கருத்துக்கள உறவுகள் யாயினி 1,920 பதியப்பட்டது January 20 கருத்துக்கள உறவுகள் Share பதியப்பட்டது January 20 இன்று துணை ஜனாதிபதியாக பதவியேற்கின்றார் கமலா ஹாரிஸ் – மீண்டும் மகிழ்ச்சி வெள்ளத்தில் அவரது பூர்வீக கிராமம் – ஆலயத்தில் வழிபாடுகள் அமெரிக்க துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவியேற்கவுள்ளதை தமிழ்நாட்டில் உள்ள அவரது பூர்வீக கிராமம் கொண்டாடியுள்ளது. நெல்வயல்களிற்கு மத்தியில் காணப்படும் சிறிய கிராமத்தை சேர்ந்த மக்கள் கமலா ஹாரிஸ் பதவிப்பிரமாணம் செய்துகொள்வதற்கு முன்னர் புதன்கிழமை இந்து ஆலயங்களிற்கு சென்றார்கள்,பட்டாசுகளை கொழுத்தினார்கள் பிரார்ததனைகளில் ஈடுபட்டார்கள். வண்ணமயமான சேலைகள் அணிந்த பெண்களும் வேட்டியுடன் காணப்பட்ட ஆண்களும் கோவிலிற்கு சென்று கமலா ஹாரிசின் வெற்றிக்காக வழிபாடுகளில் ஈடுபட்டார்கள் இனிப்புகளை மலர்களை வழங்கினார்கள். இந்தியர் ஒருவர் துணைஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமை குறித்து நாங்கள் பெருமிதம்கொள்கின்றோம் என அனுகாம்பா மாதவசிம்ஹன் என்ற ஆசிரியை ஒருவர் தெரிவித்தார். சென்னையிலிருந்து 350 கிலோமீற்றர் தொலைவில் உள்ள துளசேந்திரபுரத்தின் ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாட்டின் போது பூசகர் ஒருவர் ஐயனாரை பாலால் கழுவி மலர்களால் அலங்கரித்தார். அதன் பின்னர் அந்த கிராமம் பட்டாசுகளால் அதிர்ந்தது,ஹாரிசின் படங்களுடன் காணப்பட்ட மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். அமெரிக்காவின் முதல் பெண்துணை ஜனாதிபதிn ,தென்னாசிய வம்சாவளியை சேர்ந்த முதலாவது துணை ஜனாதிபதி என்ற வரலாற்றை கமலா ஹாரிஸ் எழுதவுள்ளார். அவர் இந்தியவம்சாவளி தொடர்பே இந்த கிராமத்திற்கு மிகவும் முக்கியமான விடயமாக காணப்படுகின்றது. ஹாரிசின் பேரனார் 100 வருடங்களிற்கு முன்னர் துளசேந்திர புரத்தில் பிறந்தவர் ,பல தசாப்தங்களிற்கு பின்னர் அவர் சென்னைக்கு சென்றார்.ஹாரிசின் தாயார் சென்னையில் பிறந்தவர் அவர் பின்னர் கல்விக்காக அமெரிக்கா சென்றார் – ஐமைக்காவை சேர்ந்த நபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார் – அவர்கள் கமலா என தங்கள் மகளிற்கு பெயரிட்டனர். தனது பல உரைகளில் அவர் தனது வேர்கள் குறித்து அடிக்கடி குறிப்பிட்டுள்ளார்.தனது பேரன் பேத்தியின் விழுமியங்கள் தன்னை எப்படி வழிநடத்தின என அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நவம்பர் தேர்தலில் பைடனும் கமாலஹாரிசும் வெற்றிபெற்றவேளை துளசேந்திரபுரம் இந்தியா முழுவதினதும் கவனத்தை ஈர்க்கும் பகுதியாக மாறியது. உள்ளுர் அரசியல்வாதிகள் அந்த கிராமத்திற்கு சென்றனர் சிறுவர்கள் கமலா ஹாரிசின் படங்களுடன் புழுதி நிறைந்த வீதிகள் ஊடாக ஓடித்திரிந்தனர். இன்று போலவே அன்றும் அந்த கிராமத்தில் பட்டாசுகள் கொழுத்தப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. 