாமல் இல்லை. ஆனால், கூட்டமைப்பிற்கு "வைச்சுச் செய்வோம்" என்று வீராவேசமாகக் கங்கணம் கட்டியவர்களும் இக்களத்தில்தான் இருக்கிறார்கள். அவர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டு என்னிடம் வாருங்கள் (உடனேயே கூட்டமைப்பினர் தமிழ்த் தேசியவாதிகளா என்று கேட்கவேண்டாம், ஏனென்றால் அவர்களுக்குத் தேசிக்காய்கள் என்று செல்லப்பெயர் வைத்துத்தான் இங்கே அவர்கள் அழைக்கிறார்கள்). சிங்களத்தின் கொலைக்குழுவான டக்கிளசுக்கும் அங்கயன் எனும் ஏஜெண்டுக்கும் கிடைத்த வாக்குகளைக் காட்டிலும் கூட்டமைப்பிற்கும், கஜேந்திரன், விக்கி ஆகியோருக்கு அதிக வாக்குகள் கிடைத்திருக்கின்றனர். அவர்கள் தமக்குள் பிரிந்து நின்றதால், வாக்குகள் பிரிந்து ஆசனங்கள் குறைவது நிகழ்ந்திராது, ஆனால் அவர்கள் சிங்களவனின் பக்கம் நிற்கவில்லை. 

ஆனால், கிழக்கில் என்ன நடந்தது? ஒரு ஆசனம் கூட கூட்டமைப்பிற்குக் கிடைக்கவில்லை. தேசியப்பட்டியலில் ஒரு ஆசனம் கூட்டமைப்பின் தயவில் கிடைத்தது. எந்தக் கூட்டமைப்பிற்கு "வைச்சுச் செய்தோம், இனிவரும் தேர்தல்களிலும் இதைவிடச் செய்வோம்" என்று இக்களத்தில் கூறிச் சந்தோசப்பட்டார்களோ, அந்தக் கூட்டமைப்பின் தயவால் அது கிடைத்தது. காரணம் கேட்டால் அபிவிருத்தி வேலைவாய்ப்பென்று நீங்களும் அதே சப்பைக் கட்டுதலைச் செய்யவேண்டாம்.

பியசேனவோ, வியாழேந்திரனோ கூட்டமைப்பினால் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இன்று சிங்களப் பேரினவாதிகளை பிரதிநிதித்துவம் செய்பவர்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றும் தெரிந்தும்தான் அவர்களை கிழக்கு மாகாண மக்கள் தெரிவுசெய்தார்கள். ஆகவே, அதனையும் கூட்டமைப்பின் தலையில் போடவேண்டாம். அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதல்ல பிரச்சினை, இப்போது எங்கே நிற்கிறார்கள், என்னசெய்கிறார்கள் என்பதே பிரச்சினை.

பிள்ளையான் எப்படி முதலமைச்சர் ஆனால் என்பதுபற்றி அறியவேண்டுமென்றால் 2008 இல் பவ்ரெல் அமைப்பும், சுயாதீன தேர்தல் கண்காணிப்பகமும், மனிதவுரிமைகள் கண்காணிப்பகமும் அக்காலத்தில் வெளியிட்ட அறிக்கைகளைப் பாருங்கள். உங்களுக்கான விடை கிடைக்கும். 2008 இல் 80,000 கொல்லப்பட்ட மக்கள் எப்படி உயிர்பெற்று வந்து பிள்ளையானுக்கு வாக்குப் போட்டார்கள் என்பது தெரியும். இன்று சிறையிலிருந்துகொண்டு அவரால் வெல்லமுடிகிறதென்றால் அதிகாரத்தில் உள்ள அரசினாலும், மூளைச்சலவை செய்யப்பட்ட மக்களாலும் மட்டுமே அது சாத்தியம் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. 

சரி, அப்படியே இருக்கட்டும். ஆனால் நான் சர்வே செய்து எழுதவில்லை. இங்கே பிள்ளையானுக்கும் கருணாவுக்கும் சார்பாக எழுதும் மூவரது கருத்துக்களை அடிப்படையாக வைத்தே எழுதுகிறேன். இன்றுவரை கிழக்கில் மேய்ச்சல் நில ஆக்கிரமிப்பில் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளைச் சாடுகிறார்களே ஒழிய, சிங்களவர்களை துளிக்கேனும் காரணம் என்றோ அல்லது அவர்களின் ஆக்கிரமிப்புத் தவறென்றோ எழுத மனமில்லை. இது ஏன்? இந்த லட்சணத்தில் சிங்களவன் மாட்டுக்குக் கூட தீங்கு விளைவிக்காத உத்தமன் என்று நற்சான்றுப்பத்திரம் கூடக் கொடுக்கிறார்கள், ஏனென்றால் கடவுள் மகிந்த மாடுகளைக் கொல்லவேண்டாம் என்று சொன்னதாக "வெள்ளை" அடிக்கிறார்கள்.

