Jump to content

பிள்ளையான் குழுவின் மத்திய முகாம் தொடர்பில் வெளியான தீர்ப்பு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான் குழுவின் மத்திய முகாம் தொடர்பில் வெளியான தீர்ப்பு

3C635AC0-62BF-425E-8E16-790EAF74D475-300

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகமாக செயற்படும் தமது குடும்ப வீட்டினை மீள ஒப்படைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளதாக மக்கள் முன்னேற்றக்கட்சியின் செயலாளர் நாயகம் அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் நீதிவான் இந்த உத்தரவினை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமது குடும்ப சொத்தாக பரம்பரைபரம்பரையாக தாங்கள் வசித்துவந்த வீட்டிற்குள் கடந்த 30வருடமாக தாங்கள் செல்லமுடியாத நிலையிருந்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று மாலை மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அருண்தம்பிமுத்து,

பிள்ளையான் அவர்கள் சட்ட விரோதமாக என்னுடைய பாரம்பரிய வீட்டினை அபகரித்திருந்தார். மட்டக்களப்பு நீதிமன்றில் அதற்கு எதிரான வழக்கினை நான் தொடுத்திருந்தேன். இன்று எனக்கு நீதி கிடைத்திருக்கின்றது. நீதிமன்றில் தாங்கள் மூன்று கோடிக்கு மேல் செலவழித்திருந்ததாகவும் அதனைப்பெற்றுத்தருமாறு கோரிக்கையினை முன்வைத்திருந்தனர், அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னுமொருவருடைய காணிக்குள் பலாத்காரமாக சென்று இருந்துவிட்டு அதற்குள் நாங்கள் மூன்று கோடி செலவிட்டுள்ளோம் நியாயம் அற்ற விடயமாக எடுத்துக்காட்டப்பட்டது.

எனது பாரம்பரிய வீடு ஒரு வரலாற்று பாரம்பரியமிக்க வீடு. தயாரின் தந்தையார் தமிழரசுக்கட்சியின் செனட் சபை உறுப்பினரான மாணிக்கம் அவர்கள் வாழ்ந்த வீடு. அந்த வீட்டுக்கு பல ஆண்டுகால வரலாறு இருக்கின்றது.

குறித்த வீட்டினைவிட்டு எழும்பி அந்த வீட்டினை என்னிடம் ஒப்படையுங்கள் என்று நான் பிள்ளையானிடம் பல தடவைகள் கோரிக்கைவிட்டிருந்தேன். இந்த வழக்கு நடந்துகொண்டிருக்கும்போது குறித்த வீட்டுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகின்றோம் வீட்டினை விற்றுவிடுங்கள் என்று என்னிடம் கேட்டார்கள். நான் பிறந்து வளர்ந்து எனக்கு 14வயது வரையில் நான் வாழ்ந்த வீடு அது. அந்த வீட்டினை விற்பதற்கு எனக்கு உடன்பாடு இருக்கவில்லை.

முக்கியமாக அரசியலில் இருக்கும் நான் கூட மிகவும் கஸ்டத்தின் மத்தியிலேயே இந்த வழக்கினை முன்னெடுத்தேன். இலட்சக்கணக்கில் எனக்கு செலவு ஏற்பட்டது. இறுதியாக மட்டக்களப்பு நீதிமன்றம் உண்மையினை ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்திருக்கினறது.

நீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பினை மதிப்பதற்கான சந்தர்ப்பம் பிள்ளையானுக்கு கிடைத்திருக்கின்றது. இன்னொருவரின் வீட்டுக்குள் அமர்ந்துகொண்டு நான் எவ்வளவு வேண்டுமானாலும் தருகின்றேன் எனக்கு விற்று விடுங்கள் என்று கேட்பது தவறான விடயமாகும்.

