Jump to content

இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிப்பொறிமுறை ஒன்றை ஜெனீவா அமர்வில் ஸ்தாபிக்கப்பட வேண்டும் - சர்வதேச மன்னிப்புச்சபை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(நா.தனுஜா)

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் கண்காணிப்பதற்கும் அறிக்கை சமர்ப்பிப்பதற்கும் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களைச் சேகரிப்பதற்கும் சர்வதேச நீதிப்பொறிமுறை ஒன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை எதிர்வரும் 46 ஆவது கூட்டத்தொடரின் போது அறிமுகப்படுத்த வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியிருக்கிறது.

இதுகுறித்து மன்னிப்புச்சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகி, மார்ச் மாதம் 19 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இதன்போது இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் கண்காணிப்பதற்கும் அறிக்கை சமர்ப்பிப்பதற்கும் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களைச் சேகரிப்பதற்கும் சர்வதேச நீதிப்பொறிமுறை ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும்.

இலங்கையில் மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் ஊடகங்கள் மீதான அடக்குமுறையில் ஏற்பட்டிருக்கும் அதிகரிப்பு, முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீதான தாக்குதல்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தில் உள்ளவற்றில் மிகவும் வரையறுக்கப்பட்ட தீர்மானங்களே நிறைவேற்றப்பட்டுள்ளமை மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளடங்கலாக 30/1 தீர்மானத்திலிருந்து விலகுவதாக இலங்கை அறிவித்தமை ஆகியவற்றின் பின்னணியில் இத்தகையதொரு சர்வதேச நீதிப்பொறிமுறை அவசியமாகும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்தினால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளின் அடிப்படையில், ஒரு முறையான பொறிமுறையின் கீழ் இலங்கை அரசாங்கம் செயற்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.

கடந்த சில வருடங்களில், குறிப்பாகக் கடந்த வருடம் இலங்கையின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் உள்ளடங்கலாக சிவில் சமூகக்குழுக்களுக்கான இடைவெளி பாதகமான முறையில் மட்டுப்படுத்தப்பட்டமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.

குறிப்பாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஊடகவியலாளர் தரிஷா பாஸ்டியன்ஸ் மீதான அடக்குமுறை, சமூகவலைத்தள செயற்பாட்டாளர் ரம்ஸி ரஸீக் மற்றும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஆகியோரின் கட்டாய தடுத்துவைப்பு, எழுத்தாளர் ஷக்திக சத்குமாரவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணை ஆகியவை தொடர்பில் நாம் ஏற்கனவே விசேடமாக சுட்டிக்காட்டியிருந்தோம்.

இத்தகைய அடக்குமுறைகளின் விளைவாக பல செயற்பாட்டாளர்கள் நாட்டைவிட்டுத் தப்பிச்சென்றிருக்கின்றார்கள். அதுமாத்திரமன்றி இலங்கையில் தொடர்ந்தும் சிறுபான்மையினத்தவர்க்ளை இலக்குவைத்து முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் பெரிதும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும் சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிப்பொறிமுறை ஒன்றை ஜெனீவா அமர்வில் ஸ்தாபிக்கப்பட வேண்டும் - சர்வதேச மன்னிப்புச்சபை | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

‘போலி வாகுறுதிகளை நம்பி சர்வதேச சமூகம் இலங்கையிடம் ஏமாறக் கூடாது’

January 23, 2021

 

Meenadshi-ganguly.jpg

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி அமைத்துள்ள உள்ளக விசாரணைக் குழுவைக் கண்டு பன்னாட்டு அரசுகள் ஏமாறக் கூடாது என ஹ்யூமன் ரைட்ச் வோட்ச் (மனித உரிமைகள் கண்காணிப்பகம்) அமைப்பு எச்சரித்துள்ளது.

மனித உரிமைகள் விஷயத்தில் இலங்கை அரசின் மோசமான நிலைப்பாடு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலின் தீவிர கவனத்தில் உள்ள நிலையில், இந்த உள்நாட்டு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அந்த அமைப்பின் தெற்காசிய இயக்குநர் மீனாக்ஷி கங்குலி தெரிவித்துள்ளார்.

