Jump to content

வேலை வாய்ப்புக்கான skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

எனது கவலை, இங்கே, அடுத்த தலைமுறை, புகலிடம் எங்கும், மொழி, கலாச்சாரம் தெரிந்த, அங்கேயே படித்த, இந்த IT  தொழில்துறை குறித்த புரிதல் இல்லாமல், மருத்துவம், பார்மசி, இல்லாவிடில் கணக்கியல் என்று தடுமாறுவது.

IT  மீதான தேவையில்லாத பயத்தில், ,GCSE, A லெவலில் IT  பாடத்தினை எடுப்பதில்லை. எனக்கு தெரிந்தவர்களிடம் சொல்லி வருகிறேன். அதனை படித்து, அடிப்படை அறிவை விளங்கி, புகுந்து விளையாடுங்கள் என்று.

பயம் என்பதை விட பாடசாலைகளில் ஆர்வம் வரத்தக்கமாதிரி கற்பிக்க ஆசிரியர்கள் பற்றாக்குறை. ஆனால் ஆரம்பப் பாடசாலைகளில் கற்கத்தொடங்கும்போது ஆர்வம் வரும். இன்னோர் பிரச்சினை பலருக்கு problem solving என்றால் ஓடாது. இது எல்லாப் பாடத்திற்கும் ரியூசனுக்கு ஓடுவதால் ஏற்படுவது.

GCSE இல் அடிப்படை IT உடன், programming உம் network theory உம் உள்ளது. 13-14 வயதில் இவற்றில் ஆர்வம் இல்லாவிட்டால் கற்பது இலகு அல்ல.

Link to comment
Share on other sites

  • Replies 110
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 30/1/2021 at 03:04, Kadancha said:

இதன் தலையாய காரணம் படித்து பாஸ் பண்ணினால், UK ஐ பொறுத்தவரை வேலை நிச்சயம். வேலையின் நகரம் அல்லது பிரதேசம் rural ஆக இருந்தாலும். 

மருத்துவம்.. rural areas or நகரங்கள் கட்டாயம் வேலை நிச்சயம். ஆனால் எங்களில் அனேகமானவர்கள் hospitalsல் மட்டும் அல்லது ஒரு suburbல் தனித்தனியே GP clinic உடன் நின்றுவிடுவார்கள்.. இங்கே சில இடங்களில் எங்களவர்களின் GP clinic இரண்டிற்கு மேற்பட்டது உள்ளது ஆனால் 8am to 8pm மட்டுமே.. 

இதையே ஒரு 24hrs clinic ஆக நடத்த நினைக்கமாட்டார்கள்.. இப்படி செய்தால் ஓரிருவருக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்கும்.. ஆனால் ஏன் செய்ய நினைக்கவில்லையோ தெரியாது! 

On 30/1/2021 at 06:48, கிருபன் said:

இன்னோர் பிரச்சினை பலருக்கு problem solving என்றால் ஓடாது. இது எல்லாப் பாடத்திற்கும் ரியூசனுக்கு ஓடுவதால் ஏற்படுவது.

உண்மைதான்.. 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 30/1/2021 at 00:44, colomban said:

உங்கள் பதில்களை பார்த்து இப்பொழுது எனக்கும் Functional Consultant  ஆக முயற்சிப்போமா என நப்பாசை வருகின்றது.
பல வருடங்களாக கணக்காளராக வேலை செய்து ச‌லித்து போய்விட்டது. மேலும் இப்பொழுது வயது போன பின்பு மாற்ற முடியுமா Career ஐ மார்க்கட்டில் இளையேர்கள் நல்ல கல்வித்தகைமயுடன் உள்ளார்களே.

இங்கு நான் பாவிப்பது ERP இல் ஒரு வகையான Oracle Netsuite எனப்படுவது. பல‌ நாடுகளில் இருக்கும் அனைத்து Financial/Non-Financial நடவடிக்கைகளியும் ஒரே Program இல் வைத்துள்ளோம். உலகில் எங்கிருந்து access செய்ய‌ முடியும்.  MIS Reports செய்யும்போது இதில் உள்ள வற்றை XL இல் எமக்கு தேவையான விதத்தில் செய்து கொள்வோம். XL உம் ஒரளவுதான் எங்களுக்கு தெரியும். பொதுவாக‌ pivot table,  v-look-up, If conditions,  போன்றவையே.

கோரோனா லீவில் நான் Financial modelling  என்பதை படித்து பாஸ்செய்தேன்

ஒரு ஆக என்ன தகமைகள் வேண்டும்? எங்கே இருந்து ஆரம்பிப்பது?

கொழும்பான் அண்ணை 
பணியில் மூழ்கிவிட்டதால் சற்று தாமதமேற்பட்டுவிட்டது 

 Oracle Netsuite  ஒரு திறமான ERP இல்லாவிட்டால் Oracle பாய்ந்தடித்துக்கொண்டு போய் அதனை வாங்கியிருக்கமாட்டார்கள், உங்களிடம் இரண்டு மிகப்பெரிய ERP துறைக்கு  அவசியமான திறமைகள் 
தற்போது இருக்கின்றன.
1. அடிப்படையில் நீங்கள் ஒருகணக்காளர் (Accounting Concepts உங்களுக்கு அத்துப்படி) 
2. Netsuite இன் Finance மொடுலின் A to Z Business process உங்களுக்கு பரீட்சயம் 

இனி நீங்கள் செய்யவேண்டியது 
Netsuite இன் மற்றய மோடுல்கள் எப்படி வேலை செய்கின்றன, என்னென்ன மோடுல்கள் out of the box இலும் add-on ஆகவும் கிடைக்கின்றன (உ +ம் : எனது தற்போதைய ERP யில் Fixed Assets add-on ஆக தான் வரும், தேவையான பயனர்கள் அதற்க்கு தனியாக பணம் செலுத்தி பெறவேண்டும் ) என்று ஒரு பூரண ஆய்வை செய்து விடுங்கள், மற்றய மோடுல்கள் தொடர்பான உங்கள் அறிவு உங்களை Finance மட்டுமல்லாது மற்றய மோடுல்களிலும் தீர்வினை suggest  செய்யும் திறமையை வளர்க்கும் இதன்மூலம் நீங்கள் ஒரு Complete ERP functional consultant ஆக உங்களை முன்னிலைப்படுத்தலாம்,

இனி இந்தத்துறைக்குள் நுழைய முதலில் உங்களின் பலத்தை முன்னிலைப்படுத்தியே உங்கள் CV ஐ 
தயாரிக்கவேண்டும் , எனது தெரிவு நீங்கள் முதலில் ஒரு Business consultant (Finance) ஆக உள்நுழைவதே பொருத்தம், மற்றய மோடுல்களில் உள்ள பரீட்சயத்தை இதர தகுதியாக குறிப்பிடலாம்,

உங்களை விட கல்வித்தகுதியுடன் இருக்கும் இளவயதினரை விட்டு உங்களை வேறுபடுத்திக்காட்டப்போகும் விடயம் உங்களது Product related experience, அதனாலேயே மற்றய மோடுல்களிலும் ஒரு குறிப்பிடத்தக்க அறிவை பெற்றுக்கொள்ள உங்களை வலியுறுத்துகிறேன் 

Consulting துறையில் மேற்கொண்டு வளர உத்தேசித்துவிட்டீர்கள் என்றால் PMP சர்ட்டிபிகேஷன் (Project Management Professional) உங்களது Curriculam இற்கு செமையான ஒரு Boost ஐ தரும், Consulting இலிருந்து Project manager ஆக உயரலாம் அப்புறம் Principal Project Manager ,Manager-Consulting,Head of conslting இப்படி உயந்து கொண்டே போகலாம்  

