Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

large.0-02-0a-02b0e26e876e205773411ebb7492220a4fb8e8293df9c6255c61996763e60cb7_1c6d9f363acabe.jpg.87ab9e86808b1bec9dc85ae16d8b8ce0.jpg

 

இன்றும் அன்றும்..!

**************

இன்டர் நெட்டை 

திறந்தாலே

ஏதோ ஒரு விளம்பரம்

இடை குறைப்பா

எழில் அழகா..

தொந்தியா, வயிற்றில் 

தொல்லையா

தூக்கமா-அது 

இல்லையா

சுகரா,கொழுப்பா,

சூம்பலா,வீங்கலா

இதுபோன்று எத்தனை

எத்தனை..

 

அத்தனைக்கும் மருந்து

அவரவர் சொல்லி 

அதைசெய்,இதைசெய்

அப்படிச் செய் 

இப்படிச்செய்-என

ஆயிரம்  அறிவுரை

 

இந்தபழத்தை 

இதுக்கு சாப்பிடு

என்றொருவர்

இதைசாப்பிடதே

இந்த நோய்க்கு

என்றொருவர்..

 

படுக்கும் முறை

நடக்கும் முறை

பச்சிளம் குழந்தைக்கு

பாலூட்டும் முறை

சொல்லிச் சொல்லியே

சுகநலம் உள்ளவரும்

சோம்பேறியாக சுத்தும்

நிலையாச்சு..

 

அந்தகாலத்து

ஆச்சி அப்புவை

இன்றுமொருக்கா

எனக்கு..

எண்ணத்தோன்றுது

 

பத்து பிள்ளையை

பெத்து போட்டும்

பம்பரம் போல

சுத்தி திரிந்ததும்

 

அம்மி உரல்ல

ஆட்டுக்கல்லில

அரைத்து இடித்து

உண்ட உடம்பும்

அப்பு வயலில

அதிகாலை அங்கு

உழுது,விதைத்து

உழைத்த உடம்பும்

 

காற்றுக்கடலில 

வலையை போட்டும்

கரைவலை இழுத்த

எங்கள் உடம்பும்

 

பந்தையம் கட்டி

பனைமரம் ஏறி

கள்ளு இறக்கிய

கட்டுடல் உடம்பும்

 

சலவைத்துணியை

சாத்துசாதென்று

கல்லில் மோதிய-எம்

கல்லான உடம்பும்

 

இப்படி இப்படி-எம்

செய்யும் தொழிலிலே 

தேக ஆரோக்கியம்

கண்ட எம் உடம்பு.

 

நோயற்ற நிலையும்

நூறாண்டு வாழ்வும்

எம்முன்னோர் காலத்து

இனிமை வாழ்வும்

இன்றும் தெரியுது.

 

இது..

விஞ்ஞானம் வளர்ந்து

 வேலை இல்லாததால்

பொய்ஞானம் சொல்லி

புலம்புது உலகம்.

அன்புடன் -பசுவூர்க்கோபி-

  • Like 4
  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, பசுவூர்க்கோபி said:

large.0-02-0a-02b0e26e876e205773411ebb7492220a4fb8e8293df9c6255c61996763e60cb7_1c6d9f363acabe.jpg.87ab9e86808b1bec9dc85ae16d8b8ce0.jpg

 

இன்றும் அன்றும்..!

**************

இன்டர் நெட்டை 

திறந்தாலே

ஏதோ ஒரு விளம்பரம்

இடை குறைப்பா

எழில் அழகா..

தொந்தியா, வயிற்றில் 

தொல்லையா

தூக்கமா-அது 

இல்லையா

சுகரா,கொழுப்பா,

சூம்பலா,வீங்கலா

இதுபோன்று எத்தனை

எத்தனை..

 

அத்தனைக்கும் மருந்து

அவரவர் சொல்லி 

அதைசெய்,இதைசெய்

அப்படிச் செய் 

இப்படிச்செய்-என

ஆயிரம்  அறிவுரை

 

இந்தபழத்தை 

இதுக்கு சாப்பிடு

என்றொருவர்

இதைசாப்பிடதே

இந்த நோய்க்கு

என்றொருவர்..

 

படுக்கும் முறை

நடக்கும் முறை

பச்சிளம் குழந்தைக்கு

பாலூட்டும் முறை

சொல்லிச் சொல்லியே

சுகநலம் உள்ளவரும்

சோம்பேறியாக சுத்தும்

நிலையாச்சு..

 

அந்தகாலத்து

ஆச்சி அப்புவை

இன்றுமொருக்கா

எனக்கு..

எண்ணத்தோன்றுது

 

பத்து பிள்ளையை

பெத்து போட்டும்

பம்பரம் போல

சுத்தி திரிந்ததும்

 

அம்மி உரல்ல

ஆட்டுக்கல்லில

அரைத்து இடித்து

உண்ட உடம்பும்

அப்பு வயலில

அதிகாலை அங்கு

உழுது,விதைத்து

உழைத்த உடம்பும்

 

காற்றுக்கடலில 

வலையை போட்டும்

கரைவலை இழுத்த

எங்கள் உடம்பும்

 

பந்தையம் கட்டி

பனைமரம் ஏறி

கள்ளு இறக்கிய

கட்டுடல் உடம்பும்

 

சலவைத்துணியை

சாத்துசாதென்று

கல்லில் மோதிய-எம்

கல்லான உடம்பும்

 

இப்படி இப்படி-எம்

செய்யும் தொழிலிலே 

தேக ஆரோக்கியம்

கண்ட எம் உடம்பு.

 

நோயற்ற நிலையும்

நூறாண்டு வாழ்வும்

எம்முன்னோர் காலத்து

இனிமை வாழ்வும்

இன்றும் தெரியுது.

 

இது..

விஞ்ஞானம் வளர்ந்து

 வேலை இல்லாததால்

பொய்ஞானம் சொல்லி

புலம்புது உலகம்.

அன்புடன் -பசுவூர்க்கோபி-

மலரும் நினைவுகளை மீட்டும் கவிதை பகிர்விற்கு நன்றி தோழர்.👍

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மலரும் நினைவுகளை மீட்டும் கவிதை பகிர்விற்கு நன்றி தோழர்.👍

புரட்சித் தோழருக்கு உளமார்ந்த நன்றி

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.