Jump to content

சசிகலாவிற்கு மீண்டும் மூச்சு திணறல் : அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சசிகலாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு- 1000 வாகனங்களில் தொண்டர்கள் பயணம் ||  Tamil News AMMK members big arrangement for Sasikala welcome

சசிகலாவிற்கு மீண்டும் மூச்சு திணறல் : அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவிற்கு மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் 7ஆம் திகதி சசிகலா விடுதலையாக இருப்பதாக கூறப்படும் நிலையில், அவருக்கு மூச்சுத்திணறல் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பெங்களூர் சிவாஜி நகர் போரிங் அரச மருத்துவமனையில் சிகிச்சைக்காக சசிகலா அனுமதிக்கப்பட உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

http://athavannews.com/சசிகலாவிற்கு-மீண்டும்-மூ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடிவு எல்லாம் மோடிக்குத்தான் வெளிச்சம்.. 😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சி.டி ஸ்கேனுக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சசிகலா - தொண்டர்களைப் பார்த்து உற்சாகம்!

வீல் சேரில் சசிகலா

வீல் சேரில் சசிகலா ( ANI )

மருத்துவமனைக்கு வெளியே அழைத்துவரப்பட்ட சசிகலா, வீல்சேரில் அமர்ந்தபடி ஆதரவாளர்களை நோக்கி உற்சாகமாகக் கையசைத்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சசிகலா, தனது தண்டனை காலம் முடிவடைந்து வரும் ஜனவரி 27-ம் தேதி விடுதலையாக இருக்கிறார். அவரின் விடுதலை தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் வல்லுநர்கள் கூறிவருகிறார்கள். சசிகலா விடுதலையாகி தமிழகம் வரும்போது அவருக்குப் பிரமாண்ட வரவேற்பு வழங்க அவரின் ஆதரவாளர்கள் தயாராகி வருகிறார்கள்.

சசிகலா
 
சசிகலா

சசிகலா சிறையில் இருக்கும்போது, சக்கரை நோய், தைராய்டு போன்ற உடல் பிரச்சனை இருந்துள்ளது. தனது உணவு விஷயத்தில் கடும் கட்டுப்பாட்டுடன் இருந்திருக்கிறார். சிறையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி, தோட்ட வேலைகள் மற்றும் யோகாசனம் போன்றவற்றைத் தொடர்ந்து செய்து வந்துள்ளார். அவரின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும் தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

விரைவில் விடுதலையாக உள்ள நிலையில், சிறையில் அவருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. கடந்த ஒரு வரமாகக் காய்ச்சல் இருந்துள்ள நிலையில், நேற்று மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. சிறை மருத்துவர்களின் சிகிச்சையைத் தொடர்ந்து சசிகலா, பெங்களூரு சிவாஜி சாலையில் உள்ள பவ்ரிங் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனைக்கு வீல் சேரில் அவரைக் கொண்டுசெல்லும் காட்சிகள் வெளியானது.

வீல் சேரில் சசிகலா
 
வீல் சேரில் சசிகலா ANI
சசிகலாவுக்கு ஏற்பட்டுள்ள திடீர் உடல்நலக்குறைவு சந்தேகத்தை ஏற்படுத்துவதாகக் கர்நாடக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கறிஞர் ராஜராஜன் புகார் மனுவை அளித்துள்ளார்.

சசிகலா அனுமதிக்கப்பட்டுள்ள பவ்ரிங் அரசு மருத்துவமனைக்கு அவரின் ஆதரவாளர்கள் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். விவேக், ஜெயானந்த், அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோரும் மருத்துவமனைக்குச் சென்றனர். சசிகலாவின் ஆதரவாளர்கள் அவரைத் தனியார் மருத்துவமனைக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்தனர்.

 

மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ``சசிகலாவிற்கு உரியச் சிகிச்சை வழங்கப்படுகிறது. ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவரை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க அனுமதி கேட்டிருக்கிறோம். அவர் நலமுடன் இருக்கிறார்; பயப்படத்தேவையில்லை" என்று தெரிவித்தார்.

