Jump to content

ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் உடல்கள் மீட்பு - இலங்கை கடற்படையை கண்டித்து போராட்டம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

எனக்கு ஒரு விடயம் மட்டும் புரியவில்லை. இரு தரப்பிலும் உள்ளவர்கள் தமிழ் பேசும் மீனவர்கள். சகோதர்கள். ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசி பிரச்சனையை தீர்க்காமல்.. எதுக்கு சிங்களவனிடம்... சிங்களக் கூலிகளிடம்... கதைகேட்டு.. செயற்படுகினம். இவர்கள் எப்போது எமக்கு நன்மை செய்திருக்கிறார்கள்..??! இப்போ எதற்கு.. கதவடைப்புச் செய்யினம்.

வடக்கில்.. சில சிங்கள அரச கூலிகளின் தூண்டுதலின் பேரில்.. கோரப்பட்டுள்ள.. இந்த மீனவ சங்கம் என்ற பெயரில் நடமாடும்.. ஈபிடிபி வால்பிடிகளுக்கும் சிங்களக் கூலிகளுக்கும் மக்கள் ஆரதவளிக்கக் கூடாது. ஹர்த்தாலுக்கும் மக்கள் ஆதரவு அளிக்கக் கூடாது.

மாறாக.. தமிழக.. தமிழீழ மீனவர்கள்.. நட்புரீதியாகப் பேசி.. இந்தப் பிரச்சனையை முடித்து வைக்கவே வற்புறுத்த வேண்டும். 

நெடுக்ஸ்,

உங்களுக்கு விடயத்தின் அடிப்படை புரியவில்லை போலும்.. 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடற்படையினருக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யவேண்டும்- மே 17 இயக்கம் வேண்டுகோள்

Digital News Team 2021-01-23T17:06:34

தமிழ்நாட்டு மீனவர்களை கொலைசெய்த இலங்கை கடற்படை மீது தமிழ்நாடு அரசு உடனடியாக கொலைவழக்கு பதிவு செய்து, கொலை செய்த இலங்கை கடற்படையினரை சர்வதேச விதிகளின் கீழ் கைது செய்து தமிழ்நாடு கொண்டுவர இந்திய ஒன்றிய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்என மே 17 இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது

இது தொடர்பில் மே 17 இயக்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது

2021012215421567tamil-nadu-fishermen-kil

தமிழர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் தங்கச்சிமடம் மெசியா, நாகராஜ், உச்சிப்புளி செந்தில்குமார், மண்டபம் சாம் ஆகியோர் சென்ற படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதி படகை மூழ்கடித்ததோடு, உயிருக்கு போராடிய மீனவர்களை துன்புறுத்தி அவர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொளுத்தி படுகொலை செய்துள்ளது
 
சிங்களப் பேரினவாத அரசு! அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்ற மீனவர்கள் காப்பாற்ற முன்வந்த போது அவர்களை தாக்கி விரட்டியடித்துள்ளது. தமிழீழ தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்களப் பேரினவாத அரசின் தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இந்த மனிததன்மையற்ற செயல் இனப்படுகொலைக்கு ஒப்பானது. சிங்களப் பேரினவாத அரசின் இக்கொடூர செயலையும், அதற்கு துணைபோகும் இந்துத்துவ மோடி அரசையும் மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
 
இலங்கையில் இனப்படுகொலையாளர்கள் ராஜபக்சே சகோதரர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழீழத் தமிழர்கள் மீதான அடக்குமுறை அதிகரித்ததோடு, தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதலும் அதிகரித்துள்ளது. அதன் உச்சகட்டம் தான் தற்போது 4 தமிழ்நாட்டு மீனவர்களை எரித்து கொன்றது. இது, சிங்களப் பேரினவாதத்தின் தமிழினம் மீதான வெறுப்பு அரசியல் மற்றும் தமிழினப்படுகொலையின் ஓர் அங்கம்.
 
