ஏபிபி கருத்துக் கணிப்பு சொல்வதென்ன? அ.தி.மு.க 68, ம.நீ.ம 4, தி.மு.க-வுக்கு எத்தனை..?

By
பிழம்பு,
in தமிழகச் செய்திகள்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
By உடையார் · பதியப்பட்டது
விவகாரத்தை ஜெனிவாவில் வைத்திருந்து காலங்கடத்தும் யோசனை – தமிழ் சிவில் சமூகம் 47 Views ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தற்போது பிரித்தானியா தலைமையிலான இணைத் தலைமை நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையானது தொடர்ந்து இலங்கை விவகாரத்தை ஜெனீவாவில் வைத்திருந்து நேரத்தை வீணடிக்கும் நே◌ாக்கத்தைக் கொண்டதென தமிழ் சிவில் சமூக அமையம் சுட்டிக் காட்டியுள்ளது. இலங்கை தொடர்பில் பிரித்தானியா, அமெரிக்கா உட்பட்ட நாடுகளைக் கொண்ட குழுமத்தினால் ஐ. நா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்ற முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச வரைபு தீர்மானம் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தின் அடிப்படையான கோரிக்கைகளை கூட பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி கடிதம் ஒன்று தமிழ் சிவில் சமூக அமையத்தினால் அந்த நாடுகளுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடிதத்தின் சுருக்கம் பின்வருமாறு: ‘15.01.2021 தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் சமூக அமையம் உள்ளடங்கலான பொது அமைப்புக்கள் இணைந்து விடுத்த கோரிக்கையானது இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இனப்படுகொலை உட்பட அனைத்து குற்றங்கள் தொடர்பில் விசாரணை ஒன்றிற்காக பாரப்படுத்துவதற்கான முனைப்புக்களை எடுக்க வேண்டும் என்பது தொடர்பிலானது. ஆனால் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையானது தொடர்ந்து இலங்கை விவகாரத்தை ஜெனீவாவில் வைத்திருந்து நேரத்தை வீணடிக்கும் நேரம் கொண்டதென தமிழ் சிவில் சமூக அமையம் சுட்டிக் காட்டியுள்ளது. மேலும் உத்தேச வரைபில் முன்வைக்கப்பட்டுள்ள யுத்த மீறல்கள் சம்பந்தமான ஆதாரங்களை சேர்ப்பது தொடர்பிலான பந்தியானது (உத்தேச வரைபு பந்தி 6) இவ்விடயம் தொடர்பில் தனித்துவமான பொறிமுறையை உருவாக்கத் தவறுகிறது என்றும் சிரியா மற்றும் மியான்மார் தொடர்பில் உருவாக்கப்பட்ட பொறிமுறை போன்றதொரு பொறிமுறை தானும் பிரேரணையில் உள்ளடக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரேரணையில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் 18 மாதங்களிற்குப் பின் ஐ. நா மனித உரிமை ஆணையாளர் இறுதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பது நீதிக்கான தேடலை இன்னுமொரு 18 மாதங்கள் கிடப்பில் போடும் எண்ணமே அன்றி வேறில்லை என தமிழ் சிவில் சமூக அமையம் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. சிரியா விவகாரத்தில் 14 தடைவைகள் சீனா மற்றும் ரஷியாவின் வீற்றோக்கள் மத்தியிலும் பிரேரணைகளை ஐ நா பாதுகாப்பு சபையில் முன்வைத்த மேற்குலக நாடுகள் இலங்கையை கொண்டு போவதற்கு கூட தயங்குவது ஏன் என தமிழ் சிவில் சமூக அமையம் கேள்வி எழுப்பியுள்ளது. காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள உத்தேச பிரேரணையின் முகவுரைப் பந்தி ஒன்பது, 2017 க்குப் பின் காணிகள் விடுவிக்கப்படவில்லை என்பதையும் தொடர்ந்து தமிழ் மக்களின் காணிகள் பல்வேறு காரணங்களுக்காக தொடர்ந்து அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் விடயத்தையும் மூடி மறைக்கின்றது எனவும் தமிழ் சிவில் சமூக அமையம் சுட்டிக்காட்டியுள்ளது. 