Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

தமிழக மீனவர் அத்துமீறல்: வடக்கு தழுவிய கதவடைப்புக்கு அழைப்பு!!!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரஞ்சித் said:

துல்பேன்,

உங்களுக்கிருக்கும் அரசியல், சரித்திர அறிவுபற்றி நான் கண்டு வியந்திருக்கிறேன். பலவிடயங்களை மிகவும் ஆளமாக, கண்ணியம் குறையா வண்ணம் எழுதுகிறீர்கள். அதனாலேயே உங்கள் மீது மதிப்பும் வைத்திருக்கிறேன். புலிகளுக்கெதிரான உங்களின் கண்ணியமான  விமர்சனங்கள் முன்வைக்கப்படும் பாங்கிற்காகவே உங்களுக்குப் பதில் எழுதத் தூண்டுகிறது. 

உங்களின் கருத்துக்களிலிருந்து பார்க்கும்போது அரசியல் ரீதியான கோரிக்கைகளுக்கு வன்முறையினைப் பாவிப்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்பதை உணர்கிறேன். அதேவேளை, ஆயுத பலம் கொண்டு எம்மீது திணிக்கப்பட்ட ஆக்கிரமிப்பினை ஆயுத ரீதியில் எதிர்கொள்வதைத்தவிர எமக்கு வேறு வழியும் இருக்கவில்லை என்பதை உங்கள் மனதில் ஏதோவொருமூலையில் நீங்களும் ஏற்றுக்கொண்டுதான் இருப்பீர்கள்.

சரி, மீனவர் பிரச்சினைக்கு வருவோம். இது தாயக தமிழக மீனவர்களுக்கிடையில் இருக்கின்ற பேசித் தீர்க்கப்படவேண்டிய ஒரு பிரச்சினை. ஆனால், இப்பிரச்சினை தீர்க்கப்படக் கூடாதென்பதற்காகவே இலங்கை அரசு செயற்படுகிறதென்பது உங்களுக்குத் தெரியாததல்ல. இந்தியாவில்  நிலுவையில் இருக்கின்ற வழக்கில் இன்றுவரை தேடப்படும் பிரதான குற்றவாளியான டக்கிளஸ் தேவானந்தாவை கடற்றொழில் அமைச்சராக சிங்களம் நியமித்திருக்கும் காரணம் என்னவென்பது உங்களுக்குத் தெரியாததல்ல. அடுத்ததாக 2009 வரை நேரடியாகவே எமது மக்களையும், கடலுக்குச் சென்ற மீனவர்களையும் ஆயிரக்கணக்கில் கொன்றுகுவித்த பேரினவாதம் இன்று எமது மீனவர்களின் நலனில் திடீரென்று அக்கறை கொண்டு தமிழக மீனவர்களைக் கொல்கிறது எனும் அபத்தத்தையும் நீங்கள் இலகுவில் புரிந்துகொண்டிருப்பீர்கள். 

எம்மை லட்சக்கணக்கில் கொன்றுகுவித்து எமது தாயகத்தை ஆக்கிரமித்து நிற்கும் ஒரு எதிரி எமது மீனவர்களுக்காக தமிழக மீனவர்களைக் கொல்கிறான் என்பதை நீங்கள் எப்படி அணுகுகிறீர்களோ எனக்குத் தெரியவில்லை, ஆனால் இதுபற்றி எனக்கு தெளிவான பார்வையொன்று இருக்கிறது.

தமிழகத்தையும், தாயகத்தையும் நிரந்தரப் பகையளிகளாக மாற்றிவிட்டால், எம்மீதான தனது ஆக்கிரமிப்பிற்கு தமிழகத்திலிருந்து எதிர்ப்பு இனிமேல் வராதென்பதே அவனது உண்மையான நோக்கம். 

ஆகவேதான் தம்மில் 4 மீனவர்களைப் பலிகொடுத்து தமிழக மீனவர் சமுதாயம் துயருற்று இருக்கும் தறுவாயில் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் நடவடிக்கையாக தாயக மீனவர்கள் என்கிற பேரில் தமிழக மீனவர்களுக்கெதிரான போராட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருக்கிறது. இது முன்னெடுத்துச் செல்லப்பட்டால் தமிழக மீனவர்களினதும், பொதுவான தமிழக உறவுகளினதும் மனநிலை எப்படியாக இருக்கும் என்பது உங்களுக்குச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

தாயக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்பது உண்மை. அதுவும் அத்துமீறி வரும் தமிழக இழுவைப்படகுகள் கடல்வளத்தினை நாசம் செய்கின்றன என்பதும் உண்மை. இது தீர்த்துவைக்கப்படவேண்டியது என்பதும் உண்மை. 

ஆனால், சிங்களம் செய்வதுபோல இந்தியாவுடன் இதுதொடர்பாக பேச லாயக்கற்ற ஒருவனை அமைச்சனாக நிறுத்தியும், தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்று அவர்களது படகுகளை மூழ்கடிப்பதாலும்  தீர்த்துவிட முடியாதென்பதும், பாதிக்கப்பட்ட தாயக மீனவர்களும், தமிழக மீனவர்களும் சேர்ந்தே கருத்தொருமைப்பாட்டிற்கு வருவதே சாலப் பொறுத்தம் என்பதும் எனது எண்ணம்.

இறுதியாக, நான் உங்களிடம் கேட்கவந்த கேள்வி, எதற்காக ஐய்யா புலிகளையும் மற்றைய ஆயுதக் குழுக்களையும் இந்தப் பிரச்சினையில் மேற்கோள் காட்டினீர்கள்? உங்களுக்கு அந்தத் தேவை ஏன் ஏற்பட்டது? தவிர்த்திருக்கலாமோ?!

வணக்கம் ரஞ்சித், இரு பகுதியிலும் தமிழர்கள் இருக்கும் போது சுமுகமாக பேசி தீர்ககும் வழிவகை இருக்கும் போது  இப்படி போராடங்களில் ஈடுபடுவது குறித்து தனக்கு விளங்கவில்லை என்று நெடுக்கு ஆச்சரியப்பட்டு தெரிவித்த கருத்துக்கு பதிலாகவே எனது கருத்தை எழுதினேன். ஒரு சிறிய நிலப்பரப்புக்குள் வாழ்ந்த ஓரே நோக்கத்தை கொண்ட  இளைஞர்கள் தமக்குள் ஏற்பட்ட  பிரச்சனைகளை தீர்க்கக முடியாமல் வன்முறை மூலம் தீர்த்த வரலற்றை மறந்து  வேற்று நாட்டு பிரஜைக்காக உள்ளவர்கள் சுமுகமாக பேசி தீர்க்கவில்லை என்ற ஆச்சரியம் அல்ல என்று குறிப்பிட்டிருந்தேன். அதாவது  எம்மவரின்  புரிந்துணர்வும் சகிப்பு தன்மையும்  என்பது எவ்வளவு   மோசமான நிலையில் இருக்கிறது என்பதையே சுட்டிக்காட்டுவதே அந்த கருத்தின் நோக்கம்.

தவிர மீனவர்களின் பிரச்சனையில் பேச்சு வார்த்தை மூலம்  சுமுக தீர்வு காணப்படவேண்டும் என்பதே எனது விருப்பமும். நீங்கள் கூறிவாறு இருபகுதி தமிழர்களையும் பிரித்து தமிழர்களை அழிப்பது எதிரியின் நோக்கம் என்றலால்,  எதிரியின் நோக்கங்களை தமது  செயல்களால் நிறைவேற்றியதற்கு  தமிழர் சார்பில் போராடிய மித வாத, தீவிர வாத அரசியல் அமைப்புக்கள் எல்லவற்றுகும் காத்திரமான பங்கு உள்ளது. அதில் புலிகளும் விதிவலக்கல்ல என்பதே எனது கருத்து.  

