Jump to content

இயேசு அழைக்கிறார்- நிறுவனத்தில் வருமான வரி சோதனை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

காணி வாங்குவதெல்லாம் அந்த காலம் இப்ப தீவு பெரிய நாடுகளுக்கு பக்கத்திலை அமைந்தால் டபுள் பணம் கொட்டும் .😀

எடுத்தவுடனை உச்சிக்கு போகக்கூடாது எண்ட கொள்கையிலை விடாப்பிடியாய் நிக்கிறம்.😎

Link to comment
Share on other sites

10 hours ago, குமாரசாமி said:

எடுத்தவுடனை உச்சிக்கு போகக்கூடாது எண்ட கொள்கையிலை விடாப்பிடியாய் நிக்கிறம்.😎

சாமிக்கு ஞானம் வந்தால் பக்தனுக்கும் ஞானம் பிறக்கும்.

எங்கள் போராட்டத்தின்போது படிப் படியாக உச்சிக்கு ஏற முயன்றிருந்தால்... இறங்கவேண்டிய நேரம்வரும் வேளையில் படியாலையே இறங்கியிருக்கலாம். 

எடுத்தவுடன் உச்சிக்குப் போய் இப்ப கவுண்டுபோய்க் கிடக்கிறம். உச்சிக்கு ஏற்றிவிட்டதில் எங்கள் பங்கும் நிறையவே உள்ளது. 😵

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Paanch said:

சாமிக்கு ஞானம் வந்தால் பக்தனுக்கும் ஞானம் பிறக்கும்.

எங்கள் போராட்டத்தின்போது படிப் படியாக உச்சிக்கு ஏற முயன்றிருந்தால்... இறங்கவேண்டிய நேரம்வரும் வேளையில் படியாலையே இறங்கியிருக்கலாம். 

எடுத்தவுடன் உச்சிக்குப் போய் இப்ப கவுண்டுபோய்க் கிடக்கிறம். உச்சிக்கு ஏற்றிவிட்டதில் எங்கள் பங்கும் நிறையவே உள்ளது. 😵

No Comment GIFs | Tenor

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

 

600 கோடி....(கருணா) நிதி  கொடுக்கும்.. நிறுவனங்களை,
அரசாங்கம் பொறுப்பு ஏற்று, ஏழை  மக்களுக்கு கொடுக்க வேண்டும்.

அத்துடன்... அந்தக் காசை,  வாங்கி...
ஆட்டையை போட்டு.. ஏப்பம் விட்ட...
கருணாநிதியின் வாரிசுகள்... பதில் சொல்ல வேண்டும்.
இல்லையேல்... அவர்களையும்,  அடுத்த.. ஐந்து ஆண்டுகளுக்கு,
தேர்தலில், நிற்க முடியாத படி... தடை செய்ய வேண்டும்.

உதயநிதி... கொஞ்சம், அடக்கி வாசிக்க வேண்டும்.
இன்பநிதியை... நல்ல, தமிழ் பள்ளிக் கூடத்தில்  சேர்த்தால்,
அவரும்... தமிழக முதலமைச்சராக வர, சாத்தியக் கூறுகள்  உண்டு.

முதலில்... துண்டுச்  சீட்டில், வாசிக்காமல்...
பள்ளிக் கூடத்தில் போய்... படியங்கப்பு.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 


பால் தினகரனிடம் அவரது சபையை சேர்ந்த ஒருவர், "ஐயா இவை தான் இன்று காலையில் முதலில் செய்ய வேண்டிய பிரார்த்தனைகள், செபக் கூட்டங்களின் பட்டியல்" என்று ஒரு பட்டியலை கொடுக்கிறார்.  பால் தினகரன் இன்றைய நிலையில் என்ன சொல்லுவார். நான் செய்வேன், ஆனால் எனக்கு முதலில் கட்டாயமாக போக வேண்டிய ஒரு கூட்டம் இருக்கிறது. அது வருமான வரித்துறைக்காரர்களுடனான கூட்டம்.  இயேசு அழைத்தல் போகாமல் இருக்க முடியும், ஆனால் வருமான வரித்துறையினர் அழைத்தால் போகாமல் இருக்க முடியுமா?

 

பால் தினகரனின் தந்தையான துரைசாமி ஜெப்ரி சாமுவேல் தினகரன் என்பவர் புரட்டஸ்தாந்து கிறீஸ்தவத்தின் ஒரு அமைப்பான தென்னிந்திய திருச்சபையைச் (Church of South India) சேர்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்தவர். அவரது குடும்பம் எளிமையான வாழ்நிலையை கொண்ட குடும்பமாக இருந்தது. தினகரன் வங்கி ஊழியராக வேலை செய்தார்.  பின்பு "இயேசு அழைக்கிறார்"  என்னும் சுவிசேச சபையை தொடங்கினார். சுவிசேசம் என்றால் "நல்ல செய்தி" என்று நல்ல தமிழில்  சொல்லலாம். 
 