“பன்னாட்டு விசாரணையை உடனடியாக தவிர்க்கும் நோக்கிலேயே இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான அழுத்தங்கள் ஏற்படும் போதெல்லாம் இப்படியான விசாரணைக் குழுக்களை அமைப்பது இலங்கைக்கு வாடிக்கையாகவுள்ளது.“

அவ்வகையில் நீண்ட காலம் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது இலங்கையில் குறைந்தது ஒரு 12க்கு மேற்பட்ட உள்ளக விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன, ஆனால் ஒன்றின் மூலமும் யாரும் நீதியின் முன்னிறுத்தப்படவில்லை அல்லது காணாமல் போனவர்களைத் தேடிக் கண்டு பிடிக்க அவர்களின் குடும்பங்களுக்கு உதவவில்லை என்று அவரது அறிக்கை கூறுகிறது.

இலங்கை அரசால் அமைக்கப்பட்ட உள்நாட்டு விசாரணைக் குழுக்களின் அறிக்கைகள் பெரும்பாலும் வெளியிடப்படவில்லை, மேலும் அதில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் அமல்படுத்தப்படவுமில்லை என்கிறார் மீனாக்ஷி கங்குலி.

“சர்வதேசப் பார்வையாளர்கள் மற்றும் ஐநா வல்லுநர்களால் இலங்கையின் சட்ட வழிமுறை கட்டமைப்புகளில் ஆழமான பிரச்சனைகள் உள்ளன என்பது தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது“.

rajapaksa-srilanka.jpg

கடந்த 2012ல் ஐ நா மனித உரிமைகள் கவுன்சில் தான் முன்னர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இயற்றிய தீர்மானத்தில் கூறப்பட்டிருந்த பரிந்துரைகளை நிறைவேற்றும்படி இலங்கை அரசைக் கோரியது. ஆனால் அது நடைபெறாத நிலையில், போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் தேவை என்பது உணரப்பட்டது என்று தனது அறிக்கையில் அவர் கூறுகிறார்.

அதே போல் 2015ல் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் ஏகமனதான தீர்மானமொன்றில் இலங்கை இணைந்து உண்மை, நீதி, இழப்பீடு குறித்து ஆராயவும் மற்றும் அது போன்ற குற்றங்கள் மீண்டும் இடம்பெறாது என்பதையும் உறுதியளித்தது. அதேவேளை பொறுப்புக் கூறல் தொடர்பில் பன்னாட்டு நீதிபதிகள், குற்றஞ்சாட்டும் வழக்கறிஞர்கள், விசாரணையாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் சட்டத்தரணி ஆகியோரை உள்வாங்கவும் இலங்கை உடன்பட்டது.

அந்த வழிமுறை மந்தமாக முன்னேறினாலும் அதனால் ஊக்கமடைந்த ஐ நா மனித உரிமைகள் கவுன்சில் அதற்கான காலகட்டத்தை நீட்டித்தது என்றாலும் நவம்பர் 2019ல் ஜனாதிபதியாக பதவியேற்ற கோத்தாபய ராஜபக்ஷ இலங்கையை அந்தத் தீர்மானத்திலிருந்து விலக்கிக் கொண்டு அதனால் ஏற்பட்ட முன்னேற்றத்தையும் ஒழித்துக் கட்டினார் என்று தனது அறிக்கையில் மீனாக்ஷி கங்குலி குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி 2005-2015 காலப் பகுதியில் பாதுகாப்புச் செயலராக இருந்த போது மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார் என்றும், அவர் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு மோசமான குற்றங்களில் ஈடுபட்டவர்களை முக்கியமான மூத்த பொறுப்புகளில் நியமித்துள்ளார், பொதுமக்களைக் கொலை செய்த சில இராணுவ வீரர்களுக்கு அவர் மன்னிப்பும் வழங்கியுள்ளார் என்பதையும் கங்குலி  சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் மீண்டும் அச்ச சூழல் திரும்பியுள்ளது என்று கூறும் அவரது அறிக்கை, முன்னர் நடைபெற்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட செயற்பாட்டாளர்கள், செய்தியாளர்கள், சட்டத்தரணிகள் மட்டுமின்றி பொலிஸ் விசாரணைகளை நடத்தியவர்களும் மௌனமாக்கப்பட்டனர் என்று மேலும் தெரிவித்துள்ளது. 

பலவீனமாகவுள்ள சிறுபான்மையினரை அச்சுறுத்தி அவர்கள் மீதான தாக்குதலை ராஜபக்ஷகளின் அரசு முன்னெடுத்து வருகிறது என்பதற்கு சமீபத்திய சான்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திலிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இடிக்கப்பட்டதாகும் என்று சாடுகிறார் கங்குலி.