ஈழத்தமிழரும் தமிழக தமிழரும் தம்மிடையே  கலாச்சார், கல்வி, வர்த்தக, பொருளாதான உறவுகளை வளர்த்து கொள்ள வேண்டும் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை.  நிச்சயமாக அது நடைபெற வேண்டும்.  இது கட்சி பேதமின்றி  தமிழகத்தில் பல்வேறு மட்ட மக்களுடன் தொடர்புகளை பேணுவதன் மூலம் நடைமுறைப்படுத்தப்டல் வேண்டும். ஆனால், தமிழக அரசியலில் தலையிட்டு, ஒரு சிலரின் குறுகி பதவி மோக அரசியல் தந்திரத்திற்க  அந்த வாய்ப்புக்களை  பலியிடுவர்கள் புலம் பெயர் நாடுகளில் வாழும்  தேசியப்பிரியர்கள் என்று தம்மை தாமே அழைக்கும் சுயநல கும்பலே ஆகும். 

நீங்கள் கூறியது போல் ஆயுதப்போராட்டத்திற்கு எதிராக மனப்போக்குடன் நான் என்றுமே  இருந்த‍தில்லை. ஆனால் ஆயுத போராட்டம் என்பது வெற்றி அல்லது தோல்வி என்ற இரு புள்ளியில் தான் முடியும். ஆனால்  அதனுடன் சேர்ந்த அரசியல் தந்திரோபாய  போராட்டங்கள் அது முன்னேறிய பாதையில் இருந்து திரும்பி வர வைக்காமல்  சந்தர்ப்பம் வரும் போது தொடரும் தன்மையுடையது. அதுவே உலக நியதி.  துரதிஷ்ரவசமாக, அரசியல் போரை மேற்கொள்ளாமல் (மற்றவர்களையும் மேற்கொள்ள விடாமல்) இராணுவ முறையிலேயே  முழு நம்பிக்கை கொண்டு அதை செய்வதிலேயே நம்மவர்கள் இருந்தனர். ஆயுத போராட்டம் இன்று  சாத்தியமற்றது என்று மக்கள் இன்று நினைப்பதற்கு அதில் ஈடுபட்டவர்களே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும். (தலைப்புக்கு அப்பாற்பட்டதாயிலும் நீங்கள் என்னிடம் கேட்ட கேள்விக்கு பதிலாகவே இதை தெரிவித்தேன்)

Edited by tulpen
Link to post
Share on other sites

கோத்தா , டக்கி  மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம் ....அவர்கள் எம் எதிரியாய் இருக்கலாம் ...அதற்காய் அவர்கள் செய்யும் சின்ன விசயத்தில்  கூட பிழை பிடித்து கொண்டு இருக்க வேண்டிய தேவையில்லை.
புலிகள் இல்லாதவிடத்து, இலங்கை ஜனாதிபதி  என்ற முறையில் கோத்தா இந்த தாக்குதலுக்கு உத்தரவு இட்டு இருக்கலாம் ...இதற்கு பின்னால் சீனா கூட இருக்கலாம்.
அத்துமீறி வந்தது தமிழக மீனவர்கள் . தாக்குதல் செய்தது சிங்கள அரசு...இதில் ஈழத் தமிழருடன் கோவிப்பதற்கு என்ன இருக்கு?
இது வரைக்கும் எந்த தமிழக அரசியல்வாதியாவது தங்களுடைய மீனவர்களை எல்லை தாண்டி போய் மீன் பிடிக்க வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்களா?  இனி மேலும் சொல்ல மாட்டார்கள் ...அவர்களுக்கு அவர்களுடைய மீனவர்கள் பற்றி கணக்கேயில்லை ....அவர்களுடைய அரசு ,இந்தியன் நேவி எல்லாம் கண்டும், காணாமல் தானே இருந்தது ...ஏன் அவர்கள் தடுக்கவில்லை.
கோத்தாவும் ஈழத் தமிழர்கள் மீது கொண்ட முழு அக்கறையினால் இதை செய்யவில்லை ..ஆனால் அவர் செய்ததன் மூலம் இனி மேல் தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி வர பயப்படுவார்கள் .கேரளா கஞ்சா கடத்தப்படுவது நிறுத்தப்படும் அல்லது குறையும் .
கோத்தா, இந்தியாவை தன் வழிக்கு கொண்டு வர அல்லது உங்களுக்கு பயமில்லை என்று காட்ட இதை செய்திருக்கவும் கூடும். இந்த பிரச்சனையால் தமிழகத்தவருக்கும், ஈழத் தமிழருக்கும் பிரச்சனை வந்திடும் என்று நினைப்பது சுத்த முட்டாள்தனம் ....ஈழத் தமிழர் தமது தொப்புள் கொடி உறவுகள் என்று நினைத்திருந்தால் அவர்கள் எல்லை தாண்டி வந்திருக்க மாட்டார்கள் .....உண்மையில் கவலைப்பட வேண்டியதும், பயப் பட வேண்டியதும் அவர்கள் தான் .
இப்படி தொப்புள் கோடி உறவு ,மண்ணாங்கட்டி என்று எதிர்பார்த்து தான் தமிழன் எல்லாத்தையும் இழந்து நிக்கிறான் 
 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தென்னிந்திய மீனவர்களது அட்டகாசம் காலம் காலமாக நடந்து வருகின்றது. அது மற்றுமின்றி இவர்கள் இலங்கை மீன்வளத்தை கொள்ளளைடிப்பவர்கள். 

Link to post
Share on other sites
6 hours ago, Nathamuni said:

கோத்தாவின் தலைவலி இரண்டு: ஒன்று லோக்கல் லெவலில், தமிழ் பேசும் மக்களாக இணைகிறார்கள். ஆனால், இப்போது, இஸ்லாமியரோ, தமிழர்களோ, தமக்குள் மோதி, சிங்களவருடன், இணையும் நிலையில் இல்லை.

இரண்டாவது தலைவலி, தமிழகம், இலங்கை தமிழர் பகுதியில் நடக்கும் விடயங்களை உன்னிப்பாக கவனிப்பது. இதனை உடைக்க வெறுப்பினை வளர்ப்பது, அதுக்கான ஒரே வழி, கடல் தொழில் அமைச்சினை டக்கரிடம் கொடுத்ததும், பிரச்சனைகளை உருவாக்குவதும். இதன் காரணமாகவே, சிங்கள மீனவர் இந்தப்பக்கம் வருவதை, சிங்கள அரசு தடுத்துள்ளது.

சிலவாரங்களுக்கு  முன்னர், வல்வெட்டி மீனவரை தமிழக மீனவர் தாக்கியதாகவும், முல்லைத்தீவுக்கு அண்மையாக தமிழக படகுகள் காணப்பட்டன என்றும் செய்திகள் வந்தன.

இவை, உண்மையாக நடந்தாலும், வேண்டுமென்றே, தமிழக மீனவர் போல தென்னிலங்கை மீனவரால், நடாத்தப்பட்டது  என்ற கதையும் வருகிறது.  எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. தமிழக படகுகளை பறித்து வைத்திருக்கும் அரசுக்கு, நாலு பேரை, இரண்டு படகில் போட்டு, அனுப்புவது பெரிய விடயமல்ல.

சீனன், ஒழுங்கான, போக்குவரத்துக்கு வசதியே இல்லாத, மூன்று தீவுகளுக்கு, தீடீரென மின்சார ஆலைகளை அமைக்க, தேவை என்ன வந்தது? 