Excel அறிவெல்லாம் உள்ளே போய் வளர்த்துக்கொள்ளலாம், இறுதி  ever green advice எப்போதும் கற்றுக்கொள்ள தயாராயிருங்கள், உங்களது சரியான வயது எனக்கு தெரியாததால் இப்போது switch பண்ணுவது சரியாக இருக்குமா என்று கூறமுடியாது, நீங்கள் இந்த துறைக்கு புதியவரென்பதால் நீங்கள் 
ஒரு fresher இன் சம்பள அளவிற்குள் வரையறுக்கப்படும் சாத்தியமே அதிகம் (இலங்கையில் இதுதான் நடைமுறை, சிங்கையில் அடித்து பேசி கறக்கலாம் ஆனால் மாடு மாதிரி வேலை வாங்குவினம் ), எனவே நாட்டிற்கு நாடு வேறுபடும் இவற்றையெல்லாம் நேர்முகத்தேர்வில் கிளியர் பண்ணிக்கொள்வது நல்லது 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பணம் சம்பாதிப்பது வாழ்கைக்கு தேவை. ஆனால் மோசடி, ஏமாற்றல், பேக்காட்டல் மூலம்  முன்னேறினால் அது உங்கள் வாழ்க்கையை சீரளித்துவிடும்.

Attitudes --> Behaviours --> Habits.

Integrity எதிலும் தேவை.

The quality of being honest and having strong moral principles are important for us.

சின்ன சின்ன நெளிவு சுழிவுகளில் தொடங்கும் தவறான மனோநிலையே கடைசியில் பாரிய குற்றங்களை செய்யவைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

பணம் சம்பாதிப்பது வாழ்கைக்கு தேவை. ஆனால் மோசடி, ஏமாற்றல், பேக்காட்டல் மூலம்  முன்னேறினால் அது உங்கள் வாழ்க்கையை சீரளித்துவிடும்.

Attitudes --> Behaviours --> Habits.

Integrity எதிலும் தேவை.

The quality of being honest and having strong moral principles are important for us.

சின்ன சின்ன நெளிவு சுழிவுகளில் தொடங்கும் தவறான மனோநிலையே கடைசியில் பாரிய குற்றங்களை செய்யவைக்கும்.

அதை கோடிக்கணக்கான இந்திய, தென் ஆப்பிரிக்க, நைஜீரிய, அவுஸ்திரேலியா, IT வேலைக்காரர்களுக்கு சொல்லுங்கள்....

சிரித்துக் கொண்டே கடந்து செல்வார்கள்.... 

சரிதான் அய்யா நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றும் கேட்ப்பார்கள். சொல்லி வையுங்கள். 

பிரித்தானியாவில் 80% சுஜவிபர கோவையானது (CV) 50% மேல் பொய்களை கொண்டது என்று ஆய்ந்தே சொல்லியுள்ளனர்.

கையோடை கம்மாரிசு என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒரு மென் பொருள் சந்தைக்கு வருவதும், அதன் சந்தை வாய்ப்பும் மிக குறுகிய காலம் மட்டுமே. அதுக்குள் நீங்கள், அதனை உய்த்தறிந்து, வேலைகளை முடித்துக் கொடுத்து, அதே மென்பொருளின் அடுத்த version வரும் போதே தயாராகி விட வேண்டும்.

என்ன பொய்யை சொல்லியும், வேலைக்கு போனால், சும்மாவா வைத்துக் காசு தருவார்கள்?

நீங்கள் வேலைகளை முடித்துக் கொடுத்தால் தான் காசு. முடிக்காவிடில் கதவை காட்டுவார்கள்.

ஆகவே, பொய் சொல்வதல்ல விசயம். உங்கள் மீது, உங்கள் கடின உழைப்பு மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கை. ஒரு வேலையினை பொறுப்பு எடுத்துக் கொண்டால், அதனை முழுமையாக முடித்துக் கொடுக்கும் திறமையினை வளர்த்துக் கொள்ளும் ஆளுமை. சொன்ன பொய்யினை, மெய்ப்பிக்கும் திறமை.

மீண்டும் சொல்கிறேன். வேலைக்கு, அனுபவம் தேவை. அனுபவம் பெற வேலை தேவை. இது catch 22 நிலைமை என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் சிலேடை.

இந்த வேலை அனுபவம் தேவை என்று, கணக்கியலில், சீக்கிய சிங்கனிடம், சிங்கி அடித்துளேன். அங்கே கிடைத்த அனுபவத்தினை CV யில் போட்டு பெரிய கம்பனிகளுக்கு அனுப்பி வருடங்களை தொலைத்திருக்கிறேன். பேப்பர் ஆக தபாலில் அனுப்பி இருந்தால், சிரித்து விட்டு, டாய்லட் ரோலாக பயன்படுத்தி இருப்பார்கள்.

IT மாறிய 3வது மாதத்தில், பெரிய நிறுவனத்தில், நான், சீக்கியரிடம் வாங்கிய பணத்தில் 3 மடங்கு சம்பளத்தில் வேலை. 6வது மாதத்தில் இருந்து, சீக்கியர் ஒரு மணிநேரத்துக்கு தந்த சம்பளத்தின், 7 மடங்கு அதிகமாக பெற தொடங்கினேன்.

ஆகவே, உங்கள் சிந்தனைகளை மாற்றுங்கள். இது வேலை இல்லை. வியாபாரம். பிசினஸ். உங்களுக்கு திறமை இருந்தால், பணம். இல்லாவிட்டால் வீட்டில குந்தி இருந்து கொண்டு, நீங்கள் சொன்னதை வாசித்துக் கொண்டு, கூரையை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியது தான்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, அக்னியஷ்த்ரா said:

கொழும்பான் அண்ணை 
பணியில் மூழ்கிவிட்டதால் சற்று தாமதமேற்பட்டுவிட்டது 

 Oracle Netsuite  ஒரு திறமான ERP இல்லாவிட்டால் Oracle பாய்ந்தடித்துக்கொண்டு போய் அதனை வாங்கியிருக்கமாட்டார்கள், உங்களிடம் இரண்டு மிகப்பெரிய ERP துறைக்கு  அவசியமான திறமைகள் 
தற்போது இருக்கின்றன.
1. அடிப்படையில் நீங்கள் ஒருகணக்காளர் (Accounting Concepts உங்களுக்கு அத்துப்படி) 
2. Netsuite இன் Finance மொடுலின் A to Z Business process உங்களுக்கு பரீட்சயம் 

இனி நீங்கள் செய்யவேண்டியது 
Netsuite இன் மற்றய மோடுல்கள் எப்படி வேலை செய்கின்றன, என்னென்ன மோடுல்கள் out of the box இலும் add-on ஆகவும் கிடைக்கின்றன (உ +ம் : எனது தற்போதைய ERP யில் Fixed Assets add-on ஆக தான் வரும், தேவையான பயனர்கள் அதற்க்கு தனியாக பணம் செலுத்தி பெறவேண்டும் ) என்று ஒரு பூரண ஆய்வை செய்து விடுங்கள், மற்றய மோடுல்கள் தொடர்பான உங்கள் அறிவு உங்களை Finance மட்டுமல்லாது மற்றய மோடுல்களிலும் தீர்வினை suggest  செய்யும் திறமையை வளர்க்கும் இதன்மூலம் நீங்கள் ஒரு Complete ERP functional consultant ஆக உங்களை முன்னிலைப்படுத்தலாம்,

