Jump to content

இருளைப் பற்றி பயம் எதற்கு? பெண்ணே நீயே வெளிச்சமாகு - ShineOnGirl


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இருளைப் பற்றி பயம் எதற்கு? பெண்ணே நீயே வெளிச்சமாகு

இருளைப் பற்றி பயம் எதற்கு? பெண்ணே  நீயே வெளிச்சமாகு ...  #ShineOnGirl

முன்னணி நகை தயாரிப்பு நிறுவனமான ஜோஸ் ஆலுக்காஸ் சார்பில் பெண்களின் பெருமையை போற்றும் 'shine on - girl' விளம்பரம்  தயாரிக்கப்பட்டுள்ளது. இது சமூகத்தில் போராடும் பெண்களுக்கு ஊக்கம் தருவதாக அமைகிறது.
 
பீனிக்ஸ் பறவையாக பெண்கள் : 
பல ஆண்டுகளாக இச்சமூகத்தில் பெண்கள் பலவிதமான பாகுபாடுகள் மற்றும் இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். அவர்களது குரல்களும் அடங்கி ஒடுங்கி இருக்கின்றன. பெண்களின் கருத்துக்கள் குறைவாகவே மதிப்பிடப்பட்டு வருகின்றன. தனக்கான அடிப்படை சுதந்திரத்தையும் அனுபவிக்க பெண்கள் பல கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. கலாசார எதிர்பார்ப்பு எனும் பெயரிலும், பாலின பாகுபாடுகளாலும் தனக்கு பிடித்தமான வாழ்க்கையை வாழ முடியாமல், இந்த சமூகத்தில் பின்தங்கி இருப்பதே பெண்களின் வாடிக்கையாக இருக்கிறது. இத்தகைய பாகுபாடுகளால் தன்னம்பிக்கையுடன் செய்யக்கூடிய செயல்களையும் செய்யமுடியுமா? என்ற கேள்வியுடனேயே பெண்கள் இருக்கிறார்கள்.
 
என்னதான் அடிபட்டாலும் சாம்பலில் இருந்து மீண்டும் உயிர் பெற்று எழும் பீனிக்ஸ் பறவையாக பெண்கள் தங்களை உருவேற்றி கொள்கிறார்கள் என்பதே நிதர்சன உண்மை. தூய்மை பணியில் இருந்து பொழுதுபோக்கு மற்றும் பேஷன் தொழில்துறை வரை முழுமையான நம்பிக்கையுடன், தன்னம்பிக்கை இழக்காமல், மனச்சோர்வு சிறிதும் இல்லாமல் ஆர்வமும் குன்றாமல் பெண்கள் சாதித்து வருகிறார்கள். இதன் மூலம் சமூக விதிமுறைகளையும், சடங்கு எனும் பெயரிலான மூடநம்பிக்கைகளையும் அச்சமின்றி எதிர்த்து போராடி பெண்கள் வெற்றி கண்டு வருகிறார்கள்.
 
ஜோஸ் ஆலுக்காஸ்-ன் புதிய படம்:
202101231856474492_jos-Jewell-10._L_styvஅத்தகைய மகளிர் சக்தியை உலகுக்கு எதிரொலிக்க செய்யும் வகையிலும், அவர்களின் தன்னம்பிக்கையின் பலத்தை உலகறிய செய்யும் வகையிலும் முன்னணி நகை தயாரிப்பு நிறுவனமான ஜோஸ் ஆலுக்காஸ் 'shine on - girl' எனும் ஒரு படத்தை தயாரித்து இருக்கிறது. படத்தின் தொடக்கமே, ஒரு கண்டிப்பான தாய் டியூசனுக்கு  செல்லும் தனது மகளிடம், 'எத்தனை தடவை சொல்வது... நாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க...' என்று கூறி உடைக்கு மேல் துப்பட்டா அணிந்து செல்லுமாறு நிர்பந்திக்கிறார்.
 
202101231856474492_jos-Jewell-11._L_styv'6 மணிக்கு மேல் ஒரு பெண்ணுக்கு வெளியே என்ன வேலை?', என வேலைக்கு சென்று வரும் இளம் பெண்ணை சிலர் விமர்சிக்கிறார்கள். அடுத்த காட்சியில் ஓட்டு கேட்டு வரும் அரசியல்வாதியிடம், தனது குடியிருப்பு பகுதியில் நிலவும் பிரச்சினை குறித்து ஒரு குடும்ப பெண்மணி பேச முயல்கிறார். ஆனால், 'உனக்கு இது தேவையில்லாத விஷயம். நீ பேசி இந்த உலகம் கேட்க போகிறதா?' என்று அவரது கணவர் முட்டுக்கட்டை போடுகிறார். விளையாட்டு பயிற்சியில் ஈடுபட வரும் பெண் ஆசிரியையிடம், 'உங்களுக்கு சரியான இடம் வகுப்பறை தான், மைதானம் அல்ல', என்று கூறி பயிற்சியாளர் ஏளனமாக சிரிக்கிறார். இறுதியாக படத்தில் மாடல் வாய்ப்பு கேட்டு நடிகை திரிஷா ஒரு தயாரிப்பாளரிடம் செல்கிறார். 'நீ மாடலா? நேரத்தை வீணடிக்காதே', என்று அந்த தயாரிப்பாளர் கூறிவிடுகிறார்.
மேற்கண்ட காட்சிகள் மூலம் மூலம் பெண்கள் தினம் சந்திக்கும் ஒரு சமூகப் பிரச்சினையை இப்படம் மிக அழகாக முன்னெடுத்துச் செல்கிறது.
 