அதுதான் சொன்னேன், மிகப்பெரிய சதிக்குள் தள்ள முயல்வு நடக்கிறது. 

ஓமோம் தமிழக மீனவர்கள் சுத்த தங்கம் ...அவர்கள் ஒன்றுமே செய்திருக்க மாட்டார்கள் 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

கோத்தா , டக்கி  மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம் ....அவர்கள் எம் எதிரியாய் இருக்கலாம் ...அதற்காய் அவர்கள் செய்யும் சின்ன விசயத்தில்  கூட பிழை பிடித்து கொண்டு இருக்க வேண்டிய தேவையில்லை.
புலிகள் இல்லாதவிடத்து, இலங்கை ஜனாதிபதி  என்ற முறையில் கோத்தா இந்த தாக்குதலுக்கு உத்தரவு இட்டு இருக்கலாம் ...இதற்கு பின்னால் சீனா கூட இருக்கலாம்.
அத்துமீறி வந்தது தமிழக மீனவர்கள் . தாக்குதல் செய்தது சிங்கள அரசு...இதில் ஈழத் தமிழருடன் கோவிப்பதற்கு என்ன இருக்கு?
இது வரைக்கும் எந்த தமிழக அரசியல்வாதியாவது தங்களுடைய மீனவர்களை எல்லை தாண்டி போய் மீன் பிடிக்க வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்களா?  இனி மேலும் சொல்ல மாட்டார்கள் ...அவர்களுக்கு அவர்களுடைய மீனவர்கள் பற்றி கணக்கேயில்லை ....அவர்களுடைய அரசு ,இந்தியன் நேவி எல்லாம் கண்டும், காணாமல் தானே இருந்தது ...ஏன் அவர்கள் தடுக்கவில்லை.
கோத்தாவும் ஈழத் தமிழர்கள் மீது கொண்ட முழு அக்கறையினால் இதை செய்யவில்லை ..ஆனால் அவர் செய்ததன் மூலம் இனி மேல் தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி வர பயப்படுவார்கள் .கேரளா கஞ்சா கடத்தப்படுவது நிறுத்தப்படும் அல்லது குறையும் .
கோத்தா, இந்தியாவை தன் வழிக்கு கொண்டு வர அல்லது உங்களுக்கு பயமில்லை என்று காட்ட இதை செய்திருக்கவும் கூடும். இந்த பிரச்சனையால் தமிழகத்தவருக்கும், ஈழத் தமிழருக்கும் பிரச்சனை வந்திடும் என்று நினைப்பது சுத்த முட்டாள்தனம் ....ஈழத் தமிழர் தமது தொப்புள் கொடி உறவுகள் என்று நினைத்திருந்தால் அவர்கள் எல்லை தாண்டி வந்திருக்க மாட்டார்கள் .....உண்மையில் கவலைப்பட வேண்டியதும், பயப் பட வேண்டியதும் அவர்கள் தான் .
இப்படி தொப்புள் கோடி உறவு ,மண்ணாங்கட்டி என்று எதிர்பார்த்து தான் தமிழன் எல்லாத்தையும் இழந்து நிக்கிறான் 
 

முழுசா சந்திரமுகி ஆக , மாறிவிட்ட அக்காவுக்கு,

ரெண்டும் ரெண்டகப்பை, ரெண்டும் கலண்டகப்பை எண்டு கேள்விப்பட்டிருப்பியள்... கோத்தாவை தூக்கி கொண்டாடுமளவுக்கு, அவர் யோக்கியர் இல்லை. அதேவேளை இந்தியர்களையும் நாம் நம்ம முடியாது.

உந்த மீன்பிடி பிரச்னை காலகாலமாக இருந்து வருகிறது. நிழலி சொன்னது போலை, தமிழக அரசியவாதிகள், மீன்பிடி தொழிலில் பெருமுதல் இட்டு செய்கிறார்கள்.

மறுபக்கம் அதே அரசியல்வாதிகள், சிங்களத்துடன் ஓட்டுறவை ரகசியமாக வைத்திருக்கிறார்கள்.

இந்த மீன்பிடி பிரச்சனை இதுவரை, இலங்கை கடற்படை, தமிழக மீனவர் என இருந்ததை, திட்டமிட்டு, 4 தமிழக மீனவரை கடலில் கொலையினை செய்தபின், அதே சூட்டுடன், வடபகுதி மீனவரை தூண்டி விட்டு, பிரச்சனையினை, வேறு பரிமாணத்துக்கு தள்ளும், அரசியல் முயல்வினை பாருங்கள்.

சிங்களம், வழமைபோல, நரி மூளையுடன் செயல் படுவது புரியும். 

அவர்கள் மீன்பிடிக்கட்டும், அதிலென்ன என்று நான் சொல்லவில்லையே.

அதனை தடுக்க, ராஜதந்திர வழிமுறையே தேவை என்கிறேன். அதனையே டக்ளஸ் முன்னெடுக்க வேண்டும். அவருக்கு இந்தியாவுடன் நேரே மோத தயக்கம். காரணம், அவர் மேல் நிலுவையில் உள்ள வழக்கு. இன்டர்போல் மூலமாக, இந்திய அரசு நினைத்தால், அவரை அங்கே வர வைக்கமுடியும் என்பதால், உந்த பின்னல் இருந்து, மீனவர்களை தூண்டிவிடும் வேலைகளை மட்டும் செய்கிறார்.

 

Edited by Nathamuni
Link to post
Share on other sites

பல வருடங்களாக நடக்கும் தமிழக மீனவர்களின் எல்லை மீறலுக்கு நடவடிக்கை எடுப்பது ஒரு பாரிய சதியின் கூறு என எங்கள் யாழ் கள சதித்திட்ட ஆர்வலர்கள் சொல்வது சரி போலத் தான் தெரியுது! 😋

சீனாக் காரன் தமிழக மீனவ முதலாளிகள் சிலரை கைக்குள் வைத்திருந்து இப்படி தொடர்ந்து செய்து வரத் தூண்டுகிறான் என்ற சந்தேகம் வருவதைத் தடுக்க முடியவில்லை! 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, colomban said:

தென்னிந்திய மீனவர்களது அட்டகாசம் காலம் காலமாக நடந்து வருகின்றது. அது மற்றுமின்றி இவர்கள் இலங்கை மீன்வளத்தை கொள்ளளைடிப்பவர்கள். 

சரியாகச் சொன்னீர்கள் தமிழ்நாட்டு தொப்புள் கொடி உறவுகள் இலங்கை மீன்வளத்தை கொள்ளை  அடிக்க தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அதை வைத்து அரசியல் செய்துவருகிறார்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மீன் பிடி அத்துமீறலை தடுப்பது, கைது.... கொலை அல்ல....

இந்த போராட்டம் இந்த கொலைகளை தொடர்ந்து நடத்த தூண்டப்படுவது தான் சந்தேகத்துக்கு உரியது. கொலைகள் நடந்தமைக்கு, ஒரு கவலையாவது தெரிவிக்காமல் போராட்டம் நடாத்தும் அளவுக்கு, யாழ் மீனவர்கள் தரம் தாழ்ந்தவர்கள் இல்லை.

அதனாலேயே, பின்னால் ஒரு பெரிய கரம் மறைந்திருக்கிறது என்கிறோம்.

Link to post
Share on other sites
1 minute ago, Nathamuni said:

மீன் பிடி அத்துமீறலை தடுப்பது, கைது.... கொலை அல்ல....