2024 இல் அவர் ஜனாதிபதியாக பதவியேற்பார் என பலர் எதிர்பார்க்கின்ற நிலையில் இன்று;ம் அந்த கிராமத்தில் கமலாஹாரிசின் சுவரொட்டிகளை காணமுடிகின்றது, தான் மீண்டும் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு பைடன் பதிலளிக்க மறுத்துள்ளார். அடுத்த நான்கு வருடங்களிற்கு அவர் இந்தியாவிற்கு ஆதரவளித்தால் அவர் தான் அடுத்த ஜனாதிபதி என தெரிவித்தார் மணிகண்டன் என்பவர். Thinakkural.lk கமலா ஹாரிஸ் சத்திய்பபிரமாணம் செய்கின்றார் கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் புதிய துணை ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்கின்றார் Thinakkural.lk Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் யாயினி 1,920 Posted January 20 Author கருத்துக்கள உறவுகள் Share Posted January 20 கமலா ஹாரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டார். Digital News Team 2021-01-20T21:53:53 பதவியேற்பு நிகழ்வில் சற்று முன்னர் கமலா ஹாரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களை செனெட்டிலிருந்து துரத்தியடித்தமைக்காக பெரும் பாராட்டுகளை பெற்ற பொலிஸ்உத்தியோகத்தர் யூஜின் குட்மென் கமலாஹாரிசினை அழைத்துவந்தார் Thinakkural.lk Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் யாயினி 1,920 Posted January 20 Author கருத்துக்கள உறவுகள் Share Posted January 20 சவால்களை சந்திக்க தயார் -கமலா ஹாரிஸ் Digital News Team 2021-01-20T11:50:43 அமெரிக்காவின், 46ஆவது ஜனாதிபதியாக, ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன், இன்று பதவியேற்கவுள்ளார். அவருடன், துணை ஜனாதிபதியாக , கமலா ஹாரிஸ் பதவியேற்க உள்ளார். இந் நிலையில் ”ஜோ பைடன் நிர்வாகம் எதிர்கொள்ளவுள்ள சவால்கள் சுலபமானதாக இருக்காது. இருப்பினும் மக்களின் ஒத்துழைப்பு, ஆதரவுடன், அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்,” என கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”நாட்டின் ஜனாதிபதியாக பைடன், பதவியேற்கவுள்ளார். கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பது, தடுப்பூசி வழங்குவது, பொருளாதாரத்தை மீட்பது என, மிக பெரும் சவால்கள் எங்கள் முன் உள்ளன. அவற்றை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். எங்கள் இலக்குகள், கடும் சவாலானது என்றாலும், மக்களின் ஒத்துழைப்பு, ஆதரவோடு, அவற்றை எதிர்கொள்வோம் என்ற முழு நம்பிக்கை உள்ளது.சமீபத்தில் பார்லிமென்ட் வளாகத்தில் வன்முறை நடந்துள்ளது. எங்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், மிகுந்த தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும், பதவியேற்க தயாராகவுள்ளோம். மக்களின் ஆதரவோடு, அனைத்து பிரச்னைகளையும், சவால்களையும் முறியடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். Thinakkural.lk Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி 9,656 Posted January 20 கருத்துக்கள