பவ்ரிங் அரசு மருத்துவமனையில் உள்ள சி.டி ஸ்கேன் இயந்திரம் இயங்காததால், சசிகலாவை விக்டோரியா மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சி.டி ஸ்கேன் எடுக்கப்பட இருக்கிறது. இதற்காக மருத்துவமனைக்கு வெளியே அழைத்துவரப்பட்ட சசிகலா, வீல்சேரில் அமர்ந்தபடி ஆதரவாளர்களை நோக்கி உற்சாகமாகக் கையசைத்தார்.

டி.டி.வி தினகரன்
 
டி.டி.வி தினகரன்

சசிகலா உடல்நிலை குறித்து ப்வரிங் மருத்துவமனை இயக்குநர் மனோஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,``மூச்சுத்திணறல் காரணமாக அவருக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டது அதோடு மருந்துகளும் தரப்பட்டன. அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. ஐ.சி.யூ-வில் கண்காணிப்புக்காக மட்டுமே வைத்திருக்கிறோம். அவரின் ஆக்சிஜன் அளவு 96 இருக்கிறது. அவருக்குக் காய்ச்சல் குறைத்துள்ளது. தற்போது சசிகலாவால் நடக்க முடிகிறது. காலை உணவை எடுத்துக்கொண்டிருக்கிறார். தற்போது அவரின் உடல்நிலையில் எந்தப் பிரச்சனையும் இல்லை. தற்போது மூச்சுத் திணறல் எதுவும் இல்லை. அவருக்கு சி.டி ஸ்கேன் எடுக்க இருக்கிறோம். சி.டி ஸ்கேன் முடிவுகளை வைத்து அடுத்தகட்ட சிகிச்சை குறித்து முடிவு செய்யவுள்ளோம். அடுத்த இரண்டு மூன்று நாள்களுக்கு அவர் மருத்துவமனையில் இருப்பார்" என்று தெரிவித்தார்.

 

https://www.vikatan.com/news/politics/sasikala-shifted-to-another-hospital-for-ct-scan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, உடையார் said:

மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ``சசிகலாவிற்கு உரியச் சிகிச்சை வழங்கப்படுகிறது. ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவரை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க அனுமதி கேட்டிருக்கிறோம். அவர் நலமுடன் இருக்கிறார்; பயப்படத்தேவையில்லை" என்று தெரிவித்தார்

சின்னம்மா நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். காலை 2 இட்லி சாப்பிட்டார்!

சின்னம்மா தற்போது நடைபயிற்சியும் மேற்கொண்டார். 

அமெரிக்காவிலிருந்து ஸ்பெஷல் டாக்டர் வந்து கொண்டு இருக்கிறார்! இன்னும் 1 மணி நேரத்தில் வந்து விடுவார்!

சின்னம்மா நலமுடன் இருக்கிறார் மற்றும் இரு தினங்களில் வீடு திரும்புவார் என்று அமெரிக்க டாக்டர் கூறினார்! 

தியாகத் தலைவி சின்னம்மா சிங்கம் போன்றவர் கழகத்தை காத்து நிற்பார்... 

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எடப்பாடியார் டெல்லிக்கு எவ்வளவு விட்டுக்கொடுப்பு செய்கிறாரோ அவ்வளவுக்கு நாடகம் அரங்கேறும் சிலவேளை வீல்சேரில் போனவ ஆம்பிலன்சில்  பாடியா தான் வருவா விடுதலைக்கு முன்பே அவசரப்பட்டு  கர்ஜித்து விட்டா .தமிழக ஊடகங்கள் வெளியாரின் கைகளுக்கு  போய் ரொம்ப காலமாகி விட்டது அடுத்த midia manipuladora இவவை பற்றியதாக இருக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பெல்லாம் அடுத்த யென்மமாம்

இப்ப  உடனுக்குடனாம்😂

பெரியவர்கள் சொல்கிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

சசிகலாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு- 1000 வாகனங்களில் தொண்டர்கள் பயணம் ||  Tamil News AMMK members big arrangement for Sasikala welcome

சசிகலாவிற்கு மீண்டும் மூச்சு திணறல் : அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவிற்கு மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் 7ஆம் திகதி சசிகலா விடுதலையாக இருப்பதாக கூறப்படும் நிலையில், அவருக்கு மூச்சுத்திணறல் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பெங்களூர் சிவாஜி நகர் போரிங் அரச மருத்துவமனையில் சிகிச்சைக்காக சசிகலா அனுமதிக்கப்பட உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

http://athavannews.com/சசிகலாவிற்கு-மீண்டும்-மூ/

Update:

விக்டோரியா மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில் அவருக்கு சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதையடுத்து அவரின் உடல்நிலை குறித்த தகவலை மருத்துவமனை வெளியிட்டிருக்கிறது. அந்த ஸ்கேன் முடிவுகளில் அவருக்குத் தீவிர நுரையீரல் தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. அதோடு உடலின் சக்கரை அளவும் கூடியிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. சசிகலா தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார்.