எனக்கு அவர் நாமல் ராஜபக்ஸ ஊடாகவும் அந்த வீட்டினை விற்குமாறு கூறியிருந்தார். நான் அவருக்கு தெளிவாக கூறினேன் உங்களது வீரஹெட்டியவில் இருக்கும் வீட்டினை விற்பீர்களா. அதேபோல்தான் இது எனது பாரம்பரிய வீடு,அதனை விற்கமுடியாது என கூறியிருந்தேன்.

இன்னும் சில வாரங்களுக்குள் அந்த வீட்டுக்குள் நாங்கள் செல்லமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. நீதிமன்ற தீர்ப்பினை மதித்து பிள்ளையான் அவர்கள் வீட்டினை என்னிடம் ஒப்படைத்தார் என்றால் அது நன்றாக இருக்கும்.

காலத்தினைப்போக்குவதற்காக சில வாரங்கள்,சில மாதங்கள் இருக்கவேண்டும் என்று செயற்படுவாரானால் அதற்கு எதிராக தகுந்த நடவடிக்கையினை நான் முன்னெடுப்பேன். 30வருடமாக எனது வீட்டுக்குள் போகமுடியாத நிலை காணப்பட்டு மீண்டும் போவதற்கான சந்தர்ப்பம் வரும்போது நான் அதனை விட்டுச்செல்லமுடியாது.
E7E81890-478A-41DA-8FB2-84C3D753387A-300

https://www.meenagam.com/பிள்ளையான்-குழுவின்-தலைம/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவன் வீட்டை அபகரிப்பவன்  தான் இன்றைய மக்களால் தெரிவு  செய்யப்படும் தலைவனாக  இருக்கிறான்??

யாரை  நோவது???

Link to comment
Share on other sites

2 hours ago, விசுகு said:

மற்றவன் வீட்டை அபகரிப்பவன்  தான் இன்றைய மக்களால் தெரிவு  செய்யப்படும் தலைவனாக  இருக்கிறான்??

யாரை  நோவது???

மக்களையே அபகரிக்கத் தெரிந்தவனுக்கு அவர்கள் வீட்டை அபகரிக்கத் தெரியாதா....? என்னங்க விசுகு அவர்களே.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

மற்றவன் வீட்டை அபகரிப்பவன்  தான் இன்றைய மக்களால் தெரிவு  செய்யப்படும் தலைவனாக  இருக்கிறான்??

யாரை  நோவது???

உண்மையில் அந்த வீட்டுக்கு உரிமை கோரியவர்கள் எண்ணிக்கை அதிகம் ஆனால் உறுதிப்பத்திரம்  இருந்த்கிருந்தால் பல வருடங்களுக்கு முன்னரே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கும்  என்பதை இங்கு பல யோசிக்க வில்லை .

எங்கள் ஊரில்  ஏன் கிழக்கு மாகாணத்தில் பல இயக்கங்கள் அரசியலுக்காக ஆயுத முனையில் ஆக்கிரமித்த வீடுகள் இப்பவும் பாழடைந்து காணப்படுகிறது 

எல்லா இயக்கங்களும் ஆயுதம் பதில் சொல்லிய காலம் உடமையாளர்கள்  அனைவரும் தற்போது ஐரோப்பாவில் இருக்கிறார்கள் சில இடங்கள் ரியுசன் சென்ராக பயன்படுகிறது . ஒரு பக்கம் மட்டும் பார்க்கப்படாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

மற்றவன் வீட்டை அபகரிப்பவன்  தான் இன்றைய மக்களால் தெரிவு  செய்யப்படும் தலைவனாக  இருக்கிறான்??

மக்களும் இன்று அதே மன நிலைக்கு மாற்றப்பட்டு விட்டனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

மற்றவன் வீட்டை அபகரிப்பவன்  தான் இன்றைய மக்களால் தெரிவு  செய்யப்படும் தலைவனாக  இருக்கிறான்??

யாரை  நோவது???

