Jump to content

ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கான்: ஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்கள் ஏவி உலக சாதனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கான்: ஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்கள் ஏவி உலக சாதனை

  • ஜொனாதன் அமோஸ், அறிவியல் செய்தியாளர், பிபிசி
 
ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கான்

பட மூலாதாரம், GETTY IMAGES

ஒரே ஏவூர்தி (ராக்கெட்) மூலம் அதிக எண்ணிக்கையில் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியதில் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முந்திய இந்தியாவின் உலக சாதனையை இப்போது ஓர் அமெரிக்க நிறுவனம் முறியடித்துள்ளது. 

அமெரிக்காவின் ஃபுளோரிடாவிலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கான் ஏவூர்தியிலிருந்து வேறுபட்ட வடிவங்கள் மற்றும் அளவுகள் கொண்ட மொத்தம் 143 செயற்கைக்கோள்கள் நேற்று (ஜனவரி 24) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன. 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தன்னுடைய பி.எஸ்.எல்.வி. சி-37 ஏவூர்தி மூலம் 2017ம் ஆண்டு 104 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பிய உலக சாதனை இதன் மூலம், முறியடிக்கப்பட்டுள்ளது.

விண்வெளித்துறையில் நிகழ்ந்து வரும் மாற்றங்களுக்கு இது ஓர் எடுத்துக்காட்டாகப் பார்க்கப்படுகிறது. இது ஸ்பேஸ் எக்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் எதிர்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் கோலோச்சும் என்பதற்கான அறிகுறியாக இருக்கிறது. 

மிகப் பெரிய ஆய்வுக்கூடங்களில் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகளை கொண்டு மட்டுமே விண்வெளித்துறை சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட முடியும் என்ற காலம் மாறி, திறன்பேசி உள்ளிட்ட மின்னணு பொருட்களின் பாகங்களை கொண்டே அதிவேகமாக, சிறிய அளவில், குறைந்த செலவில், திறன் படைத்த செயற்கைக்கோள்களை யார் வேண்டுமானாலும் உருவாக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதே இந்தப் புரட்சிக்கு காரணமாக உள்ளது.

அதுமட்டுமின்றி, இவ்வாறு தயாரிக்கப்பட்ட செயற்கைக்கோள்களை புவி வலப் பாதைக்கு ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்கள் 7.2 கோடி ரூபாய்க்கும் குறைவான கட்டணத்தில் எடுத்து செல்வதால் இதற்கான வணிக வாய்ப்புகள் கூடிக்கொண்டே வருகின்றன.

சூப்பர்டோவ் திட்டம்

பட மூலாதாரம், PLANET LABS INC

 
படக்குறிப்பு, சூப்பர்டோவ் திட்டம்

இதில் முக்கியமானது என்னவென்றால், இந்த உலக சாதனை மூலம் செலுத்தப்பட்டவற்றில் 10 செயற்கைக்கோள்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானவை.

உலகம் முழுவதும் நேரடியாக செயற்கைக்கோள்களிலிருந்து அதிவேக இணைய சேவை வழங்கும் நோக்கம் கொண்டவை ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா போன்ற நிறுவனங்கள். இவற்றின் தலைமை செயல் அதிகாரியான ஈலோன் மஸ்கின் ஸ்டார்லிங்க் என்ற லட்சிய திட்டத்தின் ஒருபகுதியாக இந்த 10 செயற்கைக்கோள்களும் விண்ணில் சீறிபாய்ந்துள்ளன.