இதுவரை 800-க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கொன்ற போதும், அதன் மீதான இந்திய அரசின் அணுகுமுறை பெயரளவிற்கு மட்டுமே உள்ளது. இலங்கை கடற்படை மீது சர்வதேச நடைமுறையின் கீழ் இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் இது போன்ற சம்பவங்களை தடுத்திருக்க முடியும்.
புவிசார் அரசியலின் மையமான தமிழர் கடலை ஆக்கிரமித்திருக்கும் இந்திய கடற்படை, தமிழ்நாட்டு மீனவர்களை காப்பதில் துளி கூட முயற்சிப்பதில்லை என்பதை ஒக்கி புயலின் போதே காண முடிந்தது. தமிழீழ இனப்படுகொலையில் இந்திய அரசு வழங்கிய ஒத்துழைப்பு தற்போது தமிழ்நாட்டு மீனவர்கள் கொலையிலும் நீடிப்பது 2000 ஆண்டுகால ஆரிய-திராவிட போரின் நீட்சியே!
Rameswaram-fishermen-rescued-Protest-aga
 
இலங்கை மீதான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை நிர்ணயிப்பதில் தமிழ்நாடு அரசு முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்பது மே பதினேழு இயக்கத்தின் நீண்டகால கோரிக்கை.
இலங்கை மீதான பொருளாதாரத் தடையை கோரிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வழியில் ஆட்சி செய்வதாக சொல்லிக்கொள்ளும் அதிமுக அரசு, வெறும் அறிக்கை விடுத்து இறந்த மீனவர்களுக்கு நட்டஈடு கொடுப்பதோடு கடமையை முடித்துக்கொண்டிருப்பது, தமிழ்நாடு அரசின் உரிமையை ஒன்றிய அரசிடம் அடகுவைத்ததையே காட்டுகிறது. தமிழர்களுக்கான அரசு என்பதை அதிமுக அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.
தமிழ்நாட்டு மீனவர்களை கொலைசெய்த இலங்கை கடற்படை மீது தமிழ்நாடு அரசு உடனடியாக கொலைவழக்கு பதிவு செய்து, கொலை செய்த இலங்கை கடற்படையினரை சர்வதேச விதிகளின் கீழ் கைது செய்து தமிழ்நாடு கொண்டுவர இந்திய ஒன்றிய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
 
கச்சத்தீவை மீட்கவும், பாரம்பரிய மீன்பிடி பகுதியில் தமிழர்கள் மீன்பிடிப்பதை உறுதி செய்யவும் தமிழ்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலங்கை மீதான இந்திய ஒன்றிய அரசின் வெளியுறக் கொள்கையை தமிழ்நாடு அரசே தீர்மானிக்கும் என்று சட்டமன்றதில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்த சிங்களப் பேரினவாத அரசை கண்டித்தும், தமிழர்களை அழிக்க சிங்களப் பேரினவாத அரசிற்கு துணை போகும் இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான நரேந்திர மோடி அரசை கண்டித்தும், சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு ஜனவரி 25 திங்கள்கிழமை காலை 11 மணிக்கு மதிமுக தலைவர் ஐயா வைகோ அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் மே பதினேழு இயக்கம் கலந்துகொள்கிறது
 
Link to comment
Share on other sites

தமிழக மீனவர்கள் கேரள கடற்பரப்புக்குள் செல்ல மாட்டார்கள். ஏனென்றால் மலையாளிகள் அடித்து இவர்களை விரட்டி விடுவார்கள் என்று தெரியும், புத்தளம் போன்ற பகுதி கடற்பரப்புக்குள் கூட செல்ல மாட்டார்கள், சிங்கள மீனவர்கள் விரட்டி விடுவார்கள் என்ற பயம் (ஆனால் மன்னார் தமிழ் மீனவர்கள் செல்ல முடியும்). இவர்கள் வருவது எல்லாம் தமிழ் மீனவர்கள் செறிந்து வாழும் பகுதிக்குள் மட்டுமே.

யுத்தகாலத்தில் தமிழ் மீனவர்களின் எல்லை மிகச் சுருங்கி இருந்தது. ஆழ்கடல் மீன் பிடிப்பு அறவே இல்லாமல் இருந்தது. யுத்தகாலப் பகுதியில் தமிழக மீனவர்கள் தான் ஈழத்தமிழர்களுக்கு சொந்தமான இந்த ஆழ்கடல் எல்லாம் மீன் பிடித்துக் கொண்டு இருந்தார்கள். இப்ப யுத்தம் இல்லாமையால் வடக்கு தமிழ் மீனவர்கள் தமக்குரிய கடற்பரப்பில் மீன் பிடிக்க முனையும் போதுதான் இந்த பிரச்சனை பெரியளவில் வெடிக்கின்றது.

30 வருட யுத்தத்தாலும், சுனாமியாலும் மிக மோசமாக பாதிக்கப்பட்ட எம் மீனவர்களின்  வயிற்றில் அடிப்பது மட்டுமல்லாமல், மீன்வளத்தையே நாசம் செய்யும் தமிழக மீனவர்கள் வந்து கொள்ளையடித்து போகட்டும் என்று சொல்லும் அளவுக்கு உடையார் போன்றோருக்கு தமிழக விசுவாசம் பெருகியிருப்பது தான் வேதனை.

