Jump to content

யாழ்.தீவகத்தில் மேலும் பல ஏக்கர் மக்களின் காணிகளை இராணுவ பயன்பாட்டிற்காக சுவீகரிக்க அரசு இரகசிய திட்டம் - பலருடைய காணி பறிபோகும் அபாயம்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.தீவகத்தில் மேலும் பல ஏக்கர் மக்களின் காணிகளை இராணுவ பயன்பாட்டிற்காக சுவீகரிக்க அரசு இரகசிய திட்டம் - பலருடைய காணி பறிபோகும் அபாயம்.!

IMG20210118104041_1080.jpg

யாழ்.தீவகத்தில் சுமார் 101 ஏக்கர் தனியார் காணிகள் அரச படைகளின் வசம் உள்ள நிலையில் மேலும் 30 ஏக்கர் நிலத்தை அபகரிக்க தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.

தீவகத்தில் நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்துறை, காரைநகர் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 111.37 ஏக்கர் தனியார் காணிகள் அரச படைகள் வசம் உள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மேலும் 30 ஏக்கருக்கு மேல் பாதுகாப்பு பாதுகாப்புப் படைககளின் பயன்பாட்டிற்காக சுவீகரிக்கத் திட்டங்கள் வகுக்கப்படுவதாக அறியக் கிடைத்தது. நெடுந்தீவு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தனி நபர்களுக்கு சொந்தமான 10 பேருடைய 21.91 ஏக்கரும், வேலணை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 73 பேருடைய 54.59 ஏக்கர் பொலிஸ் மற்றும் கடற்படையினரிடம் காணப்படுகிறது.

அதே வேளை ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 6 பேருடைய 2.37 ஏக்கர் காணிகளும் காரைநகர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 22 பேருடைய 32.50 ஏக்கர் காணிகளுமாக மொத்தம் 108 பொது மக்களின் காணிகள் கடற்படை மற்றும் பொலிசாரிடம் காணப்படுகிறது.

இவ்வாறான நிலையில் குறித்த தீவகப் பகுதிகளில் தனியார் காணிகளை அரச படைகள் தமது தேவைக்காக சுவீகரித்துள்ள நிலையில் மேலும் தனியார்களுடைய வளம் கொண்ட காணிகளை பகுதி பகுதியாக அரச படைகளின் தேவைகளுக்காக சுவீகரிக்கப்படுகிறதா.? என்ற சந்தேகங்கள் எழுகின்றன.

தீவகத்தில் உள்ள காஞ்ச தேவ மற்றும் வெலிசுமன கடற்படை முகாம்களின் தேவைக்காக மங்கும்பானில் 15 ஏக்கரும், புங்குடுதீவில் 14 ஏக்கர்களையும் சுவீகரிக்கத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.

இதன் ஓர் அங்கமாக நேற்று திங்கட்கிழமை மங்கும்பான் பகுதியில் உள்ள 18 ஏக்கர் தனியார் காணிகளை நில அளவை திணைக்களம் அளவிட முயன்றபோது மக்கள் எதிர்ப்பினால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆகவே வளம்மிக்க தமிழர் பகுதிகளில் தொடரும் நில ஆக்கிரமிப்புக்களை தடுப்பதற்கு தமிழ் அரசியல் தலைமைகள் ஓரணியில் நின்று குரல் கொடுப்பது காலத்தின் தேவையாகும்.

https://jaffnazone.com/news/22827

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் விருப்பத்திற்கு மாறாக, எங்கள் ஒப்புதல் பெறாமல் எல்லாம் நடக்கிறது..! யாழ்.மண்கும்பான் மக்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு..

WhatsApp-Image-2021-01-25-at-00-00-27_10

யாழ்.தீவகம் வேலணை - மண்கும்பான் ஜே.11 கிராமசேவகர் பிரிவில் மக்களுக்கு சொந்தமான குடியிருப்பு மற்றும் தோட்ட காணிகள் உள்ளடங்கலாக 15 ஏக்கர் காணி சுவீகரிக்கப்படுவதை கண்டித்து மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கடற்படையின் ஆக்கிரமிப்பில் உள்ள குறித்த காணிகளில் உள்ள “காஞ்சதேவ” கடற்படைமுகாமின் தேவைக்காக நிரந்தரமாக சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. இதனை எதிர்த்தே காணி உரிமையாளர்கள் முறைப்பாடு பதிவு செய்திருக்கின்றனர்.

தமது விருப்பத்திற்கு மாறாக காணியை சுவீகரிக்க முயற்சிக்கப்படுவதாகவும், தமது காணிகளை தம்மிடம் மீளவும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். எனவும் காணி உரிமையாளர்கள் தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டிருக்கின்றனர்.

https://jaffnazone.com/news/22916

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.