மருத்துவமனை அறிக்கை
 
மருத்துவமனை அறிக்கை

நுரையீரலின் பாதிப்பு 16/25 என்ற அளவில் இருப்பதால், அவருக்குத் தீவிர சிகிச்சை தேவையென்றும் அதோடு, அவர் மருத்துவர்களின் தொடர் கணிக்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர் தற்போது தனி வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. சி.டி ஸ்கேனை அடுத்து செய்யப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா வரும் 27-ம் தேதி விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு என்ற தகவல் அவரது குடும்பத்தாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சசிகலா: `நுரையீரலில் தொற்று; தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிப்பு!’ - மருத்துவமனை அறிக்கை |Hospital announcement of severe infection in Sasikala's lungs (vikatan.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பிழம்பு said:

Update:

விக்டோரியா மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில் அவருக்கு சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதையடுத்து அவரின் உடல்நிலை குறித்த தகவலை மருத்துவமனை வெளியிட்டிருக்கிறது. அந்த ஸ்கேன் முடிவுகளில் அவருக்குத் தீவிர நுரையீரல் தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. அதோடு உடலின் சக்கரை அளவும் கூடியிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. சசிகலா தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார்.

மருத்துவமனை அறிக்கை
 
மருத்துவமனை அறிக்கை

நுரையீரலின் பாதிப்பு 16/25 என்ற அளவில் இருப்பதால், அவருக்குத் தீவிர சிகிச்சை தேவையென்றும் அதோடு, அவர் மருத்துவர்களின் தொடர் கணிக்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர் தற்போது தனி வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. சி.டி ஸ்கேனை அடுத்து செய்யப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா வரும் 27-ம் தேதி விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு என்ற தகவல் அவரது குடும்பத்தாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சசிகலா: `நுரையீரலில் தொற்று; தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிப்பு!’ - மருத்துவமனை அறிக்கை |Hospital announcement of severe infection in Sasikala's lungs (vikatan.com)

இந்த ground glass appearance என்பது முக்கியமான அறிகுறி. இரண்டு பக்க நுரையீரலிலும் அழற்சி வந்து விட்டது. கவனிப்பைப் பொறுத்து முடிவு இருக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ``சசிகலாவிற்கு உரியச் சிகிச்சை வழங்கப்படுகிறது. ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவரை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க அனுமதி கேட்டிருக்கிறோம்.

சொந்தக்காரர்களின்  கட்டுப்பாட்டில் இல்லை எதுவும் நடக்கலாம் 😃

5 hours ago, விசுகு said:

முன்பெல்லாம் அடுத்த யென்மமாம்

இப்ப  உடனுக்குடனாம்😂

பெரியவர்கள் சொல்கிறார்கள்

ராஜீவ்  காந்தி கொலைவழக்கு 7 பேரின் முடிவும் தமிழக ஆளுநரிடம் முடிவு எடுக்கும் அதிகாரம் சென்றுள்ளது தேர்தல் வரும் நேரம் பிஜேபி இவர்களின் விடயத்தில் சாதகமாக நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம் குறைந்த பட்சம் ஓர் இருவராவது வெளியில் வர சந்தர்ப்பம் உருவாகியுள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தொற்று தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலா!

சொத்துக்குவிப்பு  வழக்கில் தண்டனைக்குள்ளாகி பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வருகிற 27-ஆம் தேதி அவர் விடுதலையாவார் என்று கூறப்பட்ட நிலையில்  புதன் கிழமை அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முழு உடற் பரிசோதனை செய்ய மருத்துவமனை அனுமதித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சி.டி ஸ்கேன் செய்ய முடிவெடுத்து பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள அவரோடு சசிகலாவின் மருத்துவர்கள் இருவர் சென்றுள்ளார்கள்.