தங்கத்தை போல மின்னும் பெண்கள் : 
202101231856474492_jos-Jewell-12._L_styvஅடுத்தடுத்த காட்சிகளில் நடிகை திரிஷா தனது தன்னம்பிக்கையால் மாடல் உலகில் மின்னுவதை படம் தெளிவாக உணர்த்துகிறது. அதேபோல சமூகத்துக்கு பயப்படாமல் தன்னம்பிக்கையுடன் டியூசன் செல்லும் மாணவி, வேலை முடிந்து துணிச்சலுடன் இரவில் வீடு திரும்பும் இளம்பெண், தைரியமாக அரசியல்வாதியிடம் பிரச்சினைகளை எடுத்துச் சொல்லி அவரை ஓடவிடும் குடும்ப பெண்மணி, விளையாட்டில் எதிரணியினரின் வெற்றியை தட்டிப் பறிக்கும் ஆசிரியை என பெண்களின் துணிச்சலையும், தன்னம்பிக்கையுடன் அவர்கள் பெரும் வெற்றியையும் படம் எடுத்துச் சொல்கிறது.
 
202101231856474492_jos-Jewell-13._L_styvஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் பெண்ணியத்தின் பெருமை கூறும் இந்த படம், ஒவ்வொரு துறைகளிலும் தடைகளை உடைத்து பெண்கள் எவ்வாறு முன்னேறிச் செல்கிறார்கள்? என்பதை ரசிக்கும்படியாக சொல்கிறது. இன்றைய காலத்தில் வேண்டிய உடை, நகைகள் போன்றவற்றை பெண்கள் விருப்பத்துடன் தேர்வு செய்ய முடிகிறது. திருமணம் தொடங்கி குழந்தை பெறுவது வரை பெண்களின் தீர்மானத்திற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கிறது. பெண்கள் அச்சமின்றி வாழ்கிறார்கள். விரும்பும் வாழ்க்கையை உருவாக்கி அதில் பெருமை அடைகிறார்கள். வாழ்க்கை எனும் போரில் அசாத்திய வீரர்களாக வலம் வரும் பெண்களை பார்த்து ஜோஸ் ஆலுக்காஸ் பெருமிதம் கொள்கிறது. தங்களது நகைகளைப் போலவே பிரகாசமாக மின்னும் பெண்களை, ஜோஸ் ஆலுக்காஸ் போற்றி வணங்குகிறது.
 
