Jump to content

வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினருக்கு மறியல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் இன்று நீதிமன்றில் ஆஜராகிய நிலையில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, அவர்கள் எதிர்வரும் 27ம் திகதி வரை ஐந்து நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நெடுங்கேணி வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருட் திணைக்களமும், நெடுங்கேணி பொலிஸாரும் பல்வேறு தடைகளை ஏற்ப்படுத்தி வந்ததுடன் தொல்பொருட்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் வவுனியா நீதிவான் நீதிமன்றில் வழக்கினையும் தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த வழக்கு வவுனியா நீதிமன்றில் கடந்த வருடம் ஒக்டோபரில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது நிர்வாகத்தினர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் நவம்பர் ஆறாம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதன்பின்னர், கடந்த நவம்பர் ஆறாம் திகதி ஆலய நிர்வாகத்தினர் நீதிமன்றில் மீண்டும் ஆஜராகிய நிலையில் கொவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக அநேகமான வழக்குகள் விசாரணைகளுக்கு அழைக்கப்படாமல் தவணை இடப்பட்டிருந்தது. அந்தவகையில் இவ்வாண்டு தை மாதத்திற்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வழக்கினை முன்னமே அழைக்குமாறு தொல்பொருட் திணைக்களம் சார்பாக ஆஜராகிய சட்டதரணிகளால் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் டிசம்பர் மாதம் 11ம் திகதிக்கு வழக்கு தவணையிடப்பட்டது.

எனினும், வழக்கின் திகதி மாற்றம் செய்யப்பட்டமை தொடர்பாக நெடுங்கேணி பொலிஸார் தமக்கு தெரியப்படுத்தவில்லை என்று தெரிவித்த ஆலய நிர்வாகத்தினர் நீதிமன்றிற்குச் சமூகமளித்திருக்கவில்லை. அன்றைய தினம் அவர்களது பிணையும் இரத்தாகியிருந்த நிலையில், ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று வழக்குத் தவணைக்காக ஆயராகிய ஆலயத்தின் நிர்வாகத்தினர் மற்றும் பூசகர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினருக்கு மறியல்! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோயில் கும்பிட்டவனுக்கு மறியல்.
கொலை செய்தவனுக்கு விடுதலை.

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

கோயில் கும்பிட்டவனுக்கு மறியல்.
கொலை செய்தவனுக்கு விடுதலை.

பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் மறந்துவிட்டதா சாமியாரே...??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பிழம்பு said:

வழக்கின் திகதி மாற்றம் செய்யப்பட்டமை தொடர்பாக நெடுங்கேணி பொலிஸார் தமக்கு தெரியப்படுத்தவில்லை என்று தெரிவித்த ஆலய நிர்வாகத்தினர் நீதிமன்றிற்குச் சமூகமளித்திருக்கவில்லை.

திகதி மாற்றம் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த தவறிய நீதிமன்றம் உத்தரவு மட்டும் உடனே.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

கோயில் கும்பிட்டவனுக்கு மறியல்.
கொலை செய்தவனுக்கு விடுதலை.

சொறீலங்கா நீதிமன்றங்கள் எல்லாம்.. நீதியை சொல்வதில்லை.. எஜமானர்களின் கட்டளைகளை சொல்கின்றன. இதெல்லாம் ஒரு நாடு. 

அண்மையில்.. முன்னாள் சனாதிபதி சட்டத்தரணி.. மிஸ்டர் சுமந்திரனே.. சொறீலங்கா நீதித்துறையை நிந்தனை செய்திருந்தார்... தமிழர்களுக்காக அல்ல.. ரஞ்சன் ராமனாயவுக்கு எதிராக. அவரும் சும்மா ஆளில்லை அந்த விஜய கலா ஆன்ரியை படுத்தின பாடு.. புலி என்றதை உச்சரித்ததற்காக. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.