இயேசுவின் தந்தையான கடவுளின் அரசை பற்றியும்,  தேவ குமாரன்  என்று சொல்லப்படும் இயேசுவை நம்பி தொழுபவர்களுக்கு கிடைக்கும் மீட்சியையும் சொல்லும் கிறீஸ்தவ வேத ஆகமத்தை பரப்புதல் என்பதே இந்த நல்ல செய்தி என்று செல்லப்படுகிறது. "இயேசு அழைக்கிறார்" என்று மக்களை தினகரன் அழைத்தார். அந்த கூட்டங்களுக்கு வரும் நோயாளிகள் குணமடைவார்கள்; பார்வையற்றவர்கள் விழிகளில் ஒளிகள் பெறுவார்கள்.;பேச முடியாதவர்கள் பேசுவார்கள்  என்று  நற்செய்தி எங்கும் விளம்பரம் செய்யப்பட்டது. நீங்கள் ஒரு சிறிய நன்கொடை மட்டும் செலுத்தினால் போதும். கடவுளின் நல்ல செய்தி தினகரனின் ஊடாக உங்களை வந்தடையும். 
 
நல்ல செய்தி வந்தது. ஆனால் அந்த நல்ல செய்தி மக்களுக்கும் வரவில்லை. தினகரனுக்கு வந்தது. பணம் என்ற நல்ல செய்தி கோடி, கோடியாக வந்தது. இயேசு தினகரனை அழைக்கவில்லை.  ஆனால் வங்கிகள் தினகரனை தங்களிடம் முதலீடு செய்யும்படி அழைத்தார்கள். காருண்யா பல்கலைக்கழகம் என்னும் தனியார் பல்கலைக்கழகம் அமைக்கும் அளவிற்கு சுவிசேச வியாபாரத்தில் இலாபம் குவிந்தது. நோயாளிகளுக்கு நற்செய்தி சொல்லி குணப்படுத்துவேன் என்று பொய்ச்செய்தி சொன்னவருக்கு சிறுநீரகத்திலும், இருதயத்திலும் நோய்கள் வந்தன.  அந்த நோய்களை தீர்ப்பதற்கு தினகரன் செபம் செய்யவில்லை; பிரார்த்தனை செய்யவில்லை; தனக்குத் தானே நற்செய்தி சொல்லவில்லை. அவர் மருத்துவமனைக்கு சென்று அங்கேயே இறந்தார். தினகரன் இறந்த பிறகு இயேசு அழைத்தாரா தெரியவில்லை
 
மகன் பால் தினகரன் குடும்ப வியாபாரத்தை தொடர்கிறார். . இவரிடம் இயேசு அவ்வப்போது வந்து பேசுகிறார். அவர் சும்மா சொல்லவில்லை. இயேசு வந்து அவரிடம் பேசுவதற்கு சாட்சி உண்டு. அது வேறு யாரும் இல்லை பால் தினகரனின் சொந்த மனைவி தான் அந்த சாட்சி. மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களை கொல்லவில்லை என்று இலங்கை அரசினது பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் சபையில் சாட்சி சொல்வதை ஏற்று கொள்கிறார்களே அது மாதிரித் தான் பால் தினகரனின் மனைவியும் சாட்சி சொல்கிறார். 
 
மோடி வெற்றி பெறுவார் என்பதை இயேசு இவருக்கு சொல்லியிருக்கிறார். ஜெயலலிதா சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெறுவார் என்பதையும் இயேசு இவருக்கு முதலிலேயே சொல்லி விட்டாராம். Graham Stuart Staines என்னும் அவுஸ்திரேலிய கிறீஸ்தவ மத போதகரையும் அவரது பத்து வயது மகன் பிலிப்பையும் ஆறு வயது குழந்தை திமோத்தியையும் 23.01.1999 அன்று நெருப்பிலே எரித்து "பஜ்ரங் தள்"  என்னும் பயங்கரவாத அமைப்பு கொன்றது. இந்த அமைப்பு விசுவ இந்து பரிசம் அமைப்பின் இளைஞர் பிரிவாகும். விசுவ இந்து பரிசம் ஆர்.எஸ்.எஸ், பாரதிய ஜனதா கட்சி என்பவற்றின் ஒரு அங்கம். இந்த பயங்கரவாதிகளின் அமைப்பை சேர்ந்த மோடி வெற்றி பெறுவார் என்று இயேசு தனக்கு சொன்னார் என்னும் அளவிற்கு பால் தினகரனின் அதிகாரங்களுடன் தொடர்பு வைத்து வசதிகளை பெருக்கி கொள்ள வேண்டும் என்ற பேராசை இருந்திருக்கிறது. 
 