இப்போது ஃபால்கான் ஏவூர்தி செலுத்தியதில் அதிகபட்சமாக 48 செயற்கைக்கோள்கள் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவை சேர்ந்த பிளானட் என்ற ஒரே நிறுவனம் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

புவிப் பரப்பை வெகு அருகில் இருப்பதை போன்று விண்ணில் இருந்தவாறே கண்காணிக்கும் நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள்களை கொண்ட கூட்டு திட்டத்தின் ஒருபகுதியாக இவை விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. சூப்பர்டோவ் என்றழைக்கப்படும் இந்த திட்டத்திற்காக இதுவரை 200க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் புவி வலப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்த சூப்பர்டோவ் செயற்கைக்கோள்கள் ஒரு காலணி பெட்டியின் அளவிலேயே இருக்கும். மேலும், ஃபால்கான் ஏவூர்தியில் அனுப்பப்பட்டுள்ள பெரும்பாலான செயற்கைக்கோள்கள் காபி கோப்பைகளைவிட சற்றே பெரிய அளவிலும், சிலது அதைவிட சிறிதாகவும் கூட உள்ளன.

ஸ்வர்ம் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்பேஸ்பீஸ் என்ற செயற்கைக்கோளும் இதில் அடக்கம். இதன் அளவு 10 செ.மீ. X 10 செ.மீ. X 2.5 செ.மீ. அளவே ஆகும்.

இடம் பெயரும் விலங்குகள் முதல் கப்பல் கொள்கலன்கள் வரை தரையில் உள்ள எல்லா வகை பொருள்கள், உயிரிகளிலும் பொருத்தப்பட்டுள்ள சாதனங்களை இணைக்க அவை தொலைத்தொடர்பு முனைகளாக செயல்படும்.

இந்த முறை ஃபால்கான் ஏவூர்தி மூலம் செலுத்தப்பட்ட மிகப் பெரிய செயற்கைக்கோள்களே ஒரு துணிப்பெட்டி (சூட்கேஸ்) அளவுக்குத்தான் இருக்கும். அவற்றில் பெரும்பாலும் ரேடார் தொழில்நுட்பத்தை மேம்படுவதற்காக ஏவப்பட்ட செயற்கைக்கோள்களே இருந்தன.

ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கான்

பட மூலாதாரம், SWARM

மிகப் பெரியதாக, ஆயிரக்கணக்கான கிலோ எடை கொண்டதாக, விண்ணில் செலுத்த நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவு பிடிப்பதாக இருந்த ரேடார் செயற்கைக்கோள்கள் தற்போது தொழில்நுட்பத்துறையில் ஏற்பட்டுள்ள புரட்சி காரணமாக மிகச் சிறிய அளவில், குறைந்த எடையில், குறைந்த விலையில் விண்ணுக்கு செல்வது சாத்தியமாகி உள்ளது.

ஃபால்கான் ஏவூர்தி போல ஒரே நேரத்தில் ஏகப்பட்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் திட்டத்தில் பங்கேற்பது, செயற்கைக்கோள் தயாரிப்பாளர்களுக்கு பொறுமையை சோதிக்கும், நேரம் பிடிக்கும் செயலாகப் பார்க்கப்படுகிறது. 

அதாவது, இதுபோன்ற பெரிய திட்டங்களில் பங்கேற்கும் செயற்கைக்கோள்கள் தாங்கள் நிலைநிறுத்தப்பட வேண்டிய இடத்துக்கு நேரடியாக செல்ல முடியாமல் ஏவூர்தி எங்கெல்லாம் செல்கிறதோ, அங்கெல்லாம் சென்று தனக்கான நேரம் வரும்போதே தொகுப்பில் இருந்து பிரிய வேண்டிய நிலை உள்ளது. இந்த செயல்முறைக்கு வாரக்கணக்கில் ஆகக்கூடும்.

ஆனால், இந்த பிரச்சனையின் தீவிரத்தை குறைப்பதற்கு ஒரு மாற்று வழியும் உள்ளது. அதாவது, விண்வெளியின் ஒரு குறிப்பிட்ட சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட வேண்டிய செயற்கைக்கோள்களை ஒரு தொகுப்பதாக வைத்து அவற்றை தக்க நேரத்தில் தனியே பிரித்தனுப்பி நிலைநிறுத்த முடியும். இதற்கு 'ஸ்பேஸ் டக்ஸ்' என்று பெயர். அந்த வகையில், இந்த ஃபால்கான் ஏவூர்தியில் செயற்கைக்கோள்கள் இரண்டு தொகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

எனினும், சில விண்வெளி திட்டங்களில் செயற்கைக்கோள்களை தனியாக விண்ணில் செலுத்துவதே நோக்கமாகவும் அல்லது அவசர தேவையாகவும் கூட இருக்கும்.