அதைவிட அந்த அடாத்தாக இருந்த வீட்டில் சுண்ணாம்பு வெள்ளை அடித்த சிலவு 3 கோடி ரூபா தன்னும் தாங்க  என்று கெஞ்சி கேட்டிருக்கு பள்ளிக்கூட பக்கமே போகலையாக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பெருமாள் said:

அதைவிட அந்த அடாத்தாக இருந்த வீட்டில் சுண்ணாம்பு வெள்ளை அடித்த சிலவு 3 கோடி ரூபா தன்னும் தாங்க  என்று கெஞ்சி கேட்டிருக்கு பள்ளிக்கூட பக்கமே போகலையாக்கும் .

பள்ளிக்கும் மக்கள் சேவைக்கும் சம்பந்தமில்லை ஆனால் இப்பவெல்லாம் கொள்ளை அடிக்க தான் கனக்க படிக்க வேண்டி இருக்கு?

Link to comment
Share on other sites

இலங்கை நீதித்துறையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

வீட்டை அபகரித்தால் நீதியான தீர்ப்பு

தேவாலயம் ஒன்றில் ஒருவரை படுகொலை செய்தால் விடுதலை.

அற்புதம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நிழலி said:

இலங்கை நீதித்துறையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

வீட்டை அபகரித்தால் நீதியான தீர்ப்பு

தேவாலயம் ஒன்றில் ஒருவரை படுகொலை செய்தால் விடுதலை.

அற்புதம்.

ஐனநாயக நாடுகளில் அரசு வேறு நீதித்துறை வேறு. ஆனால் இலங்கையில் அரசின் பின்னால் நீதித்துறை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

இலங்கை நீதித்துறையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

வீட்டை அபகரித்தால் நீதியான தீர்ப்பு

தேவாலயம் ஒன்றில் ஒருவரை படுகொலை செய்தால் விடுதலை.

அற்புதம்.

இந்திய அரசின் நீதித்துறை மட்டும் எப்படி ராஜிவ் காந்தி கொலை வழக்கில். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த வீட்டை தம்பிமுத்துவின் பரம்பரையிடமிருந்து ஈபிஆர்எல்எப்  தான் புடுங்கி எடுத்தது ...அவர்களது முகாம் இருந்து, பின்னர் கருணா அதில் முகாம் அமைத்திருந்தார் ...கருணா விட்டுட்டு போன பிறகு தான் பிள்ளையானது முகாம் வந்தது ...பிள்ளையான் அந்த வீட்டை காசு கொடுத்து வாங்கத் முயற்சித்தார் ..அவர்கள் வளர்ந்த பரம்பரை விடு என்பதால் விற்க மறுக்க  அவர் எழும்ப மறுக்க கோட்டில் போய் பெற்றுக் கொண்டார்.
 
11 hours ago, நிழலி said:

இலங்கை நீதித்துறையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

வீட்டை அபகரித்தால் நீதியான தீர்ப்பு

தேவாலயம் ஒன்றில் ஒருவரை படுகொலை செய்தால் விடுதலை.

அற்புதம்.

இன்னார் சுட்டார் என்பதை கண்ட சாட்சி இல்லாவிட்டால் நீதிமன்றம் என்ன செய்யும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கை பதிந்துவிட்டு சாட்சி தேடும் இலங்கையின் சட்டத்துறையும், நீதித்துறையும் பாராட்டப்பட வேண்டியவையே. இத்தனை ஆண்டுகள் கழித்து கண்டு பிடித்ததற்கு சிறப்பு சான்றிதழ் வழங்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

இன்னார் சுட்டார் என்பதை கண்ட சாட்சி இல்லாவிட்டால் நீதிமன்றம் என்ன செய்யும் 

ஐய்யகோ பாவம், அப்பாவி நீதிமன்றம்!!! ஏனென்றால் இதுவரை இலங்கையின் நீதித்துறை சொன்னவற்றையும் வழங்கிய தீர்ப்பினையும் நாங்கள் அப்படியே சரியென்றுதானே ஏற்றுக்கொண்டு வருகிறோம். அதேபோல இப்போதும் அது நீதி தவறாமல் நேர்மையுடன் தான் பிள்ளையானை விடுதலை செய்திருக்கின்றது என்பதனை முழு மனதோடும், மனச்சாட்சிக்கு விரோதமில்லாமலும் ஏற்றுக்கொள்கிறோம்.