இது வரை காலத்தில் ஒரு தமிழக அரசியல் தலைவர்களாவது, ஆகக் குறைந்தது ஈழத்தமிழர்கள் மேல் அக்கறை இருப்பதாக காட்டிக் கொள்ளும் ஒரு தமிழக தலைவர்களோ செயற்பாட்டாளர்களோ, தமிழக பிரமுகர்களோ, தமிழக மீனவர்களைப் பார்த்து, ஈழத்தமிழர்களின் மீன் வளத்தை அடாத்தாக பறிக்க வேண்டாம், எல்லை தாண்டி அவர்களின் கடற்பரப்பிற்குள் (கரையில் நின்று பார்த்தாலே தெரியக் கூடிய அளவுக்கு) சென்று, கடல்தாயின் அடி வயிற்றில் இருந்து எல்லாவற்றையும் வாரிச் சுருட்டும் உபகரணங்கள் கொண்டு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டு இருக்கின்றார்களா?

சிங்களம் இதனை சரியாக பயன்படுத்துகின்றது. அது அப்படித் தான் செய்யும். சிங்களத்திற்கு இருக்கும் பயங்களில் பெரிய பயமே தமிழர்களின் அருகில் தமிழகம் இருப்பதுதான். இப் பிரச்சனையை சிங்களம் தனக்கு சாதகமாகத்தான் பயன்படுத்தும், எனவே அவர்களின் வலையில் வீழ்ந்து விட வேண்டாம், தமிழக + ஈழ மீனவர் உறவு இதனால் கெட்டு விடும் என்றாவது எந்த தமிழக அரசியல்வாதிகள் / தலைவர்கள் தம் மீனவர்களை நோக்கி கூறி அறிவுறுத்தி உள்ளார்களா? 

அவர்கள் கூற மாட்டார்கள். ஏனென்றால் மிகவும் நலிவுற்று இருக்கும் ஈழத்தமிழ் மீனவர்கள் தான் மேலும் மேலும் குனிந்து போக வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். 

நலிந்தவன் முதுகில் சவாரி செய்வது தொப்புள் கொடி உறவுகளாலும் நடைபெறுவது தான் யதார்த்தம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லைலா வலையை பாவிச்சு மீன் குஞ்சுகளையும் வழிச்சுக்கொண்டு போனால் மீன்வளம் அழியாமல் என்ன செய்யும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இங்கே மீனவர்கள் வாழ்வாதாரம் பற்றி அதிகம் தெரியாதவர்களே பேசிக்கொண்டு இருக்கிறார்கள்  போல எண்ணத்தோன்றுகிறது உங்களுக்கு விளக்கம் தெரிந்திருக்கிறது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னமோ இங்கு கருத்து எழுதுபவர்கள் முழுமையான செய்தியை படிக்காமல் தலையங்கத்தை பார்த்து கருத்து எழுதுவதை போன்ற பிரமை தட்டுது .அந்த நான்கு மீனவரில்  ஒருத்தர் சாம்சன் இலங்கையை சேர்ந்தவர் அதுவும் பிள்ளை பிறந்து 20 நாட்களை கொண்ட தகப்பன் மண்டபம் அகதிமுகாமில் பதிவு பெற்ற  இலங்கை அகதி .

Link to comment
Share on other sites

19 minutes ago, பெருமாள் said:

எனக்கென்னமோ இங்கு கருத்து எழுதுபவர்கள் முழுமையான செய்தியை படிக்காமல் தலையங்கத்தை பார்த்து கருத்து எழுதுவதை போன்ற பிரமை தட்டுது .அந்த நான்கு மீனவரில்  ஒருத்தர் சாம்சன் இலங்கையை சேர்ந்தவர் அதுவும் பிள்ளை பிறந்து 20 நாட்களை கொண்ட தகப்பன் மண்டபம் அகதிமுகாமில் பதிவு பெற்ற  இலங்கை அகதி .

அவருக்கு 25 வயது, இலங்கையை விட்டு போகும் போது 4 வயது. 21 வருடங்கள் வசிப்பினும் பிரஜா உரிமை கொடுக்காத நாடு இந்தியா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

அவருக்கு 25 வயது, இலங்கையை விட்டு போகும் போது 4 வயது. 21 வருடங்கள் வசிப்பினும் பிரஜா உரிமை கொடுக்காத நாடு இந்தியா. 