இந்நிலையில், அவரைக் காண பெங்களூரு மருத்துவமனையில் அவரது உறவினர்களும் தொண்டர்களும் திரண்டனர். ஸ்கேன் செய்ய அழைத்துச்  சென்றார்கள் அங்கு அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடந்தது. அதில் அவருக்கு நிமோனியா தொற்று இருப்பது உறுதியானது. நிமோனியா பாதிப்பு  நுரையீரலை பாதித்திருப்பதால் அது கொரோனா தொற்றாகவும் உருவாகி உள்ளது.

ரத்த அழுத்தம், சர்க்கரை குறைபாட்டுடன் நிமோனியா தொற்றும் இருப்பதால் அவரை பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளார்கள். ஜனவரி 27- ஆம்தேதி விடுதலை ஆக இருந்த சசிகலாவின் உடல் நிலை தொடர்பாக வெளிவரும் செய்திகள் தமிழக அரசியலை சூடாக்கி வருகிறது.
 

 

https://inioru.com/சசிகலா-சிகிச்சை-நாடகமா/

Link to comment
Share on other sites

16 hours ago, விசுகு said:

முன்பெல்லாம் அடுத்த யென்மமாம்

இப்ப  உடனுக்குடனாம்😂

பெரியவர்கள் சொல்கிறார்கள்

எந்தப்  பெரியவர்கள் சொன்னாலும்  இந்த கூற்று அறிவு பூர்வமானதல்ல. இந்த கூற்று தனக்கு பிடிக்காதவரின் அழிவை ரசிப்பதற்காக எவரோ எப்பவோ உருவாக்கிய கீழ்தரமான கருத்து. சடுதியான நோய்கள் மனிதரின் குணநலன்களுக்கு அப்பாற்பட்டவை. நல்லவர்கள் கெட்டவர்கள் எனபதற்கு அப்பால் வாழ்வில் துரதிஷரம் அனைவருக்கும் பொதுவானது. இதற்கு உதாரணங்கள் பல உண்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, tulpen said:

எந்தப்  பெரியவர்கள் சொன்னாலும்  இந்த கூற்று அறிவு பூர்வமானதல்ல. இந்த கூற்று தனக்கு பிடிக்காதவரின் அழிவை ரசிப்பதற்காக எவரோ எப்பவோ உருவாக்கிய கீழ்தரமான கருத்து. சடுதியான நோய்கள் மனிதரின் குணநலன்களுக்கு அப்பாற்பட்டவை. நல்லவர்கள் கெட்டவர்கள் எனபதற்கு அப்பால் வாழ்வில் துரதிஷரம் அனைவருக்கும் பொதுவானது. இதற்கு உதாரணங்கள் பல உண்டு. 

 

சரிங்க மேல்த்தரமானவரே??

வாழ்வில் துரதிஷரம் என்ற  ஒன்று உள்ளது  என்பதை  நம்புவதால் இதுவும்  கீழ்த்தரமானது தான்

அப்படியானால்  நீங்க???

அதை  நான்  சொல்லமாட்டன்🤣

(கவனத்துக்கு : மீண்டும்  சிரிப்புக்குறி)

Link to comment
Share on other sites

1 minute ago, விசுகு said:

 

சரிங்க மேல்த்தரமானவரே??

வாழ்வில் துரதிஷரம் என்ற  ஒன்று உள்ளது  என்பதை  நம்புவதால் இதுவும்  கீழ்த்தரமானது தான்

அப்படியானால்  நீங்க???

அதை  நான்  சொல்லமாட்டன்🤣

(கவனத்துக்கு : மீண்டும்  சிரிப்புக்குறி)

விசுகு, நான் கூறியது கருத்தை மட்டும்தான். தனி மனிதர்களை அல்ல. மனிதரின் வாழ்வில் வரும் கவலையான விடயங்களை துரஷ்ரம் என்று கடந்து செல்வது மனித வழமை. இதில் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று வித்தியாசம் இல்லை. அதை தான் குறிப்பிட்டேன்.  நீங்களே ஜோக்  சொல்லி நீங்களே  சிரிப்பது உங்கள் உரிமை என்றாலும் நான் உங்களையோ வேறு ஒரு தனி மனிதர்களேயோ தரம் பிரிக்கவில்லை என்பது தான் உண்மை. கருத்துக்களை  தவிர நான் யாரையும் தனிப்பட விமர்சிப்பதில்லை என்பது உங்களுக்கு தெரிந்தாலும் அதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, விசுகு said:

முன்பெல்லாம் அடுத்த யென்மமாம்

இப்ப  உடனுக்குடனாம்😂

பெரியவர்கள் சொல்கிறார்கள்

 

53 minutes ago, tulpen said:

ந்தப்  பெரியவர்கள் சொன்னாலும்  இந்த கூற்று அறிவு பூர்வமானதல்ல. இந்த கூற்று தனக்கு பிடிக்காதவரின் அழிவை ரசிப்பதற்காக எவரோ எப்பவோ உருவாக்கிய கீழ்தரமான கருத்து. சடுதியான நோய்கள் மனிதரின் குணநலன்களுக்கு அப்பாற்பட்டவை. நல்லவர்கள் கெட்டவர்கள் எனபதற்கு அப்பால் வாழ்வில் துரதிஷரம் அனைவருக்கும் பொதுவானது. இதற்கு உதாரணங்கள் பல உண்டு. 

 

20 minutes ago, tulpen said:

விசுகு, நான் கூறியது கருத்தை மட்டும்தான். தனி மனிதர்களை அல்ல. மனிதரின் வாழ்வில் வரும் கவலையான விடயங்களை துரஷ்ரம் என்று கடந்து செல்வது மனித வழமை. இதில் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று வித்தியாசம் இல்லை. அதை தான் குறிப்பிட்டேன்.  நீங்களே ஜோக்  சொல்லி நீங்களே  சிரிப்பது உங்கள் உரிமை என்றாலும் நான் உங்களையோ வேறு ஒரு தனி மனிதர்களேயோ தரம் பிரிக்கவில்லை என்பது தான் உண்மை. கருத்துக்களை  தவிர நான் யாரையும் தனிப்பட விமர்சிப்பதில்லை என்பது உங்களுக்கு தெரிந்தாலும் அதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.

எந்தப்  பெரியவர்கள் சொன்னாலும்  இந்த கூற்று அறிவு பூர்வமானதல்ல. இந்த கூற்று தனக்கு பிடிக்காதவரின் அழிவை ரசிப்பதற்காக எவரோ எப்பவோ உருவாக்கிய கீழ்தரமான கருத்து.

(இதில் நான்  ஒன்றும்  சொல்வதற்கில்லை🤣)

Link to comment
Share on other sites

2 minutes ago, விசுகு said:

 

 

எந்தப்  பெரியவர்கள் சொன்னாலும்  இந்த கூற்று அறிவு பூர்வமானதல்ல. இந்த கூற்று தனக்கு பிடிக்காதவரின் அழிவை ரசிப்பதற்காக எவரோ எப்பவோ உருவாக்கிய கீழ்தரமான கருத்து.

(இதில் நான்  ஒன்றும்  சொல்வதற்கில்லை🤣)

நீங்கள்தான் பெரியவர்கள் கூறினார்கள் என்று கூறினீர்கள். நான் அல்ல.  அந்த பெரியவர்கள் கூறினாலும் கருத்து தவறு என்பதை தான் நான் கூறினேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

நீங்கள்தான் பெரியவர்கள் கூறினார்கள் என்று கூறினீர்கள். நான் அல்ல.  அந்த பெரியவர்கள் கூறினாலும் கருத்து தவறு என்பதை தான் நான் கூறினேன். 

நீங்கள் மனிதர்கள்  என்கிறீர்கள்

நான் பெரியவர்கள்  அல்லது  முன்னோர்கள்  என்கிறேன்

இதில் எந்த வித்தியாசமும்  எனக்குத்தெரியவில்லை

நேரத்தை  மண்ணாக்குவதை  தவிர...

Link to comment
Share on other sites

18 hours ago, விசுகு said:

முன்பெல்லாம் அடுத்த யென்மமாம்

இப்ப  உடனுக்குடனாம்😂

பெரியவர்கள் சொல்கிறார்கள்

உங்கள் பின்னூட்டம் பாவத்தைக் கோடிட்டுக் காட்டினாலும் அது காதலர்களையும் விட்டுவைக்கவில்லை.