“இலங்கையில் எச்சரிக்கை மணிகள் தெளிவாக ஒலிக்கின்றன. எனவே ஐ நா மனித உரிமைகள் கவுசில் புதிய தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டியது மிகவும் அவசியம். அதன் மூலம் எதிர்காலத்தில் குற்றஞ்சாட்டி வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்படும் போது அதற்கு தேவைப்படும் ஆதாரங்களைச் சேகரித்து அதைப் பாதுகாப்பது,  அரசைத் தொடர்ந்து கண்காணிப்பது ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும்“

எனவே உறுப்பு நாடுகள் இலங்கை அரசு தற்போது அளித்துள்ள போலி வாக்குறுதிகளால் ஏமாறாமல் இருக்க வேண்டும், மற்றும் அண்மையில் அங்கு நடைபெற்றும் வரும் விஷயங்களை கவனத்தில் எடுக்க வேண்டும் என்றும் ஹ்யூமன் ரைட்ஸ் வாட்சின் அறிக்கையில் அதன் தெற்காசியப் பகுதிக்காக இயக்குநர் மீனாக்ஷி கங்குலி வலியுறுத்தியுள்ளார். #போலி_வாகுறுதிகளை #சர்வதேச_சமூகம் #இலங்கை #மனிதஉரிமைகள்கண்காணிப்பகம் #மீனாக்ஷி_கங்குலி

 

https://globaltamilnews.net/2021/155994/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மீது கிடுக்குப்பிடி: கசிந்துள்ள ஐ.நா. ஆணையாளரின் அறிக்கை- முழு விபரம்!

46ஆவது ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னதாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடமிருந்து இலங்கை பற்றிய அறிக்கை கசிந்துள்ளது. 

இலங்கை குறித்த விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைப்பதன் மூலம், உலகளாவிய அதிகார வரம்பின் கீழ் விசாரணைகள் மற்றும் வழக்குகளை நிறுவுதல் மற்றும் சர்வதேச குற்றங்களில் சிக்கியுள்ள இலங்கை அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தல் என காட்டமான தீர்மானங்கள் மற்றும் முடிவுகளை உள்ளடக்கியதாக அறிக்கை காணப்படுகிறது.

அறிக்கையின் முழு விபரம்:  

“யுத்தம் முடிவடைந்து ஏறக்குறைய 12 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்திற்கான உள்நாட்டு முயற்சிகள் பலமுறை தீர்வுகளை வழங்கத் தவறிவிட்டன,

மேலும், நீதி வழங்கும் முயற்சிகள் கைவிடப்பட்டு, நாட்டில் உயரதிகாரிகள் கடந்த காலக் குற்றங்களை ஒப்புக்கொள்ள மறுத்து வருவதால், இலங்கை கடந்த காலத்தைப் பற்றி மறுக்கும் நிலையில் உள்ளது.

இது நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பாதுகாப்புத் துறையில் எந்தவொரு விசாரணையையும் அல்லது விரிவான சீர்திருத்தங்களையும் செயற்படுத்தத் தவறியுள்ளது.

இந்த சூழலில், நிறைவேற்று அதிகாரத்தில் நீதித்துறை மற்றும் பிற முக்கிய நிறுவனங்களின் சுதந்திரம் மேலும் வலுவிழந்துள்ளது.

சிறுபான்மை சமூகங்களுடனான நல்லிணக்கம் மற்றும் மரியாதையை உறுதிப்படுத்தும் ஒரு முழுமையான தேசிய முயற்சியின் ஆரம்பம் தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது.

ஐ.நா. தீர்மானம் 30/1இல் வாக்குறுதியளிக்கப்பட்ட ‘மீண்டும் நிகழாமை’ என்ற  உத்தரவாதங்களை அடைவதற்குப் பதிலாக, இலங்கையின் தற்போதைய போக்கு கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்த கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் மீண்டும் நிகழ்வதை எடுத்துக் காட்டுகிறது.

இதேவேளை, COVID-19 தொற்றுநோயின் சவால்களை எதிர்கொள்வதை முழுமையாகப் பாராட்டும் அதேவேளையில், கடந்த ஆண்டு இடம்பெற்ற நடவடிக்கைகளில் உயர் ஸ்தானிகர் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளார்.

