Jump to content

சுகாதார அமைச்சர் பவித்ராவுக்கு கொரோனா!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனது அறிவுறுத்தலை மீறியதாலேயே பவித்ராவுக்குக் கொரோனாத் தொற்று- தம்மிக்க பண்டார.!

Screenshot-2021-01-24-23-13-36-587-org-m

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதையடுத்து கேகாலையைச் சேர்ந்த நாட்டு மருத்துவர் தம்மிக்க பண்டாரவின் கொரோனாத் தடுப்புப் பாணி தொடர்பில் சந்தேகம் மேலும் அதிகரித்துள்ளது. எனினும், தமது அறிவுறுத்தல்களை மீறியதன் காரணமாகவே அவர் இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என்று தம்மிக்க பண்டார சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சுகாதார அமைச்சர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானமைக்கு தம்மால் பொறுப்பேற்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கொரோனாத் தடுப்புப் பாணி வழங்கப்பட்டபோது புகைப்பிடித்தல், மதுபான பாவனை, மாமிசம் உட்கொள்ளுதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் எனத் தம்மால் ஆலோசனைகள் வழங்கப்பட்டன எனவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தாம் தவிர்க்கும்படி கூறிய இரண்டு விடயங்களைச் செய்ததன் காரணமாகவே இப்போது கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அன்மையில், தம்மிக்க பண்டாரவினால் தயாரிக்கப்பட்ட கொரோனாத் தடுப்புப் பாணியை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி உட்கொண்டார். இது இலங்கையில் பேசு பொருளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://aruvi.com/article/tam/2021/01/24/21909/

டிஸ்கி

வாய்ல வாஸ்து சரியில்ல .. எங்கயோ வாங்கி கட்ட போறார்.👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தொற்று நோய்கள் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி, அங்கொடையில் உள்ள தொற்று நோய்கள் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.கொரோனா தொற்றுக்குள்ளான அமைச்சர் ஹிக்கடுவவில் உள்ள ஒரு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந் நிலையில் நேற்று காலை அவர் கொழும்பின் புறநகர் பொரலஸ்கமுவையில் அமைந்துள்ள சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

எனினும் அவர் அதிகளவான கொரோனா அறிகுறிகளை வெளிப்படுத்தியதன் காரணத்தினால் நேற்று மாலை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அத்துடன் அவர் நன்றாக குணமடைந்து வருவதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.இதேவேளை அவரது கணவருக்கும் மகளுக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.(15)
 
http://samakalam.com/சுகாதார-அமைச்சர்-பவித்ர-2/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டுத்தள்ள போகுது  மந்திரித்த நீரால் தன்னை கொள்ளபார்த்தவ என்று ரெம்ப கடுப்பாய் இவ  மீது கொரனோ  இருக்காம் .😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார் சுகாதார அமைச்சர்

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, அங்கொடவில் அமைந்துள்ள தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான அமைச்சர் ஹிக்கடுவவில் உள்ள ஒரு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந் நிலையில் நேற்று காலை அவர் கொழும்பின் புறநகர் பொரலஸ்கமுவையில் அமைந்துள்ள சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

எனினும் அவர் அதிகளவான கொவிட் அறிகுறிகளை வெளிப்படுத்தியதன் காரணத்தினால் நேற்று மாலை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறெனினும் அவர் நன்றாக குணமடைந்து வருவதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், அவரது கணவர் காஞ்சனா ஜெயரத்ன மற்றும் அவரது மகள் மீது நேற்றைய தினம் நடத்தப்பட்ட இரண்டாவது சோதனைகளில் கோவிட் 19 க்கு எதிர்மறையாக முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஐ.டி.எச்.சின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார் சுகாதார அமைச்சர் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது நல்ல விடயம் தான்! இனியாவது கொரனாவுக்கு தீர்வு கசாயங்களில் இல்லை, விஞ்ஞானத்திடம் இருக்கிறது என்று மக்கள் அறிய இது போன்ற கேஸ்கள் உதவும்!

