-
Tell a friend
-
Topics
-
10
By பெருமாள்
தொடங்கப்பட்டது
-
Posts
-
மிரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல்.... கலைஞனுக்கு கண்டதெல்லாம் கலை...
-
பேச்சு வழக்கு பாணிகளை மாற்றினாலும் சரளமாக வருவது கஸ்டம். அல்லது இது ஒரு நாடகமாகவும் இருக்கலாம். நான் இதை வேறு கோணத்தில் நாடகமாகத்தான் நினைத்திருந்தேன்.எனிலும் உண்மை பொய் தெரியாமல் நாங்களும் அதிகம் கதைக்க முடியாது.
-
By குமாரசாமி · பதியப்பட்டது
அன்புள்ள அம்மா அறிவது! நான் நல்ல சுகம். அது போல் நீங்களும் நீங்கள் விரும்பிய இறைவனின் பாதடியில் இளைப்பாறுவீர்கள் என நம்புகின்றேன். அம்மா நீங்கள் என்னை/எங்களை பிரிந்த மாசி மக நாள் வருகின்றது. அம்மா நீங்கள் நான் தினசரி வணங்கும் தெய்வம். அம்மா நான் உங்களுக்கு கடிதம் எழுதி நீண்ட காலமாகிவிட்டது. அதனால் நிறைய எழுத வேண்டும் போல் இருக்கின்றது. அம்மா நான் உங்கள் கடைசிப்பிள்ளை. அதனால் அதிக செல்லம் தந்து வளர்த்து விட்டீர்கள் .அந்த வாழ்க்கை இனி வராது. பொறுப்புகள் கூடி விட்டது.அக்கா அண்ணா பாசங்கள் விரிவடைந்து விட்டது.ஒரு முற்றத்தில் தவழ்ந்து விளையாடிய நாங்கள் வெவ்வேறு உலகில் இருக்கின்றோம். வெவ்வேறு கலாச்சாரத்துக்குள் கட்டுப்பட்டு விட்டோம். சகோதரங்களுடன் முன்னரைப்போல் கதைக்க முடியவில்லை அம்மா.அவர்களுக்கும் எனக்குமிடையில் பெரிய பாசங்கள் குறுக்கிட்டுவிட்டதுஅம்மா.பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என்கிறார்கள். எனது உரிமையை அவர்கள் எடுத்து விட்டார்கள் அம்மா. அன்றிருந்த ஒரு முற்றத்து பாசங்கள் இன்று இல்லையம்மா. உலகம் நாடு ஊர் எல்லாம் இருந்த இடத்தில் இருக்கும் போது பாசங்களும் பிணைப்புகளும் மட்டும் விரிந்து விரசல்கள் ஆகி விட்டதம்மா. அம்மா நீங்கள் அன்று அது உனக்கு இது உனக்கு என எனக்காக சேர்த்ததெல்லாம் இன்று எனக்காகவே இல்லையம்மா. என்னிடமும் இல்லையம்மா. என்னால் அதிகம் எழுத முடியவில்லையம்மா. பலர் வயது போய் விட்டது என்கிறார்கள் அம்மா. ஆனால் நான் உங்களுக்கு இன்றும் பாலகன் தானே அம்மா. இன்னும் புதினம் சொல்வேன் அம்மா......
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.