Jump to content

ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் உடல்கள் மீட்பு - இலங்கை கடற்படையை கண்டித்து போராட்டம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் உடல்கள் மீட்பு - இலங்கை கடற்படையை கண்டித்து போராட்டம்

ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் உடல்கள் மீட்பு - இலங்கை கடற்படையை கண்டித்து போராட்டம்
 
கடந்த 2011-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்திய-இலங்கை அணிகள் மோதின. அதில் இந்திய அணி வெற்றி பெற்று உலகக்கோப்பையை கைப்பற்றியது. இது இலங்கை கடற்படையினர் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியதாகவும், அதன் காரணமாக ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு படகு மற்றும் அதில் இருந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் மூழ்கடித்து கொன்றதும் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவம் நடந்து சரியாக 10 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் அதே போன்ற ஒரு கொடூர சம்பவத்தை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் அரங்கேற்றி இருப்பதாக ராமேசுவரம் மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
 
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து ஆரோக்கியதாஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மெசியான் (வயது 28), உச்சிப்புளி அருகே வட்டவளம் பகுதியை சேர்ந்த நாகராஜ் (52), மண்டபம் அகதிகள் முகாமை சேர்ந்த சாம்சன் (25), திருப்புல்லாணியைச் சேர்ந்த செந்தில்குமார் (32) ஆகிய 4 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் கடந்த 18-ந் தேதி இரவில் நடுக்கடலில் மீன் பிடித்தபோது, ரோந்து வந்த இலங்கை கடற்படை கப்பல் அந்த மீனவர்களின் விசைப்படகின் மீது வேகமாக மோதியதாகவும், அதில் படகு மூழ்கடிக்கப்பட்டதாகவும் பரபரப்பு தகவல் வெளியானது. 
 
மேலும் அந்த படகில் இருந்த 4 மீனவர்களும் வாக்கி-டாக்கி மூலம் அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களிடம் தங்களை காப்பாற்றுமாறு உதவி கேட்டதாகவும், ஆனால் இலங்கை கடற்படை கப்பலை அந்த பகுதியில் நிறுத்தி இருந்ததால் யாரும் சென்று உதவ முடியாத நிலை ஏற்பட்டதாகவும், எனவே அந்த 4 மீனவர்களும் கடலில் மூழ்கிவிட்டதாகவும் திடுக்கிடும் தகவல்களும் அம்பலமானது.
 
இதற்கிடையே கடலில் மூழ்கிய 4 பேரையும் இந்திய கடலோர காவல் படையினர் 2 கப்பல்கள் மூலமாகவும், மீனவர்கள் படகுகளில் சென்றும் தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு கடலில் மிதந்து கொண்டிருந்த 2 உடல்களை இலங்கை கடற்படையினர் கைப்பற்றி யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த 2 உடல்களும் இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதி மூழ்கடிக்கப்பட்ட விசைப்படகில் இருந்தவர்கள் என்பதும், அதில் ஒருவர் ராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மெசியான் என்பதும், மற்றொருவர் திருப்புல்லாணியை சேர்ந்த செந்தில்குமார் என்பதும் தெரியவந்தது. மற்ற 2 பேர் கதி என்ன? என்பது தெரியாமல் இருந்தது.
 
இந்தநிலையில் நேற்று சாம்சன், நாகராஜ் ஆகியோரது உடல்களும் இலங்கை கடல் பகுதியில் மிதந்தன. அந்த 2 உடல்களையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றி யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கப்பலை மோதவிட்டு படகை மூழ்கடித்ததுடன், 4 மீனவர்களை கடலில் மூழ்க வைத்து இலங்கை கடற்படையினரே கொலை செய்துள்ளதாக ராமேசுவரம் மீனவர்கள் பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளனர். இந்த சம்பவம் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படு்த்தி உள்ளது.
 
4 மீனவர்கள் சாவுக்கு காரணமான இலங்கை கடற்படை மீது கொலை வழக்குப்பதிவு செய்து நீதி விசாரணை நடத்த வேண்டும், 4 பேரின் உடல்களையும் உடனடியாக இந்தியா கொண்டு வந்து இந்திய டாக்டர்கள் மூலம் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும், பாரம்பரிய கடல் பகுதியில் இலங்கை கடற்படை பிரச்சினை இல்லாமல் தமிழக மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ராமேசுவரம் தங்கச்சிமடம் வலசை பஸ் நிறுத்தம் எதிரில் அனைத்து மீனவர்கள் சார்பாக கண்டன போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 
படகு மூழ்கடிக்கப்பட்டதில் பலியான மீனவர் மெசியாவின் தாய் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடைபெற்ற இடத்தின் முன்பு கதறி அழுதபடி நின்றனர். 4 மீனவர்களின் இறப்புக்கு நீதி கேட்டு நாளை (சனிக்கிழமை) கச்சத்தீவுக்கு பயணம் செய்யப்போவதாகவும், நாளை மறுநாள் சாலை மறியல் செய்ய போவதாகவும் மீனவர்கள் அறிவித்து உள்ளனர். இந்த நிலையில், 4 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் அடித்து கொன்று விட்டதாக கூறி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4 மீனவர் கொலை – இலங்கைத் தூதுவரை அழைத்து கடும் கண்டனத்தை வெளியிட்ட இந்தியா

china-srilanka-india.jpg
 43 Views

இலங்கைக் கடற்பரப்பை ஒட்டி தமிழக மீனவர்கள் நால்வர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இலங்கையிடம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றது இந்தியா. புதுடில்லியில் இந்தியாவிற்கான இலங்கைப் பதில் தூதுவரை அழைத்து இந்திய வெளிவிவகார அமைச்சு கடும் கண்டனத்தை தெரிவித்த அதேசமயம் இலங்கையில் உள்ள இந்தியத் தூதுவர் இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு தமது அரசின் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்களின் ட்ரோலர் படகும் இலங்கை கடற்படையினரின் டோராவும் மோதியதில் மூன்று இந்திய மீன்வர்கள் மற்றும் அவர்களுடன் தொழில் செய்த இலங்கை அகதி மீனவர் ஒருவர் என நால்வர் கொல்லப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கை வெளிவிவகார அமைச்சரிடம் இந்த சம்பவம் குறித்து கடும்எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். புதுடில்லிக்கான இலங்கையின் பதில் தூதுவரும் புதுடில்லியில் வெளிவிவகார அமைச்சின் சவுத் புளொக்குக்கு அழைக்கப்பட்டார். அவரிடமும் இச்சம்பவத்துக்குக்கடும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேநேரம் “உயிரிழப்புகள் தொடர்பில் எங்கள் வேதனயை வெளியிட்டுள்ளோம். மீனவர்கள் விவகாரத்தை மனிதாபிமான முறையில் கையாளவேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். இரு நாடுகளிற்கும் இடையில் இந்த விவகாரம் குறித்து காணப்படும் புரிந்துணர்வை பின்பற்ற வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம் பெறுவதைத் தவிர்ப்பதற்கான தீவிர முயற்சிகளை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம்” என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

