Jump to content

மருத்துவமனையில்ல உரிமையாளர்... கண்ணீருடன் வெளியிலேயே 6 நாட்கள் காத்திருந்த செல்ல நாய்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்தான்புல்: துருக்கியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உரிமையாளருக்காக மருத்துவமனை வெளியிலேயே நாய் ஒன்று ஆறு நாட்கள் காத்திருந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உலகில் நாய்களைப் போல நன்றியுள்ள மற்றொரு ஜீவனைக் காண்பது அரிது. உயிரிழந்த உரிமையாளருக்காக கல்லறையில் காத்திருந்த நாய்களின் கதைகளை எல்லாம் நாம் படித்திருப்போம். அதேபோல ஒரு நெகிழ்ச்சி சம்பவம்தான் துருக்கி நாட்டிலும் தற்போது நடந்துள்ளது. துருக்கி நாட்டில் டிராப்ஸன் நகரில் வசித்து வருபவர் சென்டூர்க். 68 வயதாகும் இவருக்கு மூளையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கடந்த ஜனவரி 14 ஆம் தேதி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதனால் பதறிய இவரது செல்ல நாய் போன்குக், ஆம்புலன்ஸையே பின்தொடர்ந்து சென்றுள்ளது. சென்டூர்க்கிற்கு மருத்துவமனையில் சுமார் ஆறு நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த ஆறு நாட்களும் அவரது செல்ல நாய் போன்குக், மருத்துவமனை வெளியிலேயே காத்திருந்தது. மருத்துவமனை வெளியே காத்திருந்த நாயை, பல முறை சென்டூர்க்கின் மகள் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அந்த திரும்பத் திரும்ப தன் உரிமையாளரைத் தேடி மருத்துவமனைக்கே சென்றது அங்கிருந்தவர்களின் கண்களைக் கலங்கச் செய்தது. மருத்துவமனைக்கு வரும் நபர்களுக்கு அந்த நாய் எவ்வித சொந்தரவும் அளிக்கவில்லை என்றும் மருத்துவமனைக்கு வரும் சிலர் அந்த நாயுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டனர் என்றும் மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். மேலும், போன்குக்கிற்கு தேவையான உணவையும் மருத்துவமனை ஊழியர்களே வழங்கியுள்ளனர். அவற்றை உண்டுவிட்டு, மிக அமைதியாகத் தனது உரிமையாளருக்காக போன்குக் மருத்துவமனைக்கு வெளியிலேயே காத்திருந்தது. இறுதியாகச் சிகிச்சை முடிந்த பின், சில நாட்களுக்கு முன் சென்டூர்க் வீடு திரும்பினார். அப்போது அவரைப் பார்த்த சந்தோசத்தில் ஆர்ப்பரித்த போன்குக் உரிமையாளர் மீது துள்ளிக் குதித்து ஏறியது. சென்டூர்க்கை பார்க்கும் வரை போன்குக் மிகவும் சோகமாகவே இருந்ததாகவும் அவரை பார்த்தும் போன்குக் வெளிப்படுத்திய மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றும் மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். 

https://tamil.oneindia.com/news/international/this-dog-waited-6-days-outside-hospital-for-owner-to-return-409736.html

 

Image

 

 

Edited by பெருமாள்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

போன ஜென்மத்தில் அவரைப் பிரிந்து போன காதலியாக இருக்குமோ......!   😍

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

போன ஜென்மத்தில் அவரைப் பிரிந்து போன காதலியாக இருக்குமோ......!   😍

சுவியர் இப்படி நாயை கேவலப்படுத்தக் கூடாது.🤣

Link to post
Share on other sites
4 hours ago, suvy said:

போன ஜென்மத்தில் அவரைப் பிரிந்து போன காதலியாக இருக்குமோ......!   😍

மாறி அமைந்தும் இருக்கலாம் தானே. முதியவர் காதலியாகவும் நாய் காதலனாகவும். ஏனென்றால் உலகில் காதலனுக்காக எந்த காதலியாவது காத்து இருக்கின்றதாக செய்தியில் தானும் படித்து இருக்கின்றீர்களா?