இந்த போராட்டம் இந்த கொலைகளை தொடர்ந்து நடத்த தூண்டப்படுவது தான் சந்தேகத்துக்கு உரியது. கொலைகள் நடந்தமைக்கு, ஒரு கவலையாவது தெரிவிக்காமல் போராட்டம் நடாத்தும் அளவுக்கு, யாழ் மீனவர்கள் தரம் தாழ்ந்தவர்கள் இல்லை.

அதனாலேயே, பின்னால் ஒரு பெரிய கரம் மறைந்திருக்கிறது என்கிறோம்.

நடந்து விட்ட சம்பவத்தை தமக்குச் சாதகமாக சிங்கள அரசு பயன்படுத்தும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை! 

ஆனால், சம்பவத்திற்குக் காரணமான நிகழ்வு பல்லாண்டுகளாக நடந்து வருகிறது என்பதை எல்லோரும் அறிந்திருக்கிறோம்-நீங்களே ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள்.

 இந்திய மீனவர்களால் நீண்ட காலமாகப் பாதிக்கப் பட்ட வடக்கு மீனவர்கள் "போதும்" என்ற நிலைக்கு வந்து விட்டதால் இந்தப் பிரபலமான சந்தர்ப்பதைப் பயன்படுத்தி இதற்கு நிரந்தர தீர்வு காண விரும்பக் கூடும் என்ற அதிக probability கொண்ட நிலை ஏன் உங்கள் யோசனையில் வரவில்லை? 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Nathamuni said:

மீன் பிடி அத்துமீறலை தடுப்பது, கைது.... கொலை அல்ல....

இந்த போராட்டம் இந்த கொலைகளை தொடர்ந்து நடத்த தூண்டப்படுவது தான் சந்தேகத்துக்கு உரியது. கொலைகள் நடந்தமைக்கு, ஒரு கவலையாவது தெரிவிக்காமல் போராட்டம் நடாத்தும் அளவுக்கு, யாழ் மீனவர்கள் தரம் தாழ்ந்தவர்கள் இல்லை.

அதனாலேயே, பின்னால் ஒரு பெரிய கரம் மறைந்திருக்கிறது என்கிறோம்.

அன்று தொடக்கம் இந்த அத்துமீறல்கள் இருந்தவைதான். ஆனால் கொலைகள் நடக்கவில்லை.அந்த கொலைகளின் அகோர புகைப்படங்களை இங்கே இணைக்க முடியாது. இதில் தமிழ்நாட்டு மக்களை திசை திருப்பும் தேர்தல் முனைப்பாகவும் இருக்கலாம். இது அரசியல் பேச்சுக்களால் மட்டுமே தீர்க்க முடியும்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்திலிருந்து நாளொன்றுக்கு பல ஆயிரங்கள், அல்லது லட்சத்தில் மீன்பிடி கலங்கள் தொழிலுக்கு கடலுக்கு செல்கின்றன , அத்தனையும் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் நுழைவதில்லை.

ரவுடிதனமும், குழுவாகவும் இயங்கும் சிலநூறு படகுகளே இலங்கை கடற்பரப்பினுள் நுழைகின்றன, இலங்கை மீன் வளத்தையும் மீன்பிடி வலைகள் உபகரணங்களையும் நாசமாக்கி செல்கின்றன, போதாக்குறைக்கு இலங்கை கடற்பரப்பினுள் வைத்தே தனியே சிக்கும் இலங்கை மீனவர்களுக்கு அடி உதை மிரட்டல் வேறு விடுத்து செல்கின்றனர்.

எல்லை தாண்டி வரும் பல விசைபடகுகளின் உரிமையாளர்கள் பலர் கரையில் இருக்கும் அரசியல்வாதிகள் என கூற கேட்டிருக்கிறேன், அவர்களை பொறுத்தவரை அன்று மீன்பிடி வருமானம் கிடைக்குதோ இல்லையோ வாடகை செலுத்தியே ஆகவேண்டும், அந்த நிலையில்தான் உயிர் போனாலும் பரவாயில்லை என்று சிலபேர் போர் காலங்களில்கூட இலங்கை கடற்பரப்பில் நுழைந்து தம் உயிரை விட்டிருக்கிறார்கள்.

சட்டத்தையும் தர்மத்தையும் மதிக்காத ,நினைக்காத நாசவேலை செய்யும்  இவர்கள் எந்த வகையிலும் எம் உறவுகள் என்ற வரையறைக்குள் வரமாட்டார்கள், இவர்கள் குற்றவாளிகள்,  குற்றவாளிகளை சொந்தம் கொண்டாடுவதன் மூலம் நாம் எல்லைதாண்டி வராது தம் வாழ்வாதாரத்தை தேடிக்கொள்ளும் சக தமிழக உறவுகளை கேவல படுத்துறோமா?

இந்திய கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட மீன்பிடிமுறைகளை கையாள்வதால் மீன்வளத்தை முற்றாக நாசம் செய்துவிட்டார்கள், அதனால் எல்லை தாண்டிவந்து இலங்கை கடற்பரப்பையும் வெறுமையாக்க ஒற்றைக்காலில் நிற்கிறார்கள், 

பல தசாப்தங்களாய் வாழ்வாதாரத்தை இழந்து நின்று இப்போதான் படிப்படியாக மீண்டெழும் சக தமிழ் இலங்கை மீனவர்கள்பற்றி கிஞ்சித்தும் சிந்திக்காத அவர்கள் தொப்புள்கொடி ,அறுணாகொடி உறவுக்குள் எல்லாம் அடங்கமாட்டார்கள், இவர்கள் பண்ணும் செயல் இந்திய சட்டப்படியே குற்றம்தான்.

பருத்திதுறை,நெடுந்தீவு,முல்லைதீவு பகுதிகளில் கரையில் நின்று பார்க்கும்போதே கடலில் அணிவகுத்து நிற்கும் இந்திய அத்துமீறல் விசைபடகுகள் அணிவகுத்து நிற்பது தெரிகின்றன என்பதை பலர் கூறவும், பத்திரிகை, காணொளி செய்திகள்மூலமும் கண்டிருக்கிறோம், தடை செய்யப்பட்ட வலைகளைபயன்படுத்தி கடல் மண்ணிலிருந்து கடல்வாழ் உயிரினங்கள் அனைத்தையும் அவை மீள பெருக நீண்டகாலம் பிடிக்கும் அளவில் அள்ளிசென்று இலங்கை மீனவர்களின்  வாழ்க்கையிலும் கடற்பரப்பிலும் வெறுமையை அள்ளி விதைத்துவிட்டு செல்லும் இவர்களுடன் பேச என்னதானிருக்கிறது?

 

தெரியாமலும் சந்தர்ப்ப சூழ்நிலையாலும் நிகழும் தவறுகளுக்குபேச்சு வார்த்தை நடத்துவதில் சமாதானமாக போவதில் அர்த்தமிருக்கு, பல தசாப்தங்களாய் கைது,உயிர்பலி,மீன்பிடி படகுகள் இழப்பு என்று அத்தனையையும் எதிர்கொண்ட பின்னரும் மீண்டும் மீண்டும் இன்னொரு நாட்டின் எல்லைக்குள் நுழைந்து தெரிந்தே வேண்டுமென்றே சக இனத்தின் வாழ்க்கையில் வறுமையை விதைத்து போகும் இந்த   மீனவர் பெயரில் இயங்கும் சிலகும்பல்கள் மன்னிக்கப்பட முடியாதவர்கள்.