அந்த யோசேப்பு பரராஜசிங்கம் தற்கொலை செய்யிறதுக்கு வேற இடம் இல்லாமல், கோயிலுக்குள் போய், அதுவும் கிறிஸ்மஸ் தினத்தன்று தன்னைத்தானே சுட்டுக்கொன்றுவிட்டு, செத்தாப்பிறகு பக்கத்தில 
 இருந்த மனிசியையும் கொல்லப் பார்த்திருக்கிறது. இந்தத் தேசிக்காய்களே இப்படித்தான். பிழை ஓரிடம், பழி இன்னோரிடம் என்கிறமாதிரி, விரல் சூப்பும் அப்பாவிப் பிள்ளையானை இந்தக் கொலையில் சம்பந்தப் படுத்தப் பாத்தாங்கள், அப்பாடா, நல்ல காலம், இலங்கையின் சுயாதீன நீதித்துறை அந்த அப்பாவியைக் காப்பாற்றிவிட்டது !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரஞ்சித் said:

ஐய்யகோ பாவம், அப்பாவி நீதிமன்றம்!!! ஏனென்றால் இதுவரை இலங்கையின் நீதித்துறை 😃சொன்னவற்றையும் வழங்கிய தீர்ப்பினையும் நாங்கள் அப்படியே சரியென்றுதானே ஏற்றுக்கொண்டு வருகிறோம். அதேபோல இப்போதும் அது நீதி தவறாமல் நேர்மையுடன் தான் பிள்ளையானை விடுதலை செய்திருக்கின்றது என்பதனை முழு மனதோடும், மனச்சாட்சிக்கு விரோதமில்லாமலும் ஏற்றுக்கொள்கிறோம்.

அந்த யோசேப்பு பரராஜசிங்கம் தற்கொலை செய்யிறதுக்கு வேற இடம் இல்லாமல், கோயிலுக்குள் போய், அதுவும் கிறிஸ்மஸ் தினத்தன்று தன்னைத்தானே சுட்டுக்கொன்றுவிட்டு, செத்தாப்பிறகு பக்கத்தில 
 இருந்த மனிசியையும் கொல்லப் பார்த்திருக்கிறது. இந்தத் தேசிக்காய்களே இப்படித்தான். பிழை ஓரிடம், பழி இன்னோரிடம் என்கிறமாதிரி, விரல் சூப்பும் அப்பாவிப் பிள்ளையானை இந்தக் கொலையில் சம்பந்தப் படுத்தப் பாத்தாங்கள், அப்பாடா, நல்ல காலம், இலங்கையின் சுயாதீன நீதித்துறை அந்த அப்பாவியைக் காப்பாற்றிவிட்டது !!!

இந்த வழக்கில நீதி   கிடைக்க என்ன செய்யலாம் 🤔நீங்க வேணுமெண்டால் மட்டுக்கு போய் 😀ஜோசப் கொலை செய்யப்பட அன்று சேர்ச்சில் இருந்தவர்களை  தேடி பிடித்து ஏன் சாட்சி சொல்லவில்லை என்று மிரட்டலாம்🙂....நீங்கள் இதுக்கெல்லாம்  மினக்கெட்டு போமாட்டிங்கள் இல்ல  😊    பிரச்சனை இல்லை 😂போனை போட்டு ஜோசப்பின் மனைவி உட்பட எல்லோரிட்டையும்  விசாரியுங்கோ 😃 பிள்ளைக்கு எதிராய் ஏன் சாட்சி சொல்ல போகவில்லை என்று சண்டை பிடியுங்கோ  😠
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/1/2021 at 16:06, நிழலி said:

இலங்கை நீதித்துறையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

வீட்டை அபகரித்தால் நீதியான தீர்ப்பு

தேவாலயம் ஒன்றில் ஒருவரை படுகொலை செய்தால் விடுதலை.

அற்புதம்.