https://www.ilakku.org/?p=39999

மீனவர் உயிர் பறிக்கும் செயலை ஏற்க முடியாது – 4 மீனவர் மரணத்துக்கு சுமந்திரன் கண்டனம்

sumanthiran-600.png
 33 Views

இலங்கைக் கடற்படையினரின் டோறா மோதியதால் உயிரிழந்த இந்திய மீனவர்கள் நால்வரினதும் உயிரிழப்புக்கும் வன்மையான கண்டனத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கைக் கடல் எல்லைப்பரப்பில் கடந்த திங்கட்கிழமை இரவு ஒரு ட்ரோலர் படகில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் உயிரிழந்தமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டும் மீனவர்களை எல்லையிலேயே தடுக்கு மாறும், ஊடுருவும் மீனவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்து மாறும் நாம் தொடர்ந்தும் கோரும் அதேநேரம் வாழ்வியலை நாடும் அப்பாவி மீனவர்களின் உயிர் பறிக்கும் செயலை ஏற்கமாட்டோம் என்பதையும் தெரிவித்துக்கொள் கின்றோம்.

கடந்த 18ஆம் திகதி இரவு காணாமல்போன இந்திய மீனவர்களின் படகுடன் இலங்கைக் கடற்படையினரின் டோறா மோதியிருக்கலாம் என்ற சந்தேகமும், காணாமல்போன இந்திய மீனவர் படகில் இருந்த மீனவர்கள் நால்வருக்கும் என்ன நடந்தது என்ற அச்சமும் 18ஆம் திகதி இரவு 11 மணி முதலே நிலவிய வேளை நேற்று மாலை இருவரினது சடலங்களும், இன்று மற்றைய இருவரினது சடலங்களும் இலங்கைக் கடற் படையினரால் மீட்கப்பட்டன.

இந்தச் சம்பவத்தில் சடலங்களாக மீட்கப்பட்ட நால்வருக்கும் எமது அஞ்சலியைத் தெரிவிக்கும் அதேநேரம் இந்தச்சம்பவம் தொடர்பில் உறுதியான தகவலைக் கடற்படையினர் விரைவில் கண்டறியவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம். இதேநேரம் உயிரைக் காக்க இந்தியாவுக்குத் தப்பியோடிய யாழ்ப்பாணம் இளைஞர் ஒரு வரும் தனது வாழ்வாதாரத்தைக் கருதி இந்திய உறவுகளுடன் தொழிலுக்கு வந்த வேளை பரிதாபமாக உயிரிழந்தமை எமது உறவுகளின் அவலத்தை எடுத்தியம்புகின்றது.

உறவுகளை இழந்து தவிக்கும் தாய்த் தமிழகச் சொந்தங்க ளுக்கும் எமது மீனவரின் குடும்பத்தினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்” என்றார்.

https://www.ilakku.org/?p=39995

Link to comment
Share on other sites

சுமந்திரனோ அல்லது வைகோ வோ அல்லது இன்று போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் தமிழக மீனவ சமூகங்களின் தலைவர்களோ முல்லைத்தீவில் தம் வாழ்வாதாரத்தை தமிழக மீனவர்கள் சேதப்படுத்தி அபகரிக்கின்றார்கள் என முழு கதவடைப்பு போராட்டம் நடத்தும் போது அப் போராட்டங்களுக்கு தார்மீக ரீதியிலாவது ஆதரவு கொடுத்தார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நிழலி said:

அதே சிங்கள மீனவர்கள் முல்லை தீவில் கொள்ளை கொள்ளையாக சூறையாடுகின்றார்களே, அப்போது கேள்வி கேட்டார்களா இந்த சுமே? 

அதே தமிழக மீனவர்கள் எமது போராட்டதிற்கு எத்தனையோ விதமாக உதவி செய்தார்களோ அதை நீங்கள் மறந்துவிட்டீர்களா? 

எமது வளத்தை கொள்ளையிடும் சிங்கள அல்லது சீனாவைவிட, தமிழக சகோதரங்களிடம் போவதே மேல், டக்ளஸ் சிங்கள மீனவர்களுக்கு துணை போவதை யாராவது கேட்டீர்களா? 

வாலி & சுவைக்கு மட்டும் சிங்களத்தைவிட தமிழக தமிழர்களில்தான்னகாழ்புண்ர்வு. நல்லயிருக்கு.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே சிங்கள காட்டு மிராண்டிகள் இதுவரை செய்தவற்றை நாம் மறந்துவிட்டோம், இனியும் சிங்கள மீனவர்களுக்கு தொடர்ந்து துணை போவார்கள்,

குரல் கொடுக்க நமது தமிழ்நாட்டு மீன்வர்கள் மட்டும்தான், அவர்கள் மேட்டுகுடிகள் அல்ல,

நல்ல மனதுள்ள மோட்டு குடிகள்👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, நிழலி said:

45 minutes ago, உடையார் said:

அதே சிங்கள மீனவர்கள் முல்லை தீவில் கொள்ளை கொள்ளையாக சூறையாடுகின்றார்களே, அப்போது கேள்வி கேட்டார்களா இந்த சுமே? 

அதே தமிழக மீனவர்கள் எமது போராட்டதிற்கு எத்தனையோ விதமாக உதவி செய்தார்களோ அதை நீங்கள் மறந்துவிட்டீர்களா? 

சுமத்திரனை  பொறுத்தவரை தமிழ் அரசியல் அவருக்கு வியாபாரம் நல்லதொரு திறமையான  அரசியல் வியாபாரி அவ்வளவே அவரிடம் இருந்து தமிழருக்கு நன்மை வரும் என்று நம்புவது என்ன இனியும் நம்புவது இலவு காத்த கிளியை  விட மோசமானது .