உறவுகள் Share Posted January 20 1 hour ago, யாயினி said: வண்ணமயமான சேலைகள் அணிந்த பெண்களும் வேட்டியுடன் காணப்பட்ட ஆண்களும் கோவிலிற்கு சென்று கமலா ஹாரிசின் வெற்றிக்காக வழிபாடுகளில் ஈடுபட்டார்கள் இனிப்புகளை மலர்களை வழங்கினார்கள். இந்தியர் ஒருவர் துணைஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமை குறித்து நாங்கள் பெருமிதம்கொள்கின்றோம் என அனுகாம்பா மாதவசிம்ஹன் என்ற ஆசிரியை ஒருவர் தெரிவித்தார். சென்னையிலிருந்து 350 கிலோமீற்றர் தொலைவில் உள்ள துளசேந்திரபுரத்தின் ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாட்டின் போது பூசகர் ஒருவர் ஐயனாரை பாலால் கழுவி மலர்களால் அலங்கரித்தார். லூசு கூட்டங்கள். உண்மையில் கமலா கறுப்பினத்தை சேர்ந்தவர். இந்திய வாரிசு அல்ல. Quote Link to post Share on other sites
goshan_che 2,281 Posted January 20 Share Posted January 20 (edited) 1 hour ago, குமாரசாமி said: லூசு கூட்டங்கள். உண்மையில் கமலா கறுப்பினத்தை சேர்ந்தவர். இந்திய வாரிசு அல்ல. தாய் இந்திய வழி தமிழர், தந்தை ஜமைக்கன். இவரை எப்படி இந்திய வாரிசு இல்லை, கறுப்பினத்தவர் என்கிறீகள்? பதவியேற்ற நாளில் கமலா தனது தாயையும் ஏனைய பெண்களையும் நினைத்து முன்னர் போட்ட டிவீட்ட்டை மீள் டிவீட்டியுள்ளார் Edited January 20 by goshan_che Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி 9,656 Posted January 20 கருத்துக்கள உறவுகள் Share Posted January 20 11 minutes ago, goshan_che said: இவரை எப்படி இந்திய வாரிசு இல்லை, கறுப்பினத்தவர் என்கிறீகள்? தகப்பனை வைத்து தான் வாரிசு என அழைப்பர். Quote Link to post Share on other sites
goshan_che 2,281 Posted January 20 Share Posted January 20 Just now, குமாரசாமி said: தகப்பனை வைத்து தான் வாரிசு என அழைப்பர். எங்கே? Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி 9,656 Posted January 20 கருத்துக்கள உறவுகள் Share Posted January 20 13 minutes ago, goshan_che said: பதவியேற்ற நாளில் கமலா தனது தாயையும் ஏனைய பெண்களையும் நினைத்து முன்னர் போட்ட டிவீட்ட்டை மீள் டிவீட்டியுள்ளார் அது அரசியல் சித்து விளையாட்டுகளில் ஒன்று. அது சரி ஏன் அவர் தகப்பனை எங்கேயும் முன்னிலைப்படுத்தவில்லை? 1 minute ago, goshan_che said: எங்கே? உலகில் எங்கேயும். உலகில் எங்கும் தகப்பனின் பெயரை முன்னிலைபடுத்துகின்றார்கள் இன்சியல்... Quote Link to post Share on other sites
