Jump to content

ஜெனீவாவுக்கு தயாராகும் இலங்கையின் உபாயம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மக்களை பாதுகாப்பதற்காகவே விடுதலைப்புலிகளிற்கு எதிராக போரிட்டோம் – மனித உரிமை பேரவைக்கு அரசாங்கம் இம்முறையும் சொல்லப்போகின்ற செய்தி இதுதான்

Digital News Team 2021-01-23T22:08:00

நாமினி விஜயதாச

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் இலங்கை இறைமை மற்றும் உள்விவகாரங்களில் தலையிடுதல் போன்ற வழமையான செய்திகளை முன்வைக்கவுள்ளதுடன் சில வழங்ககூடிய விடயங்களை வழங்கவுள்ளது.
இலங்கையிலிருந்து ஜெனீவாவிற்கு செல்லவுள்ள பிரதிநிதிகள் அல்லது இணையவழியில் கலந்துகொள்ளவுள்ள பிரதிநிதிகள் யார் என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.
இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு பிரதானஅனுசரணை வழங்கிய நாடுகள் மீண்டும் ஒரு புதிய யோசனையை முன்வைக்கவுள்ளன.
எனினும் அரசாங்கம் தாங்கள் மக்களை பாதுகாப்பதற்காகவும் மக்களின் ஆணையின்படியும் விடுதலைப்புலிகளிற்கு எதிராக போரிட்டதை கருத்தில் கொள்ளவேண்டும் என கடந்த காலத்தை போல மனித உரிமை பேரவையிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளது.

geneva-hall-0-1024x576-1-300x169.jpg
2008இல் எவ்பிஐ விடுதலைப்புலிகள் அமைப்பை ஈவிரக்கமற்ற பயங்கரவாத அமைப்பென பட்டியலிட்டது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனத் கொலம்பகே தெரிவித்தார்.
அவர்களே தற்கொலை குண்டு தாக்குதலை உருவாக்கினார்கள் தற்கொலை அங்கி தற்கொலை தாக்குதலில் ஈடுபடும் பெண் உறுப்பினர்கள் போன்றவற்றை உருவாக்கினார்கள் இரு உலக தலைவர்களை கொலை செய்தார்கள்- 30 வருட யுத்தத்தில் மாதாந்தம் விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் உட்பட 250 பேர் உயிரிழந்தனர் என அவர் தெரிவித்தார்.
இந்த புள்ளிவிபரங்கள் எவ்வாறு பெறப்பட்டன என்பது உடனடியாக தெரியவில்லை.
2009 மே மாதம் முதல் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.
இதன் அர்த்தம் என்னவென்றால் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மூலம் உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன,என தெரிவித்த அவர் என்னை பொறுத்தவரை வாழ்வதற்கான உரிமை என்பது மனித உரிமையை விட மிகவும் முக்கியமானது ஏனென்றால் நீங்கள் முதலில் உயிர்வாழ்ந்தால் தான் மனித உரிமையை அனுபவிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் சர்வதேச சமூகம் போதியளவு பொறுப்புக்கூறலின்மை நல்லிணக்கமின்மை இழப்பீடுகள் வழங்கப்படாமை மற்றும் இந்த விவகாரங்களிற்கு தீர்வை காண்பதற்கான உள்ளுர் பொறிமுறை அமைக்கப்படாமை போன்றவை குறித்து இலங்கை அரசாங்கத்தின் மீது குற்றம்சாட்டுகின்றது எனவும் வெளிவிவகார செயலாளர் தெரிவித்தார்.

jayanath-colombage-227x300.jpg
சமீபகாலங்களில் அவர்கள் எதிர்மறையாக செல்லும் இன்னுமொரு போக்கை அவதானிப்பதாக தெரிவிக்கின்றனர் இது மோசமான போக்கு என்கின்றனர் அது என்னவென்பது எங்களிற்கு தெரியாது அவர்களே சொல்லவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் வெளியிடப்படவுள்ள அறிக்கையில் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் ஆரம்ப எச்சரிக்கை சமிக்ஞைகளை எதிர்மறையான போக்குகளை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதியில் விடுதலைப்புலிகள் மூன்றுஇலட்சம் மக்களை மனித கேடயங்களாக பிடித்து வைத்திருந்தனர் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன என மீண்டும் தெரிவித்த வெளிவிவகார அமைச்சின் செயலாளர் விடுதலைப்புலிகளின் எஞ்சியிருந்த போராளிகள் இந்த மக்கள் மத்தியில் காணப்பட்டனர்,ஆயுதங்களை வைத்திருந்தனர் என குறிப்பிட்ட வெளிவிவகார அமைச்சின் செயலாளர் இந்த மோசமான குற்றத்தை சர்வதேச சமூகம் ஒருபோதும் சுட்டிக்காட்டவில்லை என தெரிவித்தார்.
இந்த மக்களை எங்கள் பக்கத்திற்கு எடுத்து மருத்துவசிகிச்சை வழங்க உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களிற்கான முகாம்களிற்கு அனுப்பினோம் சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் இந்த முகாம்களிற்கு செல்லக்கூடியதாகயிருந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.
சர்வதேசசமூகம் எங்கள் மீது முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் உண்மையென்றால் நாங்கள் அவர்களை கொலைசெய்திருப்போம் என அவர் தெரிவித்தார்.ஆனால் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை அவர்கள் எங்கள் மக்கள் எனவும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

 

https://thinakkural.lk/article/107041

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.