அவர் வடகிழக்கு தமிழ் அரசியல்வாதிகளில் தான் ஒரு முக்கியமானவர் என்று காட்டி கொள்வதுக்கு கனடா  வந்தால் அங்குள்ள MP மாரை வலிய  சென்று சந்தித்து உறவை வளர்த்துக்கொள்பவர் . மேலும் முஸ்லீம் மக்களிடம் நண்பன் போல் காட்டிக்கொண்டு அறிக்கை விட்டு கொள்வார் . இங்கும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு தன்னை அறிமுகப்படுத்தும் ஒரு நிகழ்வே நடந்து இருக்கு அந்த நாலு தமிழ் சகோதரர்களின் செத்தவீட்டில் விளம்பரம் போடுகிறார் சுமத்திரன் .

தமிழரின் இரத்தத்தில் தன்னுடைய அரசியல் வளர்க்கும்  சுயநலவாதியிடம் எங்களுக்காக ஏன் கதைக்கவில்லை என்று கேட்டால் கொடுப்புக்குள் நக்கலா  சிரித்தபடி போயிடுவார் .

வல்லூறு ஒருநாளும் புறாவாக மாறாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் வெளியில் தேடுவான் இங்கேயே பற்றி எரியும் திரிகள் எதுவென்று தேடினால் தெரியும் சுமத்திரன் மட்டும் அல்ல அவரை விசுவாசிக்கும் கூட்டம்கள் முல்லைதீவில் சிங்களவர் கதை போன்றவற்றுக்கு எட்டியும் பார்க்க மாட்டினம் .

எங்களை நாங்களே சுய விமரிசனம் என்ற போர்வையில் செய்யும் கூத்துக்கள் .🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

ஏன் வெளியில் தேடுவான் இங்கேயே பற்றி எரியும் திரிகள் எதுவென்று தேடினால் தெரியும் சுமத்திரன் மட்டும் அல்ல அவரை விசுவாசிக்கும் கூட்டம்கள் முல்லைதீவில் சிங்களவர் கதை போன்றவற்றுக்கு எட்டியும் பார்க்க மாட்டினம் .

எங்களை நாங்களே சுய விமரிசனம் என்ற போர்வையில் செய்யும் கூத்துக்கள் .🤔

பரந்துபட்ட சிந்தனையாளர்களாம். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் இதற்குக் கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கக் கூடாது என்பது என் கருத்து. 

நடந்தது பலகாலமாகத் தொடர்கிற எல்லை கடந்த வளத்திருட்டு! இதை சீனன் செய்தாலும் இந்தியத் தமிழர் செய்தாலும் நடவடிக்கை அவசியம்! கவலைக்குரியது என்றாலும் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடும் போது உயிரிழப்பு என்பது occupational hazard மாதிரி கூடவே இருக்கும் ஆபத்து! 

அதெப்படி சிறிலங்காச் சிங்களவன் முல்லைத் தீவில் மீன் பிடிப்பதையும் இந்திய தமிழர் மன்னாரில் மீன் பிடிப்பதையும் ஒப்பிடுகிறார்கள்? முதலாவது பிரஜையின் உரிமை, இரண்டாவது எல்லை கடந்த சட்ட மீறல்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

சுமந்திரனோ அல்லது வைகோ வோ அல்லது இன்று போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் தமிழக மீனவ சமூகங்களின் தலைவர்களோ முல்லைத்தீவில் தம் வாழ்வாதாரத்தை தமிழக மீனவர்கள் சேதப்படுத்தி அபகரிக்கின்றார்கள் என முழு கதவடைப்பு போராட்டம் நடத்தும் போது அப் போராட்டங்களுக்கு தார்மீக ரீதியிலாவது ஆதரவு கொடுத்தார்களா?

சுமந்திரன் அமெரிக்கா சார்பாக தனது கண்டனத்தைப் பத்வு செய்துள்ளார்.. 😂

Link to comment
Share on other sites

3 hours ago, உடையார் said:

அதே சிங்கள மீனவர்கள் முல்லை தீவில் கொள்ளை கொள்ளையாக சூறையாடுகின்றார்களே, அப்போது கேள்வி கேட்டார்களா இந்த சுமே? 

அதே தமிழக மீனவர்கள் எமது போராட்டதிற்கு எத்தனையோ விதமாக உதவி செய்தார்களோ அதை நீங்கள் மறந்துவிட்டீர்களா? 

எமது வளத்தை கொள்ளையிடும் சிங்கள அல்லது சீனாவைவிட, தமிழக சகோதரங்களிடம் போவதே மேல், டக்ளஸ் சிங்கள மீனவர்களுக்கு துணை போவதை யாராவது கேட்டீர்களா? 

வாலி & சுவைக்கு மட்டும் சிங்களத்தைவிட தமிழக தமிழர்களில்தான்னகாழ்புண்ர்வு. நல்லயிருக்கு.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு

3 hours ago, உடையார் said:

இதே சிங்கள காட்டு மிராண்டிகள் இதுவரை செய்தவற்றை நாம் மறந்துவிட்டோம், இனியும் சிங்கள மீனவர்களுக்கு தொடர்ந்து துணை போவார்கள்,

குரல் கொடுக்க நமது தமிழ்நாட்டு மீன்வர்கள் மட்டும்தான், அவர்கள் மேட்டுகுடிகள் அல்ல,

நல்ல மனதுள்ள மோட்டு குடிகள்👍

போராட்ட காலங்களில் தமிழக மீனவர்கள் மூலமாக பணம் கொடுத்து புலிகள் பெற்ற அனுகூலங்கள் பல. அதே வேளை புலிகளின் கடற்பிரிவு இருந்தமையால் அவர்களின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதும் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. எம் கடற்கரைக்குள் வந்து எம் மீனவர்களை நோக்கி இனி வந்தால் வெட்டுவம் என்று சண்டித்தனம் பிடிக்கும் நிலை அன்று இருக்கவும் இல்லை.

அன்று அவர்கள் உதவியமைக்காக இன்று வந்து எம் சொத்தை கொள்ளையிடச் சொல்கின்றீர்களா? சிங்கள மீனவர்கள் வந்து அத்து மீறி மீன் பிடிப்பதற்காகவும் முல்லைத்தீவு மற்றும் வடமராட்சி கிழக்கில் தமிழ் மீனவர்கள் தம் எதிர்ப்பை பதிவு செய்து இருந்தனர். ஆனால்  தமிழக மீனவர்களால் தடை செய்யப்பட்ட முறைகள் மூலம் தம் வாழ்வாதாரம் அழிக்கப்படுகின்றது என்று அதை விட பன்மடங்கு அதிகமாக தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பது மட்டுமல்ல, தடை செய்யப்பட்ட உபகரணங்கள் வலைகள் மூலமும் அவர்கள் மீன் பிடிக்கின்றனர்.