goshan_che 2,281 Posted January 20 Share Posted January 20 Just now, குமாரசாமி said: அது அரசியல் சித்து விளையாட்டுகளில் ஒன்று. அது சரி ஏன் அவர் தகப்பனை எங்கேயும் முன்னிலைப்படுத்தவில்லை? சித்து விளையாட்டு என்பதை ஒத்துகொள்கிறேன். வோட்டு என்றால் அரசியல்வாதிகள் எதுவும் செய்ய கூடிய ஆட்கள்தான். நான் நினக்கிறேன் அவர் தகப்பன் ஒரு absent father என. வடிவாக விபரம் தெரியாது ஆனால் தாய்தான் இவரையும் சகோதரியையும் வளர்த்தார் என வாசித்துள்ளேன். அடிக்கடி தமிழ்நாடு போனது, தாய் வழி சொந்தங்களோடு நெருங்கிய பந்தம் - இவை எல்லாம் சேர்த்து பார்க்கும் போது கமலாவை ஒட்டு மொத்தமாக கறுப்பின பெண் என ஒதுக்குவது எனக்கு சரியாக படவில்லை. அவர் தன்னை தமிழராக உணர்கிறார் என நான் சொல்லவில்லை. ஆனால் தன் தமிழ் மரபுரிமையை நினைவு கூறுகிறார். ஒபாமாவை கென்யா மட்டும் அல்ல, ஏதோ ஒரு சம்பந்ததை காட்டி அயர்லாந்தும் தமது மகன் என கொண்டாடியது. பைடனை அயர்லாந்தும், இந்தியாவும் கொண்டாடுகிறது. அவரும் தன் குடும்பத்தில் ஒரு பகுதி இந்தியா போய் வாழ்ந்து இன்னும் வாரிசுகள் இருக்கலாம் என்றும் கூறியுள்ளார். ஆகவே எப்போதும் எல்லாத்திலும் தூய்மை பாராது, பிரிச்சு பிரிச்சு வட்டத்தை சின்னன் ஆக்காமல், கமலாவை தமிழ் மரபுரிமையுடையவராக ஏற்பதில் சந்தோசமடைவிதில் தப்பில்லை என நான் நினைக்கிறேன். அவர் தமிழர் இல்லை ஆனால் Tamil mixed heritage உள்ளவர். 2 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் Kapithan 769 Posted January 20 கருத்துக்கள உறவுகள் Share Posted January 20 1 hour ago, goshan_che said: சித்து விளையாட்டு என்பதை ஒத்துகொள்கிறேன். வோட்டு என்றால் அரசியல்வாதிகள் எதுவும் செய்ய கூடிய ஆட்கள்தான். நான் நினக்கிறேன் அவர் தகப்பன் ஒரு absent father என. வடிவாக விபரம் தெரியாது ஆனால் தாய்தான் இவரையும் சகோதரியையும் வளர்த்தார் என வாசித்துள்ளேன். அடிக்கடி தமிழ்நாடு போனது, தாய் வழி சொந்தங்களோடு நெருங்கிய பந்தம் - இவை எல்லாம் சேர்த்து பார்க்கும் போது கமலாவை ஒட்டு மொத்தமாக கறுப்பின பெண் என ஒதுக்குவது எனக்கு சரியாக படவில்லை. அவர் தன்னை தமிழராக உணர்கிறார் என நான் சொல்லவில்லை. ஆனால் தன் தமிழ் மரபுரிமையை நினைவு கூறுகிறார். ஒபாமாவை கென்யா மட்டும் அல்ல, ஏதோ ஒரு சம்பந்ததை காட்டி அயர்லாந்தும் தமது மகன் என கொண்டாடியது. பைடனை அயர்லாந்தும், இந்தியாவும் கொண்டாடுகிறது. அவரும் தன் குடும்பத்தில் ஒரு பகுதி இந்தியா போய் வாழ்ந்து இன்னும் வாரிசுகள் இருக்கலாம் என்றும் கூறியுள்ளார். ஆகவே எப்போதும் எல்லாத்திலும் தூய்மை பாராது, பிரிச்சு பிரிச்சு வட்டத்தை சின்னன் ஆக்காமல், கமலாவை தமிழ் மரபுரிமையுடையவராக ஏற்பதில் சந்தோசமடைவிதில் தப்பில்லை என நான் நினைக்கிறேன். அவர் தமிழர் இல்லை ஆனால் Tamil mixed heritage உள்ளவர். நீங்கள் சொல்லுறது உண்மையோ பொய்யோ அது வேற விடயம். ஆனால் இது இந்தியாவச் சூழவுள்ள நாடுக்ளுக்கு நல்லதா எனக்குப் படேல்ல. குறிப்பாகச் சீனா, பாகிஸ்தான், சிலோன் காறங்களுக்கு. அவயக் கொண்டு வந்ததுக்குப் பின்னுக்கு பொருளாதார, பிராந்திய, பூகோள நலன்கள் முக்கியம் பெறுவதாக ஊகிக்கிறன். Quote Link to post Share on other sites
