Jump to content

கந்தரோடையில் ஆலயத்தை குறிவைக்கும் இராணுவத்திற்கு மக்கள் எதிர்ப்பு.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கந்தரோடையில் ஆலயத்தை குறிவைக்கும் இராணுவத்திற்கு மக்கள் எதிர்ப்பு.!

4417c3f5-283e-4e2b-bef2-e853dd9cd69c.jpg

சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோவில் புராதன தீர்த்தக்கேணி அதனை அண்டியுள்ள அரச மரம் தொடர்பில் இராணுவத்தினர் எனக்கூறியோர் விசாரித்ததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நேற்றுமாலை 5 மணியளவில் ஆலயத்துக்கு வந்த சிலர், பூசகரிடம் தம்மை காரைநகர் முகாமைச் சேர்ந்த படையினர் என அறிமுகப்படுத்தினர்.

ஆலயத்துக்குச் சொந்தமான தீர்த்தக் கேணி அதனை அண்டியுள்ள அரச மரம் உள்ள நிலப்பகுதி தொடர்பில் கேட்டறிந்துள்ளனர்.

அந்த கேணி, அரச மரம் உள்ள நிலப்பகுதி யாருக்குச் சொந்மானது என அவர்கள், பூசகரிடம் வினவியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பூசகரால் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனுக்கு இன்று காலை தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், அந்தப் பகுதி மக்களுடன் கலந்துரையாடினர்.

கந்தோரடையில் தொல்பொருள் திணைக்கத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இந்து ஆலயத்தை சிங்களம் பேசும் நபர்கள் வந்து விசாரத்தமை ஊர் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

https://thamilkural.net/newskural/news/116127/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மன் கோவில் புராதன தீர்த்தக்கேணி குறித்து விசாரித்துவரும் இராணுவத்தினர்: குழப்பத்தில் ஊர்மக்கள்..!

சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோவில் புராதன தீர்த்தக்கேணியை அண்டியுள்ள அரச மரம் தொடர்பில் இராணுவத்தினர் எனக்கூறியோர் விசாரித்ததால் அங்குள்ள  மக்களிடையே அச்சநிலை ஏற்பட்டுள்ளது.

spacer.png

தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அம்மன் ஆலய கேணியுள்ள காணியை அபகரிக்கும் முயற்சியா என்ற அச்சம் ஊர்மக்களிடையே ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

spacer.png
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்றுமாலை 5 மணியளவில் ஆலயத்துக்கு வந்த சிலர், பூசகரிடம் தம்மை காரைநகர் முகாமைச் சேர்ந்த படையினர் என அறிமுகப்படுத்தியுள்ளதுடன், குறித்த ஆலயத்துக்குச் சொந்தமான தீர்த்தக் கேணியையும்  அதனை அண்டியுள்ள அரச மரம் உள்ள நிலப்பகுதி தொடர்பில் கேட்டறிந்துள்ளனர்.

spacer.png
மேலும்,குறித்தக் கேணி, அரச மரம் உள்ள நிலப்பகுதி யாருக்குச் சொந்தமானதெனவும்  அவர்கள், பூசகரிடம் வினவியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பூசகரால் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனுக்கு இன்றுகாலை தகவல் வழங்கப்பட்டது.

spacer.png
இந்நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், அந்தப் பகுதி மக்களுடன் கலந்துரையாடியுள்ளமையும் குறிப்பிடதக்கது. 

 

https://www.virakesari.lk/article/99014

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூருக்குப் பக்கத்தில் எங்காவது அரசமரம் .இருந்தால்தயவு செய்து தறித்து விடுங்கள். நல்லூராவது மிஞ்சும்.தொல்லியல் துறை என்ற பெயரில் ஓவ்வெருநாளும் ஒவ்வொரு இடத்தைக்கறிவைக்கிறார்கள். நல்லாட்சி என்ற போர்வையில்நரியாட்சிசெய்த ரணிலின் 1000 விகாரைத் திட்டததை கோத்தாவின் கொடும் ஆட்சி நடைமுறைப்படுத்துகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுன்னாகம் கந்தரோடை பகுதியில் குழப்பம்

 
PHOTO-2021-01-23-12-34-43-696x392.jpg
 27 Views

சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோவில் புராதன தீர்த்தக்கேணி அதனை அண்டியுள்ள அரச மரம் தொடர்பில் இராணுதினர் எனக்கூறியோர் விசாரித்ததால்  அந்தப் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நேற்றுமாலை 5 மணியளவில் ஆலயத்துக்கு வந்த சிலர், பூசகரிடம் தம்மை காரைநகர் முகாமைச் சேர்ந்த படையினர் என அறிமுகப்படுத்தினர்.

PHOTO-2021-01-23-12-34-43.jpg

அந்த ஆலயத்துக்குச் சொந்தமான தீர்த்தக் கேணி அதனை அண்டியுள்ள அரச மரம் உள்ள நிலப்பகுதி தொடர்பில் கேட்டறிந்துள்ளனர்.

PHOTO-2021-01-23-12-34-42.jpg

அந்த கேணி, அரச மரம் உள்ள நிலப்பகுதி யாருக்குச் சொந்மானது என அவர்கள், பூசகரிடம் வினவியுள்ளனர்.

PHOTO-2021-01-23-12-34-40.jpg
இந்தச் சம்பவம் தொடர்பில் பூசகரால் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனுக்கு இன்று காலை தகவல் வழங்கப்பட்டது.

PHOTO-2021-01-23-12-34-42-1.jpg

சம்பவ இடத்துக்கு விரைந்த நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், அந்தப் பகுதி மக்களுடன் கலந்துரையாடினர்.

கந்தோரடையில் தொல்பொருள் திணைக்கத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இந்து ஆலயத்தை சிங்களம் பேசும் நபர்கள் வந்து விசாரத்தமை ஊர் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

https://www.ilakku.org/?p=40098

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ பெரிய ஆப்பு இறங்கபோது, இதெல்லாம் முன்னோட்டம் போல தான் இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் பறி போகும் போது அரச கைக்கூலிகள் வேடிக்கை மட்டும் பார்க்கிரார்கள் என்று சொன்ன கீ போர்ட் போராளிகளை நான் தேடிக்கொண்டு இருக்கிறன் எங்க ஒருவரையும் காணல 

இப்ப வடக்கு இறங்கி அடிங்கள் பார்க்கலாம் முல்லைத்தீவுக்கும் புத்தர் வந்திட்டார் விரைவில் , மொத்தமா வடக்கிற்க்கும் ,

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.