Jump to content

பசுஞ்சாண விறகு தயாரித்து லாபம் ஈட்டலாம்- அருமையான தொழில்வாய்ப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பசுஞ்சாண விறகு தயாரித்து லாபம் ஈட்டலாம்- அருமையான தொழில்வாய்ப்பு

pinterest.jpg

 

லாபகரமான சுயத்தொழிலைத் தொடங்கி வெற்றிரகமாக நடத்துவது என்பது அனைவருடைய விருப்பமாக இருக்கும். அதேநேரத்தில் குறைந்த முதலீட்டில், நல்ல லாபம் ஈட்டும் தொழிலைத் தேர்வு செய்வது என்பது மிகவும் சவாலான ஒரு விஷயம்.

இத்தகைய சிந்தனையில் இருப்பவர்களா நீங்கள்? அப்படியானால் இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் மட்டும் போதும். கிராமப்புற மக்களுக்கு, மிகச் சுலபமானதாகக் கருதப்படும் இந்த தொழில் தொடங்க, குறைந்த முதலீடு போதும். முதல் மாதத்திலேயே 10 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்ட முடியும், ஆறு மாதங்கள் கடந்துவிட்டால், மாதத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.

அது என்ன தொழில்? அதுதான், பசுஞ்சாண விறகு தயாரிப்புத் தொழில்.
நாட்டில் தற்போது பசுஞ்சாண விறகுக்கு மிகப் பெரிய தேவை உள்ளது. இந்த தேவை எதிர்காலத்தில் நாளுக்கு நாளுக்கு அதிகரிக்கும். அதற்காக நீங்கள் இப்போதே தயாரானால், அதிக லாபம் ஈட்டமுடியும்.

mitticool.jpg

Credit: Mitticool

மருத்துவப் பயன்கள் (Medical benefits)

பசுஞ்சாணம், எருமைச்சாணம் ஆகியவை இயற்கை உரமாகப் பயன்படுவதுடன், இயற்கை எரிவாயு தயாரிக்கவும் உதவுகிறது. அதிலும் பசுஞ்சாணம் பல்வேறு நன்மைகளைத் தருவதுடன், சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும் திகழ்கிறது. அதனால் இதனை பூஜைகள் மற்றும் யாகங்கள் நடத்தும்போது பயன்படுத்துகிறார்கள்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை நல்குவதுடன், இவற்றைக்கொண்டு சிலைகள், முகப்பூச்சு மற்றும் மருந்துகளைத் தயாரித்தும் விற்பனை செய்கின்றனர்.

தயாரிப்பது எப்படி? (How to made)

இந்த சாணத்தைத் தயாரிக்க வேண்டுமானால், அதற்கென பிரத்யேக இயந்திரத்தை வாங்க வேண்டும். பின்னர் அதில், பசு மாட்டுச்சாணம், உலர்ந்த வைக்கோல், புல் ஆகியவற்றைப் போட்டு பசுஞ்சாண விறகு தயாரிக்கலாம். இயற்கை விறகு மையத்தில், பசுஞ்சாண விறகிற்கு, குவிண்டாலுக்கு 600 ரூபாய் வரை விலை கிடைக்கும்.

இயந்திரத்தின் விலை (Cost of  Machine)

பசுஞ்சாணம் தயாரிக்கும் இயந்திரம் 700 ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை உள்ளது. உங்கள் முதலீட்டிற்கு ஏற்றபடி, சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ உள்ள இயந்திரத்தை வாங்கிக்கொள்ளலாம்.

இதன் உதவியுடன் 20 வினாடிகளில் ஒரு கிலோ பசுஞ்சாணத்தைத் தயாரிக்க முடியும். இந்த புதிய தொழில்நுட்பத்தின்மூலம், நிலம் மற்றும் காற்று மாசுபாடு கட்டுப்படுத்தப்படும்.

இயந்திரத்தை எப்படி வாங்குவது?

பசுஞ்சாணம் விறகு தயாரிக்கும் இயந்திரங்களை கீழ்க்காணும் இந்த இரண்டு இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் பதிவு செய்து வாங்கிக்கொள்ளலாம்.

https://m.indiamart.com/impcat/cow-dung-log-making-machine.html
https://m.indiamart.com/proddetail/cow-dung-log-making-machine-21388364391.html

times-of-india.jpg

Credit: Times of India

இருப்பினும், பசுஞ்சாண விறகு தயாரிக்க பல்வேறு உரிமங்களைப் பெற வேண்டியது அவசியம்.

வர்த்தக உரிமம் (Trade License)

இந்த தொழில் தொடங்க முதலில் அரசாங்கத்தின் அனுமதியைப் பெற வேண்டும். அதன் மூலமே வர்த்தக உரிமத்தைப் பெற முடியும்.

MSME Registration

சிறு மற்றும் குறு தொழில் முனைவோர் அமைப்பில், உங்கள் நிறுவனத்தைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். அப்போது, இயந்திரம் வாங்க வங்கிக்கடன் எளிதில் கிடைக்கும். அதனால், MSME registration மிகவும் கட்டாயம்.

தடையில்லா சான்றிதழ்(NOC)

பசுஞ்சாணத் தயாரிப்பை இயந்திரம் மூலம் செய்ய வேண்டுமானால், அதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.

விற்பனை செய்தல் ( Sell Cow Dung Wood)

இந்த பசுஞ்சாணத்தை மத வழிபாட்டுத் தலங்கள் உள்ள இடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யலாம்.

மேலும் வீடுகளுக்கும் விற்பனை செய்யலாம். செங்கல் சூளைகளுக்கும் வியாபாரம் செய்யலாம். இதைத்தவிட ஆன்லைனிலும் விற்பனை செய்து நல்ல லாபம் ஈட்டலாம்.

 

https://tamil.krishijagran.com/animal-husbandry/you-can-get-profit-by-making-cow-dung-wood-fantastic-job/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்த இயந்திரத்தை பாவனைக்கு பாதுகாப்பற்றது என தடை செய்யவேண்டும். இதை தயாரித்து விற்பனை செய்யும் தொழிற்சாலைக்கு அரசு அனுமதி வழங்கப்பட்டதா என்பதையும் பரிசீலிக்கவேண்டும். அனைத்துக்கும் மேலாக இந்த இலவச விளம்பரத்தை யாழில் இருந்து அகற்றுவது நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாணத்தில் இருந்து வரட்டி செய்வதை கொஞ்சம் மாற்றி மெல்லிய தகடாகச் செய்ய முனைகிறார்கள். 

இதை எரிப்பதால் (biomass burning) வெளிவரும் புகையும் துணிக்கைகளும் மனிதர்களுக்கு சுவாச தொந்தரவுகளை ஏற்படுத்தக் கூடியவை என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.

இயற்கையில் இருக்கும் எல்லாமே நல்லது தான் என்கிற மூடத்தனமான நம்பிக்கையின் விளைவு தான் இது போன்ற வியாபாரங்கள் தளைக்கக் காரணம்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.