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Mason:- நீங்க ஒழுங்கா.... உங்கட,  வேலைய பாத்தா நாங்க ஏன் வாய தொறக்க போறம்   Mason to engineer : மரியாதையா போறியா... இல்ல, மண் வெட்டிய குடுத்து மண் அள்ள விடவா     
    • 6)    ஏப்ரல் 14th, 2021, புதன், 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை    SRH  vs  RCB   11 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்  வெல்வதாகவும்   3 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  வெல்வதாகவும் கணித்துளனர்.   சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஈழப்பிரியன் வாதவூரான் கல்யாணி அஹஸ்தியன் நந்தன் சுவைப்பிரியன் எப்போதும் தமிழன் வாத்தியார் கிருபன் பையன்26 கறுப்பி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் சுவி குமாரசாமி நுணாவிலான்   இன்று யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🥳
    • தெரியாமல் போட்டியில் கலந்துகொள்வதில்தான் த்ரில் இருக்கு😃
    • இலங்கையில் சிறுவர்கள் கடத்தப்பட்டுவருவது தொடர்பான ஐ நா வின் கண்டனம் சிறுவர் கடத்தல்கள் தொடர்பான அலன் ரொக்கின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த மகிந்த ராஜபக்ஷ, அவைபற்றி விசாரிக்கப்போவதாக உறுதியளித்திருந்தபோதும், அரசின் ஏனைய தலைவர்களும் பெளத்த குருமார் மற்றும் சாதாரண சிங்களவர்கள் அலன் ரொக்கின் விமர்சனம் குறித்த கடுமையான கண்டனங்களை முன்வைத்திருந்தனர்.  அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர கூறும்பொழுது அலன் ரொக் ராஜதந்திரியொருவரின் எல்லைகளை மீறிச் செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். "சர்வதேச சமூகத்தின் மதிப்பிற்குரிய அதிகாரியொருவர் ஒரு அரசாங்கத்தின்மீது இவ்வாறான கடுமையான கண்டனங்களை வெளிப்படையாக முன்வைப்பது நாகரீகமற்றது" என்று அவர் கூறினார். "அவர் சொல்வது உண்மையாக இருந்தாலும், அதனை அரசாங்கத்திடம் நாசுக்காகக் கூறியிருக்கவேண்டும், இப்படிப் பகிரங்கமாக அரசை விமர்சிப்பது தவறு" என்றும் அவர் கூறினார். அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பிரதான பத்திரிக்கையான் டெயிலி நியூஸ் தனது ஆசிரியர் தலையங்கத்தில், " ஒரு இறைமை நாட்டின்மீது அலன் ரொக் போன்றவர்கள் முன்வைக்கும் விமர்சனம் அந்நாட்டின் தேசிய நலன்களுக்கு பாரதூரமான பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் அறிந்துவைத்திருப்பது நல்லது" என்று தொனிப்பட எழுதியிருந்தது. கருணா குழுவினருடன் தமக்கு எதுவிதமான தொடர்புகளும் இருக்கவில்லையென்று மறுதலித்த இலங்கை ராணுவம் அலன் ரொக்கின் விமர்சனம் மக்களையும், சர்வதேசத்தையும் தவறாக வழிநடத்துவதாகவும், இலங்கையின் தேசியப் பாதுகாப்பு மீது பாரதூரமான பாதிப்பினை ஏற்படுத்த வல்லன என்றும் சாடியிருந்தது.  http://www.lankaweb.com/news/items/wp-content/uploads/2013/06/Articlepdf3.jpg அலன் ரொக்கின் மீதான கடுமையான விமர்சனங்களை பாதுகாப்பு அமைச்சினால் நடத்தப்படும் "தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மையம்" எனும் அமைப்பு வெளியிட்டிருந்தது. தனது இணையவழி விமர்சனத்தில் "யார் இந்த அலன் ரொக்?" என்று தலைப்பிட்ட கண்டனத்தை முன்வைத்த இலங்கை ராணுவம் கனடாவின் முன்னாள் அமைச்சரான இவர் புலம்பெயர் தமிழரின் பணத்திற்கு