அவருக்கு மாத்திரம் அல்ல இலங்கையில் இருந்து போன  ஒரு தமிழரும் இந்தியாவில்  இந்தியப்பிரஜா உரிமை பெறவில்லை வரதராஜபெருமாள்க்கு கிடைத்ததோ தெரியலை .இந்த விடயத்தை பற்றி எமக்கு ஆதரவான  கட்சிகள்  கூட அதுபற்றி கதைப்பது கிடையாது என்பது பெரும் சோகம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

இங்கே மீனவர்கள் வாழ்வாதாரம் பற்றி அதிகம் தெரியாதவர்களே பேசிக்கொண்டு இருக்கிறார்கள்  போல எண்ணத்தோன்றுகிறது உங்களுக்கு விளக்கம் தெரிந்திருக்கிறது .

எல்லாம் இந்த தமிழக மூன்றாந்தர அரசியல்வாதிகளைப் பின்பற்ற ஆரம்பித்ததால் வந்த கோளாறு தான்! 🤣

ஒருத்தர் பல்லாண்டுகளாக இந்தக் கொள்ளையும் உரசல்களும் நடப்பது தெரியாமலே "நீண்ட அறிக்கை" விட்டு விட்டு, அடுத்த கருத்தில் "எனக்கு இது பிரியவில்லை!" என்று கையை விரிக்கிறார்! 😎

கணணித் திரையில் பொப்கோர்ன் கொறித்த படி ஊரைப் பார்க்கிற புலம்பெயர் மக்களிடம் இதைத் தான் எதிர்பார்க்க முடியும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Justin said:

கரையோர பிரதேசங்களே வடகிழக்கில்  அதிகம் அழிவடைந்தது சுனாமியால் தற்போது இந்திய மீன்பிடியாால் கடல் வளமும் அழிகிறது. 

நான் தினமும் கடற்கரைக்கு சென்று வருவது வழக்கம் அங்கே அவர்கள் பேசும் பிரச்சினைகள் காதில் விழும் அதில் வெளிநாட்டு கப்பல்களினால்,படகுகளினால் தொழில் வளம் இல்லாமலும் வலைகள் அழிவதையும் வாழ்வதாரம் இழப்பு பற்றியதாகவும் இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதுக்கோட்டை:`சித்ரவதை பண்ணி அடிச்சே கொன்னுருக்காங்க!’ - மீனவர்கள் இறப்பால் கலங்கும் உறவினர்கள்

இறந்த மீனவர்களின் உடலுக்கு அஞ்சலி

இறந்த மீனவர்களின் உடலுக்கு அஞ்சலி ( 342242449056101 )

`இறந்தவங்க முகம் முழுசும் காயமாகத்தான் இருக்கு. இலங்கைக் கடற்படை கண்டிப்பா சித்ரவதை பண்ணி அடிச்சே கொன்னுருக்காங்க. மத்திய, மாநில அரசுகள் கண்டிப்பாகத் தக்க நடவடிக்கை எடுக்கணும்’ - உறவினர்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து கடந்த 18-ம் தேதி பிரான்சிஸ் கோவா என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மெசியா (30), மண்டபம் அகதிகள் முகாமைச் சேர்ந்த சாம்சான்டர்வின் (28), வட்டன்வலசையைச் சேர்ந்த நாகராஜ் (52), திருப்புல்லாணியைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகிய 4 மீனவர்களும் மீன்பிடிக்கச் சென்றனர். எல்லை தாண்டியதாக இவர்களின் விசைப்படகைச் சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், தங்கள் கப்பலின் அருகில் நிறுத்தி வைத்துள்ளனர். கடல் சீற்றத்தால் அந்தப் படகின் பின்பகுதி இலங்கை கடற்படைக் கப்பலின் மீது மோதியதில், கப்பல் சேதமடைந்தது. இதனால், ஆத்திரமடைந்த கடற்படையினர் மீனவர்களைத் தாக்கியதுடன், மாற்றுக் கப்பலைக் கொண்டு மீன்பிடிப் படகைத் தாக்கி மூழ்கடித்தனர்.