தொப்புள்கொடி உறவென்பதை இலங்கை மீனவர்கள் மட்டுமல்ல, எல்லை தாண்டி வரும் ரவுடி மீனவர்களும் உணர்ந்தால்தான் அந்த உறவுக்கு அர்த்தமிருக்கும் மரியாதையிருக்கும்.

இவர்கள் எல்லை தாண்டி வராது தம் வாழ்வாதாரத்தை தேடும் எம் வலிகளை கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலு,ம் உணர்ந்த பல லட்சம் சக தமிழக உறவுகளிற்குள் சேரமாட்டார்கள். அவர்கள் வேறு இவர்கள் வேறு.

 • Like 4
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

அன்று தொடக்கம் இந்த அத்துமீறல்கள் இருந்தவைதான். ஆனால் கொலைகள் நடக்கவில்லை.அந்த கொலைகளின் அகோர புகைப்படங்களை இங்கே இணைக்க முடியாது. இதில் தமிழ்நாட்டு மக்களை திசை திருப்பும் தேர்தல் முனைப்பாகவும் இருக்கலாம். இது அரசியல் பேச்சுக்களால் மட்டுமே தீர்க்க முடியும்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, valavan said:

தமிழகத்திலிருந்து நாளொன்றுக்கு பல ஆயிரங்கள், அல்லது லட்சத்தில் மீன்பிடி கலங்கள் தொழிலுக்கு கடலுக்கு செல்கின்றன , அத்தனையும் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் நுழைவதில்லை.

ரவுடிதனமும், குழுவாகவும் இயங்கும் சிலநூறு படகுகளே இலங்கை கடற்பரப்பினுள் நுழைகின்றன, இலங்கை மீன் வளத்தையும் மீன்பிடி வலைகள் உபகரணங்களையும் நாசமாக்கி செல்கின்றன, போதாக்குறைக்கு இலங்கை கடற்பரப்பினுள் வைத்தே தனியே சிக்கும் இலங்கை மீனவர்களுக்கு அடி உதை மிரட்டல் வேறு விடுத்து செல்கின்றனர்.

எல்லை தாண்டி வரும் பல விசைபடகுகளின் உரிமையாளர்கள் பலர் கரையில் இருக்கும் அரசியல்வாதிகள் என கூற கேட்டிருக்கிறேன், அவர்களை பொறுத்தவரை அன்று மீன்பிடி வருமானம் கிடைக்குதோ இல்லையோ வாடகை செலுத்தியே ஆகவேண்டும், அந்த நிலையில்தான் உயிர் போனாலும் பரவாயில்லை என்று சிலபேர் போர் காலங்களில்கூட இலங்கை கடற்பரப்பில் நுழைந்து தம் உயிரை விட்டிருக்கிறார்கள்.

சட்டத்தையும் தர்மத்தையும் மதிக்காத ,நினைக்காத நாசவேலை செய்யும்  இவர்கள் எந்த வகையிலும் எம் உறவுகள் என்ற வரையறைக்குள் வரமாட்டார்கள், இவர்கள் குற்றவாளிகள்,  குற்றவாளிகளை சொந்தம் கொண்டாடுவதன் மூலம் நாம் எல்லைதாண்டி வராது தம் வாழ்வாதாரத்தை தேடிக்கொள்ளும் சக தமிழக உறவுகளை கேவல படுத்துறோமா?

இந்திய கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட மீன்பிடிமுறைகளை கையாள்வதால் மீன்வளத்தை முற்றாக நாசம் செய்துவிட்டார்கள், அதனால் எல்லை தாண்டிவந்து இலங்கை கடற்பரப்பையும் வெறுமையாக்க ஒற்றைக்காலில் நிற்கிறார்கள், 

பல தசாப்தங்களாய் வாழ்வாதாரத்தை இழந்து நின்று இப்போதான் படிப்படியாக மீண்டெழும் சக தமிழ் இலங்கை மீனவர்கள்பற்றி கிஞ்சித்தும் சிந்திக்காத அவர்கள் தொப்புள்கொடி ,அறுணாகொடி உறவுக்குள் எல்லாம் அடங்கமாட்டார்கள், இவர்கள் பண்ணும் செயல் இந்திய சட்டப்படியே குற்றம்தான்.

பருத்திதுறை,நெடுந்தீவு,முல்லைதீவு பகுதிகளில் கரையில் நின்று பார்க்கும்போதே கடலில் அணிவகுத்து நிற்கும் இந்திய அத்துமீறல் விசைபடகுகள் அணிவகுத்து நிற்பது தெரிகின்றன என்பதை பலர் கூறவும், பத்திரிகை, காணொளி செய்திகள்மூலமும் கண்டிருக்கிறோம், தடை செய்யப்பட்ட வலைகளைபயன்படுத்தி கடல் மண்ணிலிருந்து கடல்வாழ் உயிரினங்கள் அனைத்தையும் அவை மீள பெருக நீண்டகாலம் பிடிக்கும் அளவில் அள்ளிசென்று இலங்கை மீனவர்களின்  வாழ்க்கையிலும் கடற்பரப்பிலும் வெறுமையை அள்ளி விதைத்துவிட்டு செல்லும் இவர்களுடன் பேச என்னதானிருக்கிறது?

 

தெரியாமலும் சந்தர்ப்ப சூழ்நிலையாலும் நிகழும் தவறுகளுக்குபேச்சு வார்த்தை நடத்துவதில் சமாதானமாக போவதில் அர்த்தமிருக்கு, பல தசாப்தங்களாய் கைது,உயிர்பலி,மீன்பிடி படகுகள் இழப்பு என்று அத்தனையையும் எதிர்கொண்ட பின்னரும் மீண்டும் மீண்டும் இன்னொரு நாட்டின் எல்லைக்குள் நுழைந்து தெரிந்தே வேண்டுமென்றே சக இனத்தின் வாழ்க்கையில் வறுமையை விதைத்து போகும் இந்த   மீனவர் பெயரில் இயங்கும் சிலகும்பல்கள் மன்னிக்கப்பட முடியாதவர்கள்.

தொப்புள்கொடி உறவென்பதை இலங்கை மீனவர்கள் மட்டுமல்ல, எல்லை தாண்டி வரும் ரவுடி மீனவர்களும் உணர்ந்தால்தான் அந்த உறவுக்கு அர்த்தமிருக்கும் மரியாதையிருக்கும்.

இவர்கள் எல்லை தாண்டி வராது தம் வாழ்வாதாரத்தை தேடும் எம் வலிகளை கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலு,ம் உணர்ந்த பல லட்சம் சக தமிழக உறவுகளிற்குள் சேரமாட்டார்கள். அவர்கள் வேறு இவர்கள் வேறு.

முதலில் இங்குள்ள முதலாளிதானத்தினை புரியாவிடில் ஒன்றுமே தெளிவில்லாமல் போய் விடும். இங்கே, இலங்கை, தமிழரோ, இந்திய தமிழரோ, சிங்களவரோ கிடையாது. இது அரசியவாதிகளின், பணம் பாயும், சதுரங்க விளையாட்டு. சும்மா, ஈஸி சேர்ல இருந்து, நியாப்பிழைப்புகளை விட்டு விட்டு, இதன் பின்புலத்தினை அறிந்து கொள்வோமா.

இந்திய மத்திய அமைச்சராக இருந்த T R பாலு, கனிமொழி போன்ற, திமுக முதலைகள் மீன்பிடித்தொழிலில், ரோலர் போன்ற இயந்திரங்களில் முதலீடு செய்து, பெரும் பணம் சம்பாதிக்கின்றனர்.