goshan_che 2,281 Posted January 20 Share Posted January 20 9 minutes ago, Kapithan said: நீங்கள் சொல்லுறது உண்மையோ பொய்யோ அது வேற விடயம். ஆனால் இது இந்தியாவச் சூழவுள்ள நாடுக்ளுக்கு நல்லதா எனக்குப் படேல்ல. குறிப்பாகச் சீனா, பாகிஸ்தான், சிலோன் காறங்களுக்கு. அவயக் கொண்டு வந்ததுக்குப் பின்னுக்கு பொருளாதார, பிராந்திய, பூகோள நலன்கள் முக்கியம் பெறுவதாக ஊகிக்கிறன். கமலாவால் இது விரைவாகுமா தெரியவில்லை, ஆனால் ஐரோப்பாவை, ஜப்பானை, அவுஸ்ரேலியாவை போல் இந்தியாவும் கிட்டதட்ட அமெரிகாவின் பிராந்திய முகவராக வந்து விட்டது. சீனா, இஸ்லாமிய தீவிரவாதம் என்ற இரு பொது எதிரிகள், இந்தியாவுக்கு ஒரு பெரிய பலத்தின் ஆதரவு தேவைப்படுவது, அமரிக்காவுக்கு தெற்காசியாவில் ஒரு நமபகமான உதவியாளர் தேவைப்படுவது, இருவருக்கும் பொதுவான மொழி, ஜனநாயகம் இந்தியா, அமெரிக்காவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த உறவு மேலும் வலுப்படும் என்றேபடுகிறது. இந்தியா இன்னும் ரஸ்யா, ஈரானுடன் உறவை பேணுவதே இப்போதைக்கு இன்னும் நெருங்கி வருவதை தடுக்கிறது. ஆனால் அண்மையில் இஸ்ரேலுடன் இந்தியா உறவாடும் முறை, மிக விரைவில் இந்தியா முற்றாக அமெரிக்கா பக்கம் சாரும் என்பதையே காட்டுகிறது. ஆர்எஸ் எஸ், காங்கிரஸ் விரும்புவதும் இதையே. கம்யூனிஸ்டுகள் எதிர்த்தாலும் பெரிய பலனிராது. இந்தியா எந்தவகையில் பலம் பெறுவதும் சூழ உள்ளவர்களுக்கு ஆபத்தே. Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் விளங்க நினைப்பவன் 190 Posted January 20 கருத்துக்கள உறவுகள் Share Posted January 20 5 hours ago, யாயினி said: இன்று துணை ஜனாதிபதியாக பதவியேற்கின்றார் கமலா ஹாரிஸ் – மீண்டும் மகிழ்ச்சி வெள்ளத்தில் அவரது பூர்வீக கிராமம் – ஆலயத்தில் வழிபாடுகள் என்ன இது Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் யாயினி 1,920 Posted January 20 Author கருத்துக்கள உறவுகள் Share Posted January 20 17 minutes ago, விளங்க நினைப்பவன் said: என்ன இது புரியவில்லையே..நொன் றெஜிஸ்ரேட் ரிப்போர்டர்மாரிடம் இப்படி என்ன என்று ஒத்தையா கேட்டால் எல்லாம் பதில் சொல்லத் தெரியாது..விளப்பமா சொல்ல வேணும். Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் விளங்க நினைப்பவன் 190 Posted January 20 கருத்துக்கள உறவுகள் Share Posted January 20 3 minutes ago, யாயினி said: விளப்பமா சொல்ல வேணும். கமலா ஹாரிசின் இந்திய பூர்வீக கிராமத்தவர்களின் கூத்துக்களை தான் சொன்னேன் Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் Nathamuni 2,918 Posted January 20 கருத்துக்கள உறவுகள் Share Posted January 20 எனக்கென்னவோ.... பைடேன் 82 வயசு வரை இழுக்கா(விடில்) மல், இந்தம்மா ஜனாதிபதி ஆயிடும் என்று தோன்றுகிறது. Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் alvayan 189 Posted January 21 கருத்துக்கள உறவுகள் Share Posted January 21 ஆகவே எப்போதும் எல்லாத்திலும் தூய்மை பாராது, பிரிச்சு பிரிச்சு வட்டத்தை சின்னன் ஆக்காமல், கமலாவை தமிழ் மரபுரிமையுடையவராக ஏற்பதில் சந்தோசமடைவிதில் தப்பில்லை என நான் நினைக்கிறேன். அதற்கென்ன கோசான் ஜீ...தமிழாகவே இருந்திட்டுப் போகட்டுமே....ஒரு சொந்தம் கூடவாக இருக்கட்டும்.... 1 Quote Link to post Share on other sites