தமிழக மீனவர்கள் அன்று எமக்கு உதவியவர்கள் என்பதால் வடக்கு மீனவர்கள் அவர்கள் எவ்வளவு வேண்டும் என்றாலும் வந்து கொள்ளையிடட்டும் என்று விட்டு விடச் சொல்கின்றீர்களா? அங்கு இதற்கு எதிராக போராடும் மக்களை இவ்வாறு இங்கிருந்து சொல்வதன் மூலம் அவர்களின் நியாயமான போராட்டத்தினை மலினப்படுத்துகின்றீர்கள்.ஏனெனில் பாதிப்பு உங்களுக்கு அல்ல என்பதால்.

இவற்றுக்கு அப்பால், என்னுடைய கேள்வி தமிழ் மீனவர்களின் போராட்டத்துக்கு, அதில் உள்ள நியாயத்தன்மைக்கு ஆதரவாக சுமந்திரனும் சரி, உங்கள் வார்த்தைகளில் சொல்வதானால் மேட்டுக் குடியில்லாத பாமர ஏழை தமிழ மீனவர்களின் அமைப்புளும் சரி குரல் கொடுத்தனவா என்பதுதான். ஆனால் அப்படி எவரும் குரல் கொடுக்கவில்லை என்பதுதான் நடைமுறையில் நாம் பார்த்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

அதே சிங்கள மீனவர்கள் முல்லை தீவில் கொள்ளை கொள்ளையாக சூறையாடுகின்றார்களே, அப்போது கேள்வி கேட்டார்களா இந்த சுமே? 

அதே தமிழக மீனவர்கள் எமது போராட்டதிற்கு எத்தனையோ விதமாக உதவி செய்தார்களோ அதை நீங்கள் மறந்துவிட்டீர்களா? 

எமது வளத்தை கொள்ளையிடும் சிங்கள அல்லது சீனாவைவிட, தமிழக சகோதரங்களிடம் போவதே மேல், டக்ளஸ் சிங்கள மீனவர்களுக்கு துணை போவதை யாராவது கேட்டீர்களா? 

வாலி & சுவைக்கு மட்டும் சிங்களத்தைவிட தமிழக தமிழர்களில்தான்னகாழ்புண்ர்வு. நல்லயிருக்கு.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு

உடையார் அய்யா, திருக்குறளை எல்லாம் எடுத்து உதாரணம் கூறி பெரிய லெவலுக்குப் போய்விட்டீர்கள்.  தமிழக மீனவர்கள் தாமாக முன்வந்து இனவுணர்ச்சியுடன் எந்தவொரு உதவியையும் செய்துவிடவில்லை. கொடுத்த பணத்துக்கு உதவிசெய்தார்கள். அப்படிப் பார்த்தால் கொடுத்த பணத்துக்காக பல சிங்களவர் புலிகளுக்கு பல உதவிகளைச் செய்திருக்கின்றனர். சிங்களவர்களின் உதவி இல்லாமல் தென்னிலங்கையில் நடத்தப்பட்ட எந்தவொரு தாக்குதலும் வெற்றிகரமாக நிகழ்ந்திருக்க  வாய்ப்பே இல்லை. 

இந்த மீனவர்கள் தாம் கேரளாவில் இருந்து குடாநாட்டுக்கு கடத்தப்படும் கஞ்சாவுக்கு காரணமானவர்கள். பணத்துக்காக எதையும் செய்யக்கூடியவர்கள்.   

பொதுவாக இந்திய மீனவர்கள் எமது கடல்வளங்களைச் சூறையாடும் கடற்கொள்ளையர்கள். எமது மீனவர்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் கயவர்கள். 

நெடுந்தீவுக்கு அருகில் வந்து மீன்பிடித்துவிட்டு, கச்சதீவுக்கருகில் வைத்து தாக்கப்பட்டனர் என்று புலுடா விடுவார்கள். 

அடுத்தவன் வீட்டில் போய் களவெடுத்தால் அவன் அடிக்கவல்ல, வெட்டவும்தான் செய்வான். 

இனியாவது அடுத்தவன் சொத்தை அபகரிக்காது வாழ இந்த கடற்கொள்ளையர்கள் பழகிக்கொள்ளவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

இனியாவது அடுத்தவன் சொத்தை அபகரிக்காது வாழ இந்த கடற்கொள்ளையர்கள் பழகிக்கொள்ளவேண்டும்.

பொன்னான அறிவுரை கடல் கொள்ளையர்களுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை. இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது மட்டுமன்றி.. இத்தாலிக் கப்பல்காரர்கள் கேரள மீனவர்களைக் கொன்றதற்கு சர்வதேச சட்டப்பிரமானத்துக்கு அமைய சட்ட நடவடிக்கை எடுத்தது போல்.. சொறீலங்கா கடற்படையால் கொல்லப்பட்ட 500 தமிழக மீனவர்கள் சார்பிலும் உரிய சட்ட நடவடிக்கை எடுத்து சொறீலங்கா சர்வதேச ரீதியில் தண்டிக்கப்படுபதோடு மீனவக் குடும்பங்களுக்கு நட்ட ஈடும் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

இங்கு சிலர் சிங்களவர்கள் சொறீலங்காவின் பிரஜைகள் எனவே.. யாழ்ப்பாணம்..முல்லை.. மன்னார்.. மட்டக்களப்பு.. திருமலை.. அம்பாறை என்று அடாத்தாகக் குடியேறி மீன்பிடி என்ன தமிழர் வளத்தையே சுரண்டலாம்.. அதுவும் சிங்கள இராணுவ.. கடற்படை.. விமானப்படை.. பொலிஸ்படை பாதுகாப்போடு என்று அது உச்ச சிங்கள எஜமான வக்காளத்து வாந்தி எடுக்கின்றனர்.

இதே சிங்கள ஆட்சியாளர்களின் ஆக்கிரமிப்பு ஏவல் இயந்திரங்களான சிங்கள.. இராணுவம் மற்றும் கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எமது கடல் வளங்கள் பற்றி இவர்களுக்கு கிஞ்சித அறிவும் இல்லை அக்கறையும் இல்லை. அதுமட்டுமன்றி எமது மீனவ சமூகம் இந்த சிங்கள ஏவல் படைகளால் கொன்றொழிக்கப்பட்ட நிகழ்வுகள் குறித்தும் அக்கறையில்லை. 

ஏன்.. எமது மீனவர்கள் காலி.. அம்பாந்தோட்டை.. நீர்கொழும்பு.. புத்தளம்.. கட்டுநாயக்கா என்று போய் மீன்பிடிக்க.. உந்த வக்காளத்து வாந்திகள் ஏற்பாடு செய்து கொடுக்கலாமே. தமிழக மீனவர்களோடு பகை முடிப்பதிலும்.