இது, மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைமை மற்றும் எதிர்காலத்திலும் உரிமை மீறல்களுக்கான அபாயத்தின் தெளிவான ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளைக் குறிக்கிறது. எனவே, இதனை்த தடுக்கும் வலுவான நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.

2030 நிகழ்ச்சி நிரலுக்கு அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு இருந்தபோதிலும், தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினர் ஓரங்கட்டப்பட்டு, தேசிய பார்வை மற்றும் அரசாங்கக் கொள்கையிலிருந்து விலக்கப்படுகிறார்கள்.

அதேநேரத்தில், மிக உயர்ந்த மாநில அதிகாரிகளிடமிருந்து பிளவுபடுத்தும் மற்றும் பாகுபாடான சொல்லாட்சிகள் மேலும், பிரிவினை மற்றும் வன்முறையை உருவாக்கும் அபாயங்களை ஏற்படுத்துகின்றன.

2019இல் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து வந்த அவசரகால பாதுகாப்புப் பணிகள் அரசாங்கத்தின் இராணுவ மயமாக்கலாக வளர்ந்திருப்பதாக உயர் ஸ்தானிகர் கவலை கொண்டுள்ளார்.

பொதுமக்கள் நிர்வாகத்தின் முக்கிய பதவிகளுக்கு போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்க்ள என நம்பத்தகுந்தவர்கள் உட்பட செயலில் மற்றும் முன்னாள் இராணுவ வீரர்களை அரசாங்கம் நியமித்துள்ளதுடன், பொதுமக்கள் செயற்பாடுகளை ஆக்கிரமிக்கும் இணையான பணிக்குழுக்கள் மற்றும் ஆணைக்குழுக்களையும் உருவாக்கியுள்ளது.

20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நிர்வாகத்தின் முக்கியமான மாற்றங்கள் ஜனநாயக நடவடிக்கைகளை அச்சுறுத்துகிறது.

சமீபத்திய ஆண்டுகளில் விரிவடைந்த சுயாதீன ஊடகங்கள் உட்பட சிவில் சமூகத்திற்கான இடம் குறுகிய காலத்திற்குள் முடங்கியுள்ளமை குறித்து உயர் ஸ்தானிகர் கவலைப்படுகிறார்.

அத்துடன், அரச முகவர்களின் மிரட்டல் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள், வழக்கறிஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூகப் பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு எதிரான துன்புறுத்தல் உள்ளிட்ட அனைத்து வகையான நடவடிக்கைகள், கண்காணிப்புக்களையும் உடனடியாக முடிவுக்கு கொண்டுவருமாறு உயர் ஸ்தானிகர் அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறார். மேலும், முறையான சிவில் சமூக நடவடிக்கைகளை வலியுறுத்துகிறார்.

எனவே, மனித உரிமைகள் சபை இதற்கு முன்னர் இரண்டு முறை, உள்நாட்டுப் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகளுக்கு தனது ஆதரவை இலங்கைக்குக் கொடுத்துள்ளது, தீர்மானம் 30/1இல் அதன் உச்சக்கட்டமாகப் பார்க்கப்படுகிறது.

சர்வதேச குற்றங்கள் மற்றும் கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறலுக்கான ஒரு அர்த்தமுள்ள பாதையைத் தொடர அரசாங்கம் இப்போது அதன் இயலாமை மற்றும் விருப்பமின்மையை நிரூபித்துள்ளது.

அதற்குப் பதிலாக அடிப்படையில் வேறுபட்ட அணுகுமுறையை அடையாளம் காட்டியது, இது இழப்பீடு மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது, ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மை மற்றும் நீதி மற்றும் அவர்களின் உரிமைகளை மறுக்கப்படுகிறது.

 

மூன்று முக்கியமான காரணங்களுக்காக மனித உரிமைகள் பேரவை இலங்கை மீது மேலும் நடவடிக்கை எடுப்பது மிக முக்கியமாகும்.

முதலாவதாக, கடந்த கால சூழலில் தப்பிப்பிழைத்த பல்லாயிரக்கணக்கானோரின் வாழ்க்கைத் துணைவர்கள், பெற்றோர்கள், பிள்ளைகள் மற்றும் பிற உறவினர்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதும், நீதியை வழங்குவதும் அவசரகால இழப்பீடுமாகும்.