 இவர்களே,மறுபுறம், இலங்கை அரசியல்வாதிகளுக்கும், இலங்கை கடற்படை வடபகுதி தலைமைகளுக்கும் லஞ்சம் கொடுத்து, பிரச்சனை இல்லாமல் மீனை பிடிக்கின்றனர்.

லஞ்சம் கொடாமல், வரும் அப்பாவி மீன்பிடிப்படகுகளே, இலங்கை கடற்படை தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.

இந்த, ஜில்மார்ட் விசயங்களை அறியாதது போலவே, நடித்துக் கொண்டே, ராஜதந்திர வேலைகளையும் செய்யாமல், அப்பாவி மக்களை வெறுமனே கிளப்பி விடும், பம்மாத்து வேலைகளை தான் பிழை என்கிறேன். 

இலங்கையின் ஐரோப்பாவுக்கான வருடாந்த மீன் ஏற்றுமதி மட்டுமே $70m. இது $100ம் ஆகும் நாள் விரைவில் வரும். அதனை செய்வது, சிங்கள முதலாளிமார். இதனை, இந்திய அரசியல் முதலாளிமார் இலக்கு வைப்பதால், இது ஒரு போட்டிக்குரிய, லஞ்ச, லாவண்யம் புகுந்து விளையாடும் களம் ஆகி உள்ளது..

இப்போது நடந்த கொலைகள் தமிழக மீனவருக்கு சொல்லும் செய்தி என்ன? லஞ்சம் கொடுக்கும், குறித்த, அரசியல் முதலைகளின் படகுகள், மட்டுமே மீன் பிடிக்கலாம். வேறு யாரேனும் சும்மா போய், உசிரை கொடாதீர்கள்.

வடபகுதி மீன் தொழிலில், முதலீடு செய்வது தொடர்பில், சில நண்பர்களுடன் சேர்ந்து, நடத்திய ஆய்வில் வந்த விடயங்களில் சிலவே இவை.

இதனையும் தாண்டி, முதலீடு செய்வதனால், இலங்கையின் கொழும்பு அரசியல் மட்டத்தில், பெரும் செல்வாக்கு தேவை. இன்றய நிலையில் அதுக்கு உத்தரவாதம் இல்லை என்பதால் திட்டம் முடங்கி உள்ளது. 

Edited by Nathamuni
Link to post
Share on other sites

வடபகுதி மீனவருக்கு ஒரு வாழ்வாதார அச்சுறுத்தல் இருக்கிறது! அதை அவர்கள் முன்னிலைப்படுத்தி அழுத்தம் கொடுக்க முயல்கிறார்கள்! 

இதற்குள் அரசியல் வாதிகளின் தொழில் முதலீடு, இலஞ்சம், அப்பாவி மீனவர்கள் மட்டுமே எல்லை தாண்டும் போது அடி வாங்குவதாக ஒரு மாயையை பரப்ப நாதம் முனைவது: 

 

Abuse: Gaslighting - Album on Imgur

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Copy & pasting! Easy chair !! 🤦‍♂️

Edited by Nathamuni
Link to post
Share on other sites
Just now, Nathamuni said:

Copy & parting! Easy chair !! 🤦‍♂️

தெரிந்ததை copy & parting செய்வதில் தவறில்லை! 

தெரியாததை வைத்து கட்டுரையே எழுதும் உலகில் அல்லவா வாழ்கிறோம்!😎

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Justin said:

இதற்குள் அரசியல் வாதிகளின் தொழில் முதலீடு, இலஞ்சம், அப்பாவி மீனவர்கள் மட்டுமே எல்லை தாண்டும் போது அடி வாங்குவதாக ஒரு மாயையை பரப்ப நாதம் முனைவது: 

அவர் கடற் கொள்ளையருக்காக தொடர்ந்து  ஒவ்வொரு சாட்டுகளை களைக்காமல் வைக்கிறாரே 😂

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தாயகத் தமிழர்கள் தமிழக உறவுகளுக்கு மட்டும் எதிராக இல்லை.தாயகத் தமிழ் உறவுகளே எல்லை தான்டி வியாபாரம் செய்தாலும் போர்க் கொடி துக்கவார்கள்.இதை தமிழக தாயக முரன்பாடு என்று மட்டும் பாக்க முடியாது.ஆனால் இதை சிங்களம் தனக்கு சாதகமாக பயன் படுத்தும் எனபது மட்டும் உண்மை.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யாழில் புதன்கிழமை மாபெரும் போராட்டம்

-என்.ராஜ்

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய செயற்பாட்டை கண்டித்து, எதிர்வரும் புதன்கிழமை யாழ். மாவட்டத்தில் மாபெரும் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக, யாழ். மாவட்டக் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களில் சம்மேளனத் தலைவர் அன்னராசா தெரிவித்தார்.

அதாவது எதிர்வரும் புதன்கிழமை காலை யாழ். - பண்ணை சுற்று வட்டத்தில் இருந்து பேரணி ஆரம்பித்து, கடற்றொழில் திணைக்களம், இந்திய துணை தூதரகம் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு பேரணியாகச் சென்று.,  இந்திய மீனவர்கள் அத்துமீறி தடுத்து நிறுத்துமாறு கோரி மகஜர் கையளிக்கவுள்ளதாகவும், அவர் கூறினார்.

Tamilmirror Online || யாழில் புதன்கிழமை மாபெரும் போராட்டம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நாலு தமிழர்கள்  கொல்லப்பட்டிருக்கிறார்கள்

அதென்னமோ  தெரியல

தமிழர்களால் மற்றவர்கள் கொல்லப்பட்டால்  தவிர்த்திருக்கலாம் என்கிறார்கள்

தமிழர்கள் கொல்லப்படும்போது வேறு வழியில்லை  என்கிறார்கள்

இவ்வளவு  தான்  தமிழரின் உயிர் மதிப்பு????

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 24/1/2021 at 01:44, nedukkalapoovan said:

யாழ் பண்ணைக் கடலில் இருந்து புங்குடுதீவு... நயினாதீவு.. எழுவைதீவு.. வடமராட்சி எல்லாம் கடந்த 2020 இன் ஆரம்பத்தில் தான் போய் வந்தம்.

சிங்களக் கடற்படையே மீன்பிடிக்குது கடலுக்குள் இறங்கி. காரைநகர்.. ஊர்காவற்றுறை கடற்கரைகளில்.. முதலில் கடற்படைக்கு சப்பிளை அனுப்பனும்.. நயினாதீவில்.. கடற்படைக்கு காட்டி மிச்சம் தான்.. வெளியேறும்.

பாசையூர்.. நாவாந்துறை.. மீனவ சமூகத்துக்குள் ஈபிடிபியின் ஆழ ஊடுருவல் இருக்கிறது. சில மீனவ தொழிற்சங்களை அவர்களே ஊடுவி கண்காணிக்கிறார்கள். கப்பம் பெறப்படுகிறது.

உங்களுக்கு விசயம் தெரியாட்டி.. உலகத்துக்கே தெரியாதுன்னு நினைக்கக் கூடாது.

பண்ணை.. மண்டைதீவு காவலரண் திறக்கப்பட்டு.. எல்லா மீன் வியாபாரிகளும்.. வான்களும் சோதிக்கப்படுகின்றன. கேட்டால் கஞ்சா வருகிறதாம்... சோதிக்கினமாம். அங்கு எல்லாமே கட்டுப்படுத்தப்பட்டு தான் உள்நுழைகிறது... கப்பத்துக்கு அளவு அங்கு தீர்மானமாகிறது.

இதை எல்லாம் ஏன் தட்டிக்கேட்டு ஒரு கதவடைப்பும் செய்யவில்லை...????! ஏன்னா செய்ய முடியாத சூழலை.. சிங்கள எஜமானக் கூலிகளும்.. ஆக்கிரமிப்பும் உருவாக்கி உள்ள நிலையில்..