உங்களை யார் இலங்கையின் நீதித் துறையில் நம்பிக்கை வைக்கச் சொன்னது.. ?

நம்பிக்கை வைத்தது உங்கள் தவறல்லவா..🤥

4 hours ago, ரதி said:

இந்த வழக்கில நீதி   கிடைக்க என்ன செய்யலாம் 🤔நீங்க வேணுமெண்டால் மட்டுக்கு போய் 😀ஜோசப் கொலை செய்யப்பட அன்று சேர்ச்சில் இருந்தவர்களை  தேடி பிடித்து ஏன் சாட்சி சொல்லவில்லை என்று மிரட்டலாம்🙂....நீங்கள் இதுக்கெல்லாம்  மினக்கெட்டு போமாட்டிங்கள் இல்ல  😊    பிரச்சனை இல்லை 😂போனை போட்டு ஜோசப்பின் மனைவி உட்பட எல்லோரிட்டையும்  விசாரியுங்கோ 😃 பிள்ளைக்கு எதிராய் ஏன் சாட்சி சொல்ல போகவில்லை என்று சண்டை பிடியுங்கோ  😠
 
பயமுறுத்தப்பட்டதால் சாட்சிகள் முன்வரவில்லை என்கிறீர்கள்..👍

நன்றி...👏👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎25‎-‎01‎-‎2021 at 22:37, Kapithan said:

பயமுறுத்தப்பட்டதால் சாட்சிகள் முன்வரவில்லை என்கிறீர்கள்..👍

நன்றி...👏👏

பிள்ளை ஒரு மோடையன்☺️ தானே துவக்கை கொண்டு போய்  மாஸ் நடந்து கொண்டு இருக்கும் போது ஜோசப்பை  டப்பு டப்பென்று  சுட்டார் ...அதை பார்த்த பயத்தில் சனம் சாட்சி சொல்ல போவேல்ல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரதி said:

பிள்ளை ஒரு மோடையன்☺️ தானே துவக்கை கொண்டு போய்  மாஸ் நடந்து கொண்டு இருக்கும் போது ஜோசப்பை  டப்பு டப்பென்று  சுட்டார் ...அதை பார்த்த பயத்தில் சனம் சாட்சி சொல்ல போவேல்ல 

நீங்கள் கூறவருவது...

துப்பாக்கி எடுத்துச் சுடாத காரணத்தால், இலங்கை இராணுவத் தளபதிகள், சனாதிபதி, மற்றும் இன்னோரன்ன .... ஆட்கள் ஒருவரும் இனவழிப்பிற்குக் காரணமல்ல...

டாங்ஸ்.. 😝

("பிள்ளைப் பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும் எண்டு யார் கண்டது" என்று நீங்கள் புலம்புவது கேட்கிறது...🤣🤣🤣)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

நீங்கள் கூறவருவது...

துப்பாக்கி எடுத்துச் சுடாத காரணத்தால், இலங்கை இராணுவத் தளபதிகள், சனாதிபதி, மற்றும் இன்னோரன்ன .... ஆட்கள் ஒருவரும் இனவழிப்பிற்குக் காரணமல்ல...

டாங்ஸ்.. 😝

("பிள்ளைப் பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும் எண்டு யார் கண்டது" என்று நீங்கள் புலம்புவது கேட்கிறது...🤣🤣🤣)

நான் சொல்ல வருவது சுட்டது பிள்ளையின் உத்தரவின் பேரில் என்று எந்த அடிப்படையில் சொல்ல வருகிறீர்கள் என்பதை தான் 🙂
வெளிப்படையாய் போர்க்குற்றம் என்று பார்த்தால் கோத்தா சகோதரர்கள் குற்றவாளி தான் ...ஆனால் தனிப்பட்ட ரீதியில் அவர்கள் இன்னாரை கொலை செய்ததை அல்லது யாரிடமும் கொலை செய்ய சொல்லி சொன்னதை கண்ட சாட்சி இல்லாதாவிடத்து அவர்களும் நிரபராதிகள் தான்😉 
தவிர, தனி நபர் கொலையையும் இனப்படு கொலையையும் ஒப்பிடுவது சுத்த முட்டாள்தனம்...போய் வேலையை பாருங்கோ 😪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