இனி இந்தத்துறைக்குள் நுழைய முதலில் உங்களின் பலத்தை முன்னிலைப்படுத்தியே உங்கள் CV ஐ 
தயாரிக்கவேண்டும் , எனது தெரிவு நீங்கள் முதலில் ஒரு Business consultant (Finance) ஆக உள்நுழைவதே பொருத்தம், மற்றய மோடுல்களில் உள்ள பரீட்சயத்தை இதர தகுதியாக குறிப்பிடலாம்,

உங்களை விட கல்வித்தகுதியுடன் இருக்கும் இளவயதினரை விட்டு உங்களை வேறுபடுத்திக்காட்டப்போகும் விடயம் உங்களது Product related experience, அதனாலேயே மற்றய மோடுல்களிலும் ஒரு குறிப்பிடத்தக்க அறிவை பெற்றுக்கொள்ள உங்களை வலியுறுத்துகிறேன் 

Consulting துறையில் மேற்கொண்டு வளர உத்தேசித்துவிட்டீர்கள் என்றால் PMP சர்ட்டிபிகேஷன் (Project Management Professional) உங்களது Curriculam இற்கு செமையான ஒரு Boost ஐ தரும், Consulting இலிருந்து Project manager ஆக உயரலாம் அப்புறம் Principal Project Manager ,Manager-Consulting,Head of conslting இப்படி உயந்து கொண்டே போகலாம்  

Excel அறிவெல்லாம் உள்ளே போய் வளர்த்துக்கொள்ளலாம், இறுதி  ever green advice எப்போதும் கற்றுக்கொள்ள தயாராயிருங்கள், உங்களது சரியான வயது எனக்கு தெரியாததால் இப்போது switch பண்ணுவது சரியாக இருக்குமா என்று கூறமுடியாது, நீங்கள் இந்த துறைக்கு புதியவரென்பதால் நீங்கள் 
ஒரு fresher இன் சம்பள அளவிற்குள் வரையறுக்கப்படும் சாத்தியமே அதிகம் (இலங்கையில் இதுதான் நடைமுறை, சிங்கையில் அடித்து பேசி கறக்கலாம் ஆனால் மாடு மாதிரி வேலை வாங்குவினம் ), எனவே நாட்டிற்கு நாடு வேறுபடும் இவற்றையெல்லாம் நேர்முகத்தேர்வில் கிளியர் பண்ணிக்கொள்வது நல்லது 
 
நீங்கள் தந்த விசயங்கள் அனைத்தும், மிக முக்கியமானவை. நன்றி. 🙏

Salesforce எனும் புது CRM நல்லா செய்கிறது என்று இந்திய நண்பர் சொன்னார். பார்க்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

பணம் சம்பாதிப்பது வாழ்கைக்கு தேவை. ஆனால் மோசடி, ஏமாற்றல், பேக்காட்டல் மூலம்  முன்னேறினால் அது உங்கள் வாழ்க்கையை சீரளித்துவிடும்.

Attitudes --> Behaviours --> Habits.

Integrity எதிலும் தேவை.

The quality of being honest and having strong moral principles are important for us.

சின்ன சின்ன நெளிவு சுழிவுகளில் தொடங்கும் தவறான மனோநிலையே கடைசியில் பாரிய குற்றங்களை செய்யவைக்கும்.

மிக்க நன்றி..
இந்த திரியில் எழுதப்பட்ட சில கருத்துக்களை பார்த்த பொழுது எனக்கும் இதே போன்ற உணர்வு ஏற்பட்டது..

அதனால்தான் சில வாரங்களுக்கு முன்பு யாழ் திரைகடலோடியில் “20 jobs that will start to disappear in the next 5 years” என்ற கட்டுரையையும் இணைத்தேன் அதில் எந்ததெந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் எந்த துறைகளில் காணாமல் போகும் என ஆராய்ந்து தகவல்களை தந்திருக்கிறார்கள்..எப்பொழுதுமே தொழில்நுட்ப,  மென் பொருள் சம்பந்தமான, இணையதள பாதுகாப்பு சம்பந்தமான வேலைகள் மட்டுமே அதிகரிக்கும் என்பதல்ல உண்மை. தொழிநுட்பத்தால் அதிகளவு சாதிக்கமுடியாத வேலைகளுக்கும் வாய்ப்புகள் உள்ளன. பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக எங்களுக்கு ஓவ்வாத சிந்தனைக்கு மாறவேண்டிய அவசியமில்லை.. 

அத்தோடு, சில துறைகளில் இந்த மாதிரி பிழையான தகமைகளைப்போட்டால் எப்படியும்  கண்டுபிடித்துவிடுவார்கள், நீண்ட நாட்களுக்கு நிலைக்கமுடியாது (எனது உயரதிகாரிக்கு இப்படி நடந்தது).. அவமானப்படும் சூழ்நிலைகளுக்கும் ஆளாகலாம்.

ஆகையால் காலத்திற்கு ஏற்ப/தேவையான துறைகளை தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கப்படவேண்டும் என்பதுமட்டுமல்ல எங்களுக்கு திருப்தியையும் வருமானத்தையும் தரக்கூடிய துறைகளை தேர்ந்தெடுத்து முன்னேறவேண்டும்.. நாங்கள் செய்யும் வேலை எங்களுக்கு மனத்திருப்தி, குடும்பம்/வாழ்க்கை மற்றும் வேலையில் சமநிலையை( work life balance, wellbeing) பேணக்கூடியதாக இருப்பது நன்று.. 

அத்தோடு எங்களவர்கள் சில துறைகளை கவனத்தில் எடுப்பதே இல்லை. அப்படி வளர்க்கப்படுகிறார்கள்.. double degree வைத்திருப்பார்கள் ஆனால் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. பெற்றோருக்காகவென்று விருப்பமில்லாத துறைகளில் படித்து காலத்தையும் வாழ்க்கையையும் விரயமாக்கியிருப்பார்கள்.. பணம் உழைக்கவேண்டும் என்பதற்காக விருப்பமில்லாத, இருக்கும் இடத்தில் அதற்கான தொழில்வாய்ப்புகள் அற்ற துறையில் இறங்கி வேலையின்மை, விரக்தியில் உழையவேண்டியதும் தேவையற்ற ஒன்று... உண்மையில் எதிர்காலத்தில் மிகவும் தேவைப்படும் சில வேலைகளில் கவனம் செலுத்தப்படவேண்டும்: நர்சிங், கவுன்சிலிங்(எங்களவர்கள் அதிகம் இல்லாத ஒரு துறை), கற்பித்தல், வயதானவர்களை பராமரிப்பு போன்றவை. மேலும், படைப்பாற்றல்(Creativity), சிக்கல் தீர்க்கும்(Problem Solving), பகுப்பாய்வு சிந்தனை(Analytical thinking) மற்றும் புதுமை(Innovations). இப்படி சில துறைகளுக்கான வேலைவாய்ப்புகள் ஓரளவிற்கு இருந்துகொண்டுதான் உள்ளது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Nathamuni said:

அதை கோடிக்கணக்கான இந்திய, தென் ஆப்பிரிக்க, நைஜீரிய, அவுஸ்திரேலியா, IT வேலைக்காரர்களுக்கு சொல்லுங்கள்....

சிரித்துக் கொண்டே கடந்து செல்வார்கள்.... 

சரிதான் அய்யா நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றும் கேட்ப்பார்கள். சொல்லி வையுங்கள். 