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தக் கோரும் பிரேரணையின் பந்தி தொடர்பில் ஒருதலைப்பட்சமாக 13ஆம் திருத்தத்தை இல்லாமல் செய்யும் முயற்சியை நாம் கண்டிக்கும் அதே வேளை 13ஆம் திருத்தம் அரசியல் தீர்வுக்கான ஓர் ஆரம்பப் புள்ளி தானும் இல்லை என தமிழ் சிவில் சமூக அமையம் சுட்டிக் காட்டியுள்ளது. சுயநிர்ணய உரிமையின் பிரகாரம் தாம் தமக்கு உகந்த தீர்வை தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் தொடந்து இடம்பெற்று வரும் மீறல்கள் தொடர்பில் ஐ. நா விசேட அறிக்கையாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் எனவும் ஐ நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் பிரசன்னம் வடக்கு கிழக்கில் அவசியம் எனவும் இவை பிரேரணையில் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் தமிழ் சிவில் சமூக அமையம் சுட்டிக் காட்டியுள்ளது. காணாமல் போனோர் அலுவலகம், மற்றும் இழப்பீட்டு அலுவலகம் ஆகியன அவை உருவாக்கப்பட்ட போதே வழுக்கள் நிறைந்த பொறிமுறைகளாகவே இருந்தவை என்றும் அவற்றை முற்றாக தற்போதைய இலங்கை அரசாங்கம் முடக்கியுள்ள சூழலில் அவை பலப்படுத்தப்பட வேண்டும் என உத்தேச பிரேரணை கோருவது முரண் நகையானது என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.” https://www.ilakku.org/?p=43515 -
By உடையார் · பதியப்பட்டது
ஜெனீவா பின்னடைவுக்கான தார்மீகப் பொறுப்பை புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ஏற்றுக்கொள்ளுமா? – வேல்ஸ் இல் இருந்து அருஸ் 112 Views மிகவும் சின்னம் சிறிய சிறீலங்கா அரசு உலக நாடுகளை ஒரு அணியில் இணைத்து தமிழ் மக்களுக்கு எதிரான போரை நடத்தியிருந்தது. இந்த அணியில் எதிரும் புதிருமாக இருப்பதாக நாம் கருதும் இந்தியாவும், பாகிஸ்தானும் இருந்தன, அமெரிக்காவும் ரஸ்யாவும் இருந்தன. ஏன் தற்போதைய எதிரிகள் என நாம் கருதும், சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் யப்பானும் இருந்தன. சிறீலங்காவின் இந்த வெற்றியானது அதன் இராஜதந்திரத்திர அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றியாகும். தனது அணுகுமுறையில் சிறீலங்கா அரசு மேலும் முன்நகர்ந்துள்ளதையே தற்போது ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் தொடர்பான தகவல்கள் எடுத்துக் காட்டுகின்றன. சிறீலங்கா தொடர்பான தீர்மானம் குறித்த விவாதத்தில் சிறீலங்காவுக்கு ஆதரவாக 21 நாடுகள் தமது வாதங்களை முன்வைத்துள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை (26) கொழும்பு தகவல்கள் தெரிவித்திருந்தன. அதற்கு எதிராக 15 நாடுகளே உள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன. பிரித்தானியா தலைமையிலான இணைக்குழு நாடுகள் முன்வைத்த தீர்மானம் என்பது யாருக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்ட தவறியதே அதன் மீதான தமிழ் மக்களின் நம்பிக்கையை தகர்த்து விட்டது. தீர்மானம் ஒன்று முன்வைக்கப்படவுள்ளதாக செய்திகள் வந்தபோதே, புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும், தாயகத்தில் உள்ள தமிழ் கட்சிகளும் தமது கோரிக்கைகளை முன்வைத்திருந்தன. அதில் போர்க்குற்றம், தமிழ் மக்கள் மீதான இனஅழிப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரல் என்பன தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தன. அதனை உள்வாங்கி வெளிவரும் தீர்மானத்திற்கு நாம் ஆதரவு அளித்து பலப்படுத்த வேண்டும் என்ற கருத்துக்களும் பரவலாக முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள பூச்சிய வரைபு தீர்மானம் என்பது சிறீலங்காவில் தமிழ் மக்கள் வாழ்வதற்கான அடையாளத்தையும், அங்கு தமிழ் மக்கள் மீது போர் மேற்கொள்ளப்பட்டது, அவர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர், அவர்களுக்கு