ரதி கேட்டது கேள்வியல்ல, எகத்தாளம். அதாவது கிழக்குத் தமிழர்கள் ஒருபோதும் இணைந்த வடக்குக் கிழக்கிற்கு ஆதரவு தரமாட்டார்கள் என்கிற வெளிப்படுத்தல். சிங்களவனும் முஸ்லீமும் இதற்கு எதிராகத்தான் போடுவான் என்று நீங்கள் சொல்லியா எனக்குத் தெரியவேண்டும்? ஆனால், பிரச்சினை தமிழர் ஏன் போடமாட்டார்கள் என்பது. அதற்கான காரணத்தை என்னிடம் கேட்கவேண்டாம், நீங்கள் கூறுங்கள் ஏன் என்று? ஏனென்றால், எனது கேள்வியும் அதுதான். "20  -  30 வீதம் தமிழரும் வேண்டாம் எனப்போட்டால்" என்பது நடப்பதற்கான காரணம் அபிவிருத்தியும் வேலைவாய்ப்பும் என்று நீங்கள் உண்மையாக நம்புகிறீர்களா? நடப்பதோ வடக்குக் கிழக்கும் இணையவேண்டுமா எனும் சர்வஜன வாக்கெடுப்பு. இதில் அவர்கள் இணையக் கூடாது என்று வாக்களிப்பதற்கான காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள், யாழ்ப்பாணத்துடன் ஒன்றாக இருக்கக் கூடாதெனும் ஒற்றைக் காரணத்தைத் தவிர? வேறு காரணங்ஹ்கள் இருந்தால் கூறுங்கள், கேட்க ஆவல்.

சிறிதரன் கேட்டது அவரது அரசியல் பிழைப்பிற்காக என்பது எனக்குத் தெரியும். பல்கலைக்கழக போராட்டத்தில் ரோட்டில் படுத்துப் பிலிம் காட்டியதை நான் பார்த்தேன். ஆனால், அதுவல்ல பிரச்சினை. அவர் கூறுவதில் எந்தத் தவறும் இல்லை. வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல்த் தீர்வென்பதும், அதற்கான சர்வஜன வாக்கெடுப்பு என்பதும் புலிகள் போராடுமுன்னமே தமிழர்களால் முன்வைக்கப்பட்ட ஒரு கோரிக்கை. ஆகவே சிறிதரன் புதிதாக ஒன்றையும் சொல்லவுமில்லை, நான் அவருக்கு ஜிங்குசா போடவுமில்லை. வடக்குக் கிழக்கில், குறிப்பாக கிழக்கில் தமிழர்கள் சிறுபான்மையினராக்கப்படுவதே சிங்களத்தின் நோக்கம், இதன்மூலம் அவர்களின் இணைந்த தாயக் கோட்பாட்டினை சிதைத்துவிடலாம் என்பது அவனது திட்டம். இன்று மேய்ச்சல் நில விவகாரத்தில் பேசாமல் இருங்கள் என்பவர்களும், அவன் இருந்துவிட்டுப் போகட்டும் சும்மா தேசிக்காய்களின் பேச்சைக் கேட்காமல் உங்களின் வேலையினைப் பாருங்கள் என்பவர்களும், கிழக்கு வடக்குடன் இணைவதற்கு அவர்கள் சம்மதம் உங்களுக்கு கிடைக்கும் என்று இன்னுமா நம்புகிறீர்கள் என்று ஏளனம் செய்பவர்களும் செய்வது சிங்களவனின் திட்டத்திற்கு ஆதரவளிப்பதுதான். 

ரகு,

கோபமில்லை. அப்படித் தொனித்தால் மன்னிக்கவும்.

நீங்கள் எழுதியவற்றின் முழு சாரம்சமுமே யாழில் எழுதும் 3 பேர், ஒரு சில அரசியல்வாதிகள் நல்லையா என்றே போகிறது. இவர்களா கிழக்கு மக்கள்?