அக்காச்சிய விட்டா Oxford Legal  Dictionary (அப்பிடி ஒண்டிருக்கா எண்டு கேட்கப்படாது) புதுப் புது வியாக்கீனங்கள  சொல்லத் தொடங்கிவிடுவா... 😀

தனி நபர் கொலைக்கும் இனப்படுகொலைக்கும் தாற விளக்கம் வேற லெவல்.. 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அக்காச்சிய விட்டா Oxford Legal  Dictionary (அப்பிடி ஒண்டிருக்கா எண்டு கேட்கப்படாது) புதுப் புது வியாக்கீனங்கள  சொல்லத் தொடங்கிவிடுவா... 😀

தனி நபர் கொலைக்கும் இனப்படுகொலைக்கும் தாற விளக்கம் வேற லெவல்.. 😀

தங்கச்சி சார்பாக.....😁😁😁

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எய்தவன் இருக்க அம்பை நோவான் ஏன் என்று அடிக்கடி கூறுகிறோம். ஆனால் அதன் அர்த்தம் பலருக்கும் புரிவதில்லையென்பது இங்கே சிலரின் கருத்துக்களைப் பார்க்கும்போது தெரிகிறது. இனக்கொலையாளி கோத்தாவாக இருக்கட்டும், அவனது கொலைக்குழுவின் தலைவனான பிள்ளையானாக இருக்கட்டும், இவர்கள் நேரடியாகச் சென்று மக்களைக் கொன்றார்களா அல்லது கூட்டாகப் பாலியல்வன்புணர்வில் ஈடுபட்டார்களா என்று கேட்பது சுத்த அப்பாவித்தனமாகத் தோன்றினாலும், அவர்களைக் இந்தக் குற்றச்சாட்டுக்களில் இருந்து காப்பாற்றிவிட விடவேண்டும் என்கிற அவாவே இங்கு எழுதும் சிலருக்கு இருப்பதாக நான் நினைக்கிறேன்.

இவ்வாறான போர்க்குற்றங்களில் கொமாண்ட் ரெஸ்போன்ஸிபிலிட்டி (Command Responsibility) என்று இருப்பது இங்கு சிலருக்குத் தெரியவில்லை. அதாவது, ராணுவத்தின் அடிமட்டத்தில் உள்ளவன் போர்க்குற்றங்களிலோ அல்லது மனிதகுலத்திற்கெதிரான குற்றங்களிலோ ஈடுபடும்பொழுது, அவன் மட்டுமே குற்றவாளியாக பார்க்கப்படுவதில்லையென்பதுடன், அவனுக்கு மேலுள்ள அதிகாரம் படைத்த பல மட்டங்களும் அவனுக்கு நிகரான அல்லது அவனிலும் அதிகமான அளவு பொறுப்பினைச் சுமக்கிறார்கள் என்பது இவர்கள் அறிந்திராத ஒன்று.

உதாரணத்திற்கு சட்ட ரீதியான அரசியல் அல்லது ராணுவ அமைப்பொன்றின் கீழ் பணிபுரியும் ஒரு ராணுவ வீரனது போர்க்குற்றங்கள் பற்றிப் பேசப்படும்பொழுது, அவனுக்கு அக்குற்றத்தைச் செய்ய தூண்டிய, உதவிய அதிகார வர்க்கங்களான,

1. அரசியல் வாதிகள் - போர்க்குற்றத்தினை தமது கொள்கையாக வகுத்துக்கொண்ட நாட்டின் தலைவர்கள்
2. போர்க்குற்றத்தினைத் திட்டமிட்ட பாதுகாப்பு அமைச்சு மற்றும் ராணுவ உயர் மட்டம்
3. களத்தில் இக்குற்றத்தினை மேற்பார்வை செய்த இடைநிலை ராணுவத் தளபதிகள்
4. அப்போர்க்குற்றத்தினைப் புரிந்த ராணுவ வீரனின் நேரடியான கட்டளையிடும் அதிகாரி

ஆகிய அனைவருமே இப்போர்க்குற்றத்திற்குக் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டிருக்கிறார்கள் என்பதே சட்டம்.