திருவள்ளுவரும் சொல்கிறார்:- 

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.

பொருள்
``இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம்'' என்று நான் சொன்னவுடன் ``அப்படியானால் மறு பிறப்பு என ஒன்று உண்டோ? அப்போது நம்மிடையே பிரிவு ஏற்படுமெனக் கூறுகிறாயா?'' எனக் கேட்டு கண்கலங்கினாள் காதலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சிறையில் இருந்து தோட்ட வேலை செய்தாலும் நடைபயிற்சி செய்திருக்கிறார். அது போதாது என்று யோகாசனம், உடற்பயிற்சி,  கடும் உணவு கட்டுப்பாடு என்று இருந்தவரையே கொரோனா விடவில்லை. வாரத்தில் ஒரு தடவை இரண்டு தடவை நடத்துவிட்டு நடைபயிற்ச்சி செய்கிறேன் என்கின்ற நம்மவர்களும் அவதானமாக இருக்க வேண்டும் 😟

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கொரோனா உறுதியானதால் குறைந்தபட்சம் ஒருவாரத்திற்கும் மேலாக சசிகலா மருத்துவமனையில் இருப்பார்

கொரோனா உறுதியானதால் குறைந்தபட்சம் ஒருவாரத்திற்கும் மேலாக சசிகலா மருத்துவமனையில் இருப்பார்
பெங்களூரு: 
 
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு சசிகலா உள்பட 3 பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
 
இதற்கிடையே சசிகலா வருகிற 27-ந் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
 
இந்த நிலையில் சசிகலாவுக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல், மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட அவருக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
அங்கு வரும்போது அவருக்கு காய்ச்சல் இருந்தது. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 79 சதவீதமாக இருந்தது. உடனே அவருக்கு ஆக்சிஜன் செலுத்தி சிகிச்சை அளித்தனர். காய்ச்சலை கட்டுப்படுத்தவும் மருந்துகள் வழங்கப்பட்டன. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
 
அதைத்தொடர்ந்து சசிகலாவின் உறவினர்கள் டி.டி.வி.தினகரன், விவேக், டாக்டர் வெங்கடேஷ், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் உள்பட அ.ம.மு.க.வினர் சிலர் அந்த மருத்துவமனைக்கு வந்திருந்தனர். டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர், சசிகலாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுடன் ஆலோசனை செய்தனர். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்கள் விளக்கி கூறினர்.
 
அதன் பிறகு மதியம் 2 மணியளவில் சி.டி.ஸ்கேன் பரிசோதனைக்காக சசிகலா, ஆம்புலன்சில் போலீஸ் பாதுகாப்புடன் விக்டோரியா அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை சக்கர நாற்காலியில் வைத்து ஆஸ்பத்திரியின் உள்ளே இருந்து ஆம்புலன்சுக்கு அழைத்து வந்தனர்.
 
அப்போது கட்சியினரை பார்த்த அவர் தனது வலது கையை அசைத்து, தான் நலமுடன் இருப்பதை உணர்த்தினார். அதன் பிறகு விக்டோரியா ஆஸ்பத்திரியில் சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.
 
சசிகலா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதையொட்டி விக்டோரியா ஆஸ்பத்திரி முன்பு அதிக எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
 
டி.டி.வி.தினகரன் மட்டும் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்டார். அவர் சசிகலாவை சந்தித்து நலம் விசாரித்து அவரை அருகில் இருந்து கவனித்துக் கொண்டார். மற்றவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை.
 
இந்த நிலையில் சசிகலாவின் உடல்நிலை குறித்து விக்டோரியா அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் நேற்று மாலை மருத்துவ அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
 
பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 63 வயதாகும் சசிகலாவுக்கு 2-வது வகை சர்க்கரை, ரத்த அழுத்தம், தைராய்டு போன்றவை இருப்பது தெரியவந்தது. அவருக்கு நீண்டகால நுரையீரல் பாதிப்பும் (எஸ்.ஏ.ஆர்.ஐ.) இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
 
அவருக்கு பவுரிங் மருத்துவமனையில் ஆன்டிபயாடிக் மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இன்சுலின், ஹெபரின், ஸ்டெராய்டு போன்ற மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. பவுரிங் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பரிந்துரை அடிப்படையில் சசிகலா இன்று (அதாவது நேற்று) மதியம் 2.30 மணிக்கு விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார்.
 