வட்டுக்கோட்டை பிரகடத்தை வடக்குடன் சேர்ந்து அங்கீகரித்தார்கள், வடக்கே திலீபன் என்றால் கிழக்கே அன்னை பூபதி. வடக்கே மக்கள் எவ்வளவு உணர்வுடன் இருந்தார்களோ அதே உணர்வுடனே கிழக்கிலும் இருந்தார்கள். கிடைத்த அத்தனை சந்தர்பப்க்களிலும் அதை வெளிகாட்டியே வந்துள்ளார்கள்.

பிரபாகரனுக்கு முன்னும், அவர் காலத்திலும், பின்னும் வடக்குக்கு நிகராக தமிழ் தேசியத்தை தாங்கியவர்கள் கிழக்கு மக்கள். 

உங்களை போலவே அவர்களும் தமிழ் தேசியத்தின் சம பங்குதாரர்கள். வடக்கு-கிழக்கு இணைப்போ, தமிழ் தேசியமோ ஒன்றும் யாழ்பாணத்தவரின் அப்பன் வீட்டுச் சொத்தல்ல.

லக்ஸ்மன் கதிர்காமர், நீலன் இவர்கள் எல்லாம் எந்த ஊர்? அத்தனை மாற்று இயக்க தலைவர்களும் எந்த ஊர்? மாத்தையா எந்த ஊர்? கேபி எந்த ஊர்? இவர்கள் எல்லாம் யாரோடு நின்றார்கள்?

யாழ்களத்தில் 3 பேர்தான் உங்களுக்கு தெரிகிறதா? வேறு பலர் யாழை சேர்ந்தவர்களும் தேசியத்தை கேள்வி கேட்கும் போது, அவர்களை வைத்து ஒட்டு மொத்த யாழ் மக்களுமே இப்படித்தான் என்ற முடிவுக்கு வருவதில்லையே நீங்கள்?

முடிவாக நீங்கள் யாழில் 3 பேருடன் முறுகியதால் தயவு செய்து ஒரு பிரதேச மக்களே இப்படிதான் என முத்திரை குத்தாதீர்கள்.

உங்கள் இரெண்டு கருத்துக்களான

1 . வடக்கு-கிழக்கு இணைப்பு யாழ்பாணத்தவரின் கொள்கை

2. கிழக்கு மக்கள் யாழ்பாணத்தவரை கடுப்படிக்க தம் மூக்கை அறுக்கிறார்கள்.

என்பது இரெண்டுமே, பிழையானதும் தமிழ் இனத்தின் நன்மைக்கும் ஒற்றுமைக்கும் கேடானதும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மக்கள் அங்கயனை வெல்ல வைத்தால் அதன் பொருள் அவர்கள் அங்கயன் மகிந்த துதி பாடுவதை விரும்புகிறாகள் என்பதல்ல. அவர் மூலம் தமக்கு ஒரு சின்ன முன்னேற்றமாவது வராதா என்ற நப்பாசை.

அதே போல்தான் சந்திரகாந்தனை வெல்ல வைப்பதும் அவரின் ஆலோசகர்களின் பிரதேசவாத கருத்தை ஆமோதித்து என்பதல்ல. 

அப்புறம் கிழக்கு மக்கள் என்றால் அதில் திருமலையும் அடங்கும், அவர்கள் வெற்றி நாயகன் சம்பந்தர் ஐயாவைதானே 2001 இல் இருந்து அனுப்புகிறார்கள்? அம்பாறையிலும் இதுவரை கூட்டமைப்புத்தான் வென்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

ரகு,

கோபமில்லை. அப்படித் தொனித்தால் மன்னிக்கவும்.

நீங்கள் எழுதியவற்றின் முழு சாரம்சமுமே யாழில் எழுதும் 3 பேர், ஒரு சில அரசியல்வாதிகள் நல்லையா என்றே போகிறது. இவர்களா கிழக்கு மக்கள்?

வட்டுக்கோட்டை பிரகடத்தை வடக்குடன் சேர்ந்து அங்கீகரித்தார்கள், வடக்கே திலீபன் என்றால் கிழக்கே அன்னை பூபதி. வடக்கே மக்கள் எவ்வளவு உணர்வுடன் இருந்தார்களோ அதே உணர்வுடனே கிழக்கிலும் இருந்தார்கள். கிடைத்த அத்தனை சந்தர்பப்க்களிலும் அதை வெளிகாட்டியே வந்துள்ளார்கள்.

பிரபாகரனுக்கு முன்னும், அவர் காலத்திலும், பின்னும் வடக்குக்கு நிகராக தமிழ் தேசியத்தை தாங்கியவர்கள் கிழக்கு மக்கள். 

உங்களை போலவே அவர்களும் தமிழ் தேசியத்தின் சம பங்குதாரர்கள். வடக்கு-கிழக்கு இணைப்போ, தமிழ் தேசியமோ ஒன்றும் யாழ்பாணத்தவரின் அப்பன் வீட்டுச் சொத்தல்ல.