ஆகவே பிள்ளையான் வந்து நின்று சுட்டாரா, கொத்தா பாலியல் வன்புணர்வு செய்தாரா என்று கேட்பது இக்குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்குப் போதுமானது அல்லவென்பதை இவர்களின் ஆதரவாளர்கள் தெரிந்து வைத்திருப்பது நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

அக்காச்சிய விட்டா Oxford Legal  Dictionary (அப்பிடி ஒண்டிருக்கா எண்டு கேட்கப்படாது) புதுப் புது வியாக்கீனங்கள  சொல்லத் தொடங்கிவிடுவா... 😀

தனி நபர் கொலைக்கும் இனப்படுகொலைக்கும் தாற விளக்கம் வேற லெவல்.. 😀

கோத்தாவை இந்த திரிக்குள் மூளை இல்லாமல் கொண்டு வந்தது யார்😍

14 minutes ago, ரஞ்சித் said:

எய்தவன் இருக்க அம்பை நோவான் ஏன் என்று அடிக்கடி கூறுகிறோம். ஆனால் அதன் அர்த்தம் பலருக்கும் புரிவதில்லையென்பது இங்கே சிலரின் கருத்துக்களைப் பார்க்கும்போது தெரிகிறது. இனக்கொலையாளி கோத்தாவாக இருக்கட்டும், அவனது கொலைக்குழுவின் தலைவனான பிள்ளையானாக இருக்கட்டும், இவர்கள் நேரடியாகச் சென்று மக்களைக் கொன்றார்களா அல்லது கூட்டாகப் பாலியல்வன்புணர்வில் ஈடுபட்டார்களா என்று கேட்பது சுத்த அப்பாவித்தனமாகத் தோன்றினாலும், அவர்களைக் இந்தக் குற்றச்சாட்டுக்களில் இருந்து காப்பாற்றிவிட விடவேண்டும் என்கிற அவாவே இங்கு எழுதும் சிலருக்கு இருப்பதாக நான் நினைக்கிறேன்.

இவ்வாறான போர்க்குற்றங்களில் கொமாண்ட் ரெஸ்போன்ஸிபிலிட்டி (Command Responsibility) என்று இருப்பது இங்கு சிலருக்குத் தெரியவில்லை. அதாவது, ராணுவத்தின் அடிமட்டத்தில் உள்ளவன் போர்க்குற்றங்களிலோ அல்லது மனிதகுலத்திற்கெதிரான குற்றங்களிலோ ஈடுபடும்பொழுது, அவன் மட்டுமே குற்றவாளியாக பார்க்கப்படுவதில்லையென்பதுடன், அவனுக்கு மேலுள்ள அதிகாரம் படைத்த பல மட்டங்களும் அவனுக்கு நிகரான அல்லது அவனிலும் அதிகமான அளவு பொறுப்பினைச் சுமக்கிறார்கள் என்பது இவர்கள் அறிந்திராத ஒன்று.

உதாரணத்திற்கு சட்ட ரீதியான அரசியல் அல்லது ராணுவ அமைப்பொன்றின் கீழ் பணிபுரியும் ஒரு ராணுவ வீரனது போர்க்குற்றங்கள் பற்றிப் பேசப்படும்பொழுது, அவனுக்கு அக்குற்றத்தைச் செய்ய தூண்டிய, உதவிய அதிகார வர்க்கங்களான,

1. அரசியல் வாதிகள் - போர்க்குற்றத்தினை தமது கொள்கையாக வகுத்துக்கொண்ட நாட்டின் தலைவர்கள்
2. போர்க்குற்றத்தினைத் திட்டமிட்ட பாதுகாப்பு அமைச்சு மற்றும் ராணுவ உயர் மட்டம்
3. களத்தில் இக்குற்றத்தினை மேற்பார்வை செய்த இடைநிலை ராணுவத் தளபதிகள்
4. அப்போர்க்குற்றத்தினைப் புரிந்த ராணுவ வீரனின் நேரடியான கட்டளையிடும் அதிகாரி

ஆகிய அனைவருமே இப்போர்க்குற்றத்திற்குக் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டிருக்கிறார்கள் என்பதே சட்டம்.