டக்கிளஸ் தனது சிங்கள எஜமானர்களின் நோக்கங்களுக்காக.. ஈழத் தமிழ் மீனவர்களையும்.. தமிழக மீனவர்களையும்.. சிங்கள படைகளின் ஒட்டாதரவோடு சீண்டு முடிந்து கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் அஷ்ரப் இதையே தமிழ் - முஸ்லீம் உறவை சீர்குலைத்து சிங்கள எஜமானர்களிடம் பதவி சுகம் பெறப் பாவித்தார். டக்கிளஸ் அதை இன்னும் அச்சொட்டாகச் செய்கிறார்.

தமிழக மீனவர்கள்.. தாக்குப்பட்டுக் கொல்லப்பட்டமை.. சர்வதேச விவாகரமாகக் கொள்ளப்பட்டு சிங்கள கடற்படை சர்வதேசச் சட்ட விதிகளுக்கு அமைவாக தண்டிக்கப்படுதல் அவசியம். எனியும் தமிழகம்.. உறங்கக் கூடாது. ஈழத் தமிழ் மீனவர்களின் சாவுகளுக்கு இதே சிங்களக் கடற்படை காரணமாக இருந்தது என்பதை எல்லாம் மறந்து.. இப்பவும் போரால் பாதிக்கப்பட்ட எமது மீனவர்களின் வளம்.. வடமராட்சி கிழக்கில் இருந்து நாயாறு வரை சிங்கள மீனவர்களால் அடாத்தாக சுரண்டப்படுவதையும்.. சிலாவத்துறை என்ன மன்னார் மாவட்ட தமிழ் கிராமம் இன்று முழுச் சிங்கள மயமாகி பெரும் கடல் திருட்டு நடைபெறுவதையும் போர்வையால் போர்ப்பது போல் போர்த்து மூடிவிட்டு.. தமிழக - தமிழீழ மீனவர்களிடையே நட்புறவு ரீதியில் தீர்க்கப்படக் கூடிய விடயத்தை படுகொலைகள் மூலம் தீவிரமாக்கி சிங்களமும்.. சிங்களக் கூலிகளும்.. குளிர்காய்வதற்கு எனியும்.. மனித உயிர்களைப் பலியிட தமிழகமோ.. தமிழீழமோ அனுமதிக்கக் கூடாது. இதில் நேரடியாக.. மறைமுகமாக இயங்கும் அனைவரும் இனங்காணப்பட்டு தண்டிக்கப்படுவதும்.. பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு சரியான நீதியும்.. நட்ட ஈடும் பெற்றுக் கொடுக்கப்படுவதே.. நியாயமான கோரிக்கையாக இருக்க முடியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

இதே சிங்கள காட்டு மிராண்டிகள் இதுவரை செய்தவற்றை நாம் மறந்துவிட்டோம், இனியும் சிங்கள மீனவர்களுக்கு தொடர்ந்து துணை போவார்கள்,

உடையார்!
70 வருடங்களாக சிங்களவன் அடிக்கிறான் கொல்லுறான் அழிக்கிறான். இன்னும் சூடு சுரணை இல்லாமல் சிங்கள இனவாதத்திற்கு சோரம் போய்க்கொண்டிருப்பவர்களை என்ன சொல்வது? 
முல்லைத்தீவில் சிங்களவர்கள் மீன் பிடித்தால் நாட்டு பிரஜைகளாம். ஆனால்  தமிழ் பிரஜைகளுக்கு சிங்கள நாட்டில் சம உரிமை இல்லை. கேட்டால் இனவாதம் எண்டு ஒரு கூட்டம் சொல்லும்...

மகிந்த மாத்தையா தமிழ்கதைக்கிறார். அதாலை அவரும் தமிழர் எண்டு சொல்லாத வரைக்கும் happy :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீனவர்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை கச்சதீவில் போராட்டம் – இராமேஸ்வரம் மீனவர்கள்

இராமேஸ்வரம்

 2011-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்திய-இலங்கை அணிகள் மோதின. அதில் இந்திய அணி வெற்றி பெற்று உலகக்கோப்பையை கைப்பற்றியது. இது இலங்கை கடற்படையினர் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியதாகவும், அதன் காரணமாக ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு படகு மற்றும் அதில் இருந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் மூழ்கடித்து கொன்றதும் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவம் நடந்து சரியாக 10 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் அதே போன்ற ஒரு கொடூர சம்பவத்தை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் அரங்கேற்றி இருப்பதாக ராமேசுவரம் மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
Rameswaram-fishermen-rescued-Protest-aga
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து ஆரோக்கியதாஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மெசியான் (வயது 28), உச்சிப்புளி அருகே வட்டவளம் பகுதியை சேர்ந்த நாகராஜ் (52), மண்டபம் அகதிகள் முகாமை சேர்ந்த சாம்சன் (25), திருப்புல்லாணியைச் சேர்ந்த செந்தில்குமார் (32) ஆகிய 4 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் கடந்த 18-ந் தேதி இரவில் நடுக்கடலில் மீன் பிடித்தபோது, ரோந்து வந்த இலங்கை கடற்படை கப்பல் அந்த மீனவர்களின் விசைப்படகின் மீது வேகமாக மோதியதாகவும், அதில் படகு மூழ்கடிக்கப்பட்டதாகவும் பரபரப்பு தகவல் வெளியானது.
 
மேலும் அந்த படகில் இருந்த 4 மீனவர்களும் வாக்கி-டாக்கி மூலம் அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களிடம் தங்களை காப்பாற்றுமாறு உதவி கேட்டதாகவும், ஆனால் இலங்கை கடற்படை கப்பலை அந்த பகுதியில் நிறுத்தி இருந்ததால் யாரும் சென்று உதவ முடியாத நிலை ஏற்பட்டதாகவும், எனவே அந்த 4 மீனவர்களும் கடலில் மூழ்கிவிட்டதாகவும் திடுக்கிடும் தகவல்களும் அம்பலமானது.
 