karikaalanivan 1 Posted January 21 Share Posted January 21 (edited) 9 hours ago, குமாரசாமி said: அது அரசியல் சித்து விளையாட்டுகளில் ஒன்று. அது சரி ஏன் அவர் தகப்பனை எங்கேயும் முன்னிலைப்படுத்தவில்லை? உலகில் எங்கேயும். உலகில் எங்கும் தகப்பனின் பெயரை முன்னிலைபடுத்துகின்றார்கள் இன்சியல்... தகப்பன் பெயரெல்லாம் தாய் சொல்லி தெரிவதுதானே கூ..மாரசாமி? உங்க வீட்டிலேயும் அப்படித்தான் என்று நினைக்கின்றேன். உங்க தகப்பன் யாரென்று உங்க தாய்த்தான் சொல்லியிருப்பா.. அதேதான் உங்கள் குழந்தைகளுக்கும். மற்றபடி, ஏன் தமிழக தமிழர்கள் சாதனையை கொண்டாடுவது ***** புகைச்சலை உண்டாக்குகின்றது? அதுசரி பெண்கள் வயதுக்கு வருவதையே உலக அதிசயமாக கொண்டாடி அதை விடியோவாக உலகம் முழுக்க ஒளிபரப்பும் கும்பல் வேறு எப்படி சிந்திக்கும் Edited January 21 by நியானி இழிவான பதம் நீக்கப்பட்டுள்ளது 1 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் Kapithan 769 Posted January 21 கருத்துக்கள உறவுகள் Share Posted January 21 (edited) 2 hours ago, karikaalanivan said: தகப்பன் பெயரெல்லாம் தாய் சொல்லி தெரிவதுதானே கூ..மாரசாமி? உங்க வீட்டிலேயும் அப்படித்தான் என்று நினைக்கின்றேன். உங்க தகப்பன் யாரென்று உங்க தாய்த்தான் சொல்லியிருப்பா.. அதேதான் உங்கள் குழந்தைகளுக்கும். மற்றபடி, ஏன் தமிழக தமிழர்கள் சாதனையை கொண்டாடுவது ***** புகைச்சலை உண்டாக்குகின்றது? அதுசரி பெண்கள் வயதுக்கு வருவதையே உலக அதிசயமாக கொண்டாடி அதை விடியோவாக உலகம் முழுக்க ஒளிபரப்பும் கும்பல் வேறு எப்படி சிந்திக்கும் தமிழகத்தவர்கள் கொண்டாடுவதற்கு யார் வயித்தெரிச்சல் படுவது.. ஈழத் தமிழர்களா.. இல்லவேயில்லை. நடராஜனின் சாதனையை கொண்டாடுவது உமது கண்ணில் படவில்லையா.. அல்லது வோசிங்ரன் சுந்தரின் வெற்றியில் பெருமைப்படுவது தெரியவில்லையா.... ***** Edited January 21 by நியானி தணிக்கை Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் பராபரன் 19 Posted January 21 கருத்துக்கள உறவுகள் Share Posted January 21 ஆரிய பிராமணர்கள் இந்தியாவை 3,500 ஆண்டுகளாக ஆண்டுகொண்டு அனைத்து மாநில மொழிகளை பேசுபவர்களாக இருப்பினும் அவர்தம் தாய்மொழி சமஷ்கிருதமே ஆகும்... ஆதித் தமிழர் (திராவிட) இனப்பகைவர்கள்... இவர்களை நம்மவர்கள் என்றும் நமக்கு உதவி செய்வார்கள் என்றும் யாரேனும் நினைப்பார்களேயானால் அவர்கள் மானுடவியல், இனவியல் சார் அரசியல் புரியாத பித்தர்கள் என்று பொருள்... இந்திய அரசியலும் அதன் நம் மீதான தாக்கமும் முழுமையாக புரியவேண்டுமாயின் நீங்கள் சிந்து சமவெளி நாகரீக அழிப்பில் இருந்து தொடங்க வேண்டும்... Quote Link to post Share on other sites