சுகாதார அமைச்சருக்கு கொரனா வந்தவுடன் சிறி லங்காவில் கொரனா கட்டுப் பாடு உயர்வாக இல்லையென்று அகமகிழும் பிரிட்டிஷ் வாசிகள் போரிசுக்கு கொரனா வந்ததை செலக்ரிவாக மறந்து விட்டார்கள்!😊 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

போரிஸ் தான் கொரோனாவைக் கட்டுப்படுத்தீட்டன் என்று துள்ளிக் குதிக்கவும் இல்லை தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வாதவூரான் said:

போரிஸ் தான் கொரோனாவைக் கட்டுப்படுத்தீட்டன் என்று துள்ளிக் குதிக்கவும் இல்லை தானே

அப்படிப் பார்த்தால் கோத்தாவும் குதிக்கவில்லை!

ட்ரம்பையும், பொல்சனாரோவையும் தவிர கொரனாவைக் கட்டுப் படுத்தி விட்டோமென்று குதித்த நாட்டுத் தலைவர்கள் பலர் இல்லை! தனிப்பட்ட அரசியல் வாதிகள் குதிப்பதை யார் கணக்கிலெடுப்பது?

ஆனால், சிறிலங்காவில் இன்றும் கூட கொரனா கட்டுப் பாடு யூ கேயை விட சிறப்பாக நடக்குது! அப்படி இல்லை, ஏமாற்றுகிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எங்கே?
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

அப்படிப் பார்த்தால் கோத்தாவும் குதிக்கவில்லை!

ட்ரம்பையும், பொல்சனாரோவையும் தவிர கொரனாவைக் கட்டுப் படுத்தி விட்டோமென்று குதித்த நாட்டுத் தலைவர்கள் பலர் இல்லை! தனிப்பட்ட அரசியல் வாதிகள் குதிப்பதை யார் கணக்கிலெடுப்பது?

ஆனால், சிறிலங்காவில் இன்றும் கூட கொரனா கட்டுப் பாடு யூ கேயை விட சிறப்பாக நடக்குது! அப்படி இல்லை, ஏமாற்றுகிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எங்கே?
 
முக்கியமான விசயம் இரண்டுநாட்டு சனத்தொகையும் வித்தியாசம், வாழ்க்கைமுறை வித்தியாசம்,காலநிலை வித்தியாசம் ஆகவே  சமமான ஒப்பீடு சாத்தியம் இல்லை. அப்பிடி பார்த்தால் சனத்தொகை அடிப்படையில் இறப்பு வீதத்தை ஒப்பிடும் போது இந்தியாவும்  சிறப்பாக கட்டுப்படுத்துது போல தான் இருக்கு. (கீத்றோ விமானநிலைய பயணிகள் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது கட்டுனாயக்கா விமானநிலைய பயணிகள் எண்ணிக்கை மிக மிகக்குறைவு). மற்றது வயதானவர்களின் எண்ணிக்கை இலங்கையில் குறைவு. இப்பிடிநிறைய காரணிகள் இருக்கும் போது இலங்கை திறைமையாக கையாண்டிருக்குது என்று எப்பிடி சொல்வீர்கள். உங்களுக்கு தானே எப்பிடி ஆய்வுகளில் ஒப்பீடு செய்வார்கள் என்று நன்றாக தெரியுமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வாதவூரான் said:

சரி, ஒப்பிடலாம்:

1. சனத்தொகை சிறிலங்காவில் யூ.கேயை விட மூன்றிலொரு பங்கு என்று கொண்டால் கூட:  யுகே மாதிரி வீதம் இருந்தால் 33,000 பேர் செத்திருக்க வேண்டும். இறந்ததோ 300 பேர்!

2. 65 வயதிற்கு மேற்பட்டோரின் தொகை , இலங்கையில் யூகேயோடு ஒப்பிடும் போது கிட்டத்தட்ட 6 மடங்கு குறைவு. எனவே, 5,500 பேர் வரை செத்திருக்க வேண்டும்! இறந்ததோ 300 பேர்!

இவை இரண்டையும் வைத்துப் பார்த்தால், எதிர்பார்ப்பதை விட பத்து மடங்கிற்கும் குறைவான மரணவீதம்!