இதற்கிடையே கடலில் மூழ்கிய 4 பேரையும் இந்திய கடலோர காவல் படையினர் 2 கப்பல்கள் மூலமாகவும், மீனவர்கள் படகுகளில் சென்றும் தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு கடலில் மிதந்து கொண்டிருந்த 2 உடல்களை இலங்கை கடற்படையினர் கைப்பற்றி யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த 2 உடல்களும் இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதி மூழ்கடிக்கப்பட்ட விசைப்படகில் இருந்தவர்கள் என்பதும், அதில் ஒருவர் ராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மெசியான் என்பதும், மற்றொருவர் திருப்புல்லாணியை சேர்ந்த செந்தில்குமார் என்பதும் தெரியவந்தது. மற்ற 2 பேர் கதி என்ன? என்பது தெரியாமல் இருந்தது.
indian-fishermen-300x205.jpg
 
இந்தநிலையில் நேற்று சாம்சன், நாகராஜ் ஆகியோரது உடல்களும் இலங்கை கடல் பகுதியில் மிதந்தன. அந்த 2 உடல்களையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றி யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கப்பலை மோதவிட்டு படகை மூழ்கடித்ததுடன், 4 மீனவர்களை கடலில் மூழ்க வைத்து இலங்கை கடற்படையினரே கொலை செய்துள்ளதாக ராமேசுவரம் மீனவர்கள் பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளனர். இந்த சம்பவம் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படு்த்தி உள்ளது.
 
4 மீனவர்கள் சாவுக்கு காரணமான இலங்கை கடற்படை மீது கொலை வழக்குப்பதிவு செய்து நீதி விசாரணை நடத்த வேண்டும், 4 பேரின் உடல்களையும் உடனடியாக இந்தியா கொண்டு வந்து இந்திய டாக்டர்கள் மூலம் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும், பாரம்பரிய கடல் பகுதியில் இலங்கை கடற்படை பிரச்சினை இல்லாமல் தமிழக மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ராமேசுவரம் தங்கச்சிமடம் வலசை பஸ் நிறுத்தம் எதிரில் அனைத்து மீனவர்கள் சார்பாக கண்டன போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 
படகு மூழ்கடிக்கப்பட்டதில் பலியான மீனவர் மெசியாவின் தாய் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடைபெற்ற இடத்தின் முன்பு கதறி அழுதபடி நின்றனர். 4 மீனவர்களின் இறப்புக்கு நீதி கேட்டு நாளை (சனிக்கிழமை) கச்சத்தீவுக்கு பயணம் செய்யப்போவதாகவும், நாளை மறுநாள் சாலை மறியல் செய்ய போவதாகவும் மீனவர்கள் அறிவித்து உள்ளனர். இந்த நிலையில், 4 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் அடித்து கொன்று விட்டதாக கூறி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்களின் அத்து மீறலைக்கண்டித்து வடக்கில் போராட்டத்திற்கு அழைப்பு

1-143.jpg
 29 Views

தமிழக மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் சமாசம் வடக்கு தழுவிய கதவடைப்புப் போராட்டத்திற்கு  அழைப்பு விடுப்பதாக சங்கத்தின் தலைவர் ந. வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

 இதன்படி, வர்த்தக சங்கம், ஏனைய சங்கங்கள், அரசியல்வாதிகள் மற்றும் யாழ். பல்கலைக்கழகத்தினர் உள்ளிட்டோர் தமக்கு ஆதரவு தரவேண்டும் என கடற்றொழிலாளர்கள் சமாசத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் ஆதரவு கோரும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Fishermans-Problem.jpg

இது குறித்து சங்கத்தின் தலைவர் ந. வர்ணகுலசிங்கம் மேலும் தெரிவிக்கையில்,

“எல்லை தாண்டி மீன்பிடியில் இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக ஈடுபடுவதாலேயே வட கடலில் மீனவர்களுக்கிடையே பிரச்சினைகள் ஏற்படுகின்றது. வடக்கு மீனவர்கள் மீது பல தாக்குதல்களை இந்திய மீனவர்களே மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை கடற்பரப்பில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற தமிழக மீனவர்களின் உயிரிழப்பு கவலையை ஏற்படுத்துகின்றதுடன் எமது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதேவேளை எமது கடற்பரப்பிற்குள் நுளைய வேண்டாம் என மீண்டும் மீண்டும் கோருகின்றோம்.

அத்துடன், கருப்புக் கொடிகளைப் படகில் கட்டிக் கொண்டு மீன்பிடிக்க எமது எல்லைக்குள் வருவோம் என இந்திய மீனவர்கள் அறிவித்துள்ளதை அனுமதிக்க முடியாது” என்றார்.

https://www.ilakku.org/?p=40067

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வாலி said:

 தமிழக மீனவர்கள் தாமாக முன்வந்து இனவுணர்ச்சியுடன் எந்தவொரு உதவியையும் செய்துவிடவில்லை. கொடுத்த பணத்துக்கு உதவிசெய்தார்கள். அப்படிப் பார்த்தால் கொடுத்த பணத்துக்காக பல சிங்களவர் புலிகளுக்கு பல உதவிகளைச் செய்திருக்கின்றனர். சிங்களவர்களின் உதவி இல்லாமல் தென்னிலங்கையில் நடத்தப்பட்ட எந்தவொரு தாக்குதலும் வெற்றிகரமாக நிகழ்ந்திருக்க  வாய்ப்பே இல்லை. 

இந்த மீனவர்கள் தாம் கேரளாவில் இருந்து குடாநாட்டுக்கு கடத்தப்படும் கஞ்சாவுக்கு காரணமானவர்கள். பணத்துக்காக எதையும் செய்யக்கூடியவர்கள்.   

பொதுவாக இந்திய மீனவர்கள் எமது கடல்வளங்களைச் சூறையாடும் கடற்கொள்ளையர்கள். எமது மீனவர்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் கயவர்கள். 

நெடுந்தீவுக்கு அருகில் வந்து மீன்பிடித்துவிட்டு, கச்சதீவுக்கருகில் வைத்து தாக்கப்பட்டனர் என்று புலுடா விடுவார்கள். 

அடுத்தவன் வீட்டில் போய் களவெடுத்தால் அவன் அடிக்கவல்ல, வெட்டவும்தான் செய்வான். 

இனியாவது அடுத்தவன் சொத்தை அபகரிக்காது வாழ இந்த கடற்கொள்ளையர்கள் பழகிக்கொள்ளவேண்டும்.

சிங்கள பிணத்திண்ணி கழுகுகளை விட இவர்கள் மேலானவர்கள், நீங்கள் பணம் கொடுத்தீர்களா அல்லது கண்டனீர்களா, ஆதாரம்? மனமுவந்து செய்த பல உதவிகள் உங்களை போன்ற வர்களுக்கு கசக்கதான் செய்யும், உதவி செய்தவர்களை இப்படி கேலிசெய்யும் மனம் உங்களை தவிர வேறு எவருக்கும் வராது. சிங்கள காட்டு மிராண்டிகள் பணத்திற்காக தன் இனத்திற்கு துரோகம் செய்தான் எம்மினத்தில் உள்ள சில கை கூலிகள் போன்று.