லக்ஸ்மன் கதிர்காமர், நீலன் இவர்கள் எல்லாம் எந்த ஊர்? அத்தனை மாற்று இயக்க தலைவர்களும் எந்த ஊர்? மாத்தையா எந்த ஊர்? கேபி எந்த ஊர்? இவர்கள் எல்லாம் யாரோடு நின்றார்கள்?

யாழ்களத்தில் 3 பேர்தான் உங்களுக்கு தெரிகிறதா? வேறு பலர் யாழை சேர்ந்தவர்களும் தேசியத்தை கேள்வி கேட்கும் போது, அவர்களை வைத்து ஒட்டு மொத்த யாழ் மக்களுமே இப்படித்தான் என்ற முடிவுக்கு வருவதில்லையே நீங்கள்?

முடிவாக நீங்கள் யாழில் 3 பேருடன் முறுகியதால் தயவு செய்து ஒரு பிரதேச மக்களே இப்படிதான் என முத்திரை குத்தாதீர்கள்.

உங்கள் இரெண்டு கருத்துக்களான

1 . வடக்கு-கிழக்கு இணைப்பு யாழ்பாணத்தவரின் கொள்கை

2. கிழக்கு மக்கள் யாழ்பாணத்தவரை கடுப்படிக்க தம் மூக்கை அறுக்கிறார்கள்.

என்பது இரெண்டுமே, பிழையானதும் தமிழ் இனத்தின் நன்மைக்கும் ஒற்றுமைக்கும் கேடானதும். 

கோஷான் இன்று கிழக்கு மாகாணத்தில் மக்கள் ஆதவுடனோ அல்லது ஆயுதபலத்தாலோ அதிகாரத்தில் இருப்பவர்கள் 2004 முதல் இன்றுவரை கிழக்கில் வாழ்ந்துவந்த வடபகுதித் தமிழரைப் புண்படுத்தியர்கள், அடித்து விரட்டியவர்கள், சொத்துக்களைக் கொள்ளையடித்தவர்கள், கடத்திச்சென்று கொன்றவர்கள், கிழக்கில் அல்லற்பட மக்களுக்கு உதவச்சென்றவர்களை கடத்திச்சென்று கூட்டாகப் பாலியல் வன்புணர்வு செய்து வெட்டி வீசியவர்கள். தேசியத்திற்கு ஆதரவான பாராளுமன்ற உறுப்பினர்களைச் சிங்களத்தின் வேட்டை நாய்களாக மாறிக் கொன்றவர்கள். 

அவர்களையே இவர்கள் ஆதரிக்கிறார்கள். 

நீங்கள் கூறியபடி வடக்குக் கிழக்கு இணைந்த பிரதேசமே எமது தாயகம் என்பதில் நான் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருக்கிறேன். 

அவர்கள் யாழ்ப்பாணியின் சகுனப்பிழைக்காக தமது மூக்கை அறுக்கவில்லையென்றால் மகிழ்ச்சியே. ஆனால் என்ன, தாங்கள் அதைச் செய்யவில்லையென்பதை அவர்கள் ஒத்துக்கொள்ளப்போவதில்லை.

எமது இனமும் தாயகமும் பிரிந்துவிடக் கூடாதெனும் ஆதங்கத்திலேயே எழுதுகிறேன். என்ன செய்வது, சிலருக்கு புரியும்படி எழுத முனைவதால் வேறு சிலரையும் காயப்படுத்தும்படி ஆகிவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரஞ்சித் said:

கோஷான் இன்று கிழக்கு மாகாணத்தில் மக்கள் ஆதவுடனோ அல்லது ஆயுதபலத்தாலோ அதிகாரத்தில் இருப்பவர்கள் 2004 முதல் இன்றுவரை கிழக்கில் வாழ்ந்துவந்த வடபகுதித் தமிழரைப் புண்படுத்தியர்கள், அடித்து விரட்டியவர்கள், சொத்துக்களைக் கொள்ளையடித்தவர்கள், கடத்திச்சென்று கொன்றவர்கள், கிழக்கில் அல்லற்பட மக்களுக்கு உதவச்சென்றவர்களை கடத்திச்சென்று கூட்டாகப் பாலியல் வன்புணர்வு செய்து வெட்டி வீசியவர்கள். தேசியத்திற்கு ஆதரவான பாராளுமன்ற உறுப்பினர்களைச் சிங்களத்தின் வேட்டை நாய்களாக மாறிக் கொன்றவர்கள்

அவர்களையே இவர்கள் ஆதரிக்கிறார்கள். 