 

ஃபால்கான் ஏவூர்தியில் பொருத்தப்பட்டுள்ள செயற்கைக்கோள்கள்

பட மூலாதாரம், SPACEX

 
படக்குறிப்பு, ஃபால்கான் ஏவூர்தியில் பொருத்தப்பட்டுள்ள செயற்கைக்கோள்கள்

இந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையிலேயே, சிறிய ரக ஏவூர்திகளை கொண்டு விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை எடுத்துச் செல்லும் முறை மெல்ல பிரபலமடைந்து வருகிறது. இதுபோன்ற திட்டங்கள் பெரிய ரக ஏவூர்தியின் செலவுடன் ஒப்பிடுகையில் அதிகமாக இருந்தாலும், உடனடி தேவை உள்ளவர்களுக்கு தடையற்ற வழிமுறையாக உள்ளது. 

இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய சிறியரக ஏவூர்தி தயாரிப்பு நிறுவனமான விர்ஜின் ஆர்பிட்டின் தலைமை செயலதிகாரி டான் ஹார்ட், தங்கள் சிறியரக ஏவூர்தியை போயிங் 747 விமானத்தின் இறக்கையிலிருந்து கூட ஏவிவிட முடியும் என்கிறார்.

"சம்பந்தமில்லாத பாதையில் பயணித்து, தாமதமாக செயற்கைக்கோளை பயன்பாட்டுக்கு கொண்டுவரும் பாரம்பரிய முறைக்கு மாற்று வேகமாக உருப்பெற்று வருகிறது. பெரிய திட்டங்களின் ஒரு பகுதியாக இருந்து தாமதமாக இலக்கை அடைவதை விட, சற்றே அதிகம் செலவழித்து செயற்கைக்கோளை குறுகிய காலத்தில் விண்ணில் விருப்பத்துக்குரிய இடத்தில் நிலைநிறுத்த விரும்புவோர் எண்ணிக்கை இனிவரும் காலங்களில் அதிகரிக்கும்" என்று அவர் கூறுகிறார்.

எனினும், ஒட்டுமொத்த விண்வெளித்துறையையும் அச்சுறுத்தும் பிரச்சனை ஒன்று நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. ஆம், இதுபோன்று அதிக எண்ணிக்கையிலான செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு வருவதால் விண்வெளியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

இதில் முக்கிய பிரச்சனையே 'விண்வெளி குப்பை' எனப்படும் பயன்படுத்தப்படாத அல்லது செயல்பாட்டில் இல்லாத செயற்கைக்கோள்கள்தான். விண்வெளியில் செயற்கைக்கோள்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும் நிகழ்வுகள் மிகவும் அரிதாகவே நிகழ்கின்றன என்றாலும், இதுபோன்ற விரும்பத்தகாத பிரச்சனைகளை தவிர்ப்பதற்கான சிறந்த வழிகளை கண்டறிவது என்பது காலத்தின் கட்டாயம்.

 

https://www.bbc.com/tamil/science-55792052

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
    • பாடசாலை மாணவிகளுக்கு வவுச்சர்களை வழங்க நடவடிக்கை! எதிர்வரும் சித்திரை புத்தாண்டின் பின்னர் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, பின்தங்கிய பகுதிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் உள்ள சுமார் 800,000 பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவி ஒருவருக்கு தலா 1,200 ரூபாய் பெறுமதியான வவுச்சர் வழங்கப்படும் எனவும், இந்த திட்டத்துக்காக ஒரு பில்லியன் ரூபாவினை ஒதுக்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297396
    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.