எதிராக மனிதாபிமான குற்றங்கள் இழைக்கப்பட்டது என்ற வரலாறுகளையும் முற்றாக மறைத்துள்ளது. அதாவது தமிழ் மக்களின் கோரிக்கைகள் எதனையும் உள்வாங்காது, பிராந்திய மற்றும் உலக வல்லரசுகளின் அரசியல் அபிலாசைகளை முன்நிறுத்தி வரையப்பட்ட வரைபாகவே இதனை நாம் பார்க்க முடியும். இதனை வரைந்த இணைக்குழு நாடுகளில் தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளான பிரித்தானியா, கனடா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் உள்ளடங்கியிருந்தபோதும், புலம்பெயர் அமைப்புக்களால் அந்த நாடுகள் மீது ஒரு அழுத்தத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பது, புலம்பெயர் அமைப்புக்கள், அந்த நாடுகளில் பதவிகளில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் அங்குள்ள அரசியல் கட்சிகளில் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் ஆகியோரின் ஒட்டுமொத்த தோல்வியாகும். இவர்கள் சந்தித்த இந்த தோல்வி என்பது எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்படும் போராட்டங்களில் மக்கள் வைக்கும் நம்பிக்கையை சிதறடிக்கும் என்பது உண்மையானது. தற்போது கூட புலம்பெயர் அமைப்புக்களால் ஒழுங்கமைக்கப்படும் போராட்டங்களில் பங்குபற்றும் மக்களின் தொகையை கொண்டு நாம் அந்த அமைப்புக்களின் செயற்பாடுகள் மீதான மக்களின் நம்பிக்கையை கணிப்பிட்டுக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாது, புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தாம் வாழும் நாடுகளையோ அல்லது அங்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளையோ வென்றெடுக்காது, அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்குள் சென்று தமிழ் மக்களை ஏமாற்ற தலைப்பட்டுள்ளதையும் போர் நிறைவடைந்து 12 வருடங்களின் பின்னர் வெளிவந்துள்ள இந்த தீர்மானம் எடுத்துக்காட்டியுள்ளது. அதாவது தமது இருப்பை தக்கவைப்பதகே இந்த அமைப்புக்கள் போராடுவதாக கருதப்படுகின்றது. புலம்பெயர் தேசங்களில் மேற்கொள்ளப்படும் போராட்டங்களில் பல அமைப்புக்கள் தமது இருப்பை தக்கவைப்பதற்கான போராட்டங்களே தவிர தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்கள் அல்ல என்ற உண்மையையும் தமிழ் மக்கள் தற்போது மெல்ல மெல்ல உணரத் தலைப்பட்டுள்ளனர். தற்போதைய தோல்வி என்பது நாம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை எமக்கு எடுத்துரைப்பாதகவே நாம் பார்க்க வேண்டும். எமது சிந்தனைகள், செயற்பாடுகள், போராட்ட வழிமுறைகள், இராஜதந்திர அணுகுமுறைகள், அதனை வழிநடத்துபவர்கள் மற்றும் அமைப்புக்கள் என்பன கடுமையான மீள் பரிசீலனைக்கு உள்ளாக்கப் படவேண்டும். செயற்பட முடியாத புலம்பெயர் அமைப்புக்கள், ஆளுமையற்ற தலைமைகள் தமது தவறுகளை உணர்ந்து ஆளுமையுள்ள அடுத்த சந்ததியிடம் போராட்டத்திற்கான கடமைகளை ஒப்படைத்து ஒதுங்குவதே தமிழ் இனத்திற்கு அவர்கள் ஆற்றும் மிகச் சிறந்த பணியாகும். ஏன் இந்த முடிவை கூறுகின்றேன் என்றால், பிரித்தானியா தீர்மானத்திற்கான வரைபை மேற்கொண்ட போது புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பிரித்தானியாவின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் செயற்பாட்டாளர்கள் என தம்மை பிரநிதித்துவப்படுத்தும் சிலர் பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து தமிழ் மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர். தமிழ் மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து கனடாவில் உள்ள அமைப்புக்களும் செயற்பாட்டாளர்களும், போராட்டங்களையும், இராஜதந்திர அணுகுமுறைகளையும் மேற்கொண்டிருந்தனர் ஆனால் தீர்மானத்தில் தமிழ் இனம் என்றே