எட்டு திசையும் பாராட்டும்:
202101231856474492_jos-Jewell-14._L_styvநெருப்பில் விழுந்தாலும் தங்கத்தின் பிரகாசம் குறைவதில்லை. அதுபோல ஒவ்வொரு பெண்ணாலும் நிச்சயம் சமூகத்தில் பிரச்சினைகளை எதிர்கொண்டு பிரகாசிக்க முடியும். நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, இந்த சமூகம் முடிவு செய்யக்கூடாது என்ற அழுத்தமான நம்பிக்கை இந்தப்படம் பெண்கள் மனதில் விதைக்கிறது. நாலு சுவற்றுக்குள் முடங்கி விடாமல் எட்டு திசையும் பார்த்து பாராட்டும் வகையில் திகழ வேண்டுமென பெண்களுக்கு ஊக்கம் தருவதாக இந்த படம் அமைந்திருக்கிறது. 'இருளை பார்த்து பயப்பட வேண்டாம், நீயே இந்த உலகுக்கே வெளிச்சமாக மாறு', என்ற அழுத்தமான வார்த்தைகளுடன் இந்த படம் முடிவடைகிறது. இந்த படம் தன்னம்பிக்கையுடன் பிரச்சனைகளை எதிர்கொண்டு துவண்டு விடாமல் போராடி வரும் பெண்களுக்கு நிச்சயம் ஒரு சமர்ப்பணம் என்றால் அது மிகையல்ல.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கோஷான் த‌ன்னை தானே கோமாளி என்று ப‌ல‌ இட‌த்தில் நிரூபித்து காட்டி விட்டார் நீங்க‌ள் ச‌ரியா சொன்னீங்க‌ள் ஓணாண்டி இத‌ற்கு கோஷானிட‌ம் இருந்து ப‌தில் வ‌ராது.........................கோஷான் தேர்த‌ல் க‌ணிப்பு ச‌ரியா க‌ணிப்பார் என்று யாழிக் சிறு கூட்ட‌ம் இருக்கு...................பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌ல் ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌ல்க‌ள் வ‌ரும் போது இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் ஓட்டு போடும் உரிமை அவைக்கு கிடைச்சிடும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் சீமானுக்கு தான் ஓட்டு போடுவின‌ம் என்று க‌ட‌ந்த‌ ஜ‌ந்து வ‌ருட‌மாய் எதிர் க‌ட்சி ஆட்க‌ளே வெளிப்ப‌டையாய் சொல்லுகின‌ம்.................... அதோட‌ அவ‌ர்க‌ளின் பெற்றோர‌ கூட‌ நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ஓட்டு போட‌ வைக்கின‌ம்.....................இந்த‌ 20 நாளில் அண்ண‌ன் சீமானின் தொண்டை  கிழிஞ்சு போச்சு குர‌லை கேட்க்க‌ முடிய‌ வில்லை தொண்டை எல்லாம் அடைச்சு க‌டும் வெய்யிலுக்கு ம‌த்தியில் ப‌ர‌ப்புர‌ செய்து ச‌ரியா க‌ஸ்ர‌ப் ப‌ட்டு விடார்............................இன்றுட‌ன் சிறிது கால‌ம் ஓய்வெடுக்க‌ட்டும்🙏🥰......................................................................
    • தம்பிகள் தோற்க கொடுக்கும் அட்வான்ஸ் காரணங்கள் இவை. இவை பல தடவை இங்கே விவாதிக்கப்பட்டுள்ளன - டாக்டர் காந்தராஜ் பேட்டியை கூட இணைத்தேன் 57இல் திமுக வுக்கு உதயசூரியன் கிடைக்காமல் சுயேற்சைக்கு கிடைத்தது. முதலில் கேட்பவருக்கே சின்னம் எனும் போது நாதக முதலில் கேட்காமல் - குறட்டை விட்டு விட்டு தேர்தல் ஆணையம் மீது பழி போடுகிறார்கள். வாங்கு எந்திரத்தில் அப்படி ஒரு சின்னமும் மங்கலாக தெரியவில்லை என என் நண்பர்கள் பலர் இன்று சொன்னார்கள். இதுவும் தேர்தல் நாளுக்கு முதலே நாதக கட்டி விட்ட புரளி.  
    • இப்படி ஒரு நல்லவர் இலங்கை அரசியலில் இருந்ததை அவர் மறைவுக்கு பின் யாழ்களம் படிந்து அறிகிறேன் அஞ்சலிகள்.
    • நன்றி  "பத்தினி தெய்வோ கண்ணகியை வணங்கி  உத்வேகம் கொள்ளும் இலங்கைத் தீவில்  யுத்தமென்ற ஒரு போர்வையை சாட்டாக்கி  கொத்துக் கொத்தாய் பாலியல் வல்லுறவு எத்தனை ?" "பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டு  மண்டபம் அதிர சலங்கை உடைத்து  உண்மை நாட்டினாள் அன்று, இன்றோ   கண்ணீர் அபலையாக்கி வேடிக்கை பார்க்கிறார்கள் ?"  
    • எனது பார்வையில் - ஈரான் தாக்கும் என்பது கிட்டதட்ட ஈபி காரைநகர் அடித்தது போல் - நடக்க முதலே எல்லாரும் ஊகித்த விடயம். ஆகவே தாக்குதலுக்கு சரியாக ஒரு நாள் முதல் விலை கூடி local peak ஐ அடைந்தது. அதவாது தாக்குதல் நடக்கும் போது ஏலவே price factored-in நிலை. தாக்குதல் முடிந்ததும் profit taking ஆல் விலை கொஞ்சம் இறங்கியது. ஆனால் இஸ்ரேல் தாக்கலாம், சண்டை பெரிதாகலாம் என வாய்ப்பு இருந்த படியால் 84 இல் தரித்து நின்றது. அதற்கு உடனடி வாய்ப்பு இல்லை என்றதும் 82க்கு வந்து விட்டது. ஆனால், இஸ்ரேல் ஈரானிய அதிகாரிகளை தாக்கு முன் இருந்த நிலைக்கு வீழவில்லை. ஆகவே இன்னும் ஒரு சிறிய பதட்டநிலைக்காவது வாய்ப்புள்ளது என சந்தை கருதுவதாகப்படுகிறது எனக்கு. இது ஒரு டைமன்சன் பார்வை மட்டுமே. இன்னொரு வளமாக - அமெரிக்காவின் எண்ணைகுதங்கள் எல்லாம் நிரம்பு நிலைக்கு வந்துவிட்டதால் - கேள்வி குறைவதாகவும் தெரிகிறது. இதை விட வேறு ஒன்று அல்லது பல காரணிகள் எமக்கு தெரியாமல் விலையை தீர்மானிக்க கூடும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.