என்னிடம் சொன்னாலும் அதே சிரிப்புதான் 
வேலைக்கு சேரும் போது பல்கலையில் படித்த C,C ++,Core Java, HTML4, Javascript, Visual basic 6 இவையே எனக்கு தெரிந்த கணனி மொழிகள், 
இன்று Visual Basic .Net , Visual C#,  Objective C (IOS), Swift(IOS), JAVA(Enterprise edition J2EE),Python,HTML5 Jquery ,Typescript ஆகிய கணினி மொழிகளும் 
Spring,Struts, nHibernate, Entitiy framework, JSP,ASP.Net MVC,Web Api,Bootstrap,Angular,React JS,Razor template,Telerik Components   ஆகிய middle ware ,front end Framework களும் 
தரவுத்தளத்தில் T/SQL (Transact SQL), PL/SQL, BQL எனும் தரவுத்தள மொழிகளும் உள்ளே வந்த பிறகு கற்றுக்கொண்டவை, இதுதவிர ERP frameworks, BI Tools (Crystal,PowerBI,SSRS,ARD,Jasper Report,Telerik report) தனிப்பிரிவு.
எல்லாமே சாத்தியம் தான் எதையும் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் உங்களுக்கு குறுக்கே எவரும் நிற்க முடியாது, இன்றும் எனது நிறுவனத்தில் புதிய project வந்தால் ஓடிப்போய் முதல் கதிரையை பிடிப்பது நான்தான் அதிலும் புதிய technology என்றால் அல்வா சாப்பிடுவதுபோல்,

உந்த integrity ,honesty எல்லாம் சொந்த வாழ்க்கையில் கடைப்பிடியுங்கள் Career இல் தன்னம்பிக்கையும்,விடாமுயற்ச்சியும்,ஆர்வமும், நோக்கமும் இல்லாதவரை இந்த grity க்களை வைத்து கொசுவும் திரத்த முடியாது  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

காலத்திற்கு ஏற்ப/தேவையான துறைகளை தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கப்படவேண்டும் என்பதுமட்டுமல்ல எங்களுக்கு திருப்தியையும் வருமானத்தையும் தரக்கூடிய துறைகளை தேர்ந்தெடுத்து முன்னேறவேண்டும்.. நாங்கள் செய்யும் வேலை எங்களுக்கு மனத்திருப்தி, குடும்பம்/வாழ்க்கை மற்றும் வேலையில் சமநிலையை( work life balance, wellbeing) பேணக்கூடியதாக இருப்பது நன்று.. 

உண்மைதான். திருப்தி இல்லாத வேலையை செய்தால் “another day; another dollar” என்று கூலித்தொழில் மனப்பான்மை வந்துவிடும். 

எப்போதும் கற்கவேண்டும்; கிடைக்கும் சந்தர்ப்பங்களையெல்லாம் தவறாமல் பாவிக்கவேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5 hours ago, கிருபன் said:

எப்போதும் கற்கவேண்டும்; கிடைக்கும் சந்தர்ப்பங்களையெல்லாம் தவறாமல் பாவிக்கவேண்டும். 

“ Another day, another dollar” என்பது பெரும்பாலும் monotonous வேலைகள் உற்பத்தி/தொழிற்சாலை, சில அலுவலக வேலைகள், சில சமூக நலன் சேவைகள் போன்றவற்றிலேயே அதிகம் காணப்பட்டாலும், என்னைப் பொறுத்தவரையில், நடைமுறையில் எல்லா துறைகளிலும்/நிலையிலும் இந்த சலிப்பை ஒரு கட்டத்தில் உணருவோம் என்றுதான் நினைக்கிறேன் ஆனால் வேலையை fascinateஆக செய்பவர்கள் விதிவிலக்கு..

கட்டாயம், கற்பதற்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை தவறவிடக்கூடாது, ஆனால் அப்படி கற்பது அதிக பணம் சம்பாதிப்பதற்கான நோக்கம் ஒன்றாக மட்டும் இருப்பது சரியெனபடவில்லை, அவ்வளவுதான்.

மேலும் இந்த integrity, honesty பற்றி நான் இப்படித்தான் நினைப்பதுண்டு..எந்த துறையானாலும் வேலையிடத்தில், எத்தனையோ back stabbing இருக்கும்.. உயர் நிலை தொடங்கி கடைநிலை வரை.. அப்படியான ஒரு அனுபவம் ஏற்பட்டால்
- அப்படி back stabbing செய்தவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் ரொம்பவும் நல்லவர்கள்/நம்பிக்கையானவர்கள் வேலையில் முன்னேறவேண்டும் என்பதற்காக அப்படி செய்துவிட்டார்கள் என நினைப்போமா? 
- வேலையிடத்திலேயே இப்படி என்றால் அவர்களது தனிப்பட்ட வாழ்வில், சமூகத்தில் எப்படியெல்லாம் திருகுதாளம் செய்யவர்கள் என நினைப்போமா?
எப்படி இப்படியானவர்களை characterized செய்வோம்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/2/2021 at 04:18, பிரபா சிதம்பரநாதன் said:

மிக்க நன்றி..
இந்த திரியில் எழுதப்பட்ட சில கருத்துக்களை பார்த்த பொழுது எனக்கும் இதே போன்ற உணர்வு ஏற்பட்டது..

அதனால்தான் சில வாரங்களுக்கு முன்பு யாழ் திரைகடலோடியில் “20 jobs that will start to disappear in the next 5 years” என்ற கட்டுரையையும் இணைத்தேன் அதில் எந்ததெந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் எந்த துறைகளில் காணாமல் போகும் என ஆராய்ந்து தகவல்களை தந்திருக்கிறார்கள்..எப்பொழுதுமே தொழில்நுட்ப,  மென் பொருள் சம்பந்தமான, இணையதள பாதுகாப்பு சம்பந்தமான வேலைகள் மட்டுமே அதிகரிக்கும் என்பதல்ல உண்மை. தொழிநுட்பத்தால் அதிகளவு சாதிக்கமுடியாத வேலைகளுக்கும் வாய்ப்புகள் உள்ளன. பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக எங்களுக்கு ஓவ்வாத சிந்தனைக்கு மாறவேண்டிய அவசியமில்லை.. 

அத்தோடு, சில துறைகளில் இந்த மாதிரி பிழையான தகமைகளைப்போட்டால் எப்படியும்  கண்டுபிடித்துவிடுவார்கள், நீண்ட நாட்களுக்கு நிலைக்கமுடியாது (எனது உயரதிகாரிக்கு இப்படி நடந்தது).. அவமானப்படும் சூழ்நிலைகளுக்கும் ஆளாகலாம்.

ஆகையால் காலத்திற்கு ஏற்ப/தேவையான துறைகளை தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கப்படவேண்டும் என்பதுமட்டுமல்ல எங்களுக்கு திருப்தியையும் வருமானத்தையும் தரக்கூடிய துறைகளை தேர்ந்தெடுத்து முன்னேறவேண்டும்.. நாங்கள் செய்யும் வேலை எங்களுக்கு மனத்திருப்தி, குடும்பம்/வாழ்க்கை மற்றும் வேலையில் சமநிலையை( work life balance, wellbeing) பேணக்கூடியதாக இருப்பது நன்று.. 