 இவர்களை உள்ளே வரவிடமால் சிங்கள காட்டுமிராண்டி கடற்படையால் முடியாதா? உள்ளோ வந்தால் கொல்லதான் வேண்டுமா? சிங்கள காட்டுமிராண்டிகளுக்கு யாரென்றில்லை தமிழனென்றால் காணும் கொல்வதற்கு. தமிழீழத்தில் சிங்கள நாய்கள் மண்ணை கொள்ளையிடுகின்றான், அதில் உங்கள் குரலை காணவில்லை இங்கு வந்து சிங்களத்துக்கு வக்காலத்து வேறு. உங்கள் நிலையை யோசித்து பாருங்கள்

10 hours ago, நிழலி said:

போராட்ட காலங்களில் தமிழக மீனவர்கள் மூலமாக பணம் கொடுத்து புலிகள் பெற்ற அனுகூலங்கள் பல. அதே வேளை புலிகளின் கடற்பிரிவு இருந்தமையால் அவர்களின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதும் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. எம் கடற்கரைக்குள் வந்து எம் மீனவர்களை நோக்கி இனி வந்தால் வெட்டுவம் என்று சண்டித்தனம் பிடிக்கும் நிலை அன்று இருக்கவும் இல்லை.

அன்று அவர்கள் உதவியமைக்காக இன்று வந்து எம் சொத்தை கொள்ளையிடச் சொல்கின்றீர்களா? சிங்கள மீனவர்கள் வந்து அத்து மீறி மீன் பிடிப்பதற்காகவும் முல்லைத்தீவு மற்றும் வடமராட்சி கிழக்கில் தமிழ் மீனவர்கள் தம் எதிர்ப்பை பதிவு செய்து இருந்தனர். ஆனால்  தமிழக மீனவர்களால் தடை செய்யப்பட்ட முறைகள் மூலம் தம் வாழ்வாதாரம் அழிக்கப்படுகின்றது என்று அதை விட பன்மடங்கு அதிகமாக தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பது மட்டுமல்ல, தடை செய்யப்பட்ட உபகரணங்கள் வலைகள் மூலமும் அவர்கள் மீன் பிடிக்கின்றனர்.

தமிழக மீனவர்கள் அன்று எமக்கு உதவியவர்கள் என்பதால் வடக்கு மீனவர்கள் அவர்கள் எவ்வளவு வேண்டும் என்றாலும் வந்து கொள்ளையிடட்டும் என்று விட்டு விடச் சொல்கின்றீர்களா? அங்கு இதற்கு எதிராக போராடும் மக்களை இவ்வாறு இங்கிருந்து சொல்வதன் மூலம் அவர்களின் நியாயமான போராட்டத்தினை மலினப்படுத்துகின்றீர்கள்.ஏனெனில் பாதிப்பு உங்களுக்கு அல்ல என்பதால்.

இவற்றுக்கு அப்பால், என்னுடைய கேள்வி தமிழ் மீனவர்களின் போராட்டத்துக்கு, அதில் உள்ள நியாயத்தன்மைக்கு ஆதரவாக சுமந்திரனும் சரி, உங்கள் வார்த்தைகளில் சொல்வதானால் மேட்டுக் குடியில்லாத பாமர ஏழை தமிழ மீனவர்களின் அமைப்புளும் சரி குரல் கொடுத்தனவா என்பதுதான். ஆனால் அப்படி எவரும் குரல் கொடுக்கவில்லை என்பதுதான் நடைமுறையில் நாம் பார்த்தது. 

இவர்களை உள்ளே வரவிடாமால் சிங்கள காட்டுமிராண்டி கடற்படையால் முடியாதா? உள்ளோ வந்தால் கொல்லதான் வேண்டுமா? எப்படி எமது வீரர்கள் கையாண்டார்கள் அன்று?

9 hours ago, வாலி said:

சிங்கள காட்டுமிராண்டிகள் மாடு போல் உங்களையும் வெட்டுவேன் என மிரட்டுகின்றான், அதில் உங்கள் ஒரு பதிவு கூட இல்லை, ஏன், எஜமான் விசுவாசம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, வாலி said:

கஞ்சா போதை பொருள் கடத்துவது கேரளாவில் இருந்து, இது சிங்கள காட்டுமிராண்டிகளின் உதவியுடன் தான் நடக்கின்றது

7 hours ago, விளங்க நினைப்பவன் said:

பொன்னான அறிவுரை கடல் கொள்ளையர்களுக்கு

இது அறிவுரை,  அதுவும் பொன்னான அறிவுரை 😂😂 , 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, உடையார் said:

சிங்கள பிணத்திண்ணி கழுகுகளை விட இவர்கள் மேலானவர்கள், நீங்கள் பணம் கொடுத்தீர்களா அல்லது கண்டனீர்களா, ஆதாரம்? மனமுவந்து செய்த பல உதவிகள் உங்களை போன்ற வர்களுக்கு கசக்கதான் செய்யும், உதவி செய்தவர்களை இப்படி கேலிசெய்யும் மனம் உங்களை தவிர வேறு எவருக்கும் வராது. சிங்கள காட்டு மிராண்டிகள் பணத்திற்காக தன் இனத்திற்கு துரோகம் செய்தான் எம்மினத்தில் உள்ள சில கை கூலிகள் போன்று.

 இவர்களை உள்ளே வரவிடமால் சிங்கள காட்டுமிராண்டி கடற்படையால் முடியாதா? உள்ளோ வந்தால் கொல்லதான் வேண்டுமா? சிங்கள காட்டுமிராண்டிகளுக்கு யாரென்றில்லை தமிழனென்றால் காணும் கொல்வதற்கு. தமிழீழத்தில் சிங்கள நாய்கள் மண்ணை கொள்ளையிடுகின்றான், அதில் உங்கள் குரலை காணவில்லை இங்கு வந்து சிங்களத்துக்கு வக்காலத்து வேறு. உங்கள் நிலையை யோசித்து பாருங்கள்

இவர்களை உள்ளே வரவிடாமால் சிங்கள காட்டுமிராண்டி கடற்படையால் முடியாதா? உள்ளோ வந்தால் கொல்லதான் வேண்டுமா? எப்படி எமது வீரர்கள் கையாண்டார்கள் அன்று?