மீன்பிடிப் படகுகள்
 
மீன்பிடிப் படகுகள்

படகிலிருந்த மீனவர்களின் நிலை என்னவென்று தெரியாமல் போனதால், மாயமான மீனவர்களைத் தேடி கோட்டைப்பட்டினத்திலிருந்து 3 படகுகளில் 10-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சென்றனர். அவர்களை இந்திய எல்லையிலேயே இலங்கைக் கடற்படையினர் பல மணி நேரம் காத்திருக்க வைத்துள்ளனர். இங்கு 4 மீனவர்களும் பத்திரமாக இருப்பதாகவும், அவர்களை விரைவில் அனுப்பி வைப்பதாகவும் இலங்கைக் கடற்படையினர் கூறியதாகக் சொல்லப்படுகிறது. மீனவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் அவர்கள் கரை திரும்பினர். மீனவர்களில் இருவரது உடல்கள் இலங்கையில் 20ம் தேதி கரை ஒதுங்கியதாக அந்நாட்டு கடற்படையினர் தெரிவித்தனர்.

அடுத்த நாள் இரண்டு மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கியதாகவும் தெரிவித்தனர். இந்த தகவலால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதோடு, இறந்தவர்களின் புகைப்படங்களை வெளியிட்டனர். அதில், காயங்கள் இருப்பது போல காணப்பட்டதால், இலங்கைக் கடற்படையினர் தாக்குதலில் சிக்கி அவர்கள் உயிரிழந்திருக்கக் கூடும். எனவே, இலங்கை கடற்படையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே 23-ம் தேதி இறந்த 4 பேரின் உடல்களையும் இலங்கை கடற்படையினர், இந்திய எல்லையில் இந்தியக் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.

அஞ்சலி
 
அஞ்சலி

இரண்டு விசைப்படகுகளில் கோட்டைப்பட்டினம் மீன்பிடித் தளத்துக்குக் இறந்தவர்களின் உடல்கள் கொண்டு வரப்பட்டன. அங்கு சக மீனவர்கள், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி ஆகியோர் மீனவர்கள் உடல்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, மீனவர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இறந்து போன சாம்சான்டர்வின், நாகராஜ், செந்தில்குமார் ஆகியோரின் உடல்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் ஆகியோர் மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மெசியா உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல சக மீனவர்கள் மற்றும் உறவினர்கள் ஆயிரக்கணக்கானோர் தங்கச்சிமடம், ராமேஸ்வரம் சாலை அருகே திரண்டிருந்தனர். உடல் நேரடியாக அடக்கம் செய்யப்படும் இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதால், ஊர்வலம் எடுத்துச் செல்ல அனுமதி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுப் போராட்ட இடத்துக்கு உடல் கொண்டுவரப்பட்டு, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இதனால், ராமேஸ்வரம் சாலையில் சுமார் 2மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை மறியல்
 
சாலை மறியல்

இதுபற்றி செந்தில்குமாரின் சகோதரர் முருகேசன் கூறும் போது, ``நாங்க தேடிப் போகும்போது, அங்க உள்ள நேவிக்காரங்க, உங்க ஆளுங்க பத்திரமா இருக்காங்க. நீங்க கரை திரும்பி போங்கன்னு சொன்னாங்க. கொஞ்ச நேரத்துல பத்திரமா ஒப்படைச்சிடுவோம்னு சொன்னாங்க. ஆனா, இப்போ பிரேதமா கொடுத்திருக்காங்க. இறந்தவங்க முகம் முழுசும் காயமாகத் தான் இருக்கு. இலங்கை கடற்படை கண்டிப்பா சித்ரவதை பண்ணி அடிச்சே கொன்னுருக்காங்க. மத்திய, மாநில அரசு கண்டிப்பாகத் தக்க நடவடிக்கை எடுக்கணும்" என்கிறார் கண்ணீர் மல்க.

https://www.vikatan.com/news/death/governments-should-take-serious-action-in-fishermen-death-issue-urges-relatives

Link to comment
Share on other sites

https://www.facebook.com/100041949908256/videos/pcb.456448915763435/456460105762316

https://www.facebook.com/100041949908256/videos/pcb.456448915763435/456460029095657