ஆகவே பிள்ளையான் வந்து நின்று சுட்டாரா, கொத்தா பாலியல் வன்புணர்வு செய்தாரா என்று கேட்பது இக்குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்குப் போதுமானது அல்லவென்பதை இவர்களின் ஆதரவாளர்கள் தெரிந்து வைத்திருப்பது நல்லது.

இப்பவும் பல போராளிகள் சிறையில் உள்ளனர்....தலைவர் சொன்னதால்  தான் அவர்கள் இன்னன்ன குற்றங்களை செய்தார்கள் ....தலைவர் இல்லாத விடத்து அவர்களை விடுவிக்க சொல்லி நீங்கள் ஏன் கேஸ் போடக் கூடாது 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ரதி said:

கோத்தாவை இந்த திரிக்குள் மூளை இல்லாமல் கொண்டு வந்தது யார்😍

இப்பவும் பல போராளிகள் சிறையில் உள்ளனர்....தலைவர் சொன்னதால்  தான் அவர்கள் இன்னன்ன குற்றங்களை செய்தார்கள் ....தலைவர் இல்லாத விடத்து அவர்களை விடுவிக்க சொல்லி நீங்கள் ஏன் கேஸ் போடக் கூடாது 
 
அக்காச்சி சொல்லுற விளக்கம் இப்ப புரியாது. வீட்ட போய் ஆற அமர இருந்து யோசித்துப் பார்த்தால் அப்போது விளங்கும். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் சிறையில் புலிகளை அடைத்து வைத்திருப்பதன் காரணம் அவர்கள் போர்க்குற்றம் புரிந்தார்கள் என்பதற்காக அல்ல. அவர்கள் தமிழர்கள் என்கிற ஒற்றைக்காரணமே அவர்கள் சிறையில் அடைத்து வைக்கப் போதுமானது.

அடுத்தது, உலக மனிதநேயச் சட்டங்களுக்கு மதிப்பளித்துச் செயற்படும் நாடுகளில் இலங்கை அடங்கவில்லை. ஒன்றரை லட்சம் மக்களைக் கொன்ற ஒரு இனக்கொலையினை இன்றுவரை மனிதாபிமான மீட்பு நடவடிக்கை என்றுதான் அது அழைக்கிறது. அத்துடன் பூச்சிய மக்கள் இறப்பு என்றும், போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லையென்றும் இன்றுவரை சத்தியம் செய்துவருகிறது. இவ்வாறான ஒரு அரசிடம் போய், புலிகளின் தலைமையின் கட்டளையின் கீழேயே போராளிகள் போரில் ஈடுபட்டனர். புலிகளின் தலைமை இன்று இல்லாதவிடத்து, அவர்களை விடுவியுங்கள் என்று கேட்பது சாத்தியமற்றது. 

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சங்கத்தின் போர்க்குற்றங்களுக்கான விசாரணைகளுக்கு அணுசரணை வழங்குவதிலிருந்து திமிராக விலகும் ஒரு அதிகாரவர்க்கத்திடம், சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் தமிழர்களை/போராளிகளை நடத்துங்கள் என்று கேட்பது சாத்தியமற்றது என்பது பலருக்கும் புரிவதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுதெல்லாம்

பிள்ளையான் முரளிதரன் பற்றிய திரிகளை  வாசிக்கும்போது....

நேர்மை ஒழுக்கம் 

நல்லவர் கெட்டவர் என்று  எதுவும்  தேவையில்லை

பிடுங்குவதில் கொஞ்சத்தை வீசி எறிந்தால் சரி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.