அத்தோடு எங்களவர்கள் சில துறைகளை கவனத்தில் எடுப்பதே இல்லை. அப்படி வளர்க்கப்படுகிறார்கள்.. double degree வைத்திருப்பார்கள் ஆனால் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. பெற்றோருக்காகவென்று விருப்பமில்லாத துறைகளில் படித்து காலத்தையும் வாழ்க்கையையும் விரயமாக்கியிருப்பார்கள்.. பணம் உழைக்கவேண்டும் என்பதற்காக விருப்பமில்லாத, இருக்கும் இடத்தில் அதற்கான தொழில்வாய்ப்புகள் அற்ற துறையில் இறங்கி வேலையின்மை, விரக்தியில் உழையவேண்டியதும் தேவையற்ற ஒன்று... உண்மையில் எதிர்காலத்தில் மிகவும் தேவைப்படும் சில வேலைகளில் கவனம் செலுத்தப்படவேண்டும்: நர்சிங், கவுன்சிலிங்(எங்களவர்கள் அதிகம் இல்லாத ஒரு துறை), கற்பித்தல், வயதானவர்களை பராமரிப்பு போன்றவை. மேலும், படைப்பாற்றல்(Creativity), சிக்கல் தீர்க்கும்(Problem Solving), பகுப்பாய்வு சிந்தனை(Analytical thinking) மற்றும் புதுமை(Innovations). இப்படி சில துறைகளுக்கான வேலைவாய்ப்புகள் ஓரளவிற்கு இருந்துகொண்டுதான் உள்ளது..

16 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

உங்கள் கருத்துக்கள், professionally correct. 

ஆனாலும், உங்கள் கருத்துக்கள், நான் இங்கே சொல்ல முனையும் கருத்துக்கு நேர் எதிரானது அல்ல, சமாந்திரமானது.

இந்த சிந்தனை, ஒரு comfort zone னினுள் வைத்திருக்கவே உதவும். இன்னுமொரு வகையில் சொல்வதானால், 9-5 வேலை செய்யும், மாதாந்த சம்பளத்தினை எதிர்பார்ப்பவர்க்கான மனநிலை.

நியாயத்தினை கதைப்போம் சொன்னதும் அதே தான். கிருபன்  லைக் பண்ணி உள்ளார். ஆச்சரியமளிக்க வில்லை. ஏனெனில் அவர் நான் சொன்ன, 9-5 வேலைக்காரர்.

நிழலி லைக் பண்ணியது, ஆச்சரியம் அளித்தது, ஏனெனில் அவர் கான்ட்ராக்ட் வேலை செய்பவர் என்பதால்.

நீங்கள் சொன்ன எதையுமே, நிராகரிக்காமல், அவை, ஒரு வேலை நிறுவனத்துக்கு போய், மாத சம்பளத்துக்கு வேலை செய்து, வாழ்க்கையினை அந்த சம்பளத்துடன், ஏதோ காலம் போகிறது என்பவர்களுக்கானது என்று சொல்வேன். 

****

மேலும் நான் ஒருபோதுமே, இல்லாத டிகிரி, படிப்பு தகுதிகள் இருப்பதாக சொல்ல சொல்லவில்லை என்பதை கவனியுங்கள். ஓர் வருமானம் அதிகம் இல்லாத தொழிலில் இருந்து, கை நிறைய வருமானம் தரும் தொழிலுக்கு மாறிக் கொள்ளும் வகையில் motivate பண்ணுகிறோம்.

சில IT தொழில்களுக்கு, degree இல்லாமலே வேலை கிடைக்கிறது. உதாரணமாக, சோசியல் மீடியா மேனேஜர். பிரிட்டனில் £100,000 வரை கொடுக்கிறார்கள். 

*****

IT துறையில் வேலை செய்வது ஒரு entrepreneurship. இந்த 9-5 வேலை நிலைக்கு நேர் எதிரானது. நான் வேலைக்கு போய் கொண்டுவரவும் பணத்தில், எனது சொந்த நிறுவனத்தினை நடத்தி 3 பேருக்கு சம்பளம் கொடுக்க முடிகிறது.

இந்த entrepreneurship மனநிலை மிக முக்கியமானது. அது வியாபாரம் என்று தான் மேலே நியாயத்தினை கதைப்போம் கருத்துக்கு பதிலளித்தேன். எனது கணிப்பு சரியானால், விவசாயி விக்கும் இந்த entrepreneur தான்.

ஆகவே, நானும், ஏனையோரும் வைத்த கருத்துக்கள், அந்த வகையில் entrepreneur க்கு ஆனதாக மட்டுமே கருதப்படவேண்டும். 

ஆகவே, நீங்கள் சொல்வது, வாழக்கையினை மாதாந்த கொடுப்பனவுகளுக்காக, செக்குகள் எழுதி வைத்துக் கொண்டே pay check எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு.

Who dares wins.

நான், ஆரம்பத்தில் இருந்தே தெளிவாக சொல்லி விட்டேன். நான் ஒரு பட்டைய கணக்காளர். வேலையில், சுத்துமாத்து விட்டால், அது அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டால், எனது, உறுப்புரிமை நீக்கப்படும்.

முயற்சி இல்லாமல், காலையில் எழும்பி, டையினை கட்டி, கையில் ஒரு பாக்கினைக் தூக்கி கொண்டு, அதுக்குள்ள மணைவி கட்டிக்கொடுக்கும் உணவினையும் கொண்டு வந்து, தான் ஒரு கணக்காளர் என்று பீலா விட்டு கொண்டிருந்த ஒருவர், டெனிம் டௌசரும், t-shirt உடன், IT consultant ஆக அவருக்கு பக்கத்தில் போயிருந்து, அவர், கணக்கியலில், தடுமாறியபோது, இது இப்படித்தானே என்று சொல்லி, நானும் ஒரு கணக்காளர் தான் என்ற போது... 

.... அவரது வேண்டுதலில், வேலை முடிந்து காபி பாரில் சந்தித்த போது, எனக்கு எவ்வளவு பணம் செலுத்தப்படுகின்றது என்பதனை, கணக்காளராக தெரிந்து வைத்திருந்தார் என்றும், நான் கணக்காளர் என்பது தெரிந்து இன்றுதான் ஆச்சரியம் அடைந்ததாகவும் சொன்னார்.

அவர், இன்று IT யில் இருக்கிறார். இங்கே, கொழும்பான் அதே நிலையில் இருந்தே கேள்விகளை வைத்தார் என்பதனை கவனியுங்கள்.

ஆகவே, சொல்ல வருவது என்னவென்றால், pay check comfort zone இல் இருக்க விரும்பும் நபர்களுக்கு, கொடுக்க வேண்டிய ஆலோசனைகளை, தயவுடன் இங்கே கொடுத்து குழப்பாதீர்கள். 

இங்கே கருத்து சொன்ன, அக்கினியாத்திரா, அகத்தியன், முதல்வன், நிழலி, அனைவருமே IT  என்னும் வேறு உலகத்தில் எமது கடின உழைப்புகளை காசாக்குகின்றோம். அது இலகுவானதல்ல. எல்லோருக்கும் ஆனதல்ல. அங்கே வர விரும்புவர்களுக்கு, உள்ள சில தயக்கங்களை போக்கவே, நாம் இங்கே கருத்துக்களை பகிர்ந்தோம். 

கடுமையான பயிட்சி, இலகுவான யுத்தம். எனக்கு எல்லாம் தெரியும் என்று பொய் சொல்ல, யாரும் இங்கே சொல்லவில்லை. கடினமா பயிட்சி பெற்று தயாரான பின்னர், ஒரு நிறுவனத்துக்கு, முதல் வேலைக்கு போகும்போது, நான் மேலே சொன்ன catch-22 நிலைமைக்கு, என்ன செய்யலாம் என்பதே நாம் கொடுத்த ஆலோசனை. எல்லோருக்கும் அதே நிலைமை இல்லை. உதாரணமாக நிரந்தர வேலை (9-5) போபவர்களுக்கு தான் அந்த பிரச்சனை.

contractors இந்த மாதிரி இல்லை. உள்ள போகுமுன்னர், கடும் பயிச்சி. உள்ள போனால் take full responsibility of the task given. வைச்சு பிணைஞ்சு கொண்டிருக்க முடியாது. 