சிங்கள அரசு ராசக்சேவுக்கு தமிழகத்திலிருந்து ஒரு பாமரனின் வேண்டுகோள்
உங்கள் அரசாங்கம் ரானுவ பலமிக்க எங்கள் மிகப்பெரிய இந்தியாவில் எங்கள் தமிழக மீனவனை இன்னும் 50 வருடத்திற்கு
எத்தனை மீனவர்களை படுகொலை செய்தாலும்
பல படகுகளை பறிமுதல் செய்தாலும்
பல மீனவனை கைது செய்தாலும்
ஒருபோதும் எல்லை கோடுகளை வகுக்கப்போவதில்லை
எங்கள் தமிழக மீனவர்களும் மீன் வளத்தை அழிக்கும் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தாமல் இருக்கப்போவதில்லை
நீங்கள் இப்படி மாதம்தவறாமல் எங்கள் தமிழக மீனவர்களை படுகொலை செய்வதற்கு பதிலாக
அவசியம் மறக்காமல் வரும் இரண்டு மாதத்தில் நிறைய மீனவர்களை படுகொலை செய்யவும்
காரணம்
ஏன் என்றால் தேர்தல் நேரம் என்பதால் ஒவ்வொரு நீங்கள் படுகொலை செய்யும் மீனவ குடும்பத்திற்கும் 10 லட்சம் நிவாரணம் கிடைக்கிறது
இறந்த மீனவன் குடும்பத்தில் ஒவ்வொரு மீனவனுக்கும் அரசு வேலை அறிவிக்கிறது எங்கள் தமிழக அரசு
எனவே உங்கள் சிங்கள அரசு வழக்கம்போல் அல்லாமல் வரும் தேர்தல் வரை நிறைய தமிழக மீனவர்களை படுகொலை செய்ய வேண்டுகோள்
இப்படிக்கு
கடைசிவரை பொறுப்பற்ற முட்டாள்கள் நிறைந்த அரசியல் தலைமைகள் எங்கள் தமிழக மக்களை வழிநடத்துவதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்த
தமிழகத்திலிருந்து பாமரன்
கீரமங்கலம் சிகா,லெனின்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, nunavilan said:

இந்த பதிவைப் பார்த்தால் இந்திய கடற்கொள்ளையர்கள் ஒருபோதும் திருந்தப்போவதில்லை என்று தெரிகின்றது. பதிவை போட்டவர் சிங்கள அரசிடம் கோரிக்கை வைப்பதுக்குப் பதிலாக கடற்கொள்ளையர்களுக்கு அடுத்தவன் நாட்டுக்குப்போய் கொள்ளயிடாதீர்கள் என்று அறிவுரை கூறியிருக்கலாம். தேர்தல் நேரத்தில் செத்தால் 10 இலட்சம் பணமும் அரசு வேலையும் கிடைக்குமென்கிறானே பார்! அங்கேதான் நிற்கிறான் இந்தியன்!

Link to comment
Share on other sites

On 22/1/2021 at 05:01, உடையார் said:

அதே தமிழக மீனவர்கள் எமது போராட்டதிற்கு எத்தனையோ விதமாக உதவி செய்தார்களோ அதை நீங்கள் மறந்துவிட்டீர்களா? எமது வளத்தை கொள்ளையிடும் சிங்கள அல்லது சீனாவைவிட, தமிழக சகோதரங்களிடம் போவதே மேல்,

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு

On 22/1/2021 at 05:11, உடையார் said:

குரல் கொடுக்க நமது தமிழ்நாட்டு மீன்வர்கள் மட்டும்தான், அவர்கள் மேட்டுகுடிகள் அல்ல,

நல்ல மனதுள்ள மோட்டு குடிகள்👍

On 22/1/2021 at 14:09, குமாரசாமி said:

உடையார்!
70 வருடங்களாக சிங்களவன் அடிக்கிறான் கொல்லுறான் அழிக்கிறான்.

On 22/1/2021 at 19:19, உடையார் said:

சிங்கள பிணத்திண்ணி கழுகுகளை விட இவர்கள் மேலானவர்கள், நீங்கள் பணம் கொடுத்தீர்களா அல்லது கண்டனீர்களா, ஆதாரம்? மனமுவந்து செய்த பல உதவிகள்

On 22/1/2021 at 22:21, nedukkalapoovan said:

எனக்கு ஒரு விடயம் மட்டும் புரியவில்லை. இரு தரப்பிலும் உள்ளவர்கள் தமிழ் பேசும் மீனவர்கள். சகோதர்கள்.

இந்தியாவின் ஒரு பாகமாக எமது பகுதியை, அல்லது முழு இலங்கையையுமே இணைக்கும் நோக்கத்துடன் 1987ல் வந்த இந்திய இராணுவத்துக்கு எதிராக சிங்களவனிடம் ஆயுதம் வாங்கி இந்திய இராணுவத்தை ஈழத்தமிழர் அடித்து விரட்டியதே எம் தமிழக உறவுகளுக்கு எதிரான  ஈழத்தமிழரின்  முதல் துரோகம். அடைக்கலம் தந்த தமிழகத்தில் வைத்து அந்த நாட்டின் முன்னாள் பிரதமரும், ஈழத்தமிழருக்கு மிகவும் உதவிய அன்னை இந்திராவின் பாசமிக்க மகனுமான இராஜிவ் காந்தியையும் மேலும் பல தமிழக உறவுகளையும் கொன்று தீர்த்தது எம் தமிழக உறவுகளுக்கு எதிரான  ஈழத்தமிழரின்  இரெண்டாவது துரோகம். 