இந்த ஹீத்ரோ, கட்டுநாயக்கா ஒப்பீடு: யூகேயில் வெளியில் இருந்து வந்தோரால் கொரனா கொழுந்து விட்டு எரியவில்லை! சமூகப் பரவல் (community spread) மூலம் தான் கேசுகள் அதிகரித்து, கேசுகள் அதிகரித்த போது பலவீனமானோரில் மரணங்களும் அதிகரித்தன! பிரிட்டிஷ் பிஜைகள் விடுமுறைக்கு வெளியே பயணித்து திரும்பி வந்த போது தனிமைப் படுத்தலைக் கூட சட்ட பூர்வமாகச் செய்ய இயலாமையால் சமூகப் பரவல் கூடியது! 

இந்த இடத்தில் தான் இலங்கையின் தடுப்பு முறைகள் பயன் கொடுத்தன. இன்னும் வேலை செய்கின்றன! 

கணிதத்தையும் விஞ்ஞானமுறையையும் மற்றவர்களிடம் இருக்கும் சதித்திட்டக் கதைகளை இல்லாதொழிக்கத் தான் பயன்படுத்த வேண்டும் வாதவூரான்! ஒரு அரசியல் நிலைப்பாட்டை வீம்பாகத் தூக்கி நிறுத்துவதற்கல்ல!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/1/2021 at 13:17, பெருமாள் said:

இப்பகூட கட்டுநாயக்காவை  திறந்து உருமாறிய கொர்னோவை வலிய இறக்குமதி செய்கினம்

அப்படிச் செய்தாற்த்தானே ஜெனிவா கூட்டத்தொடரில் அனுதாப அலைகளை பெற்று தண்டனையிலிருந்து தப்பி கால அவகாசமும், பணமும் பெறலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, satan said:

அப்படிச் செய்தாற்த்தானே ஜெனிவா கூட்டத்தொடரில் அனுதாப அலைகளை பெற்று தண்டனையிலிருந்து தப்பி கால அவகாசமும், பணமும் பெறலாம். 

ஆகா... சிங்களவன், 
எதையும்.. செய்யக் கூடிய,  குறுக்கு வல்லமை பொருந்தியவன். 
உங்கள், கருத்தை....  சாதாரணமாக கடந்து போய் விட முடியாது. 
நன்றி... சாத்தான். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, satan said:

அப்படிச் செய்தாற்த்தானே ஜெனிவா கூட்டத்தொடரில் அனுதாப அலைகளை பெற்று தண்டனையிலிருந்து தப்பி கால அவகாசமும், பணமும் பெறலாம். 

அன்று  தொடக்கம் இன்று வரைக்கும் அனுதாபத்தை வைத்து வயித்தை கழுவும் நாடு சிங்களச்சிறிலங்கா- இந்த வகையிலை ஒரு வளமும் இல்லாத ஆபிரிக்க நாடுகள் ஒரு படி மேல்........:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின் அண்ணா சொன்னது போல் சனத்தொகையின் அடிப்படையில் யுகே மாதிரி கொரோனாவால் இலங்கையில் இறக்க வேண்டுமானால் 33,000 பேர் இறந்திருக்க வேண்டும். யுகே  சாம்ராஜ்யத்தை விட மிகவும் ஏழை மக்களும் மருத்துவ வசதிகளும் குறைந்த நாடு  இலங்கை என்றபடியால்  கொரோனா  இறப்பு 100 000 ஆவது இருந்திருக்க வேண்டும். ஆனால் இறந்ததோ 300 பேர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஜஸ்டின் அண்ணா சொன்னது போல் சனத்தொகையின் அடிப்படையில் யுகே மாதிரி கொரோனாவால் இலங்கையில் இறக்க வேண்டுமானால் 33,000 பேர் இறந்திருக்க வேண்டும். யுகே  சாம்ராஜ்யத்தை விட மிகவும் ஏழை மக்களும் மருத்துவ வசதிகளும் குறைந்த நாடு  இலங்கை என்றபடியால்  கொரோனா  இறப்பு 100 000 ஆவது இருந்திருக்க வேண்டும். ஆனால் இறந்ததோ 300 பேர்.

புலிகளை அழிச்சவைக்கு கொரோனா பெரிய வேலையே....?
சும்மா இறுக்கி மூசி விட்டாலே கொரோனா பறந்து போயிடும்...😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.