கடவுள் தனது கண்களுக்கு தெரிகிறார் என்ற நித்தியானந்தாவுக்கு கமரா இருந்தது கண்ணுக்கு தெரியவில்லை. மோடி வெற்றி பெறுவார், ஜெயலலிதா வெற்றி பெறுவார் என்று பால் தினகரனிடம் தேர்தல் கருத்து கணிப்புகளை சொன்ன இயேசு வருமானவரித் துறையினர் சோதனை செய்ய வருவார்கள் என்பதை சொல்லவில்லை. என்ன இருந்தாலும் கடவுள்கள் இப்படி தங்களின் தரகர்களை கை விட்டிருக்க கூடாது.

http://poovaraasu.blogspot.com/2021/01/blog-post_24.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயிகள் பெயரில் கனடா நாட்டு கரன்சி?' - பால் தினகரனின் பலே திட்டம்

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தைப் பயன்படுத்தி, பால் தினகரன் தனக்குச் சாதகமான சில வேலைகளைச் செய்துகொண்டதே அவருக்குச் சொந்தமான இடங்களில் நடந்த வருமானவரிச் சோதனைகளுக்குக் காரணம் என்கிறார்கள்.

மதபோதகர் பால் தினகரன், டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தைப் பயன்படுத்தி, தனக்குச் சாதகமான சில வேலைகளைச் செய்துகொண்டதே அவருக்குச் சொந்தமான இடங்களில் கடந்த மூன்று நாள்களாக நடந்த வருமானவரிச் சோதனைகளுக்குக் காரணம் என்கிறார்கள் மத்திய அரசு ஊழியர்கள்.

தமிழகத்தில் புகழ்பெற்ற 'இயேசு அழைக்கிறார்' சபையின் தலைவராக இருப்பவர் பால் தினகரன். இந்த அமைப்புக்குச் சொந்தமாக சென்னை, கோவை, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. மேலும், பல லட்சம் மக்கள் இந்த அமைப்பின் உறுப்பினர்களாகவும் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 20-ம் தேதி முதல் இயேசு அழைக்கிறார் அமைப்புக்குச் சொந்தமான இடங்களில் 250-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். மூன்று நாள்கள் நடந்த சோதனையின் முடிவில் 5 கிலோ தங்கம், 120 கோடிக்கான ஆவணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர். தொடர் விசாரணையும் நடந்துவருகிறது. தற்போது கனடாவில் குடும்பத்தினருடன் வசித்துவருகிறார் பால் தினகரன். அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறும் நோட்டீஸ் கொடுக்கப்ட்டுள்ளது.

இந்தநிலையில், இந்த ரெய்டு குறித்து மத்திய அரசுத் தரப்பிலிருந்து புதி

 

இந்தநிலையில் மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்திவருகிறார்கள். இந்த போராட்டத்தை முன்னெடுப்பது பெரும்பாலும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளே. பஞ்சாப்பை சேர்ந்த பலரும் கனடா நாட்டில் தொழில் செய்துவருகிறார்கள். அவர்கள் மூலமே இந்த போராட்டத்துக்குப் போதுமான நிதியும் கிடைக்கிறது. பஞ்சாப் மாநிலத்தவர்கள் பலர், கனடாவில் நல்ல நிலையில் இருப்பதும், அந்த அரசுடன் இணைந்து செயல்படுவதாலுமே வேளாண் சட்டத்தை பஞ்சாப் விவசாயிகள் எதிர்த்த உடனேயே அந்த சட்டங்களை வெளிப்படையாக எதிர்த்த நாடாக கனடா இருந்தது. இந்த அடிப்படையில் கனடா வாழ் பஞ்சாப் மக்கள் தங்கள் மாநில விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு உதவிகளை செய்துவந்தனர். இதனை மத்திய அரசும் கண்காணித்து வந்தது.

https://www.vikatan.com/government-and-politics/politics/canadian-currency-in-the-name-of-farmers-reason-behind-it-raid-on-paul-dinakaran-properties

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம ஊரில்  சிங்களவர்களுக்கு வரும் புலி கனவு போல் கிந்தியர்களுக்கு காலிஸ்தான் கனவு பயங்கரம் இன்னும் போகவில்லை .இவர்களின் போராட்டமும் எங்களின்  போராட்டத்துக்கும் பாரிய வித்தியாசங்கள் கிடையாது எங்களை போல் அரிய வகை நூல்கள் ஆதாரங்கள் எல்லாவற்றையும் கிந்தியர்கள் எரித்தார்கள் .நாமும் யாழ் நூலகத்தில் இழந்தோம் அவர்களும் இரண்டு தசாப்தம் கனடிய அகதி வாழ்க்கை அங்கிருக்கும் அநேகர் காலிஸ்தான் உறுப்பினர்கள்.இந்த கேட்டுக்குள் நம்மடை ஊடகங்கள் என்று சொல்லப்படுபவை கொஞ்ச நாளைக்கு முந்தி ஒரு கட்டுரை போட்டவை சீக்கியர்களுக்கும்  தமிழர்களுக்கும்  நீண்ட கால பகை என்று இந்த விவசாயிகளின் போராட்டம் தொடங்கும் நேரம் அப்படியான கட்டுரை எம்மிடையே உலாவிக்கொண்டு இருந்தது ஏன் என்பது கட்டுரையை போட்டவர்களுக்குத்தான் வெளிச்சம் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.