சிங்கள காட்டுமிராண்டிகள் மாடு போல் உங்களையும் வெட்டுவேன் என மிரட்டுகின்றான், அதில் உங்கள் ஒரு பதிவு கூட இல்லை, ஏன், எஜமான் விசுவாசம்?

உடையார் அய்யா, நான் எந்தத் திரியில் எழுதுவது அல்லது எழுதாமல் இருப்பது என்பது எனது விருப்பம். கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள முடியாவிட்டால் தனிமனித தாக்குதலை கையில் எடுத்துவிடுவீர்கள். அதனைத் தானே பல திரிகளிலும் தொடர்ந்து வருகின்றீர்கள். இது என்ன உங்களுக்கு புதுசா இல்லையே.  

இந்திய கடற்கொள்ளையர்கள் இனிமேல் வந்தாலும் இதுதான் நடக்கும். எனிவேய்ஸ் இறந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

இந்த அன்றாடம் காச்சிகளுடன் தான் உங்கள் வீரமெல்லாம், பிக்குகள் சிங்கள காட்டு மிராண்டிகளிடமெல்லாம் வாலை சுருட்டி வைத்து கொள்ளவீர்கள், எல்லையை கூட பாதுகாக்க முடியாத கையாலாகதனத்தால் தங்கள் கோழைத்தனமான வீரத்தை இப் அப்பாவிகளிடம் காட்டுகின்றார்கள், நீங்களும் அதே வீரத்தை எல்லை தாண்டிபார் சுட்டு தள்ளுவமென்று நிற்கின்றீர்கள், 

Anyways????????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு விடயம் மட்டும் புரியவில்லை. இரு தரப்பிலும் உள்ளவர்கள் தமிழ் பேசும் மீனவர்கள். சகோதர்கள். ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசி பிரச்சனையை தீர்க்காமல்.. எதுக்கு சிங்களவனிடம்... சிங்களக் கூலிகளிடம்... கதைகேட்டு.. செயற்படுகினம். இவர்கள் எப்போது எமக்கு நன்மை செய்திருக்கிறார்கள்..??! இப்போ எதற்கு.. கதவடைப்புச் செய்யினம்.

வடக்கில்.. சில சிங்கள அரச கூலிகளின் தூண்டுதலின் பேரில்.. கோரப்பட்டுள்ள.. இந்த மீனவ சங்கம் என்ற பெயரில் நடமாடும்.. ஈபிடிபி வால்பிடிகளுக்கும் சிங்களக் கூலிகளுக்கும் மக்கள் ஆரதவளிக்கக் கூடாது. ஹர்த்தாலுக்கும் மக்கள் ஆதரவு அளிக்கக் கூடாது.

மாறாக.. தமிழக.. தமிழீழ மீனவர்கள்.. நட்புரீதியாகப் பேசி.. இந்தப் பிரச்சனையை முடித்து வைக்கவே வற்புறுத்த வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயிரிழந்த 4 இந்திய மீனவர்களின் சடலங்களும் இந்திய கடலோர காவல் படையினரிடம் கையளிப்பு

நெடுந்தீவு கடற்பரப்பில், கடந்த 18ஆம் திகதியிரவு உயிரிழந்த 4 இந்திய மீனவர்களின் உடல்களும் இன்றுகாலை(23.01.2021) காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு, இந்திய கடலோர காவல் படையினரிடம்  கையளிக்கப்பட்டுள்ளது.
spacer.png

spacer.png

சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது, இலங்கை கடற்படையினரின் கைதிலிருந்து தப்பிக்க, கடற்படை படகை மோதி சேதப்படுத்தி மிக ஆபத்தான முறையில் படகை செலுத்த முற்பட்ட போது சமனிலை குலைந்து நீரில் மூழ்கியதாக கூறப்பட்ட இந்திய மீனவப் படகு கடந்த புதன்கிழமை மீட்கப்பட்டிருந்தது.

spacer.png

அன்றைய தினம் மூழ்கிய படகையும், இரு மீனவர்களின் சடலங்களையும் மீட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன்  இந்திக டி சில்வா தெரிவித்திருந்தார். 

spacer.png
இந்நிலையில், தொடர்ச்சியாக குறித்த கடற்பரப்பில் தேடுதல்கள் மற்றும் மீட்பு நடவடிக்கையில்  கடற்படையினர் ஈடுபட்டிருந்த நிலையில், இன்றுகாலை உயிரிழந்த 4 இந்திய மீனவர்களின் உடல்களும் இந்திய கடலோர காவல் படையினரிடம்  கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது. 

spacer.png

https://www.virakesari.lk/article/99012

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் இருக்கும் சொந்த சகோதர்கள் பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை,வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை ...தொப்புள் கொடி உறவுகள் எமது வளங்களை சிதைக்கலாம் ...எதிர் காலத்தில் மீன்களே இல்லாமல் ஆக்கலாம் அதைப் பற்றி இங்கிருக்கும் எமக்கு கவலையில்லை.
கேட்டால் சிங்களவன் வந்து மீன் பிடிக்கிறான் . இவர்கள் பிடித்தால் என்ன என்று ஒரு சப்பை காரணம் சொல்றது .
வடக்கு மீனவர்கள் தமிழ்நாட்டு எல்லையில் போய் மீன் பிடித்தால் ,தமிழக மீனவர்கள் ஆ வந்து பிடியுங்கோ தொப்புள் கோடி உறவுகளா என்றிட்டு விட்டுட்டு இருப்பார்களா?
சிங்கள மீனவர்கள் வட  பகுதியில் வந்து மீன் பிடிக்கிறார்கள். அதே மாதிரி எமது மீனவர்களும் தென் பகுதியில் போய் மீன் பிடிக்கின்றார்கள்.
இலங்கையில் எந்தவொரு மீனவரும் அபாயகரனமான மீன் வளமே அழிந்து போக கூடிய உபகரணங்களை பாவிப்பதில்லை .
சொந்த நாட்டில் எமது சகோதரர்கள் பிழைக்க வழியில்லை ...பக்கத்து நாட்டுக்காரருக்காய் இங்கே சிலர் அழுகிறார்கள்.
பொறுத்து பொறுத்து பார்த்து தான் அரசு இந்த நிலைக்கு வந்தது...இறந்த அப்பாவி மீனவர்களுக்கு அஞ்சலிகள்...அந்த மீனவர்கள் இனி மேலாவது தங்கள் முதலாளிமாரோடு கதைத்து இங்கால பக்கம் வர கூடாது என்ற முடிவை எடுக்க வேண்டும்  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.