சொற்பதமே இல்லை. நாசிகள் இனப்படுகொலையை மேற்கொண்டனர் எனக்கூறும் போது அது யூதர்களுக்கு எதிரானது என்று குறிப்பிடப்படுகின்றது. கொசோவோ இனப்படுகொலை என்னும்போது அது சேர்பியர்கள், அல்பேனியர்களுக்கு எதிராக மேற்கொண்டதாகவே குறிப்பிடப்படுகின்றது. ஆனால் தீர்மானத்தில் தமிழ் இனம் தனது உரிமைகளுக்காக போராடியாதாகவோ, அவர்கள் மீது இந்த போர்க் குற்றங்கள் இழைக்கப்பட்டதாகவோ எந்த தடயங்களும் இல்லை. இது தமிழ் மக்களை வழிநடத்துகின்றோம் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் என கூறிக்கொள்ளும் புலம்பெயர் அமைப்புக்கள் சந்தித்த மிகப்பெரும் தோல்வியாகும். எனவே தற்போதுள்ள கேள்வி என்னவெனில், இந்த தோல்விக்கான பொறுப்பை யார் ஏற்றுக்கொள்வது? அரசியல்வாதிகள் தவறிழைக்கும் போது பதவிவிலகுமாறு கோரிக்கை விடும் நாம் ஏன் இந்த அமைப்புக்கள் மற்றும் செயற்பாட்டாளர்களின் தவறுகளை கண்டுகொள்வதில்லை? இவர்களின் இயலாமையால் ஒரு இனம் மிகப்பெரும் அழிவின் விழிம்பில் நிற்கின்றது. இந்த நிலையை தமது பதவிக்காகவும், கதிரைக்காகவும் தெருச்சண்டியர்களாக மாற்றம் பெற்றுவரும் அமைப்புக்கள் உணர்ந்துகொள்ளுமா? தவறானதும், தகமையற்றதுமான அமைப்புக்களையோ, அரசியல்வாதிகளையோ அல்லது செயற்பாட்டாளர்களையோ தமது பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ளும் இனம் ஒருபோதும் தமது இலக்கை அடையப்போவதில்லை. அவ்வாறு அடைந்ததற்கான வரலாறும் இல்லை. https://www.ilakku.org/?p=43521 -
நன்றாக இருக்கு தொடக்கமே, தொடருங்கள். தாலாட்டுவது பெண்கள் தானே, வள்ளத்திற்கு பெண்கள் பெயர்தான் சரி
-
உண்மையாக கருதி சொல்லி இருந்தால், நீங்கள் கனேடிய பிரசா அல்லது வதிவிட (எந்த வகை ஆயினும்) உரிமை பெற்றவராயின், இதை சொன்னதின் மூலம், வெட்கி தலை குனிய வேண்டும், கனடா இன் விழுமியங்களை அறியாமல் இருப்பதற்கு. பிராம்டனோ அல்லது வேறு நகரமோ, கனடியன் நகரம், கனடாவின் விழுமியங்களை கொண்டது. இதை அந்த வாதத்தில், கவுன்சிலர் சொல்கிறார். இதனால் தான், சிங்கள இனவாதம் கனடாவில் அடிபட்டு போகிறது, வெளிக்காட்ட இடம் இருந்தும். நினைவு சின்னமமோ அல்லது எதுவோ கட்டுவதின் முடிவு சனநாயக அடிப்படையில், வெளிப்படையாக வைக்கப்பட்டு, வாதிக்கப்பட்டு, உண்மை தன்மை அறியப்பட்டு, கவுன்சிலர் சொன்னது போல (சிங்கள இனவாத) எதிர்ப்பாளர்களின் கருத்துக்களும் வெளிவருவதற்கு இடமளிக்கப்பட்டு, அடைந்த முடிவு. மாறாக, இங்கே இரண்டு விடயங்கள். சிறி லங்கா தூதரகம் கனேடிய உள்நாட்டு நிர்வாகத்தில் தலை இட்டது. மிக முக்கியமாக, அந்த எதிர்கருத்தை கொண்டுவந்தவர் (youtube இல் உள்ள வீடியோ இல்) சொன்னது. யாழ் பல்கலையில், கட்டடங்களை திட்டமிட்ட பெருப்பிக்கும் பணியில் தான், முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடித்து அகற்றப்பட்டதாக, இல்லாததை ஆக்கி பொய் சொல்கிறார் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பொது சேவையாளர்களலான ( elected public servants) பிரம்டன் நகர கவுன்சிலர்களுக்கு. இது மிகப்பெரிய குற்றமாகும். அதுவும் சத்திய பிரமாணம் எடுத்து (நினைவு சின்னத்திற்கு) எதிர் கருத்தை கொண்டு வந்து இருந்தால். நீங்கள் கனேடிய பிரசா அல்லது வதிவிட (எந்த வகை ஆயினும்) உரிமை பெற்றவராயின் அல்லது அப்படி உரிமை உள்ள, பிரம்டன் நகர கவுன்சிலுக்கு கொண்டு செல்ல வேண்டிய கடப்பாட்டை கொண்டுளீர்கள். பிரசா உரிமைக்கு எழுத்து பரீட்சை அவசியம் என்பதை ஏன் என்று இப்பொது புரிகிறது.
-
பெருக்கி எழுதினால் காதலியின் பேரன் வந்து கதவை தட்டினால்???😆 தொடருங்கள் அண்ணா அருமையான எழுத்து நடை பரிச்சயமான இடங்கள் பெயர்கள்
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.