இரண்டாவதாக, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதில் தோல்வியானது, 2030 நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நிலையான அமைதி, மனித மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. மற்றும் எதிர்காலத்தில் மனித உரிமை மீறல்கள் மற்றும் மோதல் போக்கின் தொடர்ச்சியான வடிவங்களைக் கொண்டுள்ளது.

இறுதியாக, இந்த அறிக்கையில் முன்னிலைப்படுத்தப்பட்ட விடயங்கள் ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் சபை உட்பட, அதன் செயற்பாடுகளின் அடிப்படையில் மீண்டும் ஒரு முக்கியமான சவாலாக உள்ளன.

இலங்கையில் 2009இற்குப் பின்னரான ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகள் குறித்து சுயாதீனமாக மதிப்பாய்வு செய்யப்பட்டது. மோதல் முடிவுக்கு வந்ததால் தடுப்பு நிகழ்ச்சி நிரலில் முறையான தோல்வி ஏற்பட்டது. சர்வதேச சமூகம் அந்தத் தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது, அல்லது பிற சூழல்களில் கடுமையான மீறல்களுக்கு பொறுப்புணர்வைத் தடுக்கவும் அடையவும் அதன் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஒரு முன்னுதாரணத்தை அனுமதிக்கக்கூடாது.

2030 நிகழ்ச்சி நிரலுக்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை உயர் ஸ்தானிகர் வரவேற்கிறார், அமைதி கட்டமைத்தல் மற்றும் மறுசீரமைத்தல் போன்ற சில நடவடிக்கைகளைத் தொடர வேண்டும்.

ஆனால், இலங்கை நல்லிணக்கத்தை உறுதிசெய்து, நிறுவனமயமாக்கப்பட்ட மற்றும் முறையான தண்டனையற்ற கலாசாரத்தை திறம்பட நிவர்த்தி செய்தால் மட்டுமே நிலையான வளர்ச்சி மற்றும் அமைதியை அடைய முடியும்.

எவ்வாறாயினும், தீர்மானம் 30/1 மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கான ஆதரவைத் திரும்பப் பெறுவதன் மூலமும், அந்தத் தீர்மானத்தின் முழு அளவிலும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியதன் மூலமும், உள்நாட்டுப் பொறிமுறை மூலமாக உண்மையை வெளிக்கொணர்வதற்கான சாத்தியப்பாட்டை அரசாங்கம் பெருமளவில் மூடிவிட்டது.

அத்துடன், சமீபத்திய போக்குகளைப் பார்க்கும்போது, அரசாங்கத்தின் புதிய முயற்சிகளில் முன்னேற்றம் உட்பட இலங்கையில் மனித உரிமைகள் நிலைமையைக் கண்காணிப்பதை மேம்படுத்தவும், பொறுப்புக்கூறல் விடயங்களை முன்னேற்றுவதற்கான ஒரு ஒத்திசைவான மற்றும் பயனுள்ள திட்டத்தை வகுக்கவும் சர்வதேச மட்டத்தில் மனித உரிமைகள் பேரவையை உயர் ஸ்தானிகர் அழைக்கிறார்.

குற்றவியல் பொறுப்புணர்வை முன்னெடுப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை வழங்குவதற்கும் உறுப்பு நாடுகளுக்கு பல கடமைகள் உள்ளன.

இலங்கையின் நிலைமையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல், இலங்கையில் உள்ள அனைத்து தரப்பினரும் செய்த குற்றங்களை விசாரிப்பதற்கும், வழக்குத் தொடுப்பதற்கும் உறுப்பு நாடுகள் தீவிர நடவடிக்கையைத் தொடரலாம்.

அல்லது, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து பொறுப்புக்கூறலுக்கான இத்தகைய வழிகளை ஊக்குவிக்க, சர்வதேச குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிப்பதன் மூலம், இந்த முயற்சிகளை முன்னெடுப்பதற்கான அர்ப்பணிப்புத் திறனை ஆதரிப்பதற்கும் ஊக்குவிக்கிறார்.