வேலை செய்வதாகவும், கனடாவில் புலிகள் தடைசெய்யப்படுவதை இவர் தடுத்துவருவதாகவும் கடுமையாகச் சாடியிருந்தது. மேலும் கனடாவில் வாழும் தமிழர்களின் உதவியுடனும், பணபலத்துடனும் புலிகளின் அனுதாபிகளின் உதவியினூடாகவும் அலன் ரொக் ஐ நா வில் ஒரு பதவியைப் பெற்றுக்கொண்டார் என்றும் அது மேலும் விமர்சித்திருந்தது. http://www.dailynews.lk/sites/default/files/styles/node-detail/public/news/2017/02/12/Screen%20Shot%202017-02-12%20at%2011.26.10%20AM.png?itok=CQUs48T1  ஆரம்பத்தில் யுனிசெப் அமைப்புடன் இணைந்து செயற்படுவதாக உறுதியளித்த கருணா, பின்னர் அலன் ரொக்கின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அலன் ரொக்கும் ஐ நா வும் உண்மைக்குப் புறம்பான, மிகவும் தவறான, கற்பனைத்தனமான குற்றச்சாட்டுக்களை தேச விரோதிகளின் தூண்டுதலை அடிப்படையாகக் கொண்டு முன்வைத்திருப்பதாகக் அவர் கூறினார். அரசாங்கத்தின் இடர் நிவாரண மற்றும் மனிதவுரிமையமைச்சர் மகிந்த சமரசிங்ஹெ கூறுகையில், அலன் ரொக்கின் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை, ஆதாரமற்றவை, தனது குற்றச்சாட்டுக்களுக்கான சாட்சியங்கள் எதனையும் முன்வைக்காது அலன் ரொக் பேசுவது நகைப்பிற்குரியது என்று அவர் கூறினார்.  2006, கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி அலன் ரொக் இலங்கை ஜனாதிபதி மகிந்தவுக்கு அனுப்பிய கடிதத்தில் தன்னால் விசாரித்துக் கண்டறியப்பட்ட ஆதாரங்களோடு ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்ததுடன், கருணா குழுவினருக்கும் ராணுவத்திற்கும் இடையிலான தொடர்பு தொடர்பாக உடனடியாக பக்கச் சார்பற்ற உண்மையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று கோரியிருந்தார்.   அலன் ரொக்கின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான அரசின் வெளிப்படையான எதிர்வினையென்பது நகைப்பிற்குரியது. ஏனென்றால், 2006 இன் ஆரம்பத்திலிருந்தே மட்டக்களப்பு மாவட்டத்தில்க் கருணா குழுவினராலும், அரச ராணுவத்தாலும் கடத்தப்பட்டுவரும் சிறுவர்கள் தொடர்பாக பொலீஸாரிடமும், ராணுவத்திடமும் பலநூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் கொடுக்கப்பட்டே வந்திருக்கின்றன. இக்கடத்தல்கள்பற்றி அரசு நன்கு தெரிந்து வைத்திருந்தபோதும்கூட, அச்சிறுவர்களை விடுவிக்க எதுவிதமான முயற்சிகளையும் அது எடுத்திருக்கவில்லை.  2006 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 28 ஆம் நாள் மனிதவுரிமைக் கண்காணிப்பகம் கருணா குழுவினரின் சிறுவர்கள் கடத்தல்கள் தொடர்பான தனது விரிவான அறிக்கையினை வெளியிட்டிருந்தது. அதன்படி, "எமது சாட்சியங்களின் ஊடாக கருணா குழுவின் கடத்தல்களில் இலங்கை ராணுவமும் ஈடுபட்டுவருகிறதென்பதை நாம் முழுமையாக நம்புகிறோம்" என்று சாரப்பட கூறியிருந்தது. இதற்குப் பதிலளித்த அரச பேச்சாளர் கெகெலிய ரம்புக்வெல்ல, "இதனை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கிறது. கருணா குழுவுக்கும் எமக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை. அப்படி தொடர்பேதும் இருப்பதாக மனிதவுரிமைக் கண்காணிப்பகம் கூறினால், அதற்கான சாட்சியங்களை எம்மிடம் தரவேண்டும், பின்னர் அதுபற்றி நாம் பரிசீலிக்கலாம்" என்று விசமத்தனமாக கூறியிருந்தார்.  
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.