goshan_che 2,281 Posted January 21 Share Posted January 21 16 hours ago, பராபரன் said: ஆரிய பிராமணர்கள் இந்தியாவை 3,500 ஆண்டுகளாக ஆண்டுகொண்டு அனைத்து மாநில மொழிகளை பேசுபவர்களாக இருப்பினும் அவர்தம் தாய்மொழி சமஷ்கிருதமே ஆகும்... ஆதித் தமிழர் (திராவிட) இனப்பகைவர்கள்... இவர்களை நம்மவர்கள் என்றும் நமக்கு உதவி செய்வார்கள் என்றும் யாரேனும் நினைப்பார்களேயானால் அவர்கள் மானுடவியல், இனவியல் சார் அரசியல் புரியாத பித்தர்கள் என்று பொருள்... இந்திய அரசியலும் அதன் நம் மீதான தாக்கமும் முழுமையாக புரியவேண்டுமாயின் நீங்கள் சிந்து சமவெளி நாகரீக அழிப்பில் இருந்து தொடங்க வேண்டும்... இதை பற்றி நானும் யோசித்தேன் பராபரன். ஆனால் ஜெயலலிதா சொன்னது போல் கமலாவும் நான் ஒரு “மாடு தின்னும் பாப்பாத்தி” என செயலில் காட்டி உள்ளார். தவிரவும் முன்னோர் பிராமணர்கள் என்பதால் எப்போதும் அவர்கள் தமிழின வைரிகளாக இருப்பார் என்பதில்லை. தமிழகத்தில் நிச்சயமாக நீங்கள் சொல்வது உண்மை ஆனால் இலங்கையில் பலர் தமிழர் என்ற உணர்வில் போராட்டத்தில் இணைந்து மாவீரர் ஆகியும் உள்ளனர். ஆகவே இந்தியாவுக்கு வெளியே, குறிப்பாக வெளிநாட்டில் பிறந்த அனைவரும் அதே ஆரிய புத்தியில்தான் இருப்பார்கள் என யோசிப்பதும் ஒரு வகை இனவாதமாகவே படுகிறது. வளரும் சூழல் பல மாற்றங்களை தரவல்லது. எமது சமூகத்தில் கூட பல் சாதிமான்களின் பிள்ளைகள் நேர் எதிராக இருப்பதை கண்டுள்ளேன். கமலாவை நான் அவதானித்த மட்டில் அவர் அமரிக்க உழைக்கும் வர்க்கத்தின், பெண்களின், இனச் சிறுபான்மையினரின் முற்போக்கு அரசியலையே வரித்து கொண்டுள்ளார். கமலஹாசன் போல் உள்ளே குடும்பியை மறைக்கும் அரசியலாக எனக்கு இது படவில்லை. பன்னீர்செல்வம், எடப்பாடி என்ற பச்சை தமிழர்கள் தமிழர், தமிழ்நாட்டு நலத்தை தாரை வார்த்து கொடுத்ததை போல் அன்றி, இந்துதுவாவை கட்டுப்பாட்டில் ஜெ என்ற பிராமண பெண் வைத்திருந்தார் என்பதும் உண்மைதானே? 1 1 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் Justin 1,485 Posted January 21 கருத்துக்கள உறவுகள் Share Posted January 21 கமலாதேவி ஹரிசின் தாய் தமிழக தமிழர், ஒரு புற்றுநோய் உயிரியல் விஞ்ஞானியாக இருந்து மறைந்தவர். தந்தை ஸ்ரான்போர்ட் பல்கலையில் இன்றும் பேராசிரியர், ஜமய்கா கறுப்பினத்தவர். ஆனால், கமலாவும் சகோதரி மாயாவும் சிறு பிள்ளைகளாக இருக்கும் போதே பெற்றோர் பிரிந்து விட்டனர். கமலாவின் தாயார் மாணவியாக இருந்த காலப்பகுதி அமெரிக்காவில் சிவில் உரிமைப் போராட்டங்கள் தீவிரமாக நடந்த காலம். அவற்றில் அவர் கணவருடன் இணைந்தும் தனியாகவும் கலந்து கொண்டுமிருக்கிறார். நிறவாதத்திற்கெதிராக போராடிய அவர் பிராமணராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் நீதியின் பால் நின்றிருக்கிறார் என்பது முக்கியமானது! இதை சரியான வரலாற்றை ஊக்குவிக்கும் நோக்கில் மட்டுமே சொல்கிறேன். கமலா தமிழர்களுக்கு ஆதரவாக எதுவும் செய்வார் என்ற