இலங்கை அரசாங்கத்திற்கு என உயர் ஸ்தானிகர் பின்வருவனவற்றைப் பரிந்துரைக்கிறார்

  • அனைவருக்கும் பாகுபாடு காட்டாமை மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதன் அடிப்படையில், 2030 நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப, அனைவரையும் உள்ளடக்கிய, பன்மைத்துவ பார்வையை தீவிரமாக ஊக்குவித்தல்.
  • அரசியலமைப்பு மற்றும் சட்டத் சீர்திருத்தங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை வழிமுறைகள் மற்றும் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் ஆகியவற்றின் பரிந்துரைகளை ஏற்றிருப்பதை உறுதி செய்தல்.
  • சித்திரவதை, பாலியல் வன்முறை மற்றும் பிற மனித உரிமை மீறல்கள் தடைசெய்யப்பட்டுள்ளன, அவை முறையாக விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படும் என இராணுவம், உளவுத்துறை மற்றும் பொலிஸ் படைகளின் அனைத்து கிளைகளுக்கும் பகிரங்கமாக தெளிவான வழிமுறைகளை வழங்குதல்.
  • மனித உரிமை பாதுகாவலர்கள், சமூகப் பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான அனைத்து வகையான கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல் மற்றும் பழிவாங்கல்களை உடனடியாக நிறுத்த அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் உத்தரவிடவும்.
  • மொத்த மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்கள், சித்திரவதை மற்றும் மோசமான சிகிச்சை உள்ளிட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் உடனடியாகவும், முழுமையாகவும், பாரபட்சமின்றி விசாரிக்கவும், வழக்குத் தொடரவும், நீண்டகால ஆதார வழக்குகளில் பொறுப்புணர்வை உறுதி செய்வதற்கு அதிக முன்னுரிமை அளிக்கவும்.
  • மனித உரிமைத் தரங்களுக்கு இணங்க, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் என நம்பப்படும் அலுவலக பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பிற பொது அதிகாரிகளை நீக்குதல். பொறுப்புக்கூறல் மற்றும் பொதுமக்கள் மேற்பார்வை ஆகியவற்றை வலுப்படுத்தவும் உறுதிப்படுத்தவும் பாதுகாப்புத் துறையில் பிற சீர்திருத்தங்களைச் செயற்படுத்துதல்.
  • மனித உரிமைகள் ஆணையகம் சுயாதீனமாகச் செயற்படுவதற்கும் போதுமான ஆதாரங்களைப் பெறுவதற்கும் கட்டமைப்பு, பாதுகாப்புகளை உறுதி செய்தல்.
  • காணாமல்போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் திறம்பட மற்றும் சுயாதீனமாக செயற்படக்கூடிய சூழலை உறுதிசெய்க.

இரண்டு அலுவலகங்களுக்கும் அவற்றின் ஆணையை திறம்பட நிறைவேற்ற போதுமான ஆதாரங்கள் மற்றும் தொழில்நுட்ப வழிமுறைகளை வழங்குதல், பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கான பாலின மையத்துடன் இடைக்கால நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், பயனுள்ள மற்றும் விரிவான இழப்பீடுகள் மற்றும் உண்மை மற்றும் நீதியை வழங்குதல்.

  • சர்வதேச சிறந்த நடைமுறைகளைக் கடைபிடிக்கும் சட்டம் மாற்றப்படும் வரை புதிய கைதுகளுக்கு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்த தடையை நிறுவுதல்.
  • ஜனாதிபதியால் மன்னிப்பு அல்லது பிற வகையான அனுமதியை வழங்குவதற்கான நிலையான நடைமுறைகளை நிறுவுதல். அதை நீதித்துறை மறுஆய்வுக்கு உட்படுத்துதல், மற்றும் கடுமையான மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களை கவனத்தில் கொள்ளல்.
  • சம்பந்தப்பட்ட துறைசார் ஆணை வைத்திருப்பவர்களால் புதுப்பிக்கப்பட்ட நாட்டு வருகைகளை திட்டமிடுவதன் மூலம் சிறப்பு நடைமுறைகளுக்கான அதன் நிலையான அழைப்பை மதிக்கவும், ஒப்பந்த நடைமுறைகளுடன் தொடர்ந்து ஈடுபடுங்கள்! ஐ.நா. மனித உரிமை வழிமுறைகளின் பரிந்துரைகளை செயற்படுத்துவதில் OHCHR இலிருந்து தொடர்ந்து தொழில்நுட்ப உதவியை நாடுங்கள்.