தமிழக மீனவர்களோடு பகை முடிவதன் நோக்கம் என்ன..???!

நான் மீனவர்கள் பிரச்சினை பற்றி எழுதினால் நீங்கள் அதை தாண்டி வேறோங்கோ போகிறீர்கள் 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய செயற்பாட்டை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம் - மீனவர்களுக்கு அழைப்பு

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய செயற்பாட்டை கண்டித்து எதிர்வரும் புதன்கிழமை யாழ் மாவட்டத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களில் சம்மேளன தலைவர் அ.அன்னராசா தெரிவித்தார்.

spacer.png

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

நீண்ட காலமாக இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டின் காரணமாக வடக்கு மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றார்கள் எனினும் அண்மையில் அத்துமீறி இந்திய மீனவர்களுக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக நான்கு பேர் உயிரிழந்துள்ளார்கள்.

அவர்களுக்கு எமது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு மேலும் தொடர்ச்சியாக இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை அரசாங்கம் தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை விடுத்து எதிர்வரும் புதன்கிழமை யாழ்ப்பாண நகரில் மாபெரும் கண்டனப் பேரணி நடாத்த உள்ளோம்.

அதாவது எதிர்வரும் புதன்கிழமை காலை யாழ் பண்ணை சுற்று வட்டத்தில் இருந்து ஆரம்பித்து கடற்தொழில் அமைச்சு இந்திய துணை தூதரகம் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோருக்கு பேரணியாகச் சென்று  இந்திய மீனவர்கள் அத்துமீறி தடுத்து நிறுத்துமாறு மகஜர் கையளிக்கவுள்ளதாக தெரிவித்ததோடுகுறித்த போராட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரும் தமக்கு ஆதரவு வழங்கவேண்டும்.

நேற்றைய தினம் அனைத்து மாவட்ட மீனவ சங்கங்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும்  தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு அனைத்து தரப்பினரும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கி இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் தடுக்க உதவி புரிய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய செயற்பாட்டை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம் - மீனவர்களுக்கு அழைப்பு | Virakesari.lk

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

இத எங்கட வாக்காளக் குஞ்சுங்கோ எல்லோரும் ஒருமுறை பாருங்கோ..