இந்த துரோகங்கள் இடம் பெற்றிருக்காவிட்டால் இன்று தமிழக உறவுகளும் ஈழத்து மீனவரும் ஒன்றாக நின்று மீன் பிடித்திருப்பார்கள். இந்திய கடற்படை இவர்களை பாதுகாத்திருக்கும். ஈழத்தமிழர் அந்த கடற்படையை வழிநடத்தி இருப்பர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, கற்பகதரு said:

இந்த துரோகங்கள் இடம் பெற்றிருக்காவிட்டால் இன்று தமிழக உறவுகளும் ஈழத்து மீனவரும் ஒன்றாக நின்று மீன் பிடித்திருப்பார்கள். இந்திய கடற்படை இவர்களை பாதுகாத்திருக்கும். ஈழத்தமிழர் அந்த கடற்படையை வழிநடத்தி இருப்பர். 

50 வருடங்களுக்கு மேலாக இந்த மீன்பிடி பிரச்சனைகள் நடக்கின்றன என்று தமிழில் சொன்னால் உங்களுக்கு விளங்குமா விளங்காதா? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த தமிழ்நாட்டு அரசியல் தலைவராவது தமிழ்நாட்டவர்களிடம் எல்லை தாண்டி சென்று மீன்பிடிப்பது தவறு சட்டவிரோதம் இதனால் இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிப்படையும் என்று தவறை எடுத்து சொல்லியிருக்கிறார்களா? இலங்கைக்கு சென்று மீன் கொள்ளை அடிப்பது தமிழ்நாட்டவர்களின் அடிப்படை உரிமை என்று உசுப்போத்தி அறிக்கைகள் விட்டு போராட்டம் நடத்துகிறார்கள் 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விளங்க நினைப்பவன் said:

எந்த தமிழ்நாட்டு அரசியல் தலைவராவது தமிழ்நாட்டவர்களிடம் எல்லை தாண்டி சென்று மீன்பிடிப்பது தவறு சட்டவிரோதம் இதனால் இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிப்படையும் என்று தவறை எடுத்து சொல்லியிருக்கிறார்களா? இலங்கைக்கு சென்று மீன் கொள்ளை அடிப்பது தமிழ்நாட்டவர்களின் அடிப்படை உரிமை என்று உசுப்போத்தி அறிக்கைகள் விட்டு போராட்டம் நடத்துகிறார்கள் 😡

தமிழ்நாட்டில் மீன்பிடி பிஸ்தா/மாஃபியா இந்த பாலு.....

இவர் எங்கை எப்ப ஆருக்கு பல்லை காட்டினார் ????  ஏன் என்னத்துக்கு? விவரம் தெரியுமா தெரியாதா?
சும்மா புலம்பப்படாது டொட்😎

Pawan Khera on Twitter: "Year 2010. Kanimozhi and Baalu honouring Mahinda  Rajapaksa. Wasn't he a war criminal in 2010? http://t.co/SE8dvKQPar"

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

50 வருடங்களுக்கு மேலாக இந்த மீன்பிடி பிரச்சனைகள் நடக்கின்றன என்று தமிழில் சொன்னால் உங்களுக்கு விளங்குமா விளங்காதா? :cool:

அதற்குத்தான் இந்தியன் ஆமி வந்தது பற்றி எழுதியிருந்தேனே? ஹிந்தியில் எழுதினால்தானா உங்களுக்கு அது விளங்கும்?😗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"தாய்லாந்து, சீனா, தாய்வான் போன்ற பல நாடுகள் இலங்கையின் கடல் வளத்தைச் சூறையாடுகின்றன. அதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி அளித்திருக்கின்றது.

எமது கடந்த காலப் போராட்டத்தில் இந்தியத் தமிழர்களுடைய அதிலும் குறிப்பாக, மீனவர்களுடைய பங்கு என்பது அளப்பரியது. அதனை நாம் மறுப்பதற்கில்லை.

மீனவர்கள் அத்துமீறும் போது கைதுகள் நடந்திருக்கின்றன. அவ்வாறே தற்போதும் நடந்திருக்கலாம். ஆனால், அதற்கு மேலதிகமாகச் சென்று நான்கு மீனவர்கள் நீரில் மூழ்கி இறந்திருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல."