இதில் கிழக்கு என்பதை வடக்கு என மாற்றி போட்டுவிட்டு வாசியுங்கள். 2004 இல்லை, 1987 இல் இருந்து பொருந்தும்.

காயம் ஒன்றும் இல்லை, நீங்களே சொன்னதுதான், நல்லதும், தீயதும் வடக்கிலும், கிழக்கிலும் உண்டு.

இன்றைக்கும் மட்டகளப்பில்2/4 எம்பி கூட்டமைப்புத்தான். 

திட்டமிட்ட முஸ்லீம் எதிர்புணர்வு, அரச ஆதரவு, இவை எல்லாவற்றையும் விட கூட்டமைப்பின் வேட்பாளருக்கு நல்ல பெயர் இல்லை, வியாழேந்திரனின், சந்திரகாந்தனின் 2009க்கு பின்னான மக்கள் அபிமானம், அவர்களின் தனிப்பட்ட செல்வாக்கு, கூட்டமைப்பின் உள்குத்து என பல காரணங்கள் இந்த தேர்தலில் தாக்கம் செலுத்தின.

மேலோட்டமாக மக்கள் யாழ் எதிர்புணர்வில் வாக்கு போட்டார்கள் என்பது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

கோஷான்,

நீங்கள்தான் இதைச் சொல்கிறீர்கள். ஏனையவர்கள் இதைச் சொல்வதில்லை. காரணம் அவர்களுக்கே வெளிச்சம்.

யாழ்ப்பாணுகளுக்கு எதிர்ப்பென்பதைக் காட்டிலும் “அது உங்கள் பிரச்சினை, எங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை” எனும் மனநிலையே அதுவென்று நினைக்கிறேன். 

நான் குறிப்பிட்ட மூவரின் கருத்துக்களை அடிப்படையாகவைத்து நான் பொதுவாக எழுதுவது தவறுதான். அதை நீங்களும் செய்யவில்லையென்று நினைக்கிறேன்.

1987 இல் இருந்து இல்லையப்பன், 1985 இலிருந்து. ஆனால் என்ன, அவற்றிலிருந்து எம்மால் மீண்டு வரமுடிந்தது. ஆனால் 2004 இற்குப்பின் எம்மால் இன்றுவரை மீள முடியவில்லை. அதன் பாதிப்பும் அழிவுகளும் அப்படியானவை. வேறு என்ன சொல்ல?

பார்க்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரஞ்சித் said:

சந்திப்போம் ரகு.

நீங்கள் யாருக்காக எழுதினீர்களோ தெரியாது, ஆனால் இன்றும் தேசிய அரசியலில் பற்றுறுதியாய் கிழக்கில் இருப்பவர்கள் பலர் உள்ளார்கள் அப்படி யாரேனும் இந்த திரியை பார்த்தால் - கடைசியில் அவர்கள் சொன்னதை போலவே இவர்களும் யாழ் மையவாதிகளாகத்தான் இருக்கிறார்கள் என நினைத்து விடக்கூடாது - இந்த ஒரு காரணமும், மக்கள் மீது ஒட்டுமொத்தமாக பழி போட்டதில் இருந்த உண்மை குறைவுமே என்னை எழுத தூண்டியது.

நேரத்துக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

இவர்களும் யாழ் மையவாதிகளாகத்தான் இருக்கிறார்கள்

நான் யாழ்ப்பாண மையவாதியில்லை. ஆனால் எனது தாயகமும் மக்களும் பிரியாது ஒன்றாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறவன். அதை யாழ்ப்பாணி செய்தால் என்ன மட்டக்களப்பான் செய்தால் என்ன அவர்கள் போற்றுதற்குரியவர்கள். 

அவ்வாறானவர்கள் இக்களத்தில் இல்லையென்பது ஒரு குறைதான். அதனாலேயே அரச பினாமிகளுக்குச் சார்பாக நின்றுகொண்டு, கிழக்கினைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம் என்று இங்கே எழுதுபவர்களுக்கான பதிலாக நான் எழுதவேண்டியதாயிற்று. இவர்களின் இந்த நோக்கு மொத்த தென் தமிழீழ மக்களினதும் நோக்காக இருக்கக் கூடாது என்று யாசிக்கிறேன்.

மற்றும்படி உங்களுடன் கருத்தாடுவது மகிழ்ச்சியே.

உங்கள் நேரத்திற்கும் உணர்விற்கும் நன்றி கோஷான் !

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.