மனித உரிமைகள் பேரவை மற்றும் உறுப்பு நாடுகளுக்கு உயர் ஸ்தானிகர் பரிந்துரைக்கிறார்

  • பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்திற்கான முன்னேற்றம் உட்பட இலங்கையில் மனித உரிமைகள் நிலைமையைக் கண்காணிப்பதை மேம்படுத்த OHCHRஐக் கோருங்கள், மேலும், மனித உரிமைகள் பேரவையில் தொடர்ந்து அறிக்கை செய்யுங்கள்.
  • எதிர்கால பொறுப்புக்கூறல் செயன்முறைகளுக்கான ஆதாரங்களைச் சேகரித்துப் பாதுகாப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பிப் பிழைப்பவர்களுக்காக வாதிடுவதற்கும், உறுதியான அதிகார வரம்பைக் கொண்ட உறுப்பு நாடுகளில் தொடர்புடைய நீதித்துறை நடவடிக்கைகளை ஆதரிப்பதற்கும் ஒரு பிரத்தியேக ஆதரவை வழங்க வேண்டும்.
  • உலகளாவிய அதிகார வரம்பு உள்ளிட்ட உள்நாட்டு அதிகார வரம்புகளில் உள்ள நீதித்துறை நடவடிக்கைகள் மூலம் இலங்கையில் உள்ள அனைத்து தரப்பினரும் செய்த சர்வதேச குற்றங்களை விசாரிக்கவும், வழக்குத் தொடரவும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளுடன் ஒத்துழைக்கவும்.
  • கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு நம்பகமானதாகக் கூறப்படும் குற்றவாளிகளுக்கு எதிராக சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடைகள் போன்ற சாத்தியமான இலக்குத் தடைகளை ஆராயுங்கள்!
  • இலங்கை காவல்துறை மற்றும் இராணுவ பரிமாற்றங்கள் மற்றும் பயிற்சித் திட்டங்களுக்காக அடையாளம் காணப்பட்ட இராணுவ வீரர்களுக்கு கடுமையான சோதனை முறைகளைப் பயன்படுத்துங்கள்!
  • சிவில் சமூக முன்முயற்சிகள் மற்றும் இழப்பீடு மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உதவிக்கான முயற்சிகளுக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அவர்களின் இருதரப்பு மனிதாபிமான, மேம்பாடு மற்றும் உதவித்தொகை திட்டங்களுக்கு உதவ முன்னுரிமை அளித்தல்.
  • பழிவாங்கல்களை எதிர்கொள்பவர்களைப் பாதுகாப்பதற்காக இலங்கை நாட்டினருக்கான புகலிடம் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்யுங்கள்! மற்றும் சித்திரவதை அல்லது பிற கடுமையான மனித உரிமை மீறல்களின் உண்மையான அபாயத்தை முன்வைக்கும் வழக்குகளில் எவ்விதமான மறுசீரமைப்பையும் தவிர்க்கவும்!

ஐக்கிய நாடுகளின் நிறுவனங்களுக்கு பின்வரும் விடயங்களை உயர் ஸ்தானிகரின் பரிந்துரைக்கிறார்.

  • மனித உரிமைகள் தொடர்பான செயலாளர் நாயகத்தின் அழைப்பு இலங்கையில் உள்ள அனைத்து ஐக்கிய நாடுகளின் கொள்கை மற்றும் திட்டவட்டமான ஈடுபாட்டை வழிநடத்துகிறது என்பதை உறுதிப்படுத்தவும்.
  • 2030 நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப, அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் உள்ளடக்கம், பாகுபாடு காட்டாதது மற்றும் பயனுள்ள, பொறுப்புணர்வு மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய நிறுவனங்களுக்கான ஆதரவு ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்தவும்.
  • பாதுகாப்பு அமைச்சகம் அல்லது அனைத்து அமைப்புகளுடனும் பாதுகாப்பு அமைச்சகம் அல்லது அமைச்சின் பொது பாதுகாப்பு ஆகியவற்றின் கீழ் ஈடுபடுவதில் கடுமையான மனித உரிமைகள் காரணமாக விடாமுயற்சியுடன் இணைத்தல்
  • ஐ.நா. அமைதி காக்கும் படை உருவாக்கத்தின் சவால்களை முழுமையாகப் புரிந்துகொண்டாலும், ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகளில் இலங்கையின் பங்களிப்புகளை மதிப்பாய்வு செய்யுங்கள்.

-Thanks Sunday Times-

– தமிழில் சுரேந்திரன் லிதர்சன்-

http://athavannews.com/இலங்கை-மீது-கிடுக்குப்பி/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.