"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கற்பகதரு said:

இந்தியாவின் ஒரு பாகமாக எமது பகுதியை, அல்லது முழு இலங்கையையுமே இணைக்கும் நோக்கத்துடன் 1987ல் வந்த இந்திய இராணுவத்துக்கு எதிராக சிங்களவனிடம் ஆயுதம் வாங்கி இந்திய இராணுவத்தை ஈழத்தமிழர் அடித்து விரட்டியதே எம் தமிழக உறவுகளுக்கு எதிரான  ஈழத்தமிழரின்  முதல் துரோகம். அடைக்கலம் தந்த தமிழகத்தில் வைத்து அந்த நாட்டின் முன்னாள் பிரதமரும், ஈழத்தமிழருக்கு மிகவும் உதவிய அன்னை இந்திராவின் பாசமிக்க மகனுமான இராஜிவ் காந்தியையும் மேலும் பல தமிழக உறவுகளையும் கொன்று தீர்த்தது எம் தமிழக உறவுகளுக்கு எதிரான  ஈழத்தமிழரின்  இரெண்டாவது துரோகம். 

இந்த துரோகங்கள் இடம் பெற்றிருக்காவிட்டால் இன்று தமிழக உறவுகளும் ஈழத்து மீனவரும் ஒன்றாக நின்று மீன் பிடித்திருப்பார்கள். இந்திய கடற்படை இவர்களை பாதுகாத்திருக்கும். ஈழத்தமிழர் அந்த கடற்படையை வழிநடத்தி இருப்பர். 

சத்தியமா எனக்குச் சிரித்துச் சிரித்து அழுகையே(🤪) வந்துவிட்டது.. 

இரை(😬)வா எனக்கு மட்டுமேன் இப்படி....

நெப்போலியன்"".......இறைவா தயவு செய்து என் நண்பர்களிடம் இருந்து என்னைக் காப்பாற்று"" என்று கூறியது இதைத்தானோ.........

😂😂😂😂😂😂😂

விழுந்து விழுந்து சிரிக்கிறதுக்கு ஒரு emoji  இல்லையா... ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கற்பகதரு said:

அதற்குத்தான் இந்தியன் ஆமி வந்தது பற்றி எழுதியிருந்தேனே? ஹிந்தியில் எழுதினால்தானா உங்களுக்கு அது விளங்கும்?😗

எனக்கென்னமோ நீங்கள் சிங்களம் சார்பாக, ஈழத் தமிழரையும் தமிழ்நாட்டாரையும் சிண்டு முடிந்துவிடுவதாகத் தோன்றுகிறது.. 🤥

எது உண்மை.. ? 

Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

எனக்கென்னமோ நீங்கள் சிங்களம் சார்பாக, ஈழத் தமிழரையும் தமிழ்நாட்டாரையும் சிண்டு முடிந்துவிடுவதாகத் தோன்றுகிறது.. 🤥

எது உண்மை.. ? 

தோன்றுவதெல்லாம் அபிப்பிராயங்களே, உண்மைகளல்ல.

தமிழ்நாட்டாரை ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்டத்துக்கு ஆதரவளக்கச் சொல்லி நான் கேட்டதுமில்லை.

இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பச்சொல்லி கேட்டதும் நானல்ல.

ஈழத்தமிழரை இந்திய இரணுவத்துடன் மோதச்சொல்லி சொன்னவரும் நானல்ல.

இராஜீவ் காந்தியை கொன்றது ஈழத்தமிழர் என்று செய்திகளில் படித்தே தெரிந்து கொண்டேன்.

தமிழக மீனவர்கள் ஈழத்து மீனவர்களை தாக்க வேண்டும் என்று நான் ஒரு போதும் சொன்னதில்லை.

இலங்கை கடற்படையுடன் இந்திய மீனவர்களின் மோதல் கூட எனக்கு தெரியவந்தது இந்த செய்திகள் மூலம் தான்.

கண்ணால் காண்பதும் பொய்,

காதால் கேட்பதும் பொய்,

தீர விசாரித்து அறிவதே மெய்.

😃😀🙂😮🙂😀😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கற்பகதரு said:

சிண்டு முடிகிறீர்கள் என்பத தாங்கள் மறுக்கவில்லை... ம்ம்ம்ம்ம்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தவன் கடலில் போய் கொள்ளையடிப்பதே இவனுகள் பிழைப்பு!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.