வடகடலின் அடிப்படை புரியாமல் வாள் வீசினால் வெட்டு விழத்தான் செய்யுமுங்கோ..🤘

 • Like 1
 • Sad 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • Dr Hugh McDermott, a member of New South Wales Legislative Assembly, has called on both the Premier and Opposition leader in New South Wales, Australia, to follow the lead of Ontario in recognising Sri Lanka’s genocide against Tamils and to refer the perpetrators of the genocide to the International Criminal Court. McDermott’s statement comes in advance of Mullivaikkal remembrance on 18 May. 12 years have passed since the end of the armed conflict however no military official has been held accountable for grievous war crimes that took place. In his statement, McDermott highlights report UN reports which revealed that in the last stages of the war; He further adds: In his statement, McDermott stressed that “as Sri Lanka is not a party to the Rome Statute, the referral [to the International Criminal Court] must receive unanimous support from all UN Security Council members”. He further notes the efforts of parliamentarians across Europe to achieve this such as the “twenty-one parliamentarians from across France [who] have called on President Macron to use France's influence as a member of the United Nations Security Council to make that referral happen”. His statement further maintained that Australia should follow suit and recognise Sri Lanka’s “appalling acts as genocide”. McDermott also thanked the Tamil community in western Sydney noting; He added: Responding to his statement, Gajen Ponnambalam, thanked him on Twitter stating: https://www.tamilguardian.com/content/calls-new-south-wales-recognise-tamil-genocide   நியூ சவுத் வேல்ஸ் சட்டமன்றத்தின் உறுப்பினரான டாக்டர் ஹக் மெக்டெர்மொட், ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு தமிழர்களுக்கு எதிரான இலங்கையின் இனப்படுகொலையை அங்கீகரிப்பதில் ஒன்ராறியோவின் முன்னணியைப் பின்பற்றவும், இனப்படுகொலையின் குற்றவாளிகளைக் குறிப்பிடவும் அழைப்பு விடுத்துள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு. மெக்டெர்மோட்டின் அறிக்கை மே 18 அன்று முல்லிவைக்கல் நினைவுக்கு வருவதற்கு முன்கூட்டியே வருகிறது. ஆயுத மோதல் முடிவடைந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்டன, இருப்பினும் நடந்த கடுமையான போர்க்குற்றங்களுக்கு எந்த இராணுவ அதிகாரியும் பொறுப்பேற்கவில்லை. தனது அறிக்கையில், யுனைடெட் அறிக்கைகளை மெக்டெர்மொட் சிறப்பித்துக் காட்டுகிறார், இது போரின் கடைசி கட்டங்களில் வெளிப்படுத்தியது;
  • உரத்துக் கொக்கரிக்கும், என் தீவகத்தின் சேலைக் கரையே...! உனது அழு குரல், அந்தச் செவிட்டுப் புத்தனின் காதுகளில், காந்தீயக் குல்லாய்கள் மறைக்கும் கண்களில், விழுமென்றொ அல்லது படுமென்றோ.., இன்னும் நம்புகின்றாய்? முப்பத்தாறு வருடங்கள் உருண்டாலும்.., இப்போதும் உனது அலகளின் ஓசை, அந்த மரணித்தவர்களின் பெயர்களைத் தான்..,  திரும்பத் திரும்ப உச்சரிக்கின்றது....! நினைவூட்டல் கவிதைக்கு நன்றி, கோபி...!
  • தமிழ் சிறியர், சனிக்கு மட்டும் அடிச்சால் காணுமெண்டு நான் சொல்லுறன்! நீங்களும் ஆமோதிக்கின்றீர்கள் தானே? இந்த நேரத்தில சனியைத் தான் சனம் கட்டிப் பிடிச்சு அழும்...!
  • என் கிரிக்கெட் வாழ்க்கையைச் செதுக்கியதில் ஷேன் பாண்டுக்கு முக்கியப் பங்குண்டு: பும்ரா!   தனது கிரிக்கெட் வாழ்க்கையைச் செதுக்கியதில் முன்னாள் நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷேன் பாண்டுக்கு முக்கியப் பங்கிருப்பதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கூறியுள்ளார். ஷேன் பாண்ட், மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராகத் தற்போது இருந்து வருகிறார். மும்பை இந்தியன்ஸ் தரப்பு சமீபத்தில் ஒரு காணொலியை வெளியிட்டுள்ளது. அதில் பேசியிருக்கும் பும்ரா, “நான் இங்கு இல்லையென்றாலும், இந்திய அணியுடன் விளையாடும்போது ஷேன் பாண்டோடு பேச முயல்வேன். இது ஒரு நல்ல பயணமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புதிதாக ஏதாவதைக் கற்று எனது பந்துவீச்சில் அதைச் சேர்க்க முயல்கிறேன். அதில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு. இதுவரை எங்களுக்குள் சிறப்பான உறவு இருந்து வருகிறது. இன்னும் பல வருடங்கள் இது தொடரும் என்று நம்புகிறேன். நான் முதலில் அவரை 2015ஆம் ஆண்டு சந்தித்தேன். சிறுவயதில் அவரது பந்துவீச்சை, அவர் இயங்கும் விதத்தைப் பார்த்து அசந்து போயிருக்கிறேன். அவரைச் சந்தித்துப் பயிற்சி பெற்றது சிறந்த அனுபவமாக இருந்தது. கிரிக்கெட் களத்தில் என்னால் முடியாத விஷயத்தை முயல, என் சிந்தனையைத் திறக்க அவர் உதவி செய்தார். எங்களுக்குள் இருக்கும் நட்பு ஒவ்வொரு ஆண்டும் மேம்பட்டு வருகிறது” என்று பும்ரா பேசியுள்ளார். உலகிலேயே ஆட்டத்தின் கடைசி ஓவர்களில் பந்துவீசக்கூடிய சிறந்த வீரர் பும்ராதான் என்று பாண்ட் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. https://pagetamil.com/2021/05/16/என்-கிரிக்கெட்-வாழ்க்கைய/  
  • சர்வதேச ஊடகங்களின் விமர்சனத்தால் இதயத்தில் ரத்தம் கசிகிறது; அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் அழிவை ஏற்படுத்தியதால் இந்தியா கடும் நெருக்கடியில் உள்ளது. இதன் விளைவாக, நாடு சராசரியாக ஒரு நாளைக்கு 3 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா தொற்றுகளைப் பதிவு செய்து வருகிறது. அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து தினசரி சுமார் 4,000 எனும் அளவில் உள்ளது. இது தான் சமயம் எனக் காத்திருந்ததைப் போல், பல சர்வதேச ஊடகங்களும், இந்தியாவின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் வகையில், மிக மோசமாக செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது இந்தியா கடந்து வரும் சோதனை நேரங்களில் இவ்வாறு மோசமாக சித்தரிக்கும் சர்வதேச ஊடகங்களின் நடவடிக்கையால் தனது இதயத்தில் ரத்தம் கசிவதாக, ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் இந்தியா குறித்து ஒரு உணர்ச்சிபூர்வமான குறிப்பை தனது வலைப்பதிவில் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கருத்துக்கள் பின்வருமாறு :- “முன்னர் பார்த்திராதபடி, இந்தியா கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலைகளின் இன்னலுக்கு நடுவே உள்ளது. வைரஸின் அபாயகரமான பரவலை எதிர்த்துப் போராடுகையில், 1.4 பில்லியன் மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில், எந்தவொரு பொதுத் திட்டத்தையும் செயல்படுத்துவதற்கே மிகப் பெரும்சவாலாக அதன் மக்கள் தொகையே இருக்கும் சூழலில், சர்வதேச ஊடகங்கள் இந்தியாவை ஒரே தராசில் வைத்து கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. நான் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இந்தியாவுக்கு சென்று வருகிறேன். இந்தியாவில் நாடு முழுவதும் பயணம் செய்துள்ளேன். குறிப்பாக தமிழ்நாட்டை எனது ஆன்மீக இல்லமாக கருதுகிறேன். இதுபோன்ற மாறுபட்ட மற்றும் பரந்த நாட்டை நடத்துவதற்கான பணியை கொண்டுள்ள தலைவர்கள் மற்றும் பொது அதிகாரிகள் மீது எனக்கு எப்போதும் உயர்ந்த மரியாதை உண்டு. நான் எங்கு சென்றாலும், மக்கள் என்னை அன்புடனும் பாசத்துடனும் வரவேற்றனர். அதற்காக நான் என்றும் அவர்களுக்கு கடன்பட்டிருப்பேன். பல ஆண்டுகளாக நான் இந்தியாவை நெருங்கிப் பார்த்தேன் என்று பெருமையுடன் கூறலாம், அதனால்தான் இந்த நேரத்தில் இந்தியா, அதன் மக்கள் எதிர்கொள்ளும் எண்ணற்ற சவால்கள் குறித்து எதுவும் புரியாதவர்கள் ஊடகங்கள் மூலமாக தவறாக பேசுவதைப் பார்க்கும்போது என் இதயத்தில் ரத்தம் கசிகிறது. ஒரு கிரிக்கெட் வீரர் மற்றும் விளையாட்டின் காதலன் என்ற முறையில், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடருக்காக இந்தியாவுக்கு வர அனுமதித்த விளையாட்டோடு எனது தொடர்பை நான் பராமரித்து வருகிறேன். எனது சக நாட்டு மக்களும் பல ஆண்டுகளாக ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வருகிறார்கள். இந்த சூழலில், உலகம் இந்தியா மீது தனது கதவுகளை மூடிக்கொண்டு, இந்திய அரசாங்கத்தை இழிவுபடுத்தும் ஒரு நேரத்தில், இந்தியாவில் இருக்கும்போது என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள நினைத்தேன். ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் அமர்ந்து இந்தியாவை விமர்சிப்பவர்களுக்கு இது ஒரு பார்வையைக் கொடுக்கும். எனக்கு தரவுகள் குறித்துத் தெரியாது. ஆனால் சில ஊடகங்களில் இருந்து வரும் தரவுகள் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தின. ஆஸ்திரேலியாவை விட ஐந்து மடங்கு அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியா அதற்குள் 16 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட்டுவிட்டது. இந்தியா ஒவ்வொரு நாளும் 13 லட்சம் பரிசோதனைகளை செய்து வருகிறது. நான் சொல்லவருவது என்னவென்றால், இவ்வளவு பெரிய எண்ணிக்கையையும், அது தொடர்பான சவாலையும் யாரும் புறக்கணிக்கக் கூடாது என்பது தான். இந்தியா குறித்து ஒருவர் யோசிக்கும்போது, அற்புதம் என்ற ஒரே விஷயம் தான் மனதில் தோன்றும். இந்திய சுற்றுலாத்துறையும் “அற்புத இந்தியா” என்ற வாக்கியத்தைத் தான் பிரபலப்படுத்தி வருகிறது. இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா செல்வதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருக்கும் இந்த சூழ்நிலையிலும், பண்டைய நாகரீகத்தைக் கொண்ட இந்தியாவை பற்றிய எனது எண்ணம் மாறவில்லை. தற்போதைக்கு மனித நேயம் மிகுந்த இந்த சமூகம் தொற்றுநோயால் தடுமாறியுள்ளது. பல்வேறு ஆன்மீக திருவிழாக்கள், பிரமாண்ட திருமண விழாக்கள், சாலையோர வியாபாரிகள், கால்நடைகள் மற்றும் பொதுமக்கள் நிறைந்த வீதிகளை இந்த சூழ்நிலை மாற்றிவிட்டது. ஆஸ்திரேலியா அரசின் பயணக் கொள்கை போல அனைத்தும் தற்காலிகமாக முடங்கியுள்ளது. இந்தியா ஒரு வளமான நாகரீகம் கொண்ட நாடு. அதற்கு நிகராக உலகில் வெகு சில நாகரீகங்களே உள்ளன. அத்தகைய இந்தியா பிரச்சினையில் இருக்கும்போது, ஒரே தராசில் வைத்து எடை போடாமல், அதன் பரந்துபட்ட கலாச்சார, மொழி, மனித வளர்ச்சி உள்ளிட்ட மற்ற நுணுக்கமான விஷயங்களை பாராட்டுவதே நம்மால் முடிந்த குறைந்தபட்ச உதவி.” இவ்வாறு மேத்யூ ஹைடன் தனது வலைப்பதிவில் கூறியுள்ளார். மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திராவும் இந்தியாவுக்கான ஹைடனின் உணர்ச்சிபூர்வமான பதிவை ட்விட்டரில் பகிர்ந்து இந்தியா மீதான ஹைடனின் பாசத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். https://pagetamil.com/2021/05/16/சர்வதேச-ஊடகங்களின்-விமர்/
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.