அவருக்கு சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு நுரையீரலில் தீவிர தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. சசிகலா தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
 
பவுரிங் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருக்கிறதா என்று அறிய ஆன்டிஜென் விரைவு பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனை முடிவில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று இல்லை என்று வந்தது.
 
இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு அவருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதற்கான முடிவு நேற்று இரவு வெளியானது. அதில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து விக்டோரிய ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 
பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சசிகலாவுக்கு தற்போது காய்ச்சல் இல்லை. வழக்கமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு குறைந்தது 10 நாட்கள் சிகிச்சை அளிப்போம். கொரோனாவோடு கடும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்- மருத்துவமனை தகவல்

பெங்களூரு:

மூச்சுத்திணறலால் பெங்களூரு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி ஆனது. அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

 
இந்நிலையில் விக்டோரியா அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பெங்களூரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு 2-வது வகை சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டது. ரத்த அழுத்தம், தைராய்டு போன்ற பிரச்சினைகளுடன் நீண்ட கால நுரையீரல் பாதிப்பும் உள்ளது.

அவருக்கு இன்சுலின், ஹெபரின் ஸ்டெராய்டு போன்ற மருந்துகளும் வழங்கப்பட்டு இருந்தன. பவுரிங் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பரிந்துரையின் பேரில் விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு நேற்று அழைத்து வரப்பட்டு இருந்தார்.

அவருக்கு சி.டி. ஸ்கேன் பரிசோதனை செய்ததில் நுரையீரலில் தொற்று இருப்பதும் தெரிய வந்தது.

இந்த நிலையில் நள்ளிரவில் அவருக்கு காய்ச்சல் அதிகமானதால் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கடுமையான நிமோனியா காய்ச்சல் அவருக்கு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. நுரையீரலிலும் தீவிர தொற்று உள்ளது.

இதனால் கொரோனா வார்டில் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

https://www.maalaimalar.com/news/topnews/2021/01/22090954/2277956/Tamil-News-Sasikala-affected-pneumonia-fever-hospital.vpf

 

 

Link to comment
Share on other sites

சிறையில் இருந்த சசிகலாவை எப்படிக் கொரோனா சென்று கட்டியணைத்தது....?? சிறையையும் உடைத்து உள்ளே புகும் ஆற்றல் கொரோனாவுக்கு உண்டென்று இதுவரை உலக நாடுகளிலிருந்தும் எந்த டாக்டர்களும் தெரிவிக்கவில்லையே...!!!🤔 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Paanch said:

சிறையில் இருந்த சசிகலாவை எப்படிக் கொரோனா சென்று கட்டியணைத்தது....?? சிறையையும் உடைத்து உள்ளே புகும் ஆற்றல் கொரோனாவுக்கு உண்டென்று இதுவரை உலக நாடுகளிலிருந்தும் எந்த டாக்டர்களும் தெரிவிக்கவில்லையே...!!!🤔 

சிறையையும் உடைத்து சசிகலாவுக்கு மட்டும் உள்ளே புகும் ஆற்றல் கொரோனாவுக்கு உண்டென்று......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சசிகலாவுக்கு தீவிர நிமோனியா திட்டமிட்ட சதி சீமான் ஆவேசம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சசிகலாவைத் தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று || Tamil News, Ilavarasi  also affected by Covid19

சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி!

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகளாக சிறைதண்டனை பெற்று வரும் இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

சசிகலாவுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சசிகலாவுடன் கூடவே இருந்த இளவரசிக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது அதற்கான முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இளவரசிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இளவரசிக்கு நடத்தப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் சோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/சசிகலாவை-தொடர்ந்து-இளவரச/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தமிழ் சிறி said:

சசிகலாவுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சசிகலாவுடன் கூடவே இருந்த இளவரசிக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சந்தேகம் வரக்கூடாது என்டு கூட ஒருவருக்கு "கேற்-பாஸ்" போடபட்டுள்ளது போல் தெரிகிறது .. 😢

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.