எதிர்பார்ப்பு எனக்கு அறவே இல்லை! ஏனெனில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையும் செயல்களும் தலைவர்களின் பிறப்பிட விசுவாசங்களால் தீர்மானிக்க படுவதில்லை! ஒபாமாவிடம் எதிர்பார்த்தது கிடைக்காததால் "ஒபாமா தான் 2009 இனப்படுகொலைக்குக் காரணம்!" என்று இன்னும் யாழ் களத்தில் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள் சிலர்! அதே நிலையை கமலா விடயத்திலும் ஏற்படுத்தி விடக் கூடாது! 7 1 Quote Link to post Share on other sites
goshan_che 2,281 Posted January 21 Share Posted January 21 44 minutes ago, Justin said: கமலா தமிழர்களுக்கு ஆதரவாக எதுவும் செய்வார் என்ற எதிர்பார்ப்பு எனக்கு அறவே இல்லை! ஏனெனில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையும் செயல்களும் தலைவர்களின் பிறப்பிட விசுவாசங்களால் தீர்மானிக்க படுவதில்லை! தெளிவு Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி 9,656 Posted January 21 கருத்துக்கள உறவுகள் Share Posted January 21 உலக அரசியலை------- அன்றே புரிந்து விட்டார்கள். அதனால் தான் மௌனித்த பின்னர் அழித்தார்கள். புரிந்தவன் பிஸ்தா... தெளிவு தேங்காய் எண்ணைகள் இனியும் பாடம் எடுக்காமல் இருக்க கடவது. கமலா வந்து தமிழர்களுக்கு அரசியல் தீர்வு தருவார் என யாரும் இங்கு தெளிக்கவில்லை. அமெரிக்க அரசியல் சகலருக்கும் தெரிந்த விடயம்.ஒரு சிலர் இங்கு வந்து அமெரிக்க அரிச்சுவடி பாடம் எடுப்பது அவர்கள் அரிச்சுவடியில் இருப்பதையே குறிக்கின்றது. 1 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் Nathamuni 2,918 Posted January 21 கருத்துக்கள உறவுகள் Share Posted January 21 3 minutes ago, குமாரசாமி said: உலக அரசியலை------- அன்றே புரிந்து விட்டார்கள். அதனால் தான் மௌனித்த பின்னர் அழித்தார்கள். புரிந்தவன் பிஸ்தா... தெளிவு தேங்காய் எண்ணைகள் இனியும் பாடம் எடுக்காமல் இருக்க கடவது. கமலா வந்து தமிழர்களுக்கு அரசியல் தீர்வு தருவார் என யாரும் இங்கு தெளிக்கவில்லை. அமெரிக்க அரசியல் சகலருக்கும் தெரிந்த விடயம்.ஒரு சிலர் இங்கு வந்து அமெரிக்க அரிச்சுவடி பாடம் எடுப்பது அவர்கள் அரிச்சுவடியில் இருப்பதையே குறிக்கின்றது. நீங்கள் எப்படி சொன்னாலும், சிங்களன், பேதி போற மாதிரி கதைக்கிற நிலைமையில இருக்கிறான்.... அவோவும் அரைத்தமிழ், அவோட வலதுகை யாழ்பாணத்து தமிழ்..... எண்டெல்லோ சொல்லுறான். 1 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி 9,656 Posted January 21 கருத்துக்கள உறவுகள் Share Posted January 21 15 minutes ago, Nathamuni said: நீங்கள் எப்படி சொன்னாலும், சிங்களன், பேதி போற மாதிரி கதைக்கிற நிலைமையில இருக்கிறான்.... அவோவும் அரைத்தமிழ், அவோட வலதுகை யாழ்பாணத்து தமிழ்..... எண்டெல்லோ சொல்லுறான். Quote Link to post Share on other sites
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.