இந்த IT  துறை எனது சொந்த அனுபவம் மட்டுமில்லை, மேலை நாடுகள், நம்பி இருக்கும், இந்திய தொழிலாளர்கள் அனைவருமே இந்த முறையில் தான் உள்ளே வந்து முன்னேறுகிறார்கள். US வந்த, நாலாவது வாரமே, அங்கே நாலு வருடம் வேலை செய்பவர்களாக சொல்லிக் கொண்டே வேலை தேடி கிளம்பி விடுவார்கள்.

அங்கே, நின்று, நேர்மையாளன் ஆக, எனக்கு அனுபவம், இல்லை.... பழகும் வரை வேலை செய்கிறேன் என்று, சொன்னால், போதிய வரி கட்டவில்லை என்று விசா cancel ஆகி ஊர் போகவேண்டும்.

இந்தியாவில் மன்னார் & கம்பெனியில் வேலை செய்தேன் என்றால், வேலைக்கு எடுப்பார்களா?

மீண்டும் சொல்கிறேன். வித்தை முழுமையாக தெரிய வேண்டும். அதிலே பொய் சொல்லி பிரயோசனம் இல்லை. அதுக்கு, கடும் பயிட்சி முக்கியம். ஆனால் வேலை தர, அவர்கள் குறித்த நபருக்கு முன் அனுபவம் உள்ளதா என்று பார்க்கும் போது, அதனை கவர் பண்ணுவது குறித்தே நாம் மேலே சொன்னோம்.

******

கணக்கியல் உட்பட்ட நீங்கள் சொன்ன பல துறையில், இந்த நாட்டினருக்கு போக மிஞ்சுபவை தான் நமக்கு.

இங்கே சந்தர்ப்பம் உள்ளது, அங்கே சந்தர்ப்பம் உள்ளது என்று சும்மா சொல்லலாம். எனது சொந்த அனுபவத்தில், கணக்கியல் துறையில் முயன்று திறக்காத கதவுகள், it துறை மூலமாக மட்டுமே திறந்தன. கின்னஸ் எனும் 22பில்லியன் நிறுவனத்துக்கு நான் போனபோது, பைனான்ஸ் பகுதியில் நான் மட்டுமே, வெள்ளை இல்லை. IT skills இல்லாவிடில், அந்த சந்தர்ப்பமும் கிடைத்திருக்காது.

இங்கே பிறந்த சிலர்  history, geography போன்ற degree வைத்துள்ளார்கள். ஏன் அவைகளை படித்தீர்கள் என்றால், ஒரு ஆசிரியராக வரமுடியும் என படித்ததாகவும் வேலை கிடைக்கவில்லை என்று சொன்னார்கள். சிலர் வேலை கிடைத்தும் விட்டு விட்டார்கள். 

அவர்களுக்கு, ஆரம்பத்தில் புரியாதது, இது வெள்ளைகளுக்கான வேலைகள். நம்மவர்களால், இங்கு பிறந்த பிள்ளைகளை சமாளிக்க முடியாது என்பதனை காலம் தாழ்த்தியே புரிந்து கொள்கிறார்கள். 

இங்கே care home வைத்து பலர், பொருளாதார ரீதியில் நொந்து போயுள்ளனர். நம்மவர்களது என்று தெரிந்ததும், inspection வருபவர்கள் நொட்டை பிடிக்கிறார்கள். அதுக்காக வெள்ளை முகாமை வைத்தால், லாபமே காலி.

ஈமெயில், தபால் துறையை முடக்குவதால், post office நடத்துவதை, வெள்ளைகள் எப்போதே விட்டு விட்டார்கள். அவைகளை எடுக்கும், இந்தியர்கள், நம்மவர் தலையில் கட்டி விட்டு ஓடுகிறார்கள். 

அதே போலவே தமிழ் கடை வியாபாரம். கொரோனவால், ஒன்லைன் வியாபாரங்கள் சில வந்துள்ளன. நல்ல வியாபாரம். இது IT தொழில் நுட்பம். இது தமிழ் கடைகளை மூட வைக்கலாம்.

நம்மவர் பிரச்சனையே, தொலை நோக்கு இல்லாமை. real  entrepreneurship இல்லாமை.

****

நான் IT வேலை பெறும் வரை, £4மில்லியன் turnover கொண்ட வெள்ளையர் நிறுவனத்தில் கணக்காளர் வேலை செய்த நமது குழுவின் ஒரு நண்பரே, தான் மட்டுமே ஒரு முறையான நிறுவனத்தில் வேலை செய்வதாக (pub chain)எங்களுக்கு பீலா விட்டுக் கொண்டிருந்தார்.

£600,000 turnover கொண்ட நிறுவனத்தில், சிங்கி அடித்த எனக்கு, மூன்று மாத IT skills பின்னர் வேலை செய்த வங்கியின் turnover £111பில்லியன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/2/2021 at 13:21, Knowthyself said:

Business vs. Entrepreneur

இந்த நான்கு வீடியோக்களையும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..Real entrepreneur வர விரும்புபவர்கள் அறிய வேண்டிய விஷயங்கள் உள்ளன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

//யூதர்களின் வரலாற்றில் சான்றிதழ் வாங்கி என்ன பயன்..//
//பிச்சல் புடுங்கல், புண்ணாக்கு வேலை ஊரிலேயே செய்திருக்கலாம்...//
//இம்மளவு நாளும் அதிலைதான் வேலை செய்த மாதிரி CVஐ மாத்திக்கொண்டோட வேண்டியது முக்கியம்...//
//சில பொய்களை சொல்வதன் மூலமே வேலை எடுக்க முடியும்..//

போன்ற கருத்துக்களைப்பார்த்தபின்பே இந்த திரியில் எனது கருத்தை எழுதினேனே தவிர நான் comfort zoneயும் risk takerயும் குழப்பவில்லை..
ஆனாலும் கடைசியாக வந்த உங்களது  பதிலைப்பார்த்த பின்பு எனது கருத்தை கூறமால் இருக்கமுடியவில்லை..

உங்களது கருத்திலிருந்து// தமிழர்களின் பொருளாதார, அரசியல் பலம்..//
பொருளாதார பலம் சரி, அரசியல் பலம் உள்ளதா?, அப்படியாயின் அந்த அரசியல் பலத்தை எப்படி அதிகரிக்க/ஊக்குவிக்கலாம்? எங்களவர்களின் அரசியல், மற்றைய இனங்களைப்பற்றிய எங்களது புரிந்துணர்வு/ அவர்களுடன் எங்கள் சமூகத்தின் இணைந்த செயற்பாடுகள், தொடர்பாற்றால் எவ்வாறு உள்ளது என்பது எல்லோருக்குமே தெரிந்த ஒரு விடயம்.. அவற்றையும் ஊக்குவித்து பொருளாதார பலத்தையும் அதிகரிக்காமல் சிங்களவர்களையோ மற்றையவர்களையோ வயிறு எரியவைத்து என்ன பிரயோசனம்?

மேலும், சில வேலைகள் வெள்ளைகளுக்கு மட்டும்தான் சரி வரும், வரலாறு, புவியியலை படித்து என்ன பிரயோசனம், இந்த தோற்றத்தை உருவாக்கியது யார்? 
வித்தியாசமான துறைகளில் பயணித்து தொழில்முனைவர்களாகவோ இல்லை அந்தந்த துறைகளில் பிரகாசிப்பவர்களை பற்றிய எங்களது சமூகத்தின் பார்வை எப்படியானது என்பது
தெரிவதாலேயே அதில் போவோரும் குறைவு, போனாலும் நிலைத்திருப்பதில்லை..எங்களது comfort zoneவிட்டு வெளியே வர தயங்குவதற்கும் இதுவே காரணம்.. 

மேலும் இந்த care home சரி சில franchiseம் சரி எங்களவர் பிரகாசிக்காமல் இருப்பதற்கு நீங்கள் கூறிய காரணங்களை விட எங்களைவிட்டு போகாத சில செயல்கள், பாராமரிப்பு, சந்தைப்படுத்தல், சட்டதிட்டங்களைப்பற்றிய சில அசட்டை, தொடர்பாடல் போன்றனவும் தாக்கத்தை கட்டாயம் ஏற்படுத்தி இருக்கும் தனியே அந்நாட்டு அதிகாரிகளின் செயல்கள் மாத்திரமல்ல.. 

Anyway for an argumentative sake, IT industryயில் தொழில்வாய்ப்புகள் அதிகரிக்கிறது.. சரி. ஆனால் ஒரு பிரதேசத்தில்(உதாரனத்திற்கு
வடக்கு கிழக்கு) உள்ள வளங்கள்/தேவைகள்/ வாய்ப்புகளுக்கு ஏற்ப துறையை தேர்ந்தெடுத்து தொழில்முனைவேராக வருவது சரியா.. ITயில்தான் வேலைகள் அதிகம், பணம் சம்பாதிக்கமுடியும் என்ற தோற்றத்தை நம்பி, இருப்பதையும் இழப்பதா? 
ஒரு கட்டத்தில், வழங்கல் அதிகமாகி அதற்கான தேவை இல்லாவிடில்  பொருளாதாரத்தை பாதிக்காதா?

ஆனாலும் உங்களது இந்த திரி பலரது சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்.. உங்களது முயற்சிக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.. 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நீங்களும், குழம்பி, இந்த திரியினால் பயன் பெறுபவர்களையும் குழப்புகிறீர்கள்.

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. இந்தியாவில் இருந்து ஆண்கள் அளவுக்கு, பெண்களும், தமது comfort zone இல் இருந்து வெளியே வந்து, IT துறைக்கு வருகின்றார்கள். அவர்கள், தனியாகவே அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா என்று வேலைக்காக பயணிக்கிறார்கள் என்பதை சொல்லிக்கொண்டே, உங்களுக்கு முழு விளக்கம் அளிக்க முனைந்தால், திரியின் நோக்கம் கடத்தப்படும் என்பதால், தவிர்க்கிறேன்.

இந்த திரி, யாருக்கு பிரயோசனமோ, அவர்களுக்கு மட்டுமே.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/2/2021 at 23:18, பிரபா சிதம்பரநாதன் said:

மிக்க நன்றி..
இந்த திரியில் எழுதப்பட்ட சில கருத்துக்களை பார்த்த பொழுது எனக்கும் இதே போன்ற உணர்வு ஏற்பட்டது..

அதனால்தான் சில வாரங்களுக்கு முன்பு யாழ் திரைகடலோடியில் “20 jobs that will start to disappear in the next 5 years” என்ற கட்டுரையையும் இணைத்தேன் அதில் எந்ததெந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் எந்த துறைகளில் காணாமல் போகும் என ஆராய்ந்து தகவல்களை தந்திருக்கிறார்கள்..எப்பொழுதுமே தொழில்நுட்ப,  மென் பொருள் சம்பந்தமான, இணையதள பாதுகாப்பு சம்பந்தமான வேலைகள் மட்டுமே அதிகரிக்கும் என்பதல்ல உண்மை. தொழிநுட்பத்தால் அதிகளவு சாதிக்கமுடியாத வேலைகளுக்கும் வாய்ப்புகள் உள்ளன. பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக எங்களுக்கு ஓவ்வாத சிந்தனைக்கு மாறவேண்டிய அவசியமில்லை.. 

அத்தோடு, சில துறைகளில் இந்த மாதிரி பிழையான தகமைகளைப்போட்டால் எப்படியும்  கண்டுபிடித்துவிடுவார்கள், நீண்ட நாட்களுக்கு நிலைக்கமுடியாது (எனது உயரதிகாரிக்கு இப்படி நடந்தது).. அவமானப்படும் சூழ்நிலைகளுக்கும் ஆளாகலாம்.

ஆகையால் காலத்திற்கு ஏற்ப/தேவையான துறைகளை தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கப்படவேண்டும் என்பதுமட்டுமல்ல எங்களுக்கு திருப்தியையும் வருமானத்தையும் தரக்கூடிய துறைகளை தேர்ந்தெடுத்து முன்னேறவேண்டும்.. நாங்கள் செய்யும் வேலை எங்களுக்கு மனத்திருப்தி, குடும்பம்/வாழ்க்கை மற்றும் வேலையில் சமநிலையை( work life balance, wellbeing) பேணக்கூடியதாக இருப்பது நன்று.. 

அத்தோடு எங்களவர்கள் சில துறைகளை கவனத்தில் எடுப்பதே இல்லை. அப்படி வளர்க்கப்படுகிறார்கள்.. double degree வைத்திருப்பார்கள் ஆனால் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. பெற்றோருக்காகவென்று விருப்பமில்லாத துறைகளில் படித்து காலத்தையும் வாழ்க்கையையும் விரயமாக்கியிருப்பார்கள்.. பணம் உழைக்கவேண்டும் என்பதற்காக விருப்பமில்லாத, இருக்கும் இடத்தில் அதற்கான தொழில்வாய்ப்புகள் அற்ற துறையில் இறங்கி வேலையின்மை, விரக்தியில் உழையவேண்டியதும் தேவையற்ற ஒன்று... உண்மையில் எதிர்காலத்தில் மிகவும் தேவைப்படும் சில வேலைகளில் கவனம் செலுத்தப்படவேண்டும்: நர்சிங், கவுன்சிலிங்(எங்களவர்கள் அதிகம் இல்லாத ஒரு துறை), கற்பித்தல், வயதானவர்களை பராமரிப்பு போன்றவை. மேலும், படைப்பாற்றல்(Creativity), சிக்கல் தீர்க்கும்(Problem Solving), பகுப்பாய்வு சிந்தனை(Analytical thinking) மற்றும் புதுமை(Innovations). இப்படி சில துறைகளுக்கான வேலைவாய்ப்புகள் ஓரளவிற்கு இருந்துகொண்டுதான் உள்ளது..

கெடுகுடி சொல் கேளாது.

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை.

களவில் சின்னன், பெருசு என்று வேறுபாடு இல்லை. குற்றம் செய்பவர்கள் எல்லாருமே தாம் செய்யும் குற்றங்களை நியாயப்படுத்த ஆயிரம் வியாக்கியானாங்கள் வைப்பார்கள்.

இவரைப்போல வர எத்தனை பேருக்கு ஆசை?

https://en.m.wikipedia.org/wiki/Raj_Rajaratnam

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

கெடுகுடி சொல் கேளாது.

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை.

களவில் சின்னன், பெருசு என்று வேறுபாடு இல்லை. குற்றம் செய்பவர்கள் எல்லாருமே தாம் செய்யும் குற்றங்களை நியாயப்படுத்த ஆயிரம் வியாக்கியானாங்கள் வைப்பார்கள்.

இவரைப்போல வர எத்தனை பேருக்கு ஆசை?

https://en.m.wikipedia.org/wiki/Raj_Rajaratnam

ஐயா மன்னிக்க வேணும்...

நீங்கள் என்ன உத்தியோகம் பார்கிறியல் எண்டு சொல்லேளுமே?

அதுக்கு பிறகு, நாங்க கெட்ட குடியோ, நீங்கள், பெருங்குடியோ எண்டு ஒரு முடிவுக்கு வரலாம். 🤦‍♂️

இலவசமா கொடுக்கிறது தானே எண்டு புத்திமதிகளை அடிச்சு விடலாம். 

***

ராஜ், ராஜரத்தினம் உள்ள போனது insider trading.  அது illegal ஆனாலும், அந்த வகையில் வந்த பணம் பறிமுகலாது எண்டு சட்டம் உள்ளது. ஆகவே அவர் உள்ளே போய் வந்தாலும், ஒரு billionaire. அவர் உள்ள போக வேண்டிவந்ததன் காரணம், புலிகளுக்கு, நிதிஉதவி அளித்தது.

அதேவேளை, ஏன் சசிகலா, ஸ்டாலின், மகிந்தா நினைவுக்கு வரவில்லை?

****

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

ராஜ், ராஜரத்தினம் உள்ள போனது insider trading.  

இன்சைட் ரேடிங் என்பது காங்கிரஸ் செனட் மட்டத்தில் நன்றாகவே நடக்கிறது.

ஒரு சட்டம் வரப்போகுது என்றவுடனேயே அதனைச் சார்ந்த ஸ்ரொக்குகளை விற்றோ வாங்கியோ பணத்தை சம்பாதிக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே UK யில் IT காண்ட்ராக்டர்களுக்கும் அரசுக்கும் இடையே ஒரு மோதல்.

நாம் ஒரு LTD கம்பெனி ஆரம்பித்து, அதுக்கு தான் எமது பணம் வரும். வருட இறுதியில், வரி கட்டிக்கொள்ளலாம்.

போனவருடம் ஏப்ரல் 6ம் திகதி முதல், காண்ட்ராட் வேலை செய்பவர்களுக்கு கொடுக்க முதல், நிரந்தர ஊழியர்கள் போல் வரியை கழித்து கொடுக்குமாறு அரசு சொல்லிவிட்டது.

அப்படியானால். ஹாலிடே pay, sick pay நிறுவனம் தரவேண்டும் என்று கோரிக்கை வைக்க, நிறுவனங்களோ... என்னது..... அது நிரந்தர ஊழியர்களுக்கு தான். உங்களுக்கு இல்லை என்ற.... அப்ப எதுக்கு கழிக்க நிக்குறீர்.... என்று மல்லுக்கட்ட... பிரச்சனை பாராளுமன்று வரை போய், கோரோனோ காரணமாக இந்த வருடம் ஏப்ரல் வரை தள்ளி வைத்துவிட்டார்கள்.

இந்த இடைபட்ட காலத்தில்,  காண்ட்ராட் வேலை செய்பவர்களுக்கு, linked in, வலைத்தளத்தில், நிரந்தர வேலை செய்வோர்,  இந்த வரிகளை ஒழுங்கா கொடுங்கோ என்று, இவர் நியாயத்தினை கதைப்போம் போல, புத்தி மதிகளை அள்ளி அடித்துக் கொண்டிருந்தார்கள். இது பொதுவாக பொறாமையாகவே கருதப்பட்டது.

நாங்கள், சட்டப்படி கம்பெனி திறந்து, சட்டப்படியே வரி செலுத்துகிறோம். சட்டத்தினை பாராளுமன்றத்தில் மாத்தி கொண்டு வாங்கோ... இருக்கிற சட்டப்படி, வரியை, ஒரு முதலாளி, கழித்தால், அவர் holiday pay, sick pay கொடுக்க வேண்டும். அதுவும் தரமுடியாது. வரியினையும் முதலே கழிப்போம் என்றால் நியாயமும் இல்லை. சட்டமும் இல்லை என்று காண்ட்ராட் வேலை செய்பவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

வெள்ளை காண்ட்ராட் வேலை காரர்கள் சங்கம் வேறு அமைத்து விட்டார்கள். கொரோனா தொடர்வதால், அரசு என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

அரசு சட்டத்தினை மாத்த முடியாது என்று தெரியும். சட்டத்தின் ஒரு சிறு நூலிலையில் புகுந்து விளையாட பார்க்கிறது. அது காண்ட்ராக்ட்டர்களுக்கும் தெரியும் என்பதால் இந்த மல்லுக்கட்டு.

அநேகமாக, நீதிமன்று போகும் என்றே நினைக்கிறேன்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ஈழப்பிரியன் said:

இன்சைட் ரேடிங் என்பது காங்கிரஸ் செனட் மட்டத்தில் நன்றாகவே நடக்கிறது.

ஒரு சட்டம் வரப்போகுது என்றவுடனேயே அதனைச் சார்ந்த ஸ்ரொக்குகளை விற்றோ வாங்கியோ பணத்தை சம்பாதிக்கிறார்கள்.

செனட் சட்டம் வருகிறது என்றால், அது பகிரங்கமாகவே இருக்கும் என்பதால், அது insider trading ல் வராது என்றே நினைக்கிறேன். மேலும் சட்டம் உருவாக்குவோர் தம்மை பாதுகாத்துக் கொள்வார்கள்.

அது வேறு கோணம்.... உண்மையில் insider trading என்பது, ஒரு நிறுவனத்தினுள், இந்த வருடம் நல்ல profit வரப்போகிறது, அல்லது loss வரப்போகிறது என்று உள்ளே வேலை செய்யும் கணக்காளர் முதல், CEO வரை தெரிந்து, அந்த செய்தியினை இரகசியமாக வெளியே சொல்லி, அதுக்கு அமைய, அந்த நிறுவன பங்குகளை, பங்கு சந்தைகளில் வாங்கவோ, விக்கவோ செய்தால், அதுவே insider trading.

அதாவது, உள்ளே (insider) இருப்பவர் கொடுக்கும் தகவல் அடிப்படையில், அவருக்கும்  லாபம் வரும் வகையில் செய்யும் பங்கு யாபாரம். அவர் தனக்கு எதுவும் வரவில்லை என்று நிரூபித்தால், இந்த வகை வழக்குகளை நிரூபிக்க முடியாது.

ராஜ் வழக்கில், போன் tapping மூலமே சிக்கினார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Nathamuni said:

ஆம். அர்ஜுன மகேந்திரன் போன்றவர்கள் செய்த பிணைமுறி மோசடியும் இவ்வ‌கையானதென நினக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, colomban said:

ஆம். அர்ஜுன மகேந்திரன் போன்றவர்கள் செய்த பிணைமுறி மோசடியும் இவ்வ‌கையானதென நினக்கின்றேன்.

இல்லை. அது மத்திய வங்கியின் பிணை முறிகளை, தனது மருமகனை மட்டுமே வாங்க வைத்தது. உதவியது ரவி மற்றும் ரணில். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

போனவருடம் ஏப்ரல் 6ம் திகதி முதல், காண்ட்ராட் வேலை செய்பவர்களுக்கு கொடுக்க முதல், நிரந்தர ஊழியர்கள் போல் வரியை கழித்து கொடுக்குமாறு அரசு சொல்லிவிட்டது.

அங்கை வாய் வைத்து இங்கு வாய் வைத்து கடிக்கினம் முன்பு இருக்கும் வீட்டின் மோர்ட்கேஜ் வட்டி மாத்திரம் என்றால் அதை சிலவில் காட்டலாம் ltd கொம்பனி வைத்திருப்பவர்கள் இப்ப அதையும் நிப்பாட்